Skip to content
Post Views: 35
ரிதம் 28
“உங்க படத்துல பாடுற எல்லார்கிட்டயும் தனியா பாடச் சொல்லி கேப்பீங்களா?? அப்படி பாடுறவங்களுக்கு தனியா பேமெண்ட் கொடுப்பீங்களா?? ப்ரோக்ராம், ஐ மீன் பார்ட்டி கன்டக்ட் பண்ணா கூட, அதுக்கு அமௌன்ட் தனியா பே பண்ணுவீங்கள்ள?? பார்ட் டைம் வொர்க் போல, அதுக்கு எக்ஸ்ட்ரா பேமென்ட். குட், இது எனக்குத் தெரியாம போச்சே?? தெரிஞ்சிருந்தா உங்க படத்தோட பாட்டுக்கு நான் மியூசிக் டைரக்டராகச் சம்மதிச்சிருக்கவே மாட்டேன்” என்றான் கௌதம்.
Advertisement
“இல்ல கௌதம், இது டோட்டலா மிஸ் அண்டர்ஸ்டாண்டிங் மட்டும்தான். உங்களோட ட்ரூப் மெம்பர்ஸ்க்கு நீங்க கேடயமா இருக்கீங்கன்னு ஏற்கனவே சொல்லியிருக்கீங்க. அண்ட் ஐ நோ இட். நீங்க அன்னைக்குச் சொன்னதும் ஞாபகம் இருக்கு. உங்களை மீறி யாரும் வர மாட்டாங்க. அதுவும் எனக்கு ஞாபகம் இருக்கு” என்றான் ராகவ்.
“அப்ப நத்தாஷாவோட நம்பர் எப்படி கிடைச்சது? யார்கிட்ட இருந்து வாங்கினீங்க??” என்று அழுத்தமாகக் கேட்டான்.
Advertisement
Advertisement
“அது எதுக்கு கௌதம்? விட்டுத் தள்ளுங்க. ஜஸ்ட் இதை இங்கேயே இப்படியே முடிச்சுக்கலாம்” என்றான் ராகவ்.
“அவள்தான் அந்த எக்ஸ்ட்ரா பேமென்ட் வேண்டாம், வர முடியாதுன்னு சொல்றால்ல?? ஃபோர்ஸ் பண்றீங்களா??”
Advertisement
“இல்ல கௌதம். நான் எதுக்கு ஃபோர்ஸ் பண்ணப் போறேன்? நோ.”
“என்னோட டீம் மெம்பர்ஸ் மட்டுமில்ல ராகவ். அதுல இருக்குற ஒவ்வொரு பெண்களும் என்னோட பாதுகாப்புல இருக்குறாங்கன்றதை மறந்துடாதீங்க, அவங்க நிழலைக் கூட நெருங்கணும்னு நினைக்காதீங்க. அப்புறம் நான் என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது. பார்க்குறதுக்கு என்னை விட நீங்க பெரிய ஆள் போல இருக்கலாம். ஆனா கண்ணுக்குத் தெரியுறது எல்லாம் உண்மை கிடையாது. தைரியம் இருந்தா போதும், யாரும் எது வேணாலும் பண்ணுவாங்க. சாமான்யன் கூடப் பொங்கி எழுந்திருவான். பார்த்து நடந்துக்கோங்க ராகவ்” என்றான் அழுத்தமாக.
இரு தோள்களையும் குலுக்கியவன், “கூல் கௌதம். கூல். நத்திங் சீரியஸ்,” என்றவன், அவள் புறம் திரும்பினான்.
“ஹேய் நத்தாஷா, நீங்க ஏதோ தப்பா புரிஞ்சுக்கிட்டீங்கன்னு நினைக்கிறேன். ரிலாக்ஸ். சொல்லுங்க கௌதம் சார் கிட்ட அப்படியெல்லாம் எதுவும் இல்லைன்னு” என்றான்.
அவள் அமைதியாக இன்னும் அவனுக்குப் பின்னால் தான் ஒளிந்திருந்தாள். உள்ளே அழைத்து வரும்போதும் அவன் பின்னோடுதான் வந்தாள். அந்த மனிதனைப் பார்த்ததும், கௌதமின் பின்னால் மறைந்து நின்று கொண்டாள். ராகவைப் பார்த்ததும் அவள் படபடப்பு கூடியது. அந்தப் பதட்டத்தில் கௌதமின் சட்டையைப் பிடித்துக் கொண்டு நின்றுவிட்டாள். அதை அவள் உணர்ந்தாளோ என்னவோ?? அவன் உணர்ந்தான்.
