Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

முகவரி தேடும் காதல்

முகவரி தேடும் காதல் 06—02

“ ஆமா ஒரு குடும்ப பொண்ணு யாரும் இப்படி நடிப்புக்கு வருவாங்களா?.. அப்படி வருவது என்றால் எல்லாத்தையும் இழக்கவும் தயாராக இருக்கனும்.. இல்லன்னா இழந்துட்டு வந்து இருக்கனும்..



Advertisement

 முன்னாடியே இப்படி ஒரு அசிங்கத்தை பார்த்து இந்த பொண்ணு இப்படி உயிரோட இங்க நம்ம இடத்துல வந்து இருக்குதுன்னா இதுக்கு எவ்வளவு துணிச்சல் இருக்கணும்..

Advertisement

Advertisement

 நம்ம மாறன் சின்ன புள்ளையிலிருந்து நம்ம கண்ணு முன்னாடி வளர்ந்த பிள்ளை..

Advertisement

 பக்கத்துல நம்ம எவ்வளவு பேர் இருக்கோம்.. நாம எல்லாருக்கும் பொண்ணுங்க இருக்காங்க.. ஒரு பொண்ணை யாருன்னு தல நிமிர்ந்து பார்த்திருக்குமா?.. இல்லையே..! அப்படி இருக்கும்போது நம்ம மாறனை எப்படி தப்பு சொல்ல முடியும்.. இந்த பொண்ணு தான் தப்பு பண்ணி இருக்கு.. ” என்றார் ஒரு பெண்..

“ ஏங்க.. எப்படிங்க அந்த பொண்ணு மட்டும் தனியா தப்பு பண்ண முடியும்..?

 அன்னைக்கு நடு ராத்திரியில மாறன் இந்த பொண்ணை அழைச்சிட்டு வந்ததை நானே பார்த்தேன்..

 ஏன் இப்ப கூட கொஞ்ச நாள் முன்னாடி ரெண்டு பேரும் ஜோடியா வெளில போனாங்க.. எங்க இல்லன்னு சொல்லட்டும் பார்ப்போம் அவங்க யாராவது..

 சரி அதெல்லாம் விடுங்க.. சம்மந்தமே இல்லாத ஒரு பொண்ண எப்படி இத்தனை நாள் வீட்டுல வச்சிருக்க முடியும் அதுக்கு யாராவது பதில் சொல்லுங்க?..

 மாறனும் எத்தனை நாள் தான்.. கல்யாணம் பண்றது பத்தி யோசிக்காம இருக்க முடியும் அதுக்கும் கல்யாண வயசு வந்துடுச்சு, இவ்வளவு நாளும் குடும்ப பொறுப்ப தன் தோளில் சுமந்தது.. இப்ப அது வாழ்க்கையை அது பார்க்க போகுது..

 இந்த பொண்ணை பிடிச்சிருக்கு போல இருக்கு.. அதனால தான் அந்த பொண்ண வீட்டுக்கே கூட்டிட்டு வந்து வச்சிருக்கு… அதுக்கு தாய், தகப்பனா இருக்காங்க?. நல்லது பார்த்து செய்ய..

 பவானியும் அண்ணனுக்கு பொண்ணு தேடுது.. ஒரு தனி பொண்ணு எப்படி ஒரு அண்ணனுக்கு கல்யாணம் பண்றதுக்கு பொண்ணு தேட முடியும்..

தங்கச்சி நமக்கு பொண்ணு தேடி கஷ்டப்படுது நாம தங்கச்சிக்கு அந்த கஷ்டத்தை வைக்க வேணாமேன்னு நினைச்சு இந்த சீரியல்ல நடிக்கிற வெள்ளை தோல் பொண்ணு அவனுக்கு புடிச்சிருக்கும் போல இருக்கு கூட்டிக்கொண்டு வந்து வச்சிருக்கு…

 அப்படி கல்யாணம் பண்ணுறதுகுள்ள அவங்க அத்தை தவறிட்டாங்க..

கெட்டது நடந்த வீட்ல உடனே ஒரு நல்லது நடக்கணும்.. ஆனால் அதுக்கும் ஒரு கால நேரம் இருக்கும் தானே..

 நம்ம சந்திரா அக்காக்கு ஒரு மாசம் முடிஞ்சதும் இந்த பொண்ண கல்யாணம் பண்றதுக்கு காத்து இருந்திருப்பான் மாறன் .

 பொண்ணு மட்டுமா வீட்ல இருக்கு?.. பொண்ணோட அம்மாவும் இங்கே தான் இருக்காங்க அப்ப இது கல்யாண விஷயம் தானே..!

 நமக்கே தெரியும் மாறனுக்கு தந்தை வழி சொந்தம் சந்திரா மட்டும் தான்.. தாய் வழி சொந்தம்னு யாருமே இல்லை..

 இவங்க சொந்தக்காரங்களா இருப்பாங்களோன்னு?..நினைச்சு நாம கடந்து போறதுக்கும் வழி இல்லை..

