எல்லாம் போச்சு வலி, வேதனை, கோபம் மட்டும் தான் இருக்கு கொஞ்ச நாள் போகட்டுமா” என்றான் வேதனையான குறலில்.
Advertisement
அன்று சுதாவிடம் வேதனையாக பேசியவன் தான் பாரின் கிளம்பி சென்று விட்டான்..
Advertisement
மொழியை திரும்பி கூட பார்க்கவில்லை அவளிடம் ஒரு வார்த்தை கூட பேசவில்லை அப்படியே கிளம்பி விட்டான்.
Advertisement
இனி ஐந்து வருடம் கழித்து பார்க்கலாம்….
“மம்மி…, மம்மி… மம்மி… மம்மி” என்று ஜிம்பாபே நாட்டில் உள்ள கிரிக்கெட் கிரவுண்டில் நின்று கத்தி, தன் அன்னை மொழியை எங்குரேஜ் பண்ணிக்கொண்டு இருந்தனர்,
ஆறு வயது ஆத்விக்கும், சாத்வீக்கும். அவர்கள் கூட குகனும் கத்திக்கொண்டு இருந்தான், கம்மான் அக்கா என்று.
ஜிம்பாபே நாட்டில் நடக்கும்,.
இந்தியா, ஜிம்பாபே நாடும் விளையாடும் 20, 20 கிரிக்கெட் மேச் போட்டி இன்று தான் இறுதி போட்டி, மொத்தம் ஐந்து போட்டிகள், அதில் இந்தியா இரண்டும், ஜிம்பாபே அணி இரண்டு மேச் வின் பண்ணி இருக்க..
இதோ கடைசி மேச் நடந்துக்கொண்டிருந்தது.
இன்னும் இரண்டு ஓவர்களில் 40 ரன் அடிக்க வேண்டும், 4 விக்கெட் மட்டுமே மிச்சி இருக்க. இந்தியா டீமில் இருந்து ,.
ஐந்தாவது ஒரு பெண் அவுட் ஆகவும் களம் இறங்க பட்டாள் மொழி.
மொழியை பார்த்த சாத்வீக்கும், ஆத்வீக்கும் மம்மி.. மம்மி என்று கத்த.
தன் பிள்ளைகளை கத்தி கொண்டு இருப்பதை பார்த்த மொழி கிரவுண்டில், இருந்த படியே அவர்களை பார்த்து கையசைத்தவள், தம் சப் காட்டி விட்டு.
ரன் அடிக்க தொடங்கினாள் .. அந்த ஜிம்பாபே பௌலர் பெண் மொழியை பார்த்து நக்கலாக சிரித்தவள்,..
பால் சரியாகவே போடவில்லை.
நான்கு பாலை வேஸ்ட் செய்தாள், பின்பு மொழியின் முகத்துக்கே பாலை வீசி எறிந்தாள், , பின்பு அவளுக்கு அடிபட்ட கால் அருகே பாலை போட…
மொழிக்கு பயங்கர கோபம், அவள் விதி முறையை மீறி பந்துகளை அவள் மேல் எறிய.
அம்பேர் இரண்டு நோ பால் கொடுத்தும் அவள் திருந்தவே இல்லை.
மொழிக்கு அவளிள் பௌலிங் எப்படி போடுகிறாள் என்று தெரிந்து கொண்டவள்.
அடித்து விட்டாள் தொடர்ந்து நான்கு சிக்சர், ஜிம்பாபே கிரவுண்டில் உள்ளவர் எழுந்து நின்று கைதட்ட.
ஆத்வீக்கையும், சாத்வீக்கையும் சொல்லவா வேண்டும், தன் மம்மா அடித்த ஒவ்வொரு சிக்சுக்கும், மம்மா, மம்மா என்று குதித்து கொண்டிருந்தனர்.
கடைசியா மொழி ப்போர் அடித்து போட்டியை வென்று விட..
அணியில் உள்ள பெண் வீரர்கள் கிரவுண்ட்டுக்குள் ஓடி வந்து, மொழியை கட்டி அணைத்து வெற்றியை கொண்டாடினர்.
கடந்த நான்கு வருட உழைப்பால்..
இந்தியா பெண் கிரிக்கெட் அணி டீம்மில் இரண்டு வருடமாக டீமின் கேப்டனாக இருந்தாள் மொழி…
வின் பண்ணி வெற்றி கோப்பையை வாங்கியவள், தன் டீம்மோடு போட்டோ எடுத்துக்கொண்டாள்..
அனைவரும் முகத்திலும் சந்தோஷம், நிஷா தோழியின் வெற்றியை பார்த்து அணைத்துக்கொண்டாள்.
அவளும் இந்தியா டீம்மில் இருக்கிறாள், துணை கேப்டனாக.
