Skip to content
Post Views: 141
அவன் அன்று நடந்ததைச் சொல்லி முடிக்க, அதிர்ந்து விழித்தாள் மதுரா!
“இ… இப்ப சொ… சொல்லு, இ… இதுக்கு அ… அப்புறமும் உ… உன் கா… காதலை ஏ… ஏத்துக்கிட்டு, க… கல்யாணம் ப… பண்ணி கூ… கூட்டிட்டுப் போ… போனா நீ ச… சந்தோஷமா இ… இருந்திருப்பீயா துரா?! இ… இல்ல அவங்க இ… இருக்கத்தான் வி… விடுவாங்களா? பெ… பெத்த பை… பையன் வா… வாழ்க்கை அ… அழிக்கணும்னு நி… நினைப்பவங்க, உ… உன்னைச் சு… சும்மா வி… விடுவாங்களா? இ… இதுக்காகத்தான் ‘எ… எனக்கு அ… அழகான பொ… பொண்ணு ம… மனைவியா வரணும்’னு எ… என்னை கொன்னுட்டு, உ… உன் கி… கிட்ட அ… அப்படிச் சொ… சொன்னேன்.
எ… என்னை கா… காதலிச்சுட்டு, க… கடைசி வ… வரைக்கும் நி… நிம்மதி இ… இல்லாம த… தவிக்கிறதுக்கு, வே… வேற ந… நல்ல கு… குடும்பத்துல நீ ச… சந்தோஷமா வா… வாழணும்னுதான், எ… என் கா… காதலை எ… எனக்குள்ள பு… புதைச்சுட்டு அ… அப்படிச் சொ… சொன்னேன். நீ போ… போன் ப… பண்ணும்போது எ… எடுக்காமப் போ… போனதும், ‘தொ… தொந்தரவு ப… பண்ணாதே’னு ஹா… ஹார்ஷா சொ… சொன்னதும் காரணம், நீ எ… என்னை வெ… வெறுக்கணும்னுதான். அ… அப்படிச் செ… செஞ்சுட்டு நா… நான் பட்ட அ… அவஸ்தையை கொ… கொஞ்சம் நஞ்சம் இல்ல.
நீ… நி… நினைக்கலாம், அ… அவங்களை வி… விட்டுட்டு வ… வந்திருக்கலாமேனு! அ… அப்பாக்கு நா… நான் கொ… கொடுத்த ச… சத்தியத்தை அ… அப்போ மீ… மீற மு… முடியல! ஆ… ஆனா, இ… இப்போ மீ… மீறி வீ… வீட்டை வி… விட்டு வரக் காரணம் அ… அவங்கதான்.”
Advertisement
பெத்த பிள்ளையின் மனதைப் புரிந்து கொள்ளாமல், மகளுக்காக என்னை மறுபடியும் அடகு வைக்கத் துணிந்துவிட்டார்கள் என்றவன், தான் வீட்டை விட்டு வெளியேறிய காரணத்தைக் கூறினான்.
மதிவதனியைப் பெண் பார்க்க வரச் சொல்லியிருந்தார் கற்பகம். மாப்பிள்ளை வீட்டிலிருந்து அனைவரும் வந்திருந்தனர். மாப்பிள்ளை அருண், அவனது அம்மா, அப்பா மற்றும் அவளது சகோதரி இரண்டு வயதுக் குழந்தையுடன் வந்திருந்தனர்.
வந்தவர்களுக்குத் தேநீர் கொடுத்தாள் வதனி! அருணின் சகோதரி அகல்யா, குழந்தையை மடியில் வைத்தபடி, எதிரே சங்கடமாக அமர்ந்திருந்த மதியூரனைப் பார்த்துச் சிரித்தாள்.
Advertisement
அவனும் சங்கடத்துடன் மெல்லச் சிரித்து வைத்தான்.
