Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

வண்ணம் தேடும் வானம்

வண்ணம் 31.2

பூமிகா அவள் ஆசை வாகனத்தை பார்க்கிங்லