Skip to content
Post Views: 1,885
“நீ என்ன சொல்றன்னு தெரிஞ்சு தான் பேசிட்டு இருக்கியா? உனக்கு என்ன தான் ஆச்சு? இந்த ஒரு வாரத்துல!
நேத்து வரைக்கும் கூட நல்லா தானே இருந்த?
அதுக்குள்ள உனக்கு என்ன பேய் பிடிச்சுருச்சா?
இப்படி லூஸுத் தனமா பேசிட்டு இருக்க?” மணி அத்தையும் திட்டினார்.
Advertisement
“இதுக்கு மேல எதாவது பேசினே, அப்படியே அடிச்சே கொன்னுடுவேன் ராஸ்கல்!
எவளோ என்னமோ சொன்னாளாம்! அதனால இவ பயப்படுறாளாம்!
ஏஐ காலத்துல இருக்கோம் நாம!
Advertisement
இப்ப போய் குறி சொல்றவ பேச்சை எல்லாம் கேட்டுகிட்டு!
Advertisement
அப்படியே அடிச்சேன்னா பாரு!
யாரு அந்த சாமியாடி.. மாமா.. யாருன்னு விசாரிங்க. அவ வாயை ஒடச்சு போட்டா தான் எனக்கு நிம்மதி!” ரேவந்த் மீண்டும் கத்த ஆரம்பிக்க, அவனது பெரிய மாமாவோ,
“உன் கிட்ட இப்படி ஒரு முட்டாள் தனத்தை நான் எதிர்பார்க்கல ஸ்வீட்டி!
Advertisement
நீ படிச்ச பொண்ணு! உலக விவரம் தெரிஞ்ச பொண்ணு!
உங்க அப்பாவுக்கு கூட அவ்வளவு விவரம் தெரியாது!
நீ சின்ன பிள்ளையிலயே அவ்வளவு விவரமா இருப்ப! தெளிவா முடிவு எடுப்ப!
உன் அப்பா காலத்துக்கு பின்னே, உன்னோட தங்கச்சிங்கள அப்பா அம்மா ஸ்தானத்துல இருந்து காப்பாத்தி இருக்க! கல்யாணம் பண்ணி வச்சுருக்க!
இதெல்லாம் சாதாரண விசயமா? எப்பேர்பட்ட விஷயம்!
நீ என்னம்மா.. இப்போ இப்படி பேசிட்டு இருக்க? அதெல்லாம் அவனுக்கு ஒண்ணும் ஆகாது!
ஸ்ரீமதி ஆசைம்மா இது! உன்னை ரேவந்துக்கு கட்டணும்ங்கிறது! அவ ஆசிர்வாதம் முழுக்க முழுக்க உனக்கு இருக்கும்!
உங்கள பெத்தவங்க தெய்வமா இருந்து உங்களை ஆசிர்வாதம் பண்ணுவாங்கம்மா! நீ தேவையில்லாம போட்டு மனச குழப்பிக்காத!
ஊருல ஆயிரம் பேர்.. ஆயிரம் சொல்லுவான்!
அதுமட்டுமா இப்ப ஆள் ஆளுக்கு யூட்யூப் சானல் வேற வச்சுகிட்டு ஏதேதோ சொல்றாங்க!
நாம தான் நமக்கு ஒத்து வர்றத மட்டும் எடுத்துக்கணும்!” என்று பொறுமையா சொல்ல,
“அண்ணே நீ என்ன அண்ணே.. இவ சொல்ற அந்த பொம்பளைய பிடிச்சு நாலு சாத்து சாத்தினா உண்மையை சொல்லப் போறா!
அவ என்ன பெரிய தபஸ்வினியா? இல்ல ரிஷிபத்தினியா? அவ சொல்றது அப்படியே பலிக்க!
நேத்து கூட பார்த்தேன்! செல் போனுக்கு ரீ சார்ஜ் பண்ண நின்னுகிட்டு இருந்தா ஒரு கடையில!
அவ எல்லாம் ஒரு ஆளுன்னு! ஸ்வீட்டி கிடக்கா.. நீ போய் ஆக வேண்டியத பாருங்க!” என்று எல்லோரையும் கிளம்பி போக சொன்னார்!
“இல்ல,, நீங்க யாரு என்ன சொன்னாலும், நான் அவர் உயிரோட விளையாடுற ரிஸ்க்கை எடுக்க மாட்டேன்! வேணாம்.. இந்த கல்யாணம் வேணாம்” மதுரா மீண்டும் அலறினாள்.
