Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

03. சிவயாழினி - மௌனமாய் ஒரு மோகனம்

மெளனம் 08

சரவணனும் வசீகரனும் கல்லூரியின் முதல்வரிடம் பேசிக் கொண்டிருந்தனர்.
“மிஸ்டர் வசீகரன், வெளிநாட்டுல போய் படிச்சுட்டு வந்திருக்கீங்க. நம்ம காலேஜ்ல பிடெக் சிவில் இன்ஜினியரிங் ஸ்டுடென்ட்க்கு உங்களோட நாலேட்ஜ ஷேர் பண்ணிக்கிட்டா நல்லா இருக்கும் இல்ல”


Advertisement

“நீங்க சொல்றது கரெக்ட் தான் சார், ஆனா எனக்கு பிசினஸ்ல தான் இன்ட்ரஸ்ட். நான் அதுக்கான வேலைல இருக்கேன்”
“இருக்கட்டுமே, ஒருத்தர் ஒரு வேலைதான் செய்யணும்னு இருக்கா என்ன? கெஸ்ட் புரபசரா நேரம் கிடைக்கும் போது ஒரு மணிநேரமோ ரெண்டு மணிநேரமோ பாடம் எடுத்துட்டு போகலாமே”

Advertisement

Advertisement

வசீகரன் யோசித்து கொண்டிருக்கும் போது சரவணனின் கைப்பேசி விடாமல் அடித்துக் கொண்டிருக்கவும், “வசி பேசிட்டு இருடா. போன் கட் பண்ணா கூட லதா போன் பண்ணிட்டே இருக்கா. என்னனு கேட்டுட்டு வந்துடறேன்” என்று வெளியே சென்றான்.
ஐந்து நிமிடங்களில் திரும்பிய சரவணன் உள்ளே எட்டி பார்த்து, “வசி, கொஞ்சம் வெளியே வா, பேசணும்” என்று அழைக்க, “எக்ஸ்யூஸ்மீ சார், இதோ வந்திடறேன்” என்று சொல்லி வெளியே சென்றான்.

Advertisement

“என்ன விசயம் சரணவனா?”
“டேய் வசி என்னடா பண்ணி வச்சிருக்கே? நீதான் வேண்டாக்கு டிரஸ் எடுத்து கொடுத்தியாமே உண்மையா?”
“அண்ணி பாஸ்ட்னு நினைச்சேனே, இதையே இப்ப தான் உனக்கு சொல்றாங்களா?”
“டேய் விளையாடதடா. அவளுக்கே அம்மா தான் சொன்னாங்களாம். இந்த விஷயத்தை உங்கம்மா ஹால்ல வச்சு கேள்வி கேக்காம அவள ரூமுக்குள்ள தனியா கூட்டிட்டு போய் ரொம்ப நேரம் பேசிட்டு இருக்காங்கனு சொல்றா”
‘புள்ளையும் கிள்ளிட்டு தொட்டிலையும் ஆட்றாங்களாக்கும்’ என்று வசி மனதிற்குள் நினைத்துக் கொண்டான்
“எனக்கு நல்லா தெரியும் நீ தான் அந்த பொண்ணை ஆரம்பத்துல இருந்தே வம்பிழுத்துட்டு இருக்கே. நானும் தம்பியாச்சே இதெல்லாம் எப்படி கேக்கறது, அப்படியே கேட்டாலும் நீமட்டும் லவ் பண்ணலயானு கேப்பியோனு அமைதியா இருந்தேன். என் விஷயத்துல லதா பெரிய இடம் அதனால வீட்ல பெரிசா பிரச்சனையில்ல, ஆனா சின்னபொண்ணு விஷயம் அப்படியில்ல. பாவம்டா அவ, அவளே படிக்கணும்னு ஊரவிட்டு வந்து நம்ம வீட்ல வேலை செஞ்சுட்டு இருக்கா, உன்னால இப்போ அம்மா அவளை வெளியே அனுப்பிட்டா என்னடா பண்ணுவா அவ?”
