Skip to content
Post Views: 291
யுகத்தின் தலைவன்
அத்தியாயம் 42.2
சல்மானும் கங்காவும் எந்த நிலையிலும் சந்தித்து கொள்ள கூடாது என பல்வேறு வகையிலும் நிறைய மாயாஜால வித்தைகளை காட்டினாள் மாலதி. அவளது தந்திரங்களை தெரிந்தாலும் கங்கா வெளியே ஏதும் காட்டிக் கொள்ளவில்லை.
நித்யாவும் தற்போதெல்லாம் சல்மானின் வளர்ச்சியை கண்டு பொறாமை கொண்டு சுமந்த்தோடு சேர்ந்து எள்ளி நகையாடுவது போல தோன்ற அவளிடமும் மாலதி பற்றி ஏதும் கூறாமல் தவிர்த்தாள்..
மாலதியும் கங்காவை விடுவதாக இல்லை. “நானும் உன்னை மாதிரியே கவர்ன்மென்ட் எக்ஸாம் படிக்கலானு இருக்கே கங்கா” என இவளை வாரம் ஒருமுறை தொடர்பு கொண்டு ஆராய்ந்து வந்தாள்.
இதற்கிடையில் சல்மான் ‘வைவா’ வந்தது.சல்மானுக்கு இவளது உண்மை முகம் தெரியாது.. வைவாவிற்கு அழைத்து விட்டால்.. இவளது ஆட்டம் பலமடங்காக இருக்குமே என்ற கவலை வாட்டியது கங்காவிற்கு.
Advertisement
ஆனால் சல்மான் இவர்களை மூவரையுமே வைவாவிற்கு அழைக்க வில்லை. கங்காவிற்கு இது வருத்தமே.. நித்யாவும் கங்காவும் வெளியே இருக்கும் போது உள்ளே இருந்த மாலதியை அவன் அழைக்காது தவிர்க்கிறான் என நன்றாகவே தெரிந்தது.
சுமந்த் மூலம் அவன் வைவாவை ரெக்கார்ட் செய்து வாங்கிக் கொண்டாள் கங்கா.
சுமந்த் வைவா எப்படி இருந்துச்சு?
Advertisement
அக்கா,சூப்பரா அண்ணா எக்ஸ்பிளைன் பண்ணுணாரு.நான் எல்லா அவரே ‘ஆ’னு பாத்துட்டு இருந்தே. கேள்வி கேட்ட எல்லாரையும் லெப்ட் ஹேண்ல டீல் பண்ணுனாரு.
Advertisement
இதைக்கேட்ட கங்காவிற்கு சந்தோசம் கரை புரண்டது.
அக்கா இன்னொரு விஷயம்
என்ன?
Advertisement
அண்ணா, ஹெல்ப்க்கு அவரோட ஸ்டூடண்ட் விஜி கற பொண்ணுகிட்ட கேட்டிருப்பாரு போல. அந்த பொண்ணு எல்லா ஹெல்பும் பண்ணுச்சு.இது மாலதி அக்காவை அவாட் பண்ணற மாதிரிதான் இருக்கு. ஆனாலும் இந்த மாலதி அக்கா விஜி பத்தி எல்லா விஷயத்தையும் விசாரிசிட்டு இருக்காங்க. அதுமட்டுமல்ல அண்ணா போற வழியெல்லாம் நின்னு அழுதுட்டு இருக்காங்க.
இவளே என்ன செய்றது? எப்படியாவது இவள் சல்மானை விட்டு விலகி போய்விட வேண்டும் என்ற எண்ணமே கங்காவின் மனதில் சுற்றிக் கொண்டிருந்தது.
அடுத்த நாள் கங்காவிற்கு எக்ஸாம்… தீவிர தயாரிப்பில் இருந்தாள். இந்த பரிட்சையில் எப்படியாவது பாஸ் செய்து..கவர்மென்ட் வேலையில் அமர்ந்துவிட வேண்டும்.தற்போது வாங்கும் சம்பளத்தை விட கூடுதலாக ஒரு ஆயிரம் ரூபாய் கிடைத்தால் கூட… அப்பாவை ஒரு பெரிய ஹாஸ்பிடல் கூட்டிச் செல்லலாம் என்று முழு முனைப்போடு படித்துக் கொண்டிருந்தாள்.
அதைக் கெடுக்க அந்த குள்ளநரி ஃபோன் செய்துவிட்டது.