“அய்யோ.. அக்கா உனக்கு என்ன பயித்தியமா பிடிச்சுருக்கு!
நீ எனக்கு அம்மா மாதிரி.. நீ சொன்னதுக்காக உன் வாரத்தைக்கு அன்னிக்கு மதிப்பு கொடுத்து தானே, அன்னிக்கு உனக்கு முன்னாடி நான் கல்யாணம் பண்ணிகிட்டேன்!
ஆனா எனக்கு இன்னிக்கு வரை, உனக்கு ஆகாம, நான் ஃபர்ஸ்ட் கல்யாணம் பண்ணிக்கிட்டது ஒரு உறுத்தலா தான் இருந்துச்சு.
இப்ப உன் கல்யாணம் உறுதியானவுடனே தான் எனக்கு அந்த பாரமே இறங்குச்சே!
இப்ப நீ மறுபடியும் உன்னோட கல்யாணத்தை நிறுத்திட்டு,
இப்படி காலம் பூரா இப்படியே இருக்க போறேன்னா,
நான் அப்ப ஆயுசுக்கும் அந்த குற்றஉணர்ச்சியோடவே தான் இருக்கணுமா?
சொல்லுக்கா.. எனக்காக கூட யோசிக்க மாட்டியா நீ!” இனியா கெஞ்சினாள்.
“ஏய்.. இனியா. இப்ப நான் எடுத்து இருக்கிற முடிவுக்கும், உனக்கும் ஒரு சம்பந்தமும் இல்ல!
நீ ஏன் வீணா போட்டு குழப்பிக்கிற?” மதுரா சொல்ல,
“யாரு.. வீணா போட்டு குழப்பிக்கிறா? நீயா அவளா?” என்றான் ரேவந்த் இன்னமும் கோபம் குறையாத குரலில்!
“இல்ல.. ஏன்.. யாருமே என்னோட பயத்த புரிஞ்சுக்க மாட்டேங்கிறீங்க! ஏன் என்னோட உணர்ச்சிக்கு மதிப்பு கொடுக்க மாட்டேங்கிறீங்க!
இப்ப நீங்க சொன்னபடி எங்க கல்யாணம் நடந்தா, நான் தினம் தினம் பயந்துட்டே தான் இருப்பேன்!
சின்னதா அவருக்கு ஏதாச்சும் நடந்தா கூட என்னால சாதாரணமாவே இருக்க முடியாது!
அவர் எங்கியாச்சும் வெளியூர் போனாலோ, இல்ல வெளிநாட்டுக்கு போனாலோ நான் இங்க பயந்துட்டே தான் இருப்பேன்.
என்னோட இந்த பயமே எனக்கு மனரீதியா பிரச்சினை ஆகி, அவருக்கும் நிம்மதி இல்லாம போய்டும்!
எனக்கு அவர் சந்தோசமா, நிம்மதியா நீண்ட ஆயுளோட நல்லா இருக்கணும்!
என்னை கல்யாணம் பண்ணிகிட்டா அது நடக்காது! ப்ளீஸ் புரிஞ்சுக்கோங்க!”
“நீ தாண்டி என்னை புரிஞ்சுக்கணும்!
உன்னை பார்க்காத இத்தனை வருசத்துல கூட வேற எந்த பொண்ணையும் என்னால பொண்டாட்டியா நினைச்சுக் கூட பார்க்க முடியல!
இத்தனைக்கும் உனக்கு வேற ஒரு கல்யாணம் ஆகி இருந்தாலும் கூட இருந்துருக்கும்ன்ற நினைப்பு இருந்தும் கூட
என்னால வேற ஒரு பொண்ணை என் வாழக்கையில நினைச்சுப் பார்க்கல நான்!
அப்படி இருக்கும் போது, இப்ப உன்னையும் பார்த்து, உன்னோட மனசுலயும் நான் தான் இருக்கேன்னு தெரிஞ்சு,
இப்ப கல்யாணம் வரை வந்து, என்னோட மனசுல ஆயிரம் கற்பனையை ஆசையை வளர்த்துக்கிட்டு,
கல்யாண தேதி நெருங்கி வர்ற நேரத்துல போய் என்னோட தலையில கல்லைத் தூக்கி போடுற மாதிரி நீ பேசிட்டு இருக்க!
வலிக்குதுடி நீ இப்படி பேச பேச.. “ ரேவந்த் கிட்டதட்ட குரல் உடைந்து பேசினான்!
அவனை அப்படிக் கண்ட மதுராவுக்கும் அழுகை வந்தது!
“நான் மட்டும் என்ன ஆசைப் பட்டா இந்த முடிவை எடுத்து இருக்கேன்! எனக்கு நீங்க நல்லா இருக்கணும் அதுக்கு தான்!
மருந்து கசக்க தான் செய்யும்! ஆனா அதுக்காக பார்த்தா நம்ம உடம்பு சரியாக வேணாமா? அது போல தான்!
இது கஷ்டமா இருந்தாலும் ஏத்துக்க தான் வேண்டும்!
ப்ளீஸ்! என்னை விட்டுடுங்க! நீங்க வேற ஒரு நல்ல பொண்ணா பார்த்து கல்யாணம் பண்ணிக்கிட்டு சந்தோசமா இருக்கணும்!
அது தான் என்னோட ஒரே ஒரு ஆசை! ப்ளீஸ்!”
“நீ இருக்கிற இந்த மனசுக்குள்ள வேற ஒருத்திக்கு இடமில்ல!
நீ ஒரு பக்கம் இந்த ஊருல இருக்கிற அம்மனைக் கும்பிட்டுக் கிட்டு சாமியாரிணியா இரு.
நான் அந்த பக்கம் காவி கட்டிக்கிட்டு சாமியாரா போய்டுறேன்!
ஆனா ஒரு நாளும் நீ நினைக்கிற விசயம் மட்டும் நடக்கவே நடக்காது! பார்த்துக்கோ!” என்றான் ரேவந்த் விரக்தியான குரலில்!
“ஏன் இப்படி.. நான் பாவம் இல்லையா?” கெஞ்சும் குரலில் மதுரா கேட்க,
“நீ யாருடி எனக்கு? அது தான் ஒண்ணுமில்லன்னு சொல்லிட்டியே!
அப்புறம் என்ன? நான் எதுக்கு உன்னோட சந்தோசத்துக்கு கல்யாணம் பண்ணனும்!
உனக்கு பாவம் பார்க்கணும்!”
“நீங்க ஒண்ணும் பாவம் பார்க்க வேண்டாம்! நீ உயிரோட இருந்தா தானே இப்படி பேசுவீங்க..
நான் இப்பவே செத்துப் போறேன் போங்க..” மதுராவும் ஆவேசமாக கத்த ஆரம்பித்தாள்.
“ஓ.. அப்படியா.. அதுக்கு நீ ஒண்ணும் கஷ்டப் பட வேண்டாம்!
நானே உன்னை கொன்னுடறேன்! உன்னைக் கொன்னுட்டு அப்படியே நானும் செத்துப் போறேன்!
போதுமா?” ரேவந்த் அவளின் குரல்வளையில் கை வைத்து நெறிக்க போனான்.
அவனது மாமாக்கள் பதறிக் கொண்டு வந்து அவனை இழுத்துப் பிடித்தனர்.
“அம்மாடி… ஸ்வீட்டி.. சொன்னா கேளுமா.. நம்ம வீட்டு சாமி.. அப்படி எல்லாம் உன்னை வாழ விடாம பக்கத்துல எல்லாம் வச்சுக்க நினைக்காதும்மா!
நம்ம குலம் நல்லா வாழ உயிரை விட்டவங்க அந்தம்மா..
அவங்களே நம்ம வீட்டு பொண்ணு கல்யாணம் பண்ணிக்காம கண்ணீர் விட விடுவாங்களா?
இதுல ஏதோ தப்பா இருக்கு!
அந்த பொம்பள ஒண்ணும் நல்லவ இல்லம்மா”. மணி அத்தை மீண்டும் அவளுக்கு எடுத்து சொன்னார்.
“என் அறிவும் அப்படியும் இருக்கும்னு சொல்லுது தான் அத்தை! ஒரு பக்கம் இதெல்லாம் நம்பாதேன்னு தான் சொல்லுது!
ஆனா இன்னொரு பக்கம் மனசு கிடந்து அடிச்சுக்குது அத்தை.. பயம்மா இருக்கு அத்தை!
நூத்துல ஒரு சதவீதம் அந்தம்மா சொல்ற படி நடந்தா என்ன பண்றதுன்னு என் மனசு பதறுது அத்தை!