Advertisement
“பொண்ணுக்கும் பையனுக்கும் தான் பிடிச்சிருச்சே, மேற்கொண்டு பேசலாமா? நீங்க என்ன எதிர்பார்க்கிறீங்க?” எனக் கற்பகம் கேட்க, “பையன் சம்பாதிக்கிறான், சொத்து நிறைய இருக்கு. நாங்க என்ன கேட்டுடப் போறோம்?! நீங்க பொண்ணை மட்டுமே கொடுங்க போதும். நாங்களே பொண்ணோட படிப்பைப் பார்த்துக்கிறோம்… என்ன சம்மந்தி?” என்றார் மாப்பிள்ளையின் தந்தை.
மதியூரனோ நம்ப முடியாமல் அவர்களையே பார்த்தான். “இதற்குப் பின்னாடி ஏதாவது இருக்குமோ?” என்று அவன் யோசிக்க, பக்கத்தில் அமர்ந்திருந்த அகல்யா வேறு அவனைப் பார்த்து வெட்கப்பட்டுச் சிரிக்க, இவனுக்குச் சந்தேகம் வலுத்தது.
அதன்படியே அடுத்து அந்தப் பேச்சைத்தான் எடுத்தனர். “என்ன தம்பி, பேசாம அமைதியா இருக்கீங்க? ஏதாவது பேசுங்க! உங்களுக்கு இந்தக் கல்யாணத்துல சம்மதம் தானே?” என்றார் அருணின் அப்பா.
Advertisement
“ச… சம்மதம்தான் சார்.”
“என்ன தம்பி சார்னு கூப்பிடுறீங்க, மாமான்னு சொல்லுங்க!” என்று அவர் சிரிக்க, அது அவனுக்கு மரண ஓலமாகக் கேட்டது.
அகல்யாவின் கையிலிருந்த குழந்தை அவனை நோக்கித் தாவ, அதைத் தூக்கி மடியில் வைத்துக் கொண்டு கொஞ்சினான். அக்குழந்தையும் அவனுடன் விளையாடியது. இதைப் பார்க்க மற்றவர்களின் கண்கள் கனிந்தன. அப்போது எதிர்பாராதவிதமாகக் குழந்தை அவன் மடியில் மூத்திரம் பெய்துவிட, அவனது கால்சட்டை நனைந்தது.
“அச்சோ, சாரிங்க!” என்று அகல்யா குழந்தையைத் தூக்கிக் கொள்ள, உடனே எழுந்து கொண்டவன், அங்கிருந்து அறைக்குச் சென்றான்.
“போமா, மாப்பிள்ளைக்கு என்னன்னு பாரு!” என்று கற்பகம் அனுப்பி வைக்க, அகல்யாவும் உள்ளே அறைக்குள் சென்றாள். கற்பகமோ கலக்கமாக அமர்ந்திருந்தார். அவனுக்குத்தான் அவர் மறைத்து வைத்திருந்த விஷயம் தெரியாதே! கடைசி நிமிடத்தில் சம்மதிக்க வைத்துவிடலாம் என்ற நப்பாசையில் அவர் இருக்க, அவனோ எல்லாவற்றிலும் மண்ணள்ளிப் போடப்போகிறான்.
உள்ளே ஆடைகளைச் சுத்தம் செய்ய எண்ணிய அவனது குளியலறைக்குள் அகல்யா நுழைய, அவன் பயந்து போனான்.
“ஏ… ஏங்க, நீ… நீங்க இ… இதுவரைக்கும் வர்றீங்க! நா… நான் பா… பார்த்துக்கிறேன், நீ… நீங்க போ… போங்க,” என்று தயங்கிச் சங்கடமாகச் சொன்னான்.
“இனி இதெல்லாம் நமக்குள்ள சகஜம்தானே!” என அவள் சாதாரணமாகப் பேச, அவனோ யோசனையுடன், “எ… என்ன சொ… சொல்ல வ… வர்றீங்க நீ… நீங்க?” என்றான்.
“என்னங்க இப்படி கேக்குறீங்க? உங்களுக்கும் எனக்கும் மேரேஜ் பிக்ஸ் பண்ணியிருக்காங்கன்னு தெரியும்தானே! கல்யாணம் ஆகிட்டா நமக்குள்ள சகஜம்தானே!” என்றாள்.
