Skip to content
Post Views: 152
அத்தியாயம் 19
அஞ்சனா கதவை தட்ட, கதவை திறந்த துர்க்காவிற்கு என்ன எதிர்வினையாற்றுவது என்று தெரியவில்லை. அஞ்சனாவின் முகத்தையே பார்த்துக் கொண்டு நின்று இருக்க,
Advertisement
“ம்க்கும்.. சில்லுனு ஒரு காதல் சூர்யா பூமிக்கானு நினைப்பு.. என்ன ரியாக்சன் இது.. விலகுங்க…” என்று துர்க்காவை தள்ளிவிட்டு நித்தியா உள்ளே செல்ல
அஞ்சனாவோ “உன் ப்ரெண்டா உன்ன பாக்க, பேசக்கூடாது.. ஆனா உன் அண்ணனோட ஆசை நாயகியா உன்ன பாத்து பேசலாம் இல்ல…” என்று கேட்க
Advertisement
Advertisement
தன் கையால் தோழியின் வாயை மூடியவள் “நீயும் அண்ணாவும் எப்படினு எனக்கு தெரியும்.. உன்ன நீயே அசிங்கப்படுத்திக்காத அஞ்சு…” என்கவும்
“அப்பப்பா.. அஞ்சுவாம் இல்ல அஞ்சு.. உன் பேர் இன்னும் ஞாபகம் இருக்கு…” என்று நித்தியா சொல்ல
Advertisement
துர்க்கா கண்கள் தானாக கலங்கியது. “என் நிலைமை தெரிஞ்சுமா அண்ணி இப்படி பேசுறீங்க.. அம்மா அத்தைய தாண்டி என்னால எதுவுமே பண்ண முடியல.. அவங்களையும் மீறி நான் அஞ்சு கூட பழகி இருந்தா அஞ்சுவையும் சும்மா விட்டிருக்க மாட்டாங்க.. என்னையும் நிம்மதியா மூச்சு கூட இழுத்து விட விட்டிருக்க மாட்டாங்க.. ரொம்பவும் அனுபவிச்சிட்டேன் இந்த அறைக்குள்ளயாவது நிம்மதியா இருக்கலாமேனு தான் அவங்க சொன்னத கேட்டேன்…” என்று துர்க்கா சொல்ல
“இப்ப மட்டும் என் கூட பழகுனா உன் அத்தையும், அம்மாவும் சும்மா விட்டுடுவாங்களா?…” என்று கேட்க
மெலிதாக சிரித்தவள் “அண்ணி கூட பழகாம இருக்க முடியாதுன்னு அவங்களுக்கு புரியும்…” என்று துர்க்கா சொல்ல
“அண்ணியா!…” என்று அஞ்சனா கேட்க
“உன்ன தன் பொண்டாட்டி ஆக்க முடிவு எடுக்காம என் அண்ணன் அவங்க அறைக்குள்ள அனுமதிச்சிருக்க மாட்டாங்க…” என்று துர்க்கா சொல்ல
“பார்டா!.. டியூப் லைட் பத்திகிச்சு.. அதிசயம் தான்…” என்று நித்தியா கிண்டல் செய்ய
“நித்தி!…” என்று அவளை அடக்கிய அஞ்சனா “ம்ம்.. நான்தான் உன் மூத்த அண்ணி.. இந்த முடிவ பத்து வருஷத்துக்கு முன்னாடியே எடுத்திருந்தேன்.. நீ என்கிட்ட பழக தயங்குனாலும் இந்த வீட்டுக்கு மருமகளா வந்து உன்ன ஒரு கை பாக்கலாம்னு நினைச்சிருந்தேன்.. ஆனா என்னென்னவோ நடந்திருச்சு.. சரி சொல்லு உன் அம்மா அத்தை சொல்லி என்கிட்ட பழகாம இருந்த மாதிரி தான் இந்த துறவி கோலமும் கரெக்டா…” என்று கேட்க
“இல்ல அஞ்சு.. இது..இது நானா ஏத்துக்கிட்ட வாழ்க்கை…” என்று சொன்ன துர்க்காவின் கண்கள் தாழ்ந்தது.
