Skip to content
Post Views: 8,005
“நட்ட நடு வீட்டில என்னடா இது” என்றார் ராக்காயி வந்ததும் வராததுமாக.
Advertisement
“இதென்னம்மா வம்பா இருக்கு என் வீட்டில என் பொண்டாட்டிய நான் கொஞ்சுறேன் நீ எதுக்குமா கோவப்படுற” என்றான் சாதாரணமாக.
Advertisement
Advertisement
“எல்லாம் என் நேரம்” என்றவர் உள்ளே வந்து அமர வேகமாகக் கைக்கழுகி சொம்பில் தண்ணீரோடு வெளியில் வந்தாள் கனகம்.
Advertisement
“வாங்க மாமா வாங்க அத்த” என்று தண்ணீரை நீட்டச் சிரித்துக்கொண்டே வாங்கிக்கொண்டார் கனகசபை, எதற்கு வந்திருக்கிறார்கள் என்று யோசனையோடு நின்றிருந்தாள் கனகம்.
“டீப்போடுறேன் அத்த” என்றவள் மீண்டும் அடுப்படிக்குள் நுழைந்துகொண்டாள், என்னவாக இருக்கும் என்ற சிந்தனை மண்டையை குடைந்தது அனைவருக்குமே தேநீர் போட்டு எடுத்துவந்தாள்.
“இங்க உக்காரு கொஞ்சம் பேசணும்” என்றார் ராக்காயி, கணவனைப் பார்த்துக்கொண்டே அவளும் அமர்ந்துகொண்டாள் பொறுமையாக டீயை குடித்து முடித்துக் கொண்டுவந்திருந்த பையை அவளிடம் நீட்டினார் ராக்காயி.
“என்னத்த” என்றவள் அதை வாங்கி திறந்து பார்க்க அவளின் நகைகள் அவள் கணவனிடம் அதைக் காண்பிக்க சிரித்துக்கொண்டான்.
“நான்தானே வாங்கினேன் என் கையாலே குடுத்தாதான் வாங்கிப்பேன்னு உனக்கு வீம்பு அதான் நானே கொண்டுவந்தேன்” என்றார் அப்பொழுதும் கொட்டு வைத்து அதற்க்கு அவள் பதில் ஒன்றும் சொல்லவில்லை, பேசப் பேச வளர்ந்துகொண்டே போகும் அவள் அமைதியாகிவிட்டாள்.
“காலையிலே என் பொண்டாட்டியை குத்திபேசத்தான் இவ்ளோ தூரம் வாந்தியாம்மா” என்றான் சிரித்துக்கொண்டே.
“ஆமா ஆமா உன் பொண்டாட்டியை பேசுறாங்க அப்படியே பேசவிட்டுதான் நீ அடுத்த வேலை பாப்ப” என்று நொடித்தவர் “உனக்கு மூத்தவ வீட்டுக்குப் போய் மூணு மாசம் ஆச்சு கூட்டிட்டு வரலாம்னு இப்போதான் பெரியவன்கிட்ட பேசினேன், நாளைக்கு நாள் நல்லா இருக்கு கூட்டிட்டு வந்திடலாம் அப்புறம் வளைகாப்பு முடிஞ்சு போகட்டும் கொஞ்ச நாள் ராஜியையும் கொண்டு வந்து வெச்சு பாத்துக்கணும் புள்ள ரொம்ப வர்ஷம் கழிஞ்சு உண்டாயிருக்கா, உங்க தனிக்குடித்தனத்தை முடிச்சிகிட்டு நாளைக்கே வீட்டுக்கு வந்து சேருங்க” என்றார் ராக்காயி.
கையில் இருந்த பையை அழுத்தமாகப் பற்றினாள் கனகம், அவர் நடந்துகொண்டதிற்கு வருத்தமோ மகனை வெளியில் போகச் சொன்னதிற்கு சங்கடப்பட்டு ஒரு வார்த்தையோ பேசவில்லை வர முடியாது என்று சொல்லும் அளவுக்கெல்லாம் அவளுக்குச் சுதந்திரம் இல்லை சென்றுதான் ஆக வேண்டும்.
