Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

ராஜாளியின் சிறகினில் ரோஜாப்பூ

ராஜாளியின் சிறகினில் ரோஜாப்பூ – 13



Advertisement

அத்தியாயம்– 13:
தேனியின் விடியல் எப்போதுமே அழகானது. ஆனால், அன்றைய காலைப்பொழுது ஒரு அமைதியான புயலுக்கான எச்சரிக்கையோடு விடிந்தது.

Advertisement

வாணிஸ்ரீ சர்க்கரை ஆலையின் பிரம்மாண்டமான இரும்பு வாயிலுக்கு முன்னால், மாவட்டத்தின் இரண்டு மிக முக்கிய அதிகாரத்துவ சக்திகளும் நின்று கொண்டிருந்தனர்.

Advertisement

மாவட்ட ஆட்சியர் மீரா. வெளிர் நீல நிற காட்டன் புடவை, நேர்த்தியாகக் கட்டப்பட்ட கூந்தல், கண்களில் கலெக்டருக்கே உரிய கம்பீரம். அவளுக்கு இணையாக, இரும்புத் தூண் போல நின்றுகொண்டிருந்தான் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர்(SP) வர்மன். கச்சிதமாகப் பொருந்தியிருந்த காக்கி சீருடை, பளபளக்கும் தோள் பதக்கங்கள், கைகளில் லத்திக் கம்பு. வர்மனின் அந்த மிடுக்கான தோற்றமும், மீராவின் அமைதியான ஆளுமையும் அந்தப் பதற்றமான சூழலிலும் ஒரு நேர்த்தியான அழகைத் தந்தது.
அவர்களைச் சுற்றி நூற்றுக்கணக்கான ஆயுதப்படை போலீசார் பாதுகாப்பு வளையம் அமைத்திருக்க, ஆலைக்கு முன்னால் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கைகளில் யூனியன் கொடிகளுடன் ஆக்ரோஷமாகக் கோஷமிட்டுக் கொண்டிருந்தனர்.
 “நியாயம் வேண்டும்  நியாயம் வேண்டும்! “

Advertisement

“அடிக்காதே அடிக்காதே!  தொழிலாளர்கள் வயிற்றில் அடிக்காதே!”
திடீரென்று, கூட்டத்தைப் பிளந்துகொண்டு ஒரு கறுப்பு நிற ஸ்கார்பியோ (Black SUV) கார் வந்து நின்றது.
கார் கதவு திறக்கப்பட, அதிலிருந்து இறங்கினான் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ கொடிவீரன்.
அவன் மிக உயரமானவன், அடர்ந்த தாடியும் முறுக்கிய மீசையும் கொண்ட அழகான தோற்றம். காக்கிச் சீருடையில் இருக்கும் வர்மனுக்கு நேர் இணையாக உடலமைப்பு அவனுக்கு இருந்தது. வெள்ளை நிறக் கதர் சட்டையும் வேட்டியும் அவனது கம்பீரத்தை இன்னும் கூட்டிக் காட்டியது.
அவன் அருகே வந்தபோது தான் மீரா அவனை முழுமையாக கவனித்தாள்.
முப்பதுகளைத் தாண்டாத வயது.
கூர்மையான தாடை. அழுத்தமான கண்கள்.
கிராமத்து கம்பீரமும், அரசியல் நுண்ணறிவும் சேர்ந்த முகம்.
அவன் சிரிக்கவில்லை.
அவன் நேராக மீராவை பார்த்தான்.
“கலெக்டர் மேடம்.” அவனது குரல் ஆழமாக இருந்தது. “இந்த டிஸ்ட்ரிக்ட்ல ஆட்சி நிர்வாகத்துக்கு லேபரர்ஸ் குரல் கேட்கணும்னா ரோடுக்கு வரணும்னு ஆகிடுச்சு.”
