Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

நிவி அம்மு - மன்னவன் மஞ்சத்தில்

மன்னவன் மஞ்சத்தில் 3

3.

மஞ்சம் – 3

தன் மகன் கூறியதை அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

“அக்னி…!” கம்பீரமான அவர் குரலில் இருந்த சிறு நடுக்கத்தை அவனால் நன்றாக உணர முடிந்தது. அவன் கை முட்டிகள் இறுகியது.



Advertisement

“நான் செய்ற எல்லாமே யோசிச்சு தான் செய்றேன். இனி அவள் இந்த வீட்டில் தான் இருப்பாள். உனக்கு அவளை பாக்க பிடிக்கலனா விட்டுடு. அதே சமயம் பாத்துக்க பிடிக்கலனா நீ அவளை கண்டுக்காத. அமர் அம்மாவை சாப்பிட வை. நீங்க எல்லாரும் சாப்பிடுங்க.” என்றவன் மனைவியை தேடி அறைக்குள் சென்றான்.

மிகவும் விசாலமான அறை கிடையாது. பத்துக்கு பத்து அறை. சுவர் ஓரமாக இருவர் மட்டும் உறங்க கூடிய கட்டில் இருக்க அதில்
ஒருக்களித்து படுத்து கிடந்தாள். வேறு எதுவும் அந்த அறையில் கிடையாது

அழுது வீங்கிய அவள் முகம் அவள் அழகை குறைத்து இருந்தது. நிவேதிதா பேரழகி இல்லை என்றாலும் ஹோம்லியான கலையான முகம். ரசிக்க கூடிய முகம்.

Advertisement

சுவரில் சாய்ந்து மனைவி முகத்தையே வெறிக்க பார்த்துக் கொண்டிருந்தவன் கண்களில் ரசனை இல்லை.. முகத்தில் கனிவு இல்லை.. உடல் மொழி சாதாரணமாக இல்லை.

Advertisement

ஏதோ ஒன்று அவன் விழிகளில்.. அவள் முகம் தாண்டி அவன் பார்வை கீழே இறங்கி கழுத்தில் பயணிக்க சரிந்து கிடந்த தாலியை கண்டவன் கண்கள் சிவந்தது.

தன் கோபத்தை வெளிப்படுத்த விரும்பாமல் கண்களை இறுக்கி மூடி கொண்டவன் திரும்பி சுவரில் ஓங்கி குத்த, அதே நேரம் நிவேதா விழிகளை திறந்தாள்.

தலை வலி, இமை வலி உயிர் போனது. விழிகளை திறப்பது மலையை நகர்த்தி வைப்பது போல் இருந்தது அவளுக்கு. தட்டு தடுமாறி விழிகளை திறந்தவள் இருக்கும் இடம் தெரியாமல் பயந்து வெடுக்கென்று எழுந்து அமர்ந்தவளுக்கு கைகள் தானாக வைற்றை சுற்றி அணை போட்டுக் கொண்டது.

Advertisement

வேகமாக எழுந்த தன் மட தனத்தை நொந்து கொண்டே திரும்பியவள் சுவரில் ஓங்கி குத்திய அக்னி தான் தென்பட்டான்.
அவனை கண்டதும் ஒருவித வெறுப்பு அவள் விழிகளில் படர்ந்தது. புடவை முந்தானையை இழுத்து சுருட்டி பிடித்துக் கொண்டவள் கட்டிலில் இருந்து இறங்க, அவள் கால் கொலுசு சின் மூன்று முத்துக்கள் மட்டும் மெலிதாக எழுப்பிய சத்தம் அக்னி காதுகளை தீண்டி விட, திரும்பி நின்றவன் நேர்கொண்டு மனைவியை பார்த்தான்.

அவன் பார்வைக்கு அர்த்தம் புரியாமல் கீழே குனிந்து கொண்டவள் “நான் போகணும்.” என்றாள்.

