Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

நெஞ்சம் ஏங்குதே..

நெஞ்சம் ஏங்குதே.. 10 3

 அவன்  பேசுவதற்கு எல்லாம் அவர்களும் படுத்துக்கொண்டே இவனை பார்த்து   சத்தமாக   சிரிப்பார்கள்,..

 ரிஷியோ  வித விதமாக சத்தங்களை எழுப்பி  பிள்ளைகளை கொஞ்சுவான்  ஃபோனில்



Advertisement

 அவனின்  விதவிதமான சத்தத்தை கேட்டு பிள்ளைகள் கலகலவென்று சிரிப்பார்கள்..

 குழந்தைகளுக்கு ஆத்விக் ரிஷி,  சாத்விக் ரிஷி என்ற பெயரிட்டு இருந்தான் ரிஷிநத்தன்.

Advertisement

Advertisement

 அவன்  வீடியோ காலில் பேசும்போது மொழி பக்கத்தில் கூட வரமாட்டாள்

 குகன் அடிக்கடி வந்து அக்காவை பார்த்து செல்வான் அவன் சென்னையில் வேலை செய்வதால் அடிக்கடி வந்து பார்ப்பான்.

Advertisement

 கிரிக்கெட் ஹெட் ஆபிலில்  இருந்து அவ்வப்போது மொழிக்கு ஈமெயில் வரும் எப்ப வர போறீங்க என்று..

 அவள் இப்போதைக்கு வர முடியாது என்று மெடிக்கல் லீவு போல் எழுதிக் கொடுத்திருந்தாள்..

 சீக்கிரம் வந்து சேருங்க என்று சொல்லி இருந்தனர்..

 குகன் எவ்வளவோ மொழியிடம் எடுத்து சொல்லி இருந்தான் நீ ஏன் இங்கு இருக்கிறாய்  வா என்று.

 அவள் ஒரே வார்த்தையில்,  “என்னை விட பிள்ளைகளை  யாரும் நல்லா பார்த்துக் கொள்ள மாட்டார்கள் பிள்ளைகளை  நல்லா படியா வளர்க்கனுமடா” என்று…

 சுதாவுக்கு மொழிக்கும் நேரம் சரியாக இருந்தது பிள்ளைகளை நன்றாக பார்த்துக் கொள்வது உணவு கொடுப்பது தூங்க வைப்பது அவர்களை சுத்தம் செய்வது கரெக்ட்டாக தடுப்பு  ஊசி போட அழைத்து செல்வது என்று..

ராமமூர்த்தி வெளி வேலைகளை எல்லாம் பார்த்துக் கொண்டார். அவர்களுக்கு தேவையான அனைத்தும் செய்து கொடுத்தார்.

  ரிஷிக்கு குஜராத்தில்  போன வேலை இழுத்து விட ஆறு மாதம் கழித்து அனைத்து வேலைகளையும் முடித்து,  பல கோடி லாபத்தை ஈட்டி இருந்தான் ரிஷி..

 அதனால் புதிதாக இன்னொரு கம்பெனியை ஆரம்பித்திருந்தான்..

 அந்த வேலையை பார்த்துக் கொண்டே சென்னை வந்து சேர்ந்தான்..

 அவன் வீட்டில்  இருக்கும் போது மொழி வெளியவே வரமாட்டாள்.

 அவளுக்குத் தெரியும் அவன் எப்போ வருவான், செல்வான் என்று அதனால் ரூமில் இருந்து கொள்வாள்.

 சுதாவும் மகன் முன்பு மொழியை பற்றி பேசுவது இல்லை.

 அவன் வந்து ஒரு வாரம் ஆகி இருந்தது..

 அவன் சரியாக காலை ஒன்பது மணி போல தான் கீழே வருவான்.

 உண்டு விட்டு சென்று விடுவான் பின்பு  இரவு 10 மணிக்கு மேல் தான் வருவான்..

 காலையில் பிள்ளைகளிடம்  ஒரு பத்து நிமிடம்  பார்த்து தூக்கி வைத்து  கொஞ்சுவான்.. ஹாலிலேயே தான் சுதா  குழந்தைகளை எடுத்து வந்து அவனிடம் கொடுப்பார்..

 கொஞ்சி விட்டு பிள்ளைகளை சிரிக்க வைத்து விட்டே  அவன் ஆபீஸ் செல்வான்..

 அன்று என்னவோ சீக்கிரம் எழுந்தவன் எட்டு மணி போல கீழே வர..

 சுதா பிள்ளைகளை ரூமில் வைத்திருந்தார்..

