Skip to content
Post Views: 1,801
அத்தியாயம் 18.1
“ஹனி, ஒரு காஃபி கிடைக்குமா?” என்றார் ஸ்ரீகாந்த் தன் லாப்டாப் உள்ளே தலையை விட்டுக்கொண்டே.
Advertisement
மற்றவர்கள் அனைவரும் ஊருக்கு சென்று விட்டார்கள். ஸ்ரீகாந்த் மட்டும் ஒரு வாரம் வீட்டில் இருந்து வேலை பார்ப்பதாக கூறி இருந்து கொண்டார்.
முத்துவிற்கு இன்னும் இரண்டு நாட்கள் தான் லீவ் இருக்கிறது. பூம்பாவை அப்பொழுது தான் ஓய்வெடுக்க சென்றிருந்தார். ஹிருதய் தாத்தாவுடன் வெளியே சென்றிருந்தான்.
Advertisement
Advertisement
முத்தாயி படித்து கொண்டிருந்தவள், ஸ்ரீகாந்த்தின் குரல் கேட்டு, எழுந்து சென்று இருவருக்கும் காஃபி தயாரித்து கொண்டு வந்தாள்.
“இந்தாங்க மாமா” என்று நீட்டினாள்,
Advertisement
அவரும் லாப்டாப்பை பார்த்து கொண்டே வாங்குவதற்காக கையை நீட்டவும், முத்து தன் கையை பின்னே இழுத்து கொண்டாள்.
அவர் கேள்வியாக பார்க்கவும்,
“ரிலாக்ஸ் பண்ண தான் காஃபி, அதையும் லேப்டாப் பார்த்துகிட்டே குடிச்சா எப்படி?”
“இந்த ஒன்னு மட்டும் முடிச்சிட்டு வரேன் ம்மா”
“முடிச்சிட்டே குடிங்க அப்ப”, என்று திரும்பி நடக்கவும்,
“இல்ல இல்ல கொடு” என்று எழுந்து வாங்கி கொண்டார்.
அவர் கண்கள் பாவையை தேடுவதை பார்க்கவும்,
“உங்க ஹனி, இப்பதான் உள்ள போனாங்க.. கல்யாண வேலையில் அசந்து தெரிஞ்சாங்க.. அதன் அவங்களை டிஸ்டர்ப் பண்ண வேண்டாம்னு நானே காஃபி போட்டேன்”
“தேங்க்ஸ்..”
“உங்க கிட்ட ஒன்னு பேசணும் மாமா”
“சொல்லும்மா..”
இவர்கள் பேசிக்கொண்டிருக்கையில் பாவை பேச்சுக்குரல் கேட்டு எழுந்து வந்துவிட்டார்.
“வாங்க அத்தை, உங்களுக்கும் காஃபி கொண்டு வரவா?” என்றாள் அவரைப்பார்த்து.
“இல்லடா, இப்ப வேணாம்” என்று கூறிக்கொண்டே வந்து ஊஞ்சலில் அமர்ந்து கொண்டார்.
“நம்ம என்ன செய்யலாம்? நீங்களும் நானும் தான் இப்பொழுதுக்கு சென்னை போகணும். ஹாசிக்கு எக்ஸாம் முடியற வரை அத்தையால நகர முடியாது. தயா, நம்ம வீட்ல இருக்கியான்னு கேட்குறாங்க”
“நம்ம வீட்ல தங்கிக்கலாம் முத்து… என்ன ஹனி ?”என்று மருமகளிடமும் மனைவியிடமும் ஒன்றாக கூறினார் ஸ்ரீகாந்த்.
“அது இல்ல மாமா, நான் என்ன யோசிச்சேனா, எனக்கு இன்னும் ஒரு வருஷம் காலேஜ் இருக்கு. இப்ப இருக்க ஏரியான்னா காலேஜ்க்கு பக்கம். அதுவுமில்லாம, தயா பிசினெஸ் ஆரம்பிக்க இங்க இருந்தா தான் சௌகரியம்.. அங்கேயும் இங்கேயும் அலைய முடியாது”
“ஹாசினி எக்ஸாம் முடிஞ்சதும் நான் அங்க வந்துடறேன் முத்து” என்றார் பாவை.
“அவசரமா கல்யாணம் ஆனதுக்காக, நம்ம குழப்பமா இருக்க கூடாது அத்தை. முதல்ல இப்ப ஹாசினி எக்ஸாம் தான் முக்கியம். அடுத்து அவளை நல்ல காலேஜ்ல சேர்க்கணும். நீங்க அதை கவனிக்கணும்”
“நீயும் ஹிருதய்யும் என்ன யோசிச்சு வச்சிருக்கீங்க?”