‘இதற்குமேல் ஒரு மாமியார் இறங்கிவர வேண்டுமா? உனக்கு என்ன அப்படியொரு ஆணவம்’ என்று அவள் தாயே அவளைச் சாடுவார் ஆனால் அவள் கணவனுக்கு அதெல்லாம் இல்லை போல.
“இப்போ வர முடியாது” என்றான் திடமாக அவள் சட்டென்று அதிர்ச்சியோடு அவனைத் திரும்பிப் பார்த்தாள், என்ன சொல்கிறான் இவன் ஐயோ இதுவும் என்மீது தானே விழும் என்று பதட்டத்தோடு.
அவள் பயத்தோடு மாமியாரையும் திரும்பிப் பார்க்க “ஏன் வர முடியாது” என்றார் அவர்.
“நீங்க நினச்சா வெளில போச்சொல்வீங்க நினச்சா கிளம்பிவா சொல்லுவீங்க அதுக்கெல்லாம் நான் ஆள் இல்லை, வந்துட்டேன் இனிமே என் சபதம் என்னைக்கு நிறைவேறுதோ அன்னைக்கு தான் அந்த வீட்டுக்கு வருவேன்”.
“என் பேச்சை மீறி உன் மாமியார் கூப்பிட்டாங்கன்னு அவங்க கூடப் போன நீ அங்கேயே இருந்துக்க வேண்டியதுதான் திரும்பி இங்க வரக் கூடாது” என்றான் முறைக்க முடியாமல் கஷ்ட்டப்பட்டு மனைவியைப் பார்த்து முறைத்து.
“பயபுள்ள பொண்டாட்டியை எப்படி காப்பாத்துது பாரு” என்று கனகசபை மகனைக் கிண்டலாகப் பார்த்திருந்தார், அவளுக்குச் சிரிப்பு வரப் பார்த்தது அடக்கிக்கொண்டாள்.
அவனை முறைத்த ராக்காயி “என்னடா நினைச்சிட்டு இருக்க நான் சொன்னாதாலதான் வெளில போனதா சொன்ன அதான் நானே வந்து கூப்பிடுறேனே இன்னும் என்ன உனக்குக் கொழுப்பு கூடிப்போச்சா” என்றார்.
“திட்டும்போது அப்படி திட்டின கூப்பிடும்போது சாதாரணமா வந்து வான்னு சொல்ற நான் இன்னும் கோவமாதான் இருக்கேன் வரமாட்டேன்” என்றான்.
ஏதோ சொல்லப்போன மனைவியின் கையைப் பிடித்துத் தடுத்த கனகசபை மனைவியின் காதில் ஏதோ கூற சிலநொடிகள் யோசித்தவர் “நடத்துடா நடத்து உன் திருட்டுத்தனம் எம்புட்டு நாளைக்குன்னு நானும் பாக்குறேன்” என்றவர் மருமகளை பார்த்து “இந்தாடியம்மா உன் புருஷன் தாளத்துக்குத் துள்ளிக்கிட்டு இருக்காம சட்டுபுட்டுன்னு பிள்ளையை வாங்கிக்கிற வழியப்பாரு” என்று எழுந்துகொண்டார்.
“அத்த ஒருநிமிஷம்” என்றவள் நகை பையை அவரிடமே திருப்பிக் கொடுத்தாள்.
“ஏண்டி” என்றார் அவர்.
“உங்ககிட்டவே இருக்கட்டும் அத்த, நானும் அடிக்கடி வெளில போய்டுவேன் அங்கன்னா வீட்ல எப்போவும் யாரவது இருப்பீங்க நீங்களே வெச்சிருங்க” என்றாள்.
“அதுவும் சரிதான்… தாலிக்கொடி மட்டும் போட்டுட்டு போற கழுத்துக்கு ஒரு சங்கிலியும் ரெண்டு வளையலும் எடுத்துக்கோ மிச்சத்தை நான் கொண்டு போறேன், விசேஷத்துக்குப் போகும்போது அங்க வந்து வாங்கிக்கோ அதுக்காவது உன் பொண்டாட்டி வரலாமா இல்ல வாசல்லதான் நிப்பீங்களா” என்றார் மகனிடம்.
“வருவோம்மா” என்றான் சிரித்துக்கொண்டே அவர்களும் விடைபெற்றனர்.
