Skip to content
Post Views: 2,026
குட் மார்னிங் என்று அன்பு முத்தங்கள் கன்னத்திலும் கழுத்திலும் திணறத் திணற விழ கணவன் தன்னை எழுப்பி விடும் இனிய விடியலாக இந்த காலைப் பொழுது அமைந்திருக்கவில்லை..
எதிர்பாராமல் முகிழ்த்து ஒரு முடிவின்றி நின்று போயிருக்கும் அந்த கனவின் தாக்கத்தில் படக்கென்று விழித்திருந்தாள் சந்தான லஷ்மி.
முகமெல்லாம் வேர்த்து போயிருந்தது..
உறக்கத்தை கலைத்து கணவனின் முத்தங்களோடு முட்டும் காலை கனவுகள் சகஜம்தான் என்றாலும்.. இதென்ன புதிதாக தெள்ள தெளிவாக கண்முன்னே ஒரு காட்சி நிகழ்வதை போல்.. அத்தனையும் இப்பொழுதும் கண்முன்னே தத்ரூபமாக நிற்கிறதே..!
Advertisement
கண்களை மூடினால் இப்போது கூட அந்த கனவு காட்சிகள் தெளிவாக இமைகளுக்குள் ஓடுகிறது..
அதை காட்சி என்று சொல்லிவிட முடியாது.. ஏதோ ஒரு அசரீரி குரல்..!
டிங்.. டிங்.. டிங்..! சுவர் கடிகாரம் மணி ஏழைத் தொட்டு ஓசை எழுப்பியது. இனி இதைப் பற்றி யோசிக்க நேரமில்லை. வேலைக்கு புறப்பட்டாக வேண்டும்.. போர்வையை உதறி தள்ளி விட்டு எழுந்து நின்று சோம்பல் முறித்தாள் சந்தான லஷ்மி..
Advertisement
எல்லாம் சரி நான்தான் கனவு கண்டு கலங்கி போயிருக்கிறேன்.. எங்கே அவர்.. என் அன்பு கணவர் ஆசை புருஷன்..! நாள்தோறும் இதமான அன்பு முத்தங்களால் என்னை குளிப்பாட்டி உறக்கத்திலிருந்து விழிக்க வைப்பவர்..! ஏன் வழக்கத்திற்கு மாறாக இன்று எல்லாம் வித்தியாசமாக தெரிகிறது.
Advertisement
கண்களை சுழற்றி கணவனை தேடினாள் லக்ஷ்மி..!
‘வாத்து..!’ இப்படி கூப்பிட்டால் அவனுக்கு கோபம் வரும்.. “யாருடி வாத்து” என எங்கிருந்தாலும் பாம்பு போல சீறிக்கொண்டு வெளியே வருவானே..!
“டேய் வாத்து..! எங்கடா போன?” சிரித்துக் கொண்டே மீண்டும் அழைத்தாள்.
Advertisement
அழைத்து ஒரு நிமிடமான பின்னும்.. ஆளை காணவில்லை..
“என்ன ஆச்சு இந்த மனுஷனுக்கு..?” போர்வையை மடித்து வைத்து தலையணைகளை அடுக்கி ஒழுங்குப் படுத்திவிட்டு குளியலறை கதவை திறந்து பார்த்தாள்.. அங்கேயும் அவன் இல்லை.
“எங்க போனாரு இவரு.. காலையிலேயே என்னை எழுப்பாமல் கீழே போக மாட்டாரே..!” என முணுமுணுத்தப்படியே பால்கனி பக்கம் எட்டிப் பார்க்க.. பல்லை துலக்கிக்கொண்டு அங்கேதான் நின்று கொண்டிருந்தான் அவன்.
சுவற்றில் சாய்ந்து முன் கை கட்டியபடி அவனை முறைத்தாள் லக்ஷ்மி..
மனைவி பின்னால் நிற்கிறாள் என்ற பிரக்ஞையின்றி சாலையை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான் அவள் கணவன்.
அப்படி என்ன வேடிக்கை பாக்கறார்.. நான் நிக்கிறது கூட தெரியாம மெய்மறந்து பார்க்கற அளவுக்கு எந்த ஃபிகர் போகுது கீழ..! என முன்னுக்கு நகர்ந்து தலை சாய்த்து எட்டிப் பார்க்க..! அங்கே ஒரு எருமை மாடு வளைந்த கொம்புகளோடு மிக நிதானமாக ரோட்டை மறித்தபடி போய்க் கொண்டிருந்தது. அதன் பின்னால் சின்ன எருமை கன்னுக் குட்டி அம்மாவின் கால் தடத்தை பின்பற்றி சென்று கொண்டிருந்தது.
