Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

மதுவினும் இனியாள்

 மதுவினும் இனியாள் – 12

 அத்தியாயம் 12:

சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்து விட்டு, ஏதாவது சந்தேகம் என்றால் கால் பண்ணுவதாக கூறி சத்யனை அனுப்பி விட்டான் ஹேரி.

சத்யன் சென்றவுடன் அங்கு வந்தான் ஜான். ஹேரியின் பக்கத்தில் அமர்ந்து கொண்டே , “என்ன சொல்றான் சத்யன்” என்று கேட்டான்.

அதற்கு இவ்வளவு நேரம் பேசிக்கொண்டிருந்ததை கூறினான் ஹேரி. ஜான் அவனிடம் “ஏன் சத்யன் இருக்கும்போது என்ன வரவேண்டாம்னு சொன்ன ஹேரி” என்று கேட்டான்.



Advertisement

“நீ பக்கத்தில் இருந்தா நா சொல்ற பொண்ணு மடு தான்னு ஈஸியா ஸ்மெல் பண்ணிடுவான்”

“தெரிஞ்சா என்ன. அவன்தான் இவ்ளோதூரம் உனக்கு அட்வைஸ் கொடுத்துருக்கானே. அவன்கிட்டயே உண்மைய சொல்லி ஹெல்ப் கேக்க வேண்டியது தான”

அதற்கு அவனை ஒரு மாதிரியாக பார்த்தான் ஹேரி 

Advertisement

“என்ன மேட் அப்படி பாக்கிற” என்று கேட்டான் ஜான்.

Advertisement

“நா சொல்ற பொண்ணு மடு பேபி தான்னு தெரியாத வரைக்கும்தான் சத்யன் எனக்கு நண்பனா இருப்பான். தெரிஞ்சா  விரோதியா மாறிடுவான்”

“என்ன மேட் சொல்ற. அவனுக்கு நீ பாஸ். உன்ன அவன் ஹீரோவ பாக்ற மாதிரி பாக்குறான் . என்னால நம்ப முடியல”

“இல்ல ஜே . இந்தியன்ஸோட ஃபேமிலி செண்டிமெண்ட் அதிலையும் தங்கச்சி செண்டிமெண்ட் பத்தி உனக்கு தெரியாது. சத்யன் பரவால்ல. நா சொல்ற பொண்ணு மடுனு கண்டுபிடிக்கல பாரு. இதே பார்ட்டிபன் சொல்லிருக்கேன்ல. அவன் ரொம்ப ஷார்ப். அவன் சம்மதிக்காம மடு ஃபேமிலிய சம்மதிக்க வைக்க முடியாது”

Advertisement

“ஸ்டாப். ஸ்டாப். மடு  ஃபாமிலிய  சம்மதிக்க வைக்கிற வரை போயிட்ட. அந்த கோலா உன்னட்ட பேசவே மாட்டிக்கிறா. நீ என்னமோ அவ உன் லவ்க்கு சம்மதிச்சிட்ட மாதிரி பேசிட்டுருக்க”

“அதுக்கு தான் பிளான் A  வச்சிருக்கேன் ஜே”

“என்னது! பிளான் A வா. டேய் இது உன் கம்ப்யூட்டர் பிசினஸ் கிடையாது. முதலும் கடைசியுமான லவ் மேட்டர்”

“டோன்ட் ஒர்ரி ஜே. நான் பாத்துக்கிறேன்”

இங்கு மதுவும் ஊர்வசியும் சாப்பிட்டு விட்டு ஆஃபீஸிற்கு உள்ளே வரும் போதுதான் சத்யனும் உள்ளே வந்தான்.

ஊர்வசி “என்ன சத்யன் . இன்னைக்கு உங்கள பாக்கவே முடியல” என்று கேட்டாள்.

“ஹே இன்னைக்கு நா பயங்கர பிஸி. ஒரு பெரிய ஆள  போய் மீட் பண்ணிட்டு வந்தேன்”

“யாரண்ணா . ஆஸ்திரேலியன் பிரதமரையா”

“ஹாய் மதுமிதா . நீங்களும் இங்கதான் இருக்கீங்களா. நீங்க ரெண்டு பேரும் அடிச்சு கேட்டா கூட நா யார மீட் பண்ணேன்னு சொல்ல மாட்டேன். ஏன்னா யார்ட்டயும் சொல்ல கூடாதுனு அவரே சொல்லிட்டாரு. பாவம் அவருக்கு லவ்ல கொஞ்சம் ப்ராப்லம்ன்னு எங்கிட்ட ஐடியா கேட்டார். அதான் பிரீ அட்வைஸ் குடுத்துட்டு வந்தேன்” என்று பயங்கரமாக பீற்றி கொண்டான்.

