கூடல் நகரின் அந்தப் பிரம்மாண்ட அரண்மனை மகாலில், மங்கல நாதஸ்வர இசை தன் உச்சத்தைத் தொட்டிருந்தது. மணமேடையில், ஹோம குண்டத்து அக்னிசாட்சியாக, வேத மந்திரங்கள் முழங்க, ஒட்டுமொத்தக் குடும்பத்தின் ஆசியும் அங்கே குவிந்திருந்தது.
Advertisement
பாட்டிமாவின் நடுங்கும் கைகள், அந்தத் தங்கத் தாலிக் கயிற்றை முறைப்படி எடுத்து, அர்ஜுனின் கைகளில் மென்மையாகக் கொடுத்தன. ஒட்டுமொத்த மண்டபமும் ஒரு நொடி நிசப்தத்தில் ஆழ, ‘கெட்டிமேளம்… கெட்டிமேளம்…’ என்ற குரல்கள் அதிரத் தொடங்கின. அர்ஜுன், கௌதமியின் கழுத்தில் அந்த மங்கல நாணைக் கட்டிய அர்ஜுன், கௌதமியின் கழுத்தில் அந்த மங்கல நாணைக் கட்டிய அடுத்த விநாடி, சுற்றிலும் இருந்தவர்கள் அட்சதைகளையும், மதுரை மல்லிகைப் பூக்களையும் அள்ளித் தெளித்தனர். கௌதமியின் கண்களில் ஆனந்தக் கண்ணீர் துளிர்க்க, அர்ஜுனின் முகத்தில் ஒரு பேரரசனின் புன்னகை படர்ந்திருந்தது.
அனைவரின் முகத்திலும் நிறைவின் ஒளி !
Advertisement
Advertisement
ஆனால், அதே மேடைக்குக் கீழே, மீராவின் உலகமோ அடியோடு சுழலாமல் நின்றே போயிருந்தது.
தாலி கட்டும் சடங்கு முடிந்ததும், மேடையில் இருந்த அந்த பாட்டிமா, கௌதமியின் அண்ணன் செம்பியனின் தோளைத் தட்டி, தன் கரகரப்பான குரலில் உரக்கக் கூப்பிட்டார்:
Advertisement
“செம்பியன் வீரா! அண்ணனா உன் கடமையை நல்லபடியா முடிச்சுட்டடா… இனி அடுத்து உன்னோட திருமணம் தாண்டா!”
“செம்பியன் வீரன்…”
அந்தப் பெயர் மீண்டும் மீண்டுமாய் மண்டபத்து ஸ்பீக்கர்களில் மோதி, மீராவின் காதுகளுக்குள் ஒரு பிரம்மாண்ட இடியாக வந்து விழுந்தது.
உண்மை சுட்டெரிக்கும் நெருப்பாய் அவளது மூளையைத் தாக்க, மீராவின் நெஞ்சு ‘தடதட’வென அடித்துக் கொண்டது. அவளது முகம் வெளிறிப் போனது. பக்கத்தில் நின்றிருந்த ரஞ்சனா, திருமணக் கூட்டத்தின் ஆரவாரத்தில் செம்பியனை பார்த்துக் கொண்டிருக்க… மீரா தன் தவிப்பை யாருக்கும் காட்டிக் கொள்ளாமல், தன் நெஞ்சில் எழுந்த பிரம்மாண்ட புயலை அடக்கும் வழியறியாது நின்றாள்.
” இப்போ என்ன அந்த வீரனுக்கான உன் உளமார்ந்த நன்றி என்ன குறைந்து விட்டது?”
” போ, போய் உன்ன அறிமுகப்படுத்திக்க… நன்றி சொல்லு!
உன் உற்ற தோழியை அவன் கரம்பிடித்தால் என்ன?
உன் வாழ்வை தந்து தான் உன் நன்றியை நிரூபிக்க வேண்டுமா என்ன?”
