Skip to content
Post Views: 110
மறுநாள் விடியல் தொடங்கியதே அவனது காப்பியின் நறுமணத்தில் தான். அதிகாலையிலே எழுந்து கோலம் போட்டு, மரகத்தின் புகைப்படத்திற்கு மாலை அணிவித்து, அவளது அறைக் கதவைத் தட்டிவிட்டு இவன் சமையலறைக்குள் புகுந்து கொண்டான்.
காலைக் கடன்களை முடித்துவிட்டு வந்தவளுக்கு ஆவி பறக்கக் காப்பியைக் கலந்து கொடுக்க,
“நீங்க இங்க வந்ததுல இருந்து நான் சோம்பேறியா ஒரு வேலையும் பார்க்காதது போல இருக்கு யூரன்! ப்ளீஸ், நானே எல்லா வேலையும் செய்றேனே!” எனச் சிறு குழந்தை போலத் தலையைச் சாய்த்துக் கேட்டாள்.
“ச… சரி… நா… நாம ரெ… ரெண்டு பே… பேரும் இ… இனிச் சே… சேர்ந்து செ… செய்யலாம்… வே… வேலைகளைப் ப… பகிரலாம்… எ… என்ன?!” எனவும் தலையை அசைத்தவள், காப்பியின் மணத்தை நாசியில் உள்ளிழுத்தவாறு பருகினாள்.
Advertisement
“நீ ஸ்… ஸ்டுடியோக்கு போ! நா… நான் க… கதிர் அ… அண்ணா கூ… கூடச் சே… சேர்ந்து மே… மேரேஜ் வே… வேலை எ… எல்லாம் பா… பார்த்திட்டு ஜா… ஜாயின் ப… பண்ணிக்கிறேன். ஒ… ஒன் வீ… வீக் லீ… லீவ் கே… கேட்கணும்…”
“ம்ம்…” என்றவள் எதையோ யோசிக்க,
“எ… என்ன யோ… யோசனை ம… மது?”
Advertisement
“இல்ல யூரன்! நாளைக்கு கல்யாணம் பண்ணிக்கப் போறோம். உங்களுக்கு கல்யாணன்ற விஷயத்தை அத்தைக்கிட்ட சொல்ல வேண்டாமா?” எனத் தயக்கமாகக் கேட்டாள்.
Advertisement
அவளையே வெறித்துப் பார்த்தவன் பக்கென்று சிரித்துவிட்டான்.
“என்ன யூரன் சிரிக்கிறீங்க?”
“பி… பின்ன சி… சிரிக்காம எ… என்ன பண்ணச் சொ… சொல்ற? இ… இன்னைக்குப் போய் நீ நா… நாங்க க… கல்யாணம் ப… பண்ணிக்கப் போறோம்னு சொ… சொல்லிப் பாரு! நா… நாளைக்கு அ… அவங்க ஹா… ஹாஸ்பிட்டல்ல இ… இருப்பாங்க!”
Advertisement
“ஹாஸ்பிட்டலா? என்ன சொல்றீங்க?”
“ப… பயப்படாத! ஹா… ஹாஸ்பிட்டல்னா உ… உடம்பு மு… முடியாம இல்ல… நம்… நம்ம க… கல்யாணத்தைக் கெ… கெடுக்க!”
“என்ன?”
“அ… அவங்களைப் பொ… பொறுத்தவரை உ… உன்னை அ… அவமானப் ப… படுத்தினால், எ… என்னை வீ… வீட்ல த… தங்க வி… விடாம அ… அனுப்பி வ… வச்சிருவான்ற க… கணக்குல தா… தான். ஆ… ஆனா நா… நாம க… கல்யாணம் ப… பண்ணிக்கப் போ… போற வி… விஷயம் அ… அவங்களுக்குத் தெ… தெரியக் கூடாது. தெ… தெரிஞ்சா, நி… நிச்சயம் ஏ… ஏதாவது நா… நாடகமோ இ… இல்ல வீ… வீட்டுக்கு மு… முன்னாடி வ… வந்து த… தங்கச்சியைக் கா… காட்டி எ… எல்லார் மு… முன்னாடியும் அ… அனுதாபம் தே… தேடி, எ… என்னை அ… அவங்களோட வ… வர வைக்கத் தி… திட்டம் போ… போடுவாங்க! இ… இதுவே க… கல்யாணம் ந… நடந்து, நம்… நம்ம க… கல்யாணத்தைச் ச… சட்டப்படி ரெ… ரெஜிஸ்டர் ப… பண்ணினா, அ… அவங்களால எ… என்ன ப… பண்ண மு… முடியும் சொ… சொல்லு!”
