Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

ராஜாளியின் சிறகினில் ரோஜாப்பூ

ராஜாளியின் சிறகினில் ரோஜாப்பூ – 2

 

அத்தியாயம்— 2
அதிகாலை மூன்று மணி.
பூம்பாறை மொத்தம் உறங்கியது. ஆனால் வர்மன் உறங்கவில்லை.


Advertisement

அவன் ஜீப்பில் சாய்ந்திருந்தான். லேப்டாப்   திறந்திருந்தது. ஸ்கிரீனில் ஒரு புகைப்படம் வீற்றிருந்தது.  நேற்று மாலை கிராம நுழைவில் நின்ற ஒரு கூட்டம். அதில் சில முகங்களை சர்க்கிள் போட்டிருந்தனர்.
அவன்  டி.எஸ்.பி சந்திரனை அழைத்தான்.
“இந்த நாலு பேரையும் டிரேஸ் பண்ணீங்களா?”

Advertisement

“சார், இவங்க கிராமத்து ஆளுங்க இல்லை. சேலம் கனெக்ஷன் இருக்கு. ஒருத்தன் ஆன்டிக் ஸ்மக்லிங் கேஸ்ல முன்னாடி அரெஸ்ட் ஆனவன்.”

Advertisement

வர்மன் லேப்டாப்பை மூடினான்.
“ஆன்டிக் ஸ்மக்லிங் …சிலை திருட்டு…நீங்க பூம்பாறை கோயில்கள் மற்றும் இடங்களை … ஸ்கேன் செய்யுங்க… சீக்கிரம் “
உடனே தரவுகளுடன் டி.எஸ்.பி  கொண்டு வர. வர்மன்  அவைகளை ஆராய்ந்தான்.