இப்படி ஒரு மனம் கேட்க….
” அது சரி, ஏன் சொல்ல மாட்ட?? ரூட் க்ளியர் ஆயிடுச்சு! உனக்கு இது தான் சாக்குன்னு வர்மன கட்டனும் அது தானே??ஆனா இவ்வளவு நாள் வீரன் வீரன்னு வர்மன அழைக்கழிச்சியே , அதுக்கு என்ன அர்த்தம்??”
என எதிர் மனம் கேட்க…. மொத்தமாய் துவண்டு போனாள் மீரா.
பந்தியின் ஒரு வரிசையில் மீராவும் ரஞ்சனாவும் அமர்ந்திருக்க, அவர்களுக்கு நேர் எதிர் இலையில் எஸ்பி வர்மன் வந்து அமர்ந்தான். பட்டு வேட்டி சட்டையில் அவனது கம்பீர தோற்றமும், முகத்தில் இருந்த கள்ளப் புன்னகையும் அந்தப் பந்தியையே வசீகரிப்பது போலிருந்தது.
நெஞ்சுக்குள் செம்பியன் வீரனைப் பற்றிய அதிர்ச்சியில் உறைந்திருந்த மீராவால், ஒரு பருக்கைக் சோற்றைக் கூடத் தொட முடியவில்லை. அவளது விரல்கள் இலையின் ஓரத்தில் சும்மாவே விளையாடிக் கொண்டிருந்தன.
அவளது தவிப்பைக் கவனித்த வர்மன், இலையில் பரிமாறப்பட்ட நெய் ஜாங்கிரியை ஒரு துண்டு எடுத்து வாயில் போட்டுக் கொண்டே, அவளைப் பார்த்துக் குறும்புத்தனமாகத் தன் புருவங்களை உயர்த்தினான்…
“என்ன கலெக்டர் மேடம்… மதுரை சாப்பாடு ருசி க்குக் குறைவா இருக்கோ? இலை அப்படியே பளபளன்னு இருக்கு, ஒரு பருக்கை கூட உள்ள போன மாதிரித் தெரியல,” என்று வர்மன் காதலோடு சீண்டினான்.
பக்கத்தில் இருந்த ரஞ்சனா சிரித்துக் கொண்டே, “அவள இப்படி நீங்க பாத்துட்டே இருந்தா அவளுக்கு பசியே எடுக்காது வர்மன்,” என்று மீராவை முட்டினாள்.
மீரா தன் குழப்பத்தை மறைத்து பலவந்தமாக ஒரு புன்னகையை வரவழைத்து, “அப்படியெல்லாம் இல்ல …..மண்டபத்துல ஏசி ஓவரா இருந்ததுனால லேசான தலைவலி. அதான் சாப்பிட முடியல,” என்று திக்கித் திணறிப் பொய் சொன்னாள்.
“தலைவலியா? எப்போலேர்ந்து?” என உண்மையாய் கரிசனப் பட்ட வர்மன் குரலைத் தாழ்த்தி, அவளுக்கு மட்டுமே கேட்கும் தொனியில், கண்களில் அலாதியான காதலைத் தேக்கிப் பேசினான். “நீ சாப்பிடலைனா, இன்னும் தலை வலிக்கும் மா…..”
அவள் அதே போல அளந்து கொண்டிருக்க . . . .
” மீரா… அடுத்து சட்டம் ஒழுங்கைக் கையில் எடுக்குற மாதிரி நானே என் கையால உனக்கு ஊட்டிவிட வேண்டியிருக்கும் , போலீஸ்காரன எக்ஸ்ட்ரீம் ஸ்டெப் எடுக்க வைக்காத… ஒழுங்கா சாப்பிடு.”
அவனது உரிமையும் அந்த அதட்டலான “மீரா'” என்று அவன் அழைத்த அந்தத் தொனியும் அவளது நெஞ்சுக்குள் மழை போல இறங்கிற்று.
