Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

பிரியமே பிரிவேது

பிரியமே பிரிவேது! 17

அத்தியாயம் 17

“ஆராத்யா! சார் உன்னை கூப்பிட்டாங்க!” உடன் வேலை செய்யும் ஒருவன் வந்து சொல்லி செல்ல, அருகில் இருந்த கார்த்திகாவிற்கும் அது கேட்டது.



Advertisement

“மணி ஆறாக போகுது.. கிளம்புற நேரம் எதுக்கு உன்னை கூப்பிடுறார்.. இரு நானும் வர்றேன்!” கார்த்திகா சொல்ல,

“ப்ச்! நான் என்ன குழந்தையா? வெயிட் பண்ணு வர்றேன்!” என்று கூறி உள்ளே செல்ல ஆராத்யா எழுந்து கொள்ள,

Advertisement

Advertisement

“இங்க பாரு நான் சொன்னது நியாபகம் வச்சுக்கோ! சார் நல்ல டைப் தான் நான் இல்லனு சொலலல.. ஆனா எல்லாரும் எப்பவும் ஒரே மாதிரி இருக்க வேண்டிய அவசியம் இல்ல.. சோ நீ தான் கவனமா இருக்கனும்!” என்ற கார்த்திகாவிற்கு,

“இப்ப எதுக்கு டி இந்த லெஸன்? இங்க இருக்க எம்டி ரூம்க்கு போறதுக்கா?” என்று சிரித்தாள் ஆராத்யா.

Advertisement

“ம்ம்ஹும்ம்! அவங்க பேமிலி உன்கிட்ட நல்லா பேசுறாங்கன்னா அது வேற ஆரா! மே பீ இப்ப உன்னோட பாக்ரௌண்ட் தெரிஞ்சு அதை யாரும் மிஸ்யூஸ் பண்ண கூட வாய்ப்பிருக்கு.. நீ சொன்னது தான் நீ குழந்தை இல்ல.. சோ நம்ம எம்டியாவே இருந்தாலும் கொஞ்சம் கேர்ஃபுல்லா இருனு சொல்றேன்!” அத்தனை தீவிரமாய் கூறினாள் கார்த்திகா.

சுத்தமாய் அவள் கூறியதில் உடன்பாடில்லை ஆராத்யாவிற்கு.

“ஹே! என்ன பேசுற நீ? சார் நேத்து சாதாரணமா செஞ்சது கூட அந்த நேரத்துல உனக்கு அதிகப்படியா தெரிஞ்சிருக்கலாம்.. ரெண்டு வருஷமா ஒர்க் பண்றோம்.. என்ன டி நீ?”

ரகுவின் நேற்றைய தன் மீதான கவனிப்பை கார்த்திகா சொல்லியதை கேட்டு முதலில் திகைத்தவள் பின் அப்படி இருக்காது என்று விட்டுவிட, இப்பொழுது மீண்டும் கார்த்திகா நிஜமாய் தீவிர முகத்துடன் கூறவும் ரகுவை அப்படி நினைக்க முடியாமல் கூறினாள் ஆராத்யா.

“ப்ச்! பச்ச புள்ள தான் டி நீ! சரி! ஆனா கவனமா தான் இருக்கனும்.. சரி போ!” என்று அனுப்பிவிட, குழப்பதுடன் தான் ரகுவின் முன் வந்தாள் ஆராத்யா.

“வாங்க ஆராத்யா! ஆபீஸ்க்கு எப்படி வந்திங்க?” அவளைப் பார்க்காமல் ஃபைலில் கையெழுத்து இட்டபடி அவன் கேட்க,

“சார்?” என்றாள் எதற்கு கேட்கிறான் என்பதை போல.

“சொல்லுங்க!” அது புரிந்தாலும் ரகு விடாமல் கேட்க,

“என் ஸ்கூட்டில தான் சார்!” என்றாள்.

“ஓகே!” என்று ஃபைலை மூடி வைத்தவன் எழுந்து அங்கும் இங்குமாய் நடந்து தன்னை தானே சமன்படுத்திக் கொண்டிருந்தான் சில நொடிகள்.

