Skip to content
Post Views: 141

அத்தியாயம்-34
“என்ன மதி.. நீ உங்க வீட்ல ஒண்ணுமே சொல்லலையா?” அவன் புருவம் உயர்த்தி அத்தனை ஆச்சரியம் கலந்த குரலில் கேட்க,
‘என்ன ஆஸ்கரா குடுக்கராங்க இப்படி நடிக்கிறான்..’என்று அவனது ஓவர் ஆக்டிங்கைக்கண்டு மனதிற்குள் வசைபாடினாள்.
Advertisement
“மதியா..? அவளுக்கு என்ன தெரியும்?” அவளது அப்பா புரியாமல் கேட்க.
“அங்கிள், மதியும் நானும் ஒரே ஆஃபீஸ்லதான் வேலை செய்றோம்.. மதி என்னோட டீம்லதான் இருக்கா.. ஏன் மதி, நீ அங்கிள்கிட்ட இன்னும் சொல்லலையா?” ஏதோ தங்களுடைய ரகசியக் காதலை இவள் மறைத்துவிட்டது போல அவன் அத்தனை நயமாகக் கேட்டான்.
அவள் கோபத்தில் அனல் பறக்க அவனை முறைத்துப் பார்த்தாள்.
Advertisement
“பாப்பு.. ஆதி தம்பிதான் உன்னோட பாஸ்னு நீ ஏன் எங்ககிட்ட சொல்லல..?” அப்பா சற்றே அதட்டலாக கேட்க,
Advertisement
பாப்புவா என்று அவன் கண்கள் விஷமத்தில் பளபளத்தது.
“அது… அது வந்து.. நான் மறந்துட்டேன்பா…”
“இவ்வளவு முக்கியமான விஷயம் எப்படிடி உனக்கு மறக்கும்?” அம்மா அவளைக் கடிந்துகொண்டாள்.
Advertisement
“எப்படியோ மறந்துட்டேன் விடுங்களேன்.. மத்தவங்ககிட்ட சொல்ற அளவுக்கு அது ஒன்னும் அவ்வளவு முக்கியமான விஷயமா எனக்குத் தோணல!” என்று படபடவெனப் பொரிந்து தள்ளிவிட்டு, காலைத் தரையில் உதைத்தபடி அங்கிருந்து எழுந்துபோனாள் மதி.
“ஹேய், சாப்பிட்டுட்டு போடி.. பாருங்களேன் இவ எப்படி இருக்கான்னு…”
“சரி விடு ரேணு..” அப்பா அம்மாவை அமைதிப்படுத்திவிட்டு, ஆதியின் பக்கம் திரும்பினார்.
“தம்பி… மதி ஏதோ மூட் அவுட்ல இருக்கா போல, நீங்க ஒன்னும் தப்பா எடுத்துக்காதீங்க. வீட்டுக்கு வந்ததுல இருந்தே ரொம்ப டல்லாதான் இருக்கா.. அவளோட பழைய கலகலப்பு சுத்தமா இல்லை. ஆஃபீஸ்க்குப் போகலையான்னு கேட்டா, வேலையை விட்டுட்டேன்னு சொல்றா.. எங்களுக்கு ஒன்னும் புரியல. உங்களுக்கு ஏதாவது தெரியுமா தம்பி?”
‘அவளோட மூட் அவுட்டுக்குக் காரணமே நான் தான், என்கிட்டயே வந்து இதைக் கேக்குறாரே…’
“அக்சுவலா அங்கிள்.. மதியோட இந்த மூட் அவுட்டுக்கு நான்தான் காரணம்…”
“என்ன தம்பி சொல்றீங்க..?”
