Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

நீ எனக்கு தந்த காதல்

நீ எனக்கு தந்த காதல் – 16.

தமிழ் தோழியாய் நிலாவின் புதிய பக்கம் தொடக்கம்.

 

விபத்தின் காரணமாக வீட்டில் ஒரு வாரம் தமிழ் ரெஸ்ட் எடுக்க நிலாவும், தமிழ் அம்மாவும் அவனை கவனித்துக் கொண்டனர்.

 



Advertisement

இனி,

 

ஒரு வாரத்தில் நந்தினி, கவினின் பெற்றோர்,  யாழினியின் பெற்றோர், தமிழின் நண்பர்கள், உறவினர்கள் என எல்லோரும் தமிழை நேரிலும், போனிலும் நலம் விசாரித்து சென்றனர்.

Advertisement

 

Advertisement

நிலாவின் அம்மாவும் தம்பியும் அடிக்கடி வந்து பார்த்து விட்டு சென்றனர்.

 

”ராஜி, அப்பா, நிலா மூனு பேரும் கேளுங்க. வீட்ல இருந்து எனக்கு போரடிக்குது. நான் நாளைல இருந்து ஆபீஸ்க்கு போக போறேன்’, என தமிழ் சொல்ல,

Advertisement

 

‘நாங்க முதலயே இத சொல்லுவேன்னு நினச்சோம். பரவால்ல லேட்டா சொல்லிட்ட’, என மூன்று பேரும் கோரசாக சொல்ல,

 

‘அடப் பாவிகளா. ஒருத்தருக்கும் என் மேல பாசம், அக்கறை, அன்பு இதுல ஒன்னு கூட இல்ல. ‘, என தமிழ் சொல்ல,

 

‘இப்ப நாங்க போக வேண்டாம்னு சொன்னா நீ போகாம வீட்லயே இருந்துடுவ’, என தமிழ் அம்மா கேட்க,

 

‘டேய் உன்னால சும்மா வீட்ல இருக்க முடியாதுன்னு எங்களுக்கு தெரியும் டா’, என்றார் தமிழ் அப்பா.

 

‘அதுக்குன்னு பேருக்கு கூட இல்ல என்ன அவசரம் . ரெண்டு நாள் கழிச்சு போகலாம்னு சொல்லக் கூடாதா’, என தமிழ் கேட்க,

 

‘தமிழ் ஏன் இப்டி சின்ன பையன் மாதிரி நடந்துக்கறீங்க. இப்ப என்ன உங்களுக்கு ஆபீஸ்க்கு போகனும். அவ்ளோ தான. ஓகே நாளைக்கே போகலாம் சரியா’, என நிலா சொல்ல தமிழ் அப்பாடா என்று தன் அறைக்கு சென்றான்.

 

அடுத்த நாள் காலையில் எழுந்து வேலைக்கு சீக்கிரமாய் கிளம்பி கீழே வந்தான் தமிழ்.

 

‘தமிழ் உட்காருங்க சாப்டலாம்’, என சொல்லி நிலா எடுத்து வைக்க,

 

‘சாரி நிலா, எனக்கு பசிக்கல. ஆபீஸ்க்கு போகனும்’, என தமிழ் கிளம்ப,

 

‘ஆன்டி அவருக்கு பசிக்கலையாம்’, என நிலா கத்த,

 

‘சாப்டலைன்னா ஆபீஸ்க்கு போகக் கூடாதுன்னு மறந்துட்டானா. அதையும் மீறி போனா போகட்டும். அவன் திரும்பி வந்து வீட்ல சாப்டற வரைக்கும் நானும் சாப்ட மாட்டேன்னு அவனுக்கு தெரியுமே’, எனத் தமிழ் அம்மா சொல்ல,

 

‘ஆமா ஆன்டி ஆக்சிடண்ட்ல இதையும் சேர்த்து மறந்திருப்பாரு. அதான் நீங்க இப்ப ஞாபகப் படுத்தீட்டீங்களே. சாட்டுருவாரு என்ன தமிழ் அப்டி தான’, என நிலா கிண்டலாக கேட்க,

 

நிலாவை முறைத்து விட்டு தமிழ் உட்கார்ந்து சாப்பிட

 

‘ச்சே தாய் பாசத்துல என்னைய மிஞ்சிட்டீங்க தமிழ்’, என சிரித்துக் கொண்டே சொல்லி விட்டு நிலாவும் கூட உட்கார்ந்து சாப்பிட்டாள்.

