“நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா! என் காதல்.. தேவி இன்னும் தூங்கவில்லையா” என ஒரு முறை முடிந்த பாடல் மறுபடியும் தொடர்ந்தது.
கமலி இங்கே நின்றிருந்தது கனவா நினைவா என இவன் கண்கள் சிவக்க பார்த்திருக்க, பாடல் வரிகள் கொடுத்த தாக்கத்தில் இவளும் அவனையே பார்த்திருந்தாள். விழிகள் நான்கும் இமைக்காமல் தங்கள் துணையை பார்வையாலேயே விழுங்கி கொண்டிருந்தது.
‘ஏன் தேவி இன்று நீ என்னை கொல்கிறாய்’
Advertisement
‘முள் மீது ஏனடி தூங்க சொல்கிறாய்’ இந்த வரிகள் ஏனோ கமலியின் மூளைக்குள் அமர்ந்து அவளை ஆட்டிபடைத்து கொண்டிருந்தது.
வெளியில் சொல்லப்படாத கிரியின் உணர்வுகளை பாடல் வரிகள் மூலம் துல்லியாக சொல்லிக்கொண்டிருந்தான் கிரி.
சாதரணமாக இருந்த கிரியின் விழிகளில் நேரமாக நேரமாக சிவப்பேறிக்கொண்டிருந்தது.
Advertisement
ஓடிக்கொண்டிருந்த பாடலை அதற்கு மேல் கேட்கும் பொறுமை இல்லாதவளாய் வேகமாய் அவனருகில் வந்து போனில் ஓடிக்கொண்டிருந்த பாடலை நிறுத்தினாள்.
Advertisement
அவளின் வேகத்திற்கு இவனது பார்வையும் தொடர்ந்து இறுதியில் தன் அருகிலேயே மண்டியிட்டு அமர்ந்தவள் முகத்திலேயே நிலைப்பெற்றது.
கால் நீட்டி, கை இரண்டையும் தலைக்கடியில் கொடுத்து தலையனையில் படுத்திருந்த போஸோ, அவன் அவளை அழுத்தமாய் பார்க்கும் பார்வையோ, சிறிதும் மாறாமல் இருந்தான்.
கமலியோ.. கிரியை நினைத்து கவலை கொண்டு ஒரு அவசரத்தில் வந்துவிட்டாளே தவிர அவனை எப்படி சமாளிப்பது என தெரியாமல் விழி பிதுங்கி போய் தான் அமர்ந்திருந்தாள்.
Advertisement
காலையில் பேசிய பேச்சுகளும், ஆசையாய் கடைக்கு அழைத்த போது காட்டிய ஊதாசீனங்களும் கேட்காமலேயே அவன் கண் முன் கோபமாய் வந்து நின்று அவன் அமைதியை குலைத்தது.
மனநிலை அமைதியடைவேனா என போக்கு காட்டி கொண்டிருந்தது. எங்கே அவளை பார்த்தால் ஏதாவது கேட்டு விடுவோமோ, வார்த்தைகளால் ஏதும் வதைத்து விடுவோமோ என தன் வாய்க்கு கடிவாளம் போட்டவனாய், இவளை பார்த்தால் தானே பிரச்சனை என இறுக கண்களை மூடிக்கொண்டான்.
சிலுசிலுவென வீசிய காற்றும், காற்றில் படபடத்த இவளது துப்பட்டாவுமே மட்டுமே அங்கே பேரிரைச்சலாய் இருந்தது அவர்களுக்கிடையில்.
கண் மூடி படுத்திருந்தவனை ஓரிரு நிமிடங்கள் பார்த்து பின் “காய்ச்சல் விட்ருச்சா?” என இவள் கேட்க
“ஏன் விடலைன்னா, விரட்டி அடிக்க போறியா?” கண்களை மூடிக்கொண்டே பதில் கூறினான் இவன்.
ஒழுங்கா பதில் வருதா பாரு! என பார்வையாலேயே எரித்து, தயக்கத்தை விடுத்து மெதுவாய் கையை அவன் நெற்றிக்கும், கழுத்திற்கும் இடமாற்றி காய்ச்சலின் அளவை இவள் அளந்திட, திடுக்கிட்டு கண் விழித்தான் கிரி.
உடல் சூட்டை இவள் விரல்கள் உணர, விரல்களின் குளிர்ச்சி இவனுள் சூட்டை கடத்தியது. லேசான சூடு இன்னுமே இருக்க, “காய்ச்சல் இன்னுமே இருக்கு, சாப்பிட்டிங்களா இல்லையா, மாத்திரை போட்டீங்களா” என இவள் அமைதியின் சொரூபமாய் கேட்டிட, படக்கென எழுந்து அமர்ந்தான் கிரி.
பின் “கடையை பத்தி ஏன் என்கிட்ட சொல்லலைன்னு கேட்டு சண்டை போட வந்திருந்தன்னா அப்படியே கிளம்பிடு.. உன்கிட்ட மல்லுகட்ட, என் உடம்பில தெம்பில்லை. காலையில் மல்லுகட்டின வரை போதும்” என்றிட
“உங்களுக்கா..? சண்டை போட தெம்பில்லையா?” என விழிகளை விரித்துகொண்டு “இதை நான் நம்பனும்” இவள் கேட்க, அவள் இதழோர வெட்டு காயத்தில் படிந்து மீண்டது இவன் விழிகள்.