Advertisement

காலை ஐந்து மணி.
மீரா கண் விழித்தாள். வேலாண்டி தாத்தா அனுப்பிய வேப்பிலை தண்ணீர் கையில் இருந்தது. முகம் கழுவி நிமிர்ந்தாள்.
“மேடம்.”
வர்மன் அவளுக்கு எதிரே நின்றிருந்தான். எப்போது வந்தான் என்று தெரியவில்லை. காக்கி யூனிஃபார்ம். கையில் ஒரு கோப்பு.
மீரா அவனை பார்த்தாள். “இந்த நேரத்துல?”
“இப்போவே பேசணும்.”
அவன் தொனியில் இருந்த அர்ஜென்சி அவளை  நிறுத்தியது.
“சொல்லுங்க.”
வர்மன் கோப்பை திறந்தான். நான்கு புகைப்படங்களை நீட்டினான்.
“நேத்து மாலை கிராம நுழைவில இந்த நாலு பேரும் இருந்தாங்க. இவங்க கிராம மக்கள் இல்லை. ஆன்டிக் ஸ்மக்லர்ஸ் போலியான சப்போர்ட்டர்ஸ் வேஷத்துல வந்திருக்காங்க.”
மீரா புகைப்படங்களை எடுத்தாள். கவனமாகபார்த்தாள்.
“இவங்களுக்கும் இந்த போராட்டத்துக்கும் என்ன சம்பந்தம்?”
“நேரடியா இல்லை. ஆனா இன்டைரக்டா  இருக்கு.” வர்மன்ஒரு நொடி நிறுத்தினான்.
“இந்த கிராமத்துல முக்கியமான மூணு கோயில் குழந்தை வேலப்பர், மகாலட்சுமி அண்ட் சாமுண்டீஸ்வரி கோவில் இருக்கு. அதுல ரொம்ப தனிமையான இடத்துல செங்குத்தான மலைப்பாறையின் உச்சியில் அமைஞ்சிருக்கிற கோவில் சாமுண்டீஸ்வரி ….ஆயிரம் வருஷம் பழசு. உள்ளே இருக்கற மூல விக்கிரகம்… சோழர் காலத்து பஞ்சலோக சாமுண்டி … அதோட மார்க்கெட் வேல்யூ இன்டர்நேஷனல் பிளாக் மார்க்கெட்ல கோடிகளில இருக்கு.” சோ ஐ சஸ்பெக்ட் இட்….”
மீரா புகைப்படத்தை கீழே வைத்தாள்.
“நீங்க சொல்ல வர்றது என்னன்னு புரியுது. ஆனா புரூவ் பண்ண என்ன இருக்கு?”
“இன்டெலிஜென்ஸ் ரிப்போர்ட் இருக்கு. இந்த போராட்டம் ஒரு டிஸ்ட்ராக்ஷன். மக்கள் கூட்டமா இங்க இருக்கும்போது, வேற ஒரு கூட்டம் கோவிலை…”
“ஒரு நிமிஷம்.” மீரா கை தூக்கினாள். “இன்டெலிஜென்ஸ் ரிப்போர்ட் என்னன்னு தெரியும். அது எல்லா நேரமும் நூறு பர்சென்ட்  அக்யூரேட்டாஆ  இருக்காது.”
வர்மன் கண்கள் இறுகின. “இந்த கேஸ்ல இருக்கு.”
“எப்படி தெரியும்?”
“பன்னிரண்டு வருஷம் ஃபீல்டில இருக்கேன்.தெரியும்.”
“நீங்க என்ன பண்ண போறீங்க?”
“கோவிலை செக்யூர் பண்ணணும். என்னோட டீம்மை உள்ளே அனுப்பணும். போராட்டத்தை இப்போவே கலைக்கணும்.”
மீரா எழுந்தாள்.
“வர்மன். நீங்க போராட்டத்தை கலைச்சா என்னாகும் தெரியுமா? மூணு நாள் பசியில இருக்கற மக்கள் ரியாக்ட் பண்ணுவாங்க. அந்த ரியாக்ஷன் ஒரு போராட்டம் ஆகும். அதுல யாராவது ஹர்ட் ஆனா … அது உங்க இன்டெலிஜென்ஸ் ரிப்போர்ட்-ஐவிட பெரிய பிராப்ளம்.”
“போராட்டம் கலையலன்னா கோவில் போகும்.”
“போராட்டம் கலைஞ்சா மக்கள் போவாங்க.”
“கோவிலை கவர்ட்டா செக்யூர் பண்றேன்.  ப்ளைன் கிளோத்ஸ்ல என்னோட ஆளுங்களை உள்ளே போடுவேன். யூனிஃபார்ம் இல்லை.”
மீரா தலையசைத்தாள். “நான் வேலாண்டி தாத்தாவிடம் பேசுறேன். கோவிலை கிராம மக்களே இன்னைக்கு இரவு காவல் காக்கணும்னு சொல்லுவேன். திரெட் இருக்குன்னு அவங்களுக்கு தெரிஞ்சா அவங்களே விழிப்பா இருப்பாங்க.”
