Skip to content
Post Views: 8,354
மதுவினும் இனியாள் – 16
அத்தியாயம் 16:
ஹேரி கிளம்பிய பிறகு மது யோசிக்க ஆரம்பித்தாள். அவளுக்கே புரிகிறது. ஹேரியுடனான அவள் உறவு வேறு பாதையில் செல்கிறது, அது மனதுக்கு பிடிக்கவும் செய்கிறது என்று. ஆனால் என்ன செய்வது என்றுதான் புரியவில்லை.
அவனுக்கும் என்னை மிகவும் பிடிக்கிறது. ஆனால் டேட்டிங் என்றுதான் கேட்டான். அது எப்படி ஒத்து வரும். ஏன் மேரேஜ் பண்ணிக்கிலாம்னு அவன் கேட்டா மட்டும் உனக்கு ஒத்து வருமா என்று அவள் மனசாட்சி கேள்வி கேட்டது.
Advertisement
அதற்கு தாய் தந்தை, ஊர், உறவினர் முகங்கள் எல்லாம் வந்து பயப்படுத்தியது. மற்றவர்களை விடு. உனக்கு பிடிக்கிறதா அவனை, திருமணம் என்று வைத்து யோசிக்கும் பொழுது என்று மனசாட்சி திரும்பவும் கேட்ட கேள்விக்கு, யோசிக்காமல் ஆம், அவனை எனக்கானவன், எனக்கு மட்டுமேயானவன் என்று யோசித்தால் உடம்பு முழுவதும் சிலிர்க்கிறது. மனம் தித்திக்கிறது.
ஆனால் அந்த பதிலில் ஒரு கேள்வி வந்தது. அவனுக்கு இப்பொழுது நம்மை பிடிக்கிறது. இந்த பிடித்தம் ஆயுள் முழுவதும் இருக்குமா, அதிலும் என்னிடம் மட்டும் என்று யோசிக்கும்போது பெரிய கேள்விக்குறிதான் தோன்றியது.
அவன் பிறந்த வளர்ந்த இந்த ஊரின் கல்ச்சர் படி பார்த்தால் அவனுக்கு என் திருமணத்திற்கு பிறகு வேறு யாரையும் பிடித்தாலும் அவனை தப்பு சொல்ல முடியுமா. ஆனால் அதை நம்மால் தாங்க முடியுமா. முடியவே முடியாது. அப்பொழுதும் வலி. அவனுடன் மேரேஜ் என்று போனால் தாய், தந்தைக்கும் மிகுந்த மன வலி.
Advertisement
இதெல்லாம் தேவையா. அதற்கு அவனை பிரண்ட் என்ற வரையறையில் வைப்பதுதான் சரி. நீ வைப்பாய். அவன் அந்த வரையறைக்குள் அடங்குவானா என்று மனசாட்சி கேள்வி கேட்டதற்கு, அடங்கவில்லை என்றால் பார்த்தி அண்ணா சொன்னது போல் தயவு தாட்சண்யம் பார்க்காமல் அவனின் உறவை கட் பண்ணி விடவேண்டும்.
Advertisement
அப்படி நினைத்தாலும் மனது வலித்தது. ம்ஹும் . பின்னாடி வரும் பெரிய பெரிய வலிகளுக்கு இந்த வலியை தாங்கித்தான் ஆக வேண்டும் என்று முடிவெடுத்த பிறகுதான் நிம்மதியானாள்.
வேறு எதையும் சிந்திக்க கூடாது என்று அமைதியானாள். சிறிது நேரத்திற்கெல்லாம் சத்யன் கால் செய்தான். காலையில் அவனிடம் வேறு எதையும் கூறாமல் தலைவலி, ஃபீவர் என்று மட்டும் கூறியிருந்தாள். அவனும் முக்கியமான மீட்டிங் இருந்ததால் உடம்பை பார்த்து கொள். ஈவினிங் கால் செய்கிறேன் என்று கூறியிருந்தான்.
அதனால் இப்பொழுது கால் செய்தவன் “என்னடா என்ன ஆச்சு என்ற தங்க மயிலுக்கு”என்றான்.
