Skip to content
Post Views: 10,038
அத்தியாயம் 37 part 1:
அன்று ஹேரி ரிச்சர்ட் – மதுமிதா தம்பதிகளின் மகள் இனியாள் ஹேரி ரிச்சர்ட்டுக்கு பிறந்த நாள்.
மூன்று வயது அழகு பொம்மை இனியாள், அப்படியே உருவத்தில் அம்மா மாதிரி. மதுவின் ஸ்கின் கலர். முடி இப்போதே இடுப்பை தாண்டி தொங்கியது. அதை கட் பண்ண விடவில்லை ஹேரி. மச்சம் இல்லை அவளுக்கு. தகப்பனை போல் நீல கண்களை உடையவள். குணத்திலும் அப்பா மாதிரி. நிதானம், அழுத்தம், அறிவு எல்லாம் அதிகம். இப்பொழுது வாரத்திலொரு நாள் பிளே ஸ்கூல் சென்று வருகிறாள்.
மதுவின் கர்ப்ப காலம் முழுவதும் அப்பத்தாவும் மீனாட்சியும் இங்கேயே இருந்தனர். செல்லத்துரை மட்டும் அவ்வப்போது வந்து போனார். ஆனால் மகளை போலவே பேத்தி பிறந்த பிறகு அவரும் அதிக நாட்கள் இங்குதான். அங்கு அவரின் நிலங்களையம் அரிசி ஆலையையும் பார்த்தியும் அவன் நண்பன் ஒருவனும் பார்த்து கொண்டனர்.
Advertisement
பார்த்தி போன வருடம்தான் தஞ்சாவூரில் பெரிய ரெஸ்டாரண்டை ஓபன் பண்ணினான். நிறைய ஐடியாக்கள் ஹேரியிடமிருந்து பெற்று கொண்டாலும் பண உதவி பெற்று கொள்ள மறுத்து விட்டான். அவனுக்கு ஊரில் பெண் பார்த்து கொண்டிருந்தனர்.
ஹேரியின் ஆலோசனை பேரில் செல்லத்துரையின் நிலத்தில் இயற்க்கை விவசாயம் செய்து, அவன் ரெஸ்டாரண்ட் பக்கத்திலேயே இயற்கை அங்காடி ஒன்றும் வைத்துள்ளான்.
அவன் மெல்பர்னை விட்டு செல்லும் போது, சத்யனை கல்யாணம் பண்ணிக்கொண்டு இங்கு இருக்கும் அவன் சொந்த தங்கை பூங்குழலி கூட அவ்வளவு அழவில்லை. ஆனால் மது அழுது தீர்த்து விட்டாள். அவளை சமாதான படுத்துவதற்க்குள் ஹேரிக்கு போதும் போதுமென்றாகிவிட்டது. பிறகு பார்த்திதான் அவளை அதட்டி உருட்டி சரி கட்டினான்.
Advertisement
மதுவிற்கு ஏழாம் மாதம் நடக்கும் போது சத்யனுக்கும் பூவிற்கும் திருமணம். ஊரில் மதுவின் வளைகாப்பை முடித்துவிட்டு கல்யாணத்தில் கலந்து கொண்டனர். இப்பொழுது சத்யன், பூ மகன் கவியமுதனுக்கு ஒரு வயது. ஊர்வசிக்கும் திருமணம் முடிந்து, இப்பொழுதுதான் ஆறு மாத கர்ப்பமாக இருக்கிறாள். பூஜா அவள் பாய் பிரண்டோடு சேர்ந்து வசிக்கிறாள். எப்படியோ போகட்டும் என்று அவள் குடும்பத்தார் தண்ணீர் தெளித்து விட்டு விட்டனர்.
Advertisement
ஜான் அமெலியாவிற்கு பிறகு கேர்ள் பிரண்ட் வைத்து கொள்ளவில்லை. அந்த லைப் ஸ்டைல் அவனுக்கு அலுத்துவிட்டது.
கேபி, ஹேரியின் திருமணத்திற்கு பிறகு இத்தாலிக்கே சென்றுவிட்டாள்.
ஒலிவியா மேற்படிப்புக்காக கனடாவில் வசிக்கிறாள். அவளும் மது-ஹேரி தம்பதிகளை பார்த்து மனதிற்கு பிடித்தவன் கிடைத்தால் திருமணம் செய்துதான் வாழ வேண்டும் என்று முடிவெடுத்திருக்கிறாள். வில்லியம் அவ்வப்பொழுது இவர்களை வந்து பார்த்து செல்வார்.
Advertisement
ஜனனி சந்தோஷிற்கு இரண்டு வயதில் மகள் கீர்த்தி இருக்கிறாள். அவர்கள் சிட்னியில்தான் இருக்கிறார்கள்.
அமெரிக்காவில் வருண் வேலை நீக்கமும் போலீஸ் கேசும் ஆன பிறகு ஹேரியின் மேல் உள்ள பயத்தில் மது விஷயத்தில் தலையிடவில்லை. ஆனால் அவன் குணம் மாறாமல் அப்படியேதான் இருக்கிறான்.
இப்பொழுது சத்யன்தான் ஹேரியின் மெல்பர்ன் ப்ராஞ்சின் ஹெட். மது அதேபோல் இன்னும் அவர்கள் கம்பெனியில் ப்ராஜெக்ட் லீடாக வேலை செய்கிறாள்.
ஆனால் ‘ஆடலரசி நாட்டியாலயா’ என்று நடன பள்ளி ஒன்று திறந்து வைத்து, இங்குள்ள பிள்ளைகளுக்கு பரதநாட்டியம் கற்று தருகிறாள். மெல்பர்னில் இருக்கும் அனைத்து கோயில்களின் விழாக்களிலும் அவளுடைய நடனமும் அவளுடைய மாணவர்களின் நடனமும் தவறாமல் இடம்பெறும். நாளுக்கு நாள் அவளின் பள்ளி பிரபலமடைந்து வருகிறது.
ஹேரி அமெரிக்கா, ஜெர்மனி, லண்டன், நியூசிலாந்து, இந்தியா என்று நிறைய நாடுகளில் அவன் ஹை டெக் பிரான்ஜை ஓபன் பண்ணிவிட்டான். ஜான் தான் அதிகமாக வெளிநாடுகளுக்கு அலைவது. முக்கியமானவற்றுக்கு மட்டும் ஹேரி செல்வான். அதுவும் அதிகமாக மனைவியையும் மகளையும் அழைத்து சென்று விடுவான். மிகவும் அரிதாகத்தான் தனியாக செல்வான்.
இப்பொழுது பத்துநாட்களுக்கு முன் முக்கிய வேலைக்காக ஜெர்மனி சென்றுவிட்டு இன்று காலைதான் வந்தான். மது முக்கிய நடன நிகழ்ச்சி இருப்பதால் வர முடியாது என்று கூறி விட்டதால் கோபமாக கிளம்பினான். இன்று காலையில் திரும்பி வந்ததும் ரூமிற்குள் வந்து அவன் பின்னாலிருந்து கட்டி அணைத்தவளின் கையை விலக்கி விட்டு ரெஸ்ட் ரூம் சென்று விட்டான். மது உலக மகா ஆச்சரியமாக நின்றாள்…. ஹேரி வெளியே வரும் வரை நின்றாள்.
குளித்துவிட்டு வந்து உடை மாற்றியவனின் எதிரில் போய் நின்றவள் “என்னாச்சு. போம்போது கோவமா போனீங்க. இடையில போன்ல மிஸ் யு மிஸ் யு ன்னு கொஞ்சிகிட்டே திரிஞ்சிங்க. இப்ப வீட்டுக்கு வந்தோன்ன திரும்ப கோவமா” நெற்றியில் தட்டி யோசித்து கொண்டிருந்தவளை பார்த்து வந்த சிரிப்பை அடக்கி கொண்டு “கிளம்பு கோவிலுக்கு போகலாம் பேபி” என்றான்.
சரி என்று கிளம்ப போனாள். முக்கிய நாட்களில் ஹேரி டாண்டினாங் கோவில் விநாயகருக்கு நன்றி சொல்வதை வழக்கமாக வைத்திருந்தான். இன்றும் இனியாளின் பிறந்த நாளுக்காக சென்றார்கள். அது போல் அவன் அமைத்து கொடுத்த பூஜை அறையில் மாதா குழந்தை இயேசு படங்களை வைத்து வழிபடுகிறாள் மது. இந்தியா வந்தால் வேளாங்கண்ணி கண்டிப்பாக செல்வார்கள்.
இன்று கோயிலுக்கு போய்விட்டு வந்து தாய் மீனாட்சி சமைத்து வைத்திருந்த விருந்துணவை நன்றாக சாப்பிட்டுவிட்டு மேலே தங்களின் ரூமிற்கு சென்றாள் மது. இனியாள் உண்டுவிட்டு அப்பத்தாவின் அறையில் தூங்கிவிட்டாள். செல்லத்துரையிடம் பேசிக்கொண்டிருந்த ஹேரி வருவான் வருவான் என்று எதிர்பார்த்த மது தூங்கியேவிட்டாள் . பிறகு மாலை அனைவரும் வந்துவிட்டதால் ஹேரியை கவனிக்க நேரமில்லை மதுவிற்கு.