“எங்க…?” அக்னி விழிகளில் செம்மை கூடியது.

“என் வீட்டுக்கு.”

“இது யார் வீடு?”

“உங்க வீடு.”

“அடிச்சு பல்லை எல்லாம் கழட்டி எடுத்துடுவென். இனி இது தான் உன் வீடு. சாகுற வரைக்கும் இனி நீ இங்க தான் இருக்கணும். ஒருவேளை தற்கொலை பண்ணிக்க தொனுச்சுந்நா இங்கேயே இந்த ரூம்லையே தற்கொலை பண்ணிக்க.” என்றவன் அங்கு ஓரமாக இருந்த பிரோவை திறந்தவன் அதில் இருந்து ஒரு மஞ்சள் பையை எடுத்தான்.

பையை பிடித்தபடி மனைவி அருகில் வந்தவன் அவளை நெருங்காமல் கட்டில் அருகில் நின்றபடி பைக்குள் கை விட்டு முதலில் கையரு எடுத்தான். அடுத்தது கத்தி எடுத்தான். அடுத்தது விஷம். அடுத்தது எலி மருந்து. அனைத்தையும் ஒவ்வொன்றாக கட்டிலில் தனி தனியாக வைத்தவன்.

“உனக்கு சாகணும்னு தோனுச்சுன்னா க்கையரு இருக்கு தூக்கு போட்டு தொங்க, நீ தேடி அலைய வேண்டாம்.
இரண்டாவது கத்தி இருக்கு கழுத்தை அறுத்துக்கோ இல்லனா கையை அறுத்துக்கோ. மூன்றாவது விஷம் இருக்கு இல்லனா எலி பேஸ்ட் இருக்கு உனக்கு எது பிடிச்சு இருக்கோ எடுத்து சாப்பிடு. ஆனால் சத்தம் எல்லாம் செத்து போகணும். இழுத்துட்டு கிடக்க கூடாது. உன் கழுத்துல இருக்க தாலியை கழட்டுனு நினைக்காத கை இருக்காது அப்புறம்.” அதிரடியாக கூறியவன் அனைத்தையும் மீண்டும் அந்த பைக்குள் வைத்து விட்டு வைக்கும் இடத்தையும் அவளிடம் காட்டினான்.

நிவேதா அதன் பிறகு எதுவும் பேச வில்லை. பேசவும் அவளிடம் நிதானம் இல்லை. அவன் கூறி சென்றதே அவளுக்குள் கனன்று எரிந்தது.

கட்டிலில் அமர்ந்து காலை மடக்கி முட்டியில் முகம் புதைத்துக் கொண்டவள் கண்ணீர் வற்றி போய் துச்சமான பார்வையோடு அமர்ந்து இருந்தாள்.

அக்னி வெளியே சென்றவன் அமரனும், பாட்டியும் மட்டும் சாப்பிடுவதை கண்டு தன் தாயை தேடினான்.

சூடாமணி மூலையில் தலையில் கை வைத்து வெளிறிய முகத்தோடு அமர்ந்து இருப்பதை கண்டு நேராக சமையல் அறைக்குள் சென்று தட்டை எடுத்து வந்தவன் தாய்க்கு சாப்பாடு போட்டு எடுத்து வந்து தாய் அருகில் அமர்ந்தான்.

ஒரு கை சாப்பாட்டை தாய் வாய் அருகே கொண்டு செல்ல, சூடாமணி மகன் கையை தட்டி விட்டார்.

அக்னி கோபப்படவில்லை. மீண்டும் அவர் வாய் அருகே கொண்டு செல்ல அப்போதும் தட்டி விட்டார்.

