நீ எனக்கு தந்த காதல் – 43.
தமிழ், நிலா இருவரும் தங்கள் அன்பை பரிமாறிக் கொள்ளும் நேரம்.
நிலா ஹாஸ்பிடல்லில் அட்மிட் செய்யப்பட்டு இருக்க தமிழுக்கு, கவின், யாழினி இருவரும் ஆறுதலாக கூட இருந்தனர்.
Advertisement
இனி,
நிலா மயக்கத்தில் இருந்து கண் முழிக்க அருகில் இருந்த தமிழ் அவளை வேகமாக சென்று இறுக்க கட்டி அணைத்து அழத் தொடங்கினான்.
Advertisement
Advertisement
‘டேய் தமிழ் அதான் நிலா கண் முழிச்சிட்டால்ல அப்புறம் ஏன் அழுகுற ‘, என கவின் கேட்க,
‘கவின் அவங்கள டிஸ்டர்ப் பண்ணாத வா நம்ம வெளிய போலாம். ‘, என சொல்லி யாழினி கவினை கூட்டிக் கொண்டு வெளியே போனாள்.
Advertisement
தமிழ் விடாமல் அழுது கொண்டிருக்க, ‘தமிழ் என் மேல கோபமா. சாரி எனக்கு வேற வழி தெரியல’, என நிலா சொல்ல,
‘நீ ரொம்ப செல்ஃபிஷ் தெரியுமா. உன்ன பத்தி மட்டும் யோசிச்சிருக்க. நீ இல்லாம நான் என்ன பண்ணுவேன்னு நீ யோசிக்கவே இல்ல’, என தமிழ் சொல்ல,
‘உங்களுக்கு சொன்ன வார்த்தைய நிறைவேத்த என்னால இந்த ஜென்மத்துல முடியாது. அதான் உங்கள விட்டு ஒரேடியா போயிடலாம்ன்னு நினச்சேன். ஆனா அதுவும் நடக்கல.’, என நிலா சொல்ல,
‘என்னை தனியா தவிக்க விட்டுட்டு போய்டலாம்னு நினச்சிட்ட இல்ல. நான் சொன்னது உன் நல்லதுக்கு தான். காலம் பூரா எங்கூட ஹாஸ்பிடல்ல நீ கஷ்ட படக்கூடாதுன்னு நினச்சு தான் என்னைய விட்டு உன்ன போக சொன்னேன். ஆனா நீ மொத்தமா போயிடுலாம்னு முடிவு பண்ணிட்ட’, என தமிழ் சொல்ல,
‘தமிழ் இது தான் ரீசனா. ஏன் தமிழ் ஒரு வேல எனக்கு இப்டி ஆயிருந்தா இது மாதிரி தான் என்னை விட்டுட்டு போயிருப்பீங்களா’, என நிலா கேட்க,
‘நிலா போதும் ஏற்கனவே எனக்கு தண்டனை குடுத்திட்ட. உன்னை வீட்ல அப்டி பாத்ததுல இருந்து இப்ப நீ கண் முழிச்சு தமிழ்னு கூப்ட இந்த நிமிஷம் வரைக்கும் எனக்கு உயிரே இல்ல. ப்ளீஸ் தயவு செஞ்சு இனிமே எப்பவும் இப்டி பண்ணாத’, என தமிழ் சொல்ல,
இருவரும் பேசிக் கொண்டிருக்க அப்போது கவினும், யாழினியும் உள்ளே வந்தனர்.
