யுகத்தின் தலைவன் அத்தியாயம் 8
யுகத்தின் தலைவன்
அத்தியாயம் 8
“அறியேன் வாழ்வது எந்நாள் என;
அறுந்தது நெஞ்சம் நீ சென்றதே.
மருதம் காய்ந்ததோர் பாலைபோல் மனம் வாடி நிற்கின்றதே;
வருவாய் எனும் ஒரு வார்த்தை வாழ்வாய்த் தாங்கும் உயிர்க்கே.”
Advertisement
பாடலின் பொருள்: நான் இன்னும் எத்தனை நாள் இப்படியே வாழப் போகிறேன் என்று எனக்கே தெரியவில்லை…
நீ என்னை விட்டுப் பிரிந்த அந்த நொடியில்,என் மனம் முழுவதும் உடைந்து போயிற்று.
ஒருகாலத்தில் செழித்து நின்ற மருத நிலம் கூட வறண்டு பாலை நிலமாக மாறினால் எப்படி இருக்கும்…
அப்படியே என் உள்ளமும் உயிர் இழந்ததுபோல் வாடி நிற்கிறது.
“நான் திரும்பி வருவேன்” என்று நீ சொன்ன அந்த ஒரு வார்த்தைதான்,
இப்போது என் உயிரை தாங்கிக் கொண்டு நிற்கும் ஒரே நம்பிக்கை.
Advertisement
சிவராமன் சென்று ஒரு வாரம் கடந்து விட்டது. அவர் மகாராஷ்டிரா சென்று சேர்ந்தாரா?
உண்டாரா? உறங்கினாரா? எதுவும் தெரியவில்லை லட்சுமிக்கு.
Advertisement
எந்த விதமான தகவல் தொடர்பு வசதியும் இல்லாத காலம்.கடித தொடர்பு மட்டுமே பிரதானமாக இருந்த காலம்.வீதிக்கு ஒரு எஸ்டிடி பூத் மட்டுமே இருந்த காலம்.
கடிதம் எழுதலாம் என்றால் சிவராமனுக்கு சுத்தமாக எழுதப் படிக்க தெரியாது. லட்சுமி எழுத்து கூட்டி எழுதி முடிப்பதற்குள் சிவராமன் ஒருவருட காண்ட்ராக்ட் முடிந்து ஊரே வந்துவிடுவார்.
மாலை ஆறு மணி முருகன் படம் முன்பு விளக்கேற்றி,ஒரு நோட்டை எடுத்து அதில் அவர் சென்ற நாட்களை திங்கள் ஒன்று,செவ்வாய் இரண்டு என கணக்கிட்டு கண்ணீரோடு எழுதி கொண்டிருந்தார் லட்சுமி.
Advertisement
கங்கா,”அம்மா எனக்கு புது டிபன் பாக்ஸ் வேணும்”
அம்மா கிட்ட காசு இல்ல கங்கா
சரி அப்பா வந்ததும் வாங்கி தரும்..அப்பா எப்ப வரும்..
சீக்கிரம்…
எவ்வளவு சீக்கிரமா வரும்?
நீ இரண்டாவது போறதுக்குள்ள வந்துரும்.
நா எப்ப இரண்டாவது போவே?
இதே மாதிரி நல்லா படி .சீக்கிரமா இரண்டாவது போய்ரலாம்.அப்பறம்
அப்பாவும் சீக்கிரம் திரும்பி வந்துரும்.
கெளசி சிவராமனின் சட்டையை எடுத்து மாட்டிக் கொண்டு, அவரை போலவே செய்து காட்ட சிறிது சிரிப்பு சத்தம் வீட்டில் கேட்டது.
வீட்டின் பக்கத்தில் இருந்த டெய்லர் கடையில் இருந்து, லட்சுமி, “சிவராமன் லெட்டர் போட்டுருக்கா காலையிலேயே வந்துருச்சு நான் தான் கொடுக்க மறந்துட்டேன் இந்தா என நீட்ட,ஆவலாக அதை பிரித்து எழுத்து கூட்டி படித்தார் லட்சுமி.
மகள்கள் இருவரும் அவரை சுற்றி நின்று கொண்டனர். ஆனால் அவர் எழுதிய முழு கடிதத்தின் பொருளை அவரால் உணர்ந்து கொள்ள முடியவில்லை.
அம்மா,” அப்பா என்ன எழுதி இருக்கு?எப்ப வரும் ? என இருவரும் நச்சரித்து எடுத்து விட்டனர்.