 

தமிழ், நிலா இருவரும் ஆபீஸ்க்கு கிளம்ப,  ‘ஆன்டி, அங்கிள் சாப்பாடு டைனிங் டேபிள்ல வச்சிருக்கேன். மறக்காம சாப்டுங்க. அங்கிள் சாப்டுட்டு மறக்காம டேப்ளட் போடுங்க. அப்புறம் ஜீஸ் போட்டு வச்சிருக்கேன் நானும் எடுத்துக் கிட்டேன். வேற’, என நிலா இழுக்க,

 

‘அம்மா தாயே எல்லாம் அவங்க பாத்துக்கு வாங்க.  நீ வரியா’, என்றான் தமிழ்.

 

‘சரி நாங்க கிளம்பறோம் அங்கிள், ஆன்டி’, என நிலா சொல்ல,

 

‘நிலா நாங்க பாத்துக்கறோம். நீ அங்க தமிழ பாத்துக்க ‘, என தமிழ் அம்மா, அப்பா சொல்ல சரி என்று நிலா சொல்ல இருவரும் ஆபீஸ்க்கு சென்றனர்.

 

ஆபீஸ்க்கு சென்றதும் அனைவரும் தமிழை நலம் விசாரித்து விட்டு சென்றனர்.

 

‘நிலா முதல் வேலயா இந்த நாலஞ்சு வருஷத்துல என்ன என்ன ப்ராடகட்  லாஞ்ச் பண்ணிருக்கோம் அதோட டீடைல்ஸ், அப்புறம் யாரு கூட சேர்ந்து ப்ராஜக்ட் பண்ணிருக்கோம் அந்த டீடைல்ஸ், அப்புறம் லாஸ்ட் இயர்ஸ் அக்கவுண்ட்ஸ் டீடைல்ஸ் இதெல்லாம் எனக்கு வேனும்.’ , என தமிழ் கேட்க,

 

‘சரி ஓகே. ஒவ்வொன்னா கொண்டு வரேன். பர்ஸ்ட் ரிலாக்ஸா இருங்க ‘, என சொல்லி விட்டு தமிழ் கேட்டதை ஒவ்வொன்றாக எடுத்து வந்தாள் நிலா

 

ஒருபக்கம் தமிழ் சீரியசாக அனைத்தையும் பார்த்து முக்கியமானதை ஞாபகம் வைத்துக் கொண்டிருக்க,

 

நிலா அதிலும் அவனுக்கு ஹெல்ப் பண்ணிக் கொண்டு அவனுக்கு நேரா நேரத்திற்கு சாப்பாடு, ஜீஸ், என அவன் வேண்டாம் என்றால் கூட விடாமல் அவன் கையில் வைத்திருக்கும் ஃபைலை பிடுங்கி கொண்டு அவன் சாப்பிட்டதும் திருப்பிக் கொடுத்தாள்.