வர்மன் ஒரு நொடி யோசித்தான்.
“சரி. ஆனா ஒரு கண்டிஷன்”
“என்ன?”
“நீங்க இன்னைக்கு இரவு கிராமத்துல இருக்கக்கூடாது.”
மீராவின் கண்கள் இறுகின.
“நான் போனா இந்த மக்களுக்கு என்னன்னு சொல்றது? மூணு நாள் இங்க இருக்கேன், திடீர்னு போறேன்னு?”  “நான் போக மாட்டேன்”
சுர்ரென வர்மனுக்கு கோபம் தலைக்கேறியது. அவன் கண்கள் சிவக்க, குரல் ஒரு தணிந்த கர்ஜனையாய் ஒலித்தது.
“இவ்வளவு சொல்லிட்டு இருக்கேன்..இங்க தான் இருப்பேன்னு அடம்பிடிக்கிற… அறிவில்லையாடி உனக்கு?” எரிமலை குழம்பாய் அவன் ஆத்திரம் கொப்பளித்தது.
நிழல்களும் வெளிச்சமும் பின்னிப் பிணைந்தஅந்த விடியற்காலை வேளை. அந்த விடிந்தும் விடியாத அந்தி மயக்கத்தின் பின்னணியில், தூரத்தில் போலீஸ் ஆபீஸர்களின் காலடிச் சத்தமும் டார்ச் வெளிச்சமும் ஊசலாடிக் கொண்டிருக்க, இவளும் அவனுமாய் அந்தச் சிலிர்க்க வைக்கும் குளிரில் நின்றிருந்தனர்.
தன்னைச் சுற்றியுள்ள ஆபத்தை மறந்து, வர்மன் ஏதோ ஒரு விபரீதத்தின் விளிம்பில் நின்று கொண்டிருப்பதை உணர்ந்த மீரா, தன் நடுக்கத்தை அடக்கிக்கொண்டு கையை உயர்த்தினாள்.
“ஏய்…” எச்சரிக்கையோடு அவள் நீட்டிய அந்த விரல் வர்மனை நிறுத்தவில்லை, மாறாக இன்னும் தூண்டிவிட்டது.
“என்னடி ஏய்?” அவன் ஒரு புலியின் வேகத்தோடு பாய்ந்து, அவள் நீட்டிய விரலை மடக்கி, அவளது இடை வளைத்துத் தன் மார்போடு சேர்த்து அணைத்தான். அவளது மூச்சுக் காற்று அவன் கழுத்தில் பட, அவன் குரல் அதீத அதிகாரத்தோடு அவள் காதில்விழுந்தது.
“நான் சொல்றதைக் கேட்கவே மாட்டியா?”
வர்மனின் பிடி அவளை மீற விடாமல் தடுத்தது, அதே சமயம் அவன் இதயத் துடிப்பு அவள் மார்பில் உணரத்தக்க வேகத்தில் இருந்தது. எல்லையைத்தாண்டிக் கொண்டிருந்த அந்தத் தருணம், காலம் உறைந்து நின்றது போலிருந்தது.
அவள் விழிகள் தீக்கங்குகளைப் போல் ஜொலிக்க, “மாட்டேண்டா.. இந்த மக்களை விட்டுப் போக மாட்டேன்!” என்று உறுதியாகக்கூறினாள்.
அந்தச் சூழலின் அதீத நெருக்கம் அவனைப் பாடாய்ப் படுத்தியது. அவள் மறுப்புச் சொல்லும் ஒவ்வொரு முறையும், அந்த மறுப்பில் இருந்த பிடிவாதம் அவனுக்கு ஒருவிதமான வெறியைத் தரும்.
அந்த நிலையிலும் அந்த செர்ரி இதழ்கள் கண்ணுக்குள் விழுந்து இம்சையாய் இம்சித்தது.
” சித்திரவதை டி  ”  என்று அவளைத் தள்ளிவிட்டு நின்றான் வர்மன். அவனதுகண்கள் ஏமாற்றத்திலும் கோபத்திலும் தகித்தன. “இதுதான் உன் முடிவா?”
“ஆமா…” என்று அவள் சுருங்கிய குரலில் சொன்னாலும், அதில் உறுதியிருந்தது.
அவன் பிடியிலிருந்து விடுபட்ட அந்த நொடியில், அவளது இடை வலித்தது. ஆனால், அதைவிட அவளது மனம் வலித்தது. வர்மனின் முரட்டுத்தனமான பிடி விலகியிருந்தாலும், அவன் கேட்ட அந்தச் சொல்லின் வீரியம் அவளைப் பாதித்தது. அவன் அவளைத் தள்ளிவிட்ட விதம், அவள் மீதான அவனது கோபத்தின் உச்சத்தைக் காட்டியது.
