Skip to content
Post Views: 2,576
“எப்பங்க, நம்ம வீட்டுக்கு போகப் போகிறோம்?” என்று கேட்ட மனைவியை அதிர்ச்சியாக பார்த்திருந்தான் ராஜு.
அவள் இப்படி கேட்பாள் என்று எதிர்பார்க்காதவன் போல இருந்தது அவன் பார்வை!
இப்போது ஆச்ச்சர்யபடுவது மகியின் முறையானது!
எதுக்கு இவ்வளவு ஷாக் இவருக்கு?
Advertisement
நான் அப்படி ஒண்ணும் தப்பா கேட்டுடலையே? என்று நினைத்தவாறு,
மீண்டும் கேட்டாள் அதே கேள்வியை!
இப்போது தான் ராஜுவிற்கு உறைத்தது!
Advertisement
மகி, இங்கு தன்னை ஒரு விருந்தாளி போல தான் எண்ணிக் கொண்டு இருந்திருக்கிறாள் என்று!
Advertisement
“இல்ல.. மகி.. இங்க வீட்டுல.. எல்லோரும் நம்மள இங்கயே இருக்க சொல்றாங்க!”
“இங்கயா? எப்படி? நாம பொழைப்பைப் பார்க்க வேண்டாமா? ஏற்கனவே என்னால இன்னும் ஒரு நாலு மாசம் கடைக்கு வர முடியாது.
ஆனா அதுக்கும் ஏற்பாடு பண்ணிட்டேன்.
Advertisement
இப்ப வேலைப் பார்த்துட்டு இருக்கிற பசங்களுக்கு, செமெஸ்டர் லீவ் வந்திடும்.
அப்புறம் புல் டைம் அவங்களே பார்த்துப்பாங்க.
அப்புறம் இன்னொரு அக்காவும் வேலைக்கு வரேன்னு கேட்டுகிட்டு இருக்காங்க.
நான் என் வீட்டுக்காரர் கிட்ட கேட்டுட்டு சொல்றேன்னு சொல்லி வச்சுருக்கேன்.
ஒரு வேளை அவங்கள்ள யாராச்சும் வர முடியாம போனா கூட குழந்தைங்க தூங்குற கொஞ்ச நேரம் நான் எப்படியாவது டக்குன்னு கிளம்பி போகலாம்னு இருக்கேன்”
“உனக்கு அவ்வளவு சிரமம் வேண்டாம்னு தான் அண்ணன் ஒரு ஐடியா சொன்னான்”.
“என்ன சொன்னாங்க?”
“இல்ல.. அவனும் என் கூட நம்ம சர்வீஸ் ஸ்டேசனுக்கு தினமும் வந்து எனக்கு ஹெல்ப் பண்றேன்னு சொல்லி இருக்கான்.
அப்புறம் அக்கா கூட உங்க அத்தையோட சேர்ந்து நம்ம புட் ஸ்டால்ல வேலை செய்யறேன்னு சொல்லி இருக்கு.
அவங்க வீட்டுல தான் இப்ப அத்தையும் மாமாவும் திரும்ப வந்திட்டாங்கல்ல.
இனி சினேகாவை அவங்க பார்த்துப்பாங்கன்னும் சொன்னுச்சு”.
“நீங்க என்ன சொன்னீங்க?” குரலில் எந்த உணர்வும் காட்டாமல் மகி கேட்டாள்.
“சரின்னு சொல்லிட்டேன்!”
“அம்மாச்சி என்ன சொன்னாங்க?”
“அவங்க ஒண்ணும் சொல்லல!”
“ஓ.. அப்படியா” என்றவாறு, குழந்தைகளை இருபுறமும் படுக்க வைத்துக் கொண்டு கண்ணை மூடி தூங்கி விட்டாள் மகி.
காலையில் ராஜு எழுந்திருக்கும் போதே குழந்தைகளின் டயப்பர் பேகை தயார் செய்து கொண்டிருந்தாள் மகி.
எங்காவது வெளியில் சென்றாள் கொண்டு போகும் பேக் அது!
“இப்ப எதுக்கு இத பேக் பண்ணிட்டு இருக்க?”
“இன்னிக்கு நிலா பாப்பாவுக்கும், நிலவன் தம்பிக்கும் வேக்சின் போட போகணுமே!