நாய்க்குட்டியோ எருமை குட்டியோ பூனைக் குட்டியோ.. தாயும் பிள்ளையுமாய் எதைக் கண்டாலும் மனதோடு விஸ்தரித்து பரவும் அந்த ஏக்கத்தை தடுத்து நிறுத்த முடிவதே இல்லை அவளால்.. ஒரு கணம் எங்கோ ஆழப் புதைந்து கவலைக்குள் சென்று மீண்டு வந்தாள் லக்ஷ்மி..
ஆனாலும் இதையா இவ்வளவு ஆர்வமா பாக்கறார்.. உதட்டை சுழித்து அவனை வித்தியாசமாக பார்த்தாள். என்னைப் போல எதைக் கண்டாலும் உள்ளுக்குள் சுமந்திருக்கும் கவலையை வெளியே எடுக்கிற ரகமில்லையே இவர்.
அவன் அந்த மாட்டையும் கன்னுக்குட்டியையும் பார்ப்பதாக தெரியவில்லை.. மிக மெதுவாக அந்த மாடு கடந்து சென்ற பின்னும் கூட அவன் பார்வை அங்கிருந்து நகரவில்லை..
என்ன ஆச்சு இவருக்கு..! எனக்குத்தான் காலையிலேயே டென்ஷன்.. இவருக்கு என்ன கேடு..? பக்கத்தில் போய் அவன் முகத்திற்கு முன்பு சொடுக்கிட்டாள்.
ஹான்..! தூக்கத்திலிருந்து திடுக்கிட்டு விழித்தவன் போல மலங்க மலங்க முழித்தான் அவன்..
வாத்சல்யன்.. சந்தான லஷ்மியின் ஆசை கணவன்..
என்னப்பா நின்னுகிட்டே தூங்கறியா..? பின்னால் நின்றிருந்தாலும் அவனுக்கு முன்பு தன் முகத்தை மட்டும் கொண்டு வந்து எட்டிப் பார்த்தாள்.
மனைவியை கண்டதும் சட்டென தன் முகபாவனையை மாற்றிக்கொண்டு லேசாக புன்னகைத்தான் வாத்சல்யன்.
“இல்லடி..!” என்றவனுக்கு வாயில் வைத்திருந்த பிரஷ் இப்போதுதான் நினைவு வர.. வேகமாக பல் துலக்க தொடங்கினான்.
“என்ன ஆச்சு காலையில என்னை எழுப்பவே இல்லை.. குட் மார்னிங் கிஸ் தரல..! ஆள் பாக்கவே ஒரு மாதிரி இருக்கீங்க.. ஏதாவது பிரச்சனையா ?” என்றபடி அவன் முகத்தை கூர்மையாக ஆராய்ந்தாள்.
“என்ன பிரச்சனை..! நீ பாட்டுக்கு ஏதாவது கற்பனை பண்ணிக்காதடி..!”
“அப்புறம் ஏன் என்னை எழுப்பவே இல்லை..”
“அசந்து தூங்கிட்டு இருந்த.. சீக்கிரமா எழுப்பினா ராத்திரியெல்லாம் என்னை தூங்க விடலைன்னு சண்டை போடுவ..! சரி பாவம் பிள்ளை இன்னும் கொஞ்ச நேரம் தூங்கட்டுமே பிரஷ் பண்ணிட்டு எழுப்பலாம்னு நெனச்சேன்..” வாத்சல்யன் இப்படி சொன்னதும் அவள் முகம் குங்குமமாய் சிவந்தது..
வாத்சல்யன்.. சந்தான லஷ்மி இருவருக்கும் திருமணமாகி பத்து வருடங்கள் முடிவடைந்திருந்த நிலையில்.. அவள் வெட்கமும் அவன் நேசமும்.. முதன் முதலாய் முகிழ்த்த பூவாய் மணம் மாறாமல்.. அதே வண்ணத்தோடு ஃபிரஷ்ஷாக இருப்பதுதான் இதில் குறிப்பிடத்தக்க விஷயம்.