விழிகள் நிறைய ஒரு முறை அவனைப் பார்த்தாள் மீரா.
” உன்னை எப்படி மிஸ் பண்ணுவேன் வர்மன் நான் …” என மனம் ஏங்கித் துவண்டது.
அவளது தொண்டை அடைத்துக் கொள்ள, கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது.
எல்லாரும் பந்தியை விட்டு வெளியே வந்தனர். மண்டபத்தின் பெரிய ஹாலில், மதிய வெயிலின் அனலோடு, திருமண வீட்டின் பரபரப்பு மெல்லக் குறைந்து கொண்டிருந்தது.
மீரா ரஞ்சனாவின் கையைப் பிடித்துக் கொண்டே நடந்தாள்.
வர்மனும் பின்னால் வந்து கொண்டிருந்தான்..
அவளது பார்வை மங்கத் தொடங்கியது. மண்டபத்தின் பிரம்மாண்டத் தூண்களும், சரவிளக்குகளும் யாவும் அவளைச் சுற்றிச் சுழல்வது போலிருக்க, அவளது பட்டுப்புடவையின் முந்தானை விரல்களிலிருந்து நழுவ, காற்றில் உதிர்ந்த மஞ்சள் மலராய் மீரா அப்படியே சுயநினைவிழந்து
தரையை நோக்கிச் சரிந்தாள்.
“மீரா!!!”
அவ்வளவு தான்… அருகில் வந்த அனைவரும் பதற…..
அவள் மண்ணைத் தொடுவதற்கு முந்தைய விநாடி… ஒரு சிறு அசைவையும் தவறவிடாத எஸ்பி வர்மனின் இரும்புக் கரங்கள் மின்னல் வேகத்தில் அவளை
மின்னல் வேகத்தில் வந்து அவளை அலாக்காகத் தாங்கிப் பிடித்தன. அவனது அகன்ற, கதகதப்பான மார்போடு மீராவின் தளர்ந்த உடல் கச்சிதமாக வந்து சாய்ந்தது. வர்மனின் கூர்மையான விழிகளில் ஒரு அசாத்திய பதற்றம் தொற்றிக் கொண்டது.
அவனது நெஞ்சில் சாய்ந்த அந்த ஒரு நொடி… மீராவின் மயங்கும் மனதிற்குள் காலமும் விதியும் அப்படியே உறைந்து நின்றன. அப்படியே இறுக்கிக்கட்டி கொள்ள தோன்றிற்று.
” பதினொரு வருடத் தேடலின் நாயகன் யாராக இருந்தாலும் எனக்கு என்ன?
மரணத்தின் விளிம்பில் அன்று என்னைக் காத்தவனுக்கு என்றும் நான் நன்றியுரைப்பேன்…. அவன் நலனுக்காய் என்றும் பிரார்த்திப்பேன்…
ஆனால் என் காதல்??
இதோ இன்று என் உலகமே சாய்ந்தபோது தாங்கிப் பிடித்தானே…
இந்த இதயம் … இந்த துடிப்பு போதும்! இவன் தான் என் உயிர்! “
“என் கடந்த காலத்தின் நிழல்களை விட, என் நிகழ்காலத்தை ஆட்கொண்ட இமயம் இவன்!”
“இனி எந்தத் தேடலும் எனக்கு வேண்டாம்…
“இந்த இதயம் போதும் எனக்கு… இந்த ஒரு இதயம் மட்டுமே போதும்!”
மயக்கத்தின் இருள் அவளை முழுமையாகச் சூழும் முன்னரே,
வர்மனின் மார்புக் கூட்டின் வேகமான துடிப்பைத் தன் கன்னங்களில் உணர்ந்தபடி, அந்தப் புகலிடத்தையே தன் வாழ்நாளின் பிரகடனமாக மாற்றிக் கொண்டாள் மீரா.