அப்பா நல்லா இருக்குதாமா..சீக்கிரமே வரேன்னு எழுதி இருக்கு..
எங்கள பத்தி எதுமே எழுதலையா? என கங்கா கவலையோடு கேட்க..
முதல்ல அம்மா ரெண்டு பேருக்கும் டிபன் தரே சாப்பிடுங்க, அப்புறோம் பக்கத்து வீட்டு அக்காகிட்ட கொடுத்து படிக்கலாம் என சமாதானப் படுத்தினார்.
இருவரும் விளையாட, லட்சுமி இட்லி தயாரிக்க ஆரம்பித்தார்.அவரின் தங்கை கலா இரண்டு கையிலும் பையோடு வந்துவிட்டார்.
அவரை பார்த்தும் கங்கா உற்சாகமாக “சித்தி” என ஓடிச் சென்று கட்டிக் கொண்டாள்.
ஊரில் உள்ள பிரபல கிளினிக்கின் மருந்து கடையில் மருந்தாளாராக பணிபுரிகிறார் கலா. காலை எட்டு மணிக்கு சென்றால்,இரவு ஒன்பதரை மணிக்குதான் திரும்புவார்.விடுப்பு எடுக்க முடியாத தொழில்.
அக்கா வீட்டினர் தனது வீட்டுனான சண்டை சச்சரவுகளையும் சங்கடங்களையும் உணர்ந்தாலும் வேலை பளுவால் லட்சுமியையும், குழந்தைகளையும் காண செல்ல வில்லை.
இன்று கடைசி சித்தப்பாவின் மகள் சுமதி உடம்பு சரியில்லாமல் கிளிக்கிற்கு வந்தவள், கங்காவும் நானும் வேற வேற க்ளாஸ் என குறைபட்டுக் கொண்டபின்தான் கங்கா பள்ளி செல்லும் விஷயம் நினைவுக்கு வந்தது.
இதற்கு மேலும் தாமதப்படுத்த மனமில்லாமல் கங்காவிற்கு பள்ளிக்கு தேவையான பேக், சிலேடு,பென்சில்,வாட்டர் பாட்டில்,டிபன் பாக்ஸ் என அனைத்தையும் வாங்கி கொண்டு வந்து விட்டார்.
வா கலா,இந்தா தண்ணி என உபசரித்தார் லட்சுமி.
உனக்குதா அம்மா பத்தி தெரியும் இல்ல. மாமா இல்லாமா ரெண்டு புள்ளைகள தனியா வெச்சிட்டு ஏன் இன்னமும் நம்ம வீட்டுக்கு வராமே இருக்கே.
நான் அங்க வரலே, யாராவது மாமாவை ஏதாச்சு சொன்னா கஷ்டமா இருக்கும் அதுதான் நா வரலே கலா நீ வேணுனா இங்க வந்து எங்கள பாத்துட்டு போ
சரி விடு நான் உன்னை கட்டாயப்படுத்துல உனக்கு எப்ப தோணுதோ அப்ப வா..
மாமா எப்படி இருக்கு?என்ற கேள்விக்கு கடிதத்தை எடுத்து நீட்ட,கலா படிக்க ஆரம்பித்தார்.
அன்புள்ள மனைவி லட்சுமிக்கு,உன் அன்பு கணவன் சிவராமன் எழுதிக் கொண்டது.
நான் இங்கு நலம் அதுபோல் என் அம்மா, அண்ணன்,அண்ணி அவர்களது மகன், தங்கை குடும்பம், உன் அப்பா,அம்மா,உன் அண்ணன்கள் செல்வம், அருணாச்சலம் அவரது மனைவிகள்,கலா,ராதா,ரமேஷ் என அனைவரது நலத்தையும் அறிய விரும்புகிறேன்.
என்னை நினைத்து நீ அழுது கொண்டிருக்க வேண்டாம்.நேரத்திற்கு சாப்பிடவும்.
கங்காவையும்,கெளசியையும் நன்றாக பார்த்துக் கொள்ளவும்.
குறும்பு செய்தால் அடிக்க வேண்டாம்.நீ அடித்தால் என்னை கேட்டு அழுவார்கள்.
ஞாயிற்று கிழமை தவறாமல் கறி எடுத்து தரவும்.
கங்காவை நன்றாக படிக்க சொல்வும். டியூசன் அனுப்பி வைக்கவும்.