“ஆஃபீஸ் வேலையில அவ சின்னத் தப்பு பண்ணிட்டான்னு, நான் கொஞ்சம் அதிகமாவே அவளைத் திட்டிட்டேன். அதான் என் மேல கோவத்துல இருக்கான்னு நினைக்கிறேன். ஸாரி அங்கிள்… மதிகிட்ட ஸாரி கேட்டு, அவளைத் திரும்பவும் கூட்டிட்டுப் போகத்தான் நான் இங்க வந்தேன்,” அவரிடம் சற்றே தயக்கத்துடன் பாதி உண்மையை மட்டும் சொன்னான்.
“ஓ.. பரவாயில்லை தம்பி. தப்பு பண்ணினா திட்டறதுதானே? நம்ம மதிதானேன்னு நீங்க உரிமையா நாலு வார்த்தை சொல்லியிருப்பீங்க. நம்ம ஆதி சாரே இப்படிச் சொல்லிட்டாரேன்னு அவளும் வருத்தப்பட்டு இருப்பா. உங்களுக்குத்தான் தெரியுமே, அவ ரொம்ப சென்சிடிவ் டைப்னு. கொஞ்ச நாள்ல சரியாகிடுவா. இன்னும் ரெண்டு நாள்ல என்னோட மச்சான் பொண்ணுக்குக் கல்யாணம், அதுவரைக்கும் மதி இங்கேயே இருக்கட்டும். அப்புறமா நானே அவகிட்ட பேசி சென்னைக்கு அனுப்பி வைக்கிறேன்,” அப்பா ஆறுதலாகச் சொன்னார்.
“ஓகே அங்கிள்..” என உடனே ஒப்புக்கொண்டான்.
சாப்பிட்டு முடித்ததும் தன் கையில் இருந்த காலி தட்டோடு அவன் எழ,
“அய்யோ தம்பி! நீங்க ஏன் பிளேட்டை எடுக்குறீங்க? நீங்க வைங்க, நான் எடுத்துக்கறேன்..” அம்மாவிற்கு நிஜமாகவே தர்மசங்கடமாகப் போய்விட்டது.
“நோ பிராப்ளம் ஆன்ட்டி.. நான் வாஷ் பண்ணி வைக்கிறேன். கிச்சன் இங்கதானே இருக்கு?” என்று சாதாரணமாகக் கேட்டுக்கொண்டே சமையலறையினுள் நுழைந்து, தட்டைக் கழுவத் தொடங்கினான்.
“ஆதி தம்பி, நீங்க கெஸ்ட், நீங்க போய் இதெல்லாம் பண்ணலாமா? வைங்க கீழ..”
“இதுல என்ன இருக்கு ஆன்ட்டி.. ஒருத்தர் வீட்டுக்குக் கெஸ்ட்டா போனா சும்மா ராஜா மாதிரி கால் மேல கால் போட்டு உட்கார்ந்துடக் கூடாது, கூட மாட உதவி பண்ணனும்னு எங்க அம்மா சொல்லியிருக்காங்க..”
“ரொம்ப நல்ல பழக்கம் தம்பி. எனக்கும் தான் வீட்ல ஒன்னு இருக்கே.. ஒரு வேலையும் செய்யாது. மகாராணி மாதிரி என்னை அதிகாரம் பண்ணிக்கிட்டு இருக்கும்..”
தன் அம்மா தன்னை வசைபாடுவதைக் கேட்டுக்கொண்டே மதி சமையலறைக்குள் நுழைந்தாள்.
“அம்மா.. என்னைப்பத்தி எதுக்கு மத்தவங்ககிட்ட குறை சொல்லிட்டு இருக்க?” எரிச்சலோடு கேட்டாள்.
“ஹேய் சும்மா இருடி.. ஆதி தம்பி ஒன்னும் மத்தவங்க கிடையாது. உன்னைப்பத்தி நல்லா தெரிஞ்சவர்தானே..” அம்மா அவளை மீண்டும் அதட்டினாள்.
அவள் கோபத்துடன் அங்கிருந்து வேகமாய் வெளியேறினாள்.
