Skip to content
Post Views: 4,106
மார்கழி – 8
இறுக்கத்துடன் கழிந்த அந்த நாளின் இறுதியில் வண்டியை உருட்டிக்கொண்டு வீடு வந்து சேர்ந்தவன் ஒருவித அலுப்புடன் தான் கதவைத் திறந்தான். பின்மாலைப் பொழுதின் மங்கல் வெளிச்சத்தை விரட்டியிருக்க, கூடத்தின் விளக்கை போட்டவன் கதவை தாழிட்ட பின் திரும்பிப் பார்த்தான். ஒரு மூலையில் அமர்ந்திருந்த இயலணி இவனைப் பார்த்ததும் எழுந்து நின்றாள். காலையில் அவன் தூக்கிப்போட்டுச் சென்றிருந்த அவள் துப்பட்டா அதே இடத்தில் கிடந்தது.
ஃபேன் கூட போடாமையா உக்காந்திருந்தா என்று கேள்வியினூடே அவன் சிரம் தன்னால் மேல் உயர்ந்து பார்த்து கீழிறங்கியது. உடனே கசகசவென்று இருப்பது போன்ற உணர்வு. சட்டையின் மேல் பொத்தானை கழட்டிவிட்டுக் கொண்டே பையை அதனிடத்தில் வைத்தவன் அறைக்குள் புகுந்து கொண்டான்.
அவன் தலை அறைக்குள் மறையவும் உணர்வு வந்தவள் போல் விரைந்து நகர்ந்து துப்பட்டாவை எடுத்து போட்டுக்கொண்டவள் சமையலறை சிங்க்கிலேயே முகம் கழுவிக்கொண்டாள். தொண்டை வறண்டு தாகம் எடுக்க, தண்ணீர் குடித்தவள் நாசியைத் தீண்டியது கெட்ட வாடை.
Advertisement
புருவச் சுழிப்புடன் சுற்றும் முற்றும் பார்க்க, சமையல் மேடையில் காலை அவனுக்கு பரிமாறிவிட்டு அவளுக்கென மீதம் வைத்திருந்தவை கெட்டுப்போயிருந்தது. ஒரு பொட்டலம் பாதி பிரித்தும் இன்னொன்று பிரிக்காமலும் இருக்க அதனை பிரித்துப் பார்த்தாள். அதுவும் கெட ஆரம்பித்திருந்தது. அவளுக்கென்று வாங்கி வந்ததுதான். மதியம் கல்லூரியிலிருந்து வந்து உணவு வாங்கிக் கொடுக்க முடியாதென்பதால் காலையே மதியம் உண்ண இட்லி வாங்கி கொடுத்துவிட்டுச் செல்வான். அன்று முழுதும் குற்றவுணர்ச்சியின் பிடியில் பழையதை அசைபோட்டவள் உண்ணவே மறந்திருந்தாள். பெருமூச்சுடன் தலையசைத்து அதனை சுருட்டி சேர்த்துக்கட்டி குப்பையில் போடும் நேரம் அறையிலிருந்து உடை மாற்றி வந்தான் அறிவழகன். பார்வை இவளிடம் தான். என்ன செய்கிறாள் என்று கேள்வியாய் பின் தீர்க்கமாய் அவளிடம் சென்று திரும்ப, குப்பையில் போட்டவள் தயக்கத்துடன் கூடத்தில் வந்து நின்றாள். விழிகள் அவனை சந்திக்க திராணியற்று நர்த்தனமாடியது.
நொடி நேரம் குனிந்திருந்த அவளை அழுத்தமாய் பார்த்தவன் கூடத்தில் பார்வையை சுழற்றினான். எப்போதும் இவன் வரும் நேரம் புத்தகத்தை திறந்து வைத்து ஏதாவது படித்துக் கொண்டிருப்பாள். லைட் போட்டால் அவள் வீட்டில் இருப்பது வெளியே தெரிந்துவிடும் என்று விளக்கு ஏற்றி அந்த வெளிச்சத்தில் படிப்பாள் இல்லையேல் ஏதாவது வரைந்து கொண்டிருப்பாள். அது என்ன என்றெல்லாம் இதுவரை அவன் கவனித்ததில்லை. ஆனால் இன்று அவள் எதுவும் செய்யவில்லை என்று புரிந்தது. ஒன்றும் சொல்லாமல் வெளியே சென்றுவிட்டான்.