அத்தை.. நீயாச்சும் புரிஞ்சுக்கோயேன். உனக்கு நல்லா தெரியும்! நான் என்னோட வயசுக்கு நிறைய கஷ்டப்பட்டுட்டேன்!
அளவுக்கு மீறி போராடி வந்துருக்கேன்!
இனி ஒரு கஷ்டத்தை ஏத்துக்க, என்னோட மனசுலயும் தெம்பு இல்ல. உடம்புலயும் தெம்பு இல்லை அத்தை!
நான் ரொம்ப டயர்டாகிட்டேன்!
ப்ளீஸ்.. என்னை புரிஞ்சுக்கோங்க.
நான் உங்கள திரும்ப சந்திக்கவே இல்லைன்னு நினைச்சுக்கிறேன்!
நீங்களும் அப்படியே நினைச்சுக்கோங்க!
என்னை மறந்துட்டு வேற ஒரு பொண்ணைப் பார்த்து கல்யாணம் பண்ணி நல்லபடியா இருங்க” என்று ரேவந்த்தைப் பார்த்து கையெடுத்துக் கும்பிட்டாள் மதுரா.
ரேவந்த் அவளை முறைத்துக் கொண்டு இருக்க, அதுவரை பேசாமல் இருந்த லக்கி, இப்போது தான் வாயை திறந்தாள்!
“சோ.. உனக்கு அத்தான் வேண்டாம்! நீ அவரைக் கல்யாணம் பண்ணிகிட்டா, அவருக்கு ஏதோ ஆகிடும்னு பயப்படுற இல்ல?”
“ஆமா!”
“அப்போ அவர் வேற ஒரு பொண்ணைக் கட்டாயம் கல்யாணம் பண்ணிக்கணும் இல்ல?”
“ஆமா!”
“அப்போ அத்தானை நான் கல்யாணம் பண்ணிக்கறேன்!
யாரோ ஒரு பொண்ணைக் கட்டுறதுக்கு நானே பண்ணினா என்ன?”
லக்கி சொல்ல, மதுரா பேச்சிழந்து நின்ற கணம், இப்போது லக்கியின் கன்னத்தில் அறை விழுந்தது!
அடித்தது ரேவந்த் தான்!
“ஹேய்.. என்ன பேசுற நீ? என்ன உனக்கும் பயித்தியம் பிடிச்சுருச்சா?
அக்காவும் தங்கச்சியும் என்கிட்ட அடிபட்டே சாவப் போறீங்க ஆமா!” ரேவந்த் ஆவேசமாக!
கோபத்தில் ஏற்கனவே சிவந்து இருந்த அவன் கண்கள் இன்னமும் சிவந்தன!
அவனைப் பார்க்கவே பயந்தாள் மதுரா!
ஆனால் லக்கி பயப்படவெல்லாம் இல்லை!
மீண்டும் தைர்யமாகவே சொன்னாள்!
“ஆமா.. அத்தான் மாதிரி ஒரு நல்ல மனுசனை நீ வேணுமின்னா லூஸ் பண்ண ரெடியா இருக்கலாம் அக்கா.
நான் ரெடியா இல்ல! நீ பண்ணிக்காட்டி என்ன, நான் பண்ணிக்கிறேன்.
இனியா அக்கா பையன் மாதிரி என்னோட பிள்ளைங்க உன்னை லவ் யூ பெரியம்மான்னு சொல்லும்!
நீயும் அந்த சந்தோசத்தை நல்லா அனுபவிச்சுட்டு, இதோ இந்த ஊரிலேயே இருந்துக்கோ.!”
“லக்கி.. நீ வேற இப்ப புதுசா ப்ராப்ளம் கிரியேட் பண்ணாத!
உன்னை எல்லாம் என்னால அப்படி நினைச்சுக் கூட பார்க்க முடியாது! நீ என்னோட பொண்ணு மாதிரி!
முடிஞ்சா உன் அக்காவை சரி பண்ணி எங்க கல்யாணம் நடக்க ஹெல்ப் பண்ணு! இல்லையா சும்மாவாச்சும் இரு!”
“இல்ல அத்தான்! நீங்க தானே சொல்வீங்க..
நான் உங்க லக்கி ஏஞ்சல்ன்னு! அக்கா பண்ணிக்க மாட்டேன்கிறா..