“இது நடக்கணும்னு தான் எல்லாருக்கும் தெரியற மாதிரி நடந்துக்கிட்டேன். ஆனா இவ்வளவு சீக்கிரம் நடக்கும்னு எதிர்பார்க்கல. டைமிங் மிஸ் ஆயிடுச்சு. நான் நினைச்ச மாதிரி இல்ல. அண்ணி ரொம்ப பாஸ்ட்டா தான் இருக்காங்க”
“இதுல லதாவ ஏன்டா இழுக்கறே? எது நடக்கணும்னு நினைச்சே? அந்த பொண்ணை வீட்ட விட்டு துரத்தணும்னா? என்னடா பேசற? ஒண்ணுமே புரியல” சரவணன் தலையை பிடித்துக் கொண்டான்.
“வீட்ட விட்டு துரத்தனும்னு நினைக்கலடா. நீ அவள கேர் டேக்கரா தானே வீட்டுக்கு கூட்டிட்டு வந்தே? ஆனா அம்மாவும் அண்ணியும் அவள கீழ்தரமா நடத்தறாங்க. அவ்வளவு கூனிகுறுகி அவ வேலைக்காரியா நம்ம வீட்ல இருக்க வேணாம்னு நினைச்சேன்”
“அதுக்கு அவ பேரை கெடுத்து தான் வெளியே அனுப்பனுமாடா? நீ கொஞ்சம் அடக்கி வாசிச்சிருக்க கூடாதா?”
“சரவணா உனக்கு இதெல்லாம் இப்போ சொன்னா புரியாதுடா. நேரம் வரும்போது சொல்றேன். அம்மா அவள அசிங்கப்படுத்தறதுக்குள்ள நான் போய் அவள காப்பாத்தணும்”
“நானும் உன் கூடவே வரேன்”
இருவரும் காரில் கிளம்பினார்கள். வசீகரன் காரில் செல்லும்போதே கல்லூரி முதல்வருக்கு போன் செய்தான்.
“சாரி சார், ஒரு அவசர வேலையா வீட்டுக்கு கிளம்ப வேண்டியதா போயிடுச்சு. நீங்க சொன்னத நான் ஏத்துக்கறேன். ஐ மீன் கெஸ்ட் புரபசரா தினம் ரெண்டு மணிநேரம் உங்க காலேஜ்ல வொர்க் பண்றேன்”
“வாவ், தேங்க்யூ மிஸ்டர் வசீகரன்”
“ஆனா, நீங்க எனக்கொரு பேவர் பண்ணனும்”
“என்னனு சொல்லுங்க பண்ணிடலாம்”
“உங்க காலேஜ்ல படிக்கிற ஏழை பொண்ணுக்கு அவ படிச்சு முடிக்கற வரைக்கும் ஹாஸ்டல்ல தங்கறதுக்கும் சாப்பிடறதுக்கும் சலுகை கொடுக்கணும். அதுக்கு பதிலா எனக்கு புரபசர் பீஸ் எதுவும் நீங்க தரவேணாம்”
“சரிங்க வசீகரன். நான் ஸ்டுடென்ட் லிஸ்ட் பாத்து எந்த ஏழை பொண்ணுக்கு இந்த சலுகைய கொடுக்கலாம்னு பாக்க சொல்றேன்”
“அதுக்கு அவசியமில்ல, நானே சொல்றேன். அந்த பொண்ணு பேரு வேண்டாம் பொண்ணு. சரவணனோட கிளாஸ் ஸ்டுடென்ட்”
“உங்களுக்கு அந்த பொண்ண தெரிஞ்சிருக்கு, அவளுக்கு உதவி செய்யணும்னு நினைச்சா நீங்களே நேரடியா உதவி செய்யலாமே. எதுக்கு புரபசர் பீஸ் வாங்காம காலேஜ் மூலமா செய்யணும்?”
