Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

93. Anonymous - முள் மீது தூங்கினேனே

முள் மீது தூங்கினேனே 4 2

முகத்தை எங்கே வைக்க என தெரியாமல் திகைத்து நின்று விட்டாள் கமலி.

என்னடா இது அமைதின்னு நினைச்சா அதிரடியா இருக்கான். இவனை போய் அமைதின்னு வேற நினைச்சிட்டேன்!

தன் மேல் தான் ஏதோ கோபம் என இவள் நினைத்திருக்க, மற்றவர்கள் மீதும் கோபமோ? ஏன்? எதற்கு? இவன் கத்தியதில்  தான் கேட்க வந்த விசயத்தையே மறந்துவிட்டாள் பெண்ணவள்.

பாத்திரங்களை சிங்கில் போட்டுவிட்டு அறைக்கு வந்தவள் தாழ்ப்பாள் போட்டுவிட்டு, இரவு உடைக்கு மாறியபின் அவனருகே படுத்து கொண்டாள்.



Advertisement

ஒருகளித்து படுத்திருந்தாள் கமலி. கடந்த பத்து நாட்களாய் இரவு உறங்காமல் தன்னவனுக்காக விழித்திருந்தவள், அவன் குரல் கேட்க தவமிருப்பவள் தூங்குகையிலாவது நிகழும் சிறு தொடுகைக்காய் காத்திருப்பவள் இன்று எதற்கும் காத்திராமல் உறங்கி போய்விட்டாள்.

அவளின் ஆழ்ந்த உறக்கத்திற்கு பின் இவன் கண் விழித்தான்.

கட்டிலை சுற்றி கொண்டு அவள் புறம் வந்தான். இடுப்பில் கை வைத்துகொண்டு அவளை தான் பார்த்தான்.

Advertisement

முகத்தின் கசங்களும் இறுக்கமும், முக வீக்கமும் பகலில் அழுததை புடம் போட்டு காட்டியது. ‘கமலி சாரி.. மன்னிச்சிடு’ உச்சரித்து கொண்டே இருந்தான்.

Advertisement

அண்ணாந்து பார்த்து அடக்கி வைத்திருந்த மூச்சுகாற்றை ‘உப்’ என வெளியேற்றினான்.

அறைக்குள்ளேயே வெறி கொண்டு நடந்து கொண்டே இருந்தான்.

Advertisement

ஒரு நிலையில் வலித்த காலுக்கு ஓய்வு கொடுக்க படுத்து கொண்டான். அப்போதும் திரும்பி கமலியை பார்த்தவன் “சாரி.. சாரி கமலி..” முனு முனுத்தான்.

மறுநாள் காலை பொழுது எப்போதும் போல் விடிந்தது. இவனுக்கு முன்பாக விழித்தாள்.

உறக்கத்தில் இவள் புறமாய் பிரண்டு படுத்திருந்தான். இந்த பத்து நாட்களாய் தினம் தினம் இவன் முகத்தில் தான் விழிக்கிறாள். தினம் தினம் பல எதிர்பார்ப்புகளோடும் கனவுகளோடும்  அவன் உருவத்தை நிறைத்து கொள்பவள் இன்றும் நிறைத்து கொண்டாள்.

அள்ளி கூந்தலை முடித்தவள் குளித்து சமையலறைக்கு சென்றாள். வசந்தா கொடுத்த டீயை வாங்கி கொண்டு கையில் போனோடு ஹால் சோபாவில்  அமர்ந்தாள்.

“என்னம்மா.. நாம நினைச்ச அளவுக்கு இரண்டு பேரும் சண்டை போடலை போல..” இரவில் இவர்களது பேச்சை அரைகுறையாய் கேட்டு, வசந்தாவின் காதை கடித்தாள் ராஜி.

“ரொம்ப சந்தோச பட்டுக்காதடி, கண்டிப்பா ஒரு நாள்  வெடிக்கும், அதுவும் நம்ப பக்கம் திரும்பும், எதுக்கும் தயாரவே இரு” பொடி வைத்து பேசினார் வசந்தா.

“நம்ப பக்கம் திரும்பினாப்புல, கிரியால என்ன செய்யமுடியும்.. பார்த்துகலாம்மா” அசால்ட்டுதனம் நிறையவே தெறித்து வந்தது இவள் வார்த்தைகளில்.

இந்த பத்து நாட்களில் கிரி, கமலியின் வாழ்க்கை எந்த பிரச்சனையும் இன்றி நன்றாக சென்றுகொண்டிருக்கிறதே, அப்போ எல்லாம் சரியாகிடுச்சா?என நேற்று மாலை தான் வசந்தாவும், ராஜியும் பேசிக்கொண்டிருந்தனர்.

எது சொன்னாலும் தலையாட்டிக்கொண்டு இருக்கும் கமலியின் நடவடிக்கைகளை கொண்டு “நம்ப பக்கம் வந்துடுவாம்மா கமலி..” என ராஜி நம்பிக்கையூட்டினாள் வசந்தாவிடம்.