“நத்திங் சீரியஸ் கௌதம், நீங்க உட்காருங்க.”
“ஹேய் யாருங்க?? மியூசிக் டைரக்டர் கௌதம் சாருக்கு கூலா ஏதாவது கொண்டு வாங்க” என்று எங்கோ பார்த்துக் குரல் கொடுத்தான்.
“வேண்டாம் ராகவ். நான் என்னை கூல் பண்ணிக்கிறதுக்காக இங்க வரல. வார்ன் பண்றதுக்காக வந்தேன். என்னோட டீம் மெம்பர்ஸ் கிட்ட நெருங்காதீங்க. அவங்களுக்கு முன்னாடி கேடயமா நான் இருப்பேன்” என்றான் ஆங்காரமாக.
“இல்ல, கண்டிப்பா இல்ல, என்னை நீங்க நம்பலாம்.”
“உங்க வார்த்தையை நம்பி நான் போகலாமா?? அது மீறப்பட்டுச்சுன்னா நானும் மீறுதலா நடக்க வேண்டியதாயிருக்கும்” என்றான் கௌதம்.
“கண்டிப்பா நம்பலாம்” என்று கட்டைவிரலைத் தூக்கிக் காட்டினான்.
“உங்க செக்ரெட்டரி இனிமே நத்தாஷா வீட்டுக்குப்போகக் கூடாது. என்னோட ட்ரூப்ல இருக்கிற யாரையும் இதுபோலப் பார்க்கக் கூடாது. உங்க சம்பந்தப்பட்டவங்க யாரும் இவளோட ஃபேமிலிக்கு ஃபோன் பண்ணக் கூடாது. டோட்டலா என்னோட டீம் கிட்ட இருந்து ஒதுங்கி இருங்க. முக்கியமா இவள்கிட்டயிருந்து” என்றான், இன்னும் இன்னும் அழுத்தமாக.
“அஃப்கோர்ஸ் கௌதம். உங்களுக்கு ரொம்ப வேண்டியவங்கன்னு நினைக்கிறேன். சோ, நான் பின்வாங்கிக்கிறேன். நான் கூப்பிட்ட குரலுக்கு வருவதற்கு ஆட்கள் இருக்காங்க. சோ, நோ இஸ்யூஸ்” என்றான் ராகவ்.
கௌதம் காரியதரிசியை முறைக்க, அவன் தலைகவிழ்ந்து கொண்டான்.
“மார்க் மை வேர்ட்ஸ் ராகவ். டோன்ட் ஃபர்கெட் இட். ரொம்ப டவுட் இருந்ததுன்னா என்னோட காலேஜ் டேஸைத் தட்டிப் பாருங்க” என்று கூறிவிட்டு, தன் முதுகுக்குப்பின்னால் மறைந்திருந்தவளைத் தனக்கு முன்னால் நிறுத்தினான்.
பார்வையால் அவனுக்கு எதையோ உணர்த்தினான். அவள் தலைகவிழ்ந்திருக்க, அவளுக்கு அது தெரியாமலே போனது. ஆனால் ராகவுக்கு ஏதோ புரிந்தது.
“ஐ அண்டர்ஸ்டாண்ட்” என்று இரு கைகளையும் அவன் முன்னால் உயர்த்திக் காட்டினான்.
அவளைப் பிடித்தபடி வெளியில் வந்துவிட்டான் கௌதம்.
……
அவன் அப்படிச் சென்றதும்…
“டேய் அந்தப் பொண்ணு அவன் ஆளா?? அப்படித்தான்டா சொல்றான் அவன்” என்றான் ராகவ்.
“தெரியல பாஸ்.”
“அந்தப் பொண்ணோட பேக்ரவுண்ட் செக் பண்ணச் சொன்னேன் தானே??”
