Skip to content
Post Views: 8,357
அத்தியாயம் 35:
திருமணத்திற்கு அடுத்த நாள் மதுவின் குலதெய்வம் கோவிலுக்கு சென்றவர்கள், அடுத்த இரண்டு நாட்களில் ஆஸ்திரேலியா கிளம்பிவிட்டார்கள் குடும்பத்துடன்.
மது ஹேரியுடன் மீனாட்சி, செல்லதுரை, அப்பத்தா,ஜான்,ஒலிவியா, வில்லியம் வந்தார்கள். மது தன் குடும்பத்தினருடன் தன் வீட்டில் வலது காலெடுத்து வைத்து உள்ளே வந்தாள்.
ஹேரி அவள் கையை பிடித்து நேராக ஒரு அறைக்கு அழைத்து சென்றான். அங்கே அவள் வணங்கும் தெய்வங்களை வைத்து ஒரு அழகான பூஜை ரூம் செட்டப் செய்திருந்தான். குத்து விளக்கும் இருந்தது.
Advertisement
அதை மீனாட்சி, கேர் டேக்கர் மியாவின் உதவியுடன் தயார் செய்து மதுவை விளக்கேற்ற சொன்னார். மதுவும் ரூமில் சென்று அவசரமாக குளித்துவிட்டு ஒரு காட்டன் புடவையில் வந்திருந்தாள். முடியில் ஈரம் சொட்டிக் கொண்டிருந்தது.
மது விளக்கேற்ற, ஹேரியும் அவள் பக்கத்தில் சேர்ந்து நின்று வணங்கினான். அதை பார்த்த மதுவின் பெற்றோர்களுக்கு மனம் நிறைந்தது. பிறகு அனைவரும் சேர்ந்து சாப்பிட்டவுடன் வில்லியமும் ஒலிவியாவும் கிளம்பினார்கள்.
ஒலிவியா மதுவை அணைத்து கன்னத்தில் முத்தமிட்டாள். மது அவளிடம் “இங்கயே இருக்கலாமே ஒலிவியா. எனக்கும் போரடிக்காம இருக்கும்”
Advertisement
“எனக்கு காலேஜ் போறதுக்கு அப்பா வீடுதான் ஈஸி அண்ணி. லீவ்ல இங்க உங்கள பாக்க வரேன். என்னண்ணா உங்க வீட்டுக்கு வரலாமா” என்று ஹேரியின் முகத்தை பார்த்தவளை
Advertisement
“அவன்ட்ட என்ன கேக்கிற. இது உன் வீடு. நீ எப்ப வேணாலும் வரலாம். வரணும்” என்றவளை ஹேரியும் ஆமோதித்தான்.
வில்லியம் ஹேரியிடம் வந்தவர் “நீ ரொம்ப லக்கி ஹேரி. அருமையான லைஃப் பாட்னர் உனக்கு கிடைச்சிருக்கா. சந்தோசமா இருங்க” என்று வாழ்த்தியவர் மகளை அழைத்து கொண்டு கிளம்பி விட்டார். ஜானும் அவர்களுக்கு பின் கிளம்பினான்.
“என்ன ஜாக்கி. நீ எங்க கிளம்புற” என்று கேட்ட மதுவிடம் “இல்ல கோலா. உங்க சர்ச் வெட்டிங்க்கு வரேன். இப்ப என் வீட்ல கொஞ்ச நாள் இருக்கனே ப்ளீஸ்” என்றான்.
Advertisement
மது ஹேரியின் முகத்தை பார்த்தாள். “அவனை தொந்திரவு பண்ணாத பேபி. ஃபிரீயா விடு” என்றவனை அணைத்துவிட்டு ஜான் கிளம்பிவிட்டான்.
பிறகு அப்பத்தாவும், மதுவின் பெற்றோரும் ஓய்வெடுக்க சென்றனர்.
ஹேரி மதுவை கையால் கண்ணை கட்டி மேல் மாடிக்கு அழைத்து சென்றான். அவன் கையை விலக்கியதும் பார்த்தால் எதிரில் நீச்சல் குளம். முன்பு பார் இருந்த அறையை நீச்சல் குளமாக மாற்றியிருந்தான் ஹேரி.