“ஏங்க அப்படி சொன்னீங்க அவங்களுக்கு நிச்சயமா கோவம் இருக்கும்” என்றாள் கனகம் கணவனிடம்.
“இருக்கும் ஆனா இப்போ புரிஞ்சிக்கிட்டுதான் போய்யிருக்காங்க தனியா வந்துட்டோம் கொஞ்ச நாள் அப்படியே இருக்கட்டும்… பக்கத்துல இருக்கும்போது தெரியாத பலதும் விலகி இருக்கும்போது புரியும், இப்போ அண்ணி வந்திடுவாங்க அக்காவையும் கூட்டிட்டு வருவாங்க நிச்சயமா அங்க வேலைக்கு ஆள் தேவை இருக்கு அப்படியொரு தேவைக்கு உன்னைக் கூட்டிட்டு போறதுல எனக்கு விருப்பமில்ல”.
“அம்மா குணத்துக்கு இதுக்கு மேலெல்லாம் அவங்க இறங்கி வந்து பேசமாட்டாங்க, நாம அங்க வரணும்னு ஆசைப்படுறாங்க கண்டிப்ப்பா போவோம் இப்படியே தனியா இருக்குறதெல்லாம் கொஞ்ச நாளைக்குத்தான் நம்ம வேர் அங்கதான், ஆனா இப்போ போகப்போறதில்லை அன்னிக்கு குழந்தை பிறந்து பாப்பாவோட நம்ம வீட்டுக்கு வரட்டும் நாமளும் நம்ம வீட்டுக்குப் போய்டலாம்”.
“நாளைக்கு அண்ணியை கூட்டிட்டு வந்திடுவாங்க உனக்கு எப்போ வேணும்னாலும் அங்க போப்பாரு ஏதாவது உதவி செய்றியா செய் இங்கேயிருந்து சமைச்சு கொண்டுபோறியா போ ஆனா அங்கேயே நாள் பூரா வேலை செஞ்சுகிட்டு கிடக்காத புரிஞ்சுதா” என்றவனை அத்தனை காதலோடு அணைத்துக்கொண்டாள் கனகாம்பரம்.
மறுநாள் பழனிசாமி செல்லியம்மா தம்பதியே மகளைப் புகுந்த வீடு கொண்டு வந்து விட்டுச் சென்றனர், கணவன் சொன்னதுபோலவே புகுந்த வீட்டிற்கு தினமும் போய் வந்தாள் கனகம் செவ்வந்திக்கு அவள் வந்து செல்வதே அத்தனை நிம்மதியை தந்தது.
யோககுமாரனிடம் எந்த மாற்றமும் இல்லை மனைவி வந்தபிறகு குழந்தைக்காக அவளிடம் உணவு உறக்கம் மருந்து மாத்திரைபற்றிப் பேசுவான் அவ்வளவே, செவ்வந்திக்கு ஒரு விதத்தில் இதுவே பழவிட்டது பிறந்தவீட்டிற்கும் கனகம் போய் வருவாள் தந்தைக்கு கடையில் உதவி செய்வாள்.
அவள் விஷயத்தில் அவள் எப்பொழுதும் போலவே இருந்தாள் செல்லியம்மா இப்பொழுதும் மகளை வசைபாடுவார் அதையெல்லாம் அவள் கண்டுகொள்வதில்லை, மாமியாரின் சில பேச்சுக்களையும் அவள் கண்டுகொள்வதில்லை கொண்டவன் துணை இருக்க மற்றதெல்லாம் தூசியாகி போனது பெண்ணிற்கு.
வளைகாப்பிற்க்கான நாளைக் குறித்துவிட்டனர் மகளும் கர்ப்பமாக இருக்க அவளை வளைகாப்பிற்கு அழைத்துவரமாட்டார்கள் என்றாலும் மாப்பிளை வீட்டிற்கு அழைப்பு கொடுக்க வேண்டுமே மாணிக்கம் திருப்பிக் கொடுத்த நகைகளை வைத்துக்கொண்டு என்ன செய்ய என்ற யோசனையில் அமர்ந்துவிட்டார் ராக்காயி.
அவரின் கவலை அறிந்த கனகம் அன்றிரவு கணவனிடம் அதைப் பற்றிக் கூறினாள் மறுநாள் மனைவியுடன் தங்கள் வீட்டிற்கு வந்தான் ராஜகுமாரன்.