இன்று இனியாளின் பிறந்த நாளிற்கு ஜனனி, ஊர்வசி, சத்யன் அனைவரும் குடும்பத்துடன் ஒன்று கூடியுள்ளனர். ஜான் மட்டும் இன்னும் வரவில்லை. முக்கியமான மீட்டிங். கலந்துகொண்டுவிட்டு நேரத்துக்கு வந்து விடுகிறேன் என்று சொல்லியிருக்கிறான்.
மார்ச் மாதம் குளிர் மிதமாக இருந்ததால் ஹேரி மது வீட்டு கார்டனில் பர்த் டே பார்ட்டிக்கு டெக்கரேட் செய்திருந்தனர்.
மெரூன் கலரில் ஸ்பெஷலாக டிசைன் செய்த ஃபிராக் அணிந்திருந்தார்கள் மதுவும் இனியாளும். ஹேரி அதே கலரில் ஷர்ட் மற்றும் வைட்டில் கோட் சூட் அணிந்திருந்தான்.
நிறைவான வாழ்க்கை வாழ்வதால் மதுவின் அழகு இன்னும் கூடி தெரிந்தது. தொடர்ந்து நடனம் ஆடுவதால் உடம்பில் அனாவசிய சதைகள் எங்கும் கிடையாது. ஹேரியும் அவ்வாறுதான். மதுவுடன் வாழும் மகிழ்ச்சியான வாழ்க்கையில் அவனுக்கு மனமெங்கும் ஒரு நிறைவு. அதனால் அவன் முகம் நிர்மலமாக இருக்கிறது. வெளியில் இன்னும் அமைதியானவனாக, தனக்குள் ஆழ்ந்தவனாக இருக்கிறான். அவன் கம்பீரம் கூடிவிட்டது. தொழிலும் வெளி வட்டாரங்களிலும் அவனுக்கு மறு பேச்சு பேசுபவர் கிடையாது. எங்கும் அவனை பார்ப்பவர்கள் ஒரு அடி தள்ளித்தான் நிற்கிறார்கள். ஆனால் அவன் அவனாக வெளிப்படுவது மதுவிடம் மட்டும்தான். அவன் பேபியை பார்க்கையில் மட்டும் அவன் விழிகள் பாவங்களை வெளிப்படுத்தும்.
இன்று மது தான் அவளின் கண்ணனை ஆராய்ந்து கொண்டிருந்தாள். அது தெரிந்தாலும் விறைப்பாகவே முகத்தை வைத்து சுற்றி கொண்டிருந்தான் ஹேரி.
இனியாள் நார்மல் டெலிவரிதான். மதுவை போல் பெண் குழந்தைதான் வேண்டும் என்று ஹேரி அவ்வளவு ஆசைப்பட்டான். அதே போல் அவனின் குட்டி தேவதை பிறந்தாள். அவள் பிறக்கும்போது பக்கத்தில் இருந்து பார்த்த ஹேரி, இன்னொரு முறை தன் பேபி அந்த கஷ்டம் பட வேண்டாம் என்று நினைத்துதான், இரண்டாவது குழந்தை வேண்டாம் என்று சொல்லிவிட்டான்.
ஆனால் இனியாளுக்கு ஹேரிதான் செல்லம் . அவன் வீட்டிலிருந்தால் வேறு யாரையும் தெரியாது அவளுக்கு. ஹேரி மாதிரிதான் அவளுடைய பழக்க வழக்கங்களும். இப்பொழுதே ஸ்பூன் வைத்து தானாக சாப்பிட்டு விடுவாள். சாப்பாடு சிந்தாது. சிதறாது. அனாவசிய சேட்டைகள் இல்லாமல் நீட்டாக இருப்பாள். தன்னை போல சேட்டை செய்து, தனக்கு சப்போர்ட் செய்யும் மகன் வேண்டும் என்று மது அடம் பிடித்து கொண்டிருக்கிறாள்.
இப்பொழுது சுற்றமும் பந்துக்களும் சூழ தாய் தந்தையின் கையிலிருந்து கேக் கட் பண்ணிய இனியாள் முதலில் தகப்பனுக்கு கொடுத்தாள். அதை பார்த்து உர்ரென்று ஆகிவிட்டாள் மது. ஹேரி இனியாளிடம் “முதல்ல அம்மாக்கு கொடுடா ஸ்வீட்டி” என்று தமிழில் கூறினான் . ஆம் இப்பொழுது நன்றாகவே தமிழ் பேசுகிறான் ஹேரி.