Advertisement
“ஒண்ணுல்லண்ணா. காலையில ரொம்ப டயர்ட். ஃ பீவர் வர மாதிரி இருந்தது. இப்ப ஓகேண்ணா”
“நாளைக்கு வீட்டுக்கு வரவாடா. பார்த்தி வேற ஊர்ல இல்லன்னு சொல்லியிருந்தாரே. ஹாஸ்பிடல் போகணும்னா சொல்லுடா. நாளைக்கு நா வரேன்”
“இல்லண்ணா அந்த அளவுக்கெல்லாம் இல்ல. நீங்க அலைய வேண்டாம். வேணுன்னா சண்டே வாங்க. பிரியாணி செஞ்சு தரேன்”
“வேணாம் மது. இப்பதான் உடம்பு சரியில்லைன்னு சொன்ன. நல்லா ரெஸ்ட் எடு. இன்னொரு வாரம் இந்த அண்ணனுக்கு பிரியாணி செஞ்சு தருவியாம்”
“ஓகே ண்ணா. வேற ஒன்னும் இல்லையே. வச்சிரவா”
“ஓகேடா. வச்சிரு. எதாவது அவசரம்னா எந்த நேரமா இருந்தாலும் எனக்கு கால் பண்ணிடு” என்றான்.
சரி என்று கால் கட் பண்ணி முடித்தவுடன் பார்த்தி கால் செய்து விட்டான். சிரித்து கொண்டே அட்டண்ட் செய்தவளிடம் “என்ன ஆச்சு மது. நீ ஆபீஸ் வரலன்னு சத்யன் சொன்னார்”
அவனிடமும் அதே கதையை கூறி விட்டு அவனிடம் “எப்ப வருவிங்கண்ணா” என்றாள்.
சிறிது நேரம் அமைதியாக இருந்தவன் “ஏன்டா ஏதும் பிரச்சனையா. நா இங்க வேற ஏற்பாடு பண்ணிட்டு காலையில வரவா”
“ஐயோ அண்ணா எனக்கு ஒண்ணுல்ல. நீங்க வேலைய முடிச்சுட்டே வாங்க”
“சரிடா. ஜாக்கிரதையா இரு. நா சண்டே ஈவினிங் வந்துருவேன்” என்று வைத்து விட்டான்.
பிறகு தாய் மீனாட்சியிடமும், முகத்தை பார்த்து எதுவும் கண்டுபிடித்து விடுவாரோ என்று பயந்து ஆடியோ கால் மட்டும் செய்தவள், டயர்டாக இருப்பதால் நாளை பேசுவதாக கூறி உடனே வைத்து விட்டாள்.
ஒரு வழியாக அனைவரிடமும் பேசிவிட்டு வைத்தவள், அதிலேயே டயர்ட்டாகி சீக்கிரமாக தூங்கி விட்டாள்.
காலையில் ஏழு மணிக்கெல்லாம் ஹேரியின் போன் கால்தான் அவளை எழுப்பியது.
போனை எடுத்து அட்டென்ட் செய்தவளின் காதில் “ஹலோ பேபி” என்று ஹேரியின் குரல் கேட்டவுடன் அன்றைய நாள் மிகவும் அழகாக தொடங்கியது மதுவிற்கு.
“ஹலோ குட் மார்னிங் என்ன இவ்வளவு சீக்கிரம் கால் பண்ணிட்ட”
“நீ நல்லாருக்கியா உன் முகம் நார்மல் ஆயிடுச்சா. தோள்ல உள்ள காயம் எப்படி இருக்கு”
“ம் நான் நல்லாருக்கேன். என் முகம் தோள் எல்லாம் இனிமேதான் செக் செய்யணும். ஏன்னா நா இன்னும் பெட்ட விட்டே எழுந்துக்கல . நீ எப்படி இருக்க”
“நான் நல்லா இருக்கேன். அப்ப வீடியோ கால்ல வந்து உன் முகத்தை நானே செக் பண்ணிக்கவா”
“அதெல்லாம் வேண்டாம். நானே பாத்துட்டேன். முகம் நார்மல். தோள் காயமும் மாக்ஸிமம் ஆறிடுச்சி”
“ஓகே பேபி கேர்ஃபுல்லா இரு. நா ஈவினிங் கால் பண்றேன்” என்று உடனே வைத்து விட்டான்.
என்ன உடனே வச்சிட்டான் ஈன்று யோசித்தாள். ஆமா நிறைய பேசுனாலும் பீல் பண்ணு. இப்ப பேசலன்னு பீல் பண்ணு என்று தலையில் கொட்டிக்கொண்டவள், அன்று முழுவதும் வெளியில் செல்லாமல் வீட்டில் இருந்தபடியே பொழுதை போக்கினாள்.
இரவும் ஹேரி கால் செய்தவன் காலை போலவே அவள் நலத்தை மட்டும் விசாரித்து விட்டு வைத்து விட்டான்.
மீனாட்சியிடமும் செல்லத்துரையிடமும் வீடியோ கால் பேசிவிட்டு தூங்கி விட்டாள்.
