Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

முத்தாயி அம்மாச்சி

முத்தாயி அம்மாச்சி 10.2

அத்தியாயம் 10.2

சரியாக மதிய உணவு வேலை வந்து சேர்ந்தார்கள் சிவங்கரியும் மிருதுளா குடும்பமும்.



Advertisement

சிரித்த முகமாக வந்தவர்களை வரவேற்றனர் காதம்பரியும் கேசவனும்.

“ஹாய் நீங்க எங்க இங்க?” என்றான் ப்ரதமேஷ் முத்துவை பார்த்து.

Advertisement

Advertisement

“நான் இங்க பக்கத்துல தான் ப்ரோ பிஜில தங்கி இருக்கேன்” என்றாள் சிநேகமாக.

“ஸ்வீட்டிம்மா, சின்ன தாத்தா ஹாப்பி அன்னிவெர்சரி” என்று கூறி ஒரு பொக்கையை கொடுத்தான் ப்ரதமேஷ்.

Advertisement

மிருதுளாவும் தணிகாச்சலமும் வாழ்த்து கூறினார்கள். 

“நேரமாயிடுச்சு, வாங்க சாப்பிடலாம்” என்றார் காதம்பரி.

நான் பரிமாறுகிறேன் என்று முத்து தான் முன் வந்தாள். சிவங்கரிக்கு இது எல்லாம் எப்பொழுதுமே வராது. மிருதுளாவும் இந்த விஷயத்தில் தாயை போலவே. எப்பொழுதும் பூம்பாவை தான் இதனை எல்லாம் பார்த்துக்கொள்வார்.

“நீ இரும்மா நாங்க பார்த்துகிறோம், நீயும் சாப்பிடு” என்றார் காதம்பரி.

“இல்ல நர்ஸ் அம்மா, இன்னிக்கு நீங்களும் கேசவப்பாவும் தானே ஹீரோ ஹீரோயின். நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து உட்கார்ந்து சாப்பிடுங்க, நான் பரிமாறுறேன்” என்று அவர்களையும் வலுக்கட்டாயமாக அமர வைத்தாள்.

“நான் வேணும்னா வேகமா சாப்பிட்டுட்டு அப்புறமா பரிமாற உதவி செய்றேன்… செம பசி ப்ரோ.. ஸ்வீட்டிம்மா வீட்டுக்கு வரோம்ன்னு காலையில இருந்து சாப்பிடாம வயித்த காலியா வச்சிருக்கேன்” என்றான் ப்ரதமேஷ்..

“ஹா ஹா.. அதனாலென்ன ப்ரோ, இங்க என்ன நூறு பேரா இருக்கோம். இருக்கிற கொஞ்சம் பேருக்கு நானே வச்சிடுவேன் நீங்க உட்காருங்க..”

கேசவனின் கைவண்ணத்தில் தயாராகிய விருந்தை உண்ண ஆரம்பித்த பிறகு சாப்பிடுவதற்கு மட்டுமே வாயை திறந்தனர் அனைவரும்.

தேவையானவற்றை பார்த்து பார்த்து அழகாக பரிமாறினாள் முத்து.

இவர்கள்  அனைவரும் உண்டு முடித்ததும் முத்துவை அமரவைத்து கேசவன் தான் பரிமாறினார்.

பின் அனைவரும் வரவேற்பரையில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள்.

அப்ப நான் கிளம்புறேன் என்று புறப்பட்டு  விட்டாள் முத்து. தன் எல்லை எது என்று புரிந்து அதற்குள் அழகாக நின்றுகொண்டாள்.

“நல்ல பொண்ணு மிருதுளா” என்றார் காதம்பரி மிருதுளாவிடம்.

“பார்த்தாலே தெரியுது சித்தி.. சரி, இவ்வளவு ஐட்டம்  எப்படி சமைச்சீங்க” 

“எப்பவும் போல உன் சித்தப்பா தான். நானும் ஸ்ரீகாவும் உதவி செஞ்சோம். இன்னிக்கு அந்த பொண்ணு வந்தது ரொம்பவே உதவியா இருந்துச்சு..”