ஆனால் மாலை மற்றும் இரவு ஹாலில் அமர்ந்தபடி கமலிக்கும், கிரிக்கும் நடந்த வாக்குவாதங்களை கேட்டு, எங்கே பெரும் சண்டையாக வெடித்துவிடுமோ என்ற கவலை இருவருக்குள்ளும் இருந்தது.

அதன் பிறகான அமைதியான சூழ்நிலை ராஜிக்கும் வசந்தாவிற்கும் தைரியமூட்டியது.

கூடவே, எதையுமே வெளிக்காட்டாத கமலியின் அமைதியான முகம் அவர்களுக்கு வெகு சாதகமாகவே அமைந்தது.

கமலியின் மீது பார்வை வைத்த ராஜி “ம்மா.. நீ கொஞ்சம் கிரிகிட்ட பேசும்மா”  என எடுத்து கொடுத்தாள் ராஜி.

“என்ன பேசனும்”

“இவன் கமலிகூட சண்டை போடாமல் இருந்தா தான் நமக்கு லாபம். ஏதோ கொஞ்சம் மனஸ்தாபம் மாதிரி தெரியுது. அப்படியே விட்டா பெரிசாகிடும். ஏதாவது சென்டிமெண்டா பேசி அவனை கரச்சிடும்மா..” என விபூதி அடித்தாள்  தன் அன்னைக்கு.

“ஏன் நேத்து நீ வாங்கி கட்டினது பத்தாதுன்னு நானும் வாங்கனுமா?” என

“அவன் உன்னை ஒன்னும் சொல்ல மாட்டான். நான் தான் பழியை என் மேல போட்டுகிட்டனே!”

“அப்படிங்கற ஆனா விடாகொண்டன் கேள்வி கேட்டே கொல்வானேடி”

“கேட்டா உனக்கா சமாளிக்க தெரியாது? எவ்ளோ பார்த்துட்டோம்.. இது ஜூஜூப்பி ம்மா” என திரி போட்டு தீபமேற்ற, வசந்தாவும் சரியென்றார்.

இவர்கள் ஏதோ குசுகுசுவென பேசுவது கமலிக்கு தெரிந்தாலும், நமக்கேன் வம்பு என ஒதுங்கி விட்டாள்.

அதன் பின் கிரிக்கு டீயில் ஆரம்பித்து அவனுக்கான தேவைகளை நிவர்த்தி செய்வதில் எப்போதும் போல் தன் கடமைகளை செவ்வனே ஆற்றி கொண்டிருந்தாள்.

அப்படி வசந்தாவிற்கும் ராஜிக்கும் தெரிய, கிரி மட்டுமே அவளிடமிருந்த வித்யாசத்தை கண்டு கொண்டான்.

நிமிடத்திற்கு நிமிடம் தன்னையே சுற்றி கொண்டு, எப்போதடா பார்ப்பான், எப்போதடா வாய் திறப்பான், என தவமிருந்து அது நிறைவேறும் நேரங்களில் முகம் பூரிக்க அவனுக்காக செய்பவள், இன்று அவன் முகத்தை கூட நிமிர்ந்து பார்க்காது செய்து கொண்டிருந்தாள்.

கையில் கொடுப்பதற்கு பதில் டேபிளில் வைத்தாள். முகம் பார்க்க மறுத்து சுவர் பார்த்து சொல்லி செல்வாள்.

சிரித்து கொள்வான் வெளிப்படையாகவே..

ஆனால் இத்தனைநாளாக, இறுக்கி கட்டியிருந்தார் போலவும் இப்போது அந்த இறுக்கத்தில் இருந்து விடுபட்டவனை போலவும், சற்று இலகுவாக தான் உணர்ந்தான் கிரி.

இப்போது கூட பிடிக்கவில்லை, ஏன் பிடிக்கவில்லை எதற்கு பிடிக்கவில்லை என்ற பிரச்சனையை மட்டுமே இதுவரை பகிர்ந்திருக்கிறான்.

ஆனால் ஒரு பிரச்சனைக்கு இரண்டு தீர்வுகள் எப்போதும் உண்டு என்பதை மறந்து இன்னும் அதற்கான விடையை தேட துவங்கவில்லை இவனும் இவளும்.

மறுநாள் கமலி வீட்டில் இருந்து குடும்பமாய் இவளை வந்து பார்த்துவிட்டு சென்றனர். திருமணத்திற்கு முன்பு செல்லம் கொடுத்த தாய் “என் மானத்த வாங்கிராதடி.. எதுவா இருந்தாலும் உன் வீட்டு ஆளுங்க கிட்ட கேட்டு செய்” என இப்போது கண்டிப்பாய் பேசிக்கொண்டிருந்தார்.

கேலி கிண்டலாய் இருந்த தமையன் “என்னடா எல்லாம் ஓகே தான” என இவள் கைபிடித்து கொண்டு கேட்டு கொண்டிருக்க, அதிர்ச்சியாய் அவனை பார்த்தாள்.