“பண்ணேன் பாஸ். பேக்ரவுண்ட்ல யாரும் இல்ல. அப்பா கூடச் செத்துட்டாரு. அம்மா, ஒரு தங்கச்சி அவ்வளவுதான். இங்கதான் வளசரவாக்கத்துல வாடகை வீட்டுல இருக்காங்க. சொந்தக்காரங்க எல்லாம் மதுரையில இருக்காங்க போல.”
“அந்தப் பொண்ணுக்காக இவன் என்னடா இப்படிப் பாம்பு மாதிரி சீறுறான்?? ஸ்டூடியோவுல பணிவா சிரிச்சிட்டே பேசுனது இவன்தானா?? எனக்கு டவுட்டாவே இருக்குடா, கௌதம்னு ஒருத்தன் தானா, இல்ல ட்வின்ஸா??” என்று கேட்டான்.
“ஒருத்தன் தான் பாஸ். அவங்க அப்பா அம்மாவுக்கு ஒரே பையன். நிலா டிவி ஓனரோட பையன். ஸ்கூல், காலேஜ்னு வச்சிருக்காங்க. நம்ம அளவுக்கு இல்லனாலும், அவங்களும் கொஞ்சம் பெரிய தலைதான். அதைத்தான் அவன் அப்படிச் சொல்லிட்டுப் போறான்.”
“இல்லடா நீ கவனிச்சியா? அந்தப் பொண்ண அவன் பிடிச்சிருந்த தோரணையும், சீறுன சீறும். அவங்க ரெண்டு பேருக்குள்ள ஏதோ இருக்குன்னு நினைக்கிறேன். இனிமே அந்தப் பொண்ணு விஷயத்துல நாம தலையிட வேண்டாம். போன ரெண்டு படங்களும் ஃப்ளாப்பாயிடுச்சு. இவனோட மியூசிக்ல இந்தப் படம் ஹிட்டாகியிருக்கு. அந்த டைரக்டர் சொல்லிப்பான் அதை அவனோட கதையினால்தான்னு. ஆனா மியூசிக் தான் முதல்ல ஹிட்டாச்சு. அதனாலதான் படம் ஹிட்டாச்சு. கதைன்னு பார்த்தா ஒன்னும் இல்ல, அதே வளவள கொலகொல தான். ஒருசில பேரு என்னோட இரண்டாவது படம் மாதிரியே இருந்ததுன்னு கமெண்ட்ஸ் வேற சொன்னாங்க.”
“தமிழ் சினிமாவுல அரைச்ச மாவையேதானே சார் எல்லாம் அரைச்சிட்டிருக்காங்க?? யாராவது ஒரு சிலர் தான் வித்தியாசமா எடுக்குறாங்க” என்றான் காரியதரிசி.
“அந்த டைரக்டரும் தொடர்ந்து மூணு ஃப்ளாப் படம் தான் கொடுத்துருக்கான்.”
“ஆமாம் பாஸ்.”
“நீ முதல்ல இந்த கௌதமோட காலேஜ் பேக்ரவுண்ட் என்ன விஷயம்னு விசாரி? அவன் ஏதோ பில்டப் கொடுத்துட்டுப் போறதைப் பார்த்தா?? கொஞ்சம் பெருசா இருக்கும்னு நினைக்கிறேன்” என்று கூறிய ராகவ், ஆழ்ந்த மூச்சை இழுத்துவிட்டான்.
அவன் ஒரு பெண்ணிற்காகத் தன் கெரியரை ஸ்பாயில் பண்ண நினைக்கவில்லை. அவன் சொடுக்கினால், வருவதற்கு ஆயிரம் பெண்கள் இருக்கிறார்கள். இவளை விட அழகான பெண்களை எல்லாம் பார்த்திருக்கிறான். அதனால் இவள் ஒரு பெரிய விஷயம் இல்லை அவனுக்கு.
கிஷோரின் பார்வையும் நத்தாஷாவின் மீது ஆர்வமாகப் பதிவது தெரிய, அவனுக்கு முன்னால் தான் முந்திக்கொள்ளலாம் என்று நினைத்துதான் எதையோ செய்திருந்தான். ஆனால் அது சொதப்பலாகி முடிந்திருந்தது.
…….
காரில் தவிப்பாக அமர்ந்திருந்தவருக்குத் தன் பெண்ணை அழைத்து வரும் கௌதமைப் பார்த்ததும்தான் மூச்சு நிம்மதியாக விட முடிந்தது.