“ரஞ்சனா! தண்ணி எடு!” என்று அலறி
அங்கிருந்த சோபாவில் மீராவை மிகவும் மென்மையாக, ஒரு மலரைக் கையாள்வது போலச் சாய்த்துப் படுக்க வைத்தான் வர்மன். அவளது வெளுத்துப் போன முகத்தில் படர்ந்திருந்த கூந்தல் இழைகளைத் தன் கரங்களால் மெதுவாக ஒதுக்கிவிட்டான். அவனது இதயத் துடிப்பு வண்டியின் இன்ஜின் போல எகிறியது. தன் கண் முன்னால், தன்னவள் இப்படிச் சரிந்ததை அவனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
” என் கண்ணம்மா….” என மனம் அரற்றியது வர்மனுக்கு!
இவளுக்கு ஒன்று என்றால் தன்னால் ஏன் தாங்க இயலவில்லை என அவள் முகத்தையே பார்த்திருந்தான் வர்மன்.
ரஞ்சனா பதற்றத்துடன் ஓடிவந்து, தண்ணீர் பாட்டிலைத் திறந்தாள். வர்மன் தன் கைகளில் தண்ணீரை வாங்கி, மீராவின் முகத்தில் மென்மையாகத் தெளித்தான்.
“மீரா… மீரா, கண்ணைத் தொறடி…” ரஞ்சனா அவளது கைகளைத் தேய்த்துவிட்டாள்.
மெல்லக் கண் விழித்த மீராவின் பார்வையில் முதலில் விழுந்தது வர்மனின் கவலை தோய்ந்த தீர்க்கமான கண்கள் தான். அவனது கைகள் இன்னமும் அவளது தோள்களைப் பற்றிக் காத்துக் கொண்டிருந்தன. அந்தப் பார்வையில் விழுந்த கணமே, மீரா தன் காதலைத் தனக்குள்ளே இன்னும் ஆழமாக உறுதி செய்து கொண்டாள்.
இனி இவன் தான் தனக்கு என்ற
உண்மை தெரிந்த அடுத்த விநாடி,
“ரஞ்சனாவுக்காக வீரன விட்டுக் கொடுக்கிறயா…??”
“இல்ல இல்லவே இல்ல…”
“நான் …..வர்மனுக்காக… வீரன் யாருன்னு தெரிய வந்ததையே வெறுக்கிறேன்..”
என அவள் மனம் அரற்றியது!
அவளால் வர்மனின் முகத்தை நேருக்கு நேர் பார்க்க முடியவில்லை.
இத்தனை நாள் அவனை அழைக்கழித்த குற்ற உணர்ச்சியும், விதியின் சதியும் ஒன்றாகக் கலந்து அவளை வதைக்க, “எனக்கு… ஒன்றும் இல்லை. லேசான தலைச்சுற்றல்… நாம் கிளம்பலாம்,” என்று உடைந்த குரலில் கூறினாள். வர்மனின் ஐபிஎஸ், அந்த மூளைக்காரனுக்கு ஏதோ தவறு நடப்பதை உணர்ந்தாலும், அவளது உடல்நிலையைக் கருதி, “சரி, நாம உடனே தேனிக்குக் கிளம்புறோம்,” என்று கட்டளையிடும் தொனியில் கூறிவிட்டு, அவளைப் பத்திரமாக காரை நோக்கி அழைத்துச் சென்றான்.
எஸ்பி வர்மனின் டார்க் க்ரே நிற ஸ்கார்பியோ கார், மதுரையைத் தாண்டி தேனி நெடுஞ்சாலையில் வழுக்கிக் கொண்டு ஓடியது.
காரின் முன் இருக்கையில் வர்மன் ஸ்டீயரிங்கைப் பிடித்து கம்பீரமாக காரைச் செலுத்த, அவனுக்கு இணையாக ரஞ்சனா அமர்ந்திருந்தாள். பின் இருக்கையில் ஜன்னலோரம், பட்டுப்புடவையின் மடிப்புகள் லேசாகக் கலைய, மீரா அமர்ந்திருந்தாள்.