கேசவன் மிகவும் நன்றாக கேரம்  விளையாடுவார். அதனால் உணவிற்கு பிறகு ஆண்கள் நால்வரும் ஒரு பக்கம் கேரம் விளையாட அமர்ந்துகொண்டார்கள்.

“மாமா நான் இந்த வாரம் ஊருக்கு போறேன், நீங்களும் வர்றீங்களா?”

“ட்ரெயின்னா? டிக்கெட் கிடைக்குமா தெரியலையே?”

“நான் தக்கல்ல ட்ரை பண்றேன்.. வந்தீங்கன்னா சேர்த்து போடறேன்”

“வரேன் டா.. “

“வேற யாரு வர்றீங்க.. டிக்கெட் போட்டதுக்கு அப்புறம் நான் வரேன் நீ வரேன்னு சொல்ல கூடாது”

“எனக்கும் போடு ப்ரதம்” என்றார் தணிகாச்சலம்.

“நீங்க எதுக்கு இப்ப போறீங்க?” என்றார் மிருதுளா.

“அந்த வைத்தியர் தாத்தா தான் வர சொல்லி இருந்தாரு இல்லையா?” என்று விஷயத்தை உளறிவிட்டார் ஸ்ரீகாந்த்.

“உங்களுக்கு என்ன வைத்தியம்? அன்னைக்கு பாவைக்கு காட்டத் தானே போனீங்க?”

“மாப்பிள்ளை நீங்களும் புரியாம செய்ய கூடாது. இங்க சென்னையில இல்லாத டாக்டர்ஸ்ஸா ? நாட்டு  வைத்தியம் எல்லாம் வேண்டாம்” என்று பதறினார் சிவங்கரி.

இனியும் மறைப்பதில் அர்த்தம் இல்லை என்று ப்ரதமேஷ் விஷயத்தை கூறினான்.

“அம்மா, அப்பாவுக்கு ஒரு வருஷமாவே உடம்புக்கு முடியல. இங்க சென்னையில நானும் அப்பாவும் காட்டிகிட்டு தான் இருந்தோம். ஓரளவுக்கு நல்லாவும் ஆயிடுச்சு. அங்க ஊர்ல சும்மா கேட்டு பார்ப்போம்னு அப்பா காமிச்சிருக்காங்க. அவங்க ஆங்கில வைத்தியத்துல சரியா ஆகிட்டு வருது. ஒன்னும் பயப்பட தேவை இல்லைன்னு சொல்லிட்டாங்க. எதிர்ப்பு சக்தி அதிகமாக தான் மருந்து கொடுத்தாங்க. எதுக்கும் மூனு மாசம் கழிச்சு வாங்கன்னு அந்த தாத்தா சொன்னாரு“ என்றான் ப்ரதமேஷ்.

“அப்ப உங்க அப்பா என்கிட்டே சொல்லாம போனது எல்லாம் ஹாஸ்பிட்டல்க்கு தானா?”

“ஆமா.. “ 

அவர் கணவரை குற்றம் சாட்டும் பார்வை பார்த்து வைக்கவும்,

“அவரை எதுக்கு டீ முறைக்கிற? நீ குடும்பம் நடத்துற லட்சனம் அப்படி..” என்று சிவங்கரி மகள் மீது பாயவும்,

“அவ மேலே தப்பு இல்லை. சொன்னா பயந்துக்குவான்னு தான் நான் சொல்லாம மறைச்சேன்“ என்று மனைவியை விட்டுக்கொடுக்காமல் பேசினார் தணிகாச்சலம்.

“சரி, உடம்புக்கு என்ன பிரச்சனை? அதை சொல்லுங்க.. “ என்றார் கமறிய குரலில் மிருதுளா.

“விடுங்கம்மா அதான் சரி ஆயிடுச்சு இல்ல” என்றான் ப்ரதமேஷ்.

“நீ பேசாதடா, என்ன எல்லாம் சொல்லி என்ன பயமுறுத்தின?” என்றார் மகனிடம் காரமாக.