“அம்மா சாப்பாட்டை வீண் பண்ண கூடாதுன்னு நீ தான் சொல்லி கொடுத்த. ஒரு கை பிடி சாப்பாடு இல்லாமல் கஷ்டப்பட்ட நமக்கு தெரியும். சாப்பிடு. உன் கோபத்தை சாப்பாடு மேல காட்டாத. உன் கோபத்தால் நடந்து முடிந்த எதுவும் மாறாது. நடக்க போறதும் மாறாது. நீ சாப்பிடலனா நான் இந்த இடத்தை விட்டு எழுந்திருக்க மாட்டேன். தோட்டத்துக்கு போக மாட்டேன்.” என்றான் உறுதியான குரலில்.

மகனின் அறிதான பிடிவாத குணத்தை நன்கு அறிவார். வேறு வழயில்லாமல் மகன் ஊட்டியதை வாய் திறந்து வாங்கி கொண்டார். சூடாமணி கோபத்தில் இருக்கும் போதோ, வேதனையில் இருக்கும் போதோ தன் கோபத்தை முதலில் சாப்பாட்டில் தான் காட்டுவார். பட்டினி கிடப்பார். சிறு வயதில் இருந்து இது மாதிரி நேரத்தில் அக்னி ஊட்டினாள் மட்டும் மறுக்காமல் சாப்பிட்டு விடுவார்.

மகன்களின் பாசத்துக்கு மட்டும் அடங்கி போக கூடியவர் சூடாமணி. அமரன் சிறு சிரிப்புடன் சாப்பிட்டு முடித்தவன் என் பொண்ணுக்கு எவ்வளவு ஆங்காரம் இருந்தாலும் அண்ணா கிட்ட மட்டும் அடங்கி போய்டுது பார்த்தியா?” பாட்டி காதில் ரகசியமாக கூற,

“அவளுடைய ஆங்காரத்தால் தான் வாழ்க்கையை இழந்தா உங்களை இழக்க மாட்டாள் டா. உன் அம்மா வை அக்னியை விட வேற யாராலும் புரிஞ்சிக்க முடியாது.” என்றார் பெருமையாக.

தாய் சாப்பிட்டு முடித்ததும் வேறு தட்டில் மனைவிக்கு சாப்பாடு போட்டு எடுத்துக் கொண்டு உள்ளே சென்றவன், அவள் காலை கட்டிக் கொண்டு அமர்ந்து இருப்பதை கண்டு,

“படிச்ச பிள்ளை தானே.. கொஞ்சமாவது அறிவு இருக்கா? பிள்ளை தாச்சி எதுக்கு காலை கட்டிக்கிட்டு ஒக்காந்து இருக்க? கால் நீட்டி போட்டு உட்கார்.” என்றான் நிதானமான குரலில்.

நிவேதா கால்கள் தானாக நீண்டது.

“இந்தா சாப்பிடு.” அவள் அருகில் தட்டை வைத்தான்.

நிவேதா உதடு திறக்கும் முன்னே “எனக்கு வேண்டாம்னு சொல்லாத.  இந்த சோறு உனக்கு கிடையாது. உன் வயிற்றில் வளரும் பிள்ளைக்காக. பட்டினி கிடந்தது பிள்ளையை தண்டிக்காத.” என்றான் கறாரான குரலில்.

“இன்னைக்கு மட்டும் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ.
மாலையில் இருந்து காரம் இல்லாமல் சமைக்க சொல்றேன். சாப்பிடாமல் இருந்து என் ஆத்திரத்தை கிளப்பாத.” என்றவன் தட்டை வைத்து விட்டு வெளியே சென்று விட்டான்.

“அம்மா தோட்டத்துக்கு போய்ட்டு வரேன்.” என்றவன் தன்னுடைய புல்லட் எடுத்துக் கொண்டு கிளம்பி விட்டான்.

“அமரா நான் கொஞ்ச நேரம் வெளியே போய்ட்டு வரேன். அம்மா நீ போய் ஓய்வெடு.” என்றவர் மனம் நிம்மதியாகும் இடத்தை தேடி சென்றார்.

