Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

வண்ணம் தேடும் வானம்

வண்ணம் 13

சிரஞ்சீவி கபிலனிடம் மேம்போக்காக விசாரித்துப் பார்த்தான். சுஷ்மா ஆள்  வைத்தெல்லாம் விரட்டப்படவில்லை.

சலிப்பாக இருக்கிறதே என்று ஏதேனும் செய்யலாமென அருண் கற்றுக்கொண்ட ‘ஹேக்கிங்’ இப்போது கைகொடுத்தது. இரவெல்லாம் கண் விழித்து லண்டனில் இருக்கும் பல்கலைக்கழகங்கள் டேட்டாபேஸ் எல்லாம் ஹேக் செய்ய முடிந்ததை செய்து தேடிப் பார்த்தான் அருண். புவன் சுஷ்மா பற்றிய விவரங்கள் சேகரித்து அவனால் முடிந்த உதவி எல்லாம் செய்து கொடுத்தான்.இருவரும் சேர்ந்து தேட தொடங்கினர்.அதிலும்  அருணுக்கு சுஷ்மா எங்க போயிருக்க கூடும் என்று ஓர் எண்ணம்  இருந்தது, அதனாலேயே நெதர்லாந்து என்ற சந்தேகம் இருந்தாலும் லண்டனில் உள்ள பல்கலைக்கழகங்களில் தேடிப் பார்த்தான். அவர்கள் யூகித்தது போலவே லண்டனில் ஒரு பல்கலைக்கழகத்தில் ஆறு மாதம் இன்டர்ன்ஷிப் செய்ய சுஷ்மா பதிந்திருப்பது தெரிய வந்தது. அந்த பல்கலைக்கழகம் சுற்றியே ஓர் இடத்தில் பார்ட்-டைம் வேலையிலும் அமர்ந்திருக்கிறாள் சுஷ்மா. 

தகவலை பார்த்தவன்  புவன் “இத அவன்கிட்ட சொல்லப் போறியா” கேட்டான் 

அருண் “மாட்டேன் தேவ் சுஷ்மா விஷயத்துல ரொம்ப சுயநலமா இருக்கான் இப்போதைக்கு அவங்க அங்கேயே இருக்கட்டும். அவங்க நல்லா இருக்காங்க அது போதும் நமக்கு”



Advertisement

புவன் “அவன் கொஞ்சம் தெளியட்டும் ஆனா அவன் கடைசியா சொன்ன விஷயம் ரொம்ப இடிக்குது”

அருண் “பிரட்டன் மெடிக்கல் ரெக்கார்ட்ஸ் எல்லாம் ஹேக் பண்றது கஷ்டம், நம்ம லெவெலுக்கு முடியாது.இருபது நாள்ல 12 மணிநேரம் பிளைட்ல போய் காலேஜ்ல சேர்ந்து  பார்ட் டைம் வேலையும் எடுக்கறத எல்லாம் பார்த்தா சான்ஸஸ் கம்மி. பிரக்னன்சி சமயத்துல ரொம்ப கஷ்டம் இல்லையா! அது வச்சு பார்க்கும்போது எதுவும் இல்லைன்னு  எனக்கு தோணுது… அதான் எந்த யுனிவர்சிட்டி தெரிஞ்சிடுச்சுல்ல வேணும்னா ஆள் வச்சு விசாரிச்சு பார்க்கலாம்”

சிரஞ்சீவி “சரி ஏதாச்சும் இன்வெஸ்டிகேஷன் கம்பெனி மூலம் செய்ய பார்க்கலாம்”

Advertisement

அருண் “அப்படியே குழந்தை இருந்தாலும் அது அங்கதான் நல்லா வளரும் நினைக்கிறேன்”

Advertisement

புவன் “அதுவும் சரிதான்”

சிரஞ்சீவி “எனக்கென்னமோ தேவ்வோட அப்பாவுக்கு சுஷ்மா போன விஷயம் தெரியும் நினைக்கிறேன்”

அருண் “எனக்கும் அப்படி தான் சந்தேகம் இருக்கு”

Advertisement

புவன் “அவங்க குழந்தை விஷயத்துல ஒரு தெளிவு வந்துட்டா இந்த விஷயத்தை தூக்கி போட்டுட்டு அடுத்த வேலை பார்க்கலாம்”

அருண் எதுவும் பேசாமல் அவன் கைபேசியை பார்த்துக்கொண்டிருக்க 

புவன் சட்டென “மச்சி எனக்கு என்னவோ நீ வேற எதையோ கண்டபடி யோசிக்கிறியோ தோணுது”

அருண் புவன் பேசிக்கொள்வதை கவனியாது சிரஞ்சீவி “பாவம்டா இவனை போல தன்னை மட்டுமே பெருசா நினைக்கிறவன் கிட்ட ஏமாந்துட்டாங்கன்னு நெனச்சா எனக்கே  ரொம்ப கஷ்டமா இருக்கு. இந்த காதல் ரொம்ப பொல்லாதது மச்சான். காதலுக்குதான் கண்ணு இல்ல மனுஷங்களுக்கு எல்லாம் மூளை இருக்குதானே யோசிக்கணும் தானே” பேசிக்கொண்டே போனான். 

அருண் சிரஞ்சீவி பேசியதை  சுட்டி காட்டி “மனுஷங்களுக்கு மூளை இருக்கு தானே அதை வச்சு யோசிக்கணும் தானே” என்றான் 

புவன் சந்தேகப்பட்டது போலவே அருண் கல்லூரி வருவதை தவிர்த்தான். தமயந்தியை தவிர்த்தான். ஒரு வாரம் போகவும் தமயந்தியின் குழப்பம் அவள் முகத்தில் வெளிப்படையாக  தெரிய தொடங்கியது. 

புவன் அருணை வற்புறுத்தி கல்லூரிக்கு அழைக்கவும் “டேய் கோடி கணக்குல  கடனை வாங்கி படத்தை ப்ரொடுயூஸ் பண்றோம் அதை பார்க்காம காலேஜ் வர சொல்றியா”

புவன் “அதான் அங்கிள் ஸ்ட்ராங்கா டீம் செட் பண்ணி கொடுத்துருக்கார்ல்ல. எல்லாம் சரியா போகுறத பார்க்க ஆள் இருக்குல்ல அப்பறம் என்னடா ”

அருண் “அதுக்காக அப்படியே விட்டுட முடியுமா. நான் நுணுக்கமா  கத்துக்கணும், அப்போதான் அடுத்தடுத்து சமாளிக்க முடியும்” உண்மை தானே! தொழிலை பழகுவது முக்கியம்தானே!!

புவன் “மச்சான் இததானடா பொறந்ததுல இருந்து பாக்குற!”

அருண் “அது வேற இது வேற. எனக்கு அட்டெண்டன்ஸ் இருக்கு. நான் பார்த்துக்கறேன். நீ போ போய் காலேஜ் லைஃப் என்ஜாய் பண்ணு”

புவன் “நீ எப்படா இப்படி மாறின”

அருண் “நான் எதுவும் மாறல மச்சான்”

புவன் “நீ பயப்படற அருண்!!”

அருண் “ஏன் நான்லாம் பயப்பட கூடாதா என்ன.நானும் மனுஷன் தானடா”

புவன் “தேவ் வேற நீ வேற மச்சான்”

அருண் “கிடையவே கிடையாது. தேவ்வுக்கு ஒரே ஆள் தான் வில்லன்.அவங்க அம்மா மட்டும்தான். எனக்கு அப்படியில்ல”

புவன் மேற்கொண்டு பேச போக அருண் அவனை இடைநிறுத்தி “இத பத்தி பேசாத” என்று அந்த விஷயத்துக்கே முற்றுப்புள்ளி வைத்தான்.

பூமிகா அடுத்த இரண்டு நாட்களில் சென்னை வந்துவிடுவாள் என்பது தமயந்தியின் மனநிலையில் கொஞ்சம் உற்சாகம் கொடுத்தது. அருண் அவளிடம் எதுவும் சொல்லாமல் சட்டென முறுக்கிக்கொண்டு போய்விட்டது போல் இருக்க குழப்பத்தில் ஆழ்ந்தாள். சிரஞ்சீவியிடம் விசாரித்தபோது “படம் ப்ரொட்யூஸ் பண்றதுன்னா சும்மா இல்ல” என்றான். ஆனாலும் மனம் ‘ஆமா சும்மா இல்லதான், ஆனா சொல்லிட்டு போறது ஈஸி தானே ஏன் செய்யல’ என்று கேட்டது. 

எதிர்பாராமல் அடுத்த நாளே  அருண் கல்லூரிக்கு வந்தான். தமயந்தி கண்களை விரித்து பார்த்ததும் “ஏ அட்டெண்டன்ஸ் முக்கியம் அதான் வந்தேன்” என்றான் சிரித்துக்கொண்டு. 

