Skip to content
Post Views: 9,188
அத்தியாயம் 37 பார்ட் -2
மீனாட்சி செல்லத்துரை ரூமிலேயே இனியாள் தூங்கிவிட்டாள். அனைவரும் படுக்க சென்றதும் இனியாளை சென்று ஒருமுறை பார்த்துவிட்டு மேலே தன் ரூமிற்க்கு லிஃப்ட்டில் சென்ற ஹேரி, காலையிலிருந்து தன் பேபியின் முகத்தில் தோன்றிய பாவங்களை மனதில் ரசித்து கொண்டே சென்றான்.
ரூம் இருட்டாக இருந்தது. தூங்கிவிட்டாளா என்று நினைக்கும் போது லைட் திடீரென்று எரிந்தது. ரூம் கட்டில் எல்லாம் டெக்கரேட் செய்யப்பட்டிருந்தது. மியூசிக் ஒலிக்க ஆரம்பித்தது.
லல்லாஹி லைரே லைரே
Advertisement
லல்லாஹி லைரே லைரே …
காட்டு பயலே கொஞ்சி போடா
என்ன ஒருக்கா நீ
Advertisement
மது வயலட் கலரில் நெட்டெட் சேரி படு கிளாமராக அணிந்து அவனை சுற்றி ஆடி கொண்டிருந்தாள். தலை முடியை விரித்துவிட்டு நிறைய மல்லி பூ சூடியிருந்தாள். ஹேரி சிரிப்பை அடக்கி கொண்டு அவளை பார்த்து கொண்டிருந்தான்.
Advertisement
ஆனால் போக போக மதுவின் போதையில் விழுந்தான்.
நீ எச்சி ஊற வைக்கிற
என் உடம்ப தைக்குற
Advertisement
எதுக்கு தள்ளி நிக்குற வாடா
என்று பாடல் ஓடி கொண்டிருக்கும் போது, அதற்கு மேல் பொறுக்க முடியாதவன் அவளை கைகளில் அள்ளி கொண்டு போய் கட்டிலில் விட்டு அவளை வன்மையாக ஆக்கிரமித்தான்.
எல்லாம் முடிந்து மது அவன் நெஞ்சில் தலை வைத்து படுத்திருந்தாள்.
“இப்ப கோவம் போச்சா கண்ணா உனக்கு”
“எனக்கு கோவம்ன்னு உனக்கு யார்ரா பேபி சொன்னா”
“என்ன?”
“ஆமா பேபி. உன்மேல எனக்கு என்னைக்கு கோவம் வந்திருக்கு. அது ‘ஊடல்’ன்னு தமிழ்ல ஒரு வார்த்தை இருக்கே. ஊடலுக்கு பிறகு வர்ற காதல் எப்படிருக்கும்ன்னு இன்னைக்கு ட்ரை பண்ணி பாத்தேன். சும்மா சொல்ல கூடாது பேபி. நீ கலக்கிட்ட. என்ன ஒரு மூவ்மென்ட்” என்று ரசனையாக கூறியவனை அடிக்க ஆரம்பித்தாள். அவளை தடுத்து அவள் கைகளை பிடித்து கொண்டவன் “உனக்குத்தான் வலிக்கும் பேபி. வேணுன்னா கடிச்சுக்கோ. ஆனா இங்க கடி” என்று உதட்டை காட்டியவனை முறைத்தவள் “வர வர உன் தமிழ் ஆர்வத்துக்கு அளவில்லாம போச்சு கண்ணா”
ஹேரி தமிழ் பிஹெச்டி முடித்த ஆசிரியரிடம் தமிழ் இன்னும் கற்று கொள்கிறான். நிறைய இலக்கியம், பாரதியார், திருக்குறள் எல்லாவற்றையும் கற்று கொண்டுவிட்டான். கற்க கற்க தெவிட்டவில்லை தமிழ் மொழி…
“ஆமா பேபி என்ன மாதிரி மொழி தெரியுமா. குறுந்தொகைல நம்ம காதலை சொல்ற மாதிரியே ஒரு பாடல் இருக்கு தெரியுமா”
யாயும் ஞாயும் யார் ஆகியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறை கேளிர்?
யானும் நீயும் எவ் வழி அறிதும் ?
செம்புலப் பெயல் நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே!