 

‘தமிழ் கிளம்பலாம் டைம் எட்டாயிடுச்சு. ஆன்டி போன் பண்ணிட்டாங்க’, என நிலா சொல்ல,

 

‘நீ முன்னாடி கிளம்பு’, என தமிழ் சொல்லி முடிப்பதற்குள் நிலா வந்து அவன் பார்த்து கொண்டிருந்த ஃபைலை வாங்கி,

 

‘இந்த வேலையே ஆகாது. இன்னிக்கு நீங்க லேட்டா போனா அப்புறம் நாளைக்கு உங்கள வேலைக்கு போக வேண்டாம்னு ஆன்டி உண்ணா விரதம் இருப்பாங்க. உங்களுக்கு தெரியாதா’, என நிலா சொல்ல,

 

‘ஆமா அது வேற இருக்குல்ல. நல்ல வேல ஞாபகப்படுத்துன. சரி வா கிளம்பலாம்.’ என சொல்லி தமிழும் நிலாவும் கிளம்பினர்.

 

‘நிலா டிரைவர் அண்ணா போன் பண்ணி அவருக்கு ஏதோ வேலயாம் அதனால சீக்கிரமா கிளம்பறேனு கேட்டாரு. நானும் சரின்னு சொல்லிட்டேன். கார நான் டிரைவ் பண்றேன்’, என தமிழ் சொல்லி விட்டு காரை திறந்து டிரைவர் சீட்டில் உட்கார போக,

 

‘நீங்க ஒன்னும் ஓட்ட வேணாம். நான் ஓட்றேன். நீங்க அங்கிட்டு போய் உக்காருங்க. ‘, என நிலா சொல்ல தமிழ் ஆச்சர்யத்துடன் நிலாவை பார்த்துக் கொண்டே அந்த பக்கம் போய் உட்கார நிலாவும் காரை டிரைவ் பண்ணினாள்.

 

‘நிலா உனக்கு இவ்ளோ நல்லா டிரைவ் பண்ண தெரியுமா’, என தமிழ் கேட்க,

 

‘ஹலோ டிரைவிங் லைசன்ஸே வச்சிருக்கேன். நாங்க கார் வாங்கனதும் ஓட்டக் கத்துக்கிட்டேன். இப்ப தான் ஒரு வருஷம் தான் இருக்கும்’  என நிலா சொல்ல,

 

‘இன்னும் உனக்கு என்னவெல்லாம் தெரியும். சொல்லு தெரிஞ்சுக்கலாம்’, என தமிழ் கேட்க நிலா சொல்ல தமிழ் அப்டியே கேட்டுக் கொண்டு நிலாவின் தோளில் சாய்ந்த படி உறங்க வீடு வந்ததும் நிலா எழுப்பி உள்ளே கூட்டிச் சென்று சாப்பிட வைத்து தமிழை தூங்க வைத்து விட்டு வந்து,

 

‘ஆன்டி , அங்கிள் வாங்க சாப்டலாம்’,என நிலா கூப்பிட மூவரும் சேர்ந்து ஆபீஸில் நடந்ததை நிலா சொல்ல கேட்டுக் கொண்டே சாப்பிட்டு விட்டு உறங்க சென்றனர்.

 

தமிழ் கொஞ்சம் கொஞ்சமாக ஆபீஸ் சம்பந்தமான விசயங்களை நன்றாக ஞாபகத்தில் கொண்டு வந்தான்,

 

‘நிலா இப்ப இதுல இருந்து எதாவது கேளேன்’, என அனைத்து ஃபைல்களையும் அவள் கையில் கொடுத்து விட்டு தமிழ் சொல்ல நிலாவும் கேட்க உடனுக்குடன் சரியாக பதில் சொன்னான் தமிழ்.

 

‘பரவால்ல தமிழ் செம. ரெண்டே நாள்ல எல்லாத்தையும் ஸ்டடி பண்ணிட்ட சூப்பர்’, என நிலா பாராட்ட தமிழ் மிகவும் சந்தோஷம் அடைந்தான்.