கங்கா நாளைக்கு உனக்கு எங்கே சென்டர்?
ஏன் மாலதி?
என் பிரண்ட் ஒருத்தனும் நாளைக்கு எக்ஸாம் எழுத வரான். உங்க ரெண்டு பேருக்கும் ஒரே சென்டர்னா?அவன் உன்னை வண்டில கூட்டிட்டு போய்ருவான்.அதான் கேட்டே…
பையனா?எங்க அப்பாக்கு தெரிஞ்சா கொன்னே போடுவாரு. நித்யா என்னை கூட்டிட்டு போறேனு சொல்லிட்டா.
நித்யாவ ஏன்டி கஷ்டப்படுத்தறே?இவன் நல்ல பையன்தான் உன்னை பத்திரமா கூட்டிட்டு போய்ட்டு கூட்டிட்டு வந்துருவான்.
என்மேல் என்ன அவ்வளவு அக்கறை? என்ற யோசனையோடே.. அதெல்லா வேண்டா மாலதி.
சரி உனக்கு எங்கே சென்டர்?என மீண்டும் மீண்டும் அதிலேயே நிற்க இந்த மக்கு கங்காவிற்கு ஒன்றும் புரியாது இடத்தை சொன்னதும் ‘அப்பாடா’ என ஃபோனை வைத்து விட்டாள்.
எக்ஸாம் நல்லபடியாக முடித்து விட்டாள் கங்கா.எப்படியும் பாஸ் செய்து விடுவோம் என்ற நம்பிக்கை இருந்தது.வரும் வழியில் ஒரு ரெஸ்டாரண்டில் ஜூஸ் குடிக்க கங்கா, நித்யா,சுமந்த்,தர்ஷினி,கோகிலாமணி என நண்பர்கள் பட்டாளம் அமர்ந்தனர்.
தர்ஷினி:நாம்ம இந்த மாதிரி ஒன்னா வந்து, எவ்வளவு நாளாச்சு.. இந்த மாலதி மட்டும் வரல..எனக்கு என்னமோ சல்மான் இஸ்யூனாலதா அவ நம்மள எல்லாம் அவாய்ட் பண்றானு தோணுது.
சல்மான்,மாலதி பேச்சு வந்ததும் கங்கா மேற் கொண்டு எதுவும் பேசாது அமைதியாக கவனித்தாள்.
கோகிலாமணி:இவ இன்னமும் சல்மானை விடலையா? நித்தி. அன்னைக்கு எக்ஸாம் டூட்டிக்கு வந்து எவ்வளவு பிரச்சினையே கிளப்புனா. கங்காவையும் அன்னைக்கு ரொம்ப படுத்தி எடுத்துட்டா.
தர்ஷினி:மாலதியே பொருத்தவரைக்கும் சல்மான் ஒரு ஆண் அழகன்.நாம்ம எல்லா அவன் பின்னாடி சுத்தறோம்.கிருஷ்ண பரமாத்மா எப்படி கோவர்தன மலையே தூக்கி,ஆயர்பாடி மக்களை காப்பாத்துனாரோ அப்படி மாலதி நம்ம கிட்ட இருந்து சல்மானை காப்பாத்திட்டு இருக்கா.இவ இப்படி எல்லாம் பண்றதே பாத்தா சல்மான் மேலதான் வெறுப்பு வருது. நானும் சதிஸூம் கூடதான் லவ் பண்றோம் ஆனா இவ அளவுக்கு இல்லப்பா
சுமந்த்:சல்மான் அண்ணா, அப்பா இறந்தப்போ அழுததே நீங்க பார்த்திருதீங்க. அவ்வளவுதான்…அந்த அண்ணாவும்,அவங்க அம்மாவுமே திடமாதா இருக்காங்க…இவங்க பக்கத்துல யாரோட தோள் மேலே சாஞ்சிட்டு…அவரே என்னாலே பாக்க முடிலேனு ஒரே கதறல்.
கோகிலாமணி:ஒரு வேல அவளுக்கு உண்மையா பாசம் இருந்து இருக்கலாம். தேவை இல்லாம இப்படி எல்லா பேச வேண்டா.
நித்யா:அவ வீட்டுல இப்படி நடந்தா இந்த அளவு கதறுவளா?எல்லாம் நடிப்பு.