“அம்மா நான் சொல்றத பொறுமையா கேளுங்க, மாமா வேண்டாம்னு குடுத்த பன்னெண்டு பவுனையும் அம்மன் கோவில் உண்டியல்ல போட்டுடுங்க” என்க.
“உனக்கு என்ன பைத்தியமா… என்ன பேசுற ஒண்ணா ரெண்டா பன்னெண்டு பவுனு” என்றார் ராக்காயி ஆத்திரமாக.
“இதுக்குதான் பொறுமையா கேளுங்க சொன்னேன் அது நமக்கு வேண்டாம் அதுக்கு உரிமை பட்டவங்க கண்ணீர் சாபம் எல்லாம் அதுல இருக்கும் செஞ்ச பாவத்துல கொஞ்சமாவது தீர்ந்து போகட்டும் நல்ல மனசோட அதைக் கோவில்ல குடுத்துடுங்க அக்காவுக்குக் குடுக்க வேண்டிய தங்கத்துக்கு நானும் யோகனும் பொறுப்பு ஆளுக்கு ஆறு பவுனுக்கு காசு கொடுக்குறோம்” என்றான் அண்ணனைப் பார்த்துக்கொண்டே.
சில நொடிகள் ராஜகுமாரன் முதல் நாள் இரவே கனகத்திடம் இதைப் பற்றிப் பேசி அவளின் சம்மதத்தையும் வாங்கியிருந்தான் அதன் பிறகே சபையில் அதைப் பற்றிப் பேசியது என்றால் அவனின் அண்ணன் மனைவி என்றொருவள் அங்கே நிற்பதை கூடக் கணக்கில் எடுக்காமல் அவனே முடிவு செய்து சம்மதம் சொல்லிவிட்டான்.
அண்ணனைக் கூர்மையாகப் பார்த்த ராஜகுமாரன் “உனக்குக் கல்யாணம் ஆயிடுச்சு… எந்த முடிவையும் எடுக்குறதுக்கு முன்னாடி நம்மளோட சரிபாதிக்கிட்ட ஒரு வார்த்தை கேட்டுக்கணும் கடைசிவரைக்கும் அவங்கதான் நம்ம கூட வரணும்”.
“எல்லாம் எனக்குத் தெரியும்னு சர்வாதிகாரியா இல்லாம அவங்களையும் கொஞ்சம் மதிக்கப் பாரு, சரின்னு சொல்றதுக்கு முன்ன அண்ணிகிட்ட கேட்டியா” என்க.
“ஐயோ தம்பி நான் என்ன சொல்லப் போறேன்” என்று பதறினாள் செவ்வந்தி.
“நீங்கச் சொல்லணும் அண்ணி, குடு குடுக்காதான்னு சொல்லப் பொண்டாட்டிக்கு எல்லா உரிமையும் இருக்கு புருஷனோட வருமானம் என்ன சேமிப்பு என்ன அவங்க கூடப்பொறந்தவங்களுக்கு இவ்ளோ செஞ்சா சமாளிக்க முடியுமா கடனா இருந்தா அடைக்க முடியுமா இது தேவையா இப்படி எல்லாத்தயும் ஒரு பொண்டாட்டி யோசிக்கணும், நல்ல புத்திமதிகளை புருஷனுக்கு சொல்லணும்”.
“ஒரு நல்ல மனைவி நம்பகமான ஒரு நல்ல மந்திரிக்குச் சமம் உங்க உரிமையை விட்டுக் கொடுக்காதீங்க, நீங்க இறங்கி இறங்கி போனா மிதிச்சுக்கிட்டேதான் இருப்பாங்க” என்றவன் அண்ணிகிட்ட பேசிட்டு சாய்ந்திரமா எனக்குச் சொல்லு, பேசிட்டு சொல்லு… பேசணும்” என்றவன்.
“என்னைக்கு கோவில் போகலாம் என்னைக்கு நகை எடுக்கப் போகலாம் எல்லாம் யோசிச்சு வைங்க சாயந்திரம் வரேன்” என்று வேலைக்குக் கிளம்பிவிட்டான்.