“கேட்டியா ஊர். நமக்கே இங்க 40 வயசு ஆகுது. ஒரு காதலும் இல்ல, ஒரு கல்யாணமும் இல்ல. இதுல இவரு லவ்வ்க்கு ஐடியா கொடுத்தாராம். காமெடியா இல்ல” என்று சொல்லிக்கொண்டே ஊர்வசியோடு உள்ளே சென்றுவிட்டாள் மது.

இந்த குட்டி சாத்தான் இருக்கே, எப்படி பேசினாலும் பல்ப் கொடுத்துடும் என்று புலம்பி  கொண்டே அவனும் பின்னே சென்றான்.

கடைசி நேரத்தில் ஒரு வேலை முடிக்க வேண்டி இருந்ததால் சிறிது தாமதமாக கிளம்பினாள் மது. ட்ரெயினிலிருந்து இறங்கியவள் , இன்று ஹேரி வந்திருக்க கூடாது என்று கடவுளிடம் வேண்டிக்கொண்டே வந்தாள்.

பார்த்தியும் சிட்னியில் இருக்கும் அவன் ரெஸ்டாரண்ட் ப்ராஞ்சிற்கு சமைக்க ஆள் திடீரென தேவைப்பட்டதால் இவனை அனுப்புவதாகவும், நான்கு நாட்கள் இங்கு இருக்க மாட்டேன்  என்று மதியமே கால் செய்திருந்தான்.

ஹேரியோடு எக்காரணத்தை கொண்டும் பேச கூடாது என்றும், நேரத்தோடு வீட்டிற்கு செல்லுமாறும் கூறியிருந்தான்.

7 மணி. சூரியன் மறைவதற்கு ஆயத்தமாகி கொண்டிருந்தது. மது ரெஸ்டாரண்ட் உள்ளே பார்த்துக்கொண்டே அதை கடந்தாள். நல்ல வேளை ஹேரி வரவில்லை போல என்று மது நினைக்கும் நேரம் , ரெஸ்டாரண்டிற்கு ஆப்போசிட் சைடிலிருந்து மதுவை நோக்கி ஹாய் சொல்லிக்கொண்டே வந்து கொண்டிருந்தான் ஹேரி.

மது நிற்காமல் வேகமாக அவனை பார்க்காமல் கடந்து சென்று விட்டாள்.

ஹேரியும்  கோவமாக நின்று அவள் சென்ற திசையை பார்த்து கொண்டிருந்தான். அப்பொழுது அவனிடம் வந்து நின்றான் பிரபஞ்சன்.

“ஹாய் டியூட் . என்ன உங்களையும் பின்னாடியே அலைய விட்றாளா இவ. எங்க ஊர் பொண்ணுங்களாம் இப்படித்தான் ப்ரோ. அவங்க பின்னாடியே நாய் மாதிரி பசங்கள அலைய வைக்கணும்னு நினைப்பாங்க. இந்த மதுவும் அப்படித்தான். போன மாசம் நா இப்படித்தான் அவ பின்னாடி அலைஞ்சேன். கண்டுக்கவே இல்ல. இந்த மாசம் நீங்களா” என்று பேசி கொண்டே போனான் பிரபஞ்சன். முழு போதையில் இருந்தான்.

ஹேரிக்கு  கோவத்தில் முகமெல்லாம் சிவந்து விட்டது.

“இன்னொரு வார்த்தை மடுவ பத்தி ஏதும் பேசின, கன் வச்சிருக்கேன் கார்ல. வாயிலேயே சுட்டுடுவேன். அப்புறம் யார பத்தியும் பேச முடியாம போய்டும் பாத்துக்க” என்று அடிக்குரலில் எச்சரித்து விட்டு சென்றான் ஹேரி.

ப்ரபஞ்சனுக்கு போதை இறங்கிவிட்டது. இப்பொழுதுதான் சுற்று புறத்தை பார்த்து யோசிக்க ஆரம்பித்தான்.