“பொதுவாவே யார் பணம் கொடுத்தாலும் அவ வாங்க மாட்டா. இனிமே நான் கொடுத்தேனு தெரிஞ்சா அந்த இடத்துல கூட இருக்க மாட்டா”
“புரியல”
“நீங்களே காலேஜ்ல மூலமா செலக்ட் பண்ணி அவளுக்கு உதவி பண்றதா நோட்டீஸ் போர்ட்ல போட்டுடுங்க. அவ பிரண்ட்ஸ் அவகிட்ட சொல்லிடுவாங்க, நான் செஞ்சதா அவளுக்கு தெரிய வேணாம்”
“சரிங்க வசீகரன், இப்பவே நோட்டீஸ் போர்ட்ல போட்டோவோட போட்டு ஸ்பெஷல் ஸ்காலர்ஷிப் அப்ரூவ் ஆயிருக்குனு ஒட்ட சொல்றேன்”
“தேங்க்யூ சார்”
சரவணன் வசீகரனை ஆச்சரியமாக பார்த்துக் கொண்டிருந்தான்.
“என்னடா பாக்கறே?”
“வேண்டாவ இந்தளவுக்கு புரிஞ்சு வச்சிருக்கியே, அவள லவ் பண்றீயா? எவ்வளவு நாளா அவள லவ் பண்றே?”
வசீகரன் வெற்று புன்னகையை மட்டும் பதிலாக தந்துவிட்டு வேகமாக காரை வீட்டை நோக்கி செலுத்தினான்.
********
அறைக்குள் சென்ற அலமேலு வெகுநேரம் சின்னபெண்ணிடம் பேசாமல் அவளை முறைத்துக் கொண்டிருந்தார்.
“என்னாச்சு மேடம், தனியா பேசணும்னு சொன்னீங்களே” தைரியத்தை வரவழைத்துக் கொண்டு மெல்லிய குரலில் கேட்டாள்.
“நான் உன்னை சின்ன பொண்ணுனு நினைச்சு வீட்டுக்குள்ள விட்டா நீ பெரிய வேலைய எல்லாம் செஞ்சுட்டு இருக்கே, இது இங்கே தான் வந்து முடியும்னு எனக்கு முன்னாடியே தெரியும்டி. நான் கட்டிக்கிட்ட மகராசன் தான் என்னென்னவோ சொல்லி என் வாயை அடைச்சிட்டாரு. இப்போ நான் நினைச்சது தான் நடந்திருக்கு” என்ற அலமேலு சின்னபொண்ணை ஏற இறங்க ஏளன பார்வை பார்த்தார். 
“நீங்க என்ன சொல்றீங்கனு எனக்கு புரியல மேடம்”
“புரியலயா? அப்பாவி மாதிரி மூஞ்ச வச்சிக்கிட்டு பேசினா என்கிட்ட உன் பருப்பு வேகாதுடி. நீ வரும்போதே திட்டத்தோட தான் வந்திருக்கே, சரியா பிளான் பண்ணி என்மகன் வரும்போது வீட்டுக்குள்ள நுழைஞ்சு அவனை உன் வலையில சிக்க வச்சிட்டே. உன்கிட்ட அப்படி என்ன இருக்குனு அவன் மயங்கினான்னு தான் தெரியல” என்றார் முகத்தை சுளித்து 
காதை பொத்திக்கொண்டு, “தயவு செஞ்சு கேவலமா பேசாதீங்க. நான் எந்த திட்டத்தோடயும் வரல. இன்னைக்கு வரைக்கும் உங்ககிட்ட கொடுத்த வாக்கை காப்பாத்தறதுக்காக என்கிட்டயே நான் போராடிட்டு இருக்கேன்”
“நீ, கொடுத்த வாக்கை காப்பாத்த போறீயா? என் மகன் வசி வாங்கி கொடுத்த துணிய போட்டுனு என் முன்னாடி நின்னுட்டு எப்படிடி உன்னால வாய் கூசாம பொய் பேச முடியுது?”