ஆதி தனக்குள்ளேயே சிரித்துக் கொண்டான். அவளது ஒவ்வொரு முகச்சுளிப்பையும், முறைப்பையும்,எரிச்சலையும் அவன் ரசித்துக்கொண்டிருந்தான்… ‘என் செல்லம் கோபப்படும் போது பார்க்க எத்தனை அழகாக இருக்கா.’
சமையலறையை விட்டு வெளியே வந்தவன், அப்பாவும் மதியும் இருந்த வரவேற்பறையை நோக்கி நடந்தான்.
“ஓகே அங்கிள்.. நான் கிளம்புறேன்.”
“எங்க தம்பி கிளம்புறீங்க? நம்ம வீடு இருக்கும்போது நீங்க வேற எங்கேயும் போகக் கூடாது. நீங்க இங்கதான் தங்கணும்,” அப்பா அன்போடு கட்டளையிட்டார்.
“அப்பா…!” மதி அதிர்ந்து கத்திவிட்டாள்.
“இட்ஸ் ஓகே அங்கிள்.. நான் ஹோட்டல்ல ஸ்டே பண்ணிக்கிறேன்,” என்றான் அப்பாவியாக முகத்தை வைத்துக்கொண்டு,
“நோ.. நோ.. நீங்க இங்கதான் ஸ்டே பண்ணனும். பாப்பு, மாடி ரூமை தம்பிக்கு ரெடி பண்ணுமா..”
“பாப்பு” என்று அவளுக்கு மட்டும் தெரியும்படி உதடு குவித்து கூறினான்.
உள்ளுக்குள் புகைந்தவள்,
“அப்பா.. அவர்தான் ஹோட்டல்ல தங்குறேன்னு சொல்றார்ல.. நம்ம வீடெல்லாம் அவருக்கு வசதியா இருக்காதுப்பா..” அவனை எப்படியாவது இங்கிருந்து துரத்த வேண்டும் என்பதில் குறியாக இருந்தாள்.
“எனக்கு ஒன்னும் பிராப்ளம் இல்லை அங்கிள்.. உங்களுக்குப் பிரச்சனை இல்லைன்னா, எனக்கும் இங்க தங்குறது ஓகே தான்,”
“அப்புறம் என்னம்மா? தம்பியே ஓகே சொல்லிட்டாருல, போமா.. போய் மாடி ரூமை அரேஞ்ச் பண்ணு,” அவளுக்கு மறுப்புச் சொல்ல எந்த இடமும் தராமல் அப்பா அவளை அவசரப்படுத்தினார். மதி வேறு வழியின்றி முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டு மாடிக்குச் சென்றாள்.
“தம்பி, நீங்க போய் தூங்குங்க, காலையில பேசிக்கலாம்,” என்று அவனிடம் சொல்லிவிட்டு, ‘போய் மதிகிட்ட பேசு’ என்பது போல அப்பா ரகசியமாகத் தன் கண்களாலேயே சைகை காட்டினார்.
ஆதி மகிழ்ச்சியோடு தலையாட்டிவிட்டு, மதியை தொடர்ந்து மாடிக்குச் சென்றான்.
“என்னங்க, இங்க என்ன நடக்குது?” சமையலறையை விட்டு வெளியே வந்த அம்மா, இரண்டு ஆண்களுக்கும் இடையே நடந்த அந்த ரகசியக் கண் ஜாடையை கவனித்துவிட்டுக் கேட்டாள்.
“ஆதி தம்பி சொன்னாரே.. ஆஃபீஸ்ல பிராப்ளம் அது இதுன்னு.. அதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு? இது வேற கதை ரேணு.. லவ்வர்ஸ் ஃபைட்னு சொல்லுவாங்களே ஊடல், அது மாதிரி இருக்கு.”
“அப்போ மதியும் அந்தத் தம்பியும் லவ் பண்றாங்கன்னு சொல்றீங்களா?”
“அப்படித்தான் தெரியுது..”