“என் தாயும் தந்தையும் , உன் தாயும் தந்தையும் உறவினர் அல்ல. எனக்கும் உனக்கும் முன்ன பின்ன தெரியாது. ஆனா நம்ம பாத்துக்கிட்டதுக்கு அப்புறம் செம்மண்ணில் நீர் கலந்தது போல, நம்ம அன்பு கொண்ட நெஞ்சங்கள் கலந்துவிட்டது என்ன ஒரு அருமையான போயம் பாரேன். உன்னை போலவே தமிழும் ரொம்ப இனிமையானது ஹனி” என்று அவளை தழுவி கொண்டான்.
“நேத்து இனியாளை, என்ன விட ஸ்வீட்ன்னு சொன்ன” என்று முறுக்கியவளின் மச்சத்தில் முத்தம் கொடுத்தவன்,
“நான் ஏன் பெண் குழந்தைதான் வேணுன்னு ஆசைப்பட்டேன் தெரியுமா பேபி”
“ஏன்”
“உன்னோட 24 வயசுலதான் நான் உன்ன சந்திச்சேன் பேபி. அதுக்கு முன்னாடி என்னோட நீ இல்லாத அந்த 24 வருடங்களையும் என் மகள் மூலமாக நிரப்பிக்கலாம்ன்னுதான்” என்றவனை கண்ணில் நேசம் வழிய பார்த்தவள் “என்ன ஏன் இவ்வளவு நேசிக்கற கண்ணா. நா உனக்கு ஒண்ணுமே செய்யலையே”
“ஒண்ணுமே செய்யலையா. உன்ன பாத்ததுக்கு அப்புறம் தான் பேபி என் லைப்க்கே அர்த்தம் கிடைச்சுது. இவ்ளோ பெரிய உலகத்துல நா தனியாத்தான் இருந்தேன். இப்ப நா நேசிக்கிறதுக்கும் என்ன நேசிக்கிறதுக்கும் எவ்ளோ பேர் இருக்காங்க. உன்னடேந்துதான் பேபி மகிழ்ச்சி, கருணை,காதல், காமம், தாயன்பு, மகள் எல்லாமே எனக்கு கிடைச்சுது.”
“இதெல்லாம் எல்லா பெண்கள்ட்டையும் இருக்கதுதான் கண்ணா”
“இருக்கலாம். ஆனா எல்லாரும் யாரையும் கேர் பண்ணாம அவசரமா போற உலகத்துலதான் நா வாழ்ந்துட்டு இருந்தேன். உன்ன பாத்ததுக்கு அப்புறம்தான் நம்ம சுத்தி உள்ளவங்களை நேசிக்கணும்ன்னு கத்துக்கிட்டேன் பேபி. இப்ப கூட நீ நினைச்சா என்னோட ஜாலியா ஜெர்மனி வந்துருக்க முடியும். நீ ஏன் வரல”
“இந்த ப்ரோக்ராம்ல ஆடுனது எல்லாம் சின்ன புள்ளைங்க கண்ணா. அவங்களுக்கு நா பக்கத்துல இருந்தாதான் கான்பிடண்டா இருக்கும்”
“உனக்கு கீழ மூணு டீச்சர் வேல பாக்குறாங்க அவங்கள ப்ரோக்ராமை பாத்துக்க சொல்லிட்டு வந்துருக்கலாம். ஆனா உன்னால உன் குடும்பம் , உன் சந்தோஷம்ன்னு சுயநலமா யோசிக்க முடியாது. உன் டான்ஸ் ஸ்கூல் வருமானத்தை முழுசா தூக்கி உங்க ஊர் ஆசிரமங்களுக்கும் இலங்கை தமிழர்களுக்கும் தர்றியே”
“நீதான் நமக்கு தேவையானதை நிறைய சேர்த்து வச்சுருக்கியே கண்ணா . இன்னும் சேத்து கண்ணுக்கு தெரியாத நம்ம தலைமுறைகளுக்கு கொடுக்கிறதுக்கு பதிலா, இப்ப நம்ம கண் முன்னாடி கஷ்டப்படறவங்களுக்கு உதவலாமேன்னுதான்”
“அதைத்தான் சொல்றேன். நீ வித்தியாசமானவள். உன் பேருக்கேத்த மாதிரி இனிமையானவள். அப்புறம் உன்னட்டேந்து வந்த இனியாள், உன்ன விட இனிமையாதான இருப்பா. சரி நம்ம இனியாளுக்கு கம்பெனிக்கு அவளுக்கு தம்பி பெத்து கொடுப்போமா பேபி?”
