Skip to content
Post Views: 1,343
அத்தியாயம் 18
“ஸ்டாப் இட் ஆரா!” என்றவன் குரலில் இருந்த கோபமும் உரிமையும் ஆராத்யாவை சுட, சட்டென்ற நியாபகம்,
Advertisement
“எதையும் ஃபேஸ் பண்ணனும் ஆரா! வா பார்த்துக்கலாம்.. எப்பவும் ஓடி ஒளிஞ்சுட்டு இருக்க முடியாது!” அவன் தானே கூறினான்.. அதில் இருந்த கருத்து மட்டும் அப்பொழுது கண்களுக்கு புலப்பட்டிருக்க, இப்பொழுது அவனின் ஒருமை அழைப்போடு அவன் பேச்சின் மறுபாடும் புத்திக்கு உரைக்க, சிலையாய் உள்ளேயே அமர்ந்திருந்தாள்.
அவளின் அத்தனை பேச்சிற்கும் பதில் தன்னிடம் இருந்தும் எதையும் பேச முடியாத இடத்தில் தான் இருப்பதை சுத்தமாய் ரகுவால் ஏற்க முடியவில்லை.
Advertisement
Advertisement
அத்தனைக்கும் சிகரமாய் இறுதியில் அவள் அழுகையோடு அவனிடம் விட்டுவிடாதே என்ற வார்த்தை அவனை நிலைகுலைய வைத்திருக்க, பல நிமிடங்கள் கடந்தும் அவரவர் எண்ணங்களில் உள்ளேயும் வெளியேயுமாய் இருவரும்.
ரகுவின் அலைபேசியில் தர்ஷினி வர, அதில் கலைந்தவன், “சொல்லு தர்ஷி!” என்றான் ஏற்று.
Advertisement
“எங்க டா இருக்க? மணி ஏழு தாண்டி ஆகுது இன்னும் ஆராவை காணும்.. ஸ்ருதி நம்ம வீட்டுல தான் இருக்காங்க.. அவங்க தான் கேட்டாங்க.. கால் பண்ணினாலும் ஆரா எடுக்கலையாம்!” தர்ஷினி சொல்ல,
“ஹ்ம்!” என்றவன் காரில் ஏறிக் கொண்டு காரில் ஸ்பீக்கர் கனெக்ட் செய்தவன் ஆராத்யாவை பார்க்காமல் வண்டியை கிளப்பினான் தர்ஷினியிடம் பேசியபடி.
“இங்க என்னோட தான் இருக்காங்க.. நேத்து ப்ரோப்லேம்னு சொன்னேன் இல்ல.. அவனை போலீஸ் அரெஸ்ட் பண்ணிடுச்சி.. அதான் கம்பளைண்ட் குடுக்க போய்ட்டு இருக்கோம்!” பொதுவாய் கூற,
“நீ காலைல போக போறதா சொன்னியே.. போகலையா? ஆராவை ஏன் டா ஸ்டேஷன்க்கு எல்லாம் அழைச்சுட்டு போற? என்கிட்ட என்ன சொன்ன? அன்அஃபிஸியலா டீல் பண்ண போறதா தானே சொன்ன?” அங்கே ஸ்ருதிக்கு கேட்க கூடாது என்று மிக மெல்லிய குரலில் தர்ஷினி கேட்க, இங்கு காரில் மொத்தமாய் ஒலித்த தர்ஷினி குரலில் நன்றாய் கேட்ட ஆராத்யாவிற்கு, அதன் பொருளும் புரிய அதிர்ச்சிகள் கூடிக் கொண்டே செல்வதாய் தோன்றியது.
“க்கா! நாங்க ஸ்டேஷன் தான் போறோம்.. அவங்ககிட்ட சொல்லிடு.. நான் வந்து பேசுறேன்!” என்று கூறி வைத்துவிட்டான் ரகு.
ஆராத்யா எப்படி இதை புரிந்திருப்பாள் என்று தெரியவில்லை.. எப்படி தெரிந்தாலும் பரவாயில்லை என்று தோன்ற அவளிடம் பேச முயற்சிக்காமல் அமைதியாய் வந்தான்.
கூடவே நந்தா கூறியது போல ‘கொஞ்சமாவது தன்னை பற்றிய சிந்தனை அவளுள் எழட்டுமே’ என்ற எண்ணமும் இல்லாமல் இல்லை.