“சார்! எனி ப்ரோப்லேம்?” ஆராத்யாவே கேட்டுவிட,

“ம்ம்ம்ம்!” என்று அவள் புறம் திரும்பியவன்,

“உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்.. அது… கொஞ்சம் அன்அபீஸியல் கூட.. அதான்!” என்று மீண்டும் திரும்பிவிட, கார்த்திகா கூறிய சொற்களின் நியாபகம் ஆராத்யாவிடம்.

“அன்அபீஸியல்?” என்று கேட்டு கேள்வியாய் அவள் பார்க்க,

“கொஞ்சம் வெளில போனும் வர்றிங்களா?” என்று கேட்டுவிட்டவனை அவள் இன்னும் குழப்பம், அதிர்ச்சி, கேள்வி என தாங்கி பார்த்து நிற்க,

‘இப்படிலாம் சந்தேகமா பார்க்காத ஆரா! இதனால தான் உன்கிட்ட பேசுற தைரியம் வரல..’ என்று நினைத்தவனுக்கு,

தான் சொல்லி அவள் தன்னை தவறாய் புரிந்து இவ்வளவு தானா நீ என்றோ, முகச்சுழிப்போ ஏன் தனக்கு எதிராய் அவள் முகம் மாறினாலே அதை தாங்க முடியும் என்று தோன்றவில்லை.

“உங்களுக்காக தான்.. வேணும்னா தர்ஷியையும் வர சொல்றேன்..” என்றான் அதற்கு மேல் அவள் பார்வையை தாங்க முடியாமல்.

“எங்க சார் போறோம்!” நேராய் கேட்டுவிட்டாள். அவனை கார்த்திகா கூறிய கோணத்தில் நினைக்கவும் முடியாமல், அவன் கேள்வியும் புரியாமல்.

“இங்க தான் பக்கத்துல..” என்றவன் ஸ்டேஷன் மற்றும் ஏரியா பெயரையும் சொல்ல,

“ஸ்டேஷனா? அங்க எதுக்கு சார்?” என்றாள் இன்னும் கண்களை விரித்து. என்னவோ என்ற எண்ணமும் பயமும் தானே தவிர்த்து சற்று முன் இருந்த குழப்பம் சுத்தமாய் இல்லை.

“நீங்க வாங்க! சொல்றேன்!” என்று கூற, இன்னும் அதே பார்வை.

“நேத்து இங்க வந்த அந்த ராஸ்கல் இப்ப அங்க தான் இருக்கான்..” என்றவன்,

“இனி அங்க போய் பேசிக்கலாம் ப்ளீஸ்!” என்க, அவன் சொல்லவும் நேற்று பார்த்த அதே பயந்த பார்வை அவளிடம்.

“எதையும் ஃபேஸ் பண்ணனும் ஆரா! வா பார்த்துக்கலாம்.. எப்பவும் ஓடி ஒளிஞ்சுட்டு இருக்க முடியாது!” என்று சொல்லி,

“வெளில வெயிட் பண்ணு வர்றேன்!” என்று கூறி,  அவள் செல்லவும் ஹரிஷிற்கு அழைத்தான்.

“என்ன டி போலாமா? எல்லாரும் கிளம்பிட்டாங்க.. ஆமா ஏன் இவ்வளவு நேரம்?” கார்த்திகா கைப்பையை கையில் எடுத்துக் கொண்டு கேட்க, அவள் கைகளை கெட்டியாய் பிடித்துக் கொண்டாள் ஆராத்யா,

சில்லிட்ட கைகளை உணர்ந்து “ஏய்! என்னாச்சு டி? ஏன் இப்படி குளிருது கை?” என அவள் நெற்றி, கன்னம் என கார்த்திகா கைவைத்துப் பார்க்க,

‘எதையும் ஃபேஸ் பண்ணனும் ஆரா! வா பார்த்துக்கலாம்.. எப்பவும் ஓடி ஒளிஞ்சுட்டு இருக்க முடியாது!’ என்ற ரகுவின் வார்த்தைகள் தான் அவளை சுற்றி வர,

“இல்ல இல்ல! ஐம் ஓகே! எனக்கு ஒன்னும் இல்ல..” என தண்ணீரை எடுத்து பருகியவள், அவன் சொல்படி நடக்க முடிவு செய்ய,

“என்னனு சொல்லு ஆரா! எனக்கு என்னவோனு பதறுது!” என்றாள் கார்த்திகா.