 மொழிக்கு செம்ம பசி,  பிள்ளைகள் இரவு முழுவதும் தூங்கமால் அழுதிருந்தார்கள்,   தடுப்பு ஊசி போட்டதால் அழுது சரியாக இரவு தூங்கமால், காலையில் தூங்க.

பிள்ளைகள் எழுவதற்க்குள், குளித்து சாப்பிட்டு விடலாம் என்று, அவள் குளித்து  உடை மாற்றி வந்து,  டைனிங் டேபளில் அமர்ந்து உண்டு கொண்டிருக்க..

 ரிஷி மேலிருந்து வரும்போதே  அவளை  பார்த்திருந்தான்,  அவள் வேகவேகமாக உண்டு கொண்டிருந்தாள்.

 மொழிக்கு தெரிந்து விட்டது அவன் மேல் இருந்து வருவது ஐயையோ வந்து விட்டானே என்றவள். அவனை கண்டுகொள்ளாமல், திரும்பி கூட பார்க்காமல் வேக வேகமாக உண்ண.

 ரிஷி மொழி அருகில் வந்தவன்.

 அவள் உண்பதைப் பார்த்தான் இட்லியும் கறிக்குழம்பும் வைத்து உண்டு கொண்டிருந்தாள்.

 பார்க்க நன்றாக இருந்தாள்  மொழி. குண்டு கன்னங்களோடு, பார்க்க பொலிவாக இருந்தாள், முகம் ஜொலித்தது, சுதாவும் ராமமூர்த்தியும் கவனிப்பில்  நன்றாக இருந்தாள்.

அவளை பார்த்தவனுக்கு கோபம் தலைக்கேறியது.

 இவளைப் பார்த்தால் பிள்ளையை பார்க்க வந்த மாதிரியா  இருக்கிறது. நல்ல வீட்ல தின்னு தின்னு அரிசி மூட்ட மாதிரி இருக்கா. என்று அவளைப் பார்த்தான்.

 அவளோ  இவனை கண்டு கொள்ளாமல் உண்டு கொண்டே இருக்க..

 அவள் உண்டு கொண்டு இருந்த  தட்டில் ஜக்கில் இருந்த தண்ணீர்  எடுத்து  அப்படியே  ஊற்றி இருந்தான்..

 மொழிக்கு அவன் திட்டுவான் என்று நினைத்திருக்க அவள் உண்டு கொண்டிருந்ததில்  தண்ணீர் ஊற்றுவான் என்று அவள் நினைக்கவில்லை.

 கண்கள் கலங்கியது அவளிற்க்கு.

 ஒன்று பேசாமல் இட்லியை  எடுத்து இன்னொரு பிளேட்டில் வைத்தவள்..

 அவன் தண்ணீர் ஊற்றி ப்பிளேட்டை  எடுத்துக் கொண்டு சிங்கிள் போட்டு வந்தாள்.

 கலங்கிய கண்களை அவனிடம் காட்டவில்லை  மொழி, அமைதியாக வந்தவள்  மீண்டும் அந்த இட்லியில்  குழம்பு ஊற்றி  அவள் சாப்பிட போக.

 அந்த தட்டை  அவளிடமிருந்து பிடுங்கி  கொண்டவன்  அதை சிங்கில் தூக்கி போட்டு வந்தான்..

 மொழிக்குத் தாங்கவே முடியவில்லை.. ரிஷி செய்த செயல்..

 கை கழுவி விட்டு உள்ளே சென்றாள்..

 அவள் கலங்கியதை பார்த்த ரிஷிக்கு அப்படி ஒரு சந்தோஷம்..

 என் வீட்டில் நீ வந்து  ராஜ்ஜியம் செய்வாய். நான் அதை பார்த்துக் கொண்டிருக்க வேண்டுமா என்ற  ஆத்திரம் அவனுக்கு..

 ஹாலில் இருந்தவன்   “அம்மா” என்று சுதாவை  அழைத்தவன்..

 “அந்தப் பொண்ணு எப்ப தான் நம்ம  வீட்டை விட்டு போவா” என்றான்  மொழி இருந்த  ரூமை காட்டி…

 “ஏன்டா என்ன ஆச்சு ” என்று அவர் கேட்க.

 “ஆதான்  நான் வந்துட்டேனே. வேற ஆள போட்டு குழந்தைகளை  பாத்துக்கலாம் அவளை உடனே திருநெல்வேலிக்கு கிளம்ப சொல்லுங்க” என்றான்..

 சுதாவுக்கு என்ன சொல்வது என்று புரியவில்லை அமைதியாக அமர்ந்திருந்தார்.

 “நீங்க சொல்றீங்களா நான் அவளை வெளியே போக சொல்லவா” என்றான்..