காவல் நிலையத்தின் உள்ளே ஒருவித பயம் கலந்து ரகுவின் பின்னே ஆராத்யா செல்ல,
“வா ரகு!” என்று அழைத்த ஹரிஷ் அவர்களை அமர சொல்லி,
“அவனை கூட்டிட்டு வாங்க!” என கான்ஸ்டபிளிடம் சொல்ல அவரும் ஒரு சிறை கதவை திறந்தார்.
“அப்புறம்! நீங்க எதாவது குடுக்குறீங்களா டீ காபி?” என்று ஹரிஷ் ரகு ஆராத்யாவிடம் கேட்க, பதில் ரகுவிடம் இருந்து மட்டும் தான்.
பரமசிவம் அந்த அறையில் இருந்து வெளியில் வந்ததை ஆராத்யா காணும் முன்பே,
“ஏய் குட்டி!” என்று இரைந்து கேட்ட குரலில் தூக்கிவாரிப் போட நடுங்கிப் போனவள் அருகிலிருந்த ரகுவின் கைகளை தன்னால் முடிந்த மட்டும் அழுத்தமாய் பற்றி எழுந்து அவனருகேயே நின்று கொண்டாள்.
“இவனை!” என எழுந்த ஹரிஷ் எழுந்த வேகத்தில் அவனை அடிக்கவும் செய்தான்.
“உடம்புல பயம்னு கொஞ்சமாச்சும் இருக்குதா டா கழுத! இங்க பாரு! உன் மேல கம்பிளைன்ட் தர தான் அந்த பொண்ணு வந்திருக்கு.. வாயை வச்சுட்டு சும்மா இல்லைனா நான் போடுறது தான் எஃப்ஐஆர்.. மூச்!” என்று மிரட்ட,
“சார் நான் பேசணும் சார் இவட்ட.. நான் பேசுவேன்..” என்று அப்போதும் திமிறினான்.
“ஹரி! என்ன சொல்லணுமோ சொல்லி முடிக்கட்டும்.. ஆனா இன்னையோட இவன் பிரச்சனையும் முடியனும்.. அதுக்கு நீ தான் பொறுப்பு!” ரகுவின் இறுகிய முகத்துடனான சொல்லில்,
“நான் இருக்கேன் டா.. என் பொறுப்புன்னு சொல்லிட்ட இல்ல.. சரிப்பட்டு வரலைனா எதுக்கு இந்த கன்’னு அதுல நாலு தோட்டா? சுட்டு தள்ளிட்டு போயிட்டே இருக்கலாம்.. அவனை அவனே சுட்டுகிட்டான்னு சொன்னா இங்க யாரும் இல்லைனு சொல்ல போறதில்ல!” என்று ஹரிஷ்.
“சார்! என்னை பேச வுடுங்க சார்..” பரமசிவம் கெஞ்ச,
“சரி பேசு! ஆனா மிரட்டுன.. மவனே கன்’னு கையில தான் இருக்கு!”
“ஏ குட்டி! உன் அம்மா என்ன டி…” டி என்று சொல்ல வந்தவன் ரகு எழுந்த வேகத்தில் வாய்க்குள் தன் குரலை அடக்கி இருக்க, எழுந்த ரகு கைகட்டி நின்றுவிட்டான் ஆராத்யாவிற்கு வெகு அருகில் நின்று.
“உன் அம்மா என்னைய கட்டிக்க சொல்லி சத்தியம் வாங்கிட்டு தான செத்து போனா? மறந்துட்டியா?” என்று கேட்க, அந்த நினைவில் அழுகையை அடக்கி கண்கள் கலங்கி என ஆராத்யா நிற்க, தன் கைகளை தனக்குள் இறுக்கமாய் கட்டிக் கொண்டான் ரகு.
“பதில் சொல்லு குட்டி.. உன் அம்மா என்ன சொன்னாலும் செய்யுவ.. உன் அம்மா கடைசி ஆசையா கேட்டது அது தான?”
உன் அம்மா உன் அம்மா என்று அவன் அழுத்தி அழுத்தி சொல்ல இங்கே அவளும் உடைந்து கொண்டிருந்தாள்.
“டேய் லூசு பயலே! இப்ப என்னத்துக்கு அந்த பொண்ணை வர சொல்லு நான் பேசணும்னு குதிச்ச? அந்த விளக்கெண்ணெய மட்டும் விளக்கு..” ஹரிஷ் சொல்ல,
“சார்! அதான் சார் மேட்டரே! இவ அம்மா அதான் என் அக்கா இவளை கல்யாணம் பண்ணிக்க சொல்லி சத்தியம் வாங்கிச்சு!” பரமசிவம் சொல்ல,
“சரி வாங்கிச்சு.. அடுத்து சொல்லு!” துப்பாக்கியை கையில் வைத்து ஆட்டிக் கொண்டே ஹரிஷ் கேட்டான்.
“அதான் சொல்றேனே சார்!”
“என்ன சொல்றேனே சார்.. ஏதாச்சும் சொல்லிருவேன் டா.. முழுசா சொல்லு.. இப்ப என்ன அந்த சத்தியத்துக்காக இந்த பொண்ணு உன்னை கல்யாணம் பண்ணனுமா?” ஹரிஷ் கேட்க,
“ஆமா ஆமா அதே தான் சார்!” என்றான் பரமசிவம்.
“என்ன நோமா நோமா?” என்ற ஹரிஷ்,
“ஏன் டா! சொல்லிட்டு அந்த அம்மா செத்து போச்சு சரி.. இப்ப உன்னை கல்யாணம் பண்ணி இந்த பொண்ணை செத்து போக சொல்றியா?” என்று கேட்க,
“இங்க பாருங்க சார்.. இதுல இருக்க விவகாரம் எல்லம் உங்களுக்கு தெரியாது.. என்னய எதுக்கு அர்ரெஸ்ட் பண்ணுணிங்க? நேத்து இவன் ஆபீஸ் போயி கரைச்சல் பண்ணேன் அதுக்கு தானே? ஒரு மாசமா ரெண்டு மாசமா? எவ்வளவு நாள் தண்டனை சொல்லுங்க.. அதை முடிச்சுட்டு போய் என் குட்டிய நான் கல்யாணம் பண்ணனும்!” பரமசிவம் சொன்னதையே சொல்ல,
“இவனெல்லாம் நாட்டுக்கு தேவையா ரகு? எனக்கே பத்திகிட்டு வருது!” என்ற ஹரிஷ்,
“ஓகே! மிஸ் ஆராத்யா! நீங்க சொல்லுங்க.. நீங்க பேசினா தான் இவனை நான் பொளந்து கட்ட சரியா இருக்கும்.” என்ற ஹரிஷ் ஆராத்யா பக்கம் திரும்ப, பரமசிவத்தை பார்த்தாள் ஆராத்யா.
“சொல்லு குட்டி! உண்மைய சொல்லு!” பரமசிவம் சொல்ல,
“டேய்! நீ மூடு!” என்ற ஹரிஷ், ரகுவிற்கு கண்ணசைக்க,
“ஆரா! ஸ்பீக்கவுட்!” என்றான் அவள் காதருகே.
“சொல்லுங்க ஆராத்யா! உங்க அம்மா சத்தியத்துக்காக இந்த சாரை கல்யாணம் பண்ணிக்கிறிங்களா?” ஹரிஷ் வேண்டும் என்றே கேட்க,
“இல்ல இல்ல சார்!” என்று பதறி மீண்டும் ரகுவின் பின் செல்ல, அவளை இழுத்து முன்னே விட்டவன் கைமுட்டிகளை பற்றிக் கொண்டாள் மீண்டும் இறுக்கமாய். ஹரிஷ் அனைத்தையும் கவனித்து அவள் பேச கவனித்திருக்க,
“பேசு ஆரா! நீ சொல்றதை வச்சு தான் அடுத்த டெஸிஷன் போகலாம்!” என்றான் ரகு.
“எனக்கு இவனை தெரியும்.. அம்மாவோட தம்பி அவ்வளவு தான்.. என் அம்மா இப்ப இல்ல.. அவங்க அப்படி சத்தியம் எல்லாம் கேட்கல.. இவனா அந்த நேரத்தை யூஸ் பண்ணி என் அம்மாகிட்ட அப்படி கேட்க சொல்லி வற்புறுத்தினான்.. ஆனா அதுக்குள்ள அம்மா… அம்மா…” என்றவள் அழ,
“ஓகே ரிலாக்ஸ் ஆரா! இப்ப வேற எதுவும் வேண்டாம்.. இவன் மேல கம்பளைண்ட் பண்ணலாமா? சொல்லு! இனி இவனை நாங்க பாத்துக்குறோம்!” மென்மையாய் ஆராத்யா அருகே குனிந்து ரகு கேட்க, இனி பரமசிவம் என்னும் ஒருவன் தன் வாழ்வில் எந்த நேரத்திலும் எந்த நாளிலும் வேண்டாம் என்பதை தெளிவாய் கூறிவிட முடிவு செய்தாள்.