அதுக்கு தான் எல்லாத்தையும் ரெடி பண்ணிட்டு இருக்கேன்!”
“எத்தனை மணிக்கு ஓ.பி? டோக்கன் வாங்கிட்டியா?”
“டோக்கன் எல்லாம் காலையிலேயே ஆறுமணிக்கே அத்தை போய் வாங்கிடுச்சு. நேர்ல போனா தானாம்!”
“எப்ப கிளம்புறோம்?”
“நான் பார்த்துக்கிறேன். நீங்க வேலைக்கு போங்க.
அத்தை வந்து கூட்டிட்டு போய்டும்” என்று சொல்லிக் கொண்டே கிச்சனுக்குள் சென்றவள்,
சுடு தண்ணீரில் போட்டு கழுவ போட்டிருந்த குழந்தைகளின் பால் பாட்டில்களை எடுத்து வந்து அதற்கு என்று இருக்கும் சிறிய பிளாஸ்டிக் கூடையில் போட்டு வைத்தாள்.
இப்படியே குழந்தைகளின் ஓவ்வொரு பொருட்களையும் பார்த்து பார்த்து எடுத்து வைத்தவள், குளிக்க சென்று விட்டாள்.
ராஜுவோடு சேர்த்து அவளுக்கும் டிபன் எடுத்து வைத்தார் கமலா அம்மா.
“அம்மா, மகி அவ அத்தையோட பசங்களுக்கு தடுப்பூசி போட ஹாஸ்பிட்டல் போறா.
நான் வேலைக்கு கிளம்புறேன். வர்றேன் மகி” என்று சொல்லி ராஜு வெளியே கிளம்பி விட்டான்!
தலையை மட்டும் ஆட்டிவிட்டு, ஒன்றும் சொல்லாமல் அதை சாப்பிட்டு முடித்தவள், கையை கழுவி விட்டு வந்து போனை எடுத்து
“அத்தை நீ கிளம்பிட்டியா? நான் ரெடியாகிட்டேன்.
பசங்களுக்கு இன்னிக்கு சும்மா உடம்பு துடைச்சு விட்டுட்டு தான் கிளப்ப போறேன்.
நீ வந்தா சரியா இருக்கும்” என்று போனில் அன்னம் வருகைக்குக் காத்திருந்தாள்.
ஒரு ஆட்டோவில் வந்து அவர் இறங்கிய பின்,
“அம்மாச்சி நான் ஹாஸ்பிடல் போயிட்டு வரேன்” என்று சொல்லி விட்டு அன்னமும் சொல்லிக் கொண்டவுடன், ஆளுக்கொரு குழந்தையாக தூக்கிக் கொண்டு வெளியே சென்றனர்.
பார்த்துக் கொண்டிருந்த கமலா அம்மாவுக்கு ஏதோ போல இருந்தது!
“ஆஸ்பத்திரிக்கு எதுக்குடி இவ்வளவு பெரிய பை?”
“ஒரு நாள் முழுக்க ஆகிடும் அம்மாச்சி.
அதான் பசங்களுக்கு டயப்பர், பால் பவுடர், பால் பாட்டில் ட்ரெஸ்களை பேக் பண்ணி இருக்கேன்!”
“அப்போ மதிய சாப்பாடு?”
“அங்க கேண்டீன் இருக்கு சாப்பிட்டுக்கிறோம்!”
“என்னமோ போ.. ஏற்கனவே ரெட்டை பிள்ளைங்க வேற தாய்ப்பால் பத்தலைன்னு சொல்லி இப்படி பவுடர் பால் கொடுக்க வேண்டியிருக்கு!
இதுல கடை சாப்பாடு சாப்பிட்டா என்னத்துக்கு ஆகுறது?” கவலைப்பட்டார் கமலா அம்மா.
“அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன் அம்மாச்சி..
நீங்க உங்க உடம்பைப் பார்த்துக்கங்க. நேரா நேரத்து சாப்பிடுங்க. மாத்திரை போட்டுக்கங்க!”
“ஏண்டி, இப்ப என்ன நீ உன் அம்மா வீட்டுக்கா போற? ஆஸ்பத்திரிக்கு தானே போற..