பயங்கர கோவமா இருக்காங்க போல என்று நினைத்துக்கொண்டவள் சோர்வாய் மீண்டும் தரையில் சரிந்தாள். நெஞ்சத்தை யாரோ அழுத்துவது போல் இருந்தது. இனி வாழ்க்கை எந்த திசையில் பயணிக்கும் என்ற ஐயமும் குறைவில்லாமல் நிறைய இருந்தது. இலக்கின்றி எதிரே இருந்த சுவரை வெறித்தவள் கதவு திறக்கப்படும் சத்தத்தில் திரும்பிப் பார்த்தாள். அறிவழகன் போன் பேசியபடி அவளிடம் வந்தான்.
Advertisement
அதுக்குள்ள வந்துட்டாங்க? என்று நினைக்கும் போதே அவளிடம் அலைபேசியை நீட்டினான். வேந்தன் என்று புரிந்து போனது. வேறு யாரும் அவளிடம் இப்போது தொடர்பில் இல்லை. அவனை பார்த்துக்கொண்டே அலைபேசியை காதில் வைத்தவள் ஹலோ என்ற பெண் குரலில் திடுக்கிட்டு அறிவழகனைப் பார்த்தாள்.
Advertisement
“அம்மா உன்கிட்ட பேசணுமாம்.” அவளை அழுத்தமாக பார்த்துக்கொண்டே சொல்பவனிடம் எதுவும் சொல்ல முடியாது ஹலோ என்றிருந்தாள்.
“காலையில பால் காய்ச்சி சாமி கும்புட்டீங்களா?”
ஐயோ என்று விழித்த இயலணி கணவனை கலவரமாய் பார்க்க,
Advertisement
“என்ன பதில் சொல்ல இவ்ளோ நேரமா? அவன்கிட்ட நைட்டே சொன்னேனே. சாமி கும்புட்டீங்களா இல்லையா?” மாமியார் அதிகாரம் தூள் பறக்க, இங்கு இவளுக்கு கலங்கியது.
எதுவும் செய்யவில்லை என்று சொன்னால் என்ன சொல்வாரோ என்று யோசித்து இறைஞ்சலாய் கணவனைப் பார்த்தான்.
அவன் இதுக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை என்பது போல் வேண்டுமென்றே கோற்றுவிட்டு கை கட்டி நின்று வேடிக்கை பார்க்க, அவன் உதவி கிடைக்காது என்று புரிந்தவள் இல்லை என்றிருந்தாள் தட்டுத்தடுமாறி. சில நொடிகள் எதிர்முனையில் நிலவிய அமைதி அவளுக்குள் பிரயளத்தை உண்டு பண்ண,
“எதுலயும் பெரியவங்க பேச்சை கேக்குறதில்லை. சாமான் எல்லாம் வாங்குனீங்களா?” என்று அடுத்த கேள்வி கேட்டார்.
நிலைக்கதவை தாண்டி கால் வைத்திராதவள் எங்கு சென்று சாமான் வாங்க, “இல்லை.”
“என்னதான் செய்றீங்களோ தெரியல. ரெண்டு பேரும்தான் வேலை முடிச்சி வந்துட்டீங்கல்ல இப்போ கிளம்பி போய் வீட்டுக்கு தேவையானது எல்லாம் வாங்கிட்டு நாளை மறுநாள் விடியல் காலையில பால் காய்ச்சிடுங்க. அன்னைக்கு நாளும் நல்லா தான் இருக்கு. புடிவாதமா கிளம்பி போகாம இருந்திருந்தா அன்னைக்கு எல்லாருமா சேர்ந்து பண்ணியிருக்கலாம். கேட்டா தான…” அங்கலாய்த்தவர் என்னென்ன வாங்க வேண்டும் எப்படி வழிபட வேண்டும் என்று பாடம் எடுக்க, காலையிலிருந்து உண்ணாததும் சேர்ந்து கொண்டு தலைவலியை கிளப்பியது.
