லைட் ஆஷ் கலர் சட்டையும், கருப்பு காட்டன் பேண்ட்டுமாய் வந்து நின்றான் கிரி. ஏற்கனவே அழகன் அவன், இதில் வெகு பொருத்தமான பிட்டான உடையில் வசீகரமாய் வந்து நிற்க.. பேரழகனாய் இருந்தான்.
கூடவே மோகன், சுபா இருவரும் வந்திருந்தனர். செந்தில் அங்கிருந்தே கை காட்டி, மோகனை “மாமா இங்க” என அழைக்க, அச்சத்தத்தில் கிரியும் செந்திலோடு அமர்ந்திருந்த அம்மா, அக்கா, அக்கா பிள்ளைகள் அனைவரையும் பார்த்துவிட்டான் “சித்தப்பா, நீங்க செந்திலோட உக்காருங்க.. நான் கமலிட்ட பேசிட்டு வரேன்” என போனை எடுத்து கமலிக்கு கால் செய்தான்.
அவளும் எடுத்திட “எங்கடி இருக்க!” எடுத்ததுமே கேட்டவன் “மண்டபம் வந்துட்டேன் கமலி, வெள்ளி வளையலும் வாங்கிட்டு வந்துட்டேன்” என சொல்ல
Advertisement
நாத்தனார் முறைக்கு நீ வளையல் போடனும்டி, என காலையில் மல்லிகா சொல்லியிருக்க, இவளுக்கு வாங்க நேரமில்லாததால் கிரியிடம் சொல்லி இருக்க, இதோ வாங்கி வந்துவிட்டான் கிரி. “அத்த, அண்ணி, அண்ணன் எல்லாருக்கும், டீ எடுத்துட்டு வர வந்தேன். நீங்க அவங்களை பாருங்க.. நான் வந்திடுறேன். வந்து வளையலை பார்க்குறேன்” என சொல்ல
“சரி.. வா, சித்தி சித்தப்பா வந்திருக்காங்க சேர்த்து டீ எடுத்திட்டு வா” என சொல்ல
“ராம், மாமா சீதாக்கா வரலையா” இவள் கேட்க
Advertisement
“எல்லாரும் இங்க இருந்தா கடையை யாரு பார்க்குறதுன்னு, அவன் வரலை. அவன் வரலை அதனால் அண்ணியும் வரலை” இவன் விளக்கம் கொடுக்க
Advertisement
“சரி.. நான் டீ எடுத்துட்டு வரேன்” என வைத்துவிட்டாள். இவனும் போனை வைத்து விட்டு, அம்மா, அக்காவை தான் பார்த்தான்.
‘அன்னைக்கு வீம்பா வர மாட்டேன்னு சொல்லிட்டு அதிசயமா இரண்டு பேருமே வந்திருக்காங்க’ என எண்ணியபடியே நடையை எட்டி போட்டான்.
அப்போது கிரியை தான் பார்த்திருந்தான் செந்திலும். சிறுவயதிலிருந்தே ஒரே தெருவில் வசித்தவர்கள். ராஜியின் பழக்கத்திற்கு முன்பே கிரி தான் செந்திலுக்கு பழக்கம்.
Advertisement
நண்பனாய் கிரியை சுற்றி வந்தவன், மச்சானாய் மாறிய பின் சற்று சுயநலத்திற்காக மலைப்பாம்பு போல் சுற்றிவிட்டான் கிரியை. இப்போது அதை நினைக்கையில் கசந்து போனது இவன் மனது.
அவர்களின் அருகில் சென்ற கிரியின் பார்வை அக்கா, அம்மாவின் மேல் ஓர் நொடி படிந்து ‘வாங்க’ என்பது போல அவர்களை நோக்கி லேசாய் தலையசைத்து, பின் செந்திலின் மேல் படிந்தது.
