Skip to content
Post Views: 2,573
பாங்க் மானேஜர் அறைக்கு வெளியே காத்திருந்தாள் மகி.
ராஜு நேராக அங்கு வந்து விடுவதாக சொல்லியிருந்தான்.
இருவரும் சேர்ந்து கையெழுத்துகள் போடவேண்டியிருந்தது.
அவளையே கடு கடுவென்று பார்த்துக் கொண்டிருந்தாள் வனிதா.
Advertisement
போயும்..போயும் இவளுக்கு எல்லாம் நாம் காபி கொண்டு போய் கொடுக்க வேண்டியதாகி விட்டதே!
அது மட்டுமா, மகி வெளியே வந்தவுடன், மகி எதற்கு வந்திருக்கிறாள் என்று மேனேஜருடன் பேச்சுக் கொடுத்து அறிய முயன்றாள்.
அவரும், “அவங்க ஒரு கார் ஸ்பா ஆரம்பிக்க போறாங்க.
Advertisement
அதுக்கு ஸ்டான்ட் அப் இந்தியா ஸ்கீமில்(Stand-Up India Scheme) லோன் வாங்கி ஸ்டார்ட் பண்ணப் போறாங்க” என்றார்.
Advertisement
“ஓ..” என்றவள்,
“சார்.. நீங்க நல்லா வெரிஃபை பண்ணிட்டீங்களா?
எனக்கு இவங்கள பர்சனலா தெரியும்.
Advertisement
அன்எஜுகேட்டட், கன்ரி விமன்.
பெரிசா ஒண்ணும் அவங்களுக்கு எக்ஸ்போசர் இருக்காது.
சும்மா ஒரு ஸ்பேர் பார்ட்ஸ் கடையில எடுபிடியா இருந்த பொண்ணு.
அப்புறம் அவங்க ஹஸ்பன்ட் ஒரு தத்தி!
அவ்வளவு மெச்சூர்ட்கிடையாது.
இவங்களா நம்பியா லோன் சாங்சன் பண்ணி இருக்கீங்க!”
“அவங்க பக்கா எலிஜிபிள் பெர்சன்ஸ் தான்!
அதுவும் இல்லாம ஹையர் ஆபிசர்ஸ் ரெக்கமண்டேசன் வேற இருக்கு!
ப்ராஜெக்ட் ரிப்போர்ட் பக்கா ப்ரபொசனலா இருக்கு!
கொலாட்ரல் வேற கொடுக்கிறாங்க. இத விட வேற என்ன வேணும்?
அது எல்லாத்தையும் விட, இதுல நீங்க ஏன் இன்வால்வ் ஆகுறீங்க?
நீங்க எனக்கு டிக்டேட் பண்ண வேண்டாம்! உங்கள் லிமிட்ல இருந்துக்கங்க.
அப்புறம் என்னிக்கு மணப்பாறை பிரான்ச்ல ரிப்போர்ட் பண்ண போறீங்க?”
வனிதா அதிர்ந்தாள். கொஞ்சம் அவமானமும் ஆகி விட்டது அவளுக்கு!
“மன். மன்டே சார்.”
“அதுக்கான ஹான்ட்ஓவர் வேலை எல்லாம் முடிச்சிடீங்களா?”
“இன்னும் இல்ல சார்”
“அப்ப முதல்ல உங்க வேலைய பாருங்க”. என்று கடுமையாகவே சொல்லி விட்டார் மானேஜர்!
அந்த கடுப்பில் தான் மகியையே முறைத்துக் கொண்டிருந்தாள் வனிதா.
கொஞ்ச நேரத்தில் ராஜு வந்துவிட, மானேஜர் அறைக்கு அனுமதி கேட்டு உள்ளே நுழைந்தார்கள் இருவரும்.
அவர்களிடம் மற்ற டாக்குமெண்ட்ஸ் வேலைகளை முடித்த பின் மேனேஜர் கேட்டார்.
“வனிதாவை உங்களுக்கு தெரியுமா?”
“ஏன்.. சார். அவங்க என்னோட அண்ணி தான்” என்றான் ராஜு.
“ஓ.. பார்த்து கேர்ஃபுல்லா பண்ணுங்க. யாரையும் பெரிசா நம்ப வேண்டாம்”.
“ஏன் சார்.. அவங்க எதாச்சும் சொன்னாங்களா?”