மறுநாள் எழுந்து வீட்டை சுத்தம் செய்து விட்டு, துணியை மெஷினில் போட்டு காயவைத்து எடுத்து வைத்தாள். கையால் துவைக்க வேண்டிய துணிகளையும் துவைத்து காய வைத்து மடித்து வைத்தாள்.
நேரம் பார்த்தால் மணி மாலை நான்கு. பார்த்திக்கு கால் செய்தாள். அவன் கிளேட்டன் ரெஸ்டாரண்டில் இருப்பதாகவும், வேலை இருப்பதால் நைட் வீட்டுக்கு செல்லும்போது வந்து பார்ப்பதாகவும் கூறினான்.
மது யோசித்தவள் இரண்டு நாள் வீட்டிலேயே இருந்ததால் வெளியில் சென்றால் நன்றாக இருக்கும் என்று தோன்றியதால் அவளே கிளம்பி பார்த்தியை பார்க்க ரெஸ்டாரண்ட் சென்றாள்.
ஒன்றும் சாப்பிடாமல் டேபிளில் மொபைல் பார்த்துக்கொண்டு காத்திருந்தவளை, சிறிது நேரத்தில் பார்த்தி வந்து பார்த்தான்.
“என்ன மது எப்படியிருக்க. இப்ப தேவலாமா”
“நீங்க பிஸியாண்ணா”
“இல்லடா. சிட்னியில இருந்து நேரா இங்க வந்துட்டேன். இங்க செஃப் பீவர்ன்னு போய்ட்டாரு . அதான் நா அவசரத்துக்கு உதவ வேண்டியதா போயிடுச்சி. இப்ப வேற செஃப் வந்துட்டாரு. நா பிரீ தான். உன் வீட்டுக்கு வருவோம்னுதான் கிளம்பினேன். நீயே வந்துட்ட. என்ன விஷயம் மது. ஏதும் பிரச்சனையா. நீயே ரொம்ப சீரியஸா இருக்கியே. அதான் மழை வர மாதிரி இருக்கு பாரு” என்றான்
“அண்ணா உண்மையிலேயே சீரியஸ் மேட்டர்தான்” என்றவள், அவளுக்கு நடந்த இன்ஸிடண்ட் , ஹேரி வந்து ஹெல்ப் பண்ணியது, நைட் தங்கியது என்று அனைத்தையும் கூறினாள்
என்ன பெரிதாக இருந்து விட போகிறது என்று நினைத்த பார்த்தி, மது கூறியதை கேட்டதும் அதிர்ந்து போய் விட்டான்.
அதிர்ச்சியில் வாயடைத்து போய் உக்கார்ந்திருந்தவன் “யார் செஞ்சிருப்பா மது. ஒரு வேளை ஹேரியே இப்படி பிளான் பண்ணிட்டு, பின்னாடியே வந்து நல்லவன் மாதிரி நடிச்சிருப்பானோ”
“அண்ணா” என்று கூவி விட்டாள் மது. பார்த்தி அவளை அழுத்தமாக பார்ப்பதை பார்த்து அமைதியானவள், “அவன் அந்த மாதிரி ஆள் இல்லண்ணா” என்றாள். அதோடு நிறுத்தாமல் “அந்த பொறுக்கிங்களை நா ப்ரபஞ்சனோடு பார்த்திருக்கேண்ணா” என்றாள்
என்ன என்று அதிர்ந்து போய் அவள் முகத்தை பார்த்தி பார்த்து கொண்டிருக்கும்போதே அந்த இடத்திற்கு பிரபஞ்சன் வந்தான். அவனை பார்த்ததும் பார்த்தி வேகமாக அவனை அடிப்பது மாதிரி எழுந்தான்.
மது அவசரமாக எழுந்து வந்தவள் அவன் கையை பிடித்து கொண்டாள்
“விடு மது . இன்னைக்கு இவன என்ன பண்றேன்னு பாரு” என்று கையை உதறி கொண்டு போய் அவன் சட்டையை பிடித்தான். ஆனால் பிரபஞ்சன் ஒன்றும் சொல்லாமல், எதுவும் செய்யாமல் அமைதியாக நின்றான். அதுமட்டுமில்லாமல் ஆள் பார்க்கவே சோர்ந்து போய் பரிதாபமாக தெரிந்தான்.
மது “அண்ணா என்ன பண்றீங்க, விடுங்க. எல்லாரும் பாக்குறாங்க” என்று சொன்னதும்தான் பார்த்தி சுற்றியுள்ளவர்கள் வேடிக்கை பார்ப்பதை பார்த்து விட்டு அவன் சட்டையிலிருந்து கையை எடுத்தான்.