தமயந்திக்கு பல நாட்களுக்கு பிறகு அன்றைய நாள் திருப்த்தியாக தெரிந்தது.

பூர்ணிமா “என்ன மேடம் உற்சாகம் பொங்கி வழியுது”

“அதுவா நாளைக்கு பூமி வந்திருவா, அப்பறம் வீக்கெண்ட்  ஷாப்பிங் போலாம் பேபி” என்றாள் தமயந்தி மகிழ்ச்சியாக. 

புவன் அருணை பார்த்து முறைத்தான். வழக்கம் போல வம்பு பேச்சுக்களும் தமயந்தியின் ஓர கண் பார்வையும் அவனை தீண்ட அருண் மனம் தடுமாற்றத்தில் திளைத்தது. 

தமயந்தி உற்சாகமாக மதிய உணவிற்கு வரிசையில் நிற்கபோக, அருண் அவளுக்கு பின்னால் கைபேசியை பார்த்துக்கொண்டே வந்தவன் அவளுக்கு பின் நிற்க தயங்கும் நேரம் அவர்கள் வகுப்பிலேயே இருக்கும் யூட்யூபர்  ‘ஹை’ என்று சொல்லி தமயந்தி பின் நின்றான். அவனுக்கு பின் நின்றான் அருண்.

காலில் எதோ உரசுவது போல இருக்க,திரும்பி பார்க்கவும்தான் தமயந்திக்கு தெரிந்தது பின்னால் நிற்பது அருண் இல்லை! அவள் முன்னே திரும்பிகொள்ளவும்  சிறிது நேரத்தில் இம்முறை எதுவோ தொடையில் உரசியது போல இருக்க இவள் பின்னால் திரும்பி பார்க்கவும்,பின்னால் நிற்பவன் இவள் இடுப்பில் கிள்ளி சிரிக்கவும் சரியாக இருந்தது. சட்டென்ன கையில் இருக்கும் தட்டால் ஓங்கி அவன் தலையில் அடித்தாள் தமயந்தி.கணநிமிடத்தில் என்ன நடந்திருக்க கூடும் என்று யூகித்தவன் அருண், அவள் கையிலிருக்கும் தட்டை பிடுங்கி மேலும் அந்த யூட்யூபர் தலையில் முகத்தில் அடிக்க அவன் தரையில் விழுந்தான். என்ன ஆயிற்று என்று சுற்றியிருக்கிறவெறெல்லாம் நின்று வேடிக்கை பார்க்கத்  தொடங்க அருண் தமயந்தியிடம் “போ கிளாசுக்கு போ” என்றான். அவன் அதிகார குரல் அவளை அங்கிருந்து அகற்றியது.

அதே சமயம்  அங்கே வந்த சிரஞ்சீவியும் புவனும் அடிவாங்கியவனை எழுப்பி அவனையும் அருணையும் அழைத்துக்கொண்டு வெளியே வந்தனர்.

அருண் “மச்சி போய் தமயந்தியை பாரு”

புவன் சிரஞ்சீவியிடம் “நான் போய் பாக்குறேன். நீ டிசிப்ளின் கமிட்டியை சமாளி”

சிரஞ்சீவி ஆச்சரியத்தில் ஆழ்ந்தான். அருண்! ஒருவனை அடித்தானா? அதுவும் ரத்தம் வழியுமளவுக்கு தலையில் அடித்தானா? அருண் கோபம் குறையாமல் இருக்க எதுவும் பேசாமல் அடிவாங்கியவனை கொஞ்சமாக தண்ணீர் கொடுத்து, காயம் எவ்வளவு ஆழமாக இருக்கிறது, தையல் எல்லாம் தேவைப்படுமா என  கவனித்துவிட்டு ப்ரின்ஸிபல் அறைக்கு அழைத்து சென்றான். 

புவன் தமயந்தியை நெருங்கும் போது தமயந்தி கைபேசியில் “நான் இப்படி செய்வேன்ன்னு நானே நெனைக்கல” என்று நடுங்கும் குரலில்  பேசிகொண்டிருந்தாள். 