தன்னை பார்ப்பதும் வேலை பார்ப்பதுமாக இருந்த செவ்வந்தியை இடை இடையே கவனித்துக்கொண்டிருந்த யோகன் “உள்ள வா” என்றுவிட்டு அறைக்குள் நுழைந்தான், கனகத்தை திரும்பிப் பார்த்தாள் செவ்வந்தி “போக்கா போய்ப் பேசு” என்று அவளை அனுப்பி வைத்த கனகம் சிரித்துக்கொண்டாள்.
சொன்னால் கேட்டுக்கொள்கிறான் அவனாக எதையும் யோசித்து செய்ய முயல்வதில்லை என்ன டிசைன் இது என்று எண்ணிக்கொண்டாள் அவள், என்னவோ மனதேயில்லை ராக்காயிக்கு என்றாலும் மகனின் பிடிவாதம் ஜெயிக்க என் பிள்ளைகளை நன்றாக வைத்திரு என்ற வேண்டுதலோடு அந்த நகையை உண்டியலில் போட்டுவிட்டார், கோவிலிலும் தகவல் சொல்லிவிட்டார்கள்.
வெள்ளிக்கிழமை சென்று புது நகையை எடுத்துக்கொண்டனர் பத்திரிகை வைக்க மகளின் புகுந்த வீடு சென்றவர்கள் கையில் மகளுக்கான நகையும் இருந்தது மாணிக்கம் வருந்தினான்.
“எனக்கு இதெல்லாம் வேணாம் நீங்க அந்தப் பிள்ளைங்ககிட்ட அப்படி நடந்துகிட்டீங்க அது உங்களுக்குப் புரியணும்னு தான் நான் அப்படி நடந்துக்கிட்டேன் இப்போ என்னால மச்சான்களுக்கு கஷ்டம்” என்று வாங்க மறுத்தான்.
“உண்மையிலேயே எங்களுக்கு மனசு இப்போ நிம்மதியா இருக்கு மாப்ள, நாரதர் கலகம் நண்மைல முடியற மாதிரி ஒரு பிரச்சனை ஆரம்பிச்சு தப்பு எல்லாம் சரி ஆகி வந்திருக்கு உங்களுக்கு உரிமை பட்டதுதான் இது எங்களுக்காக வாங்கிக்கோங்க” என்றார் கனகசபை மாமனார் யேசியே இப்பொழுதுதான் பார்க்கிறான் மாணிக்கம்.
“யோவ் மாமா என்ன எங்க உறவு வேண்டாமா உனக்கு, ரொம்ப வீம்பு புடிக்குற” என்று வந்துவிட்டான் ராஜகுமாரன் எப்படியோ உறவுகளுக்குள் சிக்கல் முடிவுக்கு வந்துவிட்டது, ராஜலக்ஷ்மிக்கு மனமே நிறைந்துவிட்டது.
கணவன் அதையும் சொல்லியிருந்தான் “பாத்தியா வாழ வந்த பொண்ணுங்க நல்லவங்களா இருந்ததாலதான் உனக்கு உன் தம்பிங்களால இவ்ளோ செய்ய முடிஞ்சது இல்லனா அந்தப் பிள்ளைங்க பிரச்சனையை ஆரம்பிச்சு வெச்ச உனக்குச் செய்ய விட்டிருப்பங்களா”.
“யாருமே விடமாட்டாங்க தம்பிங்களோட உறவு வேணும்னா அவங்க பொண்டாட்டிங்கள அரவணைச்சுக்க கத்துக்கோ” என்று பாடம் எடுத்திருந்தான், அவளுக்குத்தான் இதெல்லாம் என்றோ புரிந்துவிட்டதே.
உறவுகள் ஒன்றுகூடிச் செவ்வந்தியின் வளைக்காப்பை சிறப்பாக நடத்தி முடித்து அவளைப் பிறந்து வீடு அனுப்பி வைத்தனர், செவ்வந்திக்கு நாள் நெருங்க நெருங்கப் பயமும் கலக்கமும் சூழ்ந்ததது கணவனுக்குக் குறை இல்லாத பிள்ளை வேண்டுமாம் ஒருவேளை ஏதேனும் குறையோடு பிறந்துவிட்டால் என்ன செய்வது என்ற எண்ணமே அவள் நிம்மதியை பறித்தது.