சூரியன் மறைந்து இருள் பரவ ஆரம்பித்து விட்டது. காரில் ஏறிய ஹேரிக்கு கோபம் அடங்கவில்லை. எப்படியாவது இன்று மதுவிடம் பேசியே ஆக வேண்டும் என்று அவள் வீட்டை நோக்கி காரை விட்டான்.

 மது வழியில்தான் சென்று கொண்டிருக்க வேண்டுமென்று மெதுவாகவே காரை இயக்கினான். இரண்டு தெருக்கள் தாண்டி சென்றிருப்பான். மெயின் ரோட்டிலிருந்து இடது பக்கம் ஒரு முட்டு சந்தை கடக்கும் போது பார்த்தான்.

எதோ வித்தியாசமாக இரண்டு மூன்று பேர் தெரிந்தனர். காரை நிறுத்திவிட்டு வேகமாக உள்ளே இறங்கி போகும்போது தான் கவனித்தான். இரண்டு பேர் ஒரு பெண்ணிடம் தவறாக நடக்க முயற்சி செய்து கொண்டிருந்தனர். கிட்டே நெருங்கியதும்தான் கவனித்தான் அந்த பெண் மதுவென்று.

ஹேரிக்கு ஒரு நிமிடம் இதயம் நின்று பிறகு வேகமாக துடிக்க ஆரம்பித்து விட்டது.

ஒருவன் மதுவின் கைகளை  பின்புறமாக இழுத்து பிடித்திருந்தான். இன்னொருவன் அவள் கன்னங்களை இறுக்கி பிடித்து உதட்டில் முத்தம் கொடுக்க நெருங்கி கொண்டிருந்தான்.

ஹேரி  வேகமாக போய் , போன வேகத்தில் முத்தம் கொடுக்க போனவனை ஓங்கி ஒரு உதை விட்டான். அவன் போய்  அந்த சந்தின் முடிவாக இருந்த காம்பவுண்ட் வாலில் மோதி விழுந்தான். அவன் விழுந்த வேகத்தை பார்த்தே இன்னொருவன் மதுவின் கைகளை விட்டு விட்டு “டேய் யார்ரா நீ” என்று தமிழில் கேட்டுக்கொண்டே ஹேரியை தாக்க வந்தான். அவன் இரண்டு கைகளையும் பிடித்து  முறுக்கி கீழே படுக்கவைத்து  நெஞ்சில் கால்களை வைத்து அவன் வாயிலேயே திரும்ப திரும்ப குத்தினான் ஹேரி.

முதலில் உதை வாங்கி விழுந்தவன் எழுந்து வந்து ஹேரியை தடுத்தான். அவனையும் பிடித்து கீழேயே போட்டு இரண்டு பேரையும் வாயிலேயே மாறி மாறி குத்தினான். இருவரும் குடி போதையில் வேறு இருந்ததால் ஆஜானுபாகுவாக இருந்த ஹேரியை தடுக்க முடியவில்லை.

மதுதான் ஒரு கட்டத்திற்கு மேல் அவர்களுக்கு ஏதாவது ஆகிவிட போகிறதென்று ஹேரி என்று மெதுவாக அழைத்தாள். அப்பொழுதுதான் நினைவு வந்தவனாக திடுக்கிட்டு மதுவை பார்த்து எழுந்து ஓடினான் ஹேரி.

மது கீழே முட்டி போட்டு கைகளை தோள்களின் குறுக்காக கட்டிக்கொண்டு மடங்கி அமர்ந்திருந்தாள். அவளை அப்படியே தூக்கி நெஞ்சில் சாய்த்து கட்டி கொண்டான் ஹேரி. மதுவும் அவன் நெஞ்சம் தான் பாதுகாப்பானது என்று உணர்ந்தது போல் கட்டி கொண்டாள். அவளின் தலையின் மேல் தாவக்கட்டையை வைத்து அழுத்தி கொண்டே முதுகின் மேல் கைகளால் ஆறுதலாக தடவி கொடுத்து கொண்டிருந்தான். வாய் நத்திங் பேபி , உனக்கு ஒண்ணுமாகல பேபி என்று முனுமுனுத்து கொண்டிருந்தது.

அந்த கேப்பில் அடி வாங்கிய இருவரும் எழுந்து ஓடிவிட்டனர். பைக் கிளம்பிய சத்தத்தை கேட்டு புரிந்து கொண்டான் ஹேரி.

