Skip to content
Post Views: 1,395
அத்தியாயம் 14
இது தான் நான் சொல்ல வந்தது என்பதை போல சொல்லி முடித்து விஷால் அங்கிருந்த பத்து பேரின் முகத்தையும் பார்க்க, ஒவ்வொருவரும் ஒவ்வொரு யோசனையில் இருந்தனர்.
Advertisement
மாலை நேரம் மீட்டிங் என்று கூறி அந்த தனி அறையில் பத்து பேருடன் அமர்ந்திருந்த விஷால் அடுத்த ப்ராஜெக்ட் பற்றிய விஷயங்களை சொல்லி இருந்தான்.
“இப்ப சொல்லுங்க.. யார் எல்லாம் ஜாயின் ஆகுறீங்க?” என்ற விஷால் கேள்விக்கு, தயங்கி வேண்டுமா வேண்டாமா என யோசித்து ஒருவர் முகத்தை மற்றவர் பார்த்தபடி அமர்ந்திருக்க, ஒரு கை மட்டும் மேல் நோக்கி வந்தது கேள்வி கேட்டு முடித்தவுடன்.
Advertisement
Advertisement
“ஆராத்யா!” விஷால் கேள்வியாய் பார்க்க,
“எனக்கு ஓகே சார்!” என்றாள் நிமிர்ந்து.
Advertisement
“ஏய்! என்ன டி உலர்ற? லூசா நீ?” அருகிருந்து கார்த்திகா அவள் காது கடிக்க,
“ஹேய்! நீங்க எல்லாம் பேமிலில அம்மா, அப்பா, ஹஸ்பண்ட்னு பெர்மிஸ்ஸன் கேட்கணும்.. எனக்கென்ன?” என்று சாதாரணமாய் ஆராத்யா சொல்லிவிட, பதில் கூற முடியாமல் முறைத்தாள் தோழி.
“ஓகே! உங்க சிடுவேஷன் புரியுது.. சோ ஒரு நாள் உங்களுக்கான டைம் எடுத்துக்கோங்க!” என்று விஷால் பேசிக் கொண்டிருக்க, அந்த மீட்டிங் அறை கதவை திறந்து கொண்டு உள்ளே வந்தான் ரகுராம்.
“என்ன விஷால் பேசியாச்சா? எல்லாம் ஓகேவா?” என்று கேட்டபடி வந்து அமர்ந்தான்.
“பேசிட்டேன் சார்! நாளைக்கு சொல்றேன்னு சொல்லிருக்காங்க!” என்று விஷால் கூற,
“ஓகே கைஸ்! கம்பல்ஷன் இல்ல.. இங்க இருக்குற எல்லாரும் எலிஜிபிள்னு செலக்ட் பண்ணினவங்க தான்.. சோ இங்க அஞ்சு பேர் உங்களுக்குள்ள கூட பேசி முடிவு பண்ணி சொல்லுங்க.. பட் நல்ல சான்ஸ் மிஸ் பண்ண வேண்டாம்.. மூணு மாசம் ஃபாரினானு யோசிக்க வேண்டாம்.. பெஸ்ட் ஆப்பர்சுனிட்டி.. ஒர்க் சக்ஸஸ் பண்ணினா ப்ரோமோஸன் கூடவே அவங்க கம்பெனில ஒர்க்.. சோ உங்களுக்கு ரொம்பவே ஒரு ஹை பொசிஷன் போற வாய்ப்பு தான் இது..” என்ற ரகு,
“யாராச்சும் இப்ப வில்லிங்னு சொன்னாங்களா?” என்று அங்கிருந்த ஃபைலை புரட்டியபடி கேட்க,
“யாஹ் சார்! ஆராத்யா!” என்று விஷால் சொல்லவும் சட்டென நிமிர்ந்து பார்த்தவன் முகத்தில் அப்பட்டமான கண்டனம். அதை ஆராத்யாவும் கவனித்து கண் சுருக்கி புரியாமல் பார்க்க,
“ஹே பாரு பாரு! சந்திரமுகன பாரு!” வேகமாய் நண்பர்களுக்கு கார்த்திகா சிக்னல் கொடுக்க, நொடியில் தன் முகத்தை மாற்றிக் கொண்டவன்,
“ஓகே! நாளைக்கு செலக்ட் பண்ணிட்டு என்கிட்ட லிஸ்ட் குடுங்க.. லிஸ்ட் வந்த பின்னாடி டீடெயிலா பேசலாம்!” என்று சொல்லி கிளம்புமாறு சைகை செய்ய, அனைவரும் எழுந்து கொண்டனர்.