பிரபஞ்சன் சோர்ந்து போய் அங்கிருந்த சேரில் அமர்ந்தான். அவனை வித்தியாசமாக பார்த்து கொண்டிருந்தவர்களை பார்த்து “உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்”என்றான்.
பார்த்திக்கு திரும்பவும் கோபம் தலைக்கேறியது. “டேய் யார் அவனுங்க. நீ சொல்லி செஞ்சானுங்களா”
அதற்கு பிரபஞ்சன் மதுவை ஏறிட்டு பார்த்து “அவங்க என்ன செஞ்சாங்கன்னு சத்தியமா எனக்கு தெரியாது. ஆனா உன்னட்ட எதோ மோசமா நடந்துருக்காங்கன்னு தெரியுது. அதுக்கு முதல்ல சாரி மது” என்றான்.
அவன் அமைதியாக பேசுவதை பார்த்து சிறிது அமைதியடைந்த பார்த்தி சேரில் அமர்ந்தான். பிறகுதான் மதுவும் அமர்ந்து கொண்டே “உனக்கு தெரியாம செஞ்சாங்கன்னு நீ சொல்றதை வேணா நம்பறேன். ஆனா அன்னைக்கு என்கிட்டே அவங்க மோசமா நடந்ததுக்கான மூல காரணம் நீதான. நீ என்ன பத்தி என்ன சொன்னியோ அவங்ககிட்ட. நா என்ன செஞ்சேன் உன்ன. நீ லவ் பன்றேன்னு சொன்னா உடனே நா ஒத்துக்கணுமா” என்று ஆவேசமாக பேசினாள்.
“ப்ளீஸ் மது நீ சொன்னது மாதிரி, எது நடத்திருந்தாலும் அதுக்கு நான்தான் காரணம். அவனுங்க என் மாமா பசங்க . சின்ன பசங்க. படிக்கிறதுக்காக சென்னையில இருந்து வந்துருக்காங்க. அவனுங்கள தயவு செய்து விட்ற சொல்லு”
அவன் சொல்வதை கேட்டு மதுவும் பார்த்தியும் ஒருவரையொருவர் பார்த்து கொண்டார்கள்.
பிறகு பார்த்தி தான் “என்ன சொல்ற நீ” என்றான்
“ஆமா நானும் அவனுங்களும் வியாழ கிழமை ஈவினிங் சேந்துதான் தண்ணி அடிச்சோம். அப்ப மதுவை பத்தி பேசிட்டு இருக்கும்போதே அவனுங்க எழுந்திரிச்சி போய்ட்டானுங்க. அப்ப போனவங்கள நா மறுபடியும் ரெண்டு நாளா பாக்கவே இல்ல. இன்னைக்குத்தான் தெரிஞ்சது அவங்க போலீஸ் கஸ்டடில இருக்கானுங்கனு. உன்னட்ட பிரச்னை பண்ணிட்டு போய் திரும்பவும் தண்ணி அடிச்சிருக்கானுங்க. அங்க போதை மருந்து எடுத்துகிட்டதா சொல்லி போலீஸ் அவங்கள அர்ரெஸ்ட் பண்ணிருக்கு. எனக்கு நல்லா தெரியும் அவனுங்க அப்பேற்பட்ட பசங்க கிடையாது”
“ஓ பொண்ணுங்கல பலாத்காரம் பண்ற அளவுக்கு துணியிறவனுங்க போதை மருந்து யூஸ் பண்ண மாட்டாங்கங்கிறது உனக்கு தெரியமா”
“இல்ல மது. அவனுங்களுக்கு நான்னா ரோல் மாடல் மாதிரி . ரொம்ப பிடிக்கும். அதனால தான் அப்படி பண்ணிட்டாங்க. உன்னட்ட அப்படி நடந்து அடி வாங்குனதுக்கு அப்புறம் போதை தெளிஞ்சு பயந்து போய் என்ன செய்றதுன்னு தெரியாம தான் பார்ல இருந்துருக்கானுங்க. அப்பதான் எப்படினே தெரியாம அவங்க டேபிள்ள இருந்த சரக்கு பாட்டில்ல போதை மருந்து கலந்துருக்குன்னு அர்ரெஸ்ட் பண்ணிருக்காங்க”
“ஆமா நான்தான் போய் போதை மருந்தை கலந்துட்டனா” என்றாள் மது.