மெதுவாக நெஞ்சில் இருந்து மதுவை நகர்த்தினான். மது அவனிடம் ஒட்டிக்கொண்டு அவனை விட்டு நகர மாட்டேனென்றாள்.

“காருக்கு போய் விடலாம் பேபி”

ம்க்கும் அசையவில்லை மது.

“உன் வீட்டுக்கு போய்டலாம் பேபி” என்ற ஹேரி, பிறகுதான் புரிந்து கொண்டான் அவள் ஆடை முன் பகுதியில் கிழிந்திருப்பதால் தான் நகரமாட்டேன் என்கிறாள் என்று.

அவளை அப்படியே நெஞ்சில் சாய்த்த வாக்கிலேயே காருக்கு நகர்த்தி கூட்டி சென்றான். காரின் கதவை திறந்து அவளை அமர வைக்கும்போதுதான் கவனித்தான் அவளின் காட்டன் குர்தி தோள்பட்டையிலிருந்து கிழிந்து உள்ளாடை தெரிந்தது.

அதை கைகளால் மறைத்துக்கொண்டே குனிந்து உட்கார்ந்தாள் மது. காரின் கதவை சாத்திவிட்டு , அங்கு அந்த முட்டு சந்தில் கிடந்த மதுவின் ஹான்ட் பாகை எடுத்து வந்தான் ஹேரி. காரை ஸ்டார்ட் செய்து மதுவின் வீட்டிற்கு காரை ஓட்டினான்.

மதுவிடமிருந்து தேம்பும் ஒலி  வந்தது. கார் ஸ்டியரிங்கில்  கைகளால் குத்தி கொண்டே ஒரு ஆங்கில கெட்ட வார்த்தையை முணுமுணுத்தான் ஹேரி. மதுவின் அபார்ட்மெண்ட் வாசலில் காரை நிறுத்தினான்.

“பேபி இறங்கலாம்”

மது நிமிரவே இல்லை 

“இங்க யாருமே இல்ல உன்ன பாக்கறதுக்கு. நீ சங்கடப்படாம இறங்கு மடு”

மது அசையவே இல்லை.

ம்ஹும் இது சரிப்பட்டு வராது என்று நினைத்த ஹேரி , அவனின் டீ சர்ட்டை கழட்டி, அவளை வலுக்கட்டாயமாக நிமிர்த்தி , அவள் தடுக்க தடுக்க அவளின் கைகளை நகர்த்தி அவனின் டீ சர்ட்டை அவளுக்கு அணிவித்தான்.

“இப்போ இறங்குரியா பேபி”

கதவை திறந்துகொண்டு மெதுவாக இறங்கி லூசாக இருந்த அவன் டீசர்டை இழுத்து விட்டுக்கொண்டே வந்தவள் ஹேரியை நிமிர்ந்து பார்த்து விட்டு குனிந்து கொண்டாள். ஏனென்றால் சர்ட் இல்லாமல் வெற்று உடம்பாக இருந்தான் ஹேரி .

அவன் அலட்டிக்கொள்ளாமல் மதுவின் ஹேண்ட் பேகை எடுத்து கொண்டு அவளின் தோளில் கை போட்டு லிப்ட்டிற்கு கூட்டி சென்றான்.

அவள் வீடு எந்த ஃபிளோர் என்று கேட்டு , அவளின் வீட்டு சாவியை அவள் பேகிலிருந்து  எடுத்து கதவை திறந்து அவளை உள்ளே கூட்டி  சென்றான். மதுவும் உள்ளே வந்தவள் அவளின் பெட் ரூமிற்குள் செல்ல போனாள். அவளை நிறுத்தி அவளின் முகத்தை பார்த்தவன் அதிர்ந்து விட்டான். 

முகமெல்லாம் அழுததில் சிவந்திருந்தது. அதுவும் இல்லாமல் தாடை பகுதி கன்றி சிவந்திருந்தது. உதடு வீங்கியிருந்தது.

வேகமாக அவளின் அருகில் நெருங்கி அவளை இறுக்கி அணைத்து கொண்டான். மதுவும் அவனின் அணைப்பில் பாதுகாப்பை மட்டுமே உணர்ந்ததால் ஒன்றும் சொல்லாமல் சாய்ந்து கொண்டு அழ ஆரம்பித்தாள்.