“அப்புறமா தானே ம்மா உனக்கு சுய அலசலே வந்துச்சு. அப்பா போய் வேற பொண்ணை பார்ப்பாரா? உனக்கு நம்பிக்கை இல்லைன்னா அதுக்கு நானா பொறுப்பு?” என்றான் மகன் அசால்ட்டாக.

“ஆமா அக்கா.. கேரளால ஜோசியர் கூட சொன்னாருன்னு சொன்னேன் தானே, நீ பயப்படற மாதிரி பிரச்சனை இல்லை, ஆரோக்கிய கேடு தான் இருக்கு, அதுவும் சரி ஆயிடும்னு” என்றார் ஸ்ரீகாந்த்.

“உடம்புக்கு என்னன்னு சொல்லுங்க” என்றார் சிவங்கரி விடாமல்.

“அப்பாவுக்கு டி.பி இருந்துச்சு பாட்டி. இப்ப புஃல்லா சரி ஆயிடுச்சு. இனி பயப்பட ஒன்னும் இல்லை” என்றான் ப்ரதமேஷ்.

மிருதுளா மிகவும் கலங்கி விட்டார். கூறிய செய்திகளை உள்வாங்க நேரம் பிடித்தது.

கேசவன் மனைவிக்கு செய்கை காட்டவும், “நீ உள்ளே போய் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடு மிருதுளா” என்று அறைக்குள் அவரை அனுப்பி வைத்தார் காதம்பரி. உடன் தணிகாச்சலத்தையும் அனுப்பி வைத்தனர்.

“அப்பாடா.. அப்பா அம்மாவை சேர்த்து வைக்கவே என் வாழ்க்கையில பாதி போயிடுச்சு..” என்று அலம்பல் கூட்டினான் ப்ரதமேஷ்.

“வேற என்ன டா சொன்னாரு அந்த ஜோசியர்?” என்று கடுப்படித்தார் சிவங்கரி.

“ப்ரதமேஷ்க்கு இன்னும் ரெண்டு வருஷம் கழிச்சு தான் கல்யாணம் ஆகுமாம்”

“நீ வேணா பாரு, இன்னும் ஆறு மாசத்துல அவனுக்கு பொண்ணை பார்த்து நான் கல்யாணத்தை முடிச்சு, ஜாதகம் ஜோசியம் எல்லாம் ஹம்பக்ன்னு நான் உங்க எல்லாருக்கும் புரிய வைக்கிறேன்” என்று சூளுரைத்துவிட்டு மற்றொரு அறைக்குள் சென்று படுத்து விட்டார் சிவங்கரி.

“மாமா ஒரு டீ குடிச்சா நல்லா இருக்கும் இல்ல?” என்றான் ப்ரதமேஷ்.

“நான் போட்டு தரேன்” என்று காதம்பரி எழுந்திரிக்கவும், மனைவியை தடுத்து விட்டு கேசவன் அடுப்படிக்கு சென்றார்.

“அட அட அட… என்னா லவ் ஸ்வீட்டிம்மா தாத்தாக்கு உங்க மேல?”

அழகாக வெட்கப்பட்டார் காதம்பரி.

“நீங்க என்னிக்காவது எங்க அத்தைக்கு இப்படி டீ போட்டு கொடுத்திருக்கீங்களா மாமா?” என்றான் ஸ்ரீகாந்த்திடம்.

ஸ்ரீகாந்த் “இந்த முறை ஊருக்கு போறப்ப போட்டு கொடுக்கிறேன் பாருடா” என்றார் ரோஷமாக.

“வேணா மாமா.. இந்த தடவை நான் வரப்ப வேணாம், நானே அத்தை கையால  சாப்பிடத் தான் ஊருக்கு வரேன்.. நீங்க வேற டைம் போட்டு கொடுங்க.. என் நாக்குல மண்ணை அள்ளி போட்டுடாதீங்க” என்றான் சிரியாமல். மாலை வரை அங்கேயே இருந்துவிட்டு, இரவு  வீடு திரும்பினார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!