வேற யாரோ ஒருத்திய பண்றதுக்கு நீங்க என்னையே கல்யாணம் பண்ணிக்கலாமே!”
“வாங்கின அறை பத்தலையா லக்கி? நீ நினைக்கிறது ஒரு நாளும் நடக்காது!”
“அதெல்லாம் நடக்கும்! அது தான் அந்த மஞ்சள் கயிறு மேஜிக்ன்னு கூட சொல்வாங்களே! என்ன நான் கொஞ்ச நாள் வெயிட் பண்ணனும்! பண்ணிட்டு போறேன்!”
“பார்த்தியா.. எல்லாம் உன்னால வந்தது!
நீ பண்ற கிறுக்குத் தனம் என்னை எங்க கொண்டு வந்து என்ன மாதிரி பேச்சை எல்லாம் கேக்க வச்சுருக்கு பாரு!” ரேவந்த் மீண்டும் மதுராவிடம் எகிற,
“அய்யோ அத்தான் உங்கள வேண்டாம்னு சொல்ற அக்காவை விடுங்க. நீங்க வேண்டும்னு சொல்ற என்னைப் பாருங்க!”
“நீங்க மட்டும் கல்யாணம் பண்ண சம்மதம் சொல்லல, நான் எந்த எக்ஸ்ட்ரீமுக்கும் போவேன்!
கையை அறுத்துக்க கூட தயங்க மாட்டேன்” லக்கி இப்போது மிரட்டினாள்.
“அய்யோ லக்கி என்னடி இது..?” மதுரா பதற,
ஏய்.. போடி.. இந்த மிரட்டலுக்கு எல்லாம் நான் பயப்பட மாட்டேன்” என்று “ரேவந்த் சொல்ல,
அவன் காலில் விழுந்தாள் மதுரா!
“ப்ளீஸ்.. என் லக்கிக்கு ஏதாச்சும் ஆச்சுன்னா என்னால தாங்கிக்க முடியாது!
ப்ளீஸ் அவ சொல்றத கேளுங்களேன்.. அவ சொன்னா சொன்னத செய்துடுவா.. பிடிவாதக்காரி..”
“ஏய்.. என்ன பேசுற.. அவ தான் சின்ன பிள்ளை ஏதோ உளறுரா! அது சரி.. அப்புறம் உன்னோட தங்கச்சி எப்படி இருப்பா?
ஆனா ஒண்ணும் மட்டும் சொல்றேன்! அப்படியே அவளை நான் கல்யாணம் பண்ணினாலும், மகளா நினைச்ச அவளோட நான் வாழவே முடியாது!
காலத்துக்கும் அவ கன்னியா தான் இருக்கணும்!
நம்ம வாழ்க்கையும் கெட்டுப் போய், கூட அவ வாழ்க்கையும்
கெட்டுப் போய்டும்! இனி நீ தான் சொல்லணும்!
நீ பார்த்து முடிவு பண்ணிக்க. இனி நான் பேச ஒண்ணும் இல்லை” என்று ரேவந்த் சொல்லி விட்டு கிளம்ப, எல்லோரும் கிளம்பி விட்டனர் அங்கிருந்து.
—-
மொட்டை மாடியில் நின்று சிகரெட் பிடித்துக் கொண்டு இருந்தான் ரேவந்த்!
ரொம்பவும் தாங்க முடியாத டென்சன் ஏற்பட்டால் மட்டுமே சிகரெட் பிடிப்பான் அவன்!
இப்போது மண்டை வெடித்து விடும் அளவு டென்சன்!
ஏற்கனவே மதுராவின் பேச்சால் டென்சனின் உச்சத்தில் இருந்த அவன், இப்போது லக்கி புதிதாக கிளப்பி விட்டிருக்கும் பிரச்சினையால் அவன் மண்டை இன்னமும் சூடாகியது!
“அத்தான்” லக்கியின் குரல் கேட்டு, வெறுப்புடன் முகத்தை திருப்பிக் கொண்டான்.
நான் எவ்வளவு ஸ்வீட்டியை லவ் பண்றேன்னு தெரிஞ்சும், இவள நான் எப்படி நினைக்கிறேன்னு தெரிஞ்சும் எப்படி இவளால இப்படி பேச முடிஞ்சது? ச்சே..
“எதுக்கு இப்ப இங்க வந்த? இன்னும் என் உயிரை வாங்கவா?
நான் தான் அப்பவே சொல்லிட்டேனே! உன்னை கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்ன்னு!
