Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

பிரியமே பிரிவேது

பிரியமே பிரிவேது! 15

அத்தியாயம் 15

“தர்ஷ்! சொல்றேன்னு தப்பா நினைச்சுக்காதீங்க.. ராம் சார்க்கு சிரிக்க தெரியும்னே இப்ப கொஞ்ச நாளா தான் எனக்கு தெரியுது.. அதுவும் இங்க தான்.. நீங்க வந்த அப்புறம் தான்.. ஆபீஸ்ல எல்லாம் பார்த்தா வீரப்பன் தம்பினு கிண்டல் பண்ற அளவுக்கு இருப்பாங்க.. அந்த மீசை மட்டும் தான் மிஸ்ஸிங்!” என்று மிக தீவிரமாய் வேறு யாருக்கும் கேட்காத வண்ணம் மேலிருந்து சிரித்தபடி வந்து கொண்டிருந்த ரகுவை பார்த்துவிட்டு தர்ஷினியிடம் ஆராத்யா கூற,



Advertisement

“நான் வேணா மீசை வச்சுக்க சொல்லட்டுமா? நீ சொன்னனு சொன்னா கண்டிப்பா கேட்டுப்பான்..” கண்கள் சிரிக்க தர்ஷினி கூற, அது புரியாமல்,

“ஏன்ப்பா? நான் உங்க ஆபீஸ்ல வேலை பாக்குறது உங்களுக்கு புடிக்கலையா?” என்றாள் பாவம் போல முகம் வைத்து சிரிப்பை மறைத்து.

Advertisement

Advertisement

இடையில் மகேஸ்வரியும் வந்து காபி கொடுத்து ஆராத்யாவின் உடல்நிலையை விசாரித்துவிட்டு சமையல் நடப்பதாக கூறி உள்ளே சென்றிருக்க, கல்பனா கணவன் அலுவலகம் கிளம்பும் நேரம் என்பதால் அறையில் இருந்தாள்.

“என்னவாம்? கார் வேணாமாமா?” என்று வந்தான் அக்காவிடம் ரகு.

Advertisement

“தர்ஷ்! கார் அனுப்பினா அதுக்கு பெட்ரோல் போடணும்..  நான் காசு குடுத்தா நீங்க வாங்க மாட்டீங்க.. அப்படியே வாங்கினாலும் என்னால காருக்கு எல்லாம் பெட்ரோல் போட முடியாது.. பைக்குக்கே மாசம் ஆயிரம் செலவாகுது!” என்று கண்கள் உருட்டி கூறி,

“அதுக்காக நீங்க சொல்றிங்களேனு ஓசில போகவும் எனக்கு மனசு இல்ல.. காசுனால நான் நிறைய இழந்துட்டேன்.. உங்களையும் இழந்துட்டா?” என்றவளுக்கு மீண்டும் கண்ணீர் தேங்க,

“அடடா! சரி சரி! இப்பலாம் அடிக்கடி எமோஷனல் ஆகுற ஆரா! சரி அப்ப செகண்ட் சாய்ஸ் ஓகேவா?” என்றாள் தர்ஷினியும்.

“ம்ம்ஹும்ம்! அது இன்னும் மோசம்!” என்றாள் திருட்டு முழியுடன்.

“ஹேய்! நீ முழிக்குறதே சரி இல்ல.. ஏன் ஏன்? சொல்லு சொல்லு!” என்று தர்ஷினி ஆர்வம் ஆக..

“ப்ச்! தர்ஷ்…” என்று கூற வந்த ரகு சட்டென,

“தர்ஷி! வேணாம்னா விடு.. ஏன் அவங்களை டென்ஷன் பண்ற? இப்ப கை ஓகேன்னு தோணுதா? பைக் ஓட்டிடலாமா?” என்றான் நேராய் ஆராத்யாவிடம்.

“ஓஹ்! இங்க பாருங்க! மாத்திட்டேன்.. இப்ப சின்ன பேண்டேஜ் தான்.. ரெண்டு நாள்ல இதுவும் மாத்தி ஜஸ்ட் கிரீம் மட்டும் போட்டுப்பேன்.. எனக்கு கார் வேணாம்.. ப்ளீஸ் சார்!” என்றாள் முகத்தில் மட்டும் அத்தனை பாவங்களை கொண்டு வந்து.