 

‘இதெல்லாம் ஓகே . ஞாபகத்துக்கு வரலேன்னா கூட மனசுல பதிய வச்சுக்கலாம் . ஏனா இதுக்கெல்லாம் உயிரில்ல. ஆனா நீங்க எல்லாம் நடந்ததா சொல்ற எதுவும் ஞாபகத்துக்கும் வரல அத மனசுல பதிய வைக்கலாம்னா எந்த ஃபிலிங்கும் வரல. நான் கஷ்டப்படறது பத்தாதுன்னு உங்க  எல்லாரையும் சேர்த்து கஷ்டப்படுத்தறேன். நான் என்ன தப்பு பண்ணேன்னு எனக்கே தெரியல’, என தமிழ் ஃபீல் பண்ண,

 

‘தமிழ் ப்ளீஸ் இப்டி எல்லாம் யோசிக்காதீங்க. இப்ப என்ன உங்களுக்கு பிரச்சனை. நாங்க தான் எல்லாம் ஞாபகம் வரவரைக்கும் வெய்ட் பண்ண தயாரா தான இருக்கோம். அப்புறம் ஏன் நீங்க கவலப்படறீங்க. எனக்கு யாழினி ஒன்னு சொன்னாங்க. அதயே நானும் உங்களுக்கு சொல்றேன். நம்ம ரெண்டு பேரும் ஒருத்தர ஒருத்தர் லவ் பண்ண கடவுள் நமக்கு ரெண்டாவது சான்ஸ் குடுத்திருக்காரு. யாழினி இத சொன்னதுக்கு பிறகு தான் நானும் யோசிச்சு பாத்தேன். நம்ம லவ் பண்ணும் போது இருந்த சூழ்நிலைல என் மேல உங்களுக்கு இருந்த காதல நீங்களும், உங்க மேல எனக்கு இருந்த காதல நானும் ரொம்ப நாளா சொல்லிக்காம நமக்குள்ளேயே வச்சிட்டு இருந்தோம். அப்ப நமக்கு லவ் பண்ணவும் டைம் இல்ல. ரெண்டு பேரும் சேர்ந்து கூட இல்ல. அவங்க அவங்க பிஸ்னஸ்ல பிசியா இருந்தோம். அதனால  தான் நமக்கு திரும்ப லவ் பண்ண ஒரு சான்ஸ் கிடச்சிருக்குன்னு எனக்கும் தோனுச்சு. இப்ப நம்ம ரெண்டு பேரும் ஒன்னா இருக்கோம். ஒருத்தர பத்தி ஒருத்தர் இன்னும் நல்லா புரிஞ்சுக்கலாம். பர்ஸ்ட் நல்ல ப்ரெண்ட்ஸா இருப்போம். அப்புறமா லவ்வரா, அதுக்கப்புறமா ஹஸ்பண்ட் அண்ட் வைஃபா இருப்போம். ஓகே வா ‘, என நிலா சொல்லி சமாதானப்படுத்த,

 

‘ரொம்ப தேங்க்ஸ் நிலா. இப்ப தான் எனக்கு புரியுது நான் ஏன் உன்னை லவ் பண்ணேனனு.’, என தமிழ் சொல்ல,

 

‘அதெல்லாம் சரி ரொம்ப வெய்ட் பண்ண வச்சிராதப்பா. ப்ளீஸ்’, என நிலா சொல்ல தமிழ் சிரித்தான்.

 

‘நாளைக்கு ஒரு பிஸ்னஸ் மீட்டிங் இருக்கு. அதுக்கு ரெடி பண்ணனும் சொன்னீங்க. நீங்க அத பாருங்க. நான் போய் என் வேலய பாக்குறேன்’, என சொல்லி விட்டு நிலா செல்ல தமிழும் அதற்கான வேலயைப் பார்க்க ஆரம்பித்தான்.