அவளோ முகத்தை வாட்டமாக வைத்துக் கொள்ள,
“எ… என்ன து… துரா?”
“என் அம்மா தான் இல்ல… உங்க அம்மாவாவது இருந்து ஆசிர்வாதம் பண்ணுவாங்கன்னு எதிர்பார்த்தேன் யூரன்” என்றாள். அவனோ சிரித்தான்.
“நா… நாம ந… நல்லாவே இ… இருக்கக் கூ… கூடாதுன்னு வேணா நி… நினைப்பாங்க, சா… சாபம் விடுவாங்க… வா… வாழ்த்துவாங்கன்னு க… கனவுல கூ… கூட நி… நினைச்சிடாத! நா… நாம நி… நிம்மதியா இ… இருக்கணும்னா, சி… சில நெ… நெகட்டிவ் பீ… பீப்பிளைத் த… தள்ளி வ… வச்சுத் தா… தான் ஆ… ஆகணும் துரா!” என்றதும் அவளோ அதிர்ந்து பார்த்தாள்.
“என்ன… எ… என்ன எ… எங்க அ… அம்மாவை நெ… நெகட்டிவ்னு சொ… சொல்றேன்னு பா… பார்க்கிறாயா?”
அவளோ “ஆம்” என்று தலை அசைத்தாள்.
“அ… அவங்க ந… நல்லவங்களா இ… இருந்திருந்தா, நா… நான் ஏன் அ… அவங்களுக்குத் தெ… தெரியாம க… கல்யாணம் ப… பண்ணிக்கப் போ… போறேன் சொ… சொல்லு! அ… அவங்களுக்கு அ… அவங்க பொ… பொண்ண ஒ… ஒரு ரூ… ரூபாய் செ… செலவு ப… பண்ணாம க… கல்யாணம் ப… பண்ணி வைக்கணும்! அ… அதே நே… நேரம் எ… எனக்கு வ… வரப்போற ம… மனைவி வ… வரதட்சணை நி… நிறைய கொ… கொண்டு வரணும்… எ… என்ன லா… லாஜிக் இ… இது பா… பார்த்தியா?” என வெற்றுச் சிரிப்பு சிரித்தான்.
“நீ எ… எதையும் போ… போட்டுக் கு… குழப்பிக்காத துரா! யா… யாரும் க… கல்யாணத்துக்கு வரலைன்னு ஃபீ… ஃபீல் ப… பண்ணாத! நா… நாம நி… நிறைஞ்சு வா… வாழ்த்துறவங்க ரெ… ரெண்டு பே… பேர் இ… இருக்காங்க! க… கடவுளா கூ… கூட உ… உன் அ… அம்மாவும் எ… என் அ… அப்பாவும் இ… இருக்காங்க… இ… இதுக்கு மே… மேலே எ… என்ன வே… வேணும் சொ… சொல்லு” என்று அழகாய் அவன் பேசிட, அவனையே பார்த்தவள் அவன் நெற்றியில் இதழ் ஒற்றி எடுத்தாள்.
“தே… தேங்க்யூ! போ… போய் கு… குளிங்க மே… மேடம்” என்று அனுப்பி வைத்துவிட்டு, இவன் காலை உணவைத் தயாரி செய்ய உள்ளே சென்றான்.
இருவரும் கிளம்பி வர, அவன் கதிரோடு செல்ல, இவள் ஸ்டுடியோவிற்குச் சென்று அவர்கள் திருமண விஷயத்தைச் சொல்ல அனைவரும் வாழ்த்துகள் சொன்னார்கள். மேனேஜரிடம் ஒரு வாரம் விடுமுறை கேட்டாள், அவர்களும் வழங்கினர். அவள் இன்று பேச வேண்டியதை விடக் கூடுதலாகக் குரல் கொடுத்தாள். இடையில் மதியூரனும் வந்துவிட, அவனுக்கும் வாழ்த்து தெரிவித்தனர்.