இன்னும் எத்தனை நேரம் வேண்டுமானாலும் அந்த முகத்தை பார்த்து நின்றிருக்கலாம் என்று தோன்றினாலும் சில நொடிகளில் சுதாரித்து “ஓகே!” என்ற ரகு, விடு என்பதாய் சகோதரியிடம் கண் அசைத்தான். அதில் இறுதியாய் தர்ஷினி  கேட்க கேள்வியில் இருந்து தப்பித்து இருந்தாள் ஆராத்யா.

“ஷப்பா! உங்களை எல்லாம் மேய்ச்சு ஒரு ரூட்ல அனுப்புறதுக்குள்ள என் புள்ளையே வளந்துடும் போல!” என்று தர்ஷினி அங்கலாய்த்தவள்,

“நீ தான டா நைட்டு அப்படி சொன்ன? இப்ப இப்படி சொல்ற?” என்று தம்பி காதை கடிக்க,

“ரொம்ப அழுத்தி பேசினா உன்கிட்ட ஃபிரீயா பழகுற அவளோட கேரக்டர மாத்திக்க கூட வாய்ப்பு இருக்கு.. விடு பார்த்துக்கலாம்..” என்றான் அவனும் மெதுவாய்.

“ஓகே தர்ஷ்! நான் கிளம்புறேன்.. நாளன்னைக்கு சன்டே.. பிரியாணி ட்ரீட்.. என்னோடது” என்று வலது கை பெருவிரலால் தன்னை தானே காண்பித்து சொல்லி ஆராத்யா எழுந்து கொள்ள,

“இப்ப என்ன ட்ரீட்? கையை கட் பண்ணிக்கிட்டதுக்கா?” என்றான் ரகுவும் சட்டென.

ஏற்கனவே அந்த விஷயத்தில் அவன் கோபமாய் இருப்பதை ஆராத்யாவும் நேற்றைய அவன் பேச்சில் அறிந்திருக்க, இப்பொழுதும் இப்படி குத்தலாய் அவன் சொல்லவும்,

“சும்மா இரு டா!” என்ற தர்ஷினி,

“இன்னைக்கு மட்டுமாச்சும் இவனோட போ ஆரா!” என்றாள்.

“ம்ம்ஹும்.. நான் மாட்டேன்!” பிடிவாதமாய் சட்டென அவளும் மறுக்க,

“ஏன்? பயமா?” என்ற ரகுவின் குரலில் ஆராத்யா விழி விரிக்க,

“திட்டினானா நேத்து? அதான் போக மாட்டுறியா?” என்றாள் தர்ஷினி.

“அதெல்லாம் இல்ல.. ஆனா போ மாட்டேன்.. நான் கிளம்புறேன்..” என்ற ஆராத்யா,

“தர்ஷ்! அன்எக்ஸ்பெக்ட்டட்ல.. அதான் என் கை போச்சு.. அடுத்த முறை இப்படி எவனாச்சும் வரட்டும்.. கரெக்ட்டா குறி பார்த்து வர்றவன் கை காலை எல்லாம் கட் பண்ணிடுறேன்.. சொல்லிடுங்க!” என்று தர்ஷினியிடம் ரகுவுக்கான பதில் கூறி, ரகுவையும் ஒரு பார்வை அவள் பார்த்து செல்ல, அதில் வியந்து பார்த்த ரகு உதட்டில் சிறு புன்னகை.

“ம்ம்க்கும்ம்! அடுத்து அவ முன்னாடி போய் கல்யாணம் பண்ணிக்கனு நிக்க போறது நீ தான்.. பார்த்து..!” என்று தர்ஷினி கிண்டல் செய்ய, அதில் இன்னும் நன்றாய் சிரித்தான் ரகு.

“ஆனா கொஞ்சமே கொஞ்சமா ஏதோ ஒரு சேஞ்ச் ஆராகிட்ட.. சம்திங்.. சொல்ல தெரியல.. பட் இட்ஸ் வே ஃபார் பாசிட்டிவ் டு யூ!” என்று தம்பியின் தோள்களை தட்டிக் கொடுக்க, அதில் ரகுவுமே ஆம் என்பதாய் தலை சாய்த்து ஆரா சென்ற வழியைப் பார்த்து நின்றான்.