“என் அம்மா அப்பா அச்சிடேன்ட்ல சாக போற நேரம் கூட அவங்களை நிம்மதியா போக விடாம என்னை வச்சு அப்பாவோட சொத்தை வாங்க தான் அம்மாகிட்ட அப்படி சத்தியம் வாங்க சொல்லி இவன் கம்பல் பண்ணினான்.. அம்மா அப்பா இறந்த ரெண்டு நாள்லேயே பிசினஸ் பார்ட்னர்ஸ்னு வந்தவங்க எல்லாம் லாஸ் அது இதுன்னு சொல்லி எங்க ப்ரொபேர்ட்டிஸ் எல்லாம் எடுத்துக்கிட்டாங்க.. மூணாவது நாள் சொந்தம்னு இருந்தவங்களும் என்னை தனியா விட்டுட்டு கிளம்பிட்டாங்க.. போனவங்களும் சும்மா போகல..” என்றவளின் கசந்த புன்னகையை மனம் கணக்க ரகு பார்த்து நிற்க,
“அந்த மூணாம் பக்கம் தான் நான் வந்தேனே குட்டி உன்னை தேடி!” என்று அந்த நேரத்திலும் பரமசிவம் பேச,
“இங்க பாரு! உன்னை சும்மா விட்டு வச்சுருக்கேன்னு அடிக்கடி காமெடி பண்ணிட்டு இருக்காத! இவங்க கிளம்புன பின்னாடி தான் உனக்கு கச்சேரி இருக்கு.. பேசாம இருந்துரு!” என்ற ஹரிஷ் ஆராத்யா பக்கம் திரும்பினான்.
“அன்னைக்கு இவன் வந்து மூணு நாள்ல நமக்கு கல்யாணம்.. அதுக்கு முன்னாடி இதுல கையெழுத்து போடுனு நின்னான்.. என் அப்பா பேர்ல இருந்த வீட்டு பத்திரம்.. எல்லாம் போக அது மட்டும் தான் எனக்குன்னு இருந்தது தெரிஞ்சி அதை வாங்க தான் இவன் என்னை கல்யாணமே பண்ண தயாரானான்..” ஆராத்யா சொல்ல,
“அய்யோ குட்டி உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும்!” பரமசிவம்.
“கழுத கத்துறதை விடுங்க.. நீங்க சொல்லுங்க!” ஹரிஷ் சொல்ல,
“இவனோட ஆளுங்களை வச்சு என்னை மூணு நாள்….” என்று சொல்ல வந்தவளை பரமசிவம் சொல்ல கூடாது என்று தலை அசைத்து மிரட்டி முறைக்க,
“சொல்லு ஆரா!” என்ற ரகு அத்தனை கோபமாய் நின்றிருந்தான்.
“மூணு நாள் அடைச்சு வச்சிருந்தான்.. கல்யாணம் பண்ணினா செத்துருவேன்னு சொல்லி எவ்வளவோ அழுதேன்..”
“அந்த டாக்குமெண்ட்ல சைன் பண்ணிங்களா?” ஹரிஷ் கேட்க,
“இல்ல! எனக்குன்னு என் அப்பா அம்மா நியாபகமா அந்த வீடு மட்டும் தான் இருக்கு.. அது வேணும்னு தான் நினச்சேன்.. அவன்கிட்ட இருந்து தப்பிச்சு இங்க வந்தேன்.. இப்ப அந்த வீடு போனாலும் பரவால்ல.. அப்பா அம்மா எப்பவும் என் நினைவுல தான் இருக்காங்க.. நான் கையெழுத்து போட்டு குடுத்துடுறேன்.. என்னைய விட்டுடு.. நான் வர மாட்டன்!” என முகம் மூடி அழுது அங்கேயே அமர்ந்துவிட்டவளை கைப்பிடித்து தாங்கிக் கொண்டான் ரகு.
error: Content is protected !!