“ப்ச்! ஒன்னும் இல்ல கார்த்தி! நீ கிளம்பு! நேத்து பிரச்சனை பண்ண வந்தவன் போலீஸ் ஸ்டேஷன்ல இருக்கானாம்.. கம்பளைண்ட் பண்ண தான் சார் கூப்பிடுறாங்க போல!” கார்த்திகாவோடு அவளுக்கு அவளேவும் சொல்லிக் கொள்ள,

“புடிச்சாச்சா? நான் கூட விக்ரம் பிரேமை அவ்வளவு திட்டினேன்.. அவனை ஏன் தூரத்துனீங்க.. திரும்ப பிரச்சனை பண்ணினா என்ன பண்ணனு! இப்ப தான் நிம்மதியா இருக்கு!” என்று நெஞ்சில் கைவைத்தவள் நினைவு வந்தவளாய்,

“ஹே! பார்த்தியா பார்த்தியா! இதான்.. இதை தான் சொல்றேன்.. நேத்து விட்டவனை இன்னைக்கு ஏன் சார் புடிக்கணும்? சம்திங் ராங்.. உனக்கு புரியல?” என்றாள் கார்த்திகா உறுதியோடு.

“மூஞ்சி! அவர் ஆபீஸ்ல பிரச்சனை.. நாளபின்ன இது அவருக்கே எதாவது பிரச்சனையை குடுக்கும்னு நினச்சு கம்பளைண்ட் பண்ணிருப்பாங்க!” என்றாள் ஆராத்யா.

“அதுவும் சரி தான் ஆரா! ஆனாலும் எங்கேயோ இடிக்குது!” என்றாள் இனனும் நம்பாமல்.

“சரி கிளம்பு! உன் வீட்டுல தேடுவாங்க.. ஆல்ரெடி லேட்.. நான் சார் கூட போய் பார்த்துட்டு உனக்கு கால் பண்றேன்.  அப்புறம் உன் எண்ணத்தை மாத்திக்கோ.. இப்ப கூட சார் என்ன சொன்னாங்க தெரியுமா? நம்பிக்கை இல்லைனா அவங்க சிஸ்டரை வர சொல்றேன்னு சொன்னாங்க!” என்று பெருமையாய் கூற,

“அம்புட்டு நல்லவர்னு சொல்ற! ம்ம்ம் இருக்கட்டும் இருக்கட்டும்!” என்ற கார்த்திகா ஆயிரம் முறை பத்திரம் சொல்லி தான் விடைபெற்றாள்.

ஹரிஷிடம் பேசிவிட்டு வந்த ரகு அங்கே தனியாய் நின்று கொண்டிருந்த

ஆராத்யாவை பார்த்து ஒரு கணம் நின்றவன் “தர்ஷி இல்லைனா அண்ணியை வர சொல்லவா?” என்றான் அவள் பாதுகாப்பாய் உணர வேண்டுமே!

“சாரி சார்! நான் அப்படி மீன் பண்ணல.. ஆனாலும்…” என்றவளுக்கு அதை எப்படி விளக்கவென்று புரியவில்லை.

“இட்ஸ் ஓகே! ஜாக்கிரதையா இருக்குறது தான் இப்ப எல்லாம் அவசியம்..” என்றவன் தலை அசைத்து முன்னே நடக்க, ஆராத்யாவும் உடன் சென்றாள்.

“சாரி சார்! என்னால உங்களுக்கு நிறைய சிரமம்..” செல்லும் வழியில் அவள் சொல்ல,

“ஹ்ம்ம்!” என்றவனின் மனம் அவளுக்கு புரிய வாய்ப்பில்லை.

“என்னவோ சார்! இதெல்லாம் நான் எதுவுமே நினச்சு பார்க்காதது.. இப்ப கொஞ்ச நாளா… சரியா சொல்லணும்னா தர்ஷ் வந்த அப்புறம் நான் எவ்ளோ ஹாப்பியா இருக்கேன்னு எனக்கு மட்டும் தான் தெரியும்.. ஆனா அப்படி உன்னை விடுவேனானு கடவுளும் கூடவே ஒரு வேண்டாததை அனுப்பி இருக்கார்..” ஆராத்யா அவன் கேட்காமலே பேசிக் கொண்டு வர, அதை கேட்டுக் கொண்டும் தான் பேச வேண்டியதை மனதுள் நினைத்துக் கொண்டுமாய் வந்தான் ரகு.