சிரிக்கவா வேண்டாமா என செந்தில் யோசிக்கையிலேயே, கிரி லேசாய் புன்னகை சிந்திட, இதழ் தானாகவே விரிந்தது கூடவே “செந்தில்.. எப்போ வந்த!” என்றதில், மேலும் புன்னகையை சிந்தினான் செந்தில்.
மென் இஸ் ஆல்வேஸ் மென் என அவர்கள் நிரூபித்துக்கொண்டிருக்க, பழைய கோபமோ, ஆதங்கமோ ஏதுமின்றி சாதாரணமாய் பேசியவனிடம் சற்று அதிகமாகவே படிந்தது பார்வை.
‘இப்படி பட்டவனையா இத்தனை நாளாய் பணத்திற்காக உபயோகித்து கொண்டிருந்தோம்’ மனம் சுணங்கி போனது.
“பத்து நிமிஷம் இருக்கும்டா. நீ என்ன இவ்ளோ லேட்” என பதிலுக்கு செந்தில் கேட்க, “கடைக்கு போக வேண்டியிருந்து, போயிட்டு வந்தேன், லேட் ஆகிடுச்சு” என சொல்லியபடி, ராஜியின் மடியில் இருந்த பிரணியை ‘தங்ககுட்டி’ என தூக்கி கொண்டான்.
வசந்தாவிற்கு, கிரியை கண்டதும் கமலி பற்றி, கமலி பேசியதை பற்றி அனைத்தையும் கொட்டிட துடித்தார். ஆனால் சுற்றி இருக்கும் மோகன், சுபாவை கண்டே வாயை மூடிக்கொண்டார். எப்போது வெடி குண்டு வெடிக்குமோ என பீதியில் இருந்தாள் ராஜி.
இவன் பிரணியை தூக்கி வைத்தபடி மோகனிடம் பேசிக்கொண்டு கவனமாகிப்போனான். ஊடேயே சுபாவிடமும் பேசிக்கொண்டிருந்தான்.
‘பெத்த அம்மா, கூடபிறந்தவன்னு இரண்டு பேரு இருக்குறது இவன் கண்ணுக்கு தெரியவே தெரியாது போல’ ஏற்கனவே கமலி கொளுத்தி போட்டதே இங்கு எரிந்து கொண்டிருக்க, இப்போது தன்னிடம் பேசாமல் தவிர்த்த மகனை கண்டு இன்னுமே எரிய துவங்கி விட்டது.
இப்படியே ஐந்து நிமிடங்கள் தான் கரைந்திருக்கும் “கிரி இந்தாங்க டீ” என முதுகின் பின் கேட்ட கமலியின் குரலில், வேகமாய் இவன் திரும்ப, “ஐய்யோ டீ” எங்கே தட்டி விட போகிறானோ என இவள் பதறி விலகி நின்றாள்.
“பார்த்து திரும்ப மாட்டீங்களா, சூடா இருக்கு, கையில் காலில் கொட்டிட்டா என்னாகும்” டீ டிரேயை பத்திரமாக கையில் பிடித்தபடியே இவள் பேசிக்கொண்டிருக்க, கமலியை பார்த்த கிரியின் விழிகள் அதிர்ச்சியில் விரிந்தது, விரிந்தது விரிந்து கொண்டே தான் இருந்தது. தான் காண்பது நிஜம் தானா, என.
பிங்க் கலரில் வெள்ளி சரிகையிட்ட பட்டு புடவை, தங்க வளையல்களுக்கிடையில் ஜொலித்து கொண்டிருந்த பிங்க் கலர் ரெயின்டாராப் பேங்கில்கள், காதை அலங்கரித்த பெரிய ஜிமிக்கி என கிரி முதன்முதலாக இவளுக்காக வங்கி வந்திருந்த புடவை, வளையல், ஜிமிக்கி என அனைத்தையும் அணிந்து அவனுக்கானவளாய் நின்றிருந்தாள்.