ஆனால், காரின் முன் இருக்கையில் அமர்ந்திருந்த ரஞ்சனாவோ, திருமண வீட்டின் குதூகலமும், தன் மனதில் பூத்திருந்த புதிய காதலின் சிலிர்ப்பும் ஒன்று சேர, செம ஜாலி மூடில் இருந்தாள். காருக்குள் இளையராஜாவின் மெல்லிய எப்.எம் இசை ஓடிக் கொண்டிருக்க, ரஞ்சனா திடீரெனப் பின்னாடி திரும்பி மீராவைப் பார்த்து கண்ணடித்தாள்.
” என்ன கலெக்டர் மேடம்… நீங்க மயக்கம் போட்டா தாங்க டிஸ்டிரிக்ட் எஸ்பியையே கூட வைச்சிருக்கீங்க போல…. அதெப்படி சாப்பிட்டு அப்போ தான் வரோம் …. எப்படி விழுந்த நீ?” என்று இழுத்தாள் ரஞ்சனா.
” உனக்கு தெரியாதுடி சாருக்குள்ள ஒரு காக்க காக்க சூர்யா வ நான் பார்த்தேன்… நீ விழுந்ததும் அந்த பதட்டத்த பார்க்கனுமே…””
“ஹா ஹா…” என அழகாய் நகைத்தான் வர்மன். விடாமல், “நான் சூர்யா வா பதறி என்ன செய்ய… இவ மாயாவா எங்க இருக்கா?”
“அய்யோ வர்மன் , இப்போ மேடம் சந்திரமுகி ஜோ ஆகாம இருந்தா சரி..”
ரஞ்சனா கிண்டலாகக் சொல்ல காருக்குள் சிரிப்பொலி எழுந்தது.
” இவ ஐஏஎஸ் ங்கிற கர்வத்துல என் காதலை ஏத்துக்காம பிகு பண்றான்னு நினைக்கிறேன். ஆனா, மயங்கி விழும்போது நேரா வந்து என் நெஞ்சுல தான் சாய்ஞ்சாகணும்னு விதியிருக்கு பார்த்தியா… அதை அவளால மாத்த முடியல,”
வர்மன் ரியர்-வியூ மிரர் வழியாகப் பின் சீட்டில் இருந்த மீராவின் முகத்தைப் பார்த்துத் தன் மீசையை முறுக்கிச் சிரித்தான்.
மீரா வர்மனின் அந்தப் பேச்சிலும், அவனது அன்பான அத்துமீறலிலும் திகைத்து, முகம் சிவக்க ஜன்னல் பக்கம் திரும்பிக் கொண்டாள்.
காரின் வேகம் அதிகரிக்க, ரஞ்சனாவின் லூட்டி மெல்லக் குறைந்து, அவளது முகத்தில் ஒரு புதிய வெட்க ரேகை படர்ந்தது. தன் குரலை மிகவும் தாழ்த்தி, “இப்போ நான் உங்ககிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும். மண்டபத்துல வச்சு… சடங்குகள் எல்லாம் முடிஞ்சதுக்கு அப்புறம், எல்லாரும் சாப்பிட்டுட்டு இருக்கும் போது…” என்று இழுத்தாள்.
வர்மன் அவளது குரல் மாற்றத்தையும், முகத்தில் அரும்பிய குங்கும வெட்கத்தையும் கவனித்து, “என்ன ரஞ்சனா, விஷயம் ஏதோ பெருசா இருக்கும் போல? அந்த லண்டன் தொழிலதிபன் ஏதும் சொன்னானா?” என்று நேரடியாகவே கேட்டுவிட்டான்.