அதை மகிழ்ச்சியாக பார்வையிட்டு கொண்டிருந்த மதுவின் கையில் ஒரு நீச்சல் உடையை கொடுத்தான் ஹேரி. அதை பிரித்து பார்த்தவள் “ஐயைய இத எல்லாம் என்னால போடமுடியாது. நா வேணுன்னா ஷார்ட்ஸும் ட்ஷர்ட்டும் போட்டுக்குறனே” என்றவளை வலுக்கட்டாயமாக அங்கிருந்த டிரஸ் சேஞ்சிங் ரூமிற்க்கு கூட்டி சென்றான்.
“நானே போட்டுட்டு வரேன்” என்று அவனை வெளியில் தள்ளி கதவை சாற்றி விட்டாள். பிளாக் கலரில் இருந்த நீச்சல் உடையை அணிந்து வெட்கப்பட்டு கொண்டு வந்தவளை பார்த்தவனுக்கு வேறு உணர்வுகள் வந்தது. கட்டுப்படுத்தி கொண்டவன் அவளை நீந்த சொல்லி குளத்திற்குள் இறங்க சொன்னான்.
“ரொம்ப நாள் ஆச்சு. டச் விட்டு போச்சு கண்ணா” என்று மெதுவாக முதலில் தடுமாறியபடி நீந்தி பார்த்தவள் பிறகு மீன் குஞ்சாக துளாவ ஆரம்பித்துவிட்டாள். அவளின் நீள கூந்தல் கைகளில் சிக்கியதால், நீரை விட்டு மேலே வந்து முடியை தூக்கி மேலே கட்டியவளை பார்த்தவன், அதற்கு மேல் பொறுக்க முடியாமல் அணிந்திருந்த டீசர்டை கழட்டிவிட்டு ஷார்ட்ஸுடன் நீருக்குள் பாய்ந்து விட்டான். அவன் வந்ததை பார்த்து வேகமாக நீந்தியவளை துரத்தி பிடித்தவன், பிறகு எங்கு அவளை நீந்த விட்டான். தண்ணீருக்குள்ளேயே ஜல புல ஜங் தான்.
மாலை நேரம் ரெஸ்ட் எடுத்து விட்டு வெளியே வந்த மதுவின் குடும்பத்தார் பார்த்தது நைட் பேண்ட் அணிந்து லேப்டாப்பில் டைனிங் டேபிளில் அமர்ந்து வேலை செய்து கொண்டிருந்த மதுவைத்தான். அவள் பக்கத்திலேயே ஹேரியும் அமர்ந்திருந்தான். அவள் மீது ஒரு கண்ணும் மொபைலில் ஒரு கண்ணுமாக உட்க்காந்திருந்தான்.
அவர்களுக்கு பக்கத்திலேயே செல்லத்துரையும் அப்பத்தாவும் வந்து அமர்ந்தனர்.
மீனாட்சிதான் மதுவின் தலையில் கொட்டி “கல்யாணம் ஆகி நாலு நாள் கூட ஆகல. என்ன டிரஸ் டி இது. பொழுது போன நேரம் புடவைய கட்டி ஒரு விளக்கேத்த கூடாது”
அவர் பேசுவது அரைகுறையாக புரிந்தாலும் “அவள அடிக்காதிங்க அத்தை” என்று அரைகுறை தமிழில் அவளின் தலையில் தடவி கொடுத்தான் ஹேரி.
அதை பார்த்து மோவாயில் கைவைத்த மீனாட்சி “உங்க பொண்டாட்டிய நா அடிச்சதுல இப்ப அவளுக்கு வலிச்சிடுச்சா மாப்பிள்ளை” என்று அதிசயப்பட்டார்.
அவரை பார்த்து ஒழுங்கு காட்டிய மது “தாயி மீனாட்சி. புடவை கட்டல ஓகே. விளக்கேத்தலன்னு உனக்கு தெரியுமா. நீதான் இங்க கெஸ்ட். பொறுப்பில்லாம 7 மணி வரைக்கும் தூங்கி எழுந்து வர்ற. இது என் புருஷன் வீடு. அவருக்கு லட்சுமி சேர வேண்டாம். அதனால முன்னாடியே நா விளக்கேத்தி சாமி கும்புட்டுட்டேன். அப்படியே கிச்சன்ல என் கையால உனக்கு பால் பாயசம் சப்பாத்தி பன்னீர் குருமால்லாம் செஞ்சு வச்சிருக்கேன்” என்று எழுந்து சென்றவள் கிச்சனில் இருந்து பாத்திரங்களை எடுத்து வந்தாள். அவள் பின்னோடு போய் ஹேரியும் சில பாத்திரங்களை எடுத்து வந்தான். மியாவை வீட்டுக்கு அனுப்பி விட்டாள் காலையில் வர சொல்லி.