 எல்லாத்தையும் கூட்டி கழிச்சு பாருங்கப்பா கணக்கு கல்யாணத்துல தான் வந்து நிற்கும்..

 என்ன நான் சொல்றது சரிதானே…” என்று புதிய மனிதன் கேட்கவும்

 அவரை சுற்றி கூடி இருந்தவர்கள் அனைவரும் ‘ஆம் ’என்று தலையாட்டினார்கள்..

“ ஏங்க அது சரி உங்களை இதுக்கு முதல் இந்த ஊர்ல பார்த்ததே இல்லையே..! நீங்க யாரு இவ்வளவு விஷயம் தெரிஞ்சு வச்சிருக்கீங்க?.. ” என்றார் ஒருவர்..

“ அட என்னங்க மாமா.. எங்களை தெரியலையா நான் தான் ராமசாமி ஐயாவோட பேத்தி திருமகள் இவர் என் கணவர் திருமதி..

 தாத்தா தவறிட்டாங்க, எங்க அப்பாவும் தவறிட்டாங்க.. இனி இந்த சொத்து இங்க இருக்கே நாங்க எப்படி வந்து போக முடியும்.. அதனால இதை வித்துட்டு போகலாம் என்னும் முடிவோட அமெரிக்காவில் இருந்து ஒரு மாதத்திற்கு முன்னாடி இந்தியா வந்திருந்தோம்..

 வந்தது வந்துட்டோம் கொஞ்சம் இடங்கள் சுத்தி பார்த்துட்டு சொத்தை வித்துட்டு நம்ம நாட்டுக்கு போய் சேரலாமேன்னு பத்து நாள் முன்னாடி தான் இங்க வந்தோம்..

 வந்த இடத்துல என் கணவருக்கு கொஞ்சம் இந்த காலநிலை ஒத்துப்போகாமல் உடம்புக்கு முடியாமல் போயிட்டு..

 அவர ஹாஸ்பிட்டல்ல வச்சிருந்தோம்.. அப்பத்தான் மாறன் அண்ணாவையும் இவங்களையும் பார்த்தோம்..

 எங்க தாத்தா இங்க நடக்கிறது எல்லாத்தையுமே எங்களுக்கு சொல்லுவாரு அப்படித்தான் இவங்க எல்லாரையும் தெரியும்..

இப்ப உங்க எல்லாருக்கும் புரிஞ்சுதா நாங்க யாருன்னு?..” என்றாள் அந்த புதிய பெண்..

“ அடடே..! ரொம்ப நல்லதும்மா.. ராமசாமி ஐயாவோட பேத்தியா நீங்க?. நல்லபடியா வந்த வேலையை முடிங்க..

 “ சரிம்மா நாங்களும் எங்களுக்கு தெரிஞ்ச ஆளுங்க கிட்ட வீடு விக்கிறது பத்தி சொல்லி வைக்கிறோம்..” என்றார் ஒருவர்..

“ சரிங்க சரிங்க.. உதவி செய்யுங்க ரொம்ப நல்லது.. நாங்க வந்த வேலையை முடிச்சிட்டு கிளம்பிடுவோம்.. என்னங்க.. முடிச்சிட்டு கிளம்பிடுவோம் தானே..?”

என்று ராகம் இழுத்தாள் அவள்.

“ ஆமாம் சீரும் சிறப்புமா பண்ணி பாத்துட்டு கிளம்பிடுவோம்..” என்றான்..

 இப்படி அவர்களுக்குள் பேசி அவர்கள் முடித்துக் கொண்டதும் மீண்டும் இசையின் பக்கம் திரும்பினார்கள்..

“ அதுதானே படிச்சவங்க சொல்றது சரியா தான் இருக்கும்.. மாறன் தம்பிக்கு கல்யாண ஆசை வந்துருச்சு போல..

 இனி நாமதான் முன்னாடி இருந்து அவங்க கல்யாணத்தை நல்லபடியா தாய் தகப்பன் இல்லாத பிள்ளைக்கு சிறப்பா முடிச்சு வைக்கணும்..

 இந்த ஊர்ல இல்லாத பொண்ணா?.. மாறன் போய் இந்த பொண்ண கூட்டிட்டு வந்து இருக்கே.. அதுதான் கொஞ்சம் சங்கடமா இருக்கு..

 காதல் எழவு யார் மேல யாருக்கு வரும் என்று எப்படி தெரியும்?..

 வெள்ள தோல் காரிய பார்த்து மாறன் தம்பி மயங்கிடுச்சு போல..

 ஆனாலும் இந்த பொண்ணு ஒழுக்கம் இப்படி பேசும் பொருள் ஆகிடுச்சே எப்படி நம்ம மாறன் தம்பி குடும்பம் நடத்தும்..” என்றார் ஒருவர்..

