Skip to content
Post Views: 11,570
அத்தியாயம் 5
“என்ன நீ? வந்ததும் அவ எப்ப கிளம்புவான்னு கேட்குற?” சந்தேகமாய் பார்த்து நேராய் கேட்டுவிட்டாள் அனன்யா பிரணித்தாவிடம்.
Advertisement
அனன்யாவின் பழக்கமும் அது தான். எதையும் மனதில் வைத்துக் கொள்ள மாட்டாள்.
“இல்ல இல்ல அண்ணி! தப்பா நினைக்காதீங்க! யூஎஸ்ல அவ்வளவு பெரிய காலேஜ்ல ப்ரோபஸ்ஸர்ன்றது எவ்வளவு பெரிய பேரு? எப்படியும் ஒரு வாரமோ ஒரு மாசமோனு தான் லீவ்ல வந்திருப்பா. அதை தான் கேட்டேன்!” என்றாள் சமாளிப்பாய்.
Advertisement
Advertisement
“ஓஹ்!” என்றாலும் அனன்யா அவள் கேட்டதற்கு பதில் கூறவில்லை. என்னவோ ஒரு திருட்டுத்தனத்தை ப்ரணித்தாவிடம் உணர முடிந்தது.
ஜூசை குடித்துவிட்டு என்ன பேசுவதென்று தெரியாமல் தன்னையே குறுகுறுவென பார்க்கும் அனன்யா பார்வையையும் சமாளிக்க முடியாமல் நெளிந்தவள்,
Advertisement
“வீட்டுல யாருமே இல்லையா அண்ணி?” என்றாள்.
“மாமா கம்பெனிக்கு போயிருக்காங்க! அத்தை ரெஸ்ட் எடுத்துட்டு இருக்காங்க!” என்றாள் பதிலாய்.
“ஓஹ்! நீங்க ஹாஸ்பிடல் போனீங்களா? செக்கப் எல்லாம் முடிஞ்சதா?” என்று கேட்க,
“ம்ம் போனேன் ப்ரணி! எல்லாமே நல்லாருக்காம். அடுத்த வாரம் அஞ்சாவது மாசம் வளையல் போடுறோம்! உன்னை இன்வைட் பண்ண நினச்சேன். நீயே வந்துட்ட!” என்றாள் அனன்யா.
“நீங்க சொல்லனுமா? அதெல்லாம் கண்டிப்பா வந்துடுவேன்!”
ஹ்ம் விஜிக்காக தான் காத்துட்டு இருந்தோம்! வந்துட்டா இல்ல? அதான்! அடுத்து அத்தை ஒன்பதாவது மாச வளைகாப்பு கிராண்டா பண்ணலாம்னு சொல்லிருக்காங்க!” என்றாள் ஆசையாய் வயிற்றில் கைவைத்து.
“சூப்பர் அண்ணி! எதாவது வேலை இருந்தா சொல்லுங்க. நான் பண்றேன்!”
“கண்டிப்பா!” என்றவள் பொதுவாய் பேசிக் கொண்டிருக்க,
“சரி அண்ணி! அப்போ நான் விஜிகிட்ட போன்ல பேசிக்குறேன். அவ வந்தா நீங்க சொல்லிடுங்க! டைம் ஆச்சு. நான் கிளம்புறேன்!” என்றாள்.
“அதே ஹாஸ்டல்ல தான் இருக்கியா ப்ரணி?” அனன்யா கேட்க,
“ஆமா அண்ணி! எனக்கென்ன வீடா!” என்றாள் பாவம் கொண்டு.
இப்படி கூறும் நேரம் தான் அர்ஜுன் அதிகமாய் அவளுக்காக் வருந்துவான். அது தெரிந்து தான் ப்ரணித்தா கூறுவதும்.
“ஏன் இல்ல? பெரிய மாமா உன்னை நல்லா தான பார்த்துகிட்டாங்க? நீ தான் அங்க இருக்க மாட்டேன்னு ஹாஸ்டல் வந்துட்டதா சொன்னாங்க! அவங்களுக்கு தான் பசங்கனு யாரும் இல்லையே! உன்னை பொண்ணை பாத்துகிட்டதா சொல்றாங்க! நீ தான் அங்க இருக்க மாட்டேன்னு சொல்லிட்டனு கவலைப்பட்டாங்க!” என்றாள்.