“என்னங்க, இவ்வளவு சாதாரணமா சொல்றீங்க?”
“ரேணு, உனக்கு ஞாபகம் இருக்கா? நாம பெங்களூர்ல இருந்தப்போ, ஆதி தம்பி நம்ம வீட்டுக்கு டியூஷன் சொல்லிக்கொடுக்க வந்தப்ப உன்கிட்ட ஒன்னு சொன்னேனே..”
“என்ன சொன்னீங்க?”
“ஆமா, இவ ஒரு ஞாபக மறதி கேஸ்.. நம்ம மதியோட விளையாட்டுத் தனத்துக்கும், குழந்தை மனசுக்கும், ஆதி தம்பி மாதிரி ஒரு பொறுப்பான பையன் அமைஞ்சா நல்லா இருக்கும்னு சொன்னேன்.”
“ஆமாமா.. சொன்னீங்க.”
“எனக்கு அப்பவே மனசுல ஒரு ஆசை.. ஆதி நம்ம வீட்டுக்கு மாப்பிள்ளையா வந்தா நல்லா இருக்குமேன்னு. கடவுள் அதைக் கேட்டுட்டார் போல.. இத்தனை வருஷம் கழிச்சு ரெண்டு பேரையும் திரும்பவும் மீட் பண்ண வச்சிருக்காரு பாரு. இதுக்கு பேர்தான் ‘சாமி போட்ட முடிச்சு’னு சொல்லுவாங்க.”
“அதென்னவோ நிஜம்தான்.. ஆனா இந்த மதி பாருங்களேன் ஆதி தம்பியைப் பத்தி ஒருவார்த்தைக்கூட மூச்சுவிடாம இருந்திருக்கா.. நம்ம பொண்ணு எவ்வளவு வளர்ந்துட்டா.. இவ்வளவு பெரிய விஷயத்தை நம்மகிட்ட மறைச்சிருக்கா,” அம்மா செல்லமாகக் குமுறினாள்.
“உன்னோட பொண்ணுதானே, வேற எப்படி இருப்பா? சொந்த அத்தை பொண்ணு நீ.. உன்னைக் கட்டிக்கிறதுக்குள்ள நான் பட்டபாடு இருக்கே… ஐயையோ!
வீட்ல சொல்லுமான்னு உன்கிட்ட எவ்வளவு கெஞ்சினேன், ஒரு வார்த்தை பேசினியா? நான் தானே உங்க அருவா மீசை அப்பாகிட்ட கால்ல விழாத குறையா கெஞ்சி, கூத்தாடி உன்னைக் கட்டிக்கிட்டேன்.”
“பின்னே எங்க அப்பா என்ன உங்களை மாதிரியா? நான் லவ் பண்ணேன்னு தெரிஞ்சிருந்தா.. என்னை வெட்டிப் போட்டிருப்பார். நீங்க என்னடான்னா, ரெண்டு பேரையும் மாடியில தனியா பேச அனுப்பி வைக்கிறீங்க.. நீங்க ரொம்பத்தான் மாடர்ன் அப்பாவா ஆயிட்டீங்க.”
“சரி சரி.. பேசிக்கிட்டே அப்படியே விட்றாத.. எதுக்கும் மேல் மாடி மேல ஒரு கண் வச்சுக்கோ. நான் ஒரு நைட் வாக் போயிட்டு வந்துடுறேன்,” வாக் கிளம்பும் முன் தன் மனைவிக்கு எச்சரிக்கை செய்ய மறக்கவில்லை அந்த மாடர்ன் அப்பா.
மாடி அறையில்…
மதி ஆதிக்காக படுக்கையைச் சரிசெய்து கொண்டிருந்தாள்.
“வாவ்.. ரூம் ரொம்ப நல்லா இருக்கு மதி… என்று உற்சாகமாக சொன்னவன்,
“உங்க அப்பா ரொம்ப நல்லவரா தெரியுறாரு..” என்றான்.