“ரெண்டு யோசனை இருக்கு.. ஒன்னு, நான் அதே பி.ஜில இருக்கிறது”
“அது வேண்டாம்” என்றனர் ஸ்ரீகாந்த்தும் பாவையும் ஒன்று போல.
“இன்னொன்னு நானும் மாமாக்கூட நர்ஸ் அம்மா வீட்ல கொஞ்ச நாளைக்கு தங்கிக்கறது. ஹிருதய் வரப்ப ஒன்னு ரெண்டு நாளைக்கு நம்ம வீட்டுக்கு போய் இருந்துக்கலாம்”
“இது நல்ல ஐடியாவா இருக்கே” என்றார் ஸ்ரீகாந்த் வேகமாக.
“யோசனை என்னமோ நல்லாத்தான் இருக்கு. ஆனா உங்க அம்மா சாமி ஆடுவாங்க..” என்றார் பாவை இடக்காக.
“எங்க அம்மவை எதுக்கு இப்ப இழுக்கிற?”
“நான் இழுக்கல… நீங்களே அப்ப போன் போட்டு, ‘அம்மா அம்மா, என் மருமகளும் என் கூட சித்தி வீட்ல இருக்கட்டும்னு’ சொல்லுங்க..”
“நல்லா சொல்றேன்.. எங்க அம்மா அது எல்லாம் தப்பாவே நினைக்க மாட்டாங்க..”
இவர்கள் இருவரும் பேசுவதை கேட்டு, முத்து அவளே சிவங்கரிக்கு அழைத்து விட்டாள்.
“ஹலோ க்யூட்டிம்மா.. மாமா உங்க கிட்ட பேசணுமாம்” என்றாள் எடுத்த உடனே.
அவளது அழைப்பிலே சிவங்கரிக்கு குளிர்ந்து விட்டது. பின்னே பேரப்பிள்ளைகள் அனைவரும் காதம்பரியை மட்டுமே ஸ்வீட்டிம்மா என்று அழைப்பார்கள். ஒரு முறை ஹிருதய் அப்படி அழைக்கையில், சிவங்கரியின் காதில் இருந்து புகை வருவதை முத்து பார்த்து இருந்தாள். அதனாலே அவரை இப்படி அழைத்தாள்.
“அவன் கிடக்கிறான்.. நீ சொல்லு? எப்ப சென்னை வரீங்க.. நீங்க வரதுக்காக நான் ஆள் வைத்து வீட்டை எல்லாம் க்ளீன் பண்ணி வஞ்சிருக்கேன்” என்றார் ஆசையாக.
போன் ஸ்பீக்கரில் தான் இருந்தது. மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர்.
“அதுவா க்யூட்டிம்மா.. அது பத்தி தான் மாமா உங்க கிட்ட டிஸ்கஸ் பண்ணனும்னு சொன்னாங்க..”
“சரி போனை கொடு..”
“ஹலோ ம்மா.. நல்லா இருக்கீங்களா ம்மா?”
“இல்ல.. “
“சாப்பிட்டிங்களா ம்மா ?”
“அது கேட்க கூட இங்க யாரும் இல்ல”
முத்துவும் பாவை அருகில் ஊஞ்சல் மீது ஏறி அமர்ந்து கொண்டாள். இருவரும் இவர்கள் உரையாடலை வேடிக்கை பார்த்து கொண்டிருந்தார்கள்.
“ஏன் ம்மா இப்படி பேசுற?”
“பின்ன நீ தான் என்னை விட்டுட்டு போய்ட்ட இல்ல?”
“அம்மா மிருதுளா வீட்ல தானே இருக்க. நாங்க அங்க இருந்தாலும் அங்க பாதி நாள் இங்க பாதி நாள்னு தானே இருப்ப..”
“இப்ப என்ன டா சொல்ல வர, எனக்குன்னு போக வீடு இல்லைன்னா சொல்ற?”
“நான் அப்படி நினைப்பேனா ம்மா.. “ என்றார் இறங்கிவிட்ட குரலில்.
“நீ அப்படி நினைக்க மாட்ட ஸ்ரீ, ஆனா உனக்கு யாராவது சொல்லி கொடுத்திருப்பாங்க..”
பாவையின் முகம் கோவத்தில் சிவக்க தொடங்கியது. முத்துக்கு சுவாரஸ்யம் கூடியது.