“என்ன இருந்தாலும் அவங்க எனக்கு பெரியப்பா தானே அண்ணி! பெரியப்பா நல்லா தான் பார்த்துகிட்டாங்க. ஆனாலும் எனக்கு என்னவோ அங்க தங்க கஷ்டமா இருந்துச்சு. அப்பா அம்மாவை ரொம்ப தேடிச்சு. அதான் வேணாம்னு இங்க வந்துட்டேன்!”
“ஹ்ம்! ஆனா அவங்க ரொம்ப நல்லவங்க ப்ரணி! நீ தனியா வந்து நாலு வருஷம் போயிடுச்சு இல்ல? இனி முடிஞ்சா அவங்களோட இருக்க பாரு! நீ விஜியோட சின்ன வயசு தானே? இன்னும் ஒண்ணு ரெண்டு வருஷத்துல எப்படியும் உனக்கும் கல்யாணம் ஆகிடும். அதுக்கப்புறம் அவங்க தானே உன்னை பார்க்க வர போகனு இருக்காங்க!” என்று அனன்யா சாதாரணமாய் தான் கூறினாள்.
ஏன் அதையே இவள் பேசிக் கொண்டிருக்கிறாள் என கேட்டவளுக்கு தான் கடுப்பாகிப் போனது
“தப்பா எதுவும் நான் சொல்லிடலையே?” அனன்யா கேட்க,
“ச்சே ச்சே! இல்லையே அண்ணி! நீங்க எனக்கு நல்லது தானே சொல்றிங்க?” என்றவளுக்கு அவளை பகைத்துக் கொள்ளவும் முடியாதே! அர்ஜுனின் சகோதரி என்ற எண்ணமே அவள் அமைதியாக காரணமும்.
“சரி நான் கிளம்புறேன் அண்ணி!” என்றவள் சொல்லிக் கொண்டு கிளம்பிவிட்டாள்.
அர்ஜுன் மனதில் இப்பொழுது என்ன இருக்கிறது? விஜி எப்பொழுது இங்கிருந்து கிளம்புவாள்? என்று நினைத்தபடி தன் இடத்திற்கு வந்து சேர்ந்தாள் ப்ரணித்தா.
‘ரொம்ப லேட் பண்ணிட்ட ப்ரணி! மூணு வருஷம்! வேஸ்ட் பண்ணிட்ட! எப்படியாவது அர்ஜுனிடம் பேசி உன் காதலை சொல்லி இருக்கலாம்!’ மனம் சொல்ல,
‘அதற்கு அவன் கொஞ்சமாவது மனம்விட்டு பேசி இருக்க வேண்டுமே!’ என்றும் நினைக்காமல் இல்லை.
கயல்விழி இறப்பதற்கு முன்பு வரை இருந்த அர்ஜுன் முற்றிலும் வேறு!
அதுவரை அவன் மனதில் இருந்ததை தான் இவளிடம் சொல்லி இருந்தானே! அதற்குபின் தான் அனைவரிடம் இருந்தும் அவன் விலகிப் போனது.
அதற்கு முன்புமே அர்ஜுன் எப்போதாவது தான் அவன் மனதில் இருப்பதை பிரணித்தாவுடன் பகிர்ந்து கொண்டான். வேறு யாரிடமும் அவ்வளவு பேசி இருக்கவில்லை அவன்.அதன்பின் வந்த இறுக்கம் தான் இன்று வரை ஓயவழியில்லாமல் இருந்தது.
விவேக் கம்பெனியை சுற்றி பார்வையிட கிளம்பி இருக்க, அவனது தனி அறையில் அவனுக்காக காத்திருந்தாள் விஜயலக்ஷ்மி.
“இல்ல ஸ்ரீ! நாளைக்கு மார்னிங் ஷிப்ட் தானே! ஜெனரல் நான் மேனேஜ் பண்ணிப்பேன்!” என்று அலைபேசியில் அவள் பேசிக் கொண்டிருக்க,
“மாமா! கேரளா பார்சல் பாதி மிஸ் ஆகுது! என்ன ப்ரோப்லேம்?” என்று வந்த அர்ஜுன் உள்ளே வந்தபின் தான் கவனித்தான் அவளை.
ஒரு நொடி நின்றவன் பின் திரும்பிக் கொள்ள, சரியாய் உள்ளே நுழைந்தான் விவேக்.