“ஒரு நாள் லேட் ஆனதுக்கு ரொம்பத்தான் பண்றடி.. இரு பிரஷ் பண்ணிட்டு வந்து சேர்த்து வச்சு ஜமாய்ச்சிடறேன்..” என அவள் தோளோடு இடித்துக் கொண்டு போக..
“அய்யோ..! ஆளப் பாரு.. ஆபீஸ்க்கு நேரமாச்சு சீக்கிரம் போய் குளிச்சிட்டு வாங்க..! அப்புறந்தான் நான் போகணும்.. இப்பவே என்னை பத்தி கிச்சன் மேடை மாநாடு ஆரம்பிச்சிருக்கும். நான் போய்தான் இறுதி உரை கொடுத்து மாநாட்டை முடிச்சு வைக்கணும்..” என்றாள் புருவங்களை உயர்த்தி அலுப்பாக.
“ஹாஹா..” என சத்தமாக சிரித்தான் வாத்சல்யன்..!
“என்கிட்ட நல்லாத்தான்டி பேசற.. ஆனா கீழ போன பிறகுதான் முழுசா சந்திரமுகியா மாறுன உன் மனைவி கங்காவைப் பார் அப்படிஙகிற மாதிரி.. உன் நடை உடை பாவனையெல்லாம் டோட்டலா மாறி போகுது..!”
“நான் மாறல.. எல்லாருமா சேர்ந்து என்னை பத்ரகாளியா மாத்தி வச்சிருக்கீங்க..! நான் கொஞ்சம் இடங்கொடுத்தா போதும்.. எல்லாருமா சேர்ந்து என் தலை மேல ஏறி டான்ஸ் ஆடத் தயாரா இருக்காங்க.. அதை பார்க்கணுமா உங்களுக்கு..!”
“எனக்கு எதையும் பார்க்க வேண்டாம்.. நீ சந்தோஷமா இருக்கணும் அவ்வளவுதான்.. அவங்களுக்கு பதிலடி கொடுக்கறேன்.. இவங்கள்ட்டருந்து என்னை பாதுகாத்துக்கறேன்னு உன்னை நீயே வருத்திக்காதே அவ்வளவு தான் சொல்லுவேன்.!” என்றபடியே குளியலறைக்குள் நுழைந்து கொண்டான் வாத்சல்யன்.
அவன் சென்ற பிறகு முன்கை கட்டியபடி கீழ்நோக்கி வெறித்து பார்த்துக் கொண்டிருந்தாள் சந்தான லஷ்மி..
தனிமை மீண்டும் அந்த காலை நேர கனவை சுவற்றில் ஓட்டும் நோட்டீஸ் போல அவள் நினைவுகளில் பதித்து விட்டு சென்றது.
என்ன மாதிரியான கனவு இது..? ச்சே..! இதைப்பத்தி வாத்சாவிடம் பேசலாமா..?
“கண்டதையும் யோசிச்சுகிட்டே படுத்தா இப்படித்தான்..! மனசு ரிலாக்ஸா வச்சுக்கோ சந்தா..! வர்றியா ஒரு முறை டாக்டர் கிட்ட போயிட்டு வரலாம். இப்பல்லாம் நீ ரொம்ப டென்ஷனாகற.. ஒரு கவுன்சிலிங் போயிட்டு வந்தா எல்லாம் சரியா போயிடும்…!” என இதை சாக்கு வைத்து கவுன்சிலிங் என்ற பெயரில் அந்த சொட்டைத் தலையனிடம் அழைத்துப் போய் காதில் ரத்தம் வருமளவு ஆலோசனை மழை பொழிந்து என்னை ஒரு வழியாக்கி விடுவார் இந்த மனுஷன்.
என்ன பண்றது..! பேசாம அந்த கனவை மறந்துடனும்..! ஆழ் மனசு ஆசைதானே கனவுகளா வர்றது..!
ஆழ்மனசுல இவ்வளவு வக்கிரமா யோசிக்கிறேன்னா நான்..?
வேண்டாம் லக்ஷ்மி..! இதைப் பத்தி மனசுல போட்டு குழப்பிக்காத அப்படியே மறந்திடு.. மறந்திடு.. மறந்திடு..
மறக்கணும்னா என்ன பண்ணலாம்.. வாத்சா குளித்து முடித்து வருவதற்குள் கீழே போய்.. ஒருமுறை அட்டனன்ஸ் போட்டுட்டு வரலாம்..