“மிஸ் ஆராத்யா! நீங்க வெளில வெயிட் பண்ணுங்க!” என்ற ரகு விஷாடம் பேச தொடங்க,
“என்னவாம் சார்க்கு?” என்றாள் கார்த்திகா ஆராவிடம் தனியே.
“இல்ல! சார்கிட்ட ஹாஸ்பிடல் பில் கேட்டிருந்தேன்.. அதுக்காகவா இருக்கும்.. நீங்க கிளம்புங்க.. நான் அதை குடுத்துட்டு வர்றேன்!” என்றாள்.
“மெடிக்கல் லீவ், மெடிக்கல் எக்ஸ்பென்ஸ்னு எவ்வளவு இருக்கு ஆபீஸ்ல? அதை ஏன் டி கேட்ட?” என்ற கார்த்திகா கேள்விக்கு,
“ஆமா! அதுக்கு கூட பில் வேணுமே? நேத்து நீயாவது பில் வாங்கி வச்சிருக்கலாம்.. அவர்கிட்ட கேட்கவே ஒரு மாதிரி இருந்துச்சு.. ஆனா காசு விஷயம்.. அதனால தான் கேட்டுட்டேன்.. இனி அவர் பில் குடுத்தா அதை விஷால் சார் மூலமா ப்ரோசீட் பண்ணலாம்.. எவ்வளவு வந்துச்சோ!” என்று புலம்பி,
“நான் பாத்துக்குறேன் நீ கிளம்பு!” என்றுவிட்டாள்.
அனைவரும் கிளம்பி இருக்க, அடுத்ததாய் வந்த விஷால் கூட, “சார் ஒரு கால்ல இருக்காங்க.. இப்ப வந்திடுவாங்க..” என்று கூறி ஆராத்யா உடன் நின்றான்.
வெளியில் வந்த ரகுவும் விஷாலை கேள்வியாய் பார்க்க, “சார்! ஆராத்யாவை வெயிட் பண்ண சொன்னிங்க..” என்று கூற,
“ஆனா நான் உங்களை வெயிட் பண்ண சொல்லலையே! நீங்க கிளம்புங்க!” என்றதும் என்னவாய் இருக்கும் என்று குழப்பத்தோடு தலையாட்டி சென்றான் விஷால்.
தன் அறைக்கு சென்று ஐந்து நிமிடத்தில் வந்த ரகு “ஓகே! போலாம்!” என்று ஆராத்யாவிடம் சொல்லிவிட்டு முன்னே நடக்க,
“சார்!” என்று புரியாமல் அழைத்து அங்கேயே நின்றாள் ஆராத்யா.
“வாங்க! எப்படியும் பஸ்ல தானே போனும்? அங்க தர்ஷி வெயிட் பண்ணி நின்னு என்னை புடிச்சி கத்துவா.. அதுக்கு உங்களை கூட்டிட்டு போனா நான் சேஃப்” என்று திரும்பாமலே சொல்லி செல்ல, தர்ஷினியை நினைத்து ஒரு புன்னகை வர, பின்னே சென்றாள் அவளும்.
“கணக்கு பார்த்திங்களா சார்?” ஆராத்யா கார் ஓட்டிக் கொண்டிருந்தவனைப் பார்த்துக் கேட்க,
“என்ன கணக்கு?” என்று திரும்பி அவள் முகம் பார்த்தவன் சுத்தமாய் மறந்து போயிருந்தான்.
“அதான்.. ஹாஸ்பிடல் பில்..” என்று இழுக்க,
“அதை விடமாட்டேன்னு இருக்கீங்களா என்ன?” என்று முறைத்தும் பார்த்தும் பார்க்காமலுமாய் கூறியவன்,
“ஹாஸ்பிடல் அலவன்ஸ் உண்டு தானே? பார்த்துக்கறேன்!” என்று முடித்துக் கொண்டான் இனி பேசாதே அதை எனும் விதமாய்.
“என்ன ஃபாரின் கிளம்பியாச்சு? பிரச்சனைல இருந்து தப்பிக்க வழியா?” என்றான் சாதாரணம் போல அந்த பேச்சை மாற்றிடவும் இதை தெரிந்து கொள்ளவும்.
ஆனாலும் அந்த குத்தல் புரியாமல் இல்லை ஆராத்யாவிற்கு.