அடிதடி என்று நடக்குமோ என்று பயந்துதான் இருந்தார். தனியாக ஓர் இடத்திற்கு இவர்கள் மட்டுமே வந்திருக்கிறார்கள். பிரச்சினை வந்தால் என்ன செய்வது என்ற பயமும் அவருக்கு இருந்தது. ஆனால் அவன் வரும் தோரணையைப் பார்த்தால், ஏதும் பிரச்சினை இல்லையென்று தோன்றியது.
காரைத் திறந்து கொண்டு இறங்கியவர், “எதுவும் பிரச்சினை இல்லையே தம்பி?? அடிதடி எதுவும் இல்லல்ல??” என்று பரிதவிப்பாகக் கேட்டார்.
“அதெல்லாம் ஒன்னும் இல்லம்மா. வீட்டுக்குப்போய் பேசிக்கலாம். நீங்க இறங்க வேண்டாம்” என்று கூறியவன், அவரை அமர வைத்துவிட்டு, அவளையும் அமர வைத்துக் காரை எடுத்திருந்தான்.
முதலில் அவளை கவனிக்கவில்லை. ஆனால் இப்பொழுது அவளை மட்டுமே ரியர்வியூ கண்ணாடி வழியாகப் பார்த்துக்கொண்டே காரை ஓட்டினான். மிக நிதானமாக ஓட்டினான்.
அரை மணி நேரத்தில் அவர்கள் சென்ற அந்த வீட்டுக்கு, திரும்பி வரும்போது ஒரு மணி நேரத்திற்கும் மேலானது.
பரிதவிப்பாக அமர்ந்திருந்த அனைவரையும் பார்த்தவன், “ஒன்னும் இல்லை” என்று கட்டைவிரலை உயர்த்திக் காட்டினான்.
பொருட்களெல்லாம் வீட்டில் அடுக்கப்பட்டிருந்தது. ஆனால் அந்தந்த இடத்தில் அல்ல, ஒன்றாக ஒரே இடத்தில். அதைப்பார்வையிட்டவன்,
“நான் போட்டது போட்டபடி அப்படியே வந்துட்டேன். அம்மாகிட்ட கூட ஒரு விஷயமும் சொல்லல. இன்னைக்கு நத்தாஷாவுக்கு ஸ்டூடியோவில் வேலை இருக்காது. ரெஸ்ட் எடுத்துக்கட்டும். இனி எதுவா இருந்தாலும் எந்தப் பிரச்சினையாய் இருந்தாலும் என்கிட்ட கொண்டு வாங்க. முடிஞ்ச வரைக்கும் பேசி டீல் பண்ணலாம். அப்படி இல்லன்னா வேற ஏதாவது கையில் எடுக்க வேண்டியதுதான்!” என்று கூறியவன், அனைவரிடமும் தலையசைத்துவிட்டு அவளின் புறம் வந்து நின்றான்.
உதடு துடிக்க அவள் “நன்றி” என்று கூற,
“உன் தங்கச்சிக்கு இருந்த நம்பிக்கை, உனக்கு இருந்திருக்கலாம்” என்று கூறினான்.
அவள் சடாரென்று அவனை நிமிர்ந்து பார்க்க, அவன் திரும்பிக்கொண்டு சென்றுவிட்டான்.
அவளுக்கு ஒன்றும், அவன் மீது நம்பிக்கை இல்லாமல் இல்லை. ஆனால் அவளுக்காக யாரும் போராட வேண்டாம் என்று நினைத்தாள். யாரும் கஷ்டப்பட வேண்டாம் என்று யோசித்தாள். ஆனால் அவன் கோபமாக இருக்கிறான் போல இருக்கிறது.
அன்றைய உணவு ப்ரீத்தி வீட்டில் செய்து எடுத்து வந்து அனைவருக்கும் பரிமாறப்பட, அவர்களே கொஞ்சம் கொஞ்சமாகப் பொருட்களை எடுத்து வைக்க உதவி செய்தனர். மாலை மங்கியிருக்க, மீதிப் பொருட்களை எல்லாம் அப்புறம் பார்த்துக்கொள்ளலாம் என்று நினைத்தனர்.