“இதெல்லாம் விட எனக்காக உங்களை இப்படி சுத்த விடுறது ரொம்ப கஷ்டமா இருக்கு சார்.. நான் சும்மா பேச்சுக்கு எல்லாம் சொல்லல.. நிஜமாவே கஷ்டமா இருக்கு..” என்று கூற,

‘நீ இப்படி பேசுறது எனக்கு எப்படி இருக்குன்னு உனக்கு புரியலையே ஆரா!’ என நினைத்தவனுக்கு சொல்லிட தான் முடியவில்லை.

“இந்த பொறுக்கி ராஸ்கல் மட்டும் போய் தொலையட்டும்.. அதுக்கு அப்புறம் உங்களுக்கு எந்த இடைஞ்சலும் இருக்காது சார் என்னால.. ஹன்ட்ரேட் பெர்சென்ட் சூர்! முன்னாடி மாதிரி நான் ஆபீஸ் வர்றதும் தெரியாது போறதும் தெரியாது.. அப்படி இருந்துக்குவேன்..”

எதற்கும் எந்த பதிலும் இல்லை ரகுவிடம்.. இதற்கெல்லாம் பதில் கூறினால் இப்படி பேசி வருபவள் அடுத்து இவனிடம் பேச என்ன அலுவலகம் வரவே யோசிப்பாளோ என்று தான் ரகுவிற்கு தோன்றியது.

‘ஏன் டா உனக்கு உன் மேல கான்ஃபிடன்ட்டே இல்ல? ஒருவேளை அவ பாசிட்டிவ்வா எஸ் சொன்னா? அப்படி யோசியேன்..’ ரகு தனக்குள் நினைக்க,

‘அப்படி நினைக்குற அளவுக்கு நீ அவ மனசை ஒன்னும் நெருங்கலையே டா.. என்னனு பாசிட்டிவ் அன்ஸர் எதிர்பார்க்குற?’ மனமே அவனுக்கான கேள்வியையும் எடுத்து கொடுக்க, அவள் பேச்சு எல்லாம் இன்னும் அவனை பலமாய் தாக்கிக் கொண்டிருந்தது.

“சார்!” மீண்டும் அழைக்க, தன் எண்ணங்களில் இருந்து வெளி வந்தவன்,

“ம்ம்ம்!” என்றான் தெளிவில்லாமல்.

“எனக்காக ஒன்னே ஒன்னு மட்டும் பண்ணுங்க சார் ப்ளீஸ்!” என்று கெஞ்ச, காரை நிறுத்திவிட்டான் தன் மனதின் பாரம் தாங்கமாட்டாமல்.

“அவன்… அவனை எனக்கு தெரியும் தான்.. ஆனா.. ஆனா அவன் சொன்ன மாதிரி எல்லாம் எதுவுமே இல்ல.. அவன் ஒரு பொறுக்கி.. கேடு கெட்டவன்.. அவன் கண்ணுல பட கூடாதுன்னு தான் நான் திருச்சிலேர்ந்து….” என்று சொல்லிக் கொண்டு வந்தவள் சட்டென வார்த்தையை கவனித்து நிறுத்திவிட்டாள்.

“வேண்டாம் சார்.. அவன் என்ன சொன்னாலும் என்னை மட்டும் அவன்கிட்ட விட்றாதீங்க சார்.. நான் பொறந்து வளந்த வீடு ஊருனு எல்லாத்தையும் விட்டுட்டு வர காரணமே அவன் தான்.. ப்ளீஸ் சார்.. இதனால நிச்சயமா உங்களுக்கோ உங்க ஆபீஸ்க்கோ எந்த ப்ரோப்லேமும் வராது சார்.. அப்படி உங்களுக்கு சந்தேகமா இருந்தா இந்த வேலைய விட்டு கூட நின்னுடுறேன்.. ஆனா அவனோட மட்டும்…” என்றவளுக்கு பேச முடியாமல் தொண்டை அடைத்துவிட,

“ப்ச்! ஸ்டாப் இட் ஆரா!” என்று ஸ்டீரிங்கை குத்தியவன் இறங்கி வெளியே வந்து நின்றுவிட்டான் காரில் சாய்ந்தபடி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!