என் மாமியார் புலம்பலை காது கொடுத்து கேட்டா எனக்கு உலகமே மறந்திடும்.. இந்த கனவா ஞாபகத்துல இருக்க போகுது.. சின்ன சிரிப்போடு நைட்டியின் மேலே ஒரு துண்டை போட்டு கொண்டு கீழே இறங்கினாள்..
கிச்சனுக்குள் எட்டிப் பார்க்க.. வாத்சல்யனின் அன்னை மங்கை அடுப்பில் வைத்திருந்த குழம்பை கிளறிக் கொண்டிருக்க.. அவன் தம்பி மனைவி புவனா சட்னி அரைப்பதற்காக தேங்காயை துண்டு துண்டாய் நறுக்கி போட்டுக் கொண்டிருந்தாள்
“இன்னும் இறங்கி வந்திருக்காளா பாரு மகாராணி..! எல்லாம் அவன சொல்லணும் அவன் கொடுக்கற இடம்..”
“நீங்க வாயைத் திறந்து எதுவுமே பேச மாட்டேங்கறீங்களே அத்தை..!”
“என்னத்த பேசுறது.. புருஷனும் பொண்டாட்டியும் வரிஞ்சு கட்டிக்கிட்டு சண்டைக்கு வருவாங்க.. வயசான காலத்துல எனக்கு நிம்மதி முக்கியம்..!”
“அதுக்காக வேலைக்காரி மாதிரி அவங்களுக்கு சேவை செஞ்சுட்டு இருக்க போறீங்களா..? இனி காபி டிபன் எல்லாமே மாடிக்கு தான் போகணும் போலிருக்கு..!”
“எல்லாம் என் தலையெழுத்து.. அனுசரணையில்லாத மகனை வச்சிக்கிட்டு நான் கஷ்டப்படணும்னு எழுதியிருக்கு.. என்ன பண்ண..! என் புள்ள எனக்கு ஆதரவா இருந்திருந்தா எப்படி புலம்பற நிலைமை வந்திருக்காது.. அவந்தான் இருபத்து நாலு மணி நேரமும் பொண்டாட்டி முந்தானையை புடிச்சுக்கிட்டே சுத்தறானே.. வறண்ட மண்ணா இருக்கும்போதே இப்படி தூக்கி வச்சு கொண்டாடறான்.” அடுத்த வார்த்தையை சொல்லி முடிப்பதற்குள்..
“என்ன அத்தை இன்னைக்கு காலையில புலம்பல் கொஞ்சம் ஜாஸ்தியாவே இருக்குதே?” மறைந்திருந்தவள் தன் உருவத்தை முன்னுக்கு கொண்டு வர இருவரிடமும் ஏக தடுமாற்றம்..
“ஏம்மா நாங்க ரெண்டு பேர் மட்டும் தனியா கஷ்டப்படறோமே.. காலையில கொஞ்சம் சீக்கிரம் எழுந்து வந்து கூடமாட ஒத்தாசையா இருந்தா என்ன..!” உள்ளுக்குள் திடுக்கிட்டாலும் வெளியே எதையும் காட்டிக் கொள்ளாதவள் போல தன் மாமியார் முறுக்கை விட்டுக் கொடுக்காமல் இயல்பாக பேசினாள் மங்கை.
“நான் உங்களுக்கு ஒத்தாசையா இருக்கிறதில்லையா..! குளிச்சு முடிச்சுட்டு நான் கிச்சனுக்குள்ள வந்ததும் எனக்கும் இந்த சமையலறைக்கும் சம்பந்தமே இல்லைன்னு நீங்க ரெண்டு பேரும் வெளியே போய்டறீங்க..! நீங்க சமைச்சு முடிச்சு போட்டுட்டு போற பாத்திரங்கள்.. அதுலயும் வேணும்னே தேவையில்லாம எடுத்து உபயோக படுத்திட்டு.. கவலையில்லாம சிங்கை நிரப்பி வச்சிட்டு போறீங்களே.. அவ்வளவு பாத்திரத்தையும் கழுவி.. கொஞ்சங்கூட பொறுப்பில்லாம சின்ன குழந்தை மாதிரி சமையலறை மேடை முழுக்க.. நீங்க கொட்டி வெச்சிட்டு போற கடுகு.. உப்பு.. டீக்கறை எண்ணெய் பிசுக்கு.. சுவத்துல பட்டு தெறிக்கற சட்னி கறை.. எல்லாத்தையும் தொடச்சு.. இப்ப நீங்க அலங்கோலமா மாத்தி வைச்சிருக்கிற கிச்சனை பளபளன்னு கிளீன் பண்ணி வச்சுட்டு போறதெல்லாம் உங்களுக்கு வேலையா தெரியலையா அத்தை..!