அவனும் ஒரு வாரம் குரல் கொடுக்க வேண்டிய ஸ்கிரிப்ட்டிற்கு முடிந்தளவு குரல் கொடுத்துவிட்டு, இருவரும் மாலையில் தான் இல்லம் வந்தனர்.
வந்ததுமே அவரவர் அறைக்குள் சென்று சுத்தம் செய்துவிட்டு வந்தவர்கள், இளைப்பாறக் காப்பி கலந்து சுவைக்க, கதிரும் வேலை முடிந்து வந்தான். நால்வருமாக கடைவீதிக்குச் சென்று மாப்பிள்ளைக்குப் பட்டு வேஷ்டி சட்டை எடுத்து, பின் மணமகளுக்கு உடை எடுக்கச் செல்ல,
“வி… விலை பா… பார்க்காத து… துரா! உ… உனக்கு பி… பிடிச்ச ப… பட்டுச்சேலை எ… எடுக்கணும் நீ” என்று அவன் சொல்ல, அவளோ, “யூரன்! எனக்குப் பட்டுச்சேலை வேண்டாமே!” என்றாள்.
“ஏ… ஏன் து… துரா?” என விழிக்க,
“நீங்க எடுத்துக் கொடுத்த சாஃப்ட் சில்க் சேலையை கட்டிக்கிறேன். ப்ளீஸ் யூரன்.”
“நா… நாம கி… கிராண்டா க… கல்யாணம் ப… பண்ணிக்கல தா… தான் து… துரா! அ… அதுக்காகக் க… கல்யாணச் சே… சேலை கி… கிராண்டா இ… இருக்கக் கூ… கூடாதுன்னு இ… இல்லையே! நா… நான் எ… எடுத்துக் கொடுத்த சே… சேலை அ… அவ்வளவு கி… கிராண்ட் இ… இல்லம்மா? சே… சேலை ஒ… ஒர்த் க… கம்மி தான்… அ… அதைப்போய் க… கட்டணும்னு சொ… சொல்றியே!”
“சேலை ஒர்த் இல்லைன்னு நீங்க எப்படிச் சொல்லலாம் யூரன்! எனக்கு பிரைஸ், குவாலிட்டியை விட, அது நீங்க முதல் முறையா எடுத்துக் கொடுத்தது… அதுவே அவ்வளவு ஒர்த் தான் எனக்கு. அதைத் தான் கட்டுவேன். கல்யாணச் சேலை விலை உயர்ந்ததா இருந்தால் மட்டும் என்ன பண்ணப் போறோம் சொல்லுங்க? அதை வளைகாப்பு அன்னைக்குத் தான் கட்டப் போறேன், அப்புறம்… ம்ஹூம் கட்டப் போறது இல்லை. எனக்கு அதுவே போதும் ப்ளீஸ், ரொம்ப செலவு வேண்டாமே” எனக் கெஞ்ச, அவனுக்கு மனசு கேட்கவில்லை என்றாலும் அவளுக்காகச் சரியென்றான். அந்தச் சேலையை எடுத்து வந்து இருந்தவள், அதற்கு ஏற்றது போல மேட்சிங் ஆரி வொர்க் நிறைந்த அவளது அளவுக்கு ஏற்ற பிளவுஸ் எடுத்துக் கொண்டாள்.
கதிர், ரம்யாவிற்கு அவர்கள் மறுக்க மறுக்க எடுத்துக் கொடுத்தனர். பின் லட்சுமிக்கும் அவரது கணவருக்கும் மட்டும் எடுத்தனர்.
நகைக்கடைக்குச் சென்றனர். அங்கே தாலியும் அதற்கு ஏற்ற குண்டு, காசு, மணி என அனைத்தையும் எடுத்ததோடு செயினையும் எடுத்தான்.
பின் ஒரு சின்ன அட்டிகை எடுக்க, “எதுக்கு?” என்று கையை அழுத்தினாள்.