 சுதா  அமைதியாகவே  இருக்க..

 சரியாக அந்த நேரம் பார்த்து குகன் வந்திருந்தான்.

 “வா  குகா” என்று ரிஷி அவனை அழைக்க.

 நீண்ட நாள் கழித்து ரிஷியை பார்த்தவன்  “வர்ரேன் மச்சான்” என்று அருகில் வந்தான்..

 “உன் வேலையெல்லாம் எப்படி போகுது” என்று அவனிடம் ஐந்து நிமிடம் பேசியவன்.

 “உங்க அக்காவ எப்ப  கூட்டிட்டு போற” என்றான்.

 “நான் வாரம் வாரம் வந்து பேசிவிட்டு தான் இருக்கேன் மச்சான்,  அவ வர மாட்டேன்னு சொல்லுற”  என்றான்.

 “இது சரி வராது குகா,  நீ   எவ்வளவு சீக்கிரமா கூட்டிட்டு போக முடியுமோ அவளை  கூட்டிட்டு போ” என்றான்

 “நான் நாளைக்கு குழந்தைகளை பார்க்க புதுசா ஆளை வர சொல்லி இருக்கேன், நீ உன் அக்காவை கூட்டிட்டு சீக்கிரம் கிளம்பு” என்றான்..

 “சரி மச்சான்” என்று குகன் மொழியை பார்க்க அறைக்கு செல்ல.

 தூங்கி  எழுந்த குழந்தைகளுக்கு  முகம் கைகால் துடைத்து  உடை மாற்றிக் கொண்டிருந்தாள் மொழி..

 “மச்சான் சொல்லுறத கேட்ட தானே.

 கிளம்பு நாம  திருநெல்வேலிக்கு போகலாம்” என்றான்.

 அவளோ அமைதியாக இருக்க . “நீ  என்னதான் நினைச்சிட்டு இருக்க, மொழி கா,  இந்த குழந்தைகளுக்கு  ஆயா வேலை பாக்குறதுனால உனக்கு என்ன பீச்சில  சிலையை வைக்க போறாங்க..

 உன் வாழ்க்கை கெடுத்துக்காத நான் அவ்வளவு தான் சொல்லுவேன்.

 சாயங்காலம் கிளம்பலாம் இரண்டு பேரும்” என்றான்..

 “பேசிட்டியா பேசி முடிச்சிட்டியா” என்றவள்

 “இங்க பாரு இந்த குழந்தைகள் முகத்தை பாரு இந்த குழந்தைகளை விட்டுட்டு நான் எப்படி வருவேன் சொல்லு,  ஒரு மணி நேரம் கூட இந்த குழந்தைகள் என்னை விட்டு இருக்க மாட்டாங்க,  என்னை எப்படி வர சொல்லுற நீ,,.

 உங்க மச்சான் சொல்றாருன்னா உங்க மச்சான் வந்து பார்த்துப் பாரா டா பிள்ளைய, நான் என்ன தொல்லை   பண்ணேன் அவருக்கு,

 அவர் சொல்றதுக்காக  எல்லாம் பிள்ளைகளை விட்டு என்னால வர முடியாது.”

 “சரி சொல்லு நீ எப்ப தான் வருவ”?.

‘இப்போதைக்கு என்னால வர முடியாது ஆனா கண்டிப்பா வருவேன்” என்றாள் மொழி.

 “மொழிக்கா நீ சொல்றது உனக்கு புரியுதா,  உன் வாழ்க்கை வீணா போக போகுது, கிரிக்கெட்  பத்தி நெனச்சியா உன் ஃப்யூச்சரே வீணா  போய்கிட்டு இருக்கு”,,.

 “கிரிக்கெட்  விளையாட ஆயிரம் பேர் இருப்பாங்க ஆனா இந்த ரெண்டு பிள்ளைகளை பார்த்துக்க யார் இருக்காங்க சொல்லு” என்றாள்..

 “அப்பா அம்மாவ நீ நினைச்சு பார்த்தியா மொழிக்கா” என்றான்

குகன்.

 “எல்லாரையும்  நெனச்சதால  தான் நான் இப்படி இருக்கேன்.. சுயநலவாதியா இருந்தா,  நான் எங்கேயோ இருந்து இருப்பேன்”என்றாள்…

 “சில கட்டத்துல சுயநலவாதியா  தான் இருக்கணும்..

 மச்சான் நாளைக்கு பிள்ளைகளை பார்த்து ஆளுங்க வர்ரதா சொன்னாங்க நீ நாளைக்கு கிளம்பு” என்றான்..

 “இந்த  குகா” என்று அவனின் கையில் காபியை கொடுத்தார் சுதா..