அதுக்கு ஏண்டி இத்தனை பத்திரம் சொல்லிட்டு இருக்க?” என்றபடி அவள் ஆட்டோ நகர்ந்தவுடன் கேட்டைப் பூட்டிக் கொண்டு உள்ளே சென்றார் கமலா அம்மா.
—-
மாலையே வீட்டுக்கு வந்தான் ராஜு. குழந்தைகளைப் பார்க்க. வேக்சின் போட்டா பீவர் வரும்னு வேறே சொல்லுவாங்களே என்று அவனுக்கு வேலையில் மனதே செல்லவில்லை.
வீடு திரும்பி விட்டான்.
மதியம் போன் பண்ணினான் மகி எடுக்கவே இல்லை.
போனை ஹான்ட்பேகில் போட்டு இருப்பாள்.
அன்னம் போனுக்கும் அழைத்தால் அவரும் எடுக்கவே இல்லை!
வீட்டுக்கு போன் செய்தால் கமலா அம்மாவோ, அவர்கள் இன்னமும் வரவில்லை என்றார்.
“நானும் போன் பண்ணினேன்டா. அவ எடுக்கல.
ஹாஸ்பிட்டலில் ஒரே கூட்டம் போல! திங்கள் கிழமைன்னாலே கூட்டமா தான் இருக்கும்!” என்றார்.
மேலும் பார்த்து விட்டு, அவசர வேலைகளை மட்டும் முடித்து விட்டு,
மற்றவற்றை வேலை செய்யும் ஆட்களைப் பார்த்துக் கொள்ள சொல்லி விட்டு வீடு திரும்பியிருந்தான் ராஜு.
வீட்டிற்கு இன்னமும் வரவில்லை என்றவுடன் அந்த ஹாஸ்பிட்டல் ரிசப்சனைத் தொடர்பு கொண்டான்.
அவர்களோ காலை ஓ.பி மதியம் மூன்று மணியோடு முடிந்து இப்போது மாலை ஓ.பி நடனத்துக் கொண்டிருப்பதாக சொல்ல, ராஜு குழம்பி, மீண்டும் மகிக்கு போன் செய்தான்.
இப்போதும் அவள் எடுக்கவில்லை என்ற போது தான் அவனுக்கு ஏதோ தப்பாக பட்டது!
உடனே பரமேஸ்வரிக்கு அழைத்து விஷயத்தை சொல்லாமல் நலம் விசாரிப்பாக பேசி பார்த்தான்.
மகி கும்பகோணம் போக வில்லை என்று தெரிந்தது!
அப்போ எங்கே தான் போனாள் என்று நினைத்தவனுக்கு உடனே தன் வீடு நினைவு வந்தது! அங்கு விரைந்தான்.
அவன் நினைத்தது போல மகி அங்கு தான் இருந்தாள்.
பெட்ரூமில் புதிதாக கம்பியில் கட்டிய இரு தொட்டில்கள்.
ஒன்று வேஷ்டியால், இன்னொன்று காட்டன் புடவையால்!
குழந்தைகள் தூங்கிக் கொண்டிருந்தன!
மகியை வீட்டில் பார்த்தவுடன் தான் அவனுக்கு பதட்டம் குறைந்தது.
பதட்டம் குறைந்து, கொஞ்சம் கோபம் எட்டிப்பார்த்தது!
எப்படி பயமுறுத்திட்டா கொஞ்ச நேரத்துல என்று நினைத்தவன்,
“ஏண்டி சொல்லிட்டு வர மாட்டியா?” என்றான் கோபமாக!
மகி விரைந்து எழுந்து வந்தவள், அவன் கையைப் பிடித்து வெளியே இழுத்து வந்து , அவளும் மெல்லிய குரலில் சீறினாள்.
“ஏன்.. இப்படி கத்துறீங்க? இப்ப தான் ரொம்ப நேரம் கஷ்டப்பட்டு ரெண்டையும் தூங்க வச்சுருக்கேன். மெதுவா பேசுங்க”
“சர்ர்ரி”. அவன் பல்லைக்கடித்தவாறு மீண்டும் கேட்டான்,
“சொல்லிட்டு வர மாட்டியா?”
