Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

நெஞ்சம் ஏங்குதே..

நெஞ்சம் ஏங்குதே… Final 2

 “அவ  ஆத்விக், சாத்விக்  மேல ரொம்ப பாசம் வச்சுருக்கா  அதனால இன்னொரு குழந்தை அவளுக்கு வந்தா அந்த பிள்ளை மேல அதிகமா பாசம் காட்டிடுவோமோ என்ற  பயம்..

 அதை பார்த்து பிள்ளைங்க இவளை  ஏதாவது சொல்லிடுவாங்கன்னு வருத்தம்..



Advertisement

அதைவிட யாராவது நாளைக்கு, இவ உங்க அம்மா இல்ல  சித்தியின்னு  சொன்னா அதைக் கேட்டு பிள்ளை எப்படி நடந்து கொள்வார்கள் என்று ரொம்ப பயப்படுற தேவையில்லாம எல்லாத்தையும் யோசித்து இப்படி மனச கெடுத்து  வச்சிருக்க.

 நான் எவ்வளவு சொன்னாலும் அவ புரிஞ்சிக்க மாட்டேங்குற இந்த குழந்தை வேண்டாம் என்று பிடிவாதமா இருக்கா எனக்கு என்ன பண்றதுன்னு தெரியல..

Advertisement

Advertisement

 எத்தனை நாள் அவளுக்கு நான்  காவல் காக்க முடியும்.குழந்தை எவ்வளவு முக்கியம் என்று நான் அவளுக்கு எடுத்து சொல்லி இருக்கேன், அப்பப்போ அவகிட்ட நான் அன்பா  தான் பேசுறேன், அவ புரிஞ்சுக்க மாட்டேங்குற எனக்கு ரொம்ப வருத்தமா இருக்கு” என்றவன் சுதாவை அணைத்துக் கொண்டு அழுதான்..

 மகனின் தலைக்கு கோதி விட்டவர் “அவ ரொம்ப நல்லவடா அதுதான் அவளுக்கு பிரச்சனையே.

Advertisement

 அவ ஆத்விக், சாத்விக்  மேல அவ்வளவு பாசம் வச்சிருக்க அந்த பாசத்தை பங்கு போட அவளுக்கு பயம் அதைவிட அவ  சித்தியின்னு  பிள்ளைகளுக்கு தெரிஞ்சா, என்ன ஆகுமோன்னு பயப்படுற, அத நெனச்சு  வருத்தப்படுறா,  அவள நீ புரிஞ்சுக்கோ வெறுத்துறாத ரொம்ப உடைஞ்சு போய்டுவா,  நாம தான் அவளுக்கு ஆறுதலா இருந்து எல்லாத்தையும் எடுத்து சொல்லணும்” என்றார்.

 “நீ அவ நிலைமையில் இருந்து யோசிச்சு பாரு, அவ எவ்வளவு  கஷ்டத்த கடந்து வந்திருக்கா? எவ்வளவு போராடி இருக்கா, அவளுக்கு  பாசத்தை எப்படி வெளிகாட்டுவது என்று தெரியவில்லை,  பயப்படுற இந்த வாழ்க்கையே ஏதாவது பிரச்சனை வந்துருமோ பிள்ளைகள் ஏதாவது தப்பா நெனச்சுடு வாங்கன்னு பயப்படுறா, அப்படி எதுவும்  நடக்காது, நாம  ரெண்டு பேர் சேர்ந்து  சமாளிக்கலாமுன்னு  நீ தான் அவளுக்கு எடுத்து சொல்லி புரிய வைக்கனும்,  நீ கோபப்பட்டு அவளை திட்டி,  அடிக்க போனா அவ இன்னும் பயந்து ஒதுங்கி தானே போவா”  என்றவர்.

 “அவளை யாருக்காக எதுக்காகவும் நீ விட்டு கொடுக்க கூடாது, திட்டக்கூடாது உன் குழந்தை சுமந்துட்டு இருக்காடா அவ,   மாசமா இருக்குறதுனால நிறைய மாற்றங்கள் உடம்புல வரும் அதனால கூட அவ இப்படி பண்ணலாம் தப்பா யோசிக்கலாம்,, நீ தான் ஆறுதலா அவளுக்கு இருக்கணும்,  பேசி  புரியவை உன் அன்பை காட்டு பக்கத்திலேயே வச்சுக்கோ, அன்பா பேசு, நல்ல விதமா எடுத்து சொல்லு அவள் சந்தேகத்தை தீர்த்து வை,  சொன்னா கேட்டுப்பாடா மொழி, பொறுமையா பேசு ” என்று மகனை அமைதியாக பேசி சமாதானம் பண்ணி, இருவரும்   வெளியே அழைத்து வந்தார்.

 மொழி அதற்குள் தம்பியிடம் அனைத்தையும் சொல்ல,,.

மொழியை பயங்கரமாக திட்டி இருந்தான் குகன்..

” மச்சான் உன்னை  அடிக்க வர்ரது  தப்பே இல்லை,  நானே உன்னை அடிச்சிடுவேன் லூசுத்தனமா யோசிச்சு வச்சிருக்க அது எப்படி உனக்கு ஒரு குழந்தை வந்த  ஆத்விக்கும், சாத்வீக்கும்   வெறுத்திடுவ பாசம் காட்ட முடியாது அப்படி இப்படி லூசுத்தனமா யோசிக்கிற உனக்கு மூளையின்னு ஏதாவது  இருக்கா இல்லையா ” என்று அவன் கண்ட படி மொழியை திட்ட.

