வசந்த காலம் இனி என் அருகில் -1
” ஏய் மூதேவி ” என்று ஒரு பெண்ணின் குரல் அந்த வீட்டின் கூரையை பிய்த்து கொண்டு கேட்டது … இன்னும் அந்த பெண்ணின் ஏவலுக்கு பதில் வரமால் போக அந்த பெண்ணின் குரல் உயர்ந்தது …
” ஏய் சனியன் புடிச்சவளே எங்கடி போய் கிடக்கிற உன் அண்ண” என்று அந்த பெண் வாக்கியத்தை முடிப்பதற்குள் வேகவேகமாக வேர்த்து விறுவிறுக்க ஓடி வந்தாள் பூங்கொடி…
பூங்கொடி நம் கதையின் நாயகி … வயது ஒரு 19 தான் இருக்கும் … பழைய கிழிந்த ஜாக்கெட் என்று பார்த்தாலே கண்டுபிடிக்கும் அளவு அத்தனை தையல் … கீழ போடு இருக்கும் பாவாடை ஒரு நிறம் மேல் இருக்கும் தாவணி ஒரு நிறம் என்று அணிந்து இருந்தாள் … இத்தனைக்கும் வறுமை காரணமாக இருக்குமோ ? அந்த எண்ணத்தை தவிடு பொடி ஆக்கியதே அவளின் எதிரில் இருந்த பெண்ணின் நகையும் புடவையும் …வெள்ளையும் இல்லாமல் கருப்பும் இல்லாமல் மாநிறத்து மங்கை நம் கதையின் நாயகி …
” ஏய் செவிடு என்னடி உள்ள பண்ணிட்டு இருந்த … காது கேட்காதவளே ‘
Advertisement
இத்தனை திட்டு வாங்கியும் முகம் சுருங்காமல் இருப்பதின் காரணம் போக போக்கிடம் இல்லை …சில நேரம் எங்காவது சென்று விழுந்து விடலாமா என்று எண்ணம் வராமல் இருந்தது இல்லை …ஆனால் ஒன்று தடுத்ததே அவளின் உடன்பிறப்பு …
“ஏய் …என்னடி நின்னுக்கிட்டேய் கனா காணுற ” என்று சொல்லிகொண்டேய பூங்குடியின் தோளில் ஒரு அடி வைத்தாள் கொஞ்சமும் இறக்கும் இல்லாத பேய் …
” அம்ம்மா …” என்று அதில் அலறிவித்தாள் …ஏற்கனவே உனவு கிடைக்காமல் மெலிந்து போன உடல் தற்போது இவள் அடித்ததும் பொத்தென்று கீழ் விழுந்துவிட்டாள்..
Advertisement
” என்ன இங்க சத்தம் ” என்று கேட்டது ஒரு நடுத்தர வயது ஆணின் குரல் …
Advertisement
” ஒன்னும் இல்ல அத்தான் … இவளை தான் அத்தான் வரும் டைம் ஆச்சே போய் டீ வைம்மானு சொன்னேன் …இவ என்னவோ உடம்பு கொழுத்து போய் உன் புருஷனுக்கு நீ போய் டீ போடு நான் என் போடணும்னு பேசுனா அதான் சும்மா அடிக்க கூட இல்ல தொட்டேன் … அதுக்கு போய் இப்படி கத்துறா ..ஏய் எழுந்து போய் மாமாக்கு காபி போடு ” என்று பூங்கொடியை அடுப்படிக்கு துரத்திவிட்டாள் …
இதை எல்லாம் பார்த்தும் பார்க்காதது போல் உள்ளே சென்றான் அந்த ஆண் … அந்த ஆளுக்கும் தெரியுமே யார் எப்படி என்று இருந்தும் தனக்கு என்ன வந்தது என்னும் மனப்பான்மை …
இத்தனை நேரம் ” ஏய் , சனியனே , மூதேவி …” இன்னும் எத்தனையோ வார்த்தைகள் …கணக்கில் இடமுடியாது….இத்தனை சொல் சொன்னாளே இவளே பூங்குடியின் உடன்பிறப்பு ஆவாள் … தேனம்மை …பெயரில் உள்ள தித்திப்பு என்றும் வார்த்தைகளிலோ சொல்லிலோ இருந்தது இல்லை …இப்போது வந்தானே ஒரு ஆண் அது இவளின் சரிபாதி தான் … முத்துக்குமரன் …
Advertisement
ஏலக்காய் தட்டி மணக்க மணக்க டீ போட்டு கொண்டு இருந்தாள் பூங்கொடி … வேலையின் கவனத்தில் சமையல் அறையில் நுழைந்த உருவத்தை கவனிக்காமல் போனாள் … ஒரு இரந்து நொடி ஓடி இருக்கும் இடுப்பில் எதோ ஊர்வதை போல் உணர்ந்தாள் …அதை கை ஆள் தட்டி விட போனவள் இன் கையை பிடித்ததோ இன்னொரு ஆணின் கை …யார் என்று தெரியாத ஒரு ஆணின் கை பட்டதும் பெண்ணிற்கே உரிய பயம் வந்து சூழ்ந்து கொள்ள அலறிவிட்டாள் பூங்குடி … அலறியவளின் சத்தத்தில் என்னமோ ஏதோ என்று ஓடி வந்தாள் தேனம்மை …
ஓடி வந்தவளின் கண்ணில் விழுந்தது பயத்தில் உடல் தூக்கிப்போட நின்று கொண்டு இருந்த பூங்கொடியும் …சட்டை முழுவதும் டீயில் நனைந்து மலங்க மலங்க முழித்துக்கொண்டு இருந்த கணவனையும் தான் …