“ஏன்? நீங்க என்கிட்ட சொல்லிட்டு தான் எல்லாம் செய்றீங்களா? என்னை மட்டும் செய்ய சொல்றீங்க?”
“என்ன நான் சொல்லிட்டு செய்யல.. இப்ப..?”
“ஓ.. உங்களுக்கு அது கூட இன்னமும் விளங்கல இல்ல! ரொம்ப சந்தோசம்!”
“என்ன சொல்ற நீ? கொஞ்சம் புரியும்படியா சொல்லு!’
“நான் உங்க கிட்ட சொல்லாம வந்திட்டேன்னு உங்களுக்கு எவ்வளவு கோவம் வருது.
அப்படி தானே எனக்கும் வரும்? உங்களுக்கு வந்தா ரத்தம்! எனக்கு வந்தா தக்காளி சட்னியா?”
அவன் பதில் பேசாமல் முறைத்தான்.
“ஒரு வேலைக்கு ஆள் எடுக்கிறது.. அது கூட நீங்க இன்வால்வ் ஆகாத இடம்.
அப்ப கூட உங்க கிட்ட பேசிட்டு தான் வேலைக்கு ஆள் எடுக்கிறதை கூட நான் செய்றேன்.
ஆனா உங்க அண்ணன் அக்கா நம்ம கடைக்கு வந்து உட்கார்ந்துக்கிறேன் சொன்னப்ப, ஒரு வார்த்தை மகி கிட்ட பேசிட்டு சொல்லுறேன்னு சொல்றதுக்கு உங்களுக்கு தோணவே இல்லல்ல?”
ராஜு இப்போது தான் தன் தவறை உணர்ந்தான். மகியின் கோபத்துக்கான காரணத்தையும்!
“அது.. வந்து.. அது.. உனக்கு தான் தெரியுமே மகி. எனக்கு நோ சொல்ல வராதுன்னு!”
“அது எப்படிங்க.. கல்யாணத்துக்கு முன்னாடி நீங்க அப்படி இருந்து இருக்கலாம்.
ஆனா இப்ப.. நம்ம கடைய உருவாக்கினதுல என்னோட பங்கும் இருக்கு!
சட்டபடியும் தர்மப்படியும்!
அது எப்படி என்கிட்ட கேக்காம ஒரு முடிவு எடுக்கலாம் நீங்க?”
“என்ன மகி நீ இப்படி சொல்ற? நீயும் அவங்க கிட்ட எல்லாம் நல்லா தானே பேசிட்டு இருக்க?
அதுவும் அண்ணனுக்கு ஆக்சிடென்ட் ஆனது கேள்விப்பட்டு, நீ தானே வயித்துப் பிள்ளையோட ஹாஸ்பிட்டல் ஓடினே.
பணம் எல்லாம் கொஞ்சம் கூட யோசிக்காம கட்டின? அப்புறம் என்னடி இன்னிக்கி இப்படி பேசுற?”
“என்ன பேசுறீங்க நீங்க.. அன்னிக்கு ஒரு மெடிக்கல் எமர்ஜென்சியின் போது நான் பண்ணினதும் இப்ப நீங்க செய்றதும் ஒண்ணா?
ஒருத்தர் உயிருக்கு போராடிட்டு இருக்கிறப்போ, அவங்க எவ்வளவு தான் நமக்கு கெடுதல் பண்ணி இருந்தாலும் நாம் பார்த்துட்டு க்ராஸ் பண்ணிட்டு போறது மனுஷ தன்மையில் வராது!
அதனால தான் அன்னிக்கு சந்துரு அண்ணனும் அவருக்கு ஹெல்ப் பண்ணினாங்க.
ஆனா..இது தொழில்.. அதுலயும் நீங்களும் நானும் பார்ட்னரா இருந்து செய்யுற தொழில்!
பொண்டாட்டின்னு நினைச்சு ஒரு வார்த்தை கேக்கலைன்னாலும் ஒரு பார்ட்னரா நினச்சாவது கேட்டுருக்கணுமா வேண்டாமா?”
“சரி.. தப்பு தான்.. இப்ப அவங்க கிட்ட சொல்லிட்டேன்ல. இப்ப என்ன பண்றது?”
“சொன்ன நீங்களே.. இல்லைண்ணே மகி இதெல்லாம் வேண்டாம்னு சொல்லுது.