“சரி டிபன் எடுத்து வைக்கவா? டைம் ஆகிட்டே!” என்று கேட்கவும்,

“லேட் எல்லாம் இல்ல க்கா.. ஆபீஸ் போக லேட் ஆகும்.. முதல்ல ஸ்டேஷன் போகணும்!” என்ற ரகு டைனிங் டேபிள் நோக்கி வந்திருந்தான்.

“அந்த ராஸ்கலை பார்த்து நாலு குடுக்கணும்..” என்றான்.

“அப்ப ஆபீஸ்?”

“போனும்! கொஞ்சம் லேட் ஆகும்.. விஷால்கிட்ட பார்த்துக்க சொல்லி இருக்கேன்!” என்று சொல்லி அமர, கல்பனா, அகிலன், இருவரும் வந்தனர்.

“எங்க! ஆரா குரல் கேட்ட மாதிரி இருந்துச்சு..” என்று கல்பனா வர,

“இப்ப தான் கிளம்பினா..” என்று தர்ஷினி கூற,

“தர்ஷிக்கும் அந்த பொண்ணுக்கும் என்னவோ ரொம்ப புடிச்சி போச்சி.. ரெண்டு வருஷம் ஆக போகுதாம் இங்க வந்து.. நமக்கு தெரியாம போச்சு  பாரேன்!” என்று கல்பனாவிடம் கூறி வந்தார் மகேஸ்வரி.

“அது சரி! புடிக்க வேண்டியவங்களுக்கு புடிச்ச அப்புறம் தானே எல்லாம் வெளில வருது.. இல்ல நார்?” என்று கல்பனா கேட்க,

“அண்ணி!” என்று முறைத்த தம்பியை அகிலன் பார்த்து,

“அவனை ஏன் டி கூப்பிடுற?” என்றான் அகிலன்.

“நான் சொன்னேன்ல! அகிக்கு டேரெக்ட்டா சொன்னாலே புரியாதே! இந்த பாஷை எல்லாம் புரிய இன்னும் ஜென்மம் வேணும்!” என்ற தர்ஷினிக்கு,

“அதெப்படி என் முன்னாடி என் புருஷனை நீங்க சொல்லலாம்?” என கல்பனா சண்டைக்கு வர,

“என் அண்ணனை நான் சொல்லுவேன்.. உங்களுக்கென்ன?” என தர்ஷினி கேட்க,

“அதெல்லாம் சொல்ல கூடாது!” என்று தொடர,

“யே ச்சீ! நிறுத்துங்க.. காயலங்கடை மாதிரி எப்பப்பாரு லொடலொடனு..” என்றிருந்தான் அகிலன். அதில் தர்ஷினி சிரிக்க,

“லூசு லூசு! உங்களுக்காக தானே சண்டை போட்டேன்.. ஒரு க்லூ… எவ்வளோ அழகா தர்ஷி குடுத்தா? அதை கண்டுபிடிக்க முடியல.. வாய் மட்டும்… விஷயம் தெரியும் போது ஏன் என்கிட்ட முன்னாடியே சொல்லலனு வாங்க.. அப்ப இருக்கு!” என்ற கல்பனா,

“நீ வா தர்ஷி!” என்று தர்ஷினியோடு சேர்ந்து கொள்ள,

“அய்யய! பைத்தியமா இவ?” என்று கூறி கடைசி வரை எதுவும் தெரியாமேலே வங்கிக்கு கிளம்பி சென்றிருந்தான் அகிலன்.

***********

“வா ரகு!” என்று காவல் நிலையத்தின் உள்ளே வரவேற்ற ஹரிஷ் தொப்பியை கழற்றி டேபிளில் வைத்துவிட்டு, இலகுவாய் அப்பொழுது தான் அமர்ந்தான். ஹரிஷ் இன்ஸ்பெக்டர் ஆஃப் போலீஸ்..

“தேங்க்ஸ் ஹரிஷ்.. நான் அவனை பார்க்கலாமா?” என்று ரகு கேட்க,

“இவ்வளவு நேரமும் அவனை தான் கவனிச்சுட்டு இருந்தேன்.. என்னனு சொல்லுங்க சார் அடி தாங்க முடியலனு கத்துனான்.. நான் கேட்கவே இல்ல.. நீ போய் கேளு!” என்று ஹரிஷ் கூற,

“ம்ம்ஹ்ம்ம்! அவன்கிட்ட கேட்க எதுவும் இல்ல எனக்கு.. ஆனா இனி அவன் என் பக்கம் வர கூடாது..” என்றான் ரகு.