“ஓகே! உங்க இஷ்டம்!” என்றவன்,
“ஆனா இது தெரிஞ்ச இடம்.. அது தெரியாத இடம்.. எங்க போனாலும் நமக்கு பின்ன நம்மளை தள்ள நாலு பேர் கூடவே இருப்பாங்க.. அதை மறக்க வேண்டாம்.. இங்க உங்களுக்குன்னு நிறைய பிரண்ட்ஸ் இருகாங்க.. நான் ஆபீஸ்ல மட்டும் சொல்லல.. அவங்களையும் கொஞ்சம் நியாபகம் வச்சுக்கோங்க.. சொந்தம் இல்லைனு கூட இருக்கவங்களை விட்டுட கூடாது.. மத்தபடி உங்களுக்கான சேல்லேஞ்சா இதை எடுத்து நீங்க கண்டின்யூ பண்ணினா.. பெஸ்ட் ஒப் லக்!” என்றவன் மனதில் அவளிடம் எப்படி ஆரம்பிப்பது என்ற எண்ணம் தான் ஓடிக் கொண்டு இருந்தது.
அலுவலகம் சார்ந்த விஷயங்களை எளிதாய் பரிமாறிக் கொள்ள முடிந்த அளவுக்கு தன் மனதில் இருப்பதை அப்படி சொல்லிவிட முடியவில்லை.
ரகுவின் பேச்சைக் கேட்ட ஆராத்யாவிற்கு சிறு குழப்பம் உண்டாக, கூடவே அவனின் தன்னைப் பற்றிய சரியான கண்டுபிடிப்பும் அவளை வியப்படைய வைக்க, அவன் பேசும் பொழுது பார்க்க ஆரம்பித்தவள் அவன் பேசி முடித்து சிந்தனையாய் சாலையில் கவனம் இருந்த போதும் அவனை மட்டுமே பார்த்து அமர்ந்திருக்க, யோசனையோடு அவள்புறம் திரும்பியவன் அவள் பார்வையில் மீண்டு தடம் புரண்டான்.
என்னவென அவனும் கேட்கவில்லை அவளும் பதில் சொல்லவில்லை.. அமைதியாய் அவரவர் சிந்தனைக்குள் திரும்பிக் கொண்டனர்.
தன்னை தேடி அலுவலகம் வந்தவனுக்கு வீடு வர எவ்வளவு நேரம் ஆகும்? அப்படி வருவதற்குள் வெளிநாடு சென்றுவிட்டாள் என்ன என்றுதான் இந்த ப்ராஜெக்ட்டிற்கு அவள் சம்மதம் உடனே சொல்லி இருக்க, அதை சரியாய் கணித்து அவளிடம் ரகுராம் உரையாடிய விதத்தில் ஒருவித உணர்வு மனதுள் அலைமோத அவள் அமர்ந்திருக்க, அந்த மோன நிலையை கலைப்பதை போல ரகுவே பேசினான்.
“கை சரியாகுற வரை ஸ்கூட்டி எடுத்துக்க வேண்டாம்.. கார் சொல்லி இருக்கு.. டெய்லி பிக்கப் டிராப்க்கு வந்திடும்!” என்ற ரகுவை எதிர்த்து ஆராத்யா பேச வர,
“இதை நான் பண்ணல.. தர்ஷிகிட்ட பேசிக்கோங்க!” என்றவன் வீட்டின் முன் வந்து நின்றுவிட, அதற்குமேல் அவனிடம் பேச முடியவில்லை.
“தர்ஷ்! நன்றி கடனுக்கும் ஒரு அளவு இருக்கு.. இவ்வளவு பாரத்தை நான் எப்படி சுமப்பேன்!” ரகுவிற்கு கேட்கும் படியே முணுமுணுத்து இறங்கியவள்,
“நான் தர்ஷ்கிட்ட பேசிக்குறேன் சார்.. கார் எல்லாம் வேண்டாம்..” என்றவளைப் பார்த்தவன் எதுவும் சொல்லாமலே உள்ளே இழுந்திருந்தான் காரை.
“இவர் என்ன நினைக்குறார்னு வேற தெரியல.. எல்லாம் இந்த தர்ஷ்னால!” என புலம்பி தன் வீட்டிற்கு சென்றாள்.
