நீ எனக்கு தந்த காதல் – 27.
தமிழ் நிலாவை காதலியாக பார்க்க தொடங்குகிறான்.
தமிழ், நிலா, தமிழின் அம்மா, அப்பா எல்லோரும் சேர்ந்து உட்கார்ந்து பேசிக் கொண்டே டீ குடித்துக் கொண்டிருந்தனர்.
Advertisement
இனி,
‘அப்புறம் ஆன்டி சொல்ல மறந்துட்டோம். நம்ம யாழினி மாசமா இருக்காங்களாம்’, என நிலா சொல்ல,
Advertisement
Advertisement
‘ஆமா ராஜி .நானே சொல்லனும்னு நினச்சேன். மறந்துட்டேன். நல்ல வேள நிலா ஞாபகப் படுத்துன. மதியமா கவினும், யாழினியும் எனக்கு போன் பண்ணாங்க. அப்ப தான் .இந்த குட் நியூஸ சொன்னாங்க.’, என தமிழ் சொல்ல,
‘ரொம்ப சந்தோஷம் டா. இப்ப தான் யாழினிய குழந்தையா பாத்த மாதிரி இருக்கு. அதுக்குள்ள அவளுக்கே குழந்தை பொறக்க போவுது. கவின், நீ, யாழினி மூனு பேரும் சேர்ந்து விளையாடின மாதிரி இருக்கு. காலம் எவ்வளவு வேகமா போகுது இல்லங்க.’ என தமிழ் அம்மா கேட்க,
Advertisement
‘ஆமா ராஜி, இதோ இங்க தான் மூனு பேரும் சேர்ந்து உட்கார்ந்து கிட்டு கேரம் போர்ட் விளையாடனத இப்ப பாத்த மாதிரி இருக்கு’, என தமிழ் அப்பாவும் சேர்ந்து கொள்ள,
‘பின்ன என்ன நாங்க அப்படியே வா இருப்போம். நாங்க வளந்து, கல்யாணம் பண்ணி, இப்ப எங்களுக்கு குழந்தைங்களும் பொறக்க போறாங்க ‘, என தமிழ் சொல்ல,
‘ஆமா டா தமிழ் ரொம்ப சந்தோஷமா இருக்கு. அதே மாதிரி உனக்கும் நிலாவுக்கும் குழந்தை பொறந்தா நாங்க பாட்டுக்கு அதுங்கள பாத்து கிட்டு, வளத்து கிட்டு எங்க காலத்த போக்கிடுவோம்’, என தமிழ் அம்மா சொல்ல,
‘ராஜி எல்லாம் நடக்கும் போது தான் நடக்கும். நம்ம அவசரத்துக்கு எல்லாம் நடக்காது. சரி தமிழ் யாழினிய போய் எப்ப பாக்கலாம்’, என தமிழ் அப்பா கேட்க,
‘டாடி நாளைக்கு இல்ல நாளா நாளைக்கு போலாம். அப்புறம் சாரி ராஜி நீ சுகர் மாத்திரை வாங்கிட்டு வர சொன்னைல மறந்துட்டேன். நாளைக்கு கண்டிப்பா வாங்கிட்டு வரேன்.’, என தமிழ் சொல்ல,
‘போடா நீ வாங்கி தந்தேன்னு சொல்லிக்கறேன். எனக்கு நேத்தே நிலா வாங்கிட்டு வந்து குடுத்துட்டா’, என தமிழ் அம்மா சொல்ல,
‘என்னது நிலாவா அதுவும் நேத்தா எப்டி’, என தமிழ் ஆச்சர்யமாக கேட்க,
‘அதுவா அந்த இன்வஸ்டர பாக்க போனேன்ல. அங்க முடிச்சிட்டு கிளம்பும் போது வழில மெடிக்கல பாத்தேனா. ஆன்டி உங்க கிட்ட மாத்திரை வாங்கிட்டு வர சொன்னது ஞாபகம் வந்துச்சு. அப்புறம் ஆன்டிக்கு போன் பண்ணி அவங்க மாத்திரைய போட்டோ புடிச்சு அனுப்ப சொன்னேன். எத்தன மாத்திரை வாங்கனும்னு கேட்டுட்டு வாங்கிட்டு வரும் போது தான் மழை பிடிச்சிடுச்சு’, என நிலா நடந்ததை விவரித்து சொல்ல,
‘மேடத்துக்கு இதுக்கு எல்லாம் போன்ல ஜார்ஜ் இருந்திருக்கு. எனக்கு கூப்ட மட்டும் ஜார்ஜ் இல்லாம போச்சு’, என தமிழ் கேட்க,