“ஹே கண்ணா. உனக்கு ஓகேவா”
“எஸ் பேபி. என் பேபி ஆசைப்பட்டு அவளுக்கு ஒன்னு கிடைக்காம போகலாமா”
மது அவனை பார்த்துக்கொண்டே மெதுவாக பாடினாள்
உன் கூட நான் கூடி இருந்திட
எனக்கு ஜென்மம் ஒண்ணு போதுமா?
நூறு சென்மம் வேணும்
அத கேட்குறேன் சாமிய
நூறு சென்மம் நமக்கு போதுமா?
வேற வரம் ஏதும் கேட்போமா?
சாகா வரம் கேட்போம்
அந்த சாமிய சாமிய
காத்தா அலஞ்சாலும்
கடலாக நீ இருந்தாலும்
ஆகாசமா ஆன போதிலும்
என்ன உரு எடுத்த போதிலும்
சேர்ந்தே தான் பொறக்கணும்
இருக்கணும், கலக்கணும்
உன்ன விட இந்த உலகத்தில் உசந்தது ஒன்னும் இல்ல…
என்று பாடிவிட்டு அவனை கட்டிக்கொண்டு தேம்பி அழுதாள்.
ஹேரி இவ்வளவு நேரமாக கண்மூடி அவள் பாட்டில் லயித்திருந்தவன், அவள் அழுவதை பார்த்ததும் பதறிவிட்டான்.
“என்ன பேபி” என்று அவளை நிமிர்த்தி கண்ணீரை துடைத்துவிட்டவனின் நெஞ்சில் சாய்ந்து கொண்டவள்,
“இந்த பாட்ல வர்ற மாதிரி எத்தனை ஜென்மம் எடுத்தாலும் உன்னோட நா ஒண்ணாதான் இருக்கணும் கண்ணா. எனக்கு அதைத்தவிர கடவுள்ட்ட வேற எந்த வேண்டுதலும் இந்த ஜென்மத்துல இல்ல” என்றவளை இறுக்கி கட்டி அணைத்து கொண்டவன் “அவ்ளோதான பேபி. உன் பிள்ளையார்ட்ட நானும் அப்ளிக்கேஷன் போட்டறேன். என் பேபி ஒன்னு கேட்டு இல்லன்னு சொல்லிடுவாரா அவர்” என்றவன் அவள் மனதை மாற்றுவதற்க்காக “ஸ்விம் பண்ண போலாமா பேபி” என்றான்.
“என்ன” என்று அலறினாள் மது.
இப்பொழுதும் ஆஸ்திரேலியா குளிரை தாங்குவது மதுவிற்கு சிரமமாகத்தான் இருக்கிறது. மேயிலிருந்து டிசம்பர் மாதம் வருவதற்குள் குளிரை சமாளிக்கத்தான் மிகவும் சிரமப்படுவாள்.
என்னதான் நீச்சல் குளத்தில் டெம்ப்ரேச்சர் மெயின்டைன் செய்தாலும் குளிரை நினைத்து நடுங்கினாள் மது. ஆனால் ஹேரி அவளை கைகளில் அள்ளிக்கொண்டவன் “அடுத்த மாசத்திலிருந்து குளிருதுன்னு நீ ரொம்ப அட்டகாசம் பண்ணுவ. எனக்கு இப்பவே உன்னோட ஸ்விம் பண்ணனும்”
“டேய் அநியாயம் பண்ணாத. நீ இப்ப அங்க போய் ஸ்விம் பண்ண விடுவியா என்ன”
“உன்ன தனியா தண்ணில விட்டா உனக்கு குளிரும்ல பேபி” என்று அவளுடன் சேர்ந்தே தண்ணீரில் குதித்தான் ஹேரி.
அதற்கு மேல் அவர்களை எட்டி பார்க்க நமக்கு அனுமதியில்லை.
ஹேரி ரிச்சர்ட்டிற்கு இனியாளுடன் மேலும் ஒரு இனியனை வழங்கி அவன் வாழ்க்கையில் மென்மேலும் இனிமையை கூட்டுவாள் நம் நாயகி மதுமிதா (மதுவினும் இனியாள்) என்று கடவுளை வேண்டிக்கொண்டு வாழ்த்தி விடைபெறுவோம்.
(முற்றும்)
error: Content is protected !!