இனியாள் “இல்ல பா. பஸ்ட் அப்பாக்கு. நெக்ஸ்ட்தான் பேபிக்கு” என்றாள் மழலையில். அவள் அப்பா மதுவை பேபி என்று அழைப்பதால் அவளும் அதிகமாக பேபி என்றுதான் அழைப்பாள்.
மீனாட்சி “உங்க பொண்டாட்டி கெடக்குறா. அதான் புள்ள குடுக்கிறாள்ள மாப்ள. நீங்க வாங்குங்க முதல்ல” என்றார். செல்லத்துரையும் “பாப்பாக்கு கை வலிக்க போகுது மாப்பிள்ளை” என்றார்.
“அதான குட்டி சாத்தான் மாதிரி இருந்துட்டு என் தங்கத்த விட்டு பேபின்னு கூப்பிட வைக்கிது” என்ற சத்யனை வேண்டாம் என்று சைகையால் தடுத்து பார்த்தாள் ஊர்வசி.
விதி யாரை விட்டது.
அவர்களை முறைத்தாள் மது. ஹேரிக்கு ஊட்டிவிட்டு விட்டு இனியாள் கேக்கை கையில் எடுத்து தந்தையின் கையையும் சேர்த்து பிடித்து மதுவிற்கு கேக்கை கொடுக்க போனாள்.
“என்னடா தங்கம் பண்றீங்க” என்று ஜனனிதான் கேட்டாள்.
“மடு பேபிக்கு அப்பா ஊட்டிவிட்டாதான் கோவம் போகும் அத்தை” என்று அழகாக மழலையில் கூறினாள் இனியாள்.
மது வெட்கத்தில் ஹேரியிடம் ஒளிந்து கொண்டாள்.
“பாஸ் உங்க பொண்ணு உங்க பேபிய கரெக்ட் பண்றதுல உங்கள பீட் பண்ணிடுவா போலருக்கே” என்றான் சத்யன்.
“சமத்து தங்கம் டா நீ” என்றாள் ஊர்வசி.
“அவ யாரு இந்த ஞான சரஸ்வதி கொள்ளு பேத்தியாக்கும். அப்படியே புத்தியில என்ன கொண்டுள்ள பிறந்திருக்கா” என்ற அப்பத்தாவை வழக்கம் போல் ஒன்றும் செய்ய முடியாமல் முறைத்தார் மீனாட்சி.
ஹேரி மனைவியையும் மகளையும் சேர்த்து அணைத்து கொண்டான். அடுத்து ஹேரியும் மதுவும் இனியாளுக்கு கேக்கை ஊட்டினர். பிறகு ஒவ்வொருவராக அவளுக்கு கேக்கை கொடுத்துவிட்டு பஃபெட் முறையில் உணவை சாப்பிட சென்றனர். சாப்பிட்டு முடித்ததும் எல்லோரும் நீச்சல் குளத்தின் அருகே ஒன்றாக அமர்ந்து பேசி கொண்டிருந்தனர்.
அப்பொழுதுதான் அவசரமாக பார்ட்டிக்கு வந்த ஜானை பார்த்து முறைத்தாள் மது. “சாரி கோலா மேடம். மீட்டிங் கொஞ்சம் லேட். எங்க என்னோட ஏஞ்சல்” என்று கேட்டவனின் காலை ஓடிவந்து கட்டி கொண்டாள் இனியாள்.
ஆம் இனியாள் ஜானின் செல்லம், பட்டு, டார்லு, ஏஞ்சல் எல்லாம். மது வந்ததற்கு பிறகு எவ்வளவோ சொல்லியும் ஹேரி வீட்டில் தங்காதவன் இனியாள் பிறந்ததிலிருந்து அவளுக்காகவே அங்கு தங்குவான் அதிகமாக.
இனியாளும் அவனை அப்படி பார்த்து கொள்வாள். இப்பொழுதும் அவளை தூக்கி கிப்ட் கொடுத்தவனிடமிருந்து வாங்கி கொண்டவள், அவனிடமிருந்து இறங்கி ஓடிபோய் கேக்கை எடுத்து வந்து அவனுக்கு ஊட்டினாள்.
அதை அனைவரும் வியப்பாக பார்த்தனர். இப்பொழுதெல்லாம் ஜான் “நான் இப்படியே இருந்திடறேன். என் ஏஞ்சல் இருக்கா எனக்கு” என்று சொல்லி கொண்டிருக்கிறான்.