வர்மனின் முகம் உடனே கடினமானது. “ரோடு பிளாக்கேட் லீகல் இல்ல எம்.எல்.ஏ சார்.”
கொடிவீரன் மெதுவாக அவனை திரும்பிப் பார்த்தான். அந்த பார்வை சாதாரணமில்லை. இரண்டு ஆண்களின் சைலண்ட் க்ளாஷ். “சட்டம் பேசுறதுக்கு முன்னாடி…”
 “ சம்பளம் தராத மில் ஓனர் கிட்ட கேளுங்க எஸ்பி சார்.” வர்மனின் தாடை  இறுகியது.
அதே நேரத்தில், எதிர்க்கட்சித் தலைவரும் அந்த ஆலையின் உரிமையாளருமான தனபாலன் தன் ஆதரவாளர்களுடன் அங்கே வந்து சேர்ந்தார். ஐம்பது வயதிற்கு மேல். தடித்த தங்கச் சங்கிலி. வெள்ளை சட்டை. ஒரு அரசியல்வாதியின் அத்தனை அமைப்புகளும் நிறைந்து இருந்தார்.
சூழல் இன்னும் சூடானது. தனபாலன் மேடைக்கு அருகில் வந்து, “தொழிலாளர்களே… ஆலை நஷ்டத்துல ஓடுது. நீங்க இப்படிப் போராட்டம் பண்ணுனா ஒரு பைசா கூட கிடைக்காது. பேசாம கலைஞ்சு போங்க!” என்று கூட்டத்தை அடக்க முயன்றார்.
அந்த ஒரு வரிக்கே கூட்டம் வெடித்தது.
“ 6 மாதமா சம்பளம் குடுக்கல!”
“எங்க குழந்தைகள் பட்டினி!”
“நீங்க அமைதியா இருக்க சொல்றீங்களா?!”
அதற்குள் கொடிவீரன் முன்னே வந்தான்.
அவன் கை உயர்ந்தவுடனே கூட்டம் கொஞ்சம் அமைதியானது.
அந்த செல்வாக்கை மீரா கவனித்தாள்.
அவனது குரல் இடி முழக்கத்தைப் போலக் கேட்டது.
“ஆலை நஷ்டத்துல ஓடுதா? அப்போ போன மாசம் உன் பையன் வாங்கின சொகுசு கார் எந்தப்பணத்துல வந்தது? தொழிலாளர்களோட சம்பள பாக்கியைக் கொடுக்காம நீ இங்கிருந்து ஒரு அடிகூட நகர முடியாது!” என்று மிகவும் நியாயமாகவும், ஆணித்தரமாகவும் பேசினான்.
தனபாலன் இப்போது வெடித்தான்.
“டேய்! நீ எம்.எல்.ஏ ஆனதால பெரிய புரட்சிக்காரன்னு நினைக்காத!”  கூட்டம் மீண்டும் கொதித்தது.
வர்மன் உடனே பதற்றத்தை உணர்ந்தான். “எல்லாரும் பின்னாடி போங்க!” ஆனால் தனபாலன் அங்கேயே நிற்கவில்லை.
“இந்த தொழிலாளர்கள் போராட்டத்தையே நீ அரசியல் லாபத்துக்காக தூண்டுற!”
“தூண்ட வைக்கிற நீ”
நான் பார்க்க வளர்ந்தவன் டா நீ!”
“நான் பார்க்க விழுந்தவங்க உங்க குடும்பம்! ஒரு தொழிற்சாலை உரிமையாளரா இருக்கலாம் நீ… ஆனா இவங்க வயித்துல அடிக்க உனக்கு உரிமை கிடையாது.”
 கொடிவீரனின் அதிரடிப் பேச்சில் நிலை தடுமாறிய தனபாலன், ஆத்திரத்தின் உச்சிக்குச் சென்று கொடிவீரனை அறையக் கையை ஓங்கினார்.
“டேய்!”