“ம்ம்.ஆமா.. உங்களுக்கு லோன் கிடைக்கிறது அவங்களுக்கு பிடிக்கல போல!
அது மாதிரி தான் பேசினாங்க.
ம்ச். விடுங்க. எல்லோர் வீட்டுலயும் நடக்கிறது தான்!
நீங்க கேர்ஃபுல்லா இருந்துக்கங்க!”
“சரி சார்” என்று சொல்லி நன்றியுடன் விடைபெற்று வெளியே வந்தனர் இருவரும்.
அப்போது ராஜுவுக்கு ஒரு போன் வர,
அவன் கொஞ்சம் தள்ளி நின்று பேசிக் கொண்டிருந்த இடைவெளியில் வனிதா மகியிடம் வந்து,
“உனக்கு ரொம்ப சாமர்த்தியம் தான்!
பிசினெஸ் உன் பேர்லயே ஆரம்பிச்சு இருக்க!
கல்யாணம் ஆகி இன்னும் ஒரு வருஷம் கூட ஆகல!
அதுக்குள்ள இவ்வளவு விவரம்!
அது சரி.. கல்யாணத்துக்கு முன்னே அவன் கிட்ட போனில் பேசியே கரெக்ட் பண்ணினவ தானே நீ!
கொஞ்சம் கூட வெக்கம் இல்லாத ஜென்மம்!” என்றாள்.
“என்ன இருந்தாலும் உங்க அளவு விவரம் இல்லக்கா எனக்கு!
நானாவது என் புருஷன் காசில் ஆரம்பிக்கும் தொழில என் பேர்ல ஆரம்பிக்கறேன்!
ஆனா நீங்க, உங்க கொழுந்தன் காசுல வாங்குன காரையே உங்க பேர்ல இல்ல வாங்கி இருக்கீங்க?
அப்புறம் என்ன சொன்னீங்க? வெக்கம் இல்லாத ஜென்மமா?
மானம் வெக்கம் பத்தியெல்லாம் நீங்க பேச கூடாது!
அப்படி வெக்க மானம் பார்க்கிறவங்களா இருந்தா, மரியாதையா அந்த இன்னோவா வண்டிய கொண்டு வந்து எங்க வீட்டுல நிறுத்திட்டு அப்புறம் பேசுங்க!
அப்ப நான் ஒத்துக்கிறேன்! நீங்களும் மானம் ரோசம் உள்ள பொம்பள தான்னு!
இப்ப வாய மூடிட்டு போய் உங்க வேலைய பாருங்க” என்று ஒரு கடி கடித்து விட்டாள் மகி.
ஏதோ சொல்ல வாயெடுத்தவ வனிதா, ராஜு போன் பேசி முடித்து விட்டு இவர்கள் இருக்கும் இடம் வர, உள்ளே போய் விட்டாள்!
—–
அவர்கள் வீட்டு போர்சனுக்கு முன்பு இருக்கும் பாத்ரூமில் குளித்து விட்டு, புடவையை சும்மா மேலே சுற்றிக் கொண்டு விருட்டேன்று அவர்கள் அறைக்குள் நுழைந்தாள் மகி.
அன்று அவள் வேலை செய்யும் அந்த கடையில் அவளுக்கு விடுமுறை!
எனவே நிதானமாகவே வேலையெல்லாம் முடித்து விட்டு குளிக்க சென்றிருந்தாள்.
கமலா அம்மா அவரது தோழி ஒருவர் வீட்டில் மாரியம்மனுக்கு குளுமை வைக்கிறார்கள் என்று அவர் வயதை ஒத்த அவரைப் போன்று இருக்கும் மூதாட்டிகளோடு அதிகாலையிலேயே அவர்கள் அனுப்பிய காரில் சென்று விட்டிருந்தார்.
ராஜுவும் யாரோ வெளிநாட்டில் இருந்து வருபவர்களை பிக்கப் செய்யவென்று அதிகாலையிலே சென்று விட்டிருந்தான்.
அவள் அறைக்குள் நுழைந்து, சும்மா சுற்றிக் கொண்டு வந்திருந்த புடவையை அவிழ்த்து உதறி மீண்டும் கட்டிக் கொள்ள முயன்ற போது அவள் பின்னால் இருந்து அணைத்தன ராஜுவின் கரங்கள்!
“ஏய்.. என்ன இது.. நீங்க எப்போ வந்தீங்க? சவாரி போகல?”
“ம்ம். போனேன்.. அவங்கள ஸ்ரீரங்கம் கோவிலில் இறக்கி விட்டுட்டு வந்துட்டேன்.
அவங்க தரிசனம் பண்ணிட்டு கூப்பிடறேன்னு சொல்லிட்டாங்க.
அதான் நான் என்னோட அம்மனை தரிசனம் பண்ணிட்டு போகலாம்னு வந்தேன்.
ஆனா சும்மா சொல்லக் கூடாது! என்னோட அம்மனுக்கு ரொம்ப கருணை!
நான் எதிர்பார்த்ததுக்கு மேலே நல்லா தரிசனம் கொடுத்துட்டாங்க!” என்று அணைப்பை விடாமலே அவன் சொல்ல,
“ஓகே.. தரிசனம் முடிஞ்சாச்சு இல்ல.
இப்ப திரை போட்டுடுவோம் நீங்க கிளம்புங்க!”
“ம்ம். அதெப்படி.. போவேன்.. இன்னும் ரெண்டே நாள்!
அப்புறம் மேடத்தை ஆடிக்கு அழைச்சுட்டு போய்டுவாங்க.
எங்க தரிசனம் பண்ணறது?”
“அதான். நான் ஆடிக்கு அம்மா வீட்டுக்கு போகல. அத்தை வீட்டுக்கு தான் போறேன்.
அப்புறம் அங்க இருந்து தினம் உங்களோட தான் நம்ம இடத்துக்கு போய் அங்க நடக்கிற வேலையெல்லாம் கவனிக்க போறேன்!
அப்புறம் என்ன?”
“உன் கடை வேலை நடக்கும் தான்!
என் கணவன் வேலை நடக்காதே! அது தான். இப்பவே.. ஒரு..” என்று சொல்லி உள்ளே இழுத்து சென்று அவளை இன்னொரு முறை குளிக்க செய்து விட்டான் அவள் ஆசைக் கணவன்!
..
“கார் ஸ்பான்னா என்ன அண்ணா?’ என்று கேட்டாள் புவனா.
“ஆமாண்டா..நானும் நீ சொல்லும் போது தலையை ஆட்டுனேன் தான்!
எனக்கு நீ என்ன கடை ஆரம்பிக்க போறேன்னு தெரியல” என்றார் கமலா அம்மா!
“கார் வாட்டர் சர்வீஸ் ஸ்டேஷன் மாதிரி தான்மா. ஆனா இது கொஞ்சம் வேற மாதிரி” என்றான் ராஜு.
“வேற மாதிரின்னா ரிப்பேர் ஒர்க்ஸ் எல்லாம் பண்ணுவாங்களா?”
“இல்ல அப்படி இல்லை..” என்று ராஜு சொல்லுமுன்னர், மகி சொன்னாள்.
“புவனா, நாம இப்ப பியூட்டி பார்லர் போறோம் இல்ல!
அது மாதிரி இது காருக்கு!
நாம் வெறுமனே ஃபேஸ் வாஷ் பண்ணினா முகம் பளிச்சுன்னு ஆகுமா?
நாம பியூட்டி பார்லர் போனா முகத்துக்கு க்ளென்சிங், ஃபேசியல், ப்ளீச்சிங்,
அப்புறம் புருவத்துக்கு த்ரெட்டிங், கை கால்களுக்கு பெடிக்யூர், மேனிக்யூர், வாக்ஸிங்,
அப்புறம் தலைக்கு டை அடிக்கிறது இப்படி ஒவராலா எல்லாமே பண்ணிக்கிறோம் இல்ல,
அது மாதிரி காருக்கு வெறும் வாட்டர் சர்வீஸ் மட்டும் பண்ணாம டீடைலிங்(Detailing) பண்றது!
அதில இன்டீரியர் டீடைலிங், எக்ஸ்டீரியர் டீடைலிங் ரெண்டு இருக்கு!
அதுல இன்டீரியர் டீடைலிங் அப்படின்னா உள்ள இருக்கிற சீட்களை வாக்குவம் கிளீன் பண்றது, சீட் கவர்களை சுத்தம் செய்றது,
டேஷ்போர்ட், ஏசியை, மேலே ரூஃப் ஷீட்டை, கீழே காலுக்கு போடுற மேட்டை எல்லாம் பக்காவா கிளீன் பண்ணி சேனிடைஸ் பண்றது.