உன் வீட்டு ஆட்கள் மேல் கோபம் இருந்தாலும் அங்கு செல்வதை தவிர்க்க வேண்டாம்.அவர்கள் என்னை தானே பேசினார்கள்,நீ எதையும் மனதில் வைத்து கொள்ள வேண்டாம்.
நான் திரும்பி வரும்வரை அவர்களின் அன்பும், ஆதரவும் உனக்கு தேவை. எனவே உன் வீடு செல்வதை நிறுத்த வேண்டாம்.
உன் அம்மா என்னை பற்றி எதாவது பேசினால் பொறுத்து கொள்ளவும்.
இரவு இரண்டு பிள்ளைகளையும் வைத்துக் கொண்டு தனியாக தூங்க வேண்டாம் உன் வீட்டுக்கு சென்று விடு,இல்லையேல் ரமேஷை இங்கு வந்து தூங்க சொல்
இந்த கடிதத்தோடு மணியார்டர் அனுப்பி உள்ளேன்.வீட்டுக்கு தேவையானதை வாங்கி கொள்ளவும். பிள்ளைகள் ஏதாவது கேட்டால் மறுப்பு சொல்லாமல் வாங்கி தரவும்.
பதில் கடிதம் போடும் போது நம் வீட்டிற்கு எதிரில் உள்ள டீக்கடை லேண்ட் லைன் போன் எண்ணையும்,டெய்லர் கடை போன் என்ணையும் எழுதி அனுப்பவும்.நான் இங்குள்ள எஸ்டிடி பூத் மூலம் போன் செய்கிறேன்.
உன் பதில் கடிதத்திற்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்
இப்படிக்கு உன் அன்பு கணவன்
சிவராமன்.
படித்த கலா உட்பட நால்வர் கண்களிலும் கண்ணீர்.தன்னை தவறாக பேசிய தன் வீட்டினரை கூட நலம் விசாரித்து உள்ளாரே என கலாவும், பிரிவிலும் கூட குடும்ப கடமை பிரதானமாக எழுதி உள்ளாரே என லட்சுமியும்,அப்பாவின் பிரிவு ஏக்கத்தில் கங்காவும்,எதுவும் புரியாத போது மற்ற மூவரின் கண்ணீரை பார்த்த கெளசியும் அழுதாள்.
தாமதிக்காது ஒரு இன்லேண்ட் லெட்டரை வாங்கி வந்து லட்சுமி சொல்ல கலா எழுதினார்.
அன்புள்ள கணவருக்கு லட்சுமி எழுதி கொள்வது
நான் இங்கு நலம். அதே போன்று கங்காவும்,கெளசியும் உன் வீட்டினரும் என் வீட்டினரும் நலம்
நீ எங்களை நினைத்து கவலை பட வேண்டாம் நாங்கள் நன்றாக உள்ளோம்.
நீ நேரம் தவறாது சாப்பிட்டு விட்டு வேலை செய்யவும்.நீ எப்போது ஊர் திரும்புவாய் என ஒவ்வொரு நொடியும் எண்ணிக் கொண்டிருக்கிறேன்.
உன் நலத்திற்காக தினமும் பிரார்த்தனை செய்து கொண்டுள்ளேன்.
நான் என் அம்மா வீட்டிற்கு சென்று வருகிறேன்.நீ எங்களை பற்றிய கவலையை விட்டுவிட்டு நிம்மதியாக வேலை செய்.
கங்காவும்,கெளசியும் நீ எப்போது வருவாய் என கேட்டு கொண்டுதான் உள்ளார்கள்.அவர்களை பற்றிய கவலையும் உனக்கு வேண்டாம்.நான் பார்த்துக் கொள்கிறேன்.
இப்படிக்கு,
நீ வரும் நாளை எதிர்நோக்கி காத்திருக்கும் உன் அன்பு மனைவி லட்சுமி
முதல் இரண்டு பக்கங்கள் லட்சுமி எழுத,மூன்றாவது பக்கம் கலா எழுதினாள்.
அன்புள்ள மாமாவிற்கு கலா எழுதிக் கொள்வது.
மாமா எங்க வீட்டுல உங்க மனசு கஷ்டப்படுற மாதிரி எதாவது பேசி இருந்தா நா உங்க கிட்ட மன்னிப்பு கேட்டுகிறேன்.
நீங்க இவங்க மூனு பேரையும் நினைச்சு கவல படாதீங்க நாங்க பாத்துக்கறோம்.