“டோன்ட் க்ரை பேபி. உதடு ஏன் வீங்கிருக்குடா. நான்  வரதுக்கு முன்னயே உனக்கு முத்தம் குடுத்துட்டானா”

மதுவின் உடம்பு ஒரு முறை சிலிர்த்து அடங்கியது பயத்தில்.

பிறகு மெதுவாக “இல்ல. கையால் அழுத்தி பிடிச்சான். அதுல வீங்கிருக்கும்” என்றாள்.

ஹேரியின் கழுத்து நரம்பெல்லாம் புடைத்தது கோவத்தில். அவளை மெதுவாக விலக்கி அங்கிருந்த சோபாவில் அமர வைத்து பிரிட்ஜில்  இருந்து ஐஸ் கட்டியை எடுத்து வந்து மெதுவாக அவளின் உதட்டின் மீது வைத்தான்.

ஸ்ஸ்ஸ் என்று வலியில் தடுக்க வந்தவளை அடக்கி மெதுவாக ஒத்தடம் கொடுத்தான். பிறகு “டீ சர்ட்டை கழட்டு மடு. அங்கையும் காயம் இருக்கானு பாக்கணும்” என்றான்.

“இல்ல. நானே பாத்துக்கிறேன். நீ இங்கயே இரு”  என்று பெட் ரூமில் புகுந்து கொண்டாள்.

சிறிது நேரம் சென்று வெளியில் வந்தவள் உடையை மாற்றி நைட் பேன்ட்  டீ சர்ட் அணிந்திருந்தாள். ஹேரியின் டீ சர்ட்டை எடுத்து வந்து அவனிடம் கொடுத்தாள். அவனும் வாங்கி டீசர்டை அணிந்து கொண்டே “வேற எங்கயும் காயம் இருக்கானு பாத்தியா ஹனி. வேணுனா சொல்லு ஹாஸ்பிடல் போயிட்டு வந்துடலாம்”

“இல்லல. ஹாஸ்பிடல்லாம் போக வேண்டாம்” என்றவள் அங்கு  ஹாலில் டேபிள் டிராயரில் வைத்திருந்த மெடிக்கல் கிட்டை எடுத்து அதிலிருந்து காயத்துக்கு போடும் பொவிடோன் ஆயின்மென்டை எடுத்தாள். அங்கிருந்து பெட் ரூமிற்க்கு செல்ல போனவளை தடுத்தவன், “உண்மைய சொல்லு ஹனி. வலிக்குதா. காயம் எங்கன்னு காட்டு. நானே போட்டு விடறேன்” என்றான்.

அவள் தலையாட்டி மறுத்ததும் “ப்ளீஸ் பேபி, என்ன ஒரு டாக்டரா நினைச்சுக்கோயேன்” என்றான்.

சிறிது யோசித்தவள் அவனிடம் மருந்தை கொடுத்துவிட்டு தோள்பட்டையை காட்டி எரிவதாக சொன்னாள். அவளால் அந்த இடத்தை பார்க்கவே முடியாது. ஹேரி அந்த இடத்தை பார்த்தால் தோள் வயண்டிருந்தது. காயத்தை மெதுவாக ஊதி விட்டவன் , மருந்தை தடவிக்கொண்டே அவளின் ப்ராவின் ஸ்ட்ரைப் அந்த இடத்தில் கண்டிப்பாக வலியை ஏற்படுத்தும் என்று உணர்ந்தவன், இதை கழட்டி விடு பேபி என்றான். 

அவன் முன்னிலையில் தான் எந்த மாதிரி நிலைமையில் இருக்கிறோம் என்று நினைத்தவள் அழ ஆரம்பித்துவிட்டாள்.

அவளின் மனநிலையை சரியாக கிரகித்தவன் அவளின் அருகில் அமர்ந்து கொண்டு, அவளின் முகத்தை நிமிர்த்தினான்.

“நான்தான பேபி , என்னட்ட ஏன் எம்பாரசிங்கா பீல் பண்ற” என்று அவள் கண்களை ஆழ்ந்து பார்த்து கேட்டான்.

மது அவனின் கேள்வியிலும் , நீல கண்களிலும் மூழ்கிச்சென்று கொண்டிருந்தாள். 

                                                                                                                                                                                                                        (வருவாள்…)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!