‘நிலா இப்ப பரவால்லயா. ‘, என கவின், யாழினி இருவரும் விசாரிக்க,
‘ம் ஓகே. சாரி உங்க எல்லாத்துக்கும் நான் ரொம்ப கஷ்டம் குடுத்திட்டேன்.’, என நிலா சொல்ல,
‘ஏய் நிலா அதெல்லாம் ஒன்னுமில்ல. ஆனா என்ன நீ ரொம்ப ஸ்ட்ராங்குன்னு நினச்சிட்டு இருந்தோம். இப்ப தான் தெரியுது தமிழ் விசயத்துல நீ ரொம்ப வீக்குன்னு’, என யாழினி சொல்ல,
‘ஆனா எங்க தமிழ இப்டி நாங்க பாத்ததே இல்ல. அவன விட்டு போயிருவியோன்னு அவன் துடிச்சு போய்ட்டான். அவனுக்கு ஹாஸ்பிடல்னாலே பயம் ஆனா உன்ன எப்டி கூட்டிட்டு வந்து அட்மிட் பண்ணான்னு தெரியல. நான் வந்து பாக்கும் போது அப்டியே சிலை மாதிரி உட்கார்ந்து இருந்தான். நான் வந்து என்ன டா ஆச்சுன்னு கேட்டது தான் அப்டியே என்னை கட்டி பிடிச்சிட்டு சின்ன குழந்தை மாதிரி அழ ஆரம்பிச்சிட்டான். டாக்டர் வெளியே வந்தப்ப கூட அவன் போய் விசாரிக்கல என்னைய போய் தான் கேக்க சொன்னான். ஏன்டான்னு கேட்டதுக்கு அவரு என்ன சொல்லுவோருன்னு எனக்கு பயமா இருக்குன்னு சொன்னான். ‘, என கவின் சொல்ல,
‘தமிழ் சாரி நீங்க சொன்ன மாதிரி நான் என்ன பத்தி மட்டும் யோசிச்சு இந்த முடிவு எடுத்துட்டேன். என்னை மன்னிச்சிடுங்க ப்ளீஸ்’, என நிலா கேட்க,
‘நீ இனிமே என்னை விட்டு எங்கயும் போக மாட்டேன்னு சொல்லு அப்ப தான் நான் உன்னை மன்னிப்பேன்’, என தமிழ் சொல்ல,
‘கண்டிப்பா இனிமே நீங்களே என்னை போக சொன்னா கூட உங்கள விட்டு எங்கயும் போக மாட்டேன். இது ப்ராமிஸ். ஓகே வா’, என நிலா சொல்ல,
‘அப்பாடா ஒரு வழியா வந்த பெரிய பிரச்சனைல இருந்து தப்பிச்சாச்சு. சரி தமிழ் காலைல இருந்து எதுவும் சாப்டல இந்தா நிலா இந்த டீய குடு. நீ வந்து உன் கையால குடுத்தா தான் குடிப்பேன்னு சார் சொல்லிட்டாரு.’, என சொல்லி யாழினி ப்ளாஸ்கில் இருந்த டீயை ஊற்றி நிலாவிடம் குடுக்க அவள் அதை வாங்கி தமிழிடம் குடுக்க அவன் அதை வாங்கி குடித்தான்.
‘சரி நீங்க இருங்க நான் போய் டிஸ்ஜார்ஜ் சமர்ரி வாங்கி கிட்டு பில் பே பண்ணிட்டு வந்தறேன்’, என சொல்லி விட்டு கவின் செல்ல அவர்கள் பேசிக் கொண்டிருந்தனர்.
கடைசியாக டாக்டர் வந்து செக் பண்ணி விட்டு, ‘ஓகே யு ஆர் ஆல்ரைட். நாளைக்கு ஒரு தடவ டிரஸ்ஸிங் பண்ணி கட்டு போட்ருங்க. மத்த படி காயம் ஆறற வரைக்கும் தண்ணில படாம பாத்துக்கங்க. சரியா’, என சொல்ல,
‘ஓகே ரொம்ப தேங்க்ஸ் டாக்டர் ‘, என்றான் தமிழ்.
‘சரி எல்லா வாங்கியாச்சு போலாமா’, என கவின் கேட்க அனைவரும் அங்கிருந்து கிளம்பினர்.
‘தமிழ், நீ நிலா ரெண்டு பேரும் உங்க கார்ல வந்துருங்க. நானும், யாழினியும் எங்க கார்ல வந்தறோம்’, என கவின் சொல்ல,
”ஏய் ஒரு நிமிஷம் நீங்க எங்க வர்றீங்க ‘, என தமிழ் கேட்க,
‘உங்க வீட்டுக்கு தான். ஏன் கேக்குற ‘, என கவின் சொல்ல,
‘ஒன்னும வேண்டாம். யாழினி டயர்டா இருப்பா நீ அவள கூட்டிட்டு உங்க வீட்டுக்கு போ’, என தமிழ் சொல்ல,
‘ஆஹா என் மேல எவ்ளோ அக்கறை டா உனக்கு. கவின் வாடா இன்னுமா உனக்கு புரியல’, என யாழினி கேட்க,
‘அது இல்ல டா நிலாவ வீட்ல கொண்டு வந்து பத்திரமா விட்டுட்டு வரலாம்னு’, என கவின் சொல்ல,
‘என் பொண்டாட்டிய பத்திரமா கூட்டிட்டு போக எனக்கு தெரியும். முதல்ல நீ யாழினிய பத்திரமா கூட்டிட்டு போ சரியா’, என தமிழ் சொல்ல,
‘சரி டா பாய், பாய் நிலா’, என சொல்லி விட்டு கவினும், யாழினியும் கிளம்ப தமிழும், நிலாவும் அவர்கள் காரில் அங்கிருந்து கிளம்பினர்.
‘நிலா நீ இந்த முடிவு எடுக்க நான் தான் காரணம் என்னை மன்னிச்சிரு .’, என தமிழ் சொல்ல,
‘இல்ல தமிழ் உங்கள விட்டு பிரியறதுக்கு என்னால முடியல. அதான் ஓரேடியா போயிடலாம்னு இந்த முடிவுக்கு வந்தேன். ஆனா நீங்க கஷ்டப்பட்டத கவின் சொல்லவும் தான் புரிஞ்சது நான் எவ்ளோ பெரிய தப்பு பண்ணிருக்கேன்னு. நீங்க தான் என்னை மன்னிக்கனும்’, என நிலா சொல்ல,
‘சரி விடு இனிமே எந்த பிரச்சனை வந்தாலும் ரெண்டு பேரும் சேர்ந்தே சமாளிப்போம். ஒருத்தர விட்டுட்டு ஒருத்தர் எந்த முடிவும் எடுக்க கூடாது. ஓகே வா’, என தமிழ் சொல்ல,
‘சரி ஓகே.’, என நிலா சம்மதிக்க இருவரும் வீடு வந்து சேர்ந்தனர்.
‘தமிழ் வீடு திறந்து கிடக்கு’, என நிலா பதட்டமாக கேட்க,
‘ம் எல்லாம் உன்னால தான்.’, என தமிழ் சொல்ல,
‘என்னாலயா’, என நிலா புரியாமல் கேட்க,
‘பின்ன காலங் காத்தால உன்ன அப்டி பாத்ததும் ஹாஸ்பிடல்லுக்கு தூக்கிட்டு போவனா. இல்ல பொறுமையா கதவெல்லாம் சாத்திட்டு அப்புறம் போவனா. அந்த அவசரத்துலயும் உள் கதவ பூட்டிட்டு தான் வந்தேன். வெளி கேட்ட மட்டும் சாத்தல’, என தமிழ் சொல்ல,
‘தமிழ் என் மேல உங்களுக்கு பாசம் இருக்குன்னு தெரிஞ்சிருந்தா என்னோட சேத்தி உங்களையம் கூட கூட்டிட்டு போயிருப்பேனே. சாரி அடுத்த தடவ மறக்காம அப்டியே செஞ்சறேன்’, என நிலா சிரித்துக் கொண்டே சொல்ல,
‘அம்மா தாயே இந்த ஒரு தடவயே என்னால முடியல. இதுல அடுத்த தடவ வேறயா. வா உள்ள போலாம்’, என தமிழ் சொல்ல இருவரும் உள்ளே போனார்கள்.
தமிழ் நிலாவை கூட்டி கொண்டு போய் படுக்க வைக்க, ‘தமிழ் எனக்கு பசிக்குது’, என நிலா சொல்ல,
‘அச்சோ வழில சாப்பாடு வாங்கிட்டு வரலாம்னு நினச்சேன் உன் கூட பேசிட்டு மறந்துட்டேன். சரி இரு போய் வாங்கிட்டு வந்தறேன்’, என தமிழ் எழுந்திருக்க,
‘தமிழ் நான் காலைலயே சாப்பாடு வச்சிட்டேன். ஃபிரிட்ஜ்ல ஆன்டி புளியும், தக்காளியும் வச்சிருக்காங்க வாங்க போய் சாப்டலாம்’, என நிலா சொல்ல,
‘சரி நீ இங்கயே உட்காரு. நான் போய் எல்லாத்தையும் எடுத்துட்டு வரேன்’, என சொல்லி தமிழ் சென்று எடுத்து வந்தான்.