சொல்லி மறுத்திடுங்க.
உங்கள நம்பி பொண்டாட்டி.. ஒரு பிள்ளைக்குப் பதிலா ரெண்டு பிள்ளைங்கன்னு குடும்பம் ஆகிடுச்சு.
இனியும் அது வராது.. இது வராதுன்னு சொல்லிட்டு, உங்களோட சேர்ந்து எங்களையும் தெருவுல நிறுத்திடாதீங்க” என்று சூடாகவே சொல்லி விட்டாள் மகி!
ராஜு திகைத்துப் போய் விட்டான்!
என்ன இப்படி பேசிட்டா? ஆனா அவ சொல்றதும் நியாயம் தானே! ஒரு வேளை இப்பவும் எதாச்சும் தப்பா போய்ட்டா?
திரும்பவும் நாம தெருவுல தான் நிக்கணும்! அன்னிக்காச்சும் நாம சிங்கிள்! இப்ப அப்படியா..
அய்யோ.. நம்ம புள்ளங்களுக்கு பால் வாங்க கூட காசில்லை.. படிக்க வைக்க கூட காசில்லன்ற நிலைமை வந்தா?
அய்யோ கற்பனை செய்யக் கூட பயமா இருக்கு!
நாம என்ன சொல்லி அவளை கல்யாணம் பண்ணினோம்.
எனக்கு ஒண்ணும் தெரியாது. நீ சொல்றத கேட்டு.. அப்படியே அவ முந்தானைய பிடிச்சுக்கிட்டு மீதி வாழ்க்கைய வாழப் போறோம்னு சொல்லித் தானே என்று அவன் மனசாட்சி பழசைக் குத்தி காண்பித்தது!
“சரி.. என்ன இப்போ.. நான் இப்பவே போய் அண்ணன் கிட்ட நீ சொன்ன மாதிரி தைரியமா நோ சொல்லிட்டு வந்திடறேன்.
அப்பா.. அதுக்குள்ள நீ பேயாட்டம் ஆடிட்டடி!” என்று சொல்லி உறையூர் வீடு சென்றவன்,
மகிக்கு ராமுவும் பிரியாவும் அவர்கள் தொழிலில் உதவிக்கு வருவது பிடிக்கவில்லை என்று அனைவரின் முன்பும் தைரியமாகவே, மகியின் கணவனாக சொல்லி விட்டான் ராஜு.
கேட்ட அனைவரும் அதிர்ச்சியடைந்து,
“என்ன மகிக்கு இன்னமும் எங்க மேல உள்ள கோபம் போகல போலிருக்கு!” என்றாள் ப்ரியா.
“ஆமா.. எனக்கு அவ்வளவு தூரம் சப்போர்ட்டா இருந்து ஆறுதல் சொல்லி அணைச்சுக்கிட்ட மகி இப்படி பேசுவான்னு நான் எக்ஸ்பெக்ட் பண்ணலங்க” என்றாள் வனிதாவும்.
இப்போது தான் கொஞ்சம் அவள் தெளிவாக ஆரோக்கியம் திரும்பி இருந்தாள்!
“நான் வந்து பேசுறேன்” என்று ராமு கிளம்பினான்.
“மகிக்கு எங்க மேல ஏன் நம்பிக்கை வராம போச்சு” என்று சொல்லிபடி.
—
தன் முன் வைக்கப்பட்ட உறையூர் வீட்டுப் பத்திரம், ராமு வாங்கிப் போட்டிருக்கும் பிளாட்களின் பத்திரங்களை கேள்வியோடு பார்த்தாள் மகி.
“நாங்க ராஜு கிட்ட ஏமாத்தி வாங்கிப் போட்ட ப்ராபர்ட்டி டாக்குமெண்ட்ஸ். எல்லாத்தையும் நீயே வச்சுக்க.
ரொம்ப வருசத்துக்கு அப்புறம், இப்ப தான் நாங்க எல்லாம் ஒண்ணு சேர்ந்துருக்கோம்.
இதோ.. இது காரணமா நாங்க திரும்பவும் பிரிய வேண்டாம்!” என்றான் ராமு!
மகி என்ன சொல்லப் போகிறாள்?
error: Content is protected !!