“எங்க சமாதானம் வந்ததிலிருந்து ஒரே அழுகை” என்றான் மொழியை பார்த்து.
“அக்கா இந்த மெடிசன் போடணும் சாப்பிடு” என்று அவள் அருகில் வர.
ஒற்றைக் கண்ணை திறந்து பார்த்தவள் அவன் கொடுத்த மாதிரி எடுத்து வாயில் போட்டு தண்ணீர் குடித்து விட்டு. பாட்டிலை அவனிடம் திருப்பி கொடுக்க.
“அக்கா நான் வெளியே இருக்கேன், நீ மச்சான் கூட இரு” என்றவன் வெளியே போக, போக.
” நீ வீட்டுக்கு போடா, உங்க மச்சான் இருக்காங்க தானே அவர் பாத்துப்பார்” என்றாள் மொழி…
“அக்கா அவர் ஜப்பானுல இருந்து வந்திருக்காரு பாவம் டயர்டா இருக்கும் அவர் போகட்டும் நான் நைட் பாத்துக்குறேன்” என்றான்.
“அதெல்லாம் அவரு என்ன பாத்துப் பாரு நீ கிளம்பு ” என்றாள்.
“பாத்தியா உன் ஆளு வந்த உடனே என்னை கழட்டி விடுற” என்றான் சிரித்தபடியே குகன்.
“ஏய் மச்சான மரியாதையா பேசுடா” என்றாள்..
ரிஷி குகனை பார்த்து சிரித்து “நீ போ குகன் நான் பாத்துக்குறேன்” என்றான் ரிஷி.
, “சரி” என்றவன் வெளியே தான் இருப்பேன் கூப்பிடுங்க என்று வெளியே சென்று விட்டான்..
“இவன் அடங்கவே மாட்டான்” என்றால் மொழி.
ஐந்தே நிமிடம் தான் அப்படியே ரிஷியின் தோளில் சாய்ந்தபடியே தூங்கி விட்டாள் மொழி, அவளை மெல்ல பெட்டில் படுக்க வைத்தவன்.
அவள் பெட்டின் பக்கத்தில் ஒரு சேரை போட்டு அவனும் அவள் பெட்டில் மேல் தலை வைத்து ரிஷி படுத்து விட்டான் .
குகன் நடு ராத்திரி வந்து பார்க்க இருவரும் நல்ல உறக்கத்தில் இருந்தனர்.
சிரித்த படியே கதவை சாத்திவிட்டு வெளியே சென்று விட்டான்..
விடியற்காலையில் மொழியின் முணங்கள் சத்தம் கேட்டு தான் எழுந்தான் ரிஷி.
“என்ன மொழி” என்று கேட்க.
“ரொம்ப பெயினா இருக்கு, ஃபீவர் வர்ற மாதிரி இருக்கு” என்றாள்.
ரிஷி அவள் கழுத்தைத் தொட்டுப் பார்க்க அவள் கழுத்து சூடாக தான் இருந்தது வேகமாக சென்று ஒரு நர்சை அழைத்து வந்தான்.
ரிஷி வந்ததும் வெளியே தூங்கிக் கொண்டிருந்தவன் குகனும் சேர்ந்து வர.
மொழி வலியில் மிகவும் சோர்வாக இருந்தாள், காலில் ஆப்ரேசன் பண்ணது வலியை கொடுக்க, ஃபீவர் வேற வந்து இருக்க பீவருக்கும் வலிக்கும் டிரிப்ஸ் செலுத்தப்பட்டது மொழிக்கு…
சிறிது நேரத்தில் பீவர் குறைந்து விட.
நார்மல் ஆனால் மொழி.
ரிஷி அவளின் கையை பிடித்த படியே அமர்ந்திருந்தான்.
பீவர் விட்டதும் ஓய்வு அறைக்கு மொழி எழுந்து கொள்ள பார்க்க..
அவளை தூக்கி சென்றவன் ஓய்வு அறை உள்ளே இறக்கி விட்டவன்.
கதவை பூட்ட வேண்டாம். நான் வெளியே நிக்குறேன் கூப்பிடு என்றவன்.
வெளியே சென்று நிற்க.
மொழி ஓய்வு அறையில் தன் தேவைகளை முடித்து கொண்டவள்.
கதவை திறக்க..
அவளை அப்படியே தூக்கி கொண்டு வந்தவன் மெதுவாக அவளை பெட்டில் படுக்க வைக்க..
அவனின் சர்ட்டு கலரை பிடித்த மொழி என் மீது கோபம் போச்சா என்றாள்.