மகளையும் அவள் கணவனையும் மகிழ்வாக பார்த்திருந்தனர் மீனாட்சியும் செல்லத்துரையும். அவர்களை பார்த்து அப்பத்தா “அதெல்லாம் அவ சமர்த்தி. யாரு அவ இந்த ஞான சரஸ்வதி பேத்தியாக்கும். நீதான் கல்யாணம் ஆயி வந்து அடுப்படிய எட்டி பாக்கவே எட்டு மாசம் ஆச்சு. இவ பேசுறா” என்றார். அவரை முறைத்த மீனாட்சி மதுவிடம் “போய் புடவைய கட்டிட்டு வா மது” என்றதும், அவர்களுக்கு டிபனை வைத்துவிட்டு மாடிக்கு அவர்களின் அறைக்கு சென்றாள். அவள் பின்னேயே ரூமிற்குள் வந்து நின்ற ஹேரியை பார்த்து “நீ எங்க பின்னாடியே வர்ற கண்ணா”
“அது பேபி. இந்த புடவை பாக்கவே கிளாமரா நல்லாருந்தாலும் நைட்ல அவசரத்துக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. நீ புடவைய கட்டும்போதே பாத்தா நைட் கழட்ட ஈஸியா இருக்கும் பேபி” என்றவனின் காதை திருகியவள் “ஒழுங்கா வெளில போ. நீச்சல் குளத்த காட்டி நீச்சல் அடிக்க விட்டியா நீ. அதும் இப்ப கீழ அப்பா அம்மா வேற வெயிட் பண்றாங்க”
“நா கண்ணால சாரீ கட்றத பாக்கிறன்னுதானே சொன்னேன்”
“நீ ஆணியே புடுங்க வேணாம். கிளம்பு” என்று அவனை தள்ளி கொண்டு போய் வெளியே தள்ளி கதவை சாத்தினாள்.
டார்க் பளுவில் ஸ்கை ப்ளூ பார்டர் வைத்த சில்க் காட்டன் புடவையை கட்டி வந்தாள் மது. அவள் கீழே வந்தவுடன் அனைவரும் சேர்ந்து சாப்பிட்டனர்.
பிறகு செல்லத்துரை ஹேரியிடம் அவன் கொடுத்த பத்திரங்களை எடுத்து வந்து கொடுத்தார்.
“இல்ல மாமா உங்ககிட்டயே இருக்கட்டும்” என்று வாங்க மறுத்தவனிடம் “இல்ல மாப்பிள. இந்த சொத்த பாத்து எங்க பொண்ண உங்களுக்கு கொடுக்கல. அவ விருப்பதுக்காகவும், உங்க அணுகுமுறை நேர்மையா இருந்தததனாலையும் தான் கொடுத்தேன். நீங்க இப்ப எங்களோட மருமகன். உங்கள நம்பாம நாங்க வேற யாரை நம்புவோம் . இதுக்கு மேல இது என்னட்ட இருந்தா நல்லாருக்காது” என்றதற்கு மதுவை பார்த்தான் ஹேரி. அவள் சம்மதமாக தலையாட்டியதும் வாங்கி கொண்டான்.
எல்லோரும் தூங்க சென்றதும் மதுவும் ஹேரியும் அவர்களின் ரூமிற்க்கு வந்தனர். ஹேரி அவன் முன்பு கிஃப்ட்டாக கொடுத்த செயினை எடுத்து மதுவிற்கு அவனே போட்டு விட்டவன், அங்கிருந்த பிரிட்ஜிலிருந்து மல்லி பூவை கொண்டு வந்து அவளிடம் கொடுத்தான்.