“நீ க… கல்யாணச் சே… சேலைக்கு நோ சொ… சொல்லும்போது அ… அக்செப்ட் ப… பண்ணினேன்ல, அ… அதேபோல ந… நகைக்கு நீ ஓ… ஓகே சொ… சொல்லித் தா… தான் ஆ… ஆகணும்” என்று முடிவாகச் சொல்ல, அவனது வார்த்தைகளைத் தட்ட முடியவில்லை.
அவளுக்குப் பிடித்த டிசைனில் எடுத்துக் கொண்டாள். எல்லாம் அவனது அப்பா, கற்பகத்திற்குத் தெரியாமல் சிறுசிறுசாக அவனுக்காகச் சேமித்து வைத்த பணம்தான் இது.
“யூரன்! இவ்வளவு காசு எப்படி வந்தது?”
“எ… என்னை ம… மன்னிச்சிடு து… துரா! இ… இது எ… என்னோட அ… அப்பா எ… எனக்காக பே… பேங்க்ல சே… சேர்த்து வ… வச்சிருந்த ப… பணம். அ… அதுல எ… எடுத்தேன். உ… உனக்கு எ… என் ப… பணத்துல வா… வாங்கிக் கொ… கொடுக்கணும்னு ஆ… ஆசை! ஆ… ஆனா இ… இப்போ மு… முடியல! ஆ… ஆனா க… கண்டிப்பாச் செ… செய்வேன்” என்றான் காதலாக. பார்த்தவளோ, “இதை நான் மாமாவோட ஆசிர்வாதமா எடுத்துக்கிறேன்” என்றாள். அவள் ஏற்றுக் கொண்டதும் இவனுக்கு நிம்மதியாக இருந்தது.
அங்கிருந்து நால்வரும் புறப்பட்டு லட்சுமி வீட்டிற்குச் சென்றனர். நால்வரையும் கண்டு அதிர்ந்து பார்த்தார், பின் வரவேற்றார். அவரது கணவர் வெளியே சென்றிருக்க, இவர் மட்டும்தான் இருந்தார். பிள்ளைகளுக்குத் திருமணம் செய்து கொடுக்கத் தனித்தனியாகச் சென்றுவிட்டனர்.
“என்ன நாலு பேரும் சேர்ந்து வந்திருக்கீங்க? என்ன விஷயம்?”
“என்னை மன்னிச்சிடுங்க சித்தி!”
“எதுக்கு மது?” எனக் கேட்க,
“எனக்கு நீங்க பார்த்த மாப்பிள்ளையைக் கட்டிக்க விருப்பமில்லை. நீங்களே அவங்ககிட்ட சொல்லிடுங்க சித்தி” என்று குண்டைத் தூக்கிப் போட அதிர்ந்து போனார்.
“என்ன மது சொல்ற? இந்த மாப்பிள்ளையும் வேணாம்னா, என்ன நினைச்சிட்டு இருக்க நீ? ஏன் ரெண்டாந்தாரமா போனா என்ன? உன் அழகுக்கு அதுவே அதிகம் தான். இனி நான் உனக்கு மாப்பிள்ளை பார்க்கிறதா இல்லை! யார் என்ன வேணாம் சொல்லிட்டு போகட்டும்! நான் உனக்கு மாப்பிள்ளை தேடிக் கொண்டு வந்தா, ஆத்தாளும் மகளும் வேணாம்னு சொல்லி என்னை அசிங்கப்படுத்துறது தான் வேலை. சரி, அக்கா மகளாச்சே அவளுக்கு யார் இருக்கான்னு நாம ஏதாவது எடுத்துச் செய்வோம்னு பார்த்தால், வேணாம் வேணாம்னு திமிரா தட்டிக் கழிக்கிற? இனி எப்படி உனக்கு வரன் வருதுன்னு நானும் பார்க்கிறேன்” எனக் கோபமாகக் கத்த, அந்த நால்வரும் அவரது பேச்சைக் கேட்டுக்கொதித்துப் போயிருந்தார்கள்.
அதை விட அதிகமாக மதியூரன்தான் தாடை இறுக, கோபத்தில் சிவந்து நின்றவன், அவர் பேசி முடிக்கும் முதலே கோபத்தில் கத்த ஆரம்பித்தான்.