“இன்னும் எத்தன நாள்டி உன்ன நீயே ஏமாத்திக்க போற.. உன் வயசுல இருக்குற எந்த பொண்ணுடி ஆசைப்படுவா இப்படி ஒரு வாழ்க்கை…” என்று அஞ்சனா கேட்க
“ஆசைப்படுவாள்.. என்ன மாதிரி எடுக்க கூடாத வயசுல தவறான முடிவு எடுத்து.. வாழ்க்கையின் கோரத்த பாத்து.. சாவோட விளிம்பு வரைக்கும் போய் வந்தவளுக்கு இந்த உலக வாழ்க்கை வெறுத்துப் போகாம இருந்தா தான் அதிசயம்.. அஞ்சு நீ இந்த வயசுல பாக்குற எல்லாத்தையும் நான் 15 வயசுக்குள்ளேயே பாத்துட்டேன்.. இனியும் எந்த வலியையும் வேதனையையும் தாங்குற தெம்பு என் மனசுக்கு இல்ல.. அதனாலதான் இந்த வாழ்க்கைய நானே ஏத்துக்கிட்டேன்…” என்று துர்க்கா சொல்ல
“பத்து வருஷத்துக்கு முன்னாடி நீ இந்த முடிவ எடுத்தது ஒரு வித விரக்தியில.. ஆனா உன் மனசு இப்பவும் அதே நினைப்புல தான் இருக்கா…” என்று அஞ்சனா கேட்க
“அதெல்லாம் மனசு மாறினாலும் அம்மணி ஒத்துக்க மாட்டாங்க.. ஏன்னா இந்த குடும்பத்து மரியாதை கௌரவ முக்கியம்…” என்று நித்தியா நொடித்துக் கொள்ள
துர்க்கா அமைதியாக இருக்க, “நீ சொன்னியே எடுக்க கூடாத வயசுல நீ எடுத்த தவறான முடிவுனு.. 18 வயசுல இப்படித்தான் உன் வாழ்க்கையினு நீ எடுத்த முடிவும் தப்புதான் துர்க்கா.. இப்போ உன் உணர்வுகள் மனநிலை மாறி இருக்கும்.. ஆனா ஏதோ உன்ன தடுக்குது.. நீ இந்த குடும்பத்த பத்தி யோசிக்கிறனா அது தப்பு.. எப்போ என் அண்ணன் கையால உன் கழுத்துல தாலி ஏறிச்சோ அப்பவே நீ அந்த குடும்பத்து பொண்ணுதான்..
…நீ இனிமேல் யோசிக்க வேண்டியது என் அண்ணனோட மானம் மரியாதைய பத்தி தான்.. துர்க்கா நல்லா யோசி.. ஒரு பொண்ணா புகுந்த வீட்டு மான மரியாதைய காப்பாத்த வேண்டியதும் உன்னோட கடமை தான்.. பெத்தவங்கள எதிர்த்து புருஷன் வீட்டுக்கு போனா பொறந்த வீட்டுக்கு தலை குனிவுன்னா.. பொண்டாட்டிய வெச்சு வாழ தெரியாம அம்மா வீட்டுல விட்டு வச்சிருக்கான்னு என் அண்ணன ஊர் பேசுறதும் உன் புகுந்த வீட்டு மரியாதைய தலகுனிய வைக்கும்…” என்று சொன்ன அஞ்சனா
“எல்லா முடிவும் துன்பத்த மட்டுமே தராது.. சந்தோஷத்தையும் தரும்.. துணிஞ்சு முடிவெடு…” என்று துர்க்காவின் கையை பிடித்து சொல்ல
“ஆமா.. ஆமா.. உடனே வீறு கொண்டு எழுந்து புருஷன தேடி போயிடப் போறா.. மூச்சு பிடிச்சு பேசுனதுக்கு தண்ணிய குடி நீ…” என்ற நித்தியா