வீட்டிற்கு வந்த ரகுவும் இரவு தர்ஷினியை அழைத்து அவன் கூறியதை சொல்ல,
“என்னைய வச்சு உன் ஆட்டத்தை ஆடுற.. ஹ்ம்.. இப்பவாச்சும் பேச ஸ்டார்ட் பண்ணினியே அதுவரை சந்தோசம்..” என்று கூறி,
“ஆனாலும் இன்னைக்கு ஆராவை மீட் பண்ண கூடாது.. அப்புறம் கார் வேண்டாம்னு என்னையே பேசி கன்வின்ஸ் பண்ணிடுவா!” என்று சிரித்தாள் தர்ஷினியும்.
“ஏதாச்சும் ஐடியா குடு தர்ஷ்!” ரகு தர்ஷினியிடம் கேட்க,
“எது? எது?” என்றாள் வேகமாய் தர்ஷினி.
“உன்கிட்ட கேட்க கூடாதுன்னு தான் நினைச்சேன்.. ஆனா என்னால ஆராகிட்ட பெர்சனால பேச வாய்ப்பு கிடைக்கல.. அப்படி கிடைச்சாலும் என்னால முடியல!” என்றான் பாவம் போல.
“ப்ச்! அது சரி! ஆனா நான் அதை கேட்கல.. என்ன சொன்ன? தர்ஷ்ஷா? தர்ஷி தர்ஷ் ஆயிட்டேன்.. சரி தான் டா.. கல்யாணம் பண்ணி வச்சா புள்ளைக்கு பேர் வைக்கலாம் இல்லைனா இப்படி தான் என் பேரை நான் மாத்திட்டு இருக்கனும்!” என கிண்டல் செய்ய,
“ஏன்? தர்ஷி விட தர்ஷ் தான் நல்லா இருக்கு!” என்றான் அவனும்.
“அது சரி!” என்றவள்,”யோசிக்கலாம்.. இதே ஃபார்ம்ல இரு.. ஒரு ஐடியா கிடைக்கும்! ஆமா அந்த ஆள் என்ன ஆனான்? ஏதாச்சும் டீடெயில்ஸ் கிடைச்சுதா? ” என்று தர்ஷினி கேட்க,
“ம்ம்ம் சிக்கிட்டான்.. என் பிரண்ட் ஹரிஷ்கிட்ட தான் இருக்கான்!” என்றான் ரகுவும்.
“ஹரிஷா? போலிஸ்கிட்டயே போய்டியா?”
“ப்ச்! இல்ல.. அன்அஃபிஸியலா தான்.. ஹரிஷ்கிட்ட ஹெல்ப் கேட்டேன்.. அவனும் புடிச்சுட்டான்.. நாளைக்கு போய் பார்த்துக்குறேன் அவனை..” என்று கூற,
“பிரச்சனை என்னனு தான் கேட்கணும் ரகு.. பெரிய பிரச்சனை ஆகிட கூடாது.. ஆரா யாரு.. என்னனு எல்லாம் அவன் மூலமா தெரிஞ்சிகிட்டா நல்லது!” என்றாள் தர்ஷினி.
“அதுக்காக சும்மா விட சொல்றியா.. சுத்தி அவ்வளவு பேர் இருந்ததால அவனை நேத்து சும்மா விட்டேன்.. நாளைக்கு இருக்கு அவனுக்கு!” என்று கூறி தன் அறைக்கு சென்றுவிட்டான் ரகு.
அடுத்த நாள் காலையே தர்ஷினியை தேடி வந்துவிட்டாள் ஆராத்யா..
“ப்ளீஸ் தர்ஷ்.. எனக்கு கார் எல்லாம் வேண்டாம்.. இதெல்லாம் ஒரு காயமா?” என கையை காட்டியவள்,
“ப்ளீஸ்.. ஆல்ரெடி நீங்க செஞ்சதுக்கெல்லாம் என்னால என்ன திருப்பி தர முடியும்னு கில்ட் ஆகி இருக்கேன்.. நீங்க இன்னும் இன்னும் என்னை உடைய வைக்குறிங்க!” என்று கண்ணீர் முகமாய் ஆராத்யா கூற,
“ஹேய்! என்ன நீ இதுக்கெல்லாம் அழுதுட்டு.. சரி உனக்காக ஒரு ஆஃபர்.. அந்த கார் வேண்டாம்.. உன் எம்டி கார் ஓகேவா?” என்று கேட்க,
“அச்சோடா!” என்று தலையில் கைவைத்து ஆராத்யா அமர, அலுவலகம் கிளம்பி வந்தவன் அதை பார்த்து சிரித்தபடி கீழிறங்கினான் படிகளில்.
error: Content is protected !!