Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

முழுமை பெற்ற காதல் என்றால்

முழுமை பெற்ற காதல் என்றால் 9

பொதுவாக ஐசோலேஷன் வார்டில் அவள் தன் வேலைகளை தானே நர்ஸ் உதவி இன்றி செய்து கொள்வாள்.

 மூக்கில் இருக்கும் ஆக்சிஜன் டூப் எடுப்பதற்கு மட்டும் அவர்களை அழைக்க வேண்டும் என்பது விதி, ஒரு நிமிடம் கூட கழட்ட கூடாது என்பதால் அந்த கண்டிப்பு.

   இவள் நிலை சற்று நன்றாக இருக்க, டூப் அகற்றி, ரெஸ்ட் ரூம் செல்ல மட்டும் அனுமதி தரப்பட்டு இருந்தது.

  ஹாஸ்பிடல் வாசத்தில் சற்று மட்டுபட்ருந்த, வறட்டு இருமல், நான்கு நாட்களுக்கு பிறகு மறுபடி அன்று கொஞ்சம்  கூடி  இருந்தது.



Advertisement

  நாளை டிஸ்சார்ஜ், இனி நார்மல் வார்டு  சேர்ந்து, அடுத்த ஊசியை போட்டு கொள்ளலாம், என்ற இருந்த பொழுதில், அன்று விடிந்த போது, வழக்கம் போல், அம்மாவிற்கு போன் பண்ணி பேச முயல, கடுமையான இருமல் வந்து தடுத்தது.  சரி உடம்பை பார்த்துக்கொள், அப்புறம் பேசலாம், என்று அம்மா முடித்துக்கொண்ட போதும், மகனிடம்  சென்று அவள் குரலே சரி இல்லை டா, நீ போய் பார்த்துவிட்டு வா என சொல்ல வைத்தது.

  பொதுவாக விசிட்டர்ஸ் கிடையாது, தொற்று என்பதால், என்றாலும் அவள் கணவர் மட்டும் காலையும், மாலையும் ஒரு முறை, மருத்துவர் என்பதால் வந்து செல்வது வழக்கம். மகனை கட்டாயமாக வர வேண்டாம் என்று எல்லோரும்  தடுத்து விட, ஒரு விசிட்டர்    என்பதே அதிகபடி, என்பதால் அவனும் அதற்கு கட்டுப்பட… இன்று பாட்டியின் இந்த கவலையால், அவனும் கிளம்பினான் அவளை  பார்க்க…….

  அதனால், கணவருடன் கூட அவனும் வந்துவிட்டு, உள்ளே வருவதற்கு, அனுமதி வேண்டி நிற்கும்போது தான், இவள் நிலை  இன்னும் மோசம் ஆனது.

Advertisement

   எப்போதும் காலை ஒன்பது மணிக்கு மேல்  டாக்டர்ஸ் ரௌண்ட்ஸ் வருவார்கள்.

Advertisement

   டூட்டி டாக்டர், டாக்டர் வேலாயுதம்  டீமில்  இருக்கும் அசிட்டான்ட்  டாக்டர்  , கடைசியா அவரும் என்று  பார்க்க வருவது வழக்கம், இதன் பின்னே  அவள் கணவர் என்று போகும் அவள் காலை பொழுது,

   அப்படி அவர்கள் வர ஆரம்பிக்கும் முன் அவள் தன் காலை கடன்களை முடித்து, அவர்களை எதிர்கொள்ள தயாராய் இருப்பாள்.

      இன்று அதை செய்யவும் உடம்பில் சக்தி அற்றது போல் இருக்க, பிரஷ் மட்டும் செய்துவிட்டு இவள் படுத்தே இருக்க, டாக்டர்ஸ் ரௌண்ட்ஸ் வரும் நேரம் நெருங்க,அதற்குள்  ரெஸ்ட் ரூம் சென்று  வந்துவிடலாம் என்று போக, அதுவே பெரும்பாடு ஆனது, நர்ஸ்  துணை இன்றி தனியாக வந்தது தப்போ என்று, பயந்து, ஒரு வழியாய் மெத்தையில் வந்து படுக்க…

Advertisement

  அந்த நேரம் உள்ளே வந்த டூட்டி டாக்டர், அவள் ஆக்சிஜென் மாஸ்க் இன்றி படுத்து இருப்பது கண்டு லேசாய் அவளை கண்டித்து விட்டு அதை பொறுத்தி, எஸ் பி ஓ டூ எனப்படும் பிரானவாயூ  அளவை பார்க்க, அது எண்பதுக்கும் கீழே இருக்க, அவ்வளவு தான், அடுத்து நடந்தது எல்லாம் அவள் கை மீறிய விஷயமாக இருந்தது!

  டூட்டி டாக்டர், டாக்டர் வேலாயுதம் டீமிடம் தகவல் தெரிவிக்க, அடுத்த சில நொடிகளில் அவரே அங்கு வந்தார்.