“ச்ச…” என்று ஆத்திரத்தோடு முணுமுணுத்தபடி, அங்கிருந்து திரும்பிப் போய்விட்டான் வர்மன். அவன் காலடிச் சத்தம் அந்த அமைதியான இரவில் தள்ளிப்போவதை மௌனமாகப் பார்த்துக் கொண்டிருந்தாள் மீரா. அவன் சென்று மறைந்த அந்த இருண்ட பாதையையே பார்த்திருந்த அவளது விழிகள்,  இமைக்க மறந்திருந்தன.
ஆறு வருடங்களுக்கு முன்னால், முன்னர் இதே போன்ற ஒரு நிலையில் தன்னை விட்டுச் சென்ற போது அவள் அழுதிருந்த அதே நிலை! என்ன ஒன்று, அப்பொழுது அவளது இதழ்களில் அவன் முத்தம் பதித்து விட்டுச் சென்றிருந்தான். இன்றும்அது ஒரு ஆறாத வடுவாய் அவளுக்குள் எரியூட்டிக்கொண்டிருந்தது!
ஆனால் இன்று, அதே இடத்தில் நின்று கொண்டிருக்கையில், காலத்தின் ஓட்டத்தில் கரைந்துபோன அவனது அந்தத் தீண்டலுக்காக, அவளது இதழ்கள் ஏங்கித் துடித்தன. வெறிச்சோடிய அந்த வெளியில், காற்றும் அவளைக் கேலி செய்வது போல வீசியது. தனது இதயத்தின் இவ்வளவு பெரிய பலவீனத்தை எண்ணி அவளே தன்னை வெறுத்துக் கொண்டாள்.
ஒரு துளி கண்ணீர் கன்னத்தில் வழிந்து, விடியப் போகும்அந்தப் பொழுதின் குளிரில் குளிரத் தொடங்கியது.
காலையினுடைய பொன்நிறக் கதிர்கள் அந்தகிராமத்தை மெல்லத் தழுவிக்கொண்டிருந்தன; அந்திப்பொழுது விடிந்தும், வர்மனின் சுவடே அங்கு இல்லை. அமைதியின் ஆழத்தில் ஊறிப்போயிருந்த அந்தச் சூழலில், போலீஸ் சீருடையின்கம்பீரத்தோடு டி.எஸ்.பி சந்திரன் அங்கே வந்து சேர்ந்தார்.
அவரது முகத்தில் ஒரு பதற்றம் தெரிந்தது.அவசரமான குரலில் பேசத் தொடங்கினார்.
“மேடம், நிலைமை விபரீதமாகிக் கொண்டிருக்கிறது. நீங்க தயவுசெய்து அந்த உள்ளூர் கிராம மக்களிடம் பேசி, நிலவரத்தின் தீவிரத்தை, அந்தச்சிலை கடத்தலின் பின்னணியில் இருக்கும் ஆபத்தைப் புரிய வைங்க.
” வர்மன் சார் திட்டமிட்டது போல, சிலை கடத்தல் கும்பல் அந்தச்  இடத்தைச் சுற்றிபதுங்கியிருக்கும், அவர் மதியத்துக்குள் அங்கே போய்விடுவார்.
மீரா ஒரு கணம் கண்களை மூடி மௌனமானாள். வர்மன் அங்கு சென்றால் நடக்கப்போகும் விபரீதங்கள் அவளது கண்முன்னே நிழலாடின.
“அவர் காட்டு வழியே பைக்கில் சென்றால், இன்னும் அரை மணி நேரத்தில் அந்தப் பகுதியை அடைந்துவிடுவார். வர்மன் சார் ஒரு முறை முடிவெடுத்துவிட்டால்,அதை யாராலும் தடுக்க முடியாது என்று உங்களுக்குத் தெரியுமே!”
சிலை கடத்தல் கும்பல் சாதாரணமானது அல்ல, அவர்கள் ஏற்கனவே ஆயுதங்களுடன் தயாராக இருப்பர்கள்.
“பேக்கப் (backup) போயிருக்கா??”
“பேக்கப் பின்னாடி ஜீப்ல இப்போ கிளம்பிடுவாங்க”.என்றார்.
அவளுக்கு என்ன தோன்றிற்றோ…”சார் உடனேபேக்கப் போங்க!, அங்கு வர்மன் சார் கால் வைப்பதற்குள், அங்கே இருக்க வேண்டும்!
சந்திரனை அனுப்பிய வேகத்திலேயே, மீராவேலாண்டி தாத்தாவின் வீட்டை நோக்கிப் பறந்தாள். மூச்சிரைக்கத் தாத்தாவைத் தேடினாள்.அவரிடம் நிலைமையை விளக்கினாள். “தாத்தா, நம் கோயிலுக்குப் பெரிய ஆபத்து வந்திருக்கு. அது சிலை திருடும் கும்பல். அவர்கள் போராட்டத்தையே ஒரு திரையா வெச்சுக்கிட்டு, உள்ளேநுழையப் பாக்குறாங்க. கிராமத்துல அந்நிய மனிதர்கள் யாரும் தெரியுறாங்களான்னு பாருங்க,எல்லாரையும் அலர்ட் பண்ணுங்க!” என்று எச்சரித்தாள்.
தாத்தா அதிர்ச்சியில் உறைந்து நின்றாலும்,மீராவின் உறுதியைக் கண்டு அந்த ஊரையே திரட்டினார். ஊர் மக்கள் தடிகளுடனும், விழிப்புணர்வுடனும்கோயிலைச் சூழ்ந்துகொள்ள  கிளம்னர்.
அதே வேகத்தில், தன் செல்போனை எடுத்த மீரா,உயர் அதிகாரிகளுக்கு போன் செய்தாள். மறுமுனையில் மாநிலத்தின் உயர் அதிகாரி. மீராவின்குரலில் அந்த நொடி, ஒரு மாவட்ட ஆட்சியருக்கே உரிய அதிகாரமும், துணிச்சலும் கொப்பளித்தது.
“சார், நான் மீரா பேசறேன். பூம்பாறை மலைக்கிராமத்துல நிலைமை விபரீதமாயிடுச்சு. இது வெறும் போராட்டமோ அல்லது சட்டம் ஒழுங்கு சம்பந்தப்பட்டதோ மட்டும் கிடையாது. நம்முடைய கலாச்சாரச் சொத்து, ஆயிரம் வருஷம் பழமையான பஞ்சலோக சாமுண்டி விக்கிரகம் கடத்தப்படுற சூழல் ஏற்பட்டிருக்கு.
நேரம் கடந்துட்டு இருக்கு சார். வர்மன் சார் அங்க கிளம்பிட்டார். ஆனா இது ஒரு தனிப்பட்ட ஆபரேஷன் கிடையாது. இந்த மாவட்டத்தோடஒரு உயிர்நாடி இது. அரசாங்கம் மௌனமா வேடிக்கை பாத்துட்டு இருக்க முடியாது!
உடனே, இந்த மாவட்டத்தோட ஸ்பெஷல் டாஸ்க்போர்ஸ் (Special Task Force) குழுவை அந்த மலைப்பகுதிக்கு அனுப்புங்க. அதே சமயம், எல்லைப்பகுதிகள்ல இருக்கற செக்போஸ்டுகளை இப்போதே சீல் பண்ண உத்தரவிடுங்க. நான் இப்போ களத்துல இருக்கேன், கிராம மக்களோட ஆதரவு எனக்கு இருக்கு. ஒரு சிலையைக்கூட என் மாவட்டத்தை விட்டு வெளியே கொண்டு போக விடமாட்டேன். இப்போ எனக்குத் தேவை வெறும் உத்தரவு இல்லை, உடனே களத்துல இறங்கக்கூடிய கூடுதல் பலம் (Backup Forces). அரசு என்னோடு நிக்கும்னு நான் நம்புறேன்.அந்தப் பலத்தை உடனே உறுதிப்படுத்துங்க!”
அதிகாரிகளின் முன்னால் அடிபணியாத, துணிச்சலான அந்தப் பேச்சில், மறுமுனையில் இருந்தவர்கள் கூட ஒரு கணம் அமைதியானார்கள். மீரா போனைஅணைத்தாள். அந்த நொடி, அவள் ஒரு ஆட்சியாளராக மட்டுமல்லாமல், தன் மக்களின் காவலராகவும் மாறினாள்
ஜீப்பை மீண்டும் கிளப்பினாள். வர்மனைத் தேடிச் சாமுண்டேஸ்வரி கோயிலின் செங்குத்தான பாதையை நோக்கி அவள் புறப்பட்டபோது, அவள் கண்கள் இமைக்காமல் அந்த இலக்கையே பார்த்தன..
அவள் நெஞ்சில் ஒரு பக்கம் அச்சம், இன்னொரு பக்கம் வர்மனைப் பார்க்க வேண்டும் என்ற தவிப்பு! அந்த மலைக்கோயிலின் உச்சியில் என்ன காத்திருக்கிறது?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!