அப்புறம் எக்ஸ்டீரியர் டீடைலிங் அப்படின்னா வெளிப்புறம் நல்லா எல்லா இடத்தையும் சுத்தமா கிளீன் பண்றது,
டயர்களை சுத்தம் செய்றது,
ஏதாச்சும் கீறல்கள் இருந்தா கெமிக்கல் பூசி அதை மறைக்கிறது இப்படியான ஒர்க்ஸ் பண்ணிக் கொடுப்போம்!
மொத்தத்தில் அழுக்கா வரும் காரை, கல்யாணப் பொண்ணு மாதிரி மேக்கப் பண்ணி அனுப்பி விட்டு,
எப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன் ஆக்குறது தான் நம்மளோட வேலையே!”
என்று சொல்லி முடித்தாள் மகி.
“உங்க அண்ணனுக்கு துபாயில் வேலைப் பார்த்த அனுபவம் இருக்கு!
கையில் தோதான இடமும் இருக்கு!
அப்புறம் எதுக்கு வெறுமனே டாக்ஸி மட்டும் ஓட்டிட்டு கத்துகிட்ட அந்த விஷயத்தை வேஸ்ட் ஆக்கணும்? அது தான்” என்றாள் மேலும்!
“சூப்பர்ம்மா. இதுக்கு தான் பொண்டாட்டி வேணும்கிறது! பாத்தியா?” என்றான் சந்துரு!
“இதுக்கு எல்லாம் அம்மாச்சி தான் மூல காரணம்!
அவங்க மட்டும் புத்திசாலி தனமா அங்க இடம் வாங்கி போட்டு இருக்கலைன்னா இது எல்லாம் சாத்தியமே இல்லை” என்றாள் மகி!
“ரொம்ப சரியா சொன்னம்மா. சும்மாவா அந்த காலத்துல பாடி வச்சுருக்காங்க!
சேத்த பணத்தை சிக்கனமா செலவு பண்ண பக்குவமா அம்மா கையில கொடுத்து போடு சின்ன கண்ணு..
அவங்க ஆற நூறு ஆக்குவாங்க செல்லக்கண்ணு! என்று சொல்லி விட்டு.
சரிம்மா எங்களுக்கு நேரம் ஆகிடுச்சு நாங்க கிளம்புறோம்” என்று சொல்லி விட்டு,
மணப்பாறை மாடு கட்டி, மாயவரம் ஏரு பூட்டி, என்று பழைய பாட்டை முணுமுணுத்தவாறு கிளம்பினான் சந்துரு.
“அவன் சொன்னது இருக்கட்டும். அம்மாவுக்கு அப்புறம் மகி தாண்டா உனக்கு!
மகி கிட்ட கேக்காம நீ எதுவும் செய்யக் கூடாது!
இனிமே உன் நல்லது கெட்டதுல அவளுக்கு மட்டுமே பங்கு! நீ இப்ப தான் முன்னேற முதல் படி எடுத்து வச்சுருக்க!
ஆனா எந்த சூழ்நிலையிலும் நீ உன் அண்ணனையோ இல்ல அக்காவையோ இதில கூட்டு சேர்த்த,
அப்புறம் இந்த அம்மா என்ன, மகி என்ன, அந்த மகேஸ்வரனே வந்தா கூட உன்னை காப்பாத்த முடியாது பார்த்துக்கோ” என்றார் கமலா அம்மா.
“இவ்வளவு நடந்ததுக்கு அப்புறமும் நான் அப்படியே இருப்பேனா அம்மா?
அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன்” என்று சொல்லி விட்டான் ராஜு.
“பார்த்துக்கிறேன்” என்று சொல்லி விட்ட ராஜுவுக்கு சோதனை வந்தது ப்ரியா உருவத்தில்!
மகியை ஆடிக்கு அவள் அத்தை வீட்டுக்கு அழைத்து சென்று இருக்க,
இங்கே ஒரு நாள் கமலா அம்மா இல்லாத நேரம் பார்த்து ஒரு கையில் ஒரு வயர் கூடையுடன் வீட்டில் நுழைந்தாள் ப்ரியா!
ஏழரை வீட்டுக்குள் நுழைந்து விட்டதே! ராஜுவுக்கு வந்த சோதனை!
error: Content is protected !!