அவள் நெற்றி தேய்ப்பதையும் புருவம் சுருக்குவதையும் பார்த்தவன் அலைபேசியை வெடுக்கென்று பிடுங்கினான், “நீ பேசிட்டே இருந்தா எப்போ போய் மத்த வேலையை பாக்குறது நான்?”
மறுபுறம் என்ன சொன்னாரோ, “அவளுக்கு எப்போ போன் வாங்கணும்னு எனக்குத் தெரியும்.” என்று அவன் பதில் சொன்னதில் அவளுக்கு அலைபேசி வாங்கிக்கொடுக்க சொல்லி இருக்கிறார் என்று புரிந்தது இயலணிக்கு.
“வேலை பாக்குறவ கிட்ட போன் இல்லாம எப்படி இருக்கும்? எல்லாம் இருக்கு. ரிப்பேர் ஆகிட்டு. நான் பாத்துக்குறேன். நீ வை.” ஏன் அவளிடம் அலைபேசி இல்லை என்று கேட்ட மேகலாவை பேசி சமாளித்து வைத்தவன் மீண்டும் யாருக்கோ அழைத்து அவளிடம் நீட்டினான்.
“வேந்தன் பேசணுமாம். பேசு வந்துறேன்.” என்று இம்முறை சொல்லிவிட்டு வெளியேற, அவன் கதவை பூட்டியதும் அலைபேசியில் கவனம் பதித்தாள்.
எடுத்ததும் அவளை கேள்வி கேட்டு சங்கடப்படுத்தாமல் நலவிசாரிப்புடன் தொடர்ந்தவன், “என்ன பண்ணலாம்னு இருக்க?” என்று கேட்க, கண்களை இறுக மூடினாள் இயலணி.
“உன்ன தான்மா கேக்குறேன். உன்னை எதுக்கு அங்க தங்க வச்சேன், நீ எந்த நிலைமையில இருக்கன்னு எல்லாம் நியாபகம் இருக்கா?”
“மறக்க கூடியதா சார் அது?” ஐயத்துடன் கேட்டாள் இயலணி.
“அப்போ எப்படி இருந்திருக்கணும் நீ. என்னை நம்பி அனுப்பி வச்ச உன்னை பெத்தவங்களை நினைச்சி பாத்தியா அவங்களைக்கூட விடு இது எதுலயும் சம்மந்தப்படாத அறிவு என்னமா பண்ணான்? அவனோட மொத்த வாழ்க்கையும் புரட்டி போட்ட மாதிரி மாறிடுச்சு.” என்றதற்கு பதில் சொல்ல முடியாமல் உதட்டை பற்களால் அழுந்த கடித்தபடி தன்னுணர்வுகளை மறைத்தாள்.
“உனக்கு அவனை புடிச்சதை கூட நான் தப்பு சொல்லல. ஒரே வீட்ல இருந்திருக்க, மனசு மாறியிருக்கலாம். ஆனா அவன் மனசுல என்ன இருக்குனு தெரிஞ்சும் நீ சுதாரிப்பா இருந்திருக்கணும். பார்த்து வார்த்தையை விட்டிருக்கணும்.”
“ஐயோ அவங்க அத்தை பொண்ணை விரும்புறாங்கனு எனக்கு தெரியாது சார்.” என்றிருந்தாள் பதறி. எங்கே தெரிந்துகொண்டே அவன் வாழ்க்கையை திட்டமிட்டு தட்டிப்பறித்ததாய் நினைத்துவிடக்கூடாதென்ற அவசரம்.
“தெரியாம இருந்ததுக்கு சந்தோஷப்படுற நிலைமை இல்லை இயல்.” என்ற வேந்தனின் கடினக்குரலில் வருத்தம் கொண்டவளாய்,
“எங்களை சேர்த்து வச்சி பேச ஆரம்பிச்ச அப்புறம் அவங்க குடும்பத்துல பேசிக்கிட்டதை வச்சி அவங்களுக்கு கல்யாணம் பேச வந்திருக்காங்கனு புரிஞ்சிது சார்.” என்றாள் அன்றைய நாளின் நினைவில்.
“அப்போவே கல்யாணத்துக்கு மறுத்திருக்கணும்ல நீ.”