கனகம் எவ்வளவோ எடுத்துக்கூறியும் அவளுக்குப் பயம் மட்டும் போகவில்லை, யோகராஜன் செவ்வந்தி தம்பதிக்கு மகள் பிறந்திருந்தாள் முதலில் குழந்தையைக் கனகமே கையில் ஏந்தினாள் பிள்ளையைப் பார்க்கவந்த தந்தை குறை ஏதேனும் இருக்கிறதா என்றுதான் முதலில் ஆராய்ந்தான், தலையில் அடித்துக்கொண்டான் தம்பி.
மெல்ல மெல்லவே குழந்தைக்குத் தாயை போலவே மாறுகண் என்பது தெரிந்தது கடு கடுவென்று முகத்தை வைத்துக்கொண்டான் கணவன், அவனுக்குப் பயந்து தன் விதியை நொந்து கண்ணீர் வடித்தாள் செவ்வந்தி.
அவள் பிள்ளையோடு புகுந்த வீடு வந்துவிட்டாள் பிள்ளைக்கு ஐந்தாம் மாதம் முடியும் தருவாய் அன்று மாலை வேலைமுடிந்து சீக்கிரமே வந்திருந்தான் ராஜா, யோகன் மனைவியிடம் பேசுவதில்லை அவளும் பிள்ளை மட்டுமே இனி வாழ்வு என்பதை போல வீட்டு வேலை குழந்தை என்று தன்னை சுருக்கிக்கொண்டாள்.
குழந்தைக்கு நர்மதா என்று பெயர் சூட்டியிருந்தனர், சித்தப்பன் அண்ணன் மகளைத் தூக்கிக்கொண்டு வவேற்பறையின் தூணில் சாய்ந்து அமர்ந்துகொண்டான், அரைமணி நேரம் சென்று பிள்ளை பசிக்கு அழ ஆரம்பித்தது செவ்வந்தி வேகமாகப் பிள்ளையைத் தூக்க அவன் அருகில் வரக் கை நீட்டி அவளைத் தடுத்தான் ராஜா.
“உங்களுக்கு இனிமே இந்தப் பிள்ளை கிடையாது” என்றான் அவள் அதிர்ந்து விழித்தாள்.
“என்ன சொல்றீங்க” என்றாள் அதிர்ச்சி மாறாமல், அதற்குள் குழந்தையின் அழுகை சத்தம் அந்த வீட்டினர் அனைவரையும் அங்குக் கூட்டிவந்தது.
“ராஜா குழந்தையைக் குடு அவகிட்ட” என்றான் யோகன்.
“நீ யாரு அதைச் சொல்ல” என்றான் தம்பி.
“என்னடா பேசுற கிறுக்கு பிடிச்சிருக்கா உனக்கு” என்றார் ராக்காயி.
“கிறுக்கு எனக்கில்லை இந்த வீட்டில இருக்குற உங்க எல்லாருக்கும் பிடிச்சிருக்கு முக்கியமா உன் மூத்த பிள்ளைக்கும் அவங்க பொண்டாட்டிக்கும்” என்றவன் குழந்தையின் அழுகை உச்சத்தை தொட “கனகம்” என்றான் சத்தமாக.
வந்தவள் கையில் பால் பாட்டில் அனைவரும் அவளை வித்தியாசமாகப் பார்க்க நர்மதாவை கணவனிடமிருந்து வாங்கிக்கொண்டு தோட்டத்திற்கு சென்றாள்.
“தாய் பால் குடிக்கிற பிள்ளைடா அது அம்மாக்காரி குத்துக்கல்லு மாதிரி இருக்கும்போது புட்டிபால் எதுக்குடா, என்னடா பண்றீங்க புருஷனும் பொண்டாட்டியும்” என்றார் ராக்காயி மீண்டும், செவ்வந்தி பரிதவிப்போடு பிள்ளையின் பின் செல்லப் பார்க்க “நில்லுங்க” என்றான் அதட்டலாக ராஜகுமாரன்.
“ஒரு அடி நகரக் கூடாது நீங்க” என்று அண்ணியிடம் காய்ந்தவன் “மனுஷனா நீ உன்கிட்ட குறை இருந்ததுன்னு எல்லாரும் உன்னை ஒதுக்கி வெச்சாங்கன்னு ஏழு கழுதை வயசானப்பறமும் புலம்புனியே அது பச்சை மண்ணு… உன் ரத்தம் அந்தக் குழந்தையை நீ எப்படி தாங்கியிருக்கனும்”.