“யார் சொன்னாலும் நான் உன்னை விட்டுக்கொடுப்பேனா சொல்லு”
“என்ன அத்தை இது.. உலக மகா நடிப்பா இல்ல இருக்கு..” என்றாள் முத்து பாவையிடம்.
“இது எல்லாம் ஒன்னும் இல்ல முத்து, சில சமயம் ஆஸ்க்கார் அவார்டு கிடைக்கிற அளவுக்கு நடிப்பாங்க..” என்றார் பாவை கடுப்பாக.
“சரி சரி விடு ஸ்ரீ.. விஷயத்தை சொல்லு..”
“நாங்க நாளைக்கு கிளம்பி வரோம் ம்மா”
“சரி வாங்க”
“பாவை ஒரு விஷயம் சொன்னா.. முத்துவும் காலேஜ் போகணும்.. நீங்களும் தூரம்ன்றதால காலையில ஏழு மணிக்கு எல்லாம் கிளம்பணும். அத்தையை கூப்பிட்டுக்கோங்க.. அவங்க காலையில எழுந்து உங்க ரெண்டு பேருக்கும் டிபன் லஞ்ச் எல்லாம் பண்ணிடுவாங்கண்ணு …”
“—————–”
“என்ன அம்மா ஒன்னும் சொல்ல மாட்டேங்கிறீங்க?”
“டேய், நான் எல்லாம் எழுந்து எப்படி செய்ய முடியும், அதுவும் அவ்வளவு சீக்கிரம்?”
“முத்து காலேஜூம் எங்க ஆபிஸும் பக்கம் பக்கம் தானே.. நம்ம வீட்ல இருந்து இரண்டு மணி நேரமாவது ஆகும்.. அதனால சீக்கிரம் கிளம்பினா தான் சரியா இருக்கும். அதுக்காக தானே நான் சித்தி வீட்டுக்கு போனதே”
“ஓ “
“நீ இருக்கும் போது என்ன ம்மா.. சாமாளிச்சிடலாம் தானே?
“ஈவினிங் எப்ப வருவீங்க..”
“அதுவும் அப்படி தான்..லேட் ஆகும்.. இரண்டு மணி நேரம் ஆகும் அங்க இருந்து..”
“அப்ப கஷ்டம் தான் ஸ்ரீ..”
“என்னம்மா செய்யலாம்?”
“எவ்வளவு நாளைக்கு இப்படி இருக்க முடியும். இங்க பக்கத்துல வேலை தேடிகிட்டா என்ன?”
“கிடைக்கணும் இல்ல ம்மா..”
“எல்லாத்துக்கும் ஒரு பதில் சொல்லு.. இப்ப என்ன முத்துவும் காதம்பரி வீட்லயே இருக்கட்டும் கொஞ்ச நாள். காலேஜ் முடிஞ்சதும் யோசிக்கலாம். அதுக்கு முன்ன ஹாசினி எக்ஸாம்மும் முடிஞ்சிடும். ஹிருதய்யும் ஒரு நிலைமைக்கு வந்திடுவான்..
அப்ப முடிவு செஞ்சுக்கலாம்”
“நீங்க சொன்னா சரியாத்தான் இருக்கும். பாருங்க எப்படி டக்குன்னு சொல்லிட்டீங்க.. நாங்க எல்லாம் மண்டையை போட்டு குழப்பிக்கிட்டு இருந்தோம்..”
“இருந்தாலும், முடிஞ்சா ஒருமுறை நீங்க எல்லாம் வந்து, இங்க நம்ம வீட்ல பாலை காய்ச்சிட்டு போங்க.. கல்யாணம் ஆகி நம்ம வீட்டுக்கு பொண்ணு மாப்பிள்ளை வரணும் டா ஸ்ரீ”
“நீங்க சொல்ற மாதிரியே செஞ்சிடலாம் ம்மா..”
“நீ சாப்பிடும்மா நேரமாயிடுச்சு இல்ல”
“சரி ஸ்ரீ, எப்ப வரீங்கன்னு எனக்கு அப்டேட் பண்ணு “
“டேக் கேர் ம்மா..”
“நீயும் டேக் கேர் டா..”
பாவைக்கு எப்படி இப்படி அம்மாகிட்ட மட்டும் பேச முடியுது, என்று பொசு பொசுவென வந்தது.
பின் மடமடவென வேலைகள் நடந்தது. ஊருக்கு புறப்படுவதற்கு முன், ஸ்ரீ காந்தலட்சுமி தாயார் கோவிலுக்கும் முத்தாயி அம்மாச்சி கோவிலுக்கும் மணமக்களை அழைத்து சென்றார் பாவை.