அதற்கு பிரபஞ்சன் “நீ பண்ணல. ஆனா உனக்காக அந்த ஹேரி பண்ணிருக்கான்” என்றான்.
“என்ன… ” என்று அதிர்ச்சியான மது பார்த்திபனை பார்த்தாள். அவனும் அதிர்ச்சியில்தான் அமர்ந்திருந்தான்.
மதுதான் “இந்த ஊர்ல போய் இப்படி இஷ்டத்துக்கு பண்ண முடியுமா” என்றாள்.
“இல்ல எப்படின்னு எனக்கு தெரியல. ஆனா அவன்தான் பண்ணிருக்கணும். அன்னைக்கே நானும் அவன்கிட்ட போய் உன்ன பத்தி பேசுனத்துக்கு, கன் வச்சிருக்கேன் சுற்றுவேன்னு ஆக்ரோஷமா சொன்னான். உனக்காக கண்டிப்பா அவன் என்ன வேணாலும் செய்வான். ப்ளீஸ் மது அவன்ட பேசி எப்படியாவது அவனுங்கள விட சொல்லு. படிக்கிற பசங்க, அவங்க பியூச்சரே வீணா போய்டும் “
பார்த்திபனை பார்த்தாள் மது. அவனும் பேச சொல்லி தலையாட்டினான். சிறிது தூரம் தள்ளி சென்று பேசினாள் மது.
மது போன் பண்ணியதும் இரண்டு ரிங்கிலேயே அட்டென்ட் செய்த ஹேரி “என்னாச்சு பேபி நல்லாருக்கியா” என்றான்.
“நான் நல்லாத்தான் இருக்கேன் ஹேரி. உனக்கு பிரபஞ்சனு ஒருத்தர தெரியுமா”
சிறிது அமைதியாக இருந்தவன் “உன்னட்ட ரெக்கமண்டேஷன்க்கு வந்திருக்கானா” என்றான்.
“ஹே அப்ப அவன் சொல்றதெல்லாம் உண்மதானா. நீ என்ன பண்ணிட்ருக்க ஹேரி” என்று அதிர்ச்சியில் படபடத்தாள் மது
“ஸ்ஸ் பேபி கூல். ஏன் டென்ஷனாகிற. உன்னட்ட அப்படி நடந்துக்கிட்டவனுங்கள சும்மா விட சொல்றியா நீ”
“அதுக்கு இவ்ளோ ரிஸ்க் எடுப்பியா நீ . இதெல்லாம் தப்பு. அவனுங்கள விட சொல்லு. படிக்கிற பசங்க வேறயாம். எல்லாம் அந்த பிரபஞ்சன் பண்ணது. என்ன பத்தி தப்பா அவனுங்க கிட்ட சொல்ல போய் இப்படி பண்ணிருக்கானுங்க”
“என்ன சொல்ற பேபி நீ. அவன் உன்ன பத்தி தப்பா சொல்லிருந்தா ஒன்னு உன்ன கண்டபடி திட்டியிருக்கலாம், இல்ல அதிக கோவம்னா அடிக்க கூட செஞ்சிருக்கலாம். அதெல்லாம் இல்லாம என்ன செய்ய பாத்தானுங்க. ஏன்னா, கோவமா வந்தவனுங்களுக்கு உன் அழக பாத்ததும் தப்பா நடந்துக்கணும்னு தோணிருக்கு. போதையில இருந்த தைரியத்துல, அப்படி நடந்துக்க்வும் செஞ்சிருக்கானுங்க. அன்னைக்கு நா மட்டும் சரியான டைம்ல வரலைனா என்ன நடந்துருக்கும். இன்னும் சொல்ல போனா உன்ன தப்பா பாத்த கண்ண நோண்டாம, தப்பா நடந்துகிட்டு கைய்ய ஓடிக்காம அவனுங்கள சேஃபா தான் வச்சிருக்கேன்” என்று கோபமாக பேசினான்.
அன்றைய நினைவில் மதுவுக்கும் நடுக்கம் தான். இருந்தும் ஹேரியிடம் “சரி தப்பு பண்ணிட்டானுங்க. அதான் மூணு நாள் ரொம்ப கஷ்ட பட்டுட்டானுங்கள்ல. அவனுங்கள விட்று பாவம். உன்னால அவங்க பியூச்சர் கெட்டு போச்சுன்னா என்னால தாங்கிக்க முடியாது கண்ணா. ப்ளீஸ்”
சிறிது நேரம் அமைதியாயிருந்தவன் “சரி பேபி , அந்த பிரபஞ்சன்கிட்ட போன கொடு” என்றான்.
(வருவாள்…)
error: Content is protected !!