தர்ஷினி:எனக்கும் அப்படிதான் தோணுது. உண்மையான காதல் இப்படி எல்லா இடத்துலையும் நின்னு கத்தி கூப்பாடு போடாது.அது மனசுக்குள்ள மட்டும்தான் இருக்கும். இவள பொறுத்தவரை இவ பண்றது தெய்வீக காதல்னு நாம எல்லா பேசனுனு நினைக்கறா.சல்மான் அவளுக்கு வேணும். அதுவும் உண்மையான அன்போ பாசமோ எல்லா அவன் மேல இவளுக்கு இல்ல. அப்படி இருந்தா இப்படி எல்லார் முன்னாடியும் காட்டிக்க மாட்டா. அவளுக்கு அவன் மேலே இருக்கிறது ஈர்ப்பு.அது முடிஞ்சா அவளே இவனே தூக்கி எறிஞ்டுவா
நித்யா:கரெக்ட். இப்போ “வைவா”க்கு அவாய்ட் பண்ணுனதுல கூட அவன் மேல அவளுக்கு கோபம்தான்.அவன் கிடைச்சதுக்கு அப்பறோம் அவளோட உண்மையான முகம் அவனுக்கு தெரிய வரும்.
கோகிலாமணி:அப்போ ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்குவாங்களா?
நித்யா:இவளுக்கு அவனே அடைஞ்சே ஆகனுனு ஒரு பிடிவாதம்.பிடிவாதம்னு கூட இல்ல வெறி. சல்மான் வீட்டுல பாக்குற பொண்ணதான் மேரேஜ் பண்ணுவேனு சொல்லிருக்கா.. ஆனா இந்த மாலதி நடுவுல எந்த குட்டையும் குழப்பமா இருந்தா சரி.
சுமந்த்:மாலதி அக்கா நல்லா குழப்பிட்டு தானே இருக்காங்க. சல்மான் அண்ணா போறே வழியெல்லாம் நின்னு அழறாங்க. அங்கங்க ஆள் வெச்சு அண்ணாவோட அடுத்த மூவ்மென்ட் என்னனு கவனிசிட்டு இருக்காங்க. இன்னைக்கு கூட அண்ணாக்கு வேற இடத்தில எக்ஸாம் எழுத போட்டதும். அங்கேயும் ஆள் அனுப்பிடாங்க.
கங்காவிற்கு இவர்கள் பேசுவதை எல்லாம் கேட்க,தலையே சுற்றியது. இதற்குமேல் சல்மான் பற்றிய விஷயங்களை கேட்க மனம் கனத்தது.
நித்யாவை துரிதப்படுத்தி வீடு வந்து சேர்ந்தாள்.
எக்ஸாம் நல்லா எழுதிய சந்தோசம் கூட கங்காவிற்கு முழுவதுமாக வற்றியது. பெயரளவுக்கு வயிற்றை நப்பி படுத்துக் கொண்டாள். என்னதான் வாழ்க்கை?எதேனும் பிரச்சனையோடே ஏன் தன்னிடம் வர வேண்டும்?
அவர்கள் பேசிய படி மாலதி சல்மானை திருமணம் செய்து கொண்டு,அவனை பழிவாங்க எண்ணி இருந்தால்.. அவனுக்கு ஒரு நல்ல பெண் அமைந்து விட்டால், அது மாலதியாக இருந்தாலுமே…
மெளனமாக அவன் வாழ்வில் இருந்து விலகிவிடலாம் என்ற எண்ணமே கங்காவிற்கு… ஆனால் இப்படி பொய் பொய் என்று அதிலேயே சதா காலமும் முழ்கி இருப்பவளிடம் அவனை கொடுக்க மனம் மறுத்தது. விளைவு அவளிடம் வேண்டாம் என்னிடமே விதி அவனை கொண்டு வந்து சேர்க்கட்டும் என எண்ணினாள். மாலதிக்காக பயந்தோ..அவளுக்கு கிடைத்து விடுவானோ என்ற பொறாமையால் எல்லாம் இல்லை.
அவன் வேண்டும். அவன் மட்டுமே வேண்டும்.. நல்ல நண்பனாக..சுக துக்கங்களை சமமாக பங்கிட்டு கொள்ளும் நல்ல துணையாக அவன் அவளுக்கு வேண்டும்.
அவனது குணங்களை பார்த்தால், சிவராமன் கூட அவனை ஏற்றுக் கொள்வார் என்ற நம்பிக்கை அவளுள் இருந்தது.ஆனால் இதெல்லாம் எங்கு?எப்படி?சாத்தியம் என்ற எண்ணமும் வாட்டியது.