தந்தை மட்டுமே மாறவில்லை.. எப்போதும் போல் தலையை தடவி கொடுத்தபடி “எந்த பிரச்சனையா இருந்தாலும் அப்பாகிட்ட சொல்லனும்” என தைரியமூட்டி கொண்டிருந்தார், முகத்தை வைத்து ஏதேனும் கண்டு கொண்டனரோ வீட்டினர் என இவளுக்கே சந்தேகம் தான்.

ஏனோ இப்போது தான், பிரச்சனையின் கனம் பெரிதாய் தெரிந்தது. எல்லோரையும் விடுத்து தந்தையின் தோளில் விழுந்து கதற துடித்தாள். ஆனால் பிரச்சனையின் முழு விபரம் தெரியாமல் அவர்களை கஷ்டபடுத்த பிடிக்காமல் பெரும் பாடுபட்டு அடக்கி அமர்ந்திருந்தாள்.

இப்படியே கமலிக்கும், கிரிக்கும் ஒட்டியும் ஒட்டாமலும் நாட்கள் சுழன்றது.

இடையில் கர்ணன், கிரிக்கு அழைத்தான். இருவருமே சாதாரணமாய் பேச துவங்கினர்.. ஆரம்ப நல விசாரிப்புகளுக்கு பின், கர்ணனே பேச்செடுத்தான் “மச்சான், அப்பா ஹனிமூன் டிக்கட் போட சொன்னாங்க.. கமலிட்ட எப்படி பேச, இரண்டு பேரும் பேசிட்டு ஒரு மூனு நாள் ட்ரிப்புக்கு டேட், பிளேஸ் சொல்றீங்களா?” என கேட்க

அதுவரை அமைதியாய் பேசிக்கொண்டிருந்த கிரிக்கு புரையேறியது, சமாளித்து “நான் கமலிட்ட பேசிட்டு சொல்றேன்” என வைத்து விட்டான்.

அன்றிரவு, எப்போதும் போல் தனக்கு முன்பே தூங்கி விடுபவள் இன்று விழித்திருந்தாள் ‘ஒருவேளை அவ அம்மா அவகிட்ட பேசியிருப்பாங்களோ’ என தோன்றியது.

யோசனையுடனேயே அருகில் வந்து அமர்ந்தான். “அத்த தூங்கிட்டாங்க.. உங்களுக்கு சாப்பாடு வைக்க சொன்னாங்க, எடுத்துட்டு வரவா?” இவள் கேட்கையிலேயே, நெற்றி சுருங்கியது இவனுக்கு.

“இல்லை பிரண்ட்சோட சாப்பிட்டேன் வேணாம்” என்றவுடன், ‘சரி’ என்பதாய் தலையசைத்து படுத்துவிட்டாள்.

‘அப்போ அவ அம்மா அவகிட்ட பேசலையா?’ சட்டென எரிச்சல் எழ “உங்கிட்ட பேசனும்” வழக்கம் போல குரலில் மயக்கினான்.

மயங்கினாள் அவள்.. படுத்த வாக்கிலேயே திரும்பி அவனை பார்த்தவள் “எங்கிட்டயா?” என சந்தேகமெழுப்பியபடி எழுந்தமர்ந்தாள்.

அவளை முறைத்து பார்த்தவன் “கர்ணா போன் பண்ணாங்க, ஹ…” என திணறியவன் ,ம்க்கும் என செருமிக்கொண்டு “ஹனிமூன் டிக்கெட் போடுறேன், டேட் பிளேஸ் சொல்லுங்கனு கேட்கிறாப்ள” என அவளிடம் சொல்லிவிட்டான்.

அதிர்ந்த அவள் முகமே, இந்த விசயம் அவளுக்கு புதிது என எடுத்துரைத்தது.

அவன் முகத்தையே பார்த்திருந்தவளை நேர் கொண்டு காணமுடியவில்லை இவனால்.

என்ன இருந்தது அந்த முகத்தில் ஆசையா, எதிர்பார்ப்பா இல்லை ஏக்கமா? ஏதோ ஒன்று அவனது இதயத்தில் நங்கூரமிட்டு நின்றது.

“வேணாம்னு நான் சொல்லிடறேன்” தலை குனிந்தபடி சொல்கையிலேயே அவள் குரல் கரகரத்தது.

அடுத்த நொடி படுத்துவிட்டாள்.

‘இவ்வளவு சுயநலவாதியாயிட்டனா நான்’ ‘அக்கா, அம்மா அவங்க இஷ்டத்துக்கு பண்றங்க, நான் என் இஷ்டத்துக்கு பண்றேன்’ அவங்களுக்கும் எனக்கும் என்ன வித்யாசம்? பக்கா சுயநலவாதிங்க…

கமலியின் முகம் பார்த்தவனுக்கு குற்றவுணர்ச்சி கூறு போட்டது.

மறுநாள் என்ன கூறினாளே, கர்ணனே போன் செய்து, “மச்சா கமலிக்காக இந்த முறை விட்டாச்சு, அடுத்து வரும் போது கன்பார்மா டேட் கொடுக்கனும்” என கட்டளையிட்டே அழைப்பை துண்டித்தான்.

தொடரும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!