“வா டா!” என்ற விவேக்
“என்ன அர்ஜுன்?” என்று கேட்க,
“இல்ல மாமா கேரளா லோட் என்னாச்சுன்னு கேட்க வந்தேன்!”
“அது நாலு நாள் லேட்டா அனுப்ப சொல்லிட்டாங்க. அவங்க பக்கம் இஸ்ஸுஸ் போல. உனக்கு மேனேஜர் சொல்லல?”
“அவர் கிளம்பிட்டார் மாமா பெர்மிஸ்ஸன்ல!”
“சரி ஓகே டா! ஒன் வீக்ல அனுப்பிடலாம். அதான் டைம் இருக்கே! நீயும் கிளம்பு!”
“நீங்க?”
“விஜி கூட வரேன்!”
“ண்ணா நான் ஆட்டோல வந்தேன்!” என்றாள் வேகமாய் விஜயலக்ஷ்மி.
“வண்டி என்னாச்சு விஜி?”
“தெரில ண்ணா! ஸ்டார்ட் ஆகல. பிரண்ட் வீட்டுல தான் விட்டுட்டு வந்தேன்!”
“ஓஹ்!” என்றவன் யோசனையானான்.
கை சரியாகிவிட்டாலும் ஒரு மாதத்திற்கு கார் ஓட்ட வேண்டாம் என கலையரசியோடு அனன்யாவும் கூறி இருக்க, அவனுமே சரி என்றுவிட்டான்.
“உங்களை ட்ராப் பண்ணிட்டு நான் கிளம்புறேன் மாமா!”
“வேணாம் அர்ஜுன்! நீ கிளம்பு! நான் கேப் போட்டுக்குறேன்!”
“மாமா!” என்றவன் முறைக்க,
“டேய்! நீ ட்ராப் பண்ணவும் பிக்கப் பண்ணவும் வர்றது எனக்கு கஷ்டமா இருக்கு. வீட்டுக்கு கூப்பிட்டா என்னவோ யார் வீட்டுக்கோ கூப்பிட்ட மாதிரி சங்கோஜப்படுற! உன்னை நினச்சு உன் அக்கா டென்ஷன் எடுத்துக்குறா! என்னை தான் டா ஈஸியா கடுப்பேத்துறீங்க எல்லாரும்!” என்றவன் சொல்லில் அர்ஜுன் சிரிக்க, குழம்பினாள் விஜயலக்ஷ்மி.
“வாங்க மாமா!” என்றவன் முன்னே நடக்க,
“போலாம் விஜி!” என அவளையும் அழைத்துக் கொண்டான் விவேக்.
வீட்டிற்கு செல்லும் வரை கம்பெனி பற்றிய பேச்சுக்களே அவர்களிடம் இருக்க, அலைபேசியைப் பார்த்தபடி வந்தவள் கவனமெல்லாம் அர்ஜுனிடம் தான்.
என்னவோ ஒன்று மனதை வெகுவாய் தாக்குவதை போலஅவள் உணர்ந்தாள் அர்ஜுன் பக்கமிருக்கும் நேரங்களில் எல்லாம்.
அன்று வீட்டில் அவனைக் கண்ட பின் இன்று தான் பார்க்கிறாள்.
அவனைப் பற்றி எதுவும் தெரிந்து கொள்ள முடியவில்லை. எந்த பேச்சுக்களும் வீட்டில் இல்லை. ஏன் என்று நினைத்தால் குழப்பம் தான் கிடைக்கும்.
“உள்ள வா டா! வாசலோட நீ போய்ட்டன்னு உன் அக்கா நைட்டு தூங்காம பாட்டு பாடுவா காதுல!” என்று சொல்ல, மறுக்க முடியவில்லை.
“அடுத்த வாரம் அஞ்சாவது மாசம் வளையல் போடலாம்னு நாள் பார்த்துருக்காங்க அர்ஜுன்” என்றபடி உள்ளே அழைத்து வந்தான் விவேக்.
“அக்கா போன் பண்ணி சொன்னா மாமா! வந்துடுறேன்!”
“வரணும் டா!” என்று சொல்ல விஜயலக்ஷ்மி அவர்களுக்கு முன்பே உள்ளே சென்றவள் தன் அறைக்குள் சென்றுவிட்டாள்.
“இதென்ன கவர்!” என விவேக் அங்கிருந்த டேபிளில் இருந்த கவரைப் பிரித்தான் விவேக்.
“அடடா! என்ன ஒரு அதிசயம்!” என்று வந்த அனன்யா,
“என்ன டா இந்த பக்கம்?” என்றாள்.