“உங்க மகன் வாங்கி கொடுத்ததா? இல்ல, லதா மேடம் தானே”
“ச்சீ வாயை மூடு. உனக்கு பதினைஞ்சு டிரஸ் எடுத்து கொடுக்கணும்னு லதாவுக்கு என்ன தலையெழுத்தா? இத்தனை பேரு வீட்ல இருக்கும் போதே நீ அவனை உன் வலைல சிக்க வச்சிருக்கேன்னா நீ கில்லாடி தாண்டி”
“இங்க பாருங்க வாய் இருக்குதுனு நீங்க பாட்டுக்கு பேசிட்டே போகாதீங்க. நான் இந்த வீட்ல வேலை செய்ய வந்தவ தான். என்னோட லிமிட் என்னனு எனக்கு நல்லாவே தெரியும். அதுக்காக நீங்க என்ன சொன்னாலும் அழுதுட்டு கண்ணை கசக்கிட்டு எல்லாம் போக மாட்டேன். ஏன்னா நான் என்வரைக்கும் சரியா தான் நடந்துட்டு இருக்கேன். அவர் என்னை சீண்டினா கூட நான் ஒதுங்கி தான் போய்ட்டு இருக்கேன். இந்த டிரஸ் எல்லாம் அவர் வாங்கி கொடுத்ததுனு நீங்க சொல்லி தான் எனக்கே தெரியும்”
“அப்போ இதெல்லாம் எதேச்சையா நடந்தது, எந்த திட்டமும் போட்டுட்டு வரலனு சொல்றீயா?”
“ஆமா”
“உன் பொட்டியில இருந்து இத எடுத்தேன், என்னனு பாரு” என்று அவள் பெட்டியிலிருந்து எடுத்த கவரை அவளிடம் நீட்டினார்.
“இந்த கவர் எப்படி உங்க கிட்ட?”
“பிரிச்சு பாரு, அப்புறம் பேசு”
தந்தை கொடுத்த கவரை இதுவரை பிரித்து பார்க்காமல் இப்படி ஒரு சூழ்நிலையில் பிரித்து பார்க்க நேரிடும் என்று அவள் கிஞ்சித்தும் நினைத்து பார்க்கவில்லை. கவரின் மீது இருந்த முத்துமாணிக்கத்தின் கையெழுத்தை மெல்ல வருடியவள் அதனுள் இருந்த புகைப்படத்தை எடுத்து பார்த்தாள்.
சரவணன் லதா திருமண கோலத்தில் நின்றிருந்தனர். அவர்களின் இடதுபுறம் நடராஜன் அலமேலு மற்றும் ரஞ்சனி நின்றிருக்க, வலதுபுறம் வசீகரனும் அவளின் தந்தை முத்துமாணிக்கமும் நின்றிருந்தனர். தந்தையை கண்டதும் கண்களை கண்ணீர் மறைத்தது.
“நான் உன் அப்பாகிட்ட சொன்ன வார்த்தைய பெரிசா நினைச்சுட்டு வேணும்னே எங்கள தேடி வந்திருக்கேனு, நான் அன்னைக்கு சொன்னதுக்கு நீ என்கிட்ட என்ன சொன்னே? என் அப்பா கொடுத்த போட்டோவ நான் பிரிச்சு கூட பாக்கல. தூக்கி பரண் மேல போட்டுட்டேன். சரவணன் உங்க பையன்னோ, இது உங்க வீடுனும் எனக்கு தெரியவே தெரியாதுனு நடிச்சே. ஆனா போட்டோவ தூக்கிட்டு எங்கள தேடி தான் வந்திருக்கே. சரவணன் முன்னாடி அப்பாவி மாதிரி நடிச்சு வீட்டுக்குள்ள நுழைஞ்சு என் மகனை உன் வலைல சிக்க வச்சிட்டே. லதா கொஞ்சம் சுதாரிக்கலனா என் மகன் கையால தாலி வாங்கிட்டு என் முன்னாடி வந்து நின்னு உன்னால இப்போ என்ன பு*ங்க முடியும்னு கேட்டிருப்பே, அப்படித்தானே”
“ஐயோ, சத்தியமா அப்படியெல்லாம் இல்ல” என்றாள் கலக்கத்துடன் 
“நீ பாக்கவே இல்லனு சொன்ன போட்டோ எப்படிடி உன் பெட்டியில இருந்துச்சு?”