 தம்பி திட்டவும்  இன்னும் அழுதாள் மொழி,  ரிஷி வேகமாக வந்து மனைவியை பிடித்து தோளோடு  இறுக்கி அணைத்துக் கொண்டவன்.

 “அழாத” என்றவன்.. குகனை  பார்த்து “ஏன்டா என் பொண்டாட்டிய திட்டுற”?. என்றான்.

 “உங்க பொண்டாட்டி தேவை இல்லாம யோசிச்சு அவ நிம்மதி கெடுத்துக்கிட்டு இருக்கா, நீங்களும் அவளை கொஞ்சிக்கிட்டு இருக்கீங்க, அவளை  ரெண்டு போடு போடுங்க மச்சான் அப்போ தான் அவ திருந்துவா” என்றான்.

 நீ எல்லாம் ஒரு தம்பியா? என்பது போல் ரிஷியின் அணைப்பில்  இருந்தவள் அவனை முறைத்து பார்க்க.

” என்ன முறைப்பு” என்றான் மொழியை பார்த்து.

 “டேய் நான் பண்ண வேண்டியதை எல்லாம் நீ பண்ணிட்டு இருக்க” என்றவன் ரிஷி குகனை பார்த்து சிரிக்க.

 “என்ன மச்சான்  சிரிக்கிறீங்க உங்களுக்கு மொழி மேல கோபம் இல்லையா இப்பதான் கோபப்பட்டு கத்துக்கிட்டு இருந்தீங்க”?..

 “என்னடா பண்றது அவ முட்டாள் தனமா ஏதாவது யோசிக்கிற நாமதான் அதை சரி பண்ணனும் உன் பாசக்கார அக்காவுக்கு  கொஞ்சம் நல்ல வார்த்தை சொல்லி விட்டுட்டு போ” என்றான்.

 ரிஷி சொன்னதை கேட்டு சிரித்தவன் “நீங்களே அந்த நல்ல வார்த்தை சொல்லுங்க, உங்க பாடு உங்க பொண்டாட்டி பாடு, நான் என் பொண்டாட்டி கூட்டிட்டு போறேன்” என்று அவன் கிளம்பி இருந்தான்.

 சுதா ரிஷியை  பார்த்து “அவளை கூட்டிட்டு மேல போடா,  போயி சமாதானப்படுத்து” என்றார்.

 அவளை அணைத்துப்படியே மாடியில் உள்ள அறைக்கு அழைத்துச் சென்றான்.

  மொழி மிகவும் பயந்திருந்தாள் ரிஷி  கோபப்படுவான் தன்னை திட்டுவான், அடிப்பான், தன்னிடம் பேச மாட்டான்,  என்னவெல்லாம் செய்வான் தெரியவில்லை என்று  பயந்திருந்தாள்,  ஆனால் அவனோ  உடனே வந்து தன்னை அணைத்து சமாதானம் பண்ணியது அவளால் நம்ம முடியவில்லை.

 அறைக்கு வந்ததும் அவளை  படுக்க வைத்தவன் “படுத்து தூங்கு ஜூஸ் எடுத்துட்டு வரேன்” என்று கீழே போக அவனின் கையைப் பிடித்துக் கொண்டாள் மொழி.

 “என்னடா” என்றான் ரிஷி.

 அவன் என்னடா என்றதும் உருகி விட்டால் மொழி “சாரி சாரி ரிஷி” என்று அவனை அணைத்துக் கொண்டு அழ..

 அவனும் மனைவியை அணைத்து அவளின் முகத்தில் முத்தமிட்டவன்   “அழாதா, ஏண்டா இப்படி எல்லாம் பண்ணுற,  ஏன்?  உனக்கு என்னாச்சு? பொறுமையா யோசி, குழந்தையை  அளிப்பதை  மட்டும் நினைக்காதே,  உன் ரிஷி உனக்கு இல்லாமலே போயிடுவேன்” என்றான் கண் கலங்கிய வாறே..

 “ரிஷி  அப்படி எல்லாம் பேசாதீங்க ரிஷி, நீங்க இப்படி பேசினா நான் எப்படி இருப்பேன் ரிஷி” என்ற அவனை அணைத்துக் கொண்டு மீண்டும்  அழுதாள்.

 “என்னால முடியலடி உன் கிட்ட போராட என்னால முடியல.

 நீ எப்ப என்ன பண்ணுவ,  ஏது பண்ணுவ என்னால உன்னை கண் காணிச்சுக்கிட்டே இருக்க முடியாது இந்த குழந்தை நமக்கு வேணும்னு நான் எவ்வளவோ எடுத்து சொல்லிட்டேன்,  நீ தேவையில்லாம யோசிச்சு பெரிய சிக்கல் உண்டு பண்ணி வச்சிருக்க.

 கடைசியா ஒரு வார்த்தைதான் இந்த குழந்தை இல்லன்னா ரிஷி உனக்கு இல்ல அதை மட்டும் நீ புரிஞ்சு நடந்துக்கோ அவ்வளவுதான் இதுக்கு மேல நான் ஏதும் பேச மாட்டேன்” என்றவன்.

 கீழே சென்று விட்டான் ரிஷி கீழே சென்று அவளுக்கு ஜூஸ் எடுத்து வந்து கொடுக்க..

 மொழி அமைதியாக இருந்தாள். அவன் கொடுத்த சூஸ்சை குடித்துவிட்டு அமைதியாக அவனை அணைத்துக் கொண்டு படுத்து விட்டாள்..

 ரிஷி மனைவிக்கு தட்டி கொடுத்து தூங்க வைத்திருந்தான்..

 மறுநாள் அவளையும், குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு அவன் ரெசார்ட் கிளம்பினான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!