“இங்க பாரு!.. என் அண்ணன கட்டிக்கிட்ட.. ஆனாலும் அண்ணினு கூப்பிட முடியாது.. அஞ்சு என் ப்ரெண்டு.. ப்ரெண்டோட ப்ரெண்டு எனக்கும் ப்ரெண்டு தான்.. அதனால மரியாத கொடுத்தெல்லாம் பேச முடியாது.. திட்டும்போது கஷ்டமா இருக்கு.. அதனால இனி வா போ தான்.. வேணும்னா நாலு பேர் முன்னாடி அண்ணிய மட்டும் சேத்துக்கிறேன்…” என்று நித்தியா படப்படவென பொறிய
“ஏன்டி நான் என்ன பேசிட்டு இருக்கேன்.. உனக்கு அவள திட்ட கஷ்டமா இருக்குன்னு ப்ரெண்டு போஸ்டிங் கேக்குற…” என்று அஞ்சனா திட்ட
துர்க்காவிற்கும் சிரிப்பு வந்துவிட, “விடு அஞ்சு.. அண்ணிய எதுவும் சொல்லாத.. அவங்க எப்படி வேணா கூப்பிடட்டும்…” என்று சொல்ல
“அவள் கூப்பிட கேட்கல.. உன்ன திட்ட வசதியா இல்லன்னு கேட்காள்…” அஞ்சனா சொல்ல
“பாவம் இல்ல அவங்க.. மனசுக்குள்ள ஒரு மாதிரியும் வெளிய ஒரு மாதிரியும் திட்ட கஷ்டமா இருக்கும் இல்ல…” என்று துர்க்கா சொல்ல
“அதான் ப்ரெண்டுனு ஆயாச்சே.. எனக்கும் மரியாதை எல்லாம் வேணாம்.. வா போனே கூப்பிடு…” என்று நித்தியா சொல்ல
“சட்டுனு மாத்திக்க முடியல அண்ணி.. போகப் போக மாத்திக்கிறேன்…” என்று துர்க்கா சொல்ல
“அது எத்தன கிலோமீட்டருக்கு அங்கிட்டு இருக்கோ.. நீ போக போகனு பல வருஷமா போய்க்கிட்டே இருப்பியே…” என்று துர்க்காவை கிண்டல் செய்ய
“ஏன் அண்ணி அப்படி சொல்றீங்க?…”
“பின்ன.. என்கிட்ட நாலு வார்த்த பேசவே ரெண்டு வருஷமாச்சு உனக்கு.. அப்புறம் எப்படி சொல்ல…”
“சரி அண்ணி.. அடுத்த முறை பேசும்போது மாத்திக்கிறேன்…” என்று துர்க்கா சொல்ல
“ஏய் நித்தி நாம எதுக்கு வந்தோம்.. நீ என்ன பண்ணிட்டு இருக்க…” என்று அஞ்சனா அவளை கடிந்து கொள்ள
“என்னடி எனக்கு அக்காவா வர போற திமிர் இப்பவே தெரியுது.. அதான் பக்கம் பக்கமா பாடம் எடுத்தாச்சே.. யோசிக்க அவளுக்கு டைம் குடு…” என்று நித்தியா சொல்ல
“அம்மா தாயே எனக்கு எந்த திமிரும் இல்ல.. சரி வேற ஏதாவது பேசலாம்…” என்றபடி மூன்று பெண்களும் கட்டிலில் அமர்ந்து கொள்ள
அஞ்சனா துர்க்காவின் ஆரம்ப கால நட்பு முதல் கொண்டு நித்தியா அஞ்சனா நட்பு வரை பேச்சுக்கள் நீண்டு, மூன்று பெண்களும் நெருக்கமாகினர்.