“அவங்களும் இதேதான் கேட்டாங்க. அப்போ எனக்குத் தோணலயே சார். அப்பாடான்னு நிம்மதியா தான் இருந்துச்சி.” என்றவள் குரலில் ஏகத்திற்கும் ஆதங்கமும் தன்னைக் குறித்த வருத்தமும்.
“சரி விடுமா. அறிவு இப்போ கோவமா இருக்கான், போக போக சரியாகிடும். நீ பக்குவமா நடந்துக்கோ. ஒருநாள் உன் அன்பு அவனை மாத்தும்.” என்றதில் தொண்டை அடைத்தது இயலணிக்கு. அவள் அன்பை அடிப்படையாய் வைத்து நடந்தேறிய பந்தத்தில் அவள் அன்பே கேள்விக்குறியாய் இருக்க எப்படி மாற்றம் வரும் என்று விரக்தியாய் நினைத்துக்கொண்டாள்.
“இந்த மாசம் ஹியரிங் இருக்கு இயல். நீ வந்து சாட்சி சொல்ற மாதிரி இருக்கும்.” என்று வேந்தன் சொல்லவும் பரபரப்பு ஒட்டிக்கொண்டது இயலணிக்கு.
“சாட்சி சொன்னா எல்லா முடிஞ்சிடும்ல சார்? நான் இப்படி மறைஞ்சி இருக்க வேண்டிய அவசியம் இல்லையில்ல?”
“இதோட முடியுமான்னு தெரியல. ஆனா உனக்கு கல்யாணம் ஆகிட்டதால ஒரு பிரச்சனைலேந்து நீ தப்பிச்ச. எப்போவும் போல நடமாட வாய்ப்பிருக்கு. நேர்ல வா நாம பாக்கலாம். ரொம்ப பிரச்சனை ஆகுற மாதிரி இருந்துச்சுன்னா போலீஸ் ப்ரொடெக்ஷன் கேட்டுக்கலாம். லாயர் பேசுவார் நாளைக்கு, டீடெயில்ஸ் கேட்டுக்கோ.”
சரியென்றவள் தயக்கத்துடன், “இது அவங்களுக்கு தெரியுமா சார்?”
“எது? எவங்களுக்கு?” புரியாது கேட்டான் வேந்தன்.
“என்னை பத்தி உங்க பிரெண்டுக்கு?”
“உன் ஹஸ்பண்டுக்கு நீதான் சொல்லணும்.” என்றிருந்தான் வேந்தன் பட்டென்று.
கண்களை இறுக மூடித்திறந்தவள் எதுவும் பேசாது மெளனமாய் இருக்க, என் வேலை முடிந்துவிட்டது என்பது போல் அழைப்பிலிருந்து விடைபெற்றான் வேந்தன். அலைபேசியை அங்கிருந்த அலமாரியில் வைத்தவள் சுரீலென்று வலித்த தலையை பிடித்துக்கொண்டு சுவரில் சாய்ந்து அமர்ந்துவிட்டாள்.
நிமிடங்கள் கழித்து வந்த அறிவழகன் சமையலறை சென்று ஒரு தட்டில் வாங்கி வந்திருந்தவற்றை பிரித்துப் பரிமாறி எடுத்து வந்து இயலணி முன் வைத்தான். தன் முன் நிழலாடவும் நிமிர்ந்தவள் எதிரே இருக்கும் தட்டை பார்த்துவிட்டு அவனைப் பார்க்க, அவனோ அலைபேசி எடுத்துக்கொண்டு அறைக்குள் சென்றுவிட்டான். கண்கள் இருட்டுவது போலிருக்க, அந்த நேரம் எதையும் யோசிக்கத் தோன்றாமல் வேக வேகமாக உணவை அள்ளித் திணித்தாள். வெகுமதியான உணவு தொண்டைக்குழியை அடைத்து புரையேறி இருமலைக் கிளப்ப, அவள் முன்னே நீட்டப்பட்டது தண்ணீர். வாங்கிப் பருகியவள் நன்றியுடன் தன்னெதிரே நிற்பவனைப் பார்க்க, அவனும் அழுத்தமாக பார்த்து நின்றான்.