“அது தான் எனக்கும் தெரியல. நான் பரண் மேல தூக்கி போட்டது உண்மை. இது எப்படி என் பெட்டியில வந்துச்சுனே தெரியல”
“சரி நீ சொல்ற மாதிரியே இருக்கட்டும், உனக்கு தெரியாம கவர் உன் பொட்டிக்குள்ள வந்துடுச்சுனே வச்சுக்குவோம். உன் பெட்டியில இருந்த போட்டோவ நீ இதுவரைக்கும் பார்க்கவே இல்லனு சொல்லி முழுபூசணிக்காய மறைக்க போறீயா?”
“நீங்க நம்பலனாலும் அதுதான் நிஜம். நான் காலேஜ்க்கு போயிட்டு, வீட்டு வேலை செஞ்சுட்டு கிடைக்கற கொஞ்ச நேரத்துல படிச்சிட்டு இருந்தேன். இந்த கவர் இதுவரைக்கும் என் கண்ணுலயே படல. என்னை நம்புங்க”
“கல்யாணம் முடிஞ்ச பின்னாடி உன் அப்பா ஒருமுறை எங்க வீட்டுக்கு வரும்போது நாங்க எல்லாம் கல்யாணம் ஆல்பம் பார்த்துட்டு இருந்தோம். அப்போ இந்த போட்டோ வேணும்னு என்கிட்ட கேட்டாரு. நான்தான் இந்த ஒரு போட்டோவ மட்டும் பிரிண்ட் எடுத்துனு வரச்சொல்லி அவர்கிட்ட கொடுத்தணுப்பினேன். அது உன் அப்பா மூலமா உன் வீட்டுக்குள்ள வந்து உனக்கு தெரியாம உன் பொட்டிக்குள்ள வந்ததாவே வச்சுக்கலாம். அதுக்குள்ள இருக்கற இன்னொரு போட்டோ எங்க வீட்லயே இல்ல, அதெப்படி உன் பொட்டியில வந்து உட்காந்துக்குச்சு?”
இன்னொரு போட்டோ இருக்கா? அதிர்ச்சியுடன் அதனுள் கைவிட்டு பார்த்தாள். அலமேலு சொன்னபடி இன்னொரு போட்டோ இருந்தது. அதை எடுத்து பார்த்த போது வெளிநாட்டில் ஒரு பெரிய பாலத்தின் நடுவே இரு பாக்கெட்டிலும் கையை விட்டுக்கொண்டு ஸ்டைலாக நின்றிருந்தான் வசீகரன், அதன் ஓரத்தில் சான்பிரான்ஸிஸ்கோ, கோல்டன் கேட் பிரிட்ஜ் என்று எழுதியிருந்தது. 
“பின்னாடி திருப்பி பாரு”
பின்புறம் திருப்பினாள், “ஒரு அழகிய இதயம் வரையப்பட்டு இருந்தது அதன் நடுவில் VV எழுத்துக்களோடு அந்த இதயம் இணைவது போல இருந்தது. அதன் கீழே வித் லவ் வசி என்ற வசீகரனின் கையெழுத்து இருந்தது.
அதிர்ச்சியுடன் நிமிர்ந்து அலமேலுவை பார்த்தாள்.
“இதுக்கென்ன பொய் சொல்லுவே? அதே தானே? இது எப்படி உன் பொட்டிக்கு வந்துச்சுனு தெரியலனு தானே சொல்லப்போறே”
கண்களில் கண்ணீருடன் ஆமாம் என்று தலையசைத்தாள்.
“முத்துமாணிக்கத்தோட மகளா பொறந்துட்டு எப்படிடி உன்னால இவ்வளவு பொய் பேச முடியுது” என்றார் வாயில் கைவைத்துக் கொண்டு
“நீ வீட்டுக்கு வந்த பின்னாடி தான் வசி இத உன்கிட்ட கொடுத்திருக்கணும். இல்லனு மட்டும் பொய் சொல்லி என்னை பொல்லதவளா ஆக்கிடாத”
என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் கலங்கிய கண்களுடன் நின்றிருந்தாள்.