மதிய நேரம் வரவும், நித்தியா “சரி, சரி.. நான் போய் சமைக்கிறேன்.. வீட்டுல இடியே விழுந்தாலும் என் புருஷனுக்கு என் கையால தான் சோறு வேணும்…” என்று சொல்ல
அவளை துர்க்கா பார்க்க, “அடியே அண்ணியாரே.. உன்ன தூண்டி விட சொல்லல.. அதுதான் உண்ம…” என்று நித்தியா சொல்ல
“நான் எதுவும் சொல்லலயே அண்ணி.. நீயா எதுக்கு வாக்குமூலம் தர்ற…” என்று துர்க்கா கேட்க
“பரவாயில்லையே இந்த அளவுக்கு வாய் வருது…” என்ற நித்தியா அறையை விட்டு வெளியேற
மெல்லிய புன்னகையுடனே அவளை துர்க்கா பார்த்து இருக்க,
அஞ்சனா “சரி துர்க்கா.. நானும் போய் ஆதூவ பாக்குறேன்.. ஸ்கூல் விட்டு வந்துருவாதானே…” என்று சொல்லிவிட்டு வெளியேறி, பிரபாகரன் அறைக்கு சென்றாள்.
அவள் எதிர்பார்த்தது போலவே பிரபாகரன் மகளை அழைத்து வர சென்று இருந்தான். அறையில் இருந்த அவளின் ஃபோனுக்கு மெசேஜ் அனுப்பி விட்டு தான் சென்றிருந்தான்.
இதோ மணியை பார்க்க இன்னும் சற்று நேரத்தில் வந்து விடுவாள் அவனது இன்னொரு செல்லம்மா, மகளுடன் பிரபாகரன் அறைக்கு வரும் வரையில் முதல் முறை இன்டர்வியூக்கு சென்றவள் போல் டென்ஷனாக குறுக்கும் நெடுக்கும் நடந்து கொண்டிருந்தாள் அஞ்சனா.
என்ன சொல்வது, எப்படி பேசுவது, குழந்தைக்கு என்னை பிடிக்குமா! இல்ல தப்பா ஏதாவது புரிஞ்சுகிட்டு என்னோட கோவிச்சுக்குமா! என்று மனதில் ஆயிரத்தெட்டு கேள்விகள்.
பிரபாகரன் குழந்தையை கையில் தூக்கிக் கொண்டு வந்தவன், பதட்டமாக நின்றிருந்த அஞ்சனாவை பார்த்து மெலிதாக சிரித்தபடி குழந்தையை இறக்கிவிட,
ஆதூரியோ தங்கள் அறையில் இருக்கும் புதியவளை குட்டி கண்களை உருட்டி பார்த்தாள்.
அஞ்சனாவிற்கு சின்ன குட்டியை தூக்குவதா வேண்டாமா என்ற தவிப்பு.
“அப்பா! யாரு இவங்க?…” என்று தந்தையிடம் ஆதூரி கேட்க
குழந்தையின் உயரத்துக்கு முட்டி போட்டு அமர்ந்தவன் “இவங்க இனிமேல் நம்ம கூட தான் இருக்க போறாங்க.. உனக்கு இவங்க யாருன்னு போக போக தெரியும்…” என்று சொன்னவன்
அஞ்சனாவை திரும்பி பார்த்து விட்டு, நெற்றியை ஒற்றை விரலால் நீவியவன் “இவங்களும் எனக்கு செல்லம்மா தான்…” என்று சொல்ல
விழிகள் விரிய அஞ்சனாவை திரும்பி பார்த்தாள் சின்னவள். தன் தந்தைக்கு இன்னொரு செல்லம்மா என்றால் அவள் எவ்வளவு முக்கியமானவள் என்பது அந்த சின்ன குட்டிக்கு புரிந்தது.
பிரபாகரன் இதுதான் உன் அம்மா என்றோ சித்தி என்றோ எந்த உறவு முறையும் கூறவில்லை. ஏனென்றால் அம்மா என்ற உறவுக்கான உணர்வு பூர்ணாவால் ஆதூரிக்கு கிடைத்தது கிடையாது.
அஞ்சனாவை சித்தியாக அறிமுகப்படுத்த அவன் மனதுக்கு ஒப்பவில்லை. அதே நேரம் அம்மா என்றும் கூற முடியாது தாயின் பாசம் பெரிதாக கிடைக்கவில்லை என்றாலும் பூர்ணா தான் தன் தாய் என்பது ஆதூரிக்கு நன்கு தெரியும்.