 “அத்தை நீங்களாவது எடுத்து சொல்லுங்க  மொழி அக்காவுக்கு”  என்றான் குகன்.

“குழந்தைகளுக்கு ஒரு வருஷம் ஆகட்டும் குகா நானே கொண்டு வந்து திருநெல்வேலியில் விட்டுடுறேன்  அவளை”  என்றார் சுதா.

 “உண்மையா  தான் சொல்றீங்களா அத்தை” என்றான் குகன்.

 “ஆமாப்பா குழந்தைகளுக்கு  ஒரு வருஷம் ஆனவுடனே கண்டிப்பா மொழியை நான் கொண்டு வந்து திருநெல்வேலியில் விட்டு விடுவேன்”

என்றார் சுதா.

 “சரி அத்தை” என்றவன் கிளம்பி விட.

 “அத்தை” என்று மொழி சுதாவை அழைத்தாள்.

 “சொல்லுடா” என்றார் சுதா.

 “என்னை ஒரு வருஷம் கழிச்சு கொண்டு போய் திருநெல்வேலியில  விட்டுடுவீங்களா?” என்றாள் மொழி.

 “ஆமா டா” என்றார் அவர்..

 “ஏன் அத்தை நான்  பிள்ளைகளை பார்த்துக்கொள்வது உங்களுக்கு புடிக்கலையா” என்றாள்.

 “நீ பண்றது எல்லாம் சரிடா, உன்னை விட எனக்கு மனசே இல்ல. இருந்தாலும் நீ உங்க அப்பா,  அம்மாவை நினைக்கணும் தானே உனக்கு என்று ஒரு வாழ்க்கை வேண்டாமா,,

 எனக்கு ஒரு ஆசை மொழி, ரிஷிக்கு உனக்கு கல்யாணம் பண்ணி வைக்கணும் என்று..

ஆனா ரிஷிக்கு உன்னை பார்த்தாலே புடிக்கலையே  என்னை என்ன பண்ண சொல்ற..

 நீயும் இங்கேயே  கடைசி வரைக்கும் இருக்க முடியாதே” என்றார்.

மொழி அமைதியாக இருக்க..

 நீயும் எனக்கு பொண்ணு மாதிரி தான்.

 உன்  வாழ்க்கையும் எனக்கு முக்கியம் நீ பண்ணிய தியாகத்துக்கு நான் என்ன வேணாலும் செய்வேன்.

 அதுக்காக உன் வாழ்க்கையை கெடுக்க மாட்டேன் நான்” என்றவர்.

  அவளின் கன்னத்தை தட்டி விட்டு “எதையும் நினைச்சு குழப்பிக்காத நிம்மதியா இரு”  என்று சொல்லி சென்றார்.

 நாட்கள் அதன் போக்கில் ஓடின இதோ பத்து மாதம் ஆகிவிட்டது குழந்தைகளுக்கு..

  குலதெய்வம் கோயிலில் மொட்டை அடிக்க வந்திருந்தனர் ரிஷியின் குடும்பத்தினர்.

கோவில்  திருநெல்வேலியில் பக்கம் இருப்பதால் அனைவரும் ரிஷியின் பாட்டி செல்லம்மா  வீட்டில்  இருந்தனர்..

 ஐயப்பன் தேவகியும்  கூட வந்திருக்க,…

 தன் தாய் தந்தை பார்த்ததும் மொழிக்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை.

 அவர்கள் கூடவே இன்னொரு குடும்பமும் வர…

 முதலில் மொழிக்கு அவர்கள் யார் என்று தெரியவில்லை பின்பு தெரிந்தது அது தன் தாயின் அண்ணன். தன் தாய் மாமன் என்று தெரிய.

 வேலுச்சாமி பார்த்ததும் “வாங்க மாமா” என்று  மொழி அழைக்க பக்கத்திலேயே அவர் மகன் சரவண வேலுவும் வந்திருக்க.

 சரவணனை  பார்த்தவள் “வாங்க மச்சான்” என்றாள்.

 சுதா அனைவரையும் பார்த்து  “வாங்க,  வாங்க, வாங்க” என்று அழைத்தவர்..

 தேவகியிடம் “இதுதான் நீங்க சொன்ன மாப்பிள்ளையா” என்று சுதா  கேட்க..

 “ஆமாம் அண்ணி மொழிக்கு பார்த்திருக்குற மாப்பிள்ளை, என் அண்ணன் மகன் சரவணன் ” என்று கூற.

 “பையன் ரொம்ப அழகா இருக்கான்” என்று சுதா கூற.

 மொழிக்கு  தலையில் இடி விழுந்தது போல் ஆகிவிட்டது..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!