“எனக்கு உண்மை தெரிஞ்சாகணும், பதில் சொல்லுடி” என்று அவளை நெருங்கினார்
“போட்டுக்க டிரஸ், போட்டோ மட்டும் தான் கொடுத்தானா? புள்ளையையும் சேர்த்து கொடுத்துட்டானா?” என்று அவள் முடியை பிடிக்க முயலவும், வசீகரன் கதவை எட்டி உதைக்கவும் நேரம் சரியாக இருந்தது.
அவனை கண்டதும் சின்னபொண்ணு கதறி அழ ஆரம்பிக்க, அவளின் கண்ணீரை விரல்களால் தட்டிவிட்டு, “ஒன்னுமில்லடா, அழாத. நான் பாத்துக்கறேன்” என்று சமாதானம் செய்தான்.
பின்பு அன்னையிடம் திரும்பி “என்னம்மா பிரச்சனை உனக்கு?”
“எனக்கென்ன பிரச்சனை? ஒன்னுமில்லயே. நீ போய் வெளியே இரு, நான் கேட்க வேண்டியது இன்னும் பாக்கியிருக்கு”
“அவகிட்ட என்ன கேட்டுட்டு இருக்கே? எதுவா இருந்தாலும் என்கிட்ட கேளு. அவளுக்கு எதுவும் தெரியாது. சின்னு உன் ரூமுக்கு போ” என்றான் அதட்டலாக
“சின்னபொண்ணு எப்போயிருந்து சின்னுவா ஆனா?” அலமேலு ஆங்காரத்துடன் கேட்டார்.
அவன் அன்னையிடம் பேசாமல் “சின்னு, நீ ரூமுக்கு போனு சொன்னேன்”
“எனக்கு பதில் சொல்லுடா”
“உனக்கு பதில் தானே வேணும், சொல்றேன். சரியான நேரம் வரட்டும் அப்போ சொல்றேன்”
“எனக்கு இப்பவே பதில் சொல்லுங்க” என்று கண்களை துடைத்துக் கொண்டு அவனெதிரே சென்று நின்றாள் சின்னபொண்ணு. அவன் முகத்தை நிமிர்ந்து நேராக கூட பார்க்காதவள் இப்போது அவன் முன்னால் நேருக்கு நேர் நின்று கேள்வி கேட்கவும் அவன் அன்னையின் மீதிருந்த கோபம் எல்லாம் மறைந்து அவள் மீதான சீண்டலே நினைவு வந்தது.
“உனக்கு என்ன சொல்லணும்?” என்றான் புருவம் சுருக்கி
“இந்த போட்டோ எப்படி என் பெட்டியில வந்துச்சு?” என்று அவன் மட்டும் தனியாக இருந்த போட்டோவை காட்டினாள்.
“ஏன்? இத ஏற்கனவே நீ பாத்ததில்லயா?” என்றான் புருவம் சுருக்கி
“இல்ல”
“ஓ” என்றான் யோசனையுடன்
சின்னபொண்ணு ஆவேசத்துடன் தன்னை மறந்து பொரிய தொடங்கியிருந்தாள் “என் அப்பா உங்க அண்ணன் கல்யாணத்துக்கு வந்தப்போ எடுத்த குரூப் போட்டோவ தான் எடுத்துட்டு வந்ததா என்கிட்ட சொன்னாரு. நான் அத கூட பிரிச்சு பாக்கல. பரண் மேல போட்ட போட்டோ எப்படியோ என் பெட்டியில விழுந்திருக்கு. ஆனா இந்த போட்டோவ பத்தி அப்பா எதுவும் என்கிட்ட சொல்லல. நான் இங்கே வந்த பின்னாடி இத என் பெட்டியில வச்சது நீங்க தானே?”
‘போச்சு, பலமுறை எச்சரிக்கை பண்ணி கூட என் முன்னாடியே உண்மைய போட்டு உடைச்சிட்டாளே’ என்று அலமேலு திகிலுடன் நெஞ்சில் கையை வைத்துக் கொண்டு வசீகரனின் முகபாவத்தை பதட்டத்துடன் கவனித்தார். அவன் சின்னபொண்ணுவையே அழுத்தமாக பார்த்துக் கொண்டிருக்க மெல்ல நகர்ந்து ஜன்னலருகே சென்று இந்த இக்கட்டிலிருந்து தன்னை காப்பாற்ற கணவரை வரச்சொல்லலாம் என்று நடராஜனுக்கு போன் செய்தார்.
“சொல்லுங்க, உங்க போட்டோவ நீங்க தானே என் பொட்டியில வச்சீங்க?”
“ஆமா, நான் தான் நீ இல்லாதப்போ உன் பெட்டிய திறந்து என் போட்டோவ அதுல வச்சேன்” என்றான் விளங்கா பார்வையுடன்
“ஏன் வச்சீங்க?” 
“சும்மா விளையாட்டுக்கு வச்சேன்”
சின்னபொண்ணு எட்டி வேகமாக அவன் காலரை பிடிக்க முயன்று அது கைகளுக்கு எட்டாமல் போகவே இருகரங்களால் சட்டையை தான் பிடித்திருந்தாள்.
“நீங்க விளையாடறதுக்கு நான் தான் கிடைச்சேனா? நான் உங்க கிட்ட எனக்கு டிரஸ் எடுத்து கொடுக்க சொன்னேனா? உங்கம்மா என்ன கேக்கறாங்க தெரியுமா? டிரஸ், போட்டோ மட்டும் தான் கொடுத்தானா இல்ல புள்ளையும் கொடுத்தானானு கேக்கறாங்க” என்று அவன் சட்டையை உலுக்கினாள்.
அதில் அவனின் சட்டை பட்டன் கழண்டு வெற்று மார்பு தெரிந்தது. 
“புள்ளைய கல்யாணத்துக்கு அப்புறம் கொடுப்பாருனு சொல்ல வேண்டியது தானே” என்று அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில் உதட்டுக்குள் முணுமுணுத்தான்.
அவனை எரித்து விடுவது போல முறைத்தவள், “இ்த்தோட உங்க விளையாட்ட நிறுத்திக்கோங்க”
“இன்னும் ஆரம்பிக்கவே இல்ல, அதுக்குள்ள நிறுத்த சொல்றே?” என்று அவன் இருபுருவங்களையும் ஏற்றி இறக்க
“ச்சே, உங்ககிட்ட பேசறதே வேஸ்ட்”  என்றவள், அலமேலு மீண்டும் வந்து எதிரே நிற்கவும் “பாத்துக்கோங்க உங்க மகன் தான் போட்டோவ வச்சாராம், அவரே ஒத்துக்கிட்டாரு. அவர் எடுத்துக் கொடுத்த டிரஸ்ஸ இங்கேயே வச்சிட்டு நான் வீட்ட விட்டு போயிடறேன்” என்றவள் விடுவிடுவென்று அறையை விட்டு வெளியேறினாள்.
“வசி, நீதான் உன் போட்டோவ அவ பொட்டியில வச்சியா? ஏன்டா? என்னடா பண்ணிட்டு இருக்கே?” அலமேலு அதிர்ச்சியுடன் கேட்க
அன்னையை கூர்ந்து பார்த்து “நான் பண்றது இருக்கட்டும், சின்னபொண்ணோட அப்பா, நம்ம சரவணன் கல்யாணத்து வந்ததா சொல்றாளே? யார் அவளோட அப்பா?” என்றான் 
இப்போது அலமேலு திருதிருவென்று விழிக்க, அவர் கையிலிருந்த போட்டோவை வாங்கி பார்த்தான்.
“என்கூட நின்னுட்டு இருக்காரே, இவர் தான் அவளோட அப்பாவா? அப்போ சின்னபொண்ணு நம்ம சொந்தக்கார பொண்ணா? அப்புறம் ஏம்மா வீட்ல யார்கிட்டயும் தெரிஞ்ச மாதிரியே காட்டிக்காம இருந்தீங்க. வேலைக்காரினு தானே என்கிட்ட சொன்னீங்க?” என்றான் குற்றம் சாட்டும் பார்வையுடன்.
பதில் சொல்ல முடியாமல் அலமேலு தலையை குனிந்து கொண்டார்.
(தொடரும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!