“வாரிச் சுருட்டிப் போடும்போது ஒரே நைட்டுல போட்டுட்டோம். ஆனா எடுத்து அதை அந்தந்த இடத்துல அடுக்கணும்னா பெண்டு நிமிருது” என்று ராகினி புலம்பித் தள்ளினாள்.
“பரவாயில்லையே? வந்து கொஞ்ச மாசத்திலையே சென்னை பாஷையை நல்லாப் பேசக் கத்துக்கிட்ட” என்று கலாய்த்தான் ரமேஷ்.
“அது காலேஜ்ல பேசி பேசி அப்படியே வந்துருச்சு அண்ணா” என்றாள்.
“முக்கியமான பொருட்களை மட்டும் எடுத்து வச்சாச்சு, மத்ததெல்லாம் பொறுமையா பார்த்துப் பண்ணிக்கலாம். நைட்டுக்கு நானே சமைச்சு எடுத்துட்டு வரேன்” என்று கூறிவிட்டு கணவனோடு கீழே சென்றுவிட்டாள் ப்ரீத்தி.
அவர்களும் தைரியம் கூறிவிட்டுத்தான் வந்தார்கள்.
மற்ற பொருட்களை எல்லாம் எடுத்து வைத்துவிட்டு, இரவு உணவை முடித்துக்கொண்டு மொட்டை மாடிக்கு வந்து நின்றாள் நத்தாஷா.
ராகினியும் தொடர்ந்து வந்தாள். ஆனால் எனக்குத் தனிமை வேண்டும் என்று நத்தாஷா கூறிவிட்டாள்.
“அப்படியே மேல இருந்து குதிச்சிட மாட்டீங்கன்னு எனக்கு ப்ராமிஸ் பண்ணுங்க, நான் கீழ போறேன்” என்று கேட்ட தங்கையை ஆதுரமாகப் பார்த்தாள்.
“அப்படியெல்லாம் உங்களைத் தனியா விட்டுட்டுப் போக மாட்டேண்டி” என்றாள் நத்தாஷா.
“என் அக்கான்னா அக்கா தான். நானும் விட்டுட்டுப் போக மாட்டேன்” என்றபடி அவளை நெருங்கி வந்து கட்டி அணைத்து, விடுவித்துவிட்டுச் சென்றுவிட்டாள்.
முதல் நாளில் இருந்து நடந்த சம்பவங்கள் எல்லாம் ஒன்றன் பின் ஒன்றாக அணிவகுத்து வந்தது.
கௌதமுடைய ஆளுமையையும் ஆக்ரோஷத்தையும் ஆவேசத்தையும் முதல் முறையாக அன்றுதான் பார்த்தாள்.
பேச்சிலேயே எதிராளியை மடக்க முடியும் என்பதையும் அன்றுதான் உணர்ந்தாள்.
அவனின் பேச்சில் கண்டிப்பாக அடிதடி நடக்கும், பிரச்சனை ஏற்படும் என்றுதான் நினைத்தாள். ஆனால் அந்த ராகவ் புலி போலப் பாயாமல், பூனை போல அடங்கிவிட்டான். பதுங்கி ஒதுங்கிவிட்டான்.
அதுவும் நல்லதுக்குத்தான். இல்லையென்றால் தன்னால் கௌதம் பெயர் கெட்டிருக்கும். போலீஸ் கேஸ் என்றாகி, அது பெரிய பிரச்சினையாக மாறவும் வாய்ப்பிருக்கிறது. அது அவன் கெரியரையும் பாதிக்கும் என்று நினைத்தவள் அமைதிkகாத்தாள்.
ஆனால் அவன் பேச்சிலேயே பிரச்சினையை முடித்துவிட்டான். ஏற்கனவே அவள் மனதில் சிம்மாசனமிட்டு அமர்ந்திருப்பவன், இப்போது வேரூன்றி நின்றுவிட்டான்.
ஆனால் அந்த நிலை என்பது, கடவுளைப் பார்த்தால் பக்தனுக்குத் தோன்றும் பக்தி நிலை மட்டும்தான். ஆனால் அவனுக்கு அவள் மீது இருக்கும் நிலை?? அதை அவன் தானே சொல்ல வேண்டும்??
……….
error: Content is protected !!