அனைவரும் பேசி, ஒரு மனதாக கிளம்பி சென்னை சென்றார்கள். ஹாசினியை அனுப்ப முடியாது என்று மாலதி தன்னுடன் அழைத்து சென்று விட்டார். முத்துவுடன் பெண் வீட்டினராக கந்தசாமியும் நித்யகல்யாணியும் தான் உடன் சென்றனர்.
சிவங்கரியின் விருப்பபடி சென்னையில் அவர்களது வீட்டிற்கு சென்று, விளக்கேற்றி பால் காய்ச்சி என்று அனைத்தையும் செய்தார்கள்.
பின் முத்துவையும் ஸ்ரீகாந்த்தையும் காதம்பரி வீட்டில் விட்டுவிட்டு ஹிருதய் பாவை கந்தசாமி நித்யகல்யாணி நால்வரும் ஊருக்கு திரும்பினார்கள். முதல் பிரிவு கொஞ்சம் கஷ்டமாக தான் இருந்தது முத்தாயி ஹிருதய்க்கு. ஆனாலும் ஏற்கனவே தெரிந்தது என்பதால் இருவரும் தேறிக்கொண்டார்கள்.
முத்தாயியின் வருகை கேசவனை மிகவும் உற்சாகப்படுத்தியது.
காதம்பரி தான் அவளை முறைத்து கொண்டே சுற்றி கொண்டிருந்தார்.
அவரிடம் என்ன விஷயம் என்று கேட்டாள் முத்தாயி.
அவ்வளவு தான், பொங்கிவிட்டார் அவர்.
“ஏம்மா வாயாடி.. அவரு ஆசை படறாருன்னு வயலின் கிளாஸ்ல சேர்த்துவிட்டியே. இப்ப அவர் வாசிச்சு என்ன வாசிச்சேன்னு சொல்லுன்னு கேட்கறாரு.. அவர் கண்ணை பார்த்தே அவர் நினைக்கிறத புரிஞ்சிட்டு இத்தனை வருஷம் நிம்மதியா குப்பை கொட்டிட்டு இருந்தேன்.
ஸ்வாய்ய்ங்..ஸ்வயிங்.. ன்னு வாசிச்சு என்ன என்னன்னு கேட்டா எனக்கு என்ன தெரியும்.. நீயே சொல்லு” என்றார் அழுகுரலில்.
“நீங்க இசையில் ஞானசூன்யம்னு எனக்கு எப்படி தெரியும் நர்ஸ் அம்மா. ஹா ஹா..” என்று பெருங்குரலெடுத்து சிரிக்க தொடங்கினாள் முத்தாயி.
இவர்கள் பேசி கொண்டிருந்ததை கேட்ட கேசவன் முகத்திலும் புன்னகை விரிந்தது.
“வேணும்னா உங்களையும் கிளாஸ்ல சேர்த்து விடவா.. அப்ப உங்களுக்கு புரியும்ல” என்றாள் முத்து.
“ஆங்..” என்று காதம்பரி அதிர்ச்சியில் வாய் பிளந்து நின்று விட்டார்.
ஆசையாக காதலாக மனைவியை பார்த்தார் கேசவன். முத்து நைசாக தனதறைக்குள் புகுந்துகொண்டாள்.
முத்துவும் ஹிருதய்யும் கைபேசியில் தங்கள் காதலை வளர்த்தார்கள். என்ன செய்தாலும் மனைவியிடம் ஒரு வார்த்தை கூறி, அவள் யோசனைகளையும் கேட்டுகொண்டே செய்தான் ஹிருதய். அதில் கணவன் மீது ஏக அன்பு பொங்கியது பெண்ணுக்கு.
முத்துவும் தன்னுடைய ஆசைகள், கனவுகள் , லட்சியங்கள் என்று அனைத்தையும் ஹிருதய்யுடன் பகிர்ந்துகொண்டாள். முத்துவின் எண்ணங்களும் லட்சியங்களும் ஹிருதய்யை ஆகர்ஷித்தன. இவள் என் மனைவி என்று அவனுக்கு பெருமையாக இருந்தது. எப்பொழுதும் அவளுக்கு உறுதுணையாக நிற்க வேண்டும் என்று மனதார எண்ணினான்.
இருவருக்கும் ஒருவரை ஒருவர் அவ்வளவு பிடிக்க செய்தது. காதல் செய்த மாயமா என்ன? இருவர் முகமும் புது பொலிவுடன் மிளிர்ந்தது.
———————
error: Content is protected !!