இரண்டு பேரும் சேர்த்து, இந்தியா பெண் கிரிகெட் அணியை நன்றாக ஆடி, பல வெற்றியை கொடுத்து இந்தியா டீமை நம்பர் ஒன் இடத்தில் வைத்திருந்தனர்.
மொழி கோப்பையை வாங்கியதும்,.
பெரிய நியூஸ் சேனல் பெண் மொழியிடம் கேள்விகள் கேட்க பதில் சொல்லிக்கொண்டிருந்தாள்.
மொழி,.
“மேம் இது உங்க கடைசி மேச்சுன்னு எல்லாரும் சொல்லுறாங்க உண்மையா”? என்றாள், அந்த நியூஸ் சேனல் பெண்.
“எஸ் மா,, பல பேர் இந்தியா டீமில் விளையாட வாய்ப்புக்கு காத்திருக்காங்க, அவங்களுக்கு எல்லாம் நாம் ஒரு வாய்ப்பு கொடுக்கனும் தானே” என்று மொழி கூற.
“மேம் ஆயிரம் பேர் வந்தாலும் உங்களை மாதிரி சிக்ஸர் அடிக்க முடியுமா”, என்றதும்.
சிரித்தமொழி, “என்னை விட திறமை உள்ள பெண்கள் பல பேர் இருக்காங்க, நம்ம எல்லாருக்கும் வாய்ப்பு கொடுக்கணும் தானே அவங்களுக்கு வாய்ப்பு கொடுத்து தானே அவங்க திறமையை காட்ட முடியும்” என்றவள்.
சிரித்து விட்டு, “அதுவும் ஒரு காரணம் என் காலில் இரண்டு வாட்டி அடிபட்டு இருக்கு, இன்னைக்கு அடிபட்டது கொஞ்சம் இஞ்சூரி ஆகியிருக்கு , நான் இந்தியா போனதும் ஸ்ட்ரைட்டா ஹாஸ்பிடலுக்கு போய் சர்ஜரி பண்ணிக்க நினைக்கிறேன்,
சோ என்னால இனிமே விளையாட முடியாது அதுவும் ஒரு காரணம் அப்புறம் என்னோட குட்டீஸ், ரொம்ப என்னை மிஸ் பண்றாங்க அதனால அவங்களுக்காவும், நான் டீம் ல இருந்து விலகிக்கிறேன்” என்றாள்..
“ஹோ பார்க்கலாமே வந்திருங்காங்க,” என்ற மொழி குகனிடம் கை காட்ட அவன் இரண்டு பேரையும் அழைத்துக் கொண்டு வந்தான்.
அவனின் கையில் இருந்து விலகிய ஆத்வீக்கும், சாத்வீக்கும் ஓடி வந்து மொழியின் மேலே ஏறினார்கள் ஒருவன் பின்னாடி இருந்த அவளின் கழுத்தை கட்டிக்கொண்டு தொங்க, இன்னொருத்தன் மொழியின் முன்னாடி வந்து மொழியின் கழுத்தை கட்டிக்கொண்டு முத்தமழை பொழிந்தார்கள்.
அதைப் பார்த்த தொகுப்பாளினி “மேம் உங்க குட்டீஸ் ரொம்ப சூப்பரா இருக்காங்க” என்று சொல்ல.
மொழியை இருவரும் கட்டிக் கொண்டனர்.
“உங்க குட்டிஸோட உங்களை பார்க்கவே ரொம்ப அழகா இருக்கு மேடம் டெல் அபௌட் அவர் ஹஸ்பண்ட் ” என்று கேட்க.
“மை ஹஸ்பண்ட் இன் ஃபாரின் கண்ட்ரி” என்றாள் சிரித்துக் கொண்டே.
“உங்க சாரை பத்தி நாங்க தெரிஞ்சுக்கலாமா” என்று கேட்க.
“மை ஹஸ்பண்ட் பிக் இன்ஜினியர் வெர்க்கிங் இன் ஜப்பான்.
நீங்க கேள்விப்பட்டிருப்பீங்களே ஒரு தமிழ்நாட்டுக்காரர் ஜப்பானில் பாலம் கட்டிக் கொண்டிருக்கிறார் என்று அவர் வேறு யாரும் இல்லை மை ஹஸ்பண்ட் ரிஷி நத்தன்” என்றாள்…
“ஓ சூப்பர் ஃபேமிலி மேம்”. என்றதும்.
“உங்க ஹஸ்பண்ட் பாரின்ல, நீங்க இங்க உங்களுக்கு அவர் எப்படி சப்போர்ட் பண்றார்” என்று கேட்க..
“என் ஹஸ்பண்ட் எனக்கு சப்போர்ட் பண்ணி பர்மிஷன் கொடுத்ததால் தான் நான் இவ்வளவு சாதிக்க முடிந்தது, அப்புறம் ஒரு விஷயம் என் குழந்தைகள் சின்னதா இருக்கிறப்ப நான் கிரிக்கெட் ஆட முடியாது நினைச்சேன், ஆனா என்ன கிரிக்கெட் விளையாட சொன்னதே அவர்தான்.