எனவேதான் அவர்கள் இருவருக்கிடையில் என்ன உறவு என்பதை உணர்வுபூர்வமாக ஆதூரியே அறிந்து கொள்ளட்டும் என்று தான் எதுவும் கூறவில்லை.
அஞ்சனாவோ தவிப்பாக பிரபாகரனை பார்க்க, எதற்கென்று அவனுக்கு தெரியுமே, தன் மகளை தூக்கக்கூடாது என்று அவன் தானே கட்டளையிட்டு இருந்தான்.
அவளது பரிதவித்த விழிகளை பார்க்கும்போது சிரிப்பாக வந்தது. பற்கள் தெரிய சிரித்தபடியே கண்களால் சம்மதம் சொல்ல,
சொர்க்க வாசலை கண்டவள் போல் மலர்ந்த முகமாக “ஆதூ குட்டி!.. என்கிட்ட வாரீங்களா?…” என்று கைகள் இரண்டையும் நீட்ட
சின்னவள் என்ன நினைத்தாளோ தன் கைகள் இரண்டையும் தூக்கி தூக்கும்படி சைகை செய்தாள். ஆனந்தமாக அவளை அள்ளித் தூக்கிக் கொண்டாள் அஞ்சனா.
மறுநொடியே முகம் முழுவதும் மூச்சு முட்ட முத்தங்களால் நிரப்பினாள். “நான் உங்க கூடவே இருக்கட்டுமா?.. என்ன பாப்பாக்கு புடிச்சிருக்கா?…” என்று தவிப்பாக ஆதூரியின் முகத்தை பார்த்தபடி கேட்க
“ம்ம்.. என் கூடவே இருப்பீங்களா!.. எனக்கு கதை சொல்லி தூங்க வைப்பீங்களா?.. ராத்திரி தூங்கும்போது என்ன கட்டிப்பிடிச்சு தூங்குவீங்களா?…” என்று அந்த பிஞ்சு மனதின் ஏக்கங்களை ஆசையாக கேட்க
அஞ்சனாவின் கண்கள் கலங்கி, கண்ணீர் வடிந்தது. ஆமாம் என்று தலையாட்டியவள் “என் பொண்ணு கூடவே தான் இருப்பேன் எப்போவும்…” என்று அழுத்தமாக சொல்ல
ஆதூரியும் அஞ்சனாவின் கழுத்தை கட்டிக்கொண்டாள் சந்தோஷத்தில். பிரபாகரன் “செல்லம்மா!…” என்று அழைக்க, இருவரும் திரும்பி பார்க்க,
ஆதூரியை கைகாட்டியவன் “ஆதூவ கூப்பிட்டேன்…” என்று சொல்ல அஞ்சனாவிற்கு பொறாமையும் சிரிப்பும் ஒருங்கே வந்தது.
“செல்லம்மா அப்பாவும் உனக்கு கதை சொல்லி, கட்டி புடிச்சிட்டு தூங்க வச்சேன் இல்ல…” என்று மகளிடம் கேட்டான்.
அவனுக்கோ சற்று கவலையாக இருந்தது, மகளை ஏங்க வைத்து விட்டோமோ என்று. ஆனால் ஆசையாக ஆதூரி கேட்டைவையையும் தாண்டி கண்ணுக்குள் பொத்தி தான் பார்த்துக் கொள்கின்றான் பிரபாகரன்.
பின்பும் மகளுக்கு என்ன வேண்டும். அவனுக்கு புரியவில்லை, என்னதான் மற்ற பெண்களிடம் தாய்மை பாசம் கிடைத்தாலும், தாய்க்கு தாயாக இருந்து தந்தை பார்த்துக் கொண்டாலும், தாயின் மார்புச்சூட்டில் தூங்க வேண்டும் என்பது அந்த சின்னசிட்டின் ஆசையாக இருந்தது.