 

அடுத்த நாள் பிஸ்னஸ் மீட்டிங்குக்கு இருவரும் சென்றனர். அங்கு அவரவர்கள் தங்கள் ப்ராடக்ட்ஸை ப்ரமோட் செய்து கொண்டிருக்க அடுத்தது தமிழ் கம்பெனியின் ப்ராடக்டை ப்ரமோட் செய்ய வேண்டிய நேரம் வந்தது. அப்போது தமிழ் கம்பெனியின் பெயரை சொல்லி அழைக்க நிலா தமிழை திரும்பி பார்க்க அவன் முகம் சரி இல்லாமல் இருப்பதை புரிந்துக் கொண்டு நிலா, ‘ என்னாச்சு தமிழ்’ என்று கேட்டாள்

 

‘நிலா தலை ரொம்ப வலிக்குது’, என தமிழ் சொல்ல,

 

தலைவலி வரும் போது போட சொல்லி டாக்டர் குடுத்த மாத்திரையை கையில் வைத்திருந்த நிலா தமிழுக்கு குடுத்து போட சொன்னாள்.

 

இரண்டாவது முறையாக தமிழ் கம்பெனியின் பெயரை அழைக்க தமிழ் மெதுவாய் சேரை பிடித்த படி எழுந்திருக்க நிலா அவனை தடுத்து உட்கார வைத்து விட்டு அந்த ப்ரசண்டேசனை எடுத்துக் கொண்டு போய் தெளிவாக ப்ரமோட் செய்தாள்.

 

முடித்து விட்டு நிலா வந்து, ‘ தமிழ் இப்ப எப்டி இருக்கு’ என கேட்க பதில் ஏதும் சொல்லாமல் அவள் மேல் வைத்த கண்ணை எடுக்காமல் தமிழ் பார்த்துக் கொண்டிருக்க ,

 

”தமிழ் என்ன பண்ணுது. பரவால்லயா. அதான் நம்மளது முடிஞ்சிடுச்சில்ல வீட்டுக்கு போலாமா’, என நிலா அவனை அசைத்து கேட்க,

 

‘இப்டி எல்லாம் இருந்தா யாருக்கு தாண்டி உன்ன புடிக்காது’, என தனக்குள் நினைத்து கொண்டு, ‘இப்ப பரவால்ல. ஆமா எப்டி இவ்ளோ சூப்பரா ப்ரஸண்ட் பண்ண’, என தமிழ் கேட்க,

 

‘அதுவா மீட்டிங்குக்கு போறோம் என்ன ஏதுன்னு தெரிஞ்சுக்கிட்டு போலாமேன்னு இன்னிக்கு காலைல ஃபைல எடுத்து வைக்கறப்ப பாத்தேன். நான் இவ்ளோ நல்லா ப்ரசண்ட் பண்ணி இருக்கேன்னா அதுக்கு காரணம் நீங்க அவ்ளோ டீடெய்ல்டா ரெடி பண்ணிருக்கீங்க. எப்டியோ இப்ப அது நமக்கு யூஸ் ஆச்சு’, என நிலா சொல்ல தமிழ் அவளையே பார்த்துக் கொண்டிருக்க மீட்டிங் முடிந்தது. வந்த அனைவரும் தமிழ், நிலாவிடம் வந்து, ‘செமயா ரெடி பண்ணி ப்ரசண்ட் பண்ணிருக்கீங்க.. ரொம்ப நல்லா இருந்துச்சு. ஆல் த பெஸ்ட்’ என வாழ்த்தி விட்டு சென்றனர்.

 

பிறகு இருவரும் காருக்கு வர, ‘அண்ணா ஆபீஸ்கு போங்க’, என தமிழ் சொல்ல,

 

‘தமிழ் உங்களுக்கே கொஞ்சம் ஓவரா இல்ல. எங்கிட்ட அடி வாங்க போறீங்க. அண்ணா நான் சொல்றேன் வீட்டுக்கு போங்க’, என நிலா சொல்ல தமிழும் அமைதியாக டிரைவர் வீட்டுக்கு காரை விட இருவரும் வீட்டுக்கு வந்தனர்.

 

தமிழுக்கு நிலா மேல் காதல் துளிர்ப்பதை தமிழ் உணர்வானா?

 

 

தொடரும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!