நான் இப்ப உங்க முன்னாடி இந்தியன் டீமோட கேப்டனாக இருக்கிறது காரணம் மை ரிஷி”
என்றாள் விரிந்த புன்னகையோடு.
“ஆல் தி பெஸ்ட் ஃபார் ஃபியூச்சர் மேம் அப்புறம் உங்க ஹெல்த்த பார்த்துக்கோங்க” என்று நியூஸ் ரிப்போர்ட்டர் சொல்ல.
“தேங்க்யூ” என்று பேச்சை முடித்தவள். தன் இரண்டு செல்வங்களையும் கையில் ஏந்திக்கொண்டு குகனிடம் வந்தாள்.
“அக்கா இன்னும் டூ ஹவர்சுல பிளைட் வேகமாக கிளம்பனும்” என்றான் குகன்.
“ஓகே டா” கிளம்பிடலாம் என்றவள்.
தன் டீமில் உள்ள அனைவரிடமிருந்து விடை பெற்றுக்கொண்டு ஏர்போர்ட்டுக்கு வந்து சேர்ந்தனர்கள்.
ஆத்வீக்கும் சாத்வீக்கும் மொழியை தொத்திக் கொண்டே வர ‘டேய் அம்மாவுக்கு கால் பயங்கரமா அடிபட்டு இருக்கு பார்த்து நடந்துக்கோங்க” என்றான் குகன்.
“மம்மா உங்களுக்கு கால் அடிபட்டு இருக்கா மம்மா” என்று ஆத்விக் கேட்க.
“ஆமாடா செல்லம்” என்ற மொழி காலை தாங்கி தாங்கி தான் நடந்து வந்தாள்.
கடந்த இரண்டு மூன்று போட்டியில் அவளுக்கு சரியான அடிகள் காலில்..
பட்ட காலிலே அடி பட்டுக்கொண்டிருக்க இப்பொழுது அது பெரிய சர்ஜரியில் வந்து முடிந்திருக்கிறது.
ஆமாம் மொழி காலில் பெரிய அடியாக இருக்க சர்ஜரி பண்ண வேண்டும் என்று டாக்டர் சொல்ல.
இதோ சர்ஜரி பண்ணிக்கொள்ள தான் இந்தியா வந்து கொண்டிருக்கிறாள்.
“குகா உன் கல்யாணம் முடிஞ்சதுக்கு அப்புறம் சர்ஜரி பண்ணிக்கிறேன்” என்று மொழி சொல்ல.
“என் கல்யாணத்துக்கும், உன் சர்ஜரிக்கும் என்ன சம்பந்தம், ரெண்டு வாரம் இருக்கு என் கல்யாணத்துக்கு,..
நீ சர்ஜரி பண்ணி பேசாம ரெஸ்ட் எடு நாங்க கல்யாண வேலையை பார்த்துக்கிறோம்” என்றான்.
ஆம் இரண்டு வாரத்தில் குகனுக்கு கல்யாணம்.
அதுக்காகத்தான் வேகமாக போட்டியை முடித்துக் கொண்டு சென்று கொண்டிருக்கிறாள் மொழி.
ஏப்ரல் மே வாக இருக்க பிள்ளைகளுக்கு பள்ளியில் விடுமுறை விட்டுறிருந்தனர் ஆத்விக்கும், சாத்விக்கும் ஒன்றாம் வகுப்பு படிக்கின்றார்கள்.
மொழி ரிஷியை பார்த்து ஐந்து வருடங்கள் ஆகிறது.
அவன் இந்த திருமணத்துக்காக வருவானா அவனை பார்க்கலாமா என்று ஆசையாக சென்று கொண்டிருந்தால் இந்தியாவுக்கு.
அவனோ அவள் டிவியில் கொடுத்து பேட்டியை பார்த்து சிரித்துக் கொண்டிருந்தான்.
கல்யாணமே ஆகல அதுக்குள்ள மை ஹஸ்பண்ட் ரிஷி நத்தனா?.
ஏய் இது உனக்கு கொஞ்சம் ஓவரா இல்லடி.
என்ற மொழியை செல்லமாக திட்டிக் கொண்டிருந்தான் ரிஷிநந்தன்.
இவ்வளவு நாள் அவன் மனதில் இருந்த வேதனை அனைத்தும் பனித்துளி போல் விலகின.
வரேண்டி என் செல்லக்குட்டி இந்தியா வர்றேன், என்று அவனும் தனது வேலைகளை முடித்துக் கொண்டு குகன் கல்யாணத்துக்கு முன் செல்ல தயரானான்…