அவன் கை உயர்ந்தது..
அடுத்த நொடி…ஒரு அக்மார்க் சினிமா பாணியில், தனபாலனின் கையை நடுவானில் கச்சிதமாகப் பற்றினான் கொடிவீரன். அவனது கைகளின் நரம்புகள் புடைத்தன.
கொடிவீரனின் விரல்கள் இரும்பு போல அவன் மணிக்கட்டில் இறுகியிருந்தது. வலியில் தனபாலனின் முகம் சுருங்கியது.
அவன் மெதுவாக அருகே குனிந்தான்.
“கை நீட்டுறதுக்கு முன்னாடி…எதிர்ல யாருனு யோசிச்சிருக்கணும்.”
தனபாலனின் கண்களை நேருக்கு நேர் பார்த்து, விரல்களை இறுக்கியபடி எச்சரித்தான்…
“இந்த ‘கொடிவீரன்’ மேல கை வச்சா, தேனி மாவட்டத்துல நீ அரசியல் பண்ண முடியாது. ஜாக்கிரதை!” அவனது அந்த மாஸ் ஆட்டிட்யூட் அங்கிருந்த தொழிலாளர்களை விசில் அடிக்க வைத்தது.
மீராவின் இதயம் வேகமாக அடித்தது.
ஏனெனில் அந்த நொடியில் கொடிவீரன் சாதாரண அரசியல்வாதியாக தெரியவில்லை..
அவன் ஒரு அசாத்திய சக்தி! ( raw power).
அதே நேரத்தில் வர்மன் முன்னே வந்தான்.
“போதும்!” அவன் குரல் முழு இடத்தையும் குலுக்கியது.
“இரண்டு பேரும் கொஞ்சம் பின்னாடி போங்க, கூட்டம் அஜிடேட் ஆகுறாங்க!”
அப்பொழுது கூட்டத்தின் ஏதோ ஒரு மூலையிலிருந்து எரியும் ‘பெட்ரோல் குண்டு’ (Petrol Bomb) ஒன்று ஆலை வாயிலில் வந்து விழுந்து வெடித்தது! வர்மன் கொடி வீரனை முறைத்தான்…. பார் உன் ஆட்கள் வன்முறை யில் இறங்குகிறார்கள் என….
நெருப்புப் பிழம்பு எழ, கூட்டம் அலறிக்கொண்டு நாலாபுறமும் சிதறியது. நிலைமை சட்டம்-ஒழுங்கு பிரச்சினையாக மாறியது.
காவல்துறையின் தடுப்புக் கேடயங்கள் உயர்ந்தது.
“BACK!”
வர்மனின் கர்ஜனை முழு இடத்தையும் குலுக்கியது.
அவன் மின்னல் போல ஓடி நெருப்புப் பகுதிக்கு போனான்.
“Water unit move!”
வர்மன் அந்த நொடியில் முழுக்க ஐபிஎஸ் அதிகாரியாக மாறிவிட்டான்.
“NO LATHI CHARGE!”
ஒரு காவலர் பதற்றத்தில் தடியை உயர்த்தினான். வர்மன் அவனை தள்ளிவிட்டான். “உத்தரவு வராம யாரும் கூட்டத்தைத் தொடக்கூடாது!”
ஒரு குழு இரும்புத் தடுப்புகளை உடைக்க முயன்றது. வர்மன் நேராக கூட்டத்திற்குள் இறங்கினான். “யாரும் ஓடாதீங்க!”
ஒரு தொழிலாளியோ தீக்குள் சிக்கப்போனான். வர்மன் அவனை இழுத்து வெளியே தள்ளினான். அந்த கம்பீரமான ஆளுமையின்  முன்னிலை கூட்டத்தையே நின்றுபோக வைத்தது.