அதுக்கு அப்புறம் ஏன் இங்கயும் வந்து தொல்லைப் பண்ற?” அவன் அவளை கோபமாக கேட்டான்.
“யோவ்.. பெரிசு.. உனக்கு.. ரொம்ப தான்யா.. நினைப்பு!
நான் எதுக்கு உன்னை போய்.. போயும் போயும் எனக்கு அங்கிள் வயசுல இருக்கிற உன்னைப் போய் கல்யாணம் பண்ணிக்க போறேன்?
எனக்கு எல்லாம் யூத்ஃபுல்லா ஒரு பையன் தான் வேணும்!
என் அக்கா தான் லூசுன்னு நினைச்சேன். ஆனா நீயும் ஒரு லூஸு.. ஜாடிக்கேத்த மூடின்னு இப்ப தானே தெரியுது!
நான் ஒரு விசயம் சொன்னேன்னா அதுல ஏதாச்சும் உள்குத்து இருக்கும்னு கூட தெரியல!
ஒரு குறி சொல்றவ சொல்லி என் அக்கா தான் இப்படி உளறிக்கிட்டு இருக்கான்னா, நீங்க என்ன பண்ணி இருக்கணும்?
முதல்ல அந்த பொம்பளைய தூக்கிட்டு வந்து கும்மி இருக்கணும் இந்நேரம்!
எவ்வளவு பெரிய பிசினெஸ் மேன் நீங்க?
உங்க லைஃபில் ஆஃப்டர்ஆல் ஒரு கிராமத்து படிக்காத அடுத்தவங்கள ஏமாத்தி வயிறு வளர்த்துட்டு இருக்கிற ஒரு லோக்கல் ஃபிராடு வந்து விளையாட நீங்க எப்படி விடலாம்?
அன்னிக்கே மணி அத்தை சொன்னுச்சு. அந்த பொம்பள கிட்ட ஏதோ தப்பு இருக்குன்னு!
அவ விவரமா நானும் அத்தையும் இல்லாத நேரம் பார்த்து வந்து அக்கா கிட்ட பேசி குழப்பி விட்டுருக்கா!
இப்ப தான் நான் விசாரிச்சுட்டு வந்தேன்!
அவ எங்க சூர்யா சித்தியோட அம்மா வீட்டு திண்ணையில தான் தங்கிக்கிட்டு இருக்கா!
அப்போ அவங்க சொல்லி கூட இப்படி சொல்லி இருக்க சான்ஸ் இருக்கு!
ஏன்னா எங்கள கண்டாலே அந்த லேடிக்கு பொறாமை! இப்ப கொஞ்ச நாள் முன்னாடி கூட அக்கா அவங்கள ஏதோ நோஸ் கட் பண்ணி இருக்கா!
அந்த கோபமும், லேட்டானாலும் அக்காவுக்கு உங்கள மாதிரி பெரிய இடத்தில் கல்யாணம் ஆகுற பொறாமையும் அவங்கள இத செய்ய வச்சுருக்கலாம்!
இப்ப அந்த பொம்பள இங்க இல்ல! எங்கியோ வெளியூர் கோவில் திருவிழாவுக்கு போய் இருக்காளாம்!
எப்படியும் திரும்ப வருவா! வந்தா அவள கவனிக்க விதத்துல கவனிச்சு உண்மையை சொல்ல வச்சுடலாம்!
அது வரைக்கும் அக்காவை இப்படி டென்சன்ல வச்சுருப்போம்!
அக்கா.. நிச்சயம் என் வாழ்க்கையை காப்பாத்த வாச்சும் நல்ல முடிவா எடுப்பா! “
லக்கி பேச பேச சட்டென நிம்மதி வந்தது ரேவந்துக்கு!
நிதானமும் வந்தது!
“சாரி செல்லம்.. உன்னை அடிச்சதுக்கு!” அவள் கன்னத்தை தடவி விட்டான்!
“அது பரவாயில்ல.. அக்காவை நானும் இப்ப குழப்பி விட்டுருக்கேன். அந்த கேப்பில் நாம சீக்கிரமா அந்த பொம்பளைய பிடிச்சு கொண்டு வரணும்!”
“பண்ணிடலாம்! லக்கி களத்துல இறங்கின பின்னாடி எனக்கு என்ன பயம்?”
நிம்மதியாக சிரித்தான் ரேவந்த்.
error: Content is protected !!