ஊரே கூடி ஆலமரம் அடியில் அமர்ந்து இருக்க ஒரு பெண் அங்கு அழுது கொண்டு நின்று இருந்தாள்… அவளை பார்த்து அனைவரும் தவறாக பேசிக்கொண்டு இருந்தனர்… அவள் யாரின் முகத்தையும் பார்க்காமல் அழுது கொண்டு இருக்க அங்கு பஞ்சாயத்து தலைவர் ” இனிமே இந்த பொண்ணு இங்க இருக்க கூடாது.. ஊரை விட்டு ஒதுக்கி வைக்குறோம்… இந்த பொண்ணு கூட யாரும் பேச கூடாது பழக கூடாது அப்படி யாரோ பழகினா அவங்களையும் ஊரைவிட்டு ஒதுக்கி வெச்சிடும் பஞ்சாயத்து…. இது தான் தீர்ப்பு… இப்பயே இந்த பொண்ணு இந்த ஊரை விட்டு போயிடனும்… ” என்று அவர் கூறிக்கொண்டு இருக்கும் போதே இருவர் மூச்சு வாங்க ஓடி வந்தனர்…
அதில் ஒருவன் எதுவும் பேசாமல் அந்த பெண்ணின் கையை பிடித்து இழுத்து கொண்டு அங்கு இருக்கும் கருப்புசாமி கோவில் முன் நிற்க வைத்து அவன் சட்டை பையில் இருக்கும் பாக்கெட்டில் இருந்து தங்க தாலியை எடுத்து அவளின் முகத்தை ஆழ்ந்து பார்த்துவிட்டு கருப்புசாமியை ஒருமுறை பார்த்துவிட்டு அவனுடன் வந்த இன்னொருவனை பார்த்தான்….
Advertisement
அவன் சரி என கண் காட்டியவுடன் தன் முன் அழுதுக்கொண்டு நின்று இருந்த பெண்ணின் கழுத்தில் மூன்று முடிச்சிட்டு தன் மனைவியாக்கி கொண்டான் அவன்…
Advertisement
யார் அவன்…..??? பஞ்சாயத்தில் அழுது கொண்டு இருந்த பெண் என்ன செய்தாள்????