அதே நேரத்தில்… மீரா மைக்ரோஃபோனைக் கையில் எடுத்தாள். ஒரு கலெக்டராக அவளது குரல் அங்கே ஒலித்தது… “தொழிலாளர்களே, வன்முறை தீர்வல்ல. உங்களுக்கான சம்பள பாக்கியை பெற்றுத் தர மாவட்ட நிர்வாகம் பொறுப்பேற்கிறது. தயவுசெய்து அனைவரும் கலைந்து செல்லுங்கள்!”
மீண்டும் மீண்டுமாய் அழுத்தமாக ஆணித்தரமாக  அவள் கூற அவளது தீர்க்கமான பேச்சு தொழிலாளர்களை அமைதிப்படுத்தியது.
கொடிவீரனும் தனது தொண்டர்களைகளை நோக்கி உரைத்தான்.
“யாராவது வன்முறையில் இறங்கனா முதல்ல நானே காவல்துறையிடம் ஒப்படைப்பேன்!”
மெல்ல மெல்ல கூட்டம் அமைதியானது. பத்துநிமிடங்களுக்குப் பிறகு தீ முழுக்க அணைக்கப்பட்டது. சில இடங்களில் புகை மெதுவாக மேலேறிக்கொண்டிருந்தது. அந்த சில நிமிட குழப்பத்திற்கு பிறகு, நிலைமை மீண்டும் மெதுவாக கட்டுப்பாட்டுக்குள் வந்து கொண்டிருந்தது.
காயமடைந்த தொழிலாளர்களுக்கு முதலுதவி கொடுக்கப்பட்டது. பெண் காவலர்கள் பெண்களை அமைதிப்படுத்திக் கொண்டிருந்தனர்.
விளக்குகளின் கீழ் வியர்வையுடன் நின்று கொண்டிருந்தான்வர்மா.  காக்கி சட்டையின் காலர் முழுக்க தூசி. ஆனால் அவன் கண்கள் இன்னும் முழுக்க விழிப்புடன் இருந்தன. எங்கிருந்து மீண்டும் வன்முறை வெடிக்கும் என்று கணக்கிட்டிக்கொண்டிருந்தது.
அதே நேரத்தில்….மீரா தற்காலிக சமரச பேச்சுவார்த்தை மேஜை அமைக்க சொல்லியிருந்தாள். ஆலை அலுவலகம் முன்பு பிளாஸ்டிக் நாற்காலிகள். ஒருபுறம் நிர்வாகக் குழு. மறுபுறம் தொழிலாளர் பிரதிநிதிகள். நடுவில் கலெக்டர் மீரா. அவளருகில் நின்று கொண்டிருந்தான் கொடிவீரன். தனபாலனின் முகம் இன்னும் அவமானத்தால் சிவந்திருந்தது. ஆனால் இப்போது அவனுக்கே புரிந்துவிட்டது… சூழ்நிலை கைமீறி போயிருந்தது.
மீரா கோப்பை மூடி நேராக கேட்டாள். “இறுதியாக சொல்லுங்க.” அவளது குரல் மிகவும் அமைதியாக இருந்தது. ஆனால் அந்த அமைதிக்குள் உத்தரவு இருந்தது. “நிலுவை சம்பளம் வழங்குவது எப்போ ??
நிர்வாக வழக்கறிஞர் மெதுவாக ஏதோ பேச ஆரம்பித்தான்.“மேடம்… நிறுவனத்தின் பணப்புழக்கம்—”
“தேதி.” அந்த ஒரு வார்த்தையில் இருந்தது அந்த வன்மை, அவள் மாவட்ட கலெக்டர்!  வழக்கறிஞர் அமைதியானான்.
தனபாலன் பற்களை கடித்தபடி சொன்னான்.. மூன்று வேலை நாட்களுக்குள்.”
கூட்டத்தில் உடனே சலசலப்பு. கொடிவீரன் குளிர்ந்த பார்வையுடன்   “எழுத்துப்பூர்வமாக குடுங்க” என்றான்.