பூங்கொடி எதையாவது சொல்லும் முன் நாமளே முந்திக்கொள்வோம் என்று நினைத்து கொண்ட முத்துக்குமரன்
” தேனு உன் தங்கச்சி சும்மா டீ கேட்க கைய தொட்ட உடனே பயந்து டீயை மேல ஊத்திட்டா… நானும் எவ்ளோ தரவ தான் சொல்றது சொல்லு அக்கா ஓட புருஷன் மாமா மட்டும் இல்லை ஒரு அப்பனுக்கு சமம்னு …இந்த புள்ள போய் போய் என்ன பார்த்து பயப்படுத்து …இரு போய் டிரஸ் மாத்திட்டு வரேன் ” என்றவன்
” அட பூங்குடி வா மாமாக்கு வந்து ஹெல்ப் பண்ணு ” என்று சொன்னவனின் வார்த்தைகளில் தேனம்மை அவனை ஒரு பார்வை பாக்க ..
: அது இல்ல தேனு டிரஸ் டீ கரையா இருக்கு அதான் நம்ம பூவு துவைச்சு குடுப்பாளா அதான் கூப்பிட்டேன் ,உனக்கு இந்த பாலா போன இடுப்பு வலி இல்லாம இருந்த உன்னைய தான் கூப்பிட்டு இருப்பேன் , நம்ம மக “”என்று வாக்கியத்தை முடிப்பதற்குள் முந்திக்கொண்டாள் தேனம்மை ..
” இருக்கட்டும் அத்தான் நானே வரேன் இங்க டீ கொத்தி இருக்கு இத அவ சுத்தம் பண்ணுவா ” என்று கணவனை அறைக்கு இழுத்து கொண்டு போனாள் தேனம்மை …
” நம்ம மகள் ” என்ற வார்த்தைக்கு பின்னாள் எத்தனை திட்டம் உள்ளதென்று தேனம்மைக்கும் தெரியுமே …
மச்சினச்சியை மகள் என்று நெருங்க பார்க்கும் கணவனின் புத்தி தெரியாமல் இல்லை தேனம்மைக்கு …
தேனம்மைக்கும் பூங்கொடிக்கும் கிட்ட தட்ட ஒரு 16 வருடங்கள் வித்யாசம் இருக்கும் … பூங்கொடி அவளின் அன்னைக்கு 40களின் பின் பிறந்தாள் … பிள்ளை பெற சக்தி இல்லாமல் அவர் உடல் நலம் இல்லாமல் பிள்ளை பிறந்து சில மணித்துளிகளில் இறந்து விட்டார் … அன்றில் இருந்து இவள் அவளின் அக்காவின் வசம் … தந்தை ஒரு குடிகாரனாக இருக்க குடல் வெந்து அவரும் இறந்து விட்டார் …அதற்கு பின் தேனம்மையும் பூங்கொடி யும் அத்தையின் வீட்டில் சரண் புகுந்தார்கள் … சிறிய வயதில்
இருந்தே சோம்பேறி குணத்தை தனக்குள் குடி வைத்திருந்த தேனம்மை 7 வயது சிரியவளையே வேலை வாங்க ஆரம்பித்து இருந்தாள் …
அத்தை பெரிய மனதாக வீட்டில் இடம் தந்து இருந்தாலும் வீட்டின் வேலைக்காரியை விட மோசமாக நடந்தும் குணம் கொண்டவராக இருந்தார் … அவர் எத்தனை வேலைகள் தந்தாலும் அனைத்தும் சின்ன பெண் மீது சுமத்த ஆரம்பித்து இருந்தாள் தேனம்மை …
ஒரு வேலையும் செய்யாமல் புஸ்தியாக ஜொலிஜொலித்த மாமன் மகள் மீது கண்ணை வைத்துவிட்டான் முத்துக்குமரன் …அப்போது சின்ன சிறு மொக்காக இருந்த பூங்கொடியை நிகழ்காலத்தில் என் மகள் என்று சொல்வது போல் எல்லாம் மதித்ததே இல்லை அவன் …
சில வாரங்களில் எதோ மார்பகத்தில் கட்டி என்றும் … சிகிச்சை அழிக்கும் நேரம் கடந்து போனதாக மருத்துவர் கை விரித்து விட அப்போது என்று பார்த்து முத்துக்குமரன் தேனம்மையின் மீதான விருப்பத்தை கூற …கடைசி நிமிடங்களை எண்ணி கொண்டு இருந்தவர் மகனின் திருமணத்தை கண்ணால் பார்த்து விட வேண்டும் என்று இருவருக்கும் திருமணம் செய்து வைத்தவர் … அவர்களின் திருமணம் முடிந்த மறுநாளே இறைவனடி சேர்ந்து இருந்தார் …
ஆசை 60 நாள் மோகம் முப்பது நாள் என்ற வாக்கியம் தேனம்மை யின் வாழ்க்கையில் சரியாக அமைந்து இருந்தது …
திருமணமான புதிதில் இருந்த காதல் 6 மாதம் கூட தொடாத நிலையில் எங்கோ பஞ்சாக பறந்து இருந்தது …
திருமணம் ஆகி சில நாட்களிலே கணவன் வேலை பார்க்கும் இடத்தில சிலபெண்களோடு அப்படி இப்படியாக இருப்பது காதில் விழுந்தாலும் இவனை விட்டால் வேறு போக்கிடம் இல்லை என்ற காரணத்தில் வாயையே திறக்கவில்லை ..