சாப்பிட அழைத்த மதுவிடம் ஏற்கனவே சாப்பிட்டதாக சொல்லிய ஜான் அங்கிருத்த கும்பலுடன் அவனும் ஐக்கியமாகி விட்டான்.
மது பூவிடம் “ஆமா அண்ணி. அண்ணா இப்பல்லாம் சனிக்கிழமை கிளையண்ட் மீட்டிங்ன்னு அடிக்கடி போறாரா”
சத்யன் நெஞ்சில் கை வைத்து கொண்டான்.
“ஏன் மது கேக்குற” பூ.
“இல்ல அந்த கிளையண்ட் பேர் ஜுலி. போன வாரம் ரெண்டு பேரும் மீட்டிங் எங்க அரேஞ் பண்ணாங்கன்னு அண்ணன்கிட்ட கேளுங்க”
“ஏய் அந்த குட்டி பிசாசு எதோ கோத்து விட பாக்குது”
“ஓ அப்படியா” என்று ஒரு போட்டோவை காட்டினாள் மது. அதில் ஜூலியும் சத்யனும் பப்பில் கிளாசை வைத்து சீயர்ஸ் சொல்லி கொண்டிருந்தனர்.
அவ்வளவுதான் அந்த பக்கம் ஓடிய சத்யனை பூ துரத்தி கொண்டிருந்தாள். இந்த பக்கம் மது, இனியாள், கீர்த்தி, கவியமுதன் அனைவரும் ‘வெரட்டி வெரட்டி வெளுக்க தோணுது’ பாட்டை போட்டு ஆடி கொண்டிருந்தனர். பூவை ஹேரிதான் சமாதான படுத்தி கூட்டி வந்தான். அப்பொழுதும் கோவமாக வந்தவளிடம் ஊர்வசி “அந்த பார்ட்டில மது நான் எல்லாருமே இருந்தோம் பூ. மது இருக்க இடத்தில சத்யனால தண்ணி அடிக்க முடியுமா. அவள பத்தி உனக்கு தெரியாதா” என்று சொல்லி கொண்டிருந்தாள்.
அதை கேட்ட மது “அடுத்து பிரசாத் ப்ரோ அவர்களுக்கு ஒரு போட்டோ கிளிப் காட்டப்படும்” என்று பிக் பாஸ் ஸ்டைலில் கூறினாள்.
அந்த போட்டோவில் ஊர்வசி கையில் ஸ்டார்புக்ஸ் கப்பை வைத்து குடித்து கொண்டிருந்தாள்.
ஊர்வசி கர்ப்பமாக இருப்பதால் காஃபி டீ குடிக்க கூடாது என்று டாக்டர் பிரசாத்தின் ஆர்டர்.
இப்பொழுது போட்டோவை பார்த்த பிரசாத் ஊர்வசியை முறைத்தான்.
தனக்காக ஊர்வசி பேசி மாட்டி கொண்டதையே கண்டு கொள்ளாமல் மதுவிடம் ஹை பை கொடுத்த சத்யன் அவளுடனும், குழந்தைகளுடனும் சேர்ந்து ‘ரக்கிட ரக்கிட உ’ பாடலுக்கு ஆடி கொண்டிருந்தான்.
வழக்கம் போல் அவர்களை ஒன்றும் செய்ய முடியாமல் பார்த்து முழி பிதுங்கிய ஊர் கணவனிடம் விளக்கம் கொடுத்து கொண்டிருந்தாள். அவன் அதை காதிலேயே வாங்காமல் அறிவுரையை வழங்கி கொண்டிருந்தான்.
ஹேரிதான் “பிரசாத். மது இருக்க இடத்தில ஊர்வசியால காஃபி டீல்லாம் குடிக்கவே முடியாது. அவளே ஊர்வசிக்கு நேரா காஃபி குடிக்க மாட்டா. இந்த போட்டோ பாத்தா அவ வெறும் கப் வச்சிட்டு போஸ் குடுத்துருக்க மாதிரி தெரியுது” என்றவனை பார்த்து அப்பாவியாக தலையாட்டினாள் ஊர்வசி.
இப்படியாக பிறந்தநாள் விழா இனிதாக முடிந்தது. இன்று அனைவரும் ஹேரி மது வீட்டிலேயே தங்கி விட்டனர். குழந்தைகள் இருந்ததால் பெண்கள் சீக்கிரமே தூங்க சென்றனர். அப்பத்தாவும் முன்பே தூங்க சென்று விட்டார். ஆண்கள் இன்னும் சிறிது நேரம் பேசி கொண்டிருந்தனர்.
error: Content is protected !!