அவள் பக்கம் சென்றவன் அவள் கைபேசியை பிடுங்கி “நான் புவன் பேசுறேன்”

“நான் பூமிகா பேசுறேன். தமயந்தியை ஹாஸ்டலுக்கு அனுப்பிடுங்க. அம்மாகிட்ட சொல்லி கபிலன் அங்கிளை பேச சொல்றேன்” என்ன பேசுகிறார்கள் என்றே புரியாமல் இருந்தவள் தமயந்தி அவன் கையிலிருந்து கைபேசியை பிடுங்கி கவலையை தெரிவித்தாள் “எனக்கென்னமோ ஸ்காலர்ஷிப்க்கு பிரச்சனை வரும் தோணுது மீபூ”

பூமிகா “அதெல்லாம் ஒன்னும் ஆவாதுடி” என்றவள் “புவன் நீ அவளை மொத அந்த இடத்துல இருக்க வேண்டாம் சொல்லு, நாம வேற வழில பிரச்சனையை பார்த்துக்கலாம்” என்றாள் 

புவன் “ம் நான் ஹாஸ்டலுக்கு அனுப்பி வைக்கிறேன்”

பூமிகா “ஜஸ்ட் ஒரு நாள், நாளைக்கு நான் வந்துருவேன். நான் பார்த்துக்கறேன்”

புவன் “நாளைக்கு வந்து பேசு. நீ டென்ஷன் ஆகாம வா. நான் என்னால முடிஞ்ச அளவுக்கு பிரச்சனையை முடிச்சு வைக்குறேன்”

பூமிகா  “சரி தேங்க்ஸ்”

புவன் “சீக்கிரம் வா” என்று சொல்லி கைபேசியை அணைத்தான்.

தமயந்தி கலங்கி இருந்தாள். புவன் அதிகாரமாக “உன் மேல எந்த தப்பும் இல்ல தமயந்தி. நீ இப்போ ஹாஸ்டெல் போ. சாயந்திரம் பேசலாம்” என்று சொல்லி அவளை ஹாஸ்டலுக்கு அனுப்பி வைத்தான்.

புவன் திரும்பவும் வகுப்பிற்குள் நுழையும் போது  அருண் அங்கே வந்திருந்தான். எதுவும் பேசாமல் உக்கிரமாக அமர்ந்திருந்தான். மாலை கல்லூரி முடிந்ததும் டைரக்டர் அறைக்கு சென்றவன் “நாளைக்கு விசாரணை  என்கிட்ட மட்டும் தான் நடக்கணும். நான்தான் நான் மட்டும்தான் அவன அடிச்சேன். இல்லன்னா க்ரீன்விச் யூனிவர்சிட்டி பத்தி பேச எனக்கு ரெண்டு நிமிஷம் போதும்” என்றவன் கோபமாக கபிலனின் வீட்டை அடைந்தான். உடம்பில் ஓடும் இந்த பரபரப்பு பிடிக்கவில்லை, மனதில் பரவி இருக்கும் ஆத்திரம் அடங்கவில்லை, நாடி நரம்பெல்லாம் பாயும்  கோபம் பிடிக்கவில்லை.

சிரஞ்சீவி அருணுக்கு பிடித்த பருத்திப்பால் கொண்டுவந்து கொடுத்து “இத குடி கூல் ஆகு”

அருண் “எனக்கு வேணாம். வா நாம நம்ம ஆபிஸ் போவோம்”

சிரஞ்சீவி “நான் வரேன்.ஆனா நீ இதே போல எல்லாரையும் கடிச்சு வச்சின்னா அங்கேயே விட்டுட்டு வந்துருவேன்”

 அருணுக்கு கோபம் சற்றும் குறையவில்லை. அலுவலகம் சென்றாலும் வேலை செய்பவரை  என்ன செய்வானோ! பாக்சிங் செல்ல பிடிக்கவில்லை.

வெளியே செல்ல தயாராகி வந்தவன் புவன் “நான் போய் தமயந்தியை பார்த்துட்டு வந்துறேன். ஈவினிங் பேசுறேன் சொல்லிருந்தேன்”

அருண் அவனும் வருவதாக சொல்லவும் நண்பர்கள் அவனை சந்தேகமாக பார்த்தனர். “ஒருவேளை  அவள பார்த்தா இந்த பீல் குறையும்” என்றான் நெஞ்சை நீவிக்கொண்டு…

புவன் “அங்கே எதுவும் செய்யமாட்டே பேசமாட்டே நம்புறேன்…” என்று சொல்லிக்கொண்டே சென்றான்.

தமந்தியை பீச் வரச்  சொல்லி சந்தித்தனர். முகம் கருத்து சோர்வாக தெரிந்தாள். அழுதிருக்கிறாள் என்பது நன்றாக தெரிந்தது.