  எப்போதும் போல கொஞ்சம் உரிமையாக, (‘இப்போது என்ன செய்து வைத்திருக்கிறாய்), என்று ஆரம்பித்த போதும், அவள் நிலை அவர்களை துரிதமாக நடவடிக்கை எடுக்க வைத்தது.

  அவளிடம் ” இருமலுடன், இரத்தம் வருகிறதா,, என்று விசாரிக்க, அவள் இல்லை  எனவும், ”   ஒரு ‘சி டி ‘ எடுக்க வேண்டும், அத்துடன் ‘ஐ சி யூ ‘க்கு மாற்ற போகிறோம் “என்று சுருக்கமாக   முடித்துவிட்டு , அவர் டீமுக்கு அடுக் அடுக்காக உத்தரவுகள் பிறப்பித்தார்.

   அதற்குள் மகனும் அங்கு வந்து சேர, “ஒண்ணுமில்லை மா, நுரையீரல்  எப்படி ன்னு பார்ப்போம்,   அதுக்கு தான்  ‘ சி  டி ‘ மத்தபடி நீ ஸ்ட்ரைன் பண்ணிக்காம இரு ” என்று கூற

   அவளுக்கு புரிந்தது, அவள் சாதாரண கட்டத்தை கடந்து, சற்று அபாய கட்டத்தை அடைந்து இருக்கிறாள் என்று…

    சற்று நேரத்தில் அவளை ஸ்ட்ரெச்சேரில் வைத்து, அதாவது, நடந்து போவது கூட ஸ்ட்ரைன், என்று,   அழைத்து சென்று, சி டி முடித்து, ‘ஐ சி யூ ‘ வில் அட்மிட் செய்ய,

    ஐ சி யூ, என்பது கண்ணாடியால், மற்றும் வித விதமான, பெரிய மெஷின்கள்,  சூழ்த்த ஒரு அறையாக இருந்தது அவளை கவனிக்க கூடவே இருக்கும் ஒரு  நர்ஸ் என்று சற்று மிரட்ட

  கண்ணாடி  கதவுக்கு  வெளியே இருந்தபடி அவள் கஸின்  டாக்டர் கணேஷ் அவளுக்கு தெம்பு தரும் விதத்தில்,

  ” கூடுதல் ஆக்ஸிஜன் கொடுக்க, அங்கே வசதி இல்லை, என்பதால் தான் இங்கு கொண்டு வந்திருப்பதாக ” கூற     அவள் தலை அசைத்து அதை  கேட்டுக்கொண்டாள், மத்தபடி பேச முடியாதபடி

 அவள் முகத்தில் இன்னும் பெரிய பிள்ளையார் தும்பிக்கை போல் ஒரு மாஸ்க் பொருத்தப்பட்டு, உயிர்காற்று வெகு  வேகமாயும், கூடுதலாகவும், செலுத்தப்பட்டது.

  அவள் ‘சி டி’  ரிசல்ட்  டாக்டர்களுக்கு குழப்பத்தை கொடுத்தது.

அன்று பிளே ஸ்கூலில் பிக் அப் செய்த மகன் கையில் அன்று எடுத்த குரூப் போட்டோ, சின்ன சிறு மலர்களின்   இன்னொசென்ஸ் மிக அழகாக வெளிப்பட்டு இருந்தது. அந்த அழகில் கண் பட்டதோ, அவனுக்கு வயிற்று போக்கு ஏற்பட, எந்த மருந்துக்கும் கட்டுப்படாமல், படுத்தி, ஆளை பாதியாக இளைக்க வைத்து சோதித்தது.

மூன்று வேளையும், கசப்பான, லேசான நெடியுடன் கூடிய மருந்தும், உணவு கட்டுப்பாடும், பெரிதாக உதவியது. மகனும் அந்த ‘ஆர்ரோவ்  ரூட் ‘ கஞ்சியை தட்டாமல்   எடுத்தது ஒரு காரணம்.அதும் மலத்தை கட்டும், மலைவாழ பழமும் மட்டுமே  உணவு.

         குழந்தையை  பெற்று, வளர்த்து ஆளாக்குவது என்பது ‘ பேனை பெருமாள் ‘ ஆக்குவதற்கு சமம் என்று, அவள் பாட்டி கூறுவார்கள், அது எத்தனை உண்மை என்று கண்டாள்.

 உடம்பு சரியாகி , சற்று   தெம்பு வந்து தேற, கிட்டத்தட்ட ஒரு மாசம் ஆகிவிட,

           அப்படியே பிளே ஸ்கூல் போவது நின்று போனது, அதன் பின் ஒரு மூன்று மாதங்களுக்கு மறுபடியும், முழு நேரமும் மகன் கூடவேயிருந்துவிட்டு, ரெகுலர் ஸ்கூல் தொடங்கி, அவன் சென்றபோது, அவள் தான் தவித்து போனாள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!