கங்காவுக்கு நானே டியூசன் சொல்லி தரேன்.நானோ, ரமேஷோ நைட் வந்து தூங்கிகறோம்.
நீங்க அங்க பத்திரமாக இருங்க மாமா. என்மேலே ஏதாவது கோபம்னா மன்னிச்சிடுங்க
இப்படிக்கு,
கலா
மகாராஷ்டிரா மலைப்பாங்கான காடுகளில் ஆயிரம் அடி ஆழ்துளை கிணறு வெட்டி தண்ணிர் எடுக்கும் வேலை சிவராமனுக்கு
இரவுபகல் பாராது வேலை.ஒரிடத்தில் தண்ணீர் எடுக்க போர் இறக்க ஆரம்பித்தால், தண்ணீர் வரும் வரை ஓய்வில்லாமல் உழைக்க வேண்டும்.
வாங்கிய முதல் சம்பளத்தில் கால்வயிறு உண்டு. குடும்ப செலவுக்கு பணம் அனுப்பி, மீதியை மிச்சப்படுத்தி சேமித்தும் விட்டார்.
எழுதப்படிக்கதான் தெரியாது,ஆனால் கணக்கில் புலி நம் சிவராமன்.
பதில் கடிதம் வந்தது,
கையெழுத்தை பார்த்துமே தெரிந்து கொண்டார் இது கலாவினுடையது என,இனி மூவரை பற்றிய கவலை இல்லை.ஒருவாரமாக எப்படி தனியாக இருப்பார்களோ? என்று
எண்ணியவருக்கு இன்று கலாவின் கையெழுத்தை கடிதத்தில் பார்த்தும் ஒரு நிம்மதி.
தன் மாமா மணி மூலம் கடிதத்தில் எழுதி இருப்பதை தெரிந்து கொண்டார்.இங்கு சிவராமன் மணி மூலம் கடிதம் எழுதி வந்தால், அங்கே லட்சுமி கலா மூலம் கடிதம் எழுதி வந்தார்.
முதல் முறையாக படிப்பின் அவசியத்தை உணர்ந்து கொண்டனர் இருவரும்.அதனால் ஒவ்வொரு கடிதத்திலும் கங்காவை நன்றாக படிக்க சொல்லியும், அவளது பரிட்சை,மார்க் விஷயத்தையும் பகிர்ந்து கொண்டனர்.
கடிதத்தின் முதல் இரண்டு பக்கம் லட்சுமியும்,மூன்றாம் பக்கம் கலாவும் எழுதுவதை வழக்கமாக்கிக் கொண்டனர்.
அப்படியே சிவராமனும்
தொடர்ந்தார்.முதல் இரண்டு பக்கம் லட்சுமிக்கும்,மூன்றாம் பக்கம் கலாவிற்கும்…
கலா எனக்கு உன்மேலே எந்த கோபமும் இல்ல.உன் வீட்டு ஆட்கள் மீதும் எந்த கோபமும் இல்லை.
எனக்கு கொஞ்சம் நேரம் சரியில்லை அதுதான் வீட்டை விட்டு தள்ளி இருக்கலாம்னு வந்துட்டே.ஆனா ஒரு லட்சியத்தோடதான் இங்க வந்து இருக்கேன்.
நா திரும்பி வரே வரைக்கும் அவங்க மூனு பேரையும் நீதான் பாத்துக்கனும்.லட்சுமி புள்ளைக குறும்பு செஞ்சா கோபத்துல அடிச்சறே போறா, அடிக்க வேண்டானு சொல்லு.கங்காவுக்கு டியூசன் சொல்லி கொடு .
உன்வீட்டுக்கு லட்சுமிய கூட்டிட்டு போ,அங்க வராமே இருக்க போறா.
ஏதாச்சு பணம் தேவைபட்டா கொடு,நா ஊருக்கு வந்ததும் திருப்பி தரேன்
இப்படிக்கு,
சிவராமன்.
போன் நெம்பர் கொடுத்ததில் இருந்து கங்கா காலை மாலை இருவேளையும் டீக்கடையிலும்,டெய்லர் கடையிலும் மாறி மாறி எங்க அப்பா போன் பண்ணுச்சா? என கேட்டுக் கொண்டே இருந்தாள்.
அவள் காத்திருப்புக்கு பலனாக அன்று மாலை சிவராமன் போன் செய்து விட்டார்.
–தலைவன் வருவான்.