அருணை பார்த்ததும் கொஞ்சமும் யோசிக்காமல் அவன் கைகளை பிடித்து “ரொம்ப ரொம்ப சாரி அருண் என்னால உனக்கு பிரச்சனை ஆயிடுச்சு. பூமிகா நீ பிரச்சனையை பார்த்துப்பேன்னு சொல்றா  ஆனா உனக்கு ஏதாவது கஷ்டம் வந்தா சொல்லு நானே என்கொயரிக்கு போறேன்” அவள் உடல் நடுக்கமும் கண்களில் தெரியும் பளபளப்பான கண்ணீரும் அவனை ஏதோ செய்தது.

சிரஞ்சீவி “என்ன ஜான்சிராணி அப்ப அடிச்சுட்டு இப்ப கண்ணுல தண்ணி வச்சுக்கலாமா” கிண்டலாக கேட்டான்.

தமய்ந்தி “அவன அடிச்சதுல எனக்கு எந்த வருத்தமும் கிடையாது. ஆனா என்னால அருண் மாட்டுனது நெனச்சா  ரொம்ப கஷ்டமா இருக்கு. எல்லாமே சட்டுன்னு ரெண்டு நிமிஷத்துல நடந்து முடிஞ்சிருச்சு. என்ன பண்றதுன்னு தெரியல, மனசெல்லாம் பாரமா இருக்கு. இப்படி ஏதாச்சும் செஞ்சு அடுத்தவங்களை சிக்கல்ல மாட்டிவிட்டுறேன்ல்ல” அவளை அவளே குறை சொல்லக்கொண்டே போனாள்.  

புவன் “அப்படி என்னதான் நடந்தது அங்க”

தமயந்தி “அதுவா… பின்னாடி  கால்ல யாரோ கை வச்சு டிராயிங் பண்ற மாதிரி இருந்துச்சா…நான் திரும்பி பார்த்தா அவன் நின்னுட்டு இருந்தான்.  திரும்ப திரும்பும் போது இடுப்புல கிள்ளி ஒரு மாதிரி நக்கலா சிரிச்சான்னா  கோபத்துல யோசிக்காம அடிச்சுட்டேன்” அவள் சொல்லவும் அருணுக்கு  தானாக புரிந்தது முதல் முறை அருண் தான் செய்கிறான் என்று நினைத்திருக்கிறாள்.

அருண் “நீ கவலைப்படாம போ. என்குயரி எல்லாமே நான் பார்த்துக்கிறேன். உன் பக்கம் எந்த பிரச்சனையும் வராது தைரியமா இரு.அவன் உன்ன ஹர்ட் பண்ணான் நீ பதிலுக்கு ஹர்ட் பண்ணே. நீயா போய் ஒருத்தர அடிக்கல அத மனசுல வச்சுக்கோ” 

தமயந்தி “அவன் போன்ல கூப்ட்டு மிரட்டுனான் அருண். விசாரணைல என் பெயர் சொல்லுவேன் சொன்னான். நானே பார்த்துக்கறேன் ப்ளீஸ்”

அருண் “சொல்லட்டுமே என்ன நடக்குதுன்னு பார்க்கலாம்” நக்கலாக சிரித்தான்.

அருண் எதுவும் பேசாமல் இருந்தாலும் அருணை யாராலும் தண்டிக்க முடியாது. முதலில் எதிராளியிடம் விசாரணை நடந்தால் தானே அருண் மீது குற்றம் என பழிச்சொல்ல… ‘தி கிரேட் பிஸ்னஸ் வுமன்’ அருந்ததி மகன் எல்லாம் தப்பே செய்யமாட்டான். அவன் எது செய்தாலும் அது ‘சரி’ மட்டுமே!

தமயந்தி எவ்வளவு வற்புறுத்தியும் அருண் அவன் முடிவில் நிலையாக நிற்கவும். ஒருவேளை அவள்தான் குற்றவாளி என விஷயம்  திரும்பினால் முழு காலேஜ் பீஸ் கட்டுவதென ஆகும், அவ்வளவுதானே!! பூமிகாவின் அம்மாவிடம் சொல்லி வேலை தேடப்போகிறாள்.

நால்வரும்  பேசிவிட்டு அவரவர் வழி செல்லும்போது எல்லோர் முகத்திலும் ஒரு நிம்மதி பரவி இருந்தது.

புவனுக்குள் இருக்கும் உற்சாகம் அவனுக்குள்ளே குதித்துக் கொண்டிருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!