“அ… அப்படி எ… என்ன மா… மாப்பிள்ளை பா… பார்த்து அ… அவன் மு… முன்னாடி நி… நிறுத்திட்டீங்க? வ… வரவன் எ… எல்லாம் அ… அந்த வீ… வீட்டுக்காகவும் வ… வரதட்சணைக்காகவும் தா… தானே அ… அவளைக் க… கல்யாணம் ப… பண்ண வ… வந்தான். யா… யாராவது ஒ… ஒருத்தராவது அ… அவ ம… மனசைப் பா… பார்த்து க… கட்டிக்க வ… வந்தான்னு சொ… சொல்லுங்க! ச… சரி, இ… இப்போ ஒ… ஒரு மா… மாப்பிள்ளை பா… பார்த்தீங்களே, அ… அவன் ப… பளிச்சுன்னு எ… என் பொ… பொண்ணுங்களுக்கு டே… டேக் கே… கேரா இ… இருந்தா போ… போதும்னு சொ… சொல்லிட்டான். இ… இதுக்கு எ… எதுக்கு அ… அவ க… கல்யாணம் ப… பண்ணிக்கணும்? ஏ… ஏனோ தா… தானோன்னு அ… அவளைக் க… கட்டிக் கொ… கொடுத்தா போ… போதும், அ… அவ எ… எப்படி வா… வாழ்ந்தா உ… உங்களுக்கு எ… என்னன்ற ரீ… ரீதியில தா… தானே மா… மாப்பிள்ளை பா… பார்த்தீங்க? உ… உங்க பொ… பொண்ணா நி… நினைச்சுப் பா… பார்த்து மா… மாப்பிள்ளை பா… பார்த்தீங்களா? இ… இல்லையே! ஏ… ஏதோ அ… அவளுக்குக் க… கல்யாணம் ப… பண்ணி வ… வச்சுட்டு, நா… நான் தான் ப… பண்ணேன்னு வெ… வெளியே பெ… பெருமை சொ… சொல்லிக்கிறது போ… போதும் உ… உங்க அ… அக்கறை!”
“என்னடி மது?! யாருடி இவன்? கண்டவனைப் பேச விட்டு நீ வேடிக்கை பார்த்துட்டு நிக்கிற?”
“அவர் கண்டவன் இல்லை! என்னோட வருங்கால கணவர்! நாளைக்கு எனக்கும் இவருக்கும் கல்யாணம்… ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கப் போறோம்… எல்லா வேலையும் முடிஞ்சாச்சு! உங்களை மரியாதையா கல்யாணத்துக்கு அழைக்கத் தான் சித்தி வந்தோம்” என்றவளைப் பார்த்து வாயைப் பிளந்தார்.
“இவனா மாப்பிள்ளை?! இந்தத் திக்குவாயனுக்காகவா நான் பார்த்த மாப்பிள்ளை வேணாம்னு சொல்ற?” என்றவர் உண்மையில் வயித்தெரிச்சலில் தான் பேசினார்.
“நீங்க பார்த்த மாப்பிள்ளையை விட விலைமதிப்பு இல்லாதவர் தான் என் யூரன்! இப்ப கூடப் பொறாமையில தான் நீங்க அவரைக் குறையா பேசுறீங்க, புரியுது… ஆனா என்னைப் பொறுத்தவரைக்கும் அவரைப் போல இங்க யாராலயும் பேச முடியாது… நீங்க என்ன சொன்னாலும் இவரைத் தான் கல்யாணம் பண்ணிக்கப் போறேன்… முடிஞ்சா நாளைக்கு சித்தப்பாவைக் கூட்டிட்டு வாங்க! நாங்க வர்றோம்” என்று அங்கிருந்து மதியூரனின் கைபற்றிச் சென்றுவிட்டாள்.
அவரோ “ரொம்பத் தான்” என்று நொடித்துக் கொண்டவர், பின் ஆசையாக அவள் எடுத்துக் கொடுத்த சேலையைப் பார்த்தார். அழகாக இருந்தது, அவரிடம் இந்தக் கலரும் இத்தனை விலை உயர்ந்த புடவையும் இல்லை. எடுத்து வைத்துக் கொண்டார்.
இரவு உணவை முடித்துவிட்டு மீண்டும் அருகே அமர்ந்து பேசினார்கள்.