எதற்காக இப்படி பார்க்கிறான் என்று அறியாது முகம் சுருக்கம் கொள்ள, “கல்யாணம் பண்ணி இங்க அழைச்சிட்டு வந்த முத நாளே நீ பட்டினியா கிடந்துட்டு நாளைக்கு நான் பட்டினி போட்டேன்னு சொல்லிக் காமிக்கக்கூடாது பாரு, அதான் வாங்கிட்டு வந்தேன். தொண்டை அடச்சி ஒரேடியா மேல போயிடாத. இன்னொரு பழியை என்னால சுமக்க முடியாது.” என்று குத்திவிட்டு சென்றான்.
முணுக்கென்று வந்த கண்ணீரை புறங்கை கொண்டு துடைத்துக்கொண்டவள் தட்டில் இருந்த உணவை வேகவேகமாக முழுங்கிவிட்டு அறிவழகனை தேடிச் சென்றாள். காதில் ஹெட்போன் மாட்டிக்கொண்டு கால் ஆட்டியபடி தரையில் படுத்திருந்தான். அவன் அருகே சென்று நின்று அவனைப் பார்க்க, அவள் வந்திருப்பது தெரிந்தாலும் கண்டுகொள்ளவில்லை. கூப்பிட்டாலும் கேட்காது என்பதால் ஆடிக்கொண்டிருந்த காலை லேசாக பிடிக்க, பட்டென்று ஹெட்செட்டை உதறித் தள்ளி எழுந்தான் அறிவழகன்.
“எதுக்கு இப்போ கால் எல்லாம் புடிக்குற?” அதிர்வாய் அவன் கேட்க, நினைப்புதான் என்று முகம் சுருக்கியவள், “இந்த மாசமே நான் போயிடுவேன். நீங்க நிம்மதியா இருக்கலாம்.” என்றதுதான் தாமதம் கரத்தை நீட்டி அவளதை அழுத்தமாக பற்றினான்.
“என் நிம்மதி எல்லாத்தையும் துடைச்சு எறிஞ்சிட்டு அப்படியே கிளம்பிடலாம்னு பாக்குறியா…”
“இல்லை நான்…”
“போய்டுவேன்னா இதுக்கு என்னடி அர்த்தம்?” என்று கொதித்தவன் விரல்கள் அவள் கழுத்திலிருந்த மஞ்சள் கயிறை உடைக்கு வெளியே இழுத்திருந்தது.
பதிலின்றி அவனைப் பார்த்தவள் அவனிடமிருந்து மாங்கல்யத்தை வாங்கப்பார்க்க, தன் பிடியில் இறுக்கம் கூட்டி கயிறை தன்னை நோக்கி இழுத்தான் அறிவழகன். அவன் வேகத்தில் அறுந்துவிடுமோ என்ற பயத்தில் ஓரடி முன்னே வந்தவள் அவன் விரல்களை பிரித்து தாலியை விடுவிக்க முயல, இன்னுமே அருகில் இழுத்தான் மனைவியை. நெஞ்சில் மோதி நின்ற மனைவி என்ன செய்கிறாள் என்று குனிந்து பார்த்தபோது நாசிகள் இரண்டும் மோதி நிற்க, மூச்சுக்காற்று கலந்து ஒன்றானதை கவனிக்கும் நிலையில் இல்லை இருவரும்.
“என் கையால இதை வாங்கிக்க தெரிஞ்சிதுல. இதுக்கு என்னடி எதிர்காலம்? ஊர் கூட்டி என் மானத்தை வாங்கிட்டு நீ போறேன்னா அப்படியே விட்டுருவேன்னு நினைச்சியா?” வார்த்தைகளில் கடினம் கூடி ஆத்திரம் வெளிப்பட்டது.
“ஐயோ ப்ளீஸ்ங்க. இதை எத்தனை முறை வேணும்னாலும் நான் கேக்குறேன். சாரி சாரி சாரி. என் மேல தான் முழு தப்பும். நான் உங்களை பார்த்திருக்கவே கூடாது, உங்க கூட ஊருக்கும் வந்திருக்க கூடாது.” என்றவளை இடைமறித்தவன்,
“அப்படியே தாலியை வாங்கிட்டு இருந்திருக்கவே கூடாதுனு சொல்லு…” என்று எடுத்துக்கொடுத்தவன், “நீதான என்னை பார்த்து விரும்பி இதை வாங்கிகிட்ட? இப்போ என்ன என்னை பார்த்திருக்கவே கூடாதுனு டைலாக் பேசுற?” எள்ளல் பேசியவன் நெஞ்சில் கைவைத்து பலம் கொண்டு தள்ளியவள் அழுத்தம் தாளாமல் வெடித்தாள்.