“வாட்! க… கல்யாணம் பே… பேசி இ… இருக்காங்களா? உ… உங்களுக்கும் எ… எனக்குமா? எ… என்ன சொ… சொல்றீங்க?!” எனப் பதறினான்.
“உங்களுக்குத் தெரியாதா?”
“யா… யாரும் சொ… சொல்லல!” எனப் பல்லைக் கடித்தான்.
“உங்க வீட்டுல நீங்க சம்மதம் சொல்லிட்டதா உங்க அம்மா சொன்னாங்களே?”
“அ… அவங்களுக்கு என்ன எ… என்னை அ… அடகு வை… க்கக் கூ… கூட த… தயங்க மா… மாட்டாங்க! இ… இப்போ கூ… கூட எ… என் த… தங்கச்சி வா… வாழ்க்கை ந… நல்லா இ… இருக்க, எ… என்னை உ… உங்க கி… கிட்ட அ… அடகு வ… வச்சிருக்காங்க.”
“ப்ளீஸ், மைண்ட் யுவர் வேர்ட்ஸ் ! ” என்று அகல்யா கூற, அவன் அமைதியாக முக இறுக்கத்துடன் இருந்தான்.
“சரி, இப்போ கேக்குறேன்… உங்களை எனக்குப் பிடிச்சிருக்கு. என்னை உங்களுக்குப் பிடிச்சிருக்கா? கல்யாணம் பண்ணிக்கலாமா? ம்ம்… ஃபர்ஸ்ட் மேரேஜ் வீட்ல பார்த்த மேரேஜ்தான். எனக்கு என் கணவருக்கும் செட் ஆகல, டிவோர்ஸ் பண்ணிட்டு அம்மா வீட்லதான் இருக்கேன். நான் அகல்யா கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனியை நானே ரன் பண்ணிட்டு வர்றேன்… உங்களைப் பத்தி அருண் சொன்னப்போ மனசு ரொம்ப கஷ்டமா இருந்தது, பாவமா இருந்தது. ஆனா, உங்க குரலைக் கேட்டதும் எனக்குள்ள ஒரு சின்ன ஸ்பார்க் . உங்களை எனக்குப் பிடிச்சிருக்கு, நாம கல்யாணம் பண்ணிக்கலாம்… நீங்க டப்பிங் ஒர்க் கண்டினியூ பண்ணிக்கலாம். என் குழந்தையைப் பத்திரமா பார்த்துப்பீங்கன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு. நீங்க என்ன சொல்றீங்க?”
“சா… சாரிங்க!!! எ… எனக்கு இ… இன்ட்ரெஸ்ட் இ… இல்ல! நீ… நீங்க பே… பேசுறது க… கணவர் போ… போஸ்ட்டுக்கு ஆ… ஆள் எ… எடுக்கிறது போல இருக்கு! எ… எனக்கு வி… விருப்பம் இ… இல்ல, அ… அண்ட் நா… நான் ம… மனசார ஒ… ஒரு பொ… பொண்ணை நே… நேசிக்கிறேன். வா… வாழ்ந்தால் அ… அவளோட, இ… இல்லைனா த… தனியாவே இ… இருக்கலாம்னு மு… முடிவு ப… பண்ணியிருக்கேன்… சாரி,” என்று கையெடுத்துக் கும்பிட, அங்கிருந்து விறுவிறுவென வெளியே வந்தவள், “அப்பா போகலாம்!” என்றாள்.
அருண் எழுந்து, “என்ன ஆச்சு அக்கா?” என்றான்.