அதற்கு காரணமும் நித்தியா விகர்ணன் தான். என்ன தான் சித்தியாக பாசம் குடுத்தாலும், விகர்ணன் அம்மா என்று சினுங்கும் போது நித்தியா மார்பில் போட்டு தட்டிக் கொடுக்கும் போது, அதை பார்க்கும் அந்த பிஞ்சு மனதிலும் ஏக்கம் குடிகொண்டு விட்டது.
ஒருவேளை நல்ல அம்மாவாக பூர்ணா அன்பையும் அரவணைப்பையும் குடுத்து இருந்தால் இந்த ஏக்கம் வந்திருக்காதோ.
“ம்ம்.. ஆனா அம்மாவ கட்டிபுடிச்சு தூக்கணும்னு ஆசையா இருக்கும்.. இப்போ தான் புது அம்மா வாங்கி தந்துட்டீங்களே.. அதான் கேட்டேன்…” என்று சொல்ல
குழந்தை அம்மா என்று சொன்னதில் அஞ்சனா ஆனந்த திகைப்பில் இருந்தாள் என்றால், புது அம்மா வாங்கி தந்தீங்க என்றதில் திகைத்து விழித்தான் பிரபாகரன்.
இதற்கு காரணமும் நித்தியா தான். பூர்ணா குழந்தையை சரியாக கவனித்து பாசம் காட்டியது கிடையாது. பிரபாகரனுடன் சண்டை போட்டு கோபித்துக் கொண்டு தாய் வீடு செல்லும் போது கூட குழந்தையை கூடவே அழைத்துச் சென்றது இல்லை.
பூர்ணாவின் பாசம் தன் குழந்தை மீது எத்தகையது என்றால் தாய் பால் குடுக்கவே பிரபாகரனிடம் பேரம் பேசியவள் தான். அந்த பேரம் பணம் இல்லை, என்னவென்பது அவனுக்கு மட்டுமே தெரியும்.
அப்படி இருக்க தாயின் அன்புக்கு ஏங்கி, ஆதூரி அழும் போதெல்லாம் “அச்சோ ஆதூ குட்டி.. அழாதடா.. இந்த அம்மா வேணாம் நம்ம புது அம்மா வாங்கி தரச்சொல்லி அப்பாகிட்ட கேக்கலாம்…” என்று சொல்லி தான் நித்தியா சமாதானம் செய்வாள்.
அதை பிடித்துக் கொண்டு ஆதூரியும் தாயின் புறக்கணிப்பு பாதிக்கும் போதெல்லாம் “அப்பா! புது அம்மா வாங்கி தாங்க…” என்று கேட்பாள்.
அவனும் பார்க்கலாம் என்று சொல்லி, வேறு ஏதாவது சமாதானம் கூறி சமாளித்து விடுவான். அதை வைத்து தான் இன்று அஞ்சனாவை புது அம்மா என்று நினைத்து விட்டாள் சின்னவள்.
அஞ்சனாவோ “ஆ..ஆதூ குட்டி.. நான்..நான் அம்மாவா!…” என்று குரல் தழுதழுக்க கேட்க
குழந்தை தந்தையை திரும்பி தவறாக கூறி விட்டமோ என்று பார்க்க, பிரபாகரன் ஆமாம் என்று தலையை ஆட்ட
“அம்மா தானே!…” என்று சொல்ல, ஓவென்ற பெரிய கேவளுடன் தன் பெறாத மகளை இறுக் அணைத்துக் கொண்டு கதறினாள் அஞ்சனா.
அவளால் நிற்க முடியவில்லை, தோய்ந்து கீழே அமர்ந்து விட்டாள். இந்த ஜென்மத்தில் தன் காதால் கேட்க மாட்டோமா என்ற ஆசை வார்த்தை, அவள் காதலனின் குழந்தையின் வாயில் இருந்து கேட்கின்றாள் அவள் மகிழ்ச்சிக்கு அளவு சொல்லி விட முடியுமா என்ன.
error: Content is protected !!