“ஏம்மா.. நாங்க மாங்கு மாங்குன்னு சமைச்சு முடிச்ச பிறகு கிச்சனை கிளீன் பண்றது ஒரு வேலையா..? இனிமே அதையும் நாங்களே பண்ணிக்கறோம்..” மங்கை முகத்தை திருப்பிக் கொள்ள..
“சரி அத்தை இனிமே நீங்களே கிளீன் பண்ணிடுங்க..!” என்றாள் சந்தான லஷ்மி..
இதை எதிர்பார்க்காத மங்கையும் புவனாவும் ஒருவரை ஒருவர் அதிர்ச்சியோடு பார்த்துக் கொண்டார்கள்.
“ஏன்க்கா இப்படி வெடுக் வெடுக்குன்னு பேசறீங்க.. அத்தை இப்ப என்ன தப்பா சொல்லிட்டாங்க..! காலையில அஞ்சு மணியிலிருந்து மாங்கு மாங்குன்னு வேலை செஞ்சுட்டு இருக்கோம்.. நீங்க பொறுமையா ஆடி அசைஞ்சு எட்டு மணிக்கு எழுந்து வர்றீங்க.. ஏன்.. இது உங்க வீடு இல்லையா..? இல்ல இந்த வீட்ல நாங்க மட்டுமே வேலை செய்யணும்னு எங்க தலையில மட்டும் எழுதி வச்சிருக்குதா..?”
“யார் செய்ய சொன்னா..? நீயும் பேசாம எட்டு மணிக்கு எழுந்து வா..! உன்னை யாரும் கேள்வி கேட்க போறதில்ல.. முக்கியமா நான் எதுவும் சொல்ல மாட்டேன்..” லட்சுமி சொல்ல.. முகம் கருத்து நின்றிருந்தாள் புவனா.
“முடியாதுல..! ஏன்னா உன் புருஷன் மார்னிங் ஷிப்ட் கிளம்பனும்.. உன் பிள்ளைகளை ஸ்கூல் பஸ் வர்றதுக்குள்ள டிபன் ரெடி பண்ணி தயார் பண்ணனும்.. உனக்கு அவசியம் இருக்கு.. அதனால நீ கிச்சன்ல நிக்கற.. மாமாவோட உடம்பு கண்டிஷனுக்கு அவருக்கு காலையில் எட்டு மணிக்கெல்லாம் ப்ரேக்பாஸ்ட் கொடுத்தாகணும்.. அதனால அத்தை சமைக்கறாங்க.. எனக்கு அப்படி எந்த அவசியமும் இல்லையே..! நான் எதுக்கு அவசரகதியா அவ்வளவு காலையில் எழுந்து வந்து கிச்சன்ல நிக்கணும்..”
“என்னக்கா.. நீங்க வேற நாங்க வேறன்னு தனியா பிரிச்சு இப்படி சுயநலமா பேசறீங்க.. ஏன்.. நாங்க உங்களுக்கும் சேர்த்துதானே சமைக்கறோம்..” புவனாவின் முகத்தில் கோபம் தெரிந்தது.
“அதைத்தான் சொல்றேன்.. உங்களோட, எங்களுக்கும் சேர்த்து சமைக்கறீங்க.. அவ்வளவுதான்.. உங்களுக்கு கஷ்டமா இருந்தா.. இனிமே எங்களை விட்டுட்டு உங்களுக்கு மட்டும் சமைச்சுக்கோங்க.. நாங்க வெளிய கூட சாப்பிட்டுக்குவோம்.. எந்த பிரச்சினையும் இல்லை.. அப்புறம் புவனா.. எதுவானாலும் என் முகத்துக்கு நேரா பேசு.. இந்த பின்னாடி பேசுற வேலையெல்லாம் வேண்டாம்..
நீங்க அத்தை..? தினமும் அந்த ஒரு வார்த்தையை சொல்லி என்னை அசிங்கப்படுத்தலைன்னா உங்களுக்கு தூக்கமே வராதுல்ல..!”