“பிள்ளை அப்படி பொறந்ததுல சாருக்கு ரொம்ப ஏமாற்றமோ… நீயெல்லாம் எதுக்குடா கல்யாணம் செஞ்சுக்கிட்ட சன்யாசம் வாங்கி போயிருக்க வேண்டியதுதானே, கல்யாணம் குழந்தைன்னு ஒரு கட்டமைப்புக்குள்ள வந்தப்புறம் உன் குடும்பத்தான் உனக்கு முக்கியமா இருக்கணும்”.
“என் பொண்டாட்டி என் பிள்ளைன்னு நீ அவங்களுக்கு நின்னிருக்கணும், ஊரே உன் பிள்ளையைச் சீண்டினாலும் கிண்டல் பண்ணினாலும்… நீ தலை நிமிர்ந்து முன்னாடி போடா அப்பா இருக்கேன் உன் பின்னாடின்னு உன் பிள்ளைக்கு நீ தன்னம்பிக்கை குடுத்திருக்கணும்”.
“உனக்கோ அண்ணிக்கோ இருக்குற பிரச்சனை எப்படி நீங்க விரும்பி வாங்கிட்டு வரலையோ அதே மாதிரிதான் இந்தக் குழந்தையும் அதை விரும்பிக் கேட்டு வாங்கிட்டு வரல, கை இல்லாம கால் இல்லாம கண்ணே இல்லாம பெரிய பெரிய பிரச்னைகளோட எத்தனையோ குழந்தைகள் இந்தப் பூமியில பிறக்குது”.
“உன்னைமாதிரி ஒன்னு ரெண்டு பேர் தூக்கி போட்டுட்டு போறான் ஆனா நல்ல அப்பனா இருந்தா முதல்ல நல்ல மனுஷனா இருந்தா தன் ரத்தத்தை தூக்கி போடமாட்டான், வெளில போய்ப் பாரு தன் பிள்ளை உயிரைக் காப்பாத்த பிச்சை எடுக்குறாங்க நாடு விட்டு நாடு போய்த் தவம் கிடக்குறாங்க”.
“மனவளர்ச்சி குன்றி பிறந்த பிள்ளையை இருபது வயசுலயும் கைக்குழந்தை மாதிரி தூக்கிட்டு திரியுறாங்க இந்த உலகத்துல எத்தனையோ அப்பன் ஆத்தா எப்படியெல்லாமோ கஷ்டப்பட்டு தன் பிள்ளைகளை வளக்குறாங்க ஆனா நீங்க இந்தச் சின்ன விஷயத்துக்கு ஆளுக்கு ஒருபக்கம் அடைஞ்சு கிடக்குறீங்க”.
“நீங்க அப்பா அம்மாவா? அவன்தான் அப்படி இருக்கான்னா நீங்க ஏன் அண்ணி இப்படி? உங்க குழந்தைக்காகக் கூடப் பேசமாட்டீங்களா அதோட உரிமையைக் கூடக் கேக்க மாட்டீங்களா, உங்களை மாதிரியே ஒரு அடிமையாதான் அவளையும் வளக்க போறீங்களா…”.
“இப்படியொரு அப்பா அம்மா அவளுக்கு வேண்டாம், உங்களுக்குப் போய்ப் பிள்ளை வரம் குடுத்துச்சே அந்தச் சாமியைச் சொல்லணும் ஒரு குழந்தைக்காக இன்னும் எத்தனை பொண்ணுங்க மண் சோறு சாப்பிட்டுட்டு இருக்காங்க உங்களுக்கு ஈஸியா கிடைச்சிடுச்சுல்ல அதான் ஈஸியா போய்டுச்சு”.
“அவளை எப்படி வளக்கணும்னு எனக்குத் தெரியும் பிள்ளை மேல கையை வெச்சீங்க வெட்டு குத்து ஆகிப்போவும் சொல்லிட்டேன், வேண்டாத பிள்ளை உங்களுக்கு எதுக்கு நீ ரூமுக்குள்ள போய் அடஞ்சிக்கோ நீக்க அடுப்படிக்குள்ள ஒளிஞ்சிக்கோங்க” என்றவன் “கனகம்” என்று சத்தம் கொடுக்க அவள் குழந்தையைத் தூக்கிக்கொண்டு வந்துவிட்டாள்.