“சரி பார்த்துக்கலாம்.. அந்த பக்கம்!” என்று கைகாட்ட அந்த பக்கம் சென்றான் ரகுவும்.

ரத்தம் சொட்ட அந்த ஜெயில் அறையின் ஒரு ஓரமாய் அமர்ந்திருந்தான் பரமசிவம்.

உள்ளே நுழைந்த ரகுவை பார்த்ததும் தான் தான் ஏன் இங்கே அழைத்து வரப் பட்டோம் என்றே புரிய துவங்கியது பரமசிவத்திற்க்கு.

“யோவ்! உன் வேலையா இதெல்லாம்.. உன்னால தான் குட்டி என்கூட வர மாட்டேன்னு சொன்னா.. இப்ப போலீச விட்டு அடிக்க வச்சு.. என்ன மிரட்டுறியா?” வாயின் ஒரு பக்கம் ரத்தம் வடிய, நெத்தியில் அடிவாங்கிய தடத்துடன் பயந்து ஒடுங்கி  இருந்தவன், ரகுவைப் பார்த்ததும் கோபமாய் எழுந்து கேட்க,

“நல்லா தான் கவனிச்சுருக்கான்.. ஆனாலும் உன் திமிரு போகலையே!” பரமசிவத்தின் முகத்தை அங்கும் இங்குமாய் திருப்பிப் பார்த்து ரகு கேட்க,

“இங்க பாரு! இதுக்காக எல்லாம் குட்டிய…” என்றவன் முழுதாய் முடிக்கும் முன் மூக்கின் மேலேயே குத்தி இருந்தான் ரகு.

“ஆஹ்…” என்று அவன் அலற,

“எங்க மறுபடியும் அந்த வார்த்தையை சொல்லு..” என்று சொல்லி மீண்டும் அதே இடத்தில் குத்துவிட்டவன்,

“எங்க வந்து.. யார்கிட்ட… அந்த வார்த்தையே உன் வாய்ல இருந்து இனி வர கூடாது.. வந்துச்சு..” என்றவன் விரல் நீட்டி எச்சரிக்கும் நேரம், ஹரிஷ் உள்ளே வந்திருந்தான்.

“என்னை வேணுமாம் சாருக்கு?” என்று கேட்டு ரகு தோளில் கை ஊன்றி நிற்க,

“சார்! வலிக்குது சார்.. இதெல்லாம் கொஞ்சம்.. கூட நல்லால்ல.. அம்மா! அவ என் குட்டி சார்.. என் அக்கா மக…” என்று ஆரம்பிக்க,

“ஹரிஷ்!” என்று அழைத்து அவன் பேச்சை தடை செய்திருந்தான் ரகு.

“சொல்லு ரகு.. என்ன பண்ணனும்.. பார்ட்ஸ் பார்ட்ஸ்ஸா கழட்டிடலாம்” என்று ஹரிஷும் நிதானமாய் பார்த்து வைக்க, கிளி பிடித்து ஆட்டியது பரமசிவத்திற்கு.

“ஆராத்யாகிட்ட நான் சைன் வாங்கி தர்றேன் இவன் மேல கம்பளைண்ட் பண்ணனும்.. என்ன தண்டனை? பிடிக்காத பொண்ணை வற்புறுத்திரத்தி, பயமுறுத்தி, மிரட்டி…”

“யோவ்! சும்மா சொல்லிட்டே போகாத.. அவ என் அக்கா மக.. நானும் இல்லைனா அவ ஒரு அனாதை கழுத…” என்றவனை ஒரே அடியில் பற்களை கழட்டி இருந்தான் ரகு.

“ஏன் டா! அவன் தான் அடிக்குறான் இல்ல.. ஏன் வாண்டடா போய் வாய குடுக்குற.. உன் மூலமா தான் நான் இவன்கிட்டயே வாக்குமூலம் வாங்க வேண்டி இருக்கு..” என்று பரமசிவத்திடம் கூறிய ஹரிஷ்,

“அப்புறம் மச்சான்.. லவ்வெல்லாம் பண்ற போல.. வாழ்த்துக்கள்.. உன் ஆளுகிட்ட தான் வம்பு பன்றானா இவன்?” என்று கேட்டு வைக்க, கோபத்தில் முகம் சிவக்க நின்ற ரகுவின் முகத்தில் தான் நொடி நேரத்தில் என்னவொரு மாற்றம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!