“ஏன்? நான் வரவே இல்லையா?” அர்ஜுன்.
“இதென்ன அனு? பழமெல்லாம்? யார் வந்தாங்க?” விவேக் கேட்க,
“ப்ரணி வந்தா!” என்றாள் அர்ஜுனைப் பார்த்து.
“நீ சொன்னியா விஜி வந்ததை அவகிட்ட?” என்று அர்ஜுனிடம் அனன்யா கேட்டபடி, அங்கிருந்த டேபிளில் இருந்து ஒரு கவரை எடுத்து விவேக் கைகளில் கொடுத்தாள்.
“கேட்டா! சொன்னேன்” என்றான் அர்ஜுனும்.
“என்ன அனு இது?” என்று விவேக் கவரைப் பிரிக்க,
“அத்தை ஆரம்பிச்சுட்டாங்க!” என்றாள்.
ஐந்து புகைப்படங்கள் இருந்தது. பார்த்ததும் புரிந்து போக,
“ஓஹ்!” என்றவன் சொல்லில் தற்சயலாய் திரும்பிய அர்ஜுனும் அந்த புகைப்படத்தைக் கண்டவன் பார்த்ததும் புரிந்தும் கொண்டான்.
“சரி அனு! தீபக் ஊருக்கு போறான். நான் அனுப்ப போனும்!” என்று அர்ஜுன் சொல்ல,
“நீ இன்னும் எத்தனை நாளைக்கு தான் இப்படி இருக்க போறயோ!” என்றாள் அனு கவலையாய்.
“ஏன் எனக்கென்ன?” என்ற அர்ஜுன்,
“ஒரு நாலு மாசம் சும்மா இரு அனு! எதாவது நினச்சு கவலைப்பட்டுட்டு இருக்காத! மாமா பீல் பண்றார்!” என்று சொல்லிவிட்டு அவன் சென்றுவிட,
“இதெல்லாம் இப்ப எதுக்கு?” என்றான் புகைப்படங்களைப் பார்த்த விவேக்.
“என்ன பாக்குறீங்க?” என்று அர்ஜுன் சென்ற பின் வந்த விஜயலக்ஷ்மி தன் அண்ணனின் கைகளில் இருந்து எடுத்து தன் கைகளுக்கு கொண்டு வந்த பின் தான் அதைப் பார்த்தவள் உடனே அதை கீழே வைத்துவிட்டாள்.
“ப்ரணி வந்தா விஜி! உன்னை கேட்டதா சொல்ல சொன்னா!” என்று அனன்யா பேச்சை மாற்றி விட,
“எப்ப வந்தா?” என்றவள்,
“இருக்க சொல்லிருக்கலாமே அண்ணி! நாங்க வந்ததும் அவங்க ரெண்டு பேரும் ஒன்னா போயிருப்பாங்க இல்ல?” என்று அர்ஜுனோடு ப்ரணித்தாவை சொல்ல, அது புரியவில்லை அனன்யாவிற்கு.
“சொன்னேன்! லேட் ஆகிடும்னு கிளம்பிட்டா. வந்தவ நீ எப்ப வந்தனு கேட்கல. எப்ப கிளம்ப போறான்னு கேட்குறா! எவ்ளோ அக்கறை பாரு உன்மேல!” என்றவள்,
“இன்னும் அதே ஹாஸ்டல்ல தான் இருக்கிறா போல!” என்று சொல்ல,
“ஹாஸ்டலா? அண்ணி!” என்றவள் அதிர்ச்சியோடு குழப்பமுமாய் பார்த்தாள்.
ப்ரணித்தா அர்ஜுன் திருமணம் இன்னும் நடக்கவில்லையா என கேட்க தான் நினைத்தாள் ஆனாலும் முடியவில்லை.
“பெரிய மாமா வீட்டுக்கு போனு சொன்னா மழுப்புறா! மாமா அவளுக்கு மாப்பிள்ளை பாக்கணும்னு அன்னைக்கே சொன்னாங்க!” என்று அடுத்தடுத்த தகவல் கொடுத்த அனன்யா,
“ஆமா ப்ரணி லாஸ்ட்டா உன்கிட்ட எப்ப பேசினா?” என்று கேட்டாள் அதிர்ந்து நின்றவளை கவனிக்காமல்.
தொடரும்..
error: Content is protected !!