‘நிலா எவ்ளோ போட்டு பிசயறது’, என தமிழ் கேட்க,
‘உங்கள குடுங்க’, என சொல்லி நிலா தட்டை வாங்கி அடிபடாத கையில் கரண்டி எடுத்து சாப்பாடு போட்டு புளி , நல்லெண்ணெய் ஊற்றி உப்பு கொஞ்சம் போட்டு விட்டு தமிழிடம் குடுத்து,
‘இப்ப நல்லா இத பிசைங்க. ‘, என நிலா சொல்ல,
அவனும் பிசைந்து நிலாவுக்கு ஊட்டினான்.
‘தமிழ் நீங்களும் சாப்டுங்க.’, என நிலா சொல்ல,
‘முதல்ல நீ சாப்டு. அப்புறமா நான் சாப்டுக்கறேன்’, என தமிழ் சொல்ல,
‘அதெல்லாம் முடியாது உங்களுக்கு ஒரு வாய் எனக்கு ஒரு வாய். அப்டினா தான் நான் சாப்டுவேன். இல்லைன்னா எனக்கும் வேணாம்’, என நிலா சொல்ல,
‘சரி நானும் சாப்டறேன்’, என சொல்லி தமிழும் சாப்பிட்டான்.
‘ஆன்டி சூப்பரா செஞ்சு இருக்காங்கல்ல. அவங்க போன் பண்ணாங்களா’, என நிலா கேட்க,
‘இல்ல நேத்து பண்ணது தான். ஆமா உனக்கு ரொம்ப தான் அக்கறை. கொஞ்சம் இல்லைன்னா எங்கள எல்லாம் விட்டுட்டு போயிருப்ப’, என தமிழ் சொல்ல,
‘ஆமா தமிழ் அந்த நேரம் ஆன்டி, அங்கிள், எங்க அம்மா, பாரதி யாருமே எனக்கு ஞாபகத்துக்கு வரல. உங்கள விட்டுட்டு என்னால வாழ முடியாது. அதுக்கு சாவறதே பரவால்ல ன்னு மட்டும் தான் தோனுச்சு. ஒரு வேல அப்டி செத்து போயிருந்தா கண்டிப்பா ஆவியா வந்து உங்கள சுத்தி கிட்டு இருந்துருப்பேன்’, என நிலா சொல்ல,
‘அப்ப கூட என்ன விட மாட்ட.’, என தமிழ் கேட்க,
‘சரி நான் செத்து போயிருந்தா நீங்க என்ன பண்ணி இருப்பீங்க ‘, என நிலா கேட்க
‘என்ன உன் ஞாபகம் இருக்கற வரைக்கும் அழுது கிட்டு அப்புறம் என் வாழ்க்கைய பத்தி யோசிச்சிருப்பேன்’, என தமிழ் சிரித்துக் கொண்டே சொல்ல,
‘இல்ல நீங்க என்ன பண்ணி இருப்பீங்கன்னு நான் சொல்லவா. நான் செத்து போனதும் நீங்களும் என் கூடவே சேர்ந்து செத்து போயிருப்பீங்கன்னு நீங்களே சொன்னீங்க’, என நிலா சொல்ல,
‘நான் கவின் கிட்ட பேசுனது உனக்கு எப்டி தெரியும்’, என தமிழ் ஆச்சர்யமாக கேட்க,
‘அதுமட்டும் இல்ல நீங்க என் பக்கத்துல உட்கார்ந்து பேசுன எல்லாமே எனக்கு கேட்டுச்சு. அப்பவே எழுந்திருச்சு உங்கள கட்டி பிடிச்சு சமாதானம் பண்ணனும்னு தோனுச்சு ஆனா முடியல.’, என நிலா சொல்ல,
‘அப்ப முடியலைன்னா என்ன இப்ப முடியும் தான’, என தமிழ் கேட்க நிலா வேகமாக வந்து தமிழை இறுக்கி கட்டிக் கொண்டாள்.
தொடரும்…