 தம்பிக்கு பிடிச்சு போய் தானே வீட்டில கூட்டி கொண்டு வந்து வச்சிருக்கு..

 இன்னும் கொஞ்சம் நேரத்துல மாறன் வந்துடும். நாமளே நல்லபடியா பேசி கல்யாணத்துக்கு நாள் குறிச்சி பண்ணி வைச்சிடுவோம்.. ” என்று அவர்களுக்குள் பேசி ஒரு தீர்மானத்திற்கு வந்தார்கள்..

 இவ்வளவு நடந்தும் தன் அண்ணனின் பெயர் அடிபடும் பொழுது பேச வந்த பவானியை கை பிடித்து அழுத்தி கண்களால் ஜாடை காட்டினார் கோமதி..

 இன்னும் விட்டால் இந்த ஊரே பிடிக்காத தனக்கு அவனை திருமணம் செய்து வைத்துவிடுவார்கள்.. என்று நினைத்த இசை இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என்று வாய் திறந்தாள்..

“ எல்லாரும் கொஞ்சம் உங்க பேச்சை நிறுத்துறிங்களா?. நான் இப்படி எல்லாம் ஒழுக்கம் இல்லாம கண்டவனோட ஊர் மேஞ்சு திரிந்ததை நீங்க யாராவது பார்த்தீங்களா?..

 வாய் இருக்கிறதுக்காக ஆளாளுக்கு வாய்க்கு வந்ததை எல்லாம் பேசாதீங்க..

 எனக்கு இவங்க யாருன்னு தெரியாது. அவசரத்துக்கு உதவி செஞ்சாங்க அவங்க வீட்டுல கெட்டது நடந்திருக்கு இப்ப இங்க இருந்து போறது சரி இல்லன்னு இங்க தங்கி இருக்கோம்..

அந்த வளர்ந்து கெட்டவர் மூஞ்சை இதுவரைக்கும் நான் பார்த்ததே இல்லை..

  தெரியாத எங்களை வச்சு இப்படி வாய்க்கு வந்தது எல்லாம் ஏன் பேசுறீங்க?..

 உங்களுக்கும் பொண்ணுங்க இருக்கு அதை யோசிச்சு மற்றொரு பெண்ணை இழிவா பேசுங்க..

 என் மேல தெரியாம ஒரு களங்கம் விழுந்திருச்சு. அதை தவறு என்று நான் நிரூபித்து திரும்பவும் நடிப்பு துறைக்கு போவேன்..

நடிப்பு தான் எனக்கு ரொம்ப பிடிச்சது.. யாருக்காகவும் அதை நான் நிறுத்த மாட்டேன்..

 எல்லாருக்கும் நான் ஒழுக்கமான பொண்ணு தான்னு நிரூபிக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை..

எனக்கு இருக்கிற ஒரே சொந்தம் என் அம்மா மட்டும்தான்.. என்னை பெத்த அம்மாவுக்கு நான் யாருன்னு தெரிஞ்சா போதும்..

 ஒழுங்கு மரியாதையா இங்கிருந்து எல்லாரும் போடுங்க.. இல்லாட்டி இந்த ஊர் போலீசுக்கு தகவல் தெரிவிக்க வேண்டி வரும்..

 என்னை பற்றி தவறா போட்ட இந்த பத்திரிகை காரன் நாளைக்கு எனக்கு பதில் சொல்லியே ஆகணும்.. ” அதிகமாக வாய் திறந்து பேச பயப்படும் இசை இன்று ஆவேசம் பிடித்தது போல் கத்தினாள்..

 கோமதிக்கு பயம் பிடித்து விட்டது.. மீண்டும் மகள் நடிக்கப் போவேன் என்கிறாள்.. இப்படியே போனால் அவள் வாழ்கை கெட்டு விடும் என்று நன்றாக பயந்துவிட்டார்..

 இதற்கு என்ன செய்வது என்று ஒரு நிமிடம் தான் யோசித்தார்..

பின்பு வருவது வரட்டும் என்று முடிவெடுத்தவராக “ இசை பெரியவங்களுக்கு முன்னாடி என்ன பேச்சு பேசுற?. நம்ம மாப்பிள்ளை பேர் தானே கெட்டுப்போகும்.. அவங்க ஊர்ல வந்து அவங்க சொந்த பந்தங்களை இப்படி பேசினா உன்னைத்தான் தப்பா பேசுவாங்க.. பத்திறிக்கை பிரச்சினையை நாளைக்கு பாத்துக்கலாம்.. யாருடன் நீ கெட்டு போனன்னு உன் பெயர் வந்துருக்கு.. மாப்பிள்ளை கூட தானே கெட்டுப் போச்சு அதை விடு நல்லதுக்கு தான்.. அமைதியா உள்ள வா இப்ப எதுவும் பேச வேண்டாம்..” என்று மகளின் கையைப் பிடித்து உள்ளே அழைத்துச் செல்ல முயன்றார்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!