“உன் மச்சானுக்கு இந்தக் கல்யாணத்துல விருப்பம் இல்லையாம்! இதுக்கு மேலே நான் ஏன் இங்க இருக்கணும்? அம்மா வாங்க,” என்று முன்னே நடக்க,
“என்னம்மா நீங்க, பையனுக்கு சம்மதம்னு சொன்னீங்க? இப்போ விருப்பம் இல்லைன்னு சொல்றான். என்ன நினைச்சுட்டு இருக்கான் உங்க புள்ளை? உங்க பொண்ணுக்கு என் பையனை கல்யாணம் பண்ணி வைக்கணும்னா, எங்க பொண்ணுக்கு உங்க பையனைக் கல்யாணம் பண்ணித் தந்தே ஆகணும்!” என்று சொல்லிவிட்டு அவர்கள் கிளம்பினர். அதைக் கேட்டு அசால்ட்டாக வெளியே வந்தவனை, அந்த இரு பெண்களும் கொலைவெறியோடு பார்த்தனர்.
“உனக்கு இப்போ சந்தோஷம்தானே! அவங்க எவ்வளவு பெரிய கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனி எம்.டி! அவங்களைக் கல்யாணம் பண்ணிக்க உனக்கு என்ன வந்துச்சு? ஏதோ நாலு காசு பார்த்தா உனக்குத் திமிர் வந்துடுமா? என் அருணுக்கு ஈடாகிடுவியா நீ? ஒழுங்கா இந்தக் கல்யாணத்துக்குச் சம்மதம் சொல்லு, இல்ல நான் செத்துப் போயிடுவேன்!” என்றாள் வதனி.
“செ… செத்துப்போ… போடி! எ… என்னை எ… எழுதி வ… வச்சுட்டுச் செ… செத்துப் போவியா, செத்துப்போ! இ… இங்க உ… உங்களோட இ… இருக்கிறதுக்கு ஜெ… ஜெயில் தேவலை போல!”
“என்னடா பேசிட்டு இருக்க? அவ உன் தங்கச்சி, அவளைச் செத்துப் போகச் சொல்லுவியா?” என்றார் கற்பகம்.
“அ… அவதானே சா… சாகுறேன்னு சொன்னா. நா… நான் சா… சாகச் சொ… சொல்லலையே.”
“முடிவா கேக்குறேன், இந்தக் கல்யாணத்துக்குச் சம்மதம் சொல்வியா மாட்டியா?”
“மா… மாட்டேன், சொல்ல மா… மாட்டேன்!”
“அந்தப் பொண்ணே உன்னைப் பிடிச்சிருக்குன்னு இறங்கி வந்தா, உனக்கு என்னடா?”
“அ… அதுக்காக அ… அவ கு… குழந்தையைப் பா… பார்த்துட்டு, அ… அவளுக்கு அ… அடிமையா வா… வாழணுமா? மு… முடியாது!”
“உன் தங்கச்சி வாழ்க்கையை நினைச்சுப் பார்த்தியா?”
“அ… அப்போ எ… என் வா… வாழ்க்கையை யா… யார் நினைப்பா?”
“திக்குவாயனுக்கு இந்த வாழ்க்கை ரொம்பப் பெருசுதான்… ஒழுங்கா சம்மதம் சொல்றா, இல்ல உனக்குச் சொத்துல எந்தப் பங்கும் இல்லை! நீ இந்த வீட்லயே இருக்கக் கூடாது, இப்பவே வெளியே போ!” எனக் கத்தினார் கற்பகம்.
“சரி,” என்று அறைக்குள் சென்று தன் பெட்டி படுக்கையுடன் வெளியே வந்துவிட்டான்.
“எ… எனக்கு எ… எதுவும் தே… தேவையில்லை, நா… நான் வர்றேன்,” என்று கிளம்பிவிட்டான். அதிர்ந்து போய் விட்டார்.
“அம்மா! இவன் போயிட்டா என் கல்யாணம் எப்படி நடக்கும்?!” என்றாள் வதனி.
“எவ்வளவு நாள் வெளியே இருப்பான்? வீட்டுக்கு வந்துதானே ஆகணும், அப்பப் பார்த்துக்கிறேன்!” என்றார் திமிராக.