அவள் ஆத்திரத்துடன் அவன் பக்கம் திரும்பினாள், “அவரு நல்லவர் மட்டுமில்லை.. சரியான ஏமாளியும் கூட. அதான் உங்களோட நடிப்பை நம்பி உங்களை வீட்டுக்குள்ள தங்க வச்சிருக்காரு. அவருக்குத் தெரியாது நீங்க எவ்வளவு பெரிய கைதேர்ந்த நடிகர்னு..!”
“மதி…” அவன் வேதனை நிறைந்த குரலில் அவளது பெயரை அழைத்தான்.
“இப்ப எதுக்கு இங்க வந்திருக்கீங்க? நான் உயிரோட இருக்கேனா இல்ல செத்துட்டேனான்னு…” அவளை மேற்கொண்டு பேச அவன் விடவில்லை; பதற்றத்தோடு அவளது வாயைத் தன் உள்ளங்கையால் மூடினான். அவனது கண்களில் அத்தனை துயரமும் வலியும் தெரிந்தன. அவள் ஒரு கணம் அப்படியே உறைந்து போனாள். ஆனால் அடுத்த கணமே, அவனது கையை ஆக்ரோஷமாக உதறித் தள்ளினாள்.
“என்னை இனிமே தொடாதீங்க! முதல் நாள் கிஸ் பண்ணிட்டு.. அடுத்த நாள் அதை ஒரு மிஸ்டேக்னு சொன்னவர்தானே நீங்க? இப்போ எந்த உரிமையில என்னைத் தொடுறீங்க?” தொண்டையை அடைத்த அழுகையை விழுங்கிக் கொண்டு கேட்டாள்.
“ஐ அம் சாரி மதி.. நான் செஞ்சதெல்லாம் தப்புதான்,” அத்தனை குற்ற உணர்ச்சியுடன் தன் தவறை ஒப்புக்கொண்டு மிகத் தாழ்மையான குரலில் சொன்னான்.
அவள் ஏளனமாகப் புன்னகைத்தாள். “ஸாரியா…? நான் பட்ட வேதனையெல்லாம் இந்த ஒரு வார்த்தையில சரியா போயிடுமா? இப்ப எதுக்கு இங்க வந்து என்கிட்ட ஸாரி கேட்டுட்டு இருக்கீங்க? உங்களுடைய முன்னால் காதலி, இந்நாள் ஃபியான்ஸேவுக்கு என்ன ஆச்சு? அவளுக்கு நீங்க இங்க இருக்கிறது தெரியுமா? இல்ல ஒருவேளை நீங்க யார் பின்னாடி சுத்தினாலும் அதை ஜாலியா எடுத்துக்கிற பரந்த மனசு கொண்ட ஜென்டில் வுமனா அவ..?” அவளது குரலில் எள்ளல், ஏளனம் தாண்டவமாடியது.
“ஐ யம் சாரி மதி..” அவளை இவ்வளவு காயப்படுத்திவிட்டோமே என்ற குற்ற உணர்ச்சியில் அவன் தவித்தான்.
அவன் மீண்டும் மீண்டும் ‘ஸாரி’ சொன்னது அவளது ஆத்திரத்தை இன்னும் தூண்ட, அவள் வெடித்தாள்.
“அதான் தர்ஷாதான் உங்களோட ஃபியூச்சர்னு தெளிவா சொல்லிட்டீங்கல்ல? அப்புறம் எதுக்கு இங்க வந்து டிராமா பண்ணிட்டு இருக்கீங்க? என்கிட்ட இருந்து உங்களுக்கு உண்மையா என்னதான் வேணும்… எனக்கு ஒண்ணுமே புரியல!!”
“ஸாரி மதி…” என்றான் மீண்டும்..