“சாரி யூரன்! சித்தி பேசின பேச்சுக்காக?!”
“அ… அதெல்லாம் இ… இப்போ பெ… பெருசா எ… எடுத்துக்கல து… துரா! எ… எனக்குள்ள தி… திறமை இ… இருக்கும்போது, இ… இந்த கு… குறை எ… எனக்குப் பெ… பெருசா தெ… தெரியலடி!” என்றதும் நெகிழ்ந்து போனாள்.
“இந்தப் பதிலை உங்ககிட்ட எதிர்பார்க்கல மதியூரன்? உள்ளுக்குள்ள பயந்துட்டே இருந்தேன், எங்க நீங்க ஃபீல் பண்ணுவீங்களோன்னு! இது ரொம்பப் பெரிய மாற்றம் யூரன்.”
“எ… என்னை மா… மாத்தினதே நீ தா… தானே து… துரா!” என்றான். அவளும் அவன் மீது சாய்ந்து கொண்டாள்.
“எனக்கு ஒரு ஆசை துரா நிறைவேத்திக்கட்டுமா?” எனக் கேட்டதுமே அவளோ வாயைப் பொத்திக் கொள்ள, இவனோ வாய்விட்டுச் சிரித்தான்.
“ஏ… ஏன் து… துரா, உ… உனக்கு பி… பிடிக்கலையா?”
“பிடிச்சிருந்தது யூரன், ஆனா அதுக்கப்புறம் நைட்டு என்னால தூங்க முடியல! அதே ஞாபகமா இருந்து என்னை இம்சை பண்ணுது…” என வெட்கத்தோடு சொல்ல, அதை அவன் ரசித்தான்.
“ஆ… ஆனா எ… எனக்கு இ… இன்னைக்கு உ… உன் ம… மடியில ப… படுக்கணும்னு ஆ… ஆசை து… துரா… ப… படுக்கட்டுமா?” எனக் கேட்டான்.
“கேட்கணுமா யூரன் நீங்க?”
“தா… தாலி க… கட்டுற வ… வரைக்கும் கே… கேட்பேன் து… துரா! அ… அதுக்கப்புறம் கே… கேட்டு எ… எதையும் செ… செய்ய மா… மாட்டேண்டி!” என்றவன் அவள் மடியில் தலை வைத்துப் படுத்தான். அவள் விரல்கள் அவனது கேசத்தை மெல்ல வருடினின.
“துரா!”
“ம்ம்”
“நா… நா… நாளைக்கு இ… இந்நேரம்…” என்றதும், “யூரன் சும்மா இருங்க” என்றவளின் முகம் குங்குமமாய் சிவக்க, இவன் ரசித்தான்.
“து… துரா! நா… நான் தி… திக்கித் தி… திக்கிப் பே… பேசுறதால உ… உனக்கு ச… சலிப்பா இ… இருக்கா? உ… உன்னை கொ… கொஞ்சும்போது இ… இவ்வளவு தி… திக்கிறேனே, உ… உனக்கு வெ… வெறுப்பா இ… இருக்கா?” என ஆள்மனதில் பதிந்த பழைய ஞாபகத்தினால் கேட்டான்.
“இந்த அநாதைக்கு இது ரொம்ப அதிகம் யூரன்” என்றதும் பதறி எழுந்தவன், “உ… உனக்கு நா… நான் இ… இருக்கும்போது எ… எப்படி நீ அ… அநாதைன்னு சொ… சொல்லலாம்?” என லேசான கோபத்துடன் கேட்க,
“அப்போ நீங்க மட்டும் அப்படி கேட்கலாமா யூரன்? புத்தகத்துல இருந்து சில வரிகளை நீங்க வாசித்ததை அர்ச்சனா எனக்கு அனுப்பி இருந்தாங்க… அதுதான் எனக்கு நீங்க என்னோட இருக்கிறதுக்கு முன்னாடி வரைக்கும் துணையா இருந்தது. எப்பவும் உங்க குரலுக்கும் பேச்சுக்கும் வாசிப்புக்கும் நான் அடிமை! அதுனால இப்படிப் பேசாதீங்க ப்ளீஸ்” என்றாள். அவன் முகம் ஏந்தி நெற்றி முட்டினான்.
error: Content is protected !!