“இப்ப நான் என்ன தப்பா சொல்லிட்டேன்..! பெரியவங்கன்னு மரியாதை இல்லாம இப்படி எடுத்தெறிஞ்சு பேசினா கோவத்துல ஏதாவது சொல்றதுதான்..! அதையெல்லாம் பெருசு படுத்தினா நான் என்ன செய்யறது..!”
“கோவத்துல தப்பை சுட்டி காட்டலாம் ஆனா அடுத்தவங்களோட இயலாமையை குத்திக்காட்ட கூடாது.. நீங்க என்னை அவமானப்படுத்தல.. உங்க மகனை அசிங்கப்படுத்தறீங்க..!” வலி மிகுந்த வார்த்தைகளை கோபமாக வீசிவிட்டு அங்கிருந்து நகர்ந்தாள் சந்தான லஷ்மி..
“ஆமா உண்மைய சொன்னா இவளுக்கு பொங்கிட்டு வந்துரும்..! பேருதான் சந்தான லஷ்மி.. ஆனா..!”
“சும்மா இருங்க அத்தை.. எங்கேயாவது மூலையில் நின்னு ஓட்டு கேட்டுட்டு இருப்பாங்க.. நீங்க வேலைய பாருங்க..!” கிசுகிசுப்பான குரலில் சொல்லிவிட்டு மிக்சியை ஆன் செய்தாள் புவனா.
தொடரும்.
error: Content is protected !!
அருமையான தொடக்கம்… இந்த மாமியாருக்கு மகன்கள் மனைவிய விட்டுக் கொடுக்காம இருந்துட்டா இப்படி காண்டாகிடும்… அந்த அத்தைக்கு பின்னாடி ஒரு தொத்த ஒத்து ஊதிட்டு வேற இருக்கு…நம்ம லக்ஷ்மி அழுதுட்டு நிக்காம திருப்பி அடிச்சுச்சு பாருங்க அதான் ஹைலைட்…🔥🔥🔥
என்ன கனவு கன்டிருப்பா இந்த லஷ்மி, பத்து ஆண்டுகள் ஆகியும் பிள்ளை இல்லாமல் ஏங்கும் தம்பதிகள், ஆனாலும் இவ்வளவு அன்னோன்யமாக தானே இருக்காங்க,
கூட்டு குடும்பத்துல இது மாதிரி ஏச்சுக்களும், பேச்சுக்களும் கேட்க தான் வேண்டி இருக்கு
ஆரம்பமே அமர்க்களம்
வாழ்த்துக்கள் மா
அருமையான ஆரம்பம் பொறுத்து இருந்து பார்ப்போம் யார் யார் என்னென்ன பண்ண போறாங்க ன்னு ❤️
சூப்பர்ப் ஸ்டார்ட்டிங் writer Ji 😍😍
பெண்களுக்கு பெண்களே தா எதிரி அவளோட இயலாமை யை வச்சி பேசறாங்க. சந்தான லக்ஷ்மி ஆன் த ஸ்பாட் பதிலடி அருமை .🔥🔥🔥
மகன் மருமகளை தாங்கினா மாமியாருக்கு பிடிக்கறது இல்ல
❤️Super ♥️🧡💚Super❤️🩵💛Super💙🧡💜❤️Super ♥️🧡💚Super❤️🩵💛Super💙🧡💜❤️Super ♥️🧡💚Super❤️🩵💛Super💙🧡💜❤️Super ♥️🧡💚Super❤️🩵💛Super💙🧡💜❤️Super ♥️🧡💚Super❤️🩵💛Super💙🧡💜❤️Super ♥️🧡💚Super❤️🩵💛Super💙🧡💜❤️Super ♥️🧡💚Super❤️🩵💛Super💙🧡💜❤️Super ♥️🧡💚Super❤️🩵💛Super💙🧡💜❤️Super ♥️🧡💚Super❤️🩵💛Super💙🧡💜❤️Super ♥️🧡💚Super❤️🩵💛Super💙🧡💜❤️Super ♥️🧡💚Super❤️🩵💛Super💙🧡💜❤️Super ♥️🧡💚Super❤️🩵💛Super💙🧡💜❤️Super ♥️🧡💚Super❤️🩵💛Super💙🧡💜❤️Super ♥️🧡💚Super❤️🩵💛Super💙🧡💜❤️Super ♥️🧡💚Super❤️🩵💛Super💙🧡💜❤️Super ♥️🧡💚Super❤️🩵💛Super💙🧡💜❤️Super ♥️🧡💚Super❤️🩵💛Super💙🧡💜❤️Super ♥️🧡💚Super❤️🩵💛Super💙🧡💜❤️Super ♥️🧡💚Super❤️🩵💛Super💙🧡💜❤️Super ♥️🧡💚Super❤️🩵💛Super💙🧡💜❤️Super ♥️🧡💚Super❤️🩵💛Super💙🧡💜❤️Super ♥️🧡💚Super❤️🩵💛Super💙🧡💜❤️Super ♥️🧡💚Super❤️🩵💛Super💙🧡💜❤️Super ♥️🧡💚Super❤️🩵💛Super💙🧡💜❤️Super ♥️🧡💚Super❤️🩵💛Super💙🧡💜❤️Super ♥️🧡💚Super❤️🩵💛Super💙🧡💜❤️Super ♥️🧡💚Super❤️🩵💛Super💙🧡💜❤️Super ♥️🧡💚Super❤️🩵💛Super💙🧡💜❤️Super ♥️🧡💚Super❤️🩵💛Super💙🧡💜❤️Super ♥️🧡💚Super❤️🩵💛Super💙🧡💜❤️Super ♥️🧡💚Super❤️🩵💛Super💙🧡💜❤️Super ♥️🧡💚Super❤️🩵💛Super💙🧡💜❤️Super ♥️🧡💚Super❤️🩵💛Super💙🧡💜❤️Super ♥️🧡💚Super❤️🩵💛Super💙🧡💜❤️Super ♥️🧡💚Super❤️🩵💛Super💙🧡💜❤️Super ♥️🧡💚Super❤️🩵💛Super💙🧡💜❤️Super ♥️🧡💚Super❤️🩵💛Super💙🧡💜❤️Super ♥️🧡💚Super❤️🩵💛Super💙🧡💜❤️Super ♥️🧡💚Super❤️🩵💛Super💙🧡💜❤️Super ♥️🧡💚Super❤️🩵💛Super💙🧡💜❤️Super ♥️🧡💚Super❤️🩵💛Super💙🧡💜❤️Super ♥️🧡💚Super❤️🩵💛Super💙🧡💜❤️Super ♥️🧡💚Super❤️🩵💛Super💙🧡💜❤️Super ♥️🧡💚Super❤️🩵💛Super💙🧡💜❤️Super ♥️🧡💚Super❤️🩵💛Super💙🧡💜❤️Super ♥️🧡💚Super❤️🩵💛Super💙🧡💜❤️Super ♥️🧡💚Super❤️🩵💛Super💙🧡💜❤️Super ♥️🧡💚Super❤️🩵💛Super💙🧡💜❤️Super ♥️🧡💚Super❤️🩵💛Super💙🧡💜❤️Super ♥️🧡💚Super❤️🩵💛Super💙🧡💜❤️Super ♥️🧡💚Super❤️🩵💛Super💙🧡💜❤️Super ♥️🧡💚Super❤️🩵💛Super💙🧡💜❤️Super ♥️🧡💚Super❤️🩵💛Super💙🧡💜❤️Super ♥️🧡💚Super❤️🩵💛Super💙🧡💜❤️Super ♥️🧡💚Super❤️🩵💛Super💙🧡💜❤️Super ♥️🧡💚Super❤️🩵💛Super💙🧡💜❤️Super ♥️🧡💚Super❤️🩵💛Super💙🧡💜❤️Super ♥️🧡💚Super❤️🩵💛Super💙🧡💜❤️Super ♥️🧡💚Super❤️🩵💛Super💙🧡💜❤️Super ♥️🧡💚Super❤️🩵💛Super💙🧡💜❤️Super ♥️🧡💚Super❤️🩵💛Super💙🧡💜❤️Super ♥️🧡💚Super❤️🩵💛Super💙🧡💜❤️Super ♥️🧡💚Super❤️🩵💛Super💙🧡💜❤️Super ♥️🧡💚Super❤️🩵💛Super💙🧡💜❤️Super ♥️🧡💚Super❤️🩵💛Super💙🧡💜❤️Super ♥️🧡💚Super❤️🩵💛Super💙🧡💜❤️Super ♥️🧡💚Super❤️🩵💛Super💙🧡💜❤️Super ♥️🧡💚Super❤️🩵💛Super💙🧡💜❤️Super ♥️🧡💚Super❤️🩵💛Super💙🧡💜❤️Super ♥️🧡💚Super❤️🩵💛Super💙🧡💜❤️Super ♥️🧡💚Super❤️🩵💛Super💙🧡💜❤️Super ♥️🧡💚Super❤️🩵💛Super💙🧡💜❤️Super ♥️🧡💚Super❤️🩵💛Super💙🧡💜❤️Super ♥️🧡💚Super❤️🩵💛Super💙🧡💜❤️Super ♥️🧡💚Super❤️🩵💛Super💙🧡💜❤️Super ♥️🧡💚Super❤️🩵💛Super💙🧡💜❤️Super ♥️🧡💚Super❤️🩵💛Super💙🧡💜❤️Super ♥️🧡💚Super❤️🩵💛Super💙🧡💜❤️Super ♥️🧡💚Super❤️🩵💛Super💙🧡💜❤️Super ♥️🧡💚Super❤️🩵💛Super💙🧡💜❤️Super ♥️🧡💚Super❤️🩵💛Super💙🧡💜❤️Super ♥️🧡💚Super❤️🩵💛Super💙🧡💜❤️Super ♥️🧡💚Super❤️🩵💛Super💙🧡💜❤️Super ♥️🧡💚Super❤️🩵💛Super💙🧡💜❤️Super ♥️🧡💚Super❤️🩵💛Super💙🧡💜❤️Super ♥️🧡💚Super❤️🩵💛Super💙🧡💜❤️Super ♥️🧡💚Super❤️🩵💛Super💙🧡💜❤️Super ♥️🧡💚Super❤️🩵💛Super💙🧡💜❤️Super ♥️🧡💚Super❤️🩵💛Super💙🧡💜❤️Super ♥️🧡💚Super❤️🩵💛Super💙🧡💜❤️Super ♥️🧡💚Super❤️🩵💛Super💙🧡💜❤️Super ♥️🧡💚Super❤️🩵💛Super💙🧡💜❤️Super ♥️🧡💚Super❤️🩵💛Super💙🧡💜❤️Super ♥️🧡💚Super❤️🩵💛Super💙🧡💜❤️Super ♥️🧡💚Super❤️🩵💛Super💙🧡💜❤️Super ♥️🧡💚Super❤️🩵💛Super💙🧡💜❤️Super ♥️🧡💚Super❤️🩵💛Super💙🧡💜❤️Super ♥️🧡💚Super❤️🩵💛Super💙🧡💜❤️Super ♥️🧡💚Super❤️🩵💛Super💙🧡💜❤️Super ♥️🧡💚Super❤️🩵💛Super💙🧡💜❤️Super ♥️🧡💚Super❤️🩵💛Super💙🧡💜❤️Super ♥️🧡💚Super❤️🩵💛Super💙🧡💜❤️Super ♥️🧡💚Super❤️🩵💛Super💙🧡💜❤️Super ♥️🧡💚Super❤️🩵💛Super💙🧡💜❤️Super ♥️🧡💚Super❤️🩵💛Super💙🧡💜❤️Super ♥️🧡💚Super❤️🩵💛Super💙🧡💜❤️Super ♥️🧡💚Super❤️🩵💛Super💙🧡💜❤️Super ♥️🧡💚Super❤️🩵💛Super💙🧡💜❤️Super ♥️🧡💚Super❤️🩵💛Super💙🧡💜❤️Super ♥️🧡💚Super❤️🩵💛Super💙🧡💜❤️Super ♥️🧡💚Super❤️🩵💛Super💙🧡💜❤️Super ♥️🧡💚Super❤️🩵💛Super💙🧡💜❤️Super ♥️🧡💚Super❤️🩵💛Super💙🧡💜
Super super super super nice starting ❤️❤️❤️❤️❤️
ரொம்ப சென்சிடிவான கதை காலம்னு தோணுது.
லட்சுமி ரொம்ப போல்டா எதிர்த்து பேசுறா அப்படி இல்லாட்டாலும் இந்த மாதிரி ஆட்கள் எல்லாம் சமாளிக்க முடியாது. என்னதான் அவ அப்படி பேசிட்டு போனாலும் அவ மனசு எவ்வளவு வலிக்கும். வறண்ட நிலம் இந்த வார்த்தை💔💔💔💔
Dream la start aagiruku
Appadi yenna aagum🤔🤔🤔🤔🤔
Ippadi moonji nera ah pesana
Mariyadhai illama ah pesaradha ah
Aana ivanga polambal ah nirutha mattanga ah
Awesome start
Sis ❤️❤️❤️❤️❤️