‘அது வந்து. அதுக்கு பிறகு தான் போன் ஸ்விட்ச் ஆஃப் ஆயிடுச்சு’, என நிலா சொல்ல,
‘ஏன்டா இப்ப அவள எதுக்கு வம்புக்கு இழுக்குற. நீ தான் வாங்கிட்டு வரல. அவனாவுது வாங்கிட்டு வந்தாளேன்னு போகாம அவள போய் கேள்வி கேட்டுட்டு இருக்கற’, என தமிழ் அம்மா கேட்க,
‘ராஜி வர வர நீ என் அம்மாவா இல்ல நிலா அம்மாவான்னு எனக்கு சந்தேகமா இருக்கு’, என தமிழ் சொல்ல,
‘போடா டேய். நிலா நீ வா நம்ம போய் டிபன் ரெடி பண்ணலாம்’, என தமிழ் அம்மா சொல்ல,
‘இதோ வந்துட்டேன் ஆன்டி’, என நிலா சொல்லி விட்டு இருவரும் சேர்ந்து அடுப்படிக்கு செல்ல,
தமிழும், தமிழ் அப்பாவும் சேர்ந்து டிவியில் படம் பார்க்க தொடங்கினர்.
நிலாவும், தமிழ் அம்மாவும் சமையல் வேலையை பேசிக் கொண்டே செய்து முடித்தனர்.
‘சரி அப்பாவும், பையனும் சாப்பிட வாங்க ‘, என தமிழ் அம்மா கூப்பிட இருவரும் வர அனைவரும் சேர்ந்து பேசிக் கொண்டே சாப்பிட்டனர்.
சாப்பிட்ட பிறகு தமிழ் தனியாக வெளியே வராண்டாவில் பிஸ்னஸ் விசயமாக போன் பேசிக் கொண்டிருந்தான்.
அவன் பேசி முடிக்கும் வரை காத்திருந்த தமிழ் அம்மா அவன் போனை கட் செய்ததும் அருகில் வந்து,
‘டேய் தமிழ் நிலாவ பத்தி நீ என்ன நினக்கற’, என கேட்க,
‘என்ன ராஜி இப்டி கேக்கற. ம் ரொம்ப நல்லவ, என் மேல மட்டுமில்லாம உங்க ரெண்டு பேர் மேலயும் கூட ரொம்ப பாசமா இருக்கா. எனக்கு வேலைலயம் ரொம்ப ஹெல்ப்பா இருக்கா’, என தமிழ் சொல்லிக் கொண்டே போக,
‘டேய் நான் கேட்டது அவ மேல உனக்கு இருக்க ஃபீலிங்க பத்தி’, என தமிழ் அம்மா கேட்க,
‘எனக்கே இன்னும் அவ மேல இருக்க அன்புக்கு பேர் என்னன்னு சொல்ல தெரியல. அவ கூட இருக்கும் போது ரொம்ப சந்தோஷமா இருக்கு. அவ செய்ற எல்லாம் எனக்கு புடிக்குது. அவ என் மேல அக்கறையா இருக்கறது பாத்து இன்னும் ஆசை அதிகமா ஆகுது. அவளுக்கு எதாவது ஒன்னுன்னா எனக்கு உயிரே போற மாதிரி வலிக்குது. இதுக்கு என்ன அர்த்தம் ராஜி’, என தமிழ் கேட்க,
‘டேய் அவ மேல இவ்ளோ ஆசை வச்சிருக்க அப்புறம் இன்னும் ஏன் அத அவ கிட்ட சொல்லாம இருக்க. எனக்கு இதுக்கு பேரு என்னான்னு எல்லாம் தெரியாது. ஆனா நிலாவ நீ காதலிக்கறேன்னு மட்டும் நல்லா புரியுது. அப்புறம் நிலா ரொம்ப பாவம் டா. அவளுக்கு உன் கூட ரொம்ப சந்தோஷமா வாழனும்னு ஆசை. அவ இடத்துல இருந்து கொஞ்சம் யோசிச்சு பாரு. அது மட்டும் இல்ல எங்களுக்கும் பேரன், பேத்திய பாக்கனும்னு ஆசை இருக்காதா. நான் என்ன சொல்ல வரேன்னு உனக்கு புரியும்னு நினக்கறேன்’, என சொல்லி விட்டு தமிழ் அம்மா உள்ளே செல்ல தமிழும் யோசித்த படியே உள்ளே சென்றான்.