இருவரும் பிள்ளையைத் தூக்கிக்கொண்டு அவர்கள் வீட்டிற்கு சென்றுவிட்டனர் இன்னும் அவர்கள் இந்த வீட்டிற்கு வந்திருக்கவில்லை, ராஜிக்கு மீண்டும் மகன் பிறந்திருந்தான் மூன்று மாதம் ஆகிறது அவளும் அங்குதான் இருந்தாள், மனைவியையும் குழந்தையையும் பார்க்க வந்திருந்த மாணிக்கமும் அங்குதான் இருந்தான்.
செவ்வந்தி அப்படியே மடிந்து அமர்ந்து அழத் தொடங்க “என்ன நினைச்சிட்டு இருக்கான் இவன், என் பிள்ளையை இவன் எப்படி தூக்கிட்டு போலாம்” என்று யோகன் குதிக்க தொடங்க.
“நிறுத்துடா” என்றார் ராக்காயி.
“உன் பிள்ளையா அதை ஒழுங்கா உன் கையில தூக்கி வெச்சிருக்கியா அதுக்கு என்ன மருந்து கொடுக்குறாங்க எப்போ டாக்டர்கிட்ட போகணும் என்ன சொன்னாங்க ஏதாவது தெரியுமா உனக்கு, எல்லாமே உன் தம்பி பொண்டாட்டிதான் பாத்துக்கிட்டா”.
“உன் பொண்டாட்டி ஒரு கூறு கெட்டவ வடக்கால போகச் சொன்னா தெக்கால போறவ அவகிட்ட விட்டுட்டு எனக்கென்னன்னு இருந்தவன் தானே நீ, இப்போ என்னமோ என் புள்ளன்னு துள்ளிக்கிட்டு வர”.
“உன்னைய நான் சரியா பாத்துக்கலைன்னுதானே இப்போவாரைக்கும் சொல்லிக்கிட்டு திரியுற, நீ உன் பிள்ளையை ஒழுங்கா பாத்துக்கிட்டியா என்னய பேசுறதுக்கு உனக்கு என்ன தகுதி இருக்கு, நான் ஒத்த பொம்பளையா நின்னு மூணு பேரை வளத்தேண்டா உன் பிள்ளை முகத்தை ஒழுங்கா பாத்திருக்கியா நீ பொசக்கெட்ட பயலே” என்று வைத்து விளாசிவிட்டார்.
கனகசபை ஒருபக்கம் பேச அவன் அருகில் வந்த மாணிக்கம் “ஏன் மச்சான் உனக்குப் பிறந்த பிள்ளையவே உன்னால ஏத்துக்க முடியல நீ எப்படி மத்தவங்க உன்னை ஏத்துக்கிட்டு உன்னை மதிக்கணும்னு எதிர்பார்த்த, பெத்த தகப்பன் நீ கொடுக்காத எந்த அங்கீகாரத்தை இந்த உலகம் அந்தப் பிள்ளைக்குக் குடுக்க போகுது நீங்கல்லாம் ஏன்யா பிள்ளை பெத்து அதுங்க வாழ்க்கையை கெடுக்குறீங்க” என்றான் காட்டமாக.
யோகன் அமைதியாகிவிட்டான் அப்படியே இறுகி நின்றான், செவ்வந்தி விழிகளைத் துடைத்து எழுந்தாள் மாரில் பால் கட்டி நின்றது வலித்தது அதைவிட மனம் வலித்தது.
கணவனை ஒரு நொடி பார்த்தவள் “எனக்கு என் பிள்ளை வேணும் உங்களுக்கு வேண்டாம்னா நீங்க வர வேண்டாம், பிடிச்ச மாதிரி வாழ்ந்துக்கோங்க இனிமே நான் என் பிள்ளைக்காக வாழ்ந்துக்குறேன்” என்றவள் விறு விறுவென்று வெளியேறி நடந்தாள் தங்கையின் வீடு நோக்கி.
error: Content is protected !!