குழந்தை வந்தால் கணவன் திருந்தி விடுவான் என்று நினைத்தவளுக்கு தலையில் தான் தாய்மை அடைய வாய்ப்பில்லை என்ற மருத்துவரின் சொல் இடியாக வந்து விழுந்தது … இத்தனை விடயங்களுக்கு பின்னும் கணவன் தன்னை ஒரு வார்த்தை சொல்லாமல் இருந்ததில் தன்u கணவனை போல் ஒரு தெய்வம் இல்லை என்று ஆனந்த மேகங்களில் துள்ளி குதித்தாள்…
ஆனால் கீழே விழுவோம் என்று நினைத்தும் பார்க்காத அளவு கணவனின் செயல்களும் பார்வைகளும் மாறி இருந்தன … பதின் பருவத்தில் அழுக்கு துணியுலும் பூங்கொடி முத்துகுமரனின் கண்ணை உறுத்தி விட்டாள்…
அவனின் பார்வை தங்கையை தீண்டுவதும் அவளிடம் முத்து முத்தாக சொற்களின் பின் இருந்த விஷமத்தை மனைவி அவனின் கண் அசைவிலே புரிந்து கொண்டாள் …தங்கை மீது பாசம் அக்கறை இல்லை என்றாலும் கணவன் ஒவ்வொரு முறையும் தங்கையை அடைய நினைக்கும் குள்ளநரியாக வேலை செய்யும்போது கரடியாக நடுவில் வந்து நின்று கணவனின் கீழ்த்தரமான செயல்களை தவிடு பொடி ஆக்கினாள் …ஆனால் அவளால் கூட எதுவும் செய்ய முடியாத சூழ்நிலை வர போவதை யார் அவளுக்கு சொல்வார் …
***************
நாமக்கல் மாவட்டம்
ராசிபுரம்
சூரியன் உஷ்ணம் கொண்டு அனைவரின் மண்டையை வெடிக்க செய்யும் அளவு வெயிலை தந்தாலும் அங்கு இருந்த மரங்கள் தென்றலாய் அந்த தோட்டத்தில் வேலை செய்யும் நபர்களை வருடி சென்றதே …
” ஆத்தா அந்த நாத்த கொஞ்சம் இந்தாண்ட தா ” என்று வாங்கியவனின் நிறம் அந்த சூரிய வெளிச்சத்தில் கருப்பு தங்கமாக மின்னியது … மேல் சட்டையை கழட்டியவன் அதை தன் பக்கம் வாங்க தவமாய் நின்று இருந்த பெண்களின் கூட்டத்தில் நின்று இருந்த ஒரே ஒருத்தியை கண்களில் மின்ன பாத்தவன் அவள் கைகளிலே அதை குடுத்தான் …
அந்த பெண்ணோ மற்ற பெண்களை கண்கள் மின்ன எப்படி என்ற பார்வையோடு ஏறிட்டாள் ,அதில் மற்ற பெண்களின் கண்களில் கொஞ்சம் இல்லை இல்லை அதிகமாகவே பொறாமை தீ எரிந்தது …
அதை எல்லாம் கண்டுகொள்ளாமல் தன் வேட்டியை மடித்து கட்டிக்கொண்டு சேரில் இறங்கினான் சக்திவேல் …
அதை பார்த்த அவனின் சட்டையை உரிமையாக பிடித்து இருந்தவள் இன் கண்களில் கர்வம் சிம்மாசனம் இட்டு அமர்ந்து இருக்க மற்ற பெண்களின் பெரு மூச்சில் அவளிடம் இருந்து ஒரு நமட்டு சிரிப்பு …
வசந்தங்கள் அருகில் …