எல்லாரும் அவரவர்கள் அறையில் படுக்க சென்றனர்.
‘தமிழ் லைட் ஆஃப் பண்ணிடவா’, என நிலா கேட்க,
‘ம் ஒரு நிமிஷம் நிலா. நான் உங்கிட்ட கொஞ்சம் பேசனும்’, என தமிழ் சொல்ல,
நிலா தமிழ் அருகில் சென்று உட்கார்ந்து கொண்டு, ‘சொல்லுங்க தமிழ்’, என சொல்ல,
‘அது வந்து என் இடத்துல நீ இருந்தா அதாவது உனக்கு எல்லாம் மறந்து போயிருந்தா என்ன பண்ணிருப்ப’, என தமிழ் கேட்க,
‘ம் கிட்ட தட்ட உங்கள மாதிரி தான் நான் நடந்து கிட்டு இருந்திருப்பேன். மறந்தத பத்தி யோசிக்காம நடக்கறத பத்தி யோசிக்கறீங்கல்ல அது மாதிரி. ‘, என நிலா சொல்ல,
‘சரி என்னை விட்டு பிரிஞ்சு போகனும்னு ஒரு தடவ கூட உனக்கு தோனலையா.’, என தமிழ் கேட்க,
‘ம் இப்ப நீங்க கேட்ட இந்த கேள்விக்கு தான் உங்கள விட்டு பிரிஞ்சு போகனும்னு தோனுது. சரி ஒரு வேளை நீங்க சொன்ன மாதிரி எனக்கு எல்லாம் மறந்து போயிருந்தா நீங்க என்னை விட்டு பிரிஞ்சு போயிருப்பீங்களா’, என நிலா கேட்க,
‘ம் நான் உன்ன கேள்வி கேட்டா அதுக்கு பதில் சொல்லாம திருப்பி என்னைய நீ கேள்வி கேக்கற. வர வர சேட்டை அதிகமா ஆயிடுச்சு உனக்கு’, என தமிழ் கோபித்துக் கொள்ள,
‘இப்ப சாருக்கு என்ன தெரியனும். ஒரு தடவ இல்ல இன்னும் எத்தன தடவ நீங்க என்னை மறந்தாலும் கூடவே இருந்து திரும்ப திரும்ப என்னை உங்களுக்கு புரிய வைப்பனே தவிர உங்கள விட்டுட்டு எங்கயும் போக மாட்டேன். நான் இல்லாம நீங்க ஜாலியா இருக்கலாம்னு பாத்தீங்களா’, என நிலா கிண்டலாக கேட்க,
‘ஏய் நிலா. நான் இல்லாம நீ இருந்துருவியோ என்னவோ எனக்கு தெரியாது. ஆனா நீ இல்லாம என்னால இருக்க முடியாதுன்ற நிலைமைல இப்ப நான் இருக்கேன்.’, என தமிழ் சொல்ல,
‘போதும் போதும் ஐஸ் வச்சது. சரி இப்ப எதுக்கு இந்த கேள்வி’, என நிலா கேட்க,
‘ம் எப்ப தோனுதோ அப்ப தான்டி கேக்க முடியும். சரி தூக்கம் வருது வா தூங்கலாம்’, என தமிழ் கூப்பிட,
நிலா லைட்டை ஆஃப் செய்து விட்டு வந்து படுத்தாள்.
‘தமிழ் உங்க பொண்டாட்டிய நீங்க லவ் பண்றத சொல்ல எதுக்கு இவ்ளோ கஷ்டப் படறீங்க. சும்மா கெத்தா, ஏய் நிலா நான் உன்னை காதலிக்கறேன்டி ன்னு சொல்ல வேண்டியது தான. ஆனா இது கூட எனக்கு பிடிச்சிருக்கு. டேய் தமிழ் என்னைக்கா இருந்தாலும் உன் கற்ப சூறையாடப் போறது நான் தான்டா.’, என நிலா தமிழைப் பார்த்து தனக்குள் சொல்லிக் கொண்டு தூங்க சென்றாள்.
தமிழ் நிலாவிடம் தன் காதலை எப்போது, எப்படி, எங்கே சொல்ல போகிறான்?
தொடரும்…