அவர் வீட்டில் இருந்து கொஞ்ச தூரம் நடந்து வந்தால் காலி மனை இருக்கும். அதில் மரங்கள் வளர்த்து இருப்பார்கள். அமரனுக்காக வாங்கிய இடம். அந்த இடத்தில் இருக்கும் வேப்ப மரத்தடியில் வேரில் தலை வைத்து படுத்துக் கொண்டவர், ஆழ்ந்த யோசனைக்கு சென்றார்.

மகன் மீது இதுவரை அவநம்பிக்கை உருவானதே கிடையாது இவருக்கு. ‘யாரையும் காதலித்தது கிடையாது. எனக்கு மகனாக மட்டுமே இருந்தான். கொடுத்த வார்த்தையை காப்பாற்றினான். நீ காதலிக்க கூடாது என்ற வார்த்தையை இத்தனை வருடங்கள் காப்பாற்றியவன் என் மகன். அப்படி பட்டவன் எதற்காக இவளை திருமணம் செய்து கொண்டான்.
எதற்காக?’ தலையே வெடித்து விடுவது போல் உணர்ந்தார்.

சூடாமணி பெயருக்கு ஏற்றது போல் சூடான ஆள். முன்கோபி. அகங்காரமும், ஆங்காரமும் அதிகமும். குடும்பத்தை தவிர்த்து வேறு யாரிடமும் சிரித்து கூட பேச மாட்டார். கணவன் விட்டு சென்ற பிறகு தன் மகன்கள் மட்டும் தான் தன் வாழ்க்கை என அவர்களுக்காக தன் வாழ்க்கையை அர்ப்பணித்த இரும்பு பெண்மணி.

செய்யாத வேலை இல்லை. மகன்களை படிக்க வைத்தார். அக்னி பள்ளி படிப்பை முடிக்கும் வரை குடும்பத்தில் அன்றாட செலவுக்கே பெரும் திண்டாட்டம் தான். அக்னி கல்லூரி சேரும் போது இரவில் வேலை செய்து கொண்டே படிப்பையும் குடும்பத்தையும் பார்த்துக் கொண்டான். பெரிய வருமானம் இல்லை என்றாலும் அடுத்த வேலை சாப்பாட்டுக்கு அல்லாடாமல் போனது வாழ்க்கை.

சூடாமணி, அக்னி இருவரும் கடினமாக உழைத்ததன் பலன் தான் இன்று ஓரளவுக்கு நடுத்தர வாழ்க்கை அமைந்தது.

சூடாமணி க்கு மூத்த மகன் அக்னி தான் உயிர். அவனுக்கு பெண் பார்க்க தொடங்கிய போது ஒவ்வொரு பொண்ணுக்கும் ஒவ்வொரு குறை கூறினார். அவர் மனதுக்கு யாரையும் பிடிக்கவில்லை. மகன் திருமணத்தை விமர்சையாக நடத்த வேண்டும் என்று பல கனவுகள் கண்டு இருந்தார். இதே இடத்தில் அமர்ந்து தான் அத்தனை கனவுகளையும் கண்டார்.

இன்று அனைத்தும் பாழாய் போக. உயிராய் நினைத்த தாய் கூட இசாகானனுல்லாமல் தாலி கட்டி விட்டான். வேறு ஏதேனும் பென் என்றால் கூட ஏற்றுக் கொண்டு இருப்பார்கள். அந்த பெண் நிவேதா என்பது தான் அவரால் சீரணிக்க முடியவில்லை.

அதற்கு காரணமும் உண்டு. அந்த குடும்பத்தை மொத்தமாக வேரறுத்து ஒதுக்கி வைத்து விட்டார். அப்படி பட்ட குடும்பத்து இது
பெண்ணை எப்படி ஏற்றுக் கொல்வா?.
அதிலும் வயிற்றில் வேறு ஒருவனின் பிள்ளையுடன்

தொடரும்…..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!