பேசாது சல்மானிடம் இவளை பற்றிய உண்மைகளை கூறி விடலாமா?வேண்டாம் ஏற்கனவே பெரிய இழப்பில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக வெளியே வந்து கொண்டிருப்பான். இந்த நேரத்தில் ஏன் தேவை இல்லாது இவளை பற்றி கூற வேண்டும்? என சோகமாக இன்ஸ்டா ரீல்ஸை புரட்டிக் கொண்டிருந்தவள் கண்களில் அந்த வீடியோ பட்டது.
திக்கற்றவர்களுக்கு தெய்வமே துணை. எல்லா கதவுகளும் மூடியபின், நம்மால் இனி முடியாது என துவண்டு போய் இருக்கையில், இறைவன் அவனது இருப்பை காட்டுவான்.
அதில் ஒரு இஸ்லாமிய பெண்,“தஹஜ்ஜுத் நேரத்தில் மனசார கேட்ட துஆவை அல்லா ஒருநாளும் கைவிட மாட்டார்…”என்று பேசிக் கொண்டிருந்தார்.
அதற்கு கீழே, “இரவு எல்லோரும் தூங்கிய பிறகு, உனக்காக அழுது கேட்க யாரும் இல்லாத நேரத்தில்… அல்லா உன் கண்ணீரை கேட்கிறான்…” என்ற வரிகளும் ஓடியது.
அந்த நொடியே கங்காவின் மனதில் ஒரு முடிவு வந்தது. அவனுக்காக தஹஜ்ஜுத் செய்ய முடிவெடுத்தாள்.
அவளுக்கு தொழுகை முறைகள் தெரியாது. அரபி வார்த்தைகள் தெரியாது.ஆனால் மனதில் மட்டும் ஒரு வேண்டுதல் எரிந்து கொண்டே இருந்தது. தாயை எப்படி தனது தேவைகளுக்கு அழைப்போமோ?அப்படியே இறைவனையும் அழைக்க முடிவு செய்தாள்.
தானாகவே இரவின் கடைசி பகுதியில் தூக்கம் தெளிந்தது அவளுக்கு.மற்ற மூவரும் நன்றாக தூங்கிக் கொண்டிருக்க.. மனதினுள் வேண்ட ஆரம்பித்தாள்.
“அல்லா…நான் இப்படி கேக்கறேன்னு தப்பா நினைக்காத… சல்மான் வாழ்க்கையிலிருந்து மாலதி போயிடணும்… அவ அவனுக்கு சரியில்லை…எப்படியாச்சு அவளை அவன் வாழ்க்கைல இருந்து வெளியே போக வெச்சிரு. இப்படிபட்ட கைகள்லே அவனே கொடுக்கறதுக்கு பதிலா எனக்கே எனக்குன்னு கொடுத்துரு என வேண்டினாள்”அவளது கண்களில் நீர் வழிந்தது.
மேலும் “யா அல்லாஹ், அவனை என்னுடைய நசிபாக(இறைவனால் எழுதப்பட்ட வாழ்க்கைத் துணை)ஆக்கி விடு. இந்த உலகத்திலும் மறுபிறப்பிலும் எங்களை ஒன்றாக வைத்து விடு.நான் அவனுக்கு ஏற்றவளாக இல்லையெனில், அவனுக்கு ஏற்றவளாக என்னை மாற்றி விடு. அவன் எனக்கு ஏற்றவனாக இல்லையெனில், அவனை எனக்கு ஏற்றவனாக மாற்றிவிடு. எனது குடும்பமும் அவனுடைய குடும்பமும் ஒருவரை ஒருவர் ஏற்றுக்கொள்ளச் செய்து விடு. அவனுடைய வருத்தங்களையும் துன்பங்களையும் நீக்கி விடு. எங்கள் பெயர்கள் ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே எழுதப்பட்டதாக இருக்கட்டும்.
அவனுடைய கடந்தகால பாவங்களை மன்னித்து விடு. அவனை அவனுடைய சிறந்த வடிவில் மாற்றி விடு.
யா அல்லாஹ் தயவுசெய்து அவனை என்னுடைய நசிபாக ஆக்கிவிடு.”
என வேண்டிக் கொண்டு மீண்டும் படுக்க சென்றாள்.
—தலைவன் வருவான்…
error: Content is protected !!