ஆனால், அவன் இரண்டு வாரங்களாக வீட்டிற்கு வரவே இல்லை. அருணுக்கோ வேறு பெண்ணைப் பார்த்துப் பேச்சுவார்த்தை நடத்த, இங்கே மதிவதனி கொதித்துப் போய் தன் தாயைக் கத்தினாள்.
மதியூரன் மதுராவின் வீட்டில் இருப்பதைத் தெரிந்துகொண்டு, அவன் இல்லாத நேரம் பார்த்து அவளை அவமானப்படுத்திவிட்டுப் போனார் கற்பகம்.
அவன் பேசி முடிக்க, இவளோ உறைந்து போய் இருந்தாள்.
“எ… என் வா… வாழ்க்கையில எ… என் அப்பா, நீ… உன் அம்மா! இந்த மூணு பேரும்தான் எனக்கு ந… நல்லது நி… நினைச்சாங்க. எ… என் ராசி, அ… அவங்க ரெ… ரெண்டு பே… பேருமே இ… இப்ப இ… இல்லை. இ… இருக்கிறது நீ ம… மட்டும்தான். எ… என் வா… வாழ்க்கையையே மா… மாத்தின தே… தேவதை நீ மட்டும்தான். உ… உன் கூ… கூட இ… இருந்து, நா… நான் இ… இழந்த ஒ… ஒவ்வொரு ச… சந்தோஷத்தையும் மீ… மீட்டு வா… வாழணும்னு நினைச்சேன்.
ஆனா, எ… எனக்குத்தான் அ… அந்தக் கு… குடுப்பினை இ… இல்லையே! நீ… நீயாவது ந… நல்லா இ… இருந்துட்டுப் போ துரா! நா… நான் இ… இங்க இ… இருந்து போ… போயிடுறேன். உ… உன்னை வி… விட்டுத் தூரமா போ… போயிடுறேன், எ… எந்த வி… விதத்துலையும் உ… உனக்குத் தொந்தரவு த… தர மாட்டேன். நீ… நீ… ந… நல்லா இ… இருக்கணும்… நா… நான் கிளம்புறேன் துரா,” என்றவன் அறைக்குள் சென்று அனைத்துப் பொருட்களையும் எடுத்துத் தன் பெட்டியில் வைத்தான். வெளியே வந்தவன், “நா… நான் வர்றேன் துரா! அ… அக்கா, அ… அவளைப் பா… பார்த்துக்கங்க,” என்று வாசல் வரை சென்றான். அவனைத் தடுத்து நிறுத்தியது அவளது குரல்.
“யூரன்!” என்றழைக்க, அவன் திரும்பி நின்றான்.
தரையில் அமர்ந்திருந்தவள் புயல் போலப் பாய்ந்து வந்து அவனை அணைத்துக் கொண்டாள். அவனது கையில் இருந்த பெட்டி கீழே விழுந்தது.
“நீங்க எங்கேயும் போகக் கூடாது! நாம இழந்த சந்தோஷத்தை மீட்டு வாழலாம். உங்க அம்மாவே வந்தாலும் பரவாயில்லை, என்ன பேசினாலும் பரவாயில்லை. நீங்க என்னோடு இருந்தாலே போதும், எல்லாத்தையும் தாங்கிப்பேன். எனக்கு நீங்க மட்டும் போதும் யூரன்!” என்று அவனது கழுத்தடியில் முகத்தைப் புதைத்து அழுதபடி சொன்னாள்.
அவனோ அவளை இறுக்கமாக அணைத்துக் கொண்டான்.
“எ… என் மே… லே கோ… கோபமோ வெ… வெறுப்போ இ… இல்லையே? இ… இந்த தி… தி… திக்குவாயனைப் பி… பி… பிடிக்கும்தானே?!”
“எனக்கு எப்பவும் என் யூரனைத்தான் பிடிக்கும். அவரை மட்டும்தான் பிடிக்கும்!” என்று மேலும் இறுக்கமாக அணைத்துக் கொண்டாள். ரம்யா ஆனந்தக் கண்ணீரோடு அவர்களைப் பார்த்தாள்.
error: Content is protected !!