“ஹே மல்லி பூ இங்க கிடைக்கிறது கஷ்டம். எங்க வாங்கின கண்ணா”
“அதெல்லாம் உனக்கெதுக்கு பேபி. உனக்கு என்ன வேணுன்னு மட்டும் சொல்லு. நா வாங்கி தரேன்”
அதை பின்னலில் வைக்க போனவளை தடுத்து “பின்னலை பிரிச்சு முடிய பிரீயா விடு பேபி” என்றவனை பார்த்தவள் “உனக்காகத்தான் பின்னலே போட்டேன். முடிய விரிச்சு விட்டாலே நீ பின்னாடி வந்துடற”
“ஹா ஹா என்ன பேபி பண்றது. உன் விரிஞ்சிருக்க முடில இந்த பூவும் சேந்ததுன்னா வேற லெவல் பேபி” என்று அவள் பூ வைத்த விரிந்த முடியில் முகம் புதைத்தவன், சிறிது நேரத்தில் அவளை தூக்கி கொண்டு, கீழே மதுவின் ஓவியங்கள் இருக்கும் அறைக்கு சென்றான். அங்கிருந்த பெட்டில் அவளை போட்டவன் அவள் மேலே விழுந்தான்.
“தள்ளுடா கண்ணா. மேல ஸ்டார்ஸ் காட்டேறேன்னு சொன்னல. பாக்கலாம்” என்றவளுக்கு ரிமோட் மூலம் இயக்கி ஸ்டார்சை காட்டியவன் அவள் கழுத்துக்கடியில் முகத்தை புதைத்தான்.
“அடேய் பாக்கவே விட மாட்ற”
“என்ன பேபி. இதே ரூம்ல உன்ன பஸ்ட் டைம் கூட்டிட்டு வந்தப்ப, அன்னைக்கே உன்ன எனக்கே எனக்குன்னு எடுத்துக்கணும்ன்னு என் நாடி நரம்பெல்லாம் பேயாட்டம் போட்டுச்சு. உன் குடும்பத்தோட பெர்மிசன் வாங்கி கல்யாணம் ஆகணும்ன்னுதான் அன்னைக்கு நா அவ்ளோ கண்ட்ரோல் பண்ணிக்கிட்டேன். இப்ப நீ எனக்கே எனக்குதான் சொந்தம்” என்றவனின் நெஞ்சில் அவள் டாட்டூ இருந்த இடத்தில் அழுந்த முத்தம் குடுத்தாள் மது.
அதோடு எப்பொழுதும் ஹேரிதான் அவளை ஆக்கிரமிப்பான். இன்று அவன் பேபி அவன் கேக்காமலே அவனுக்கு எல்லாவற்றையும் திகட்ட திகட்ட வழங்கினாள். அதில் பித்தம் கொண்டு இரவு முழுதும் அவளை கொண்டாடி தீர்த்தான்.
ஒரு வாரத்தில் சர்ச்சில் மோதிரம் மாத்தி, திருமணத்தை பதிவு செய்தார்கள். மது வைட் கவுன், தலையில் வெய்ல், காதில் கழுத்து கைகளில் வைரங்கள் பதித்த ஆபரணங்களுடன், மஞ்சள் தாலியும் அணிந்திருந்தாள். ஹேரி டார்க் ப்ளூ அன்ட் வைட்டில் கோட் சூட் அணிந்திருந்தான்.
ஊர்வசியும் பார்த்தியும் சத்யனும் முதல் நாளே இந்தியாவிலிருந்து வந்து விட்டனர். ஜான் தான் அனைத்து ஏற்பாடுகளையும் சிறப்பாக செய்திருந்தான்.
மதுவின் ப்ராஜெக்ட்டில் இருக்கும் டோமிங் உட்பட அனைவரும் வந்திருந்தனர். ஒலிவியா அவளின் தந்தை வந்திருந்தார்கள். வருணின் பெற்றோர்கள் வந்திருந்தார்கள். இன்னும் சில முக்கியமான நண்பர்களை அழைத்திருந்தான் ஹேரி. கேபிரில்லாவிற்கும் அழைத்திருந்தான் அவள் வரவில்லை.
இப்பொழுது சர்ச்சில் ஃபாதர், பையன் பெண்ணிடம் சம்மதம் வாங்கி உறுதிமொழி கொடுக்க சொல்லி மோதிரம் மாற்றி கொள்ள சொன்னார். மதுவும் ஹேரியும் மனதில் முழு நிறைவோடு மோதிரத்தை மாற்றி கொண்டனர். பிறகு அனைவரையும் பிரார்த்தனை பண்ண சொல்லி ஆசிர்வாதங்களுடன் திருமணத்தை முடித்து வைத்தார்.
(வருவாள்…)
error: Content is protected !!