“இனிமேல் அந்த வார்த்தையைச் சொன்னீங்க.. அவ்வளவுதான்! ஒருத்தரை உயிரோட கொன்னுட்டு நீங்க சொல்ற ஸாரியால என்ன ஆகப்போகுது? போன உயிர் போனதுதானே? தயவுசெஞ்சு ஸாரின்னு சொல்லி அந்த வார்த்தையை கேவலப்படுத்தாதீங்க!” அவள் கோபத்தில் பொரிந்து தள்ளினாள்.
“எனக்குத் தெரியும் மதி, எனக்கு ஸாரி கேக்குறதுக்குக் கூடத் தகுதி இல்லைன்னு.. ஆனா என்கிட்ட அதைத் தவிர வேற எதுவும் இல்லை..”
“தயவுசெஞ்சு எனக்குக் கொஞ்சம் புரிய வைக்கிறீங்களா… இந்த ஒரே வாரத்துல அப்படி என்னதான் மாறிடுச்சு? ஒருவேளை நீங்க ஏதாவது போதி மரத்துக்கு அடியில போய் உட்கார்ந்தீங்களா? ஆனா ப்ளீஸ்… உங்களுக்கு பழைய ஞாபகம் எல்லாம் வந்திருச்சுன்னு மட்டும் சொல்லிடாதீங்க, அதைவிடகொடுமை வேற ஒன்னும் இருக்காது!”
அவனிடமிருந்து எந்தப் பதிலும் வராததால்,
“ஒருவேளை அதுதான் காரணமா?” அவனது முகத்தை உற்றுப் பார்த்துக் கேட்டாள்.
“இல்லை… எனக்குப் பழைய ஞாபகம் எதுவும் வரல. அது வரணும்ன்ற அவசியமும் எனக்கு இப்போ இல்லை. உன்னைப் பிரிஞ்சிருந்த இந்த ஒரு வாரத்துல நான் இதை நல்லா புரிஞ்சுக்கிட்டேன். என்னோட பாஸ்ட் என்னவா வேணா இருந்துட்டுப் போகட்டும்.. ஆனா நீ இல்லைன்னா எனக்கு ஃபியூச்சரே இல்லைன்னு புரிஞ்சுக்கிட்டேன் மதி… இனிமேல் கடந்த காலத்தை நினைச்சு நான் ஊசலாடப் போறதில்லை.. நான் இந்த நிமிஷத்துல வாழப்போறேன்..”
“நீங்க என்ன வேணா பண்ணுங்க.. அதைப்பத்தி எனக்குக் கவலை இல்லை.ஆனா என்னை இதுக்குள்ள இழுக்காதீங்க…”
“மதி, நான் பண்ணினது மன்னிக்க முடியாத தப்புதான்.. ஆனா ப்ளீஸ், நான் ஏன் அப்படிப் பண்ணினேன்ற காரணத்தையாவது கொஞ்சம் கேளு..”
“உங்க காரணத்தைக் கேக்குறதுல எனக்கு எந்த இன்ட்ரஸ்ட்டும் இல்லை. அது எதுவா இருந்தாலும், நமக்குள்ள நடந்த எதையும் அது மாத்தப் போறதில்லை. சோ நீங்க இப்போ கிளம்பலாம்.. அப்பா அம்மாகிட்ட நான் சொல்லிக்கிறேன்,” என்று சொல்லிவிட்டு அவள் வெளியேறத் திரும்பினாள்.
“எனக்கு டிமென்ஷியா (Dementia – ஞாபகமறதி நோய்) வர்றதுக்கான ஆபத்து இருக்கு.. எனக்கு இப்போ இருக்கிற நினைவுகள் கூட அழிய வாய்ப்பிருக்கு.. இன்னும் நிலைமை மோசமானா நான் கோமாவுக்குக் கூடப் போகலாம்னு டாக்டர் சொல்லியிருக்காங்க..”
அவனின் ஆழ்ந்த அமைதியான குரலில் அவள் அப்படியே நின்ற இடத்திலேயே ஸ்தம்பித்தாள்.
தொடரும்..
error: Content is protected !!