ரஞ்சனா தன் கைகளைத் பிசைந்து கொண்டு, “ஆமா வர்மன்… கௌதமியோட அண்ணன்… செம்பியன் வீரன் இருக்கார்ல… அவர் என்கிட்ட தனியா பேசினார். அவர் லண்டன் கிளம்புறதுக்கு முன்னாடி, முறைப்படி அவங்க பாட்டிமாவை வச்சு எங்க வீட்டுக்கு வந்து பெண் கேட்கப் போறாராம். என்னை அவருக்கு ரொம்பப் பிடிச்சிருக்காம். He proposed to me, எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல, !” என்று படபடவெனக் கொட்டினாள்.
அதைக்கேட்ட வர்மன், காரை ஓட்டியபடியே உரக்கச் சிரித்து, “நினைச்சேன்… வீரன் உன்னைத்தான் வளைச்சு வளைச்சு பார்த்துட்டு இருந்தான்னு எனக்கு அப்பவே தெரியும் ரஞ்சனா!” என்றான் தன் கம்பீரமான குரலில் பெருமிதத்துடன்.
“வீரன பத்தி நான் உனக்குச் சொல்லணும் ரஞ்சனா. அவன் லண்டன்ல பெரிய பிசினஸ் மேக்னெட்டா இருக்கலாம். ஆனா, அவனோட எத்திக்ஸ் ரொம்ப ஸ்ட்ராங்க் . தப்பு, அநியாயம்னா அவனால தாங்கிக்கவே முடியாது. எத்தனையோ லண்டன் பொண்ணுங்க அவனுக்குப் பின்னாடி சுத்தியும், அவன் யாருக்கும் அசைந்து கொடுக்கல. ஒரு பெண்ணை அவன் மதிச்சு, நேசிச்சு உன்கிட்ட வந்து பேசுறான்னா… அவன் உன்னை அவனோட உயிரா நினைப்பவன்னு அர்த்தம். ரொம்ப நல்ல கேரக்டர். அவனுக்கு நாங்க ‘செம்பியன் வீரன்’னு சும்மாவா பேர் வச்சோம்? வீரத்துலயும் சரி, ஈரத்துலயும் சரி… அவன் ஒரு அசல் ராயல் கேரக்டர்! நீ ரொம்ப லக்கி ரஞ்சனா!” என்று வர்மன் அவளுக்கு நற்சான்றிதழ் அளித்தான்.
முன் இருக்கையில் வர்மன் பெருமிதமாகச் சொன்ன ஒவ்வொரு வார்த்தையும்… பின் இருக்கையில் இருந்த மீராவின் இதயத்தில் வன்மையாய் விழுந்தது!
ஆமாம், மீரா தூங்கவில்லை! வர்மன் தன் வாயால் செம்பியன் மித்ரனை ‘செம்பியன் வீரன்’ என்று பாராட்டி, அவனது அசாத்திய குணங்களைச் சொல்லும் போது, மீராவின் மனதில் இருந்த அந்தச் சிறிய சந்தேகப் பொறியும் கருகிப் போனது.
‘அப்போ… செம்பியன் வீரன் தான் என் வீரா என்பது முற்றிலும் உண்மை தான். அவன் அநியாயத்தைக் கண்டால் பொறுக்காதவன்… அதனால்தான் அன்று 2011-ல் அந்தப் பெருங்கூட்டத்தில் என்னை காப்பாற்றினான். கடவுளே… என் தோழிக்கு வரப்போகும் கணவன் தான் சிறுமியாய் அன்று என் இதயத்தில் பதிந்த வீரனா? ?’
மீராவின் கண்கள் மூடியிருந்தாலும், ஒரு வாறு நிறைவிலும் பெருமிதத்திலும் அவளது இமைகள் நனைந்தன.
வர்மனிடமும் ரஞ்சனாவிடமும் எல்லாமும் சொல்லியபின் செம்பியனிடம் மனதார நன்றி நவிழ வேண்டும் என நினைத்தாள்.
மீராவின் மனம் தெளிவாக, அவள் மனம் முழுதாய் வர்மன் பால் திரும்ப விதி வேறொன்றை நினைத்து வைத்திருந்தது.