“ஐயோ நான் உங்களை விரும்பல. எனக்கு உங்க மேல காதல் இல்லை. அக்கறையா இருக்காரே, நல்லா பாத்துக்குறாரேன்னு ஏதோ ஆர்வத்துல பார்த்துட்டேன். மத்தபடி உங்க மேல எனக்கு எதுவும் இல்லை. எதுவுமே இல்லை. நாந்தான் தப்பா புரிஞ்சி ஏதோ தெரியாம பேசி…” நெற்றியில் அடித்துக்கொண்டே பேசியவள் விழிகளும் நாசியும் நீரைச் சுரக்க, அதை துடித்துக்கொண்டே அவனை குற்றவுணர்வுடன் பார்த்தாள்.
“அப்புறம் எதுக்குடி அன்னைக்கு என்கிட்ட மயங்கி நின்ன? அன்னைக்கு என் உமா பத்தி பேச்சை எடுக்காம இருந்திருந்தா வாழ்க்கையை ஆரம்பிச்சிருந்தாலும் சரிதாங்குற மாதிரி இருந்த…” முதலிரவை நினைவுப்படுத்தி அவன் பேசவும் வெட்கிக் குனிந்தாள் இயலணி.
அன்றைக்கு அவன் அதிரடியில் முதலில் அதிர்ந்தாலும் பின் நொடி நேரமேனும் அவன் அருகாமையில் திளைத்திருந்தது மெய்தானே. காதலின்றி ஒருவனின் நெருக்கத்தை, தொடுகையை எப்படி ஏற்றேன் என்ற கேள்வியே அவளை குறுகச் செய்தது. தோள்கள் தளர முகத்தை மூடியவள் முதுகு அழுகையில் குலுங்க, ஆத்திரமாய் வந்தது அறிவழகனுக்கு. இவள் இஷ்டத்திற்கு காதல் என்று கற்பனை செய்ததோடு இல்லாமல் ஊர் முன்னே தாலியும் வாங்கிக்கொண்டு இப்போது எதுவும் இல்லை என்று என் வாழ்க்கையில் இருந்து விலகிச் செல்வாளா? எவ்வளவு திண்ணக்கம். ஆங்காரம் தலைக்கேறி புத்தி மழுங்கியது.
“எனக்கு புடிக்காம தாலி கட்ட வச்சி தாலி வாங்கிகிட்டில்ல. இப்போ உனக்கு புடிக்காம என்கூட வாழு.” என்றவனை அதிர்ந்து பார்த்தாள் இயலணி. என்ன உளருகிறான் இவன் என்ற பார்வையை புரிந்து கொண்டது போல் அவள் இடையில் கையிட்டு அருகில் இழுத்தவன், “மைனஸ் இன்டூ மைனஸ் ப்ளஸ். உனக்கும் புடிக்கல, எனக்கும் புடிக்கல. நாம ப்ளஸ் ஆகிடலாம்.” என்றவன் அவள் யோசிக்க நேரமே கொடுக்காது அவள் பின்னந்தலையில் கையிட்டு அருகில் இழுத்தவன் நொடியும் தாமதிக்காது அவள் இதழோடு இதழ் பொறுத்த, வன்மையின் ஆதிக்கம்.
நீயா நானா என்று காதலில் திமிரத்திமிர, நீ நான் என்று கிறங்கக் கிறங்க, நாம் என்று தழுவி களிப்புற்று நடக்க வேண்டிய யுத்தம் மறுக்க மறுக்க, நெஞ்சங்களின் வஞ்சத்தில் ஒன்றோடு ஒன்று போட்டிப்போட்டு, ஒன்று திமிர மற்றொன்று அதில் அடங்க என்று நிகழ்ந்து முடிந்தது காலத்திற்கும் மாறாத வடுவாய்.
error: Content is protected !!