“வார்த்தையால நான் பேசினால், அதே வார்த்தையால நீங்க பதில் சொல்லனும்.. அதை விட்டுட்டு, வாயால பதில் சொல்லி, வலிக்க வச்சிட்டு…” சொல்ல முடியாமல் இவள் திணற
“ஆமா நீ மட்டும் பாவ மன்னிப்பு குடுத்த மாதிரி பேசாத.. எப்போ எந்த டைமில் இவனை அடிக்காலம்னு கங்கனம் கட்டிட்டு தானே திரியுற” வள்ளென விழுந்தவன் “நீ இப்போ எதுக்கு இங்க வந்த?” என மீண்டும் கேட்டு “காலையில் அந்த கிழி கிழிச்சிட்டு இப்போ எதுக்கு சமாதானம் பேசிட்டிருக்க?” என மேலும் கீழுமாய் பார்த்து வைத்து “நீ எதுக்கு இந்நேரம் இங்க வந்த? உன்னை தனியா விட்டுட்டு உன் அண்ணன் என்ன பண்ணிட்டு இருக்கான்?” அடுக்கடுக்காய் கேள்விகளை கேட்க
“அண்ணனுக்கும் இதுக்கும் சம்மந்தமில்லை.. நானா தான் வந்தேன்” முறைத்து கொண்டு சொன்னாள்.
“எதுக்கு வந்த?” அவளை விட அதிகமாய் முறைத்தபடி கேட்டான் கிரி.
“அப்போ நான் இங்கே வரவே கூடாதுன்னு சொல்றீங்களா!” எகிறினாள் கமலி.
திடுக்கிட்டு “நான் எப்படி அப்படி சொன்னேன்.. நீ தான் வர மாட்டேன்னு சொன்ன!..” என இழுத்தவன், அலர்ட் ஆகி.. அவளையே ஊடுருவினான் விழிகளால்.
“இப்போ நீ எதுக்கு வந்திருக்கன்னு எனக்கு தெரியலை. ஆனால் காலையில் பேசினது, கடைக்கு வரமாட்டேன்னு சொன்னது, இதுக்கே செம்ம கோபத்தில் இருக்கேன். வந்த வழியே அப்படியே நடையை கட்டு அது தான் உனக்கு நல்லது” இவன் சீற
“எது நல்லதுன்னு எனக்கு தெரியும். நீங்க ஒன்னும் சொல்ல வேண்டாம்” என்றாள் கடுப்பாய்
இவனோ பொறுமை இழந்தான் “ ‘தொட்டீங்கன்னா அவ்வளவு தான்’ னு சீறிட்டு நின்ன? ‘வெளிய போ’ன்னு நாயை துரத்துற மாதிரி காலையில் துரத்திவிட்ட? இப்போ என்ன சீன் போட்டுட்டு இருக்கியா” இவள் நடவடிக்கை புரியாது இவன் இவளுக்கு மேல் கடுப்பாய் பேச
“ஓ.. அப்போ நீ என்னை அடிப்ப” அவள் புறமாய் சப்பனமிட்டு நன்றாகவே திரும்பி அமர்ந்தபடி கேட்டான்.
“ம்.. கண்டிப்பா..” என ஒரு கையை அவன் கண் முன் உயர்த்தி, தம் பிடித்து புஜத்தின் வலுவை காட்டி “ஜிம் பாடி தாங்க மாட்டீங்க.. ‘டெட் லிப்ட்’ வரை போட்ருக்கேன்” என அவளாய் அவளுக்குள் உருவாக்கி கொண்ட தைரியம் அவளை திமிராய் பேச வைக்க
அழகான வாளிப்புடன் லேசாய் மேடேறி இறங்கிய புஜங்களை பார்த்து ‘கிரி வாயிலையே விட்டான்னா கண்டிப்பா இரண்டு பல் கூட போயிடும்’ என அலர்ட் செய்தது அவன் மூளை. ஆனால் அதை கண்டு கொள்ளாமல் “அடியேன் பார்க்கலாம்” என அவளை விட இவன் திமிராய் சொல்லினான்.
‘கமலி இது தான் நல்ல சான்ஸ், இருக்குற கோபத்தையெல்லாம் திரட்டி வச்சு ஓங்கி ஒரு அறை விட்ரு.. இல்லைன்னா வயித்துல ஒரு குத்து, அதுவும் இல்லையா ஒரு எத்து’ என அவள் மனம் சரியாய் பேச, ‘லூசு மாதிரி எதுவும் பண்ணி் தொலைக்காத கமலி’ என மூளை அவளை பொய்யாய் கட்டுபடுத்தி வைத்தது.
இருவருமே எடுத்த சபதத்தில் இருந்து பின் வாங்கினர். நான்கு விழிகளும் ஒன்னோடு ஒன்று கவ்வி நின்றது. ‘வாய் சண்டை விழி சண்டையில் வந்து முடிய, ஒருவரையொருவர் விழிகளால் கட்டி போட்டபடி இருந்தனர் வெகு நேரமாய்.
பின் குரல் கரகரக்க “எதுக்குடி இப்போ இங்க வந்த? ஐய்யோ பாவம்! கடை, ஹாஸ்பிடல்னு தனியாவே சுத்திட்டு இருக்கானேனு பாவம் பார்த்து பார்க்க வந்தியா?” நிசப்த்தத்தை கிழித்தபடி வந்தது இவனது குரல்.
இவள் இதற்காக தான் இங்கே வந்திருப்பாள் என இவன் சரியாய் கண்டுபிடித்து விட தடுமாறினாள் கமலி.
அவள் தடுமாற்றத்தை கண்டு கொண்டவனாய், “பிடிக்கலைனு சொன்ன?” “பெட்டரா எதிர்பார்க்குறன்னு சொன்ன? பிடிச்சவனா பார்த்திட்டியா? இல்லை நான் பார்க்கவா” வேறெங்கோ போய் கொண்டிருந்தது இவனது பேச்சுகள். கோபத்தை விட பொறாமை அதிகமாகவே தெரிந்தது இவனது வார்த்தைகளில்.