கூடவே தலை நிறைத்த மல்லிகைப்பூ, உச்சி வகிட்டில் ஒய்யாரமாய் வீற்றிருந்த குங்குமம், கழுத்தில் தாலியோடு அணிந்திருந்த ஒற்றை நெக்லஸ் என சாமுத்ரிகா லட்சனங்களோடு பொருந்தி போய் இருந்தாள்.
அவளை பார்த்து உள் வாங்கிய கண்கள், எனக்கு போதும் அதிர்ச்சி இந்தா நீயும் அனுபவி என இதயத்திற்கு இடம் மாற்றிட, அதிர்ச்சியில் இவன் இதயம் தாளம் தப்பி துடித்தது, தான் காண்பது உண்மை தானா! இல்லை கனவெதும் காண்கிறோமா! என இமைக்காது பார்த்தான் கமலியை..
மோகன், சுபா எப்போதும் போல் சிரிப்படக்கி அமர்ந்திருக்க, ஆஹா.. நல்ல சீன், நல்ல சீன்.. என செந்தில் பார்க்காததை பார்ப்பது பேல் பார்த்தபடி அமர்ந்திருந்தான்.
ராஜி, வசந்தா… ‘நோ கமண்ட்ஸ், சிம்ளி வேஸ்ட்…’ என்பதை போல் சொல்லில் வடிக்க முடியா ஒரு முக பாவனையை வெளிக்காட்டி அமர்ந்திருந்தனர்.
அவனின் அந்த பார்வையில் சிறிதாய் சிரிப்பை படறவிட்டு “கிரி டீ” என அவன் முன் நீட்ட, அசையவே இல்லை இவன்.
இவன் அசையாததை உணர்ந்து அருகில் நின்றிருந்தவனின் காலில் எட்டி ஒரு மிதி விட்டான் செந்தில். திடுக்கிட்டு இவன் திரும்பி பார்க்க, கமலியை நோக்கி ‘அங்க பாருடா’ கண்ஜாடை செய்தான் செந்தில்.
எதிரில் மனைவி டீயை ஏந்தியபடி நின்றிருக்க, தனக்கான டீயை வாங்கி கொண்டு செந்திலின் அருகே சென்று அமர்ந்தான் கிரி.
இவள் எல்லோருக்கும் டீ கொடுக்க, எல்லோருமே எடுத்து கொண்டனர். “கமலி புடவையில ரொம்ப அழகா இருக்க. அதுவும் இந்த கலர் உனக்கு அவ்வளவு எடுப்பா இருக்கு” மனதில் பட்டதை சுபா பேச, “தேங்கஸ் அத்தை” என இவளும் இதழ் நிறைந்த புன்னகையோடு கூறிட
‘அத்தையாம் அத்த.. அப்ப நான் யாரு. ஒரு நாளாவது இவ என்கிட்ட இப்படி சிரிச்சு பேசி இருக்காளா?’ கடுப்போடு அமர்ந்திருந்தது சாட்சாத் வசந்தாவே தான்.
இவர் இங்கே கருவிக்கொண்டிருப்பது தெரியாமல், கமலியும் சுபாவும் சிரித்து பேசிக்கொண்டிருக்க , “ஏண்டி.. எதை எதையோ எக்சேன்ஜ் பண்றாங்க.. இந்த கமலிக்கு மாமியாரை எக்சேன்ஜ் பண்ணி குடுத்தா சந்தோஷமா இருக்கும்ல” நேரந்தெரியாமல் செந்தில், ராஜியின் காதுகளை கடிக்க, பதிலுக்கு ராஜி பார்த்தாளே ஒரு பார்வை.. ‘ஆத்தாடி’ என வாயை மூடிக்கொண்டான் செந்தில்.
சுபாவிடம் பேசிவிட்டு டீ டிரேயை எடுத்து கொண்டு திரும்பியவளை “கமலி” என அழைத்து, தன் அருகில் வந்து அமரும் படி அழைத்தான் கிரி.