தனபாலன் அவனை முறைத்தான். “நீ…
“எழுத்துப்பூர்வமாக.” இந்த முறை கொடிவீரனின் குரல் ஆபத்தாக இருந்தது.
வர்மன் உடனே அந்த பதற்றத்தை உணர்ந்தான். இருவரும் மீண்டும் மோத ஆரம்பிக்கிறார்கள். மீரா உடனே கோப்பை முன்னால் தள்ளினாள். “அதிகாரப்பூர்வ ஒப்பந்தத்தில் கையெழுத்திடுங்கள்.”
அந்த பேனா காகிதத்தின் மேல் உரசும் சத்தம்கூட அங்கே நின்ற தொழிலாளர்களுக்கு நிம்மதியாக இருந்தது. மீரா ஆவணத்தைப் பார்த்தாள். மூன்று நாட்களுக்குள் நிலுவை சம்பளம், வருங்கால வைப்பு நிதித் தீர்வு, ஊக்கத்தொகை பேச்சுவார்த்தை தேதி!
அவள் மெதுவாக தலை நிமிர்ந்தாள். “சரி.”
கைத்தட்டல். கோஷம். சில பெண்கள் உண்மையாகவே அழ ஆரம்பித்தார்கள். ஒரு வயதான தொழிலாளி கைகளை உயர்த்தி, “நன்றி தம்பி!” என்று கத்தினான். கொடிவீரன் சிரிக்கவில்லை. கூட்டம் இப்போது மெதுவாக கலைய ஆரம்பித்தது.
மீரா ஒரு ஆழ்ந்த மூச்சு விட்டாள். அந்த நேரத்தில் கொடிவீரனைப் பார்த்து அவளறியாமலே கூறினாள் “ குட் ஜாப் சார்.”
கொடிவீரன் சிரித்தான்.
” ஆனா ஒன்னு ….நீங்க அந்த மில் ஒனர ப்ரவோக் பண்ணீங்க.”
“ஒரு தொழிலாளியோட பசியை அவமானப்படுத்துறவனை அமைதியா கேட்கணுமா? சில நேரம் மௌனமே குற்றமாகிடும் கலெக்டர் மேடம்.” அவன் சுற்றி நின்ற தொழிலாளிகளை காட்டினான்.
மீரா அவனை பார்த்துக்கொண்டே இருந்தாள்.
அதே நேரத்தில் வர்மன் அருகே வந்தான்.
கண்களில் இன்னும் அந்த அட்ரினலின் ரஷ்.
“Area secured.”
அவன் நேராக மீராவை பார்த்தான்.
“நீ ஓகே?”
“ம்…”
பிறகு மீரா மிக இயல்பாக கூறினாள்.  “உண்மையிலேயே… கொடிவீரன் சார் கூட்டத்தைக் கையாண்டது பாராட்டுக்குரியது.”
அந்த பாராட்டை ஏற்றுக் கொள்வதாக புன்னனகைத்து கொடி  வீரனும் தொடர்ந்தான்.
“கலெக்டர் மேடம்…”
“ஹ்ம்?”
“நீங்க இன்று மைக் பிடிச்சு கூட்டத்தை அமைதிப்படுத்தியதும் அற்புதம்.”
மீரா இதழோரம் புன்முறுவலோடு அவனை நோக்கினாள்.
வர்மன் அந்த காட்சியை அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தான்.
அவனது கைகள் லத்திக் கம்பின் மேல் இன்னும் இறுகின.
” பார்ரா இவ இவ்வளவு ஓப்பனா சிரிக்கிறா…” அவனுக்கு உள்ளே எரிந்தது.
அவனிடம் எப்போதும் காட்டும் அந்த இறுக்கமான முகமூடியைக் கழற்றிவிட்டு, இவ்வளவு வெளிப்படையாக இன்னொருவன் முன்னால் சிரிப்பது அவனுக்குள் ஒரு கூர்மையான வலியை, ஏற்படுத்தியது.
கொடிவீரன் போகும் முன் திரும்பி சொன்னான்:
“ குட் நைட் மேடம்”
பிறகு வர்மனை பார்த்தான்.
வர்மன் சிறிதாக தலையசைத்தான்.
SUV மெதுவாக இருளுக்குள் மறைந்தது
ஆலைக்கு முன்னால் தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த அந்த நிழற்குடையில் மீராவும் வர்மனும் அமர்ந்திருந்தனர். வர்மன் தன் நெற்றியில் இருந்த வேர்வையைத் துடைத்தான்.
” ப்பா ஹெக்டிக் டே… சிச்சுவேஷன் அவுட் ஆப் கன்ட்ரோல் போயிடுமோனு பயந்தேன்..” என்றாள் மீரா.
“நீட் டு தேங்க் அவர் இன் ஃபார்மர்ஸ்” என்றான் வர்மன்.
“கொடிவீரன் நிஜமாவே ஒரு மாஸ் லீடர் இல்ல வர்மன்?” மீரா தற்செயலாகச் சொல்வது போல அவனது பேச்சை ஆரம்பித்தாள்.
“ஓஹோ… கலெக்டர் மேடம் எம்.எல்.ஏ-வோட ஆக்ஷன் சீன்ல ரொம்ப ஃபிளாட் ஆயிட்டீங்க போல இருக்கு?” அவனது குரலில் கேலியைத் தாண்டி ஒரு தவிப்பும் கோபமும் கலந்திருந்தது.
மீரா லேசாகச் சிரித்துக் கொண்டே ஜன்னல் வழியே பார்த்தாள்.
“இருந்தாலும் ஒரு ஐ.பி.எஸ் ஆபீசர் முன்னாடி நின்னுட்டு, லோக்கல் எம்.எல்.ஏ-வுக்கு பில்டப் கொடுக்கிறது… டூ மச் மீரா!”
வர்மனின் அந்த வார்த்தைகள் காற்றில் கரைந்தாலும், அவனது ஆழமான கண்கள் மீராவை துளைத்தது.
“அந்தப் பெட்ரோல் குண்டு விழுந்தப்போ இந்த வர்மன் பாய்ஞ்சு போய் நின்ன வீரம் உன் கண்ணுக்குத் தெரியலையா? இல்ல, தெரியாத மாதிரி நடிக்கிறியா?” “அவன பாராட்டனும்னு தோனலல்ல…?. என்று அவள்  நெஞ்சே அவளை  கேட்பது போல இருந்ததது. தலையை உலுக்கி கொண்டாள்  மீரா.
“அவன் லாம் ஒரு ஆள்னு… அவன் சரியில்ல மீரா… நீ போய் அவன்ட்ட சிரிச்சிட்ட நிக்கற…?”
மீரா வாய்விட்டுச் சிரித்தாள்.
வர்மனின் இந்த  பொறாமை, இப்படி தன் மேல் வைத்திருக்கும் இந்த உரிமையும் பாசமும் அவளது நெஞ்சை என்னவோ செய்தது. அவளுக்குள் ஒரு மெல்லிய இதம் பரவியது.
எதற்கு இந்த இதம் என்று உள்ளேயே மூளை உடனே ஒரு கேள்வியும் எழுப்பியது!
கூடவே… அவளது அடிமனதின் ஆழத்திலிருந்து இன்னொரு பயமும் தலைதூக்கியது.
ஒருவேளை, அவள் தேடிக்கொண்டிருக்கும் அந்தச் சிறுவயது ‘வீரா’…. அவன் தான் இந்த கொடிவீரனா எ
ன்ற கேள்வி இப்பொழுது அவளுள் வியாபித்திருந்தது..
அவளிடம் பதில் ஒன்றும் வராததில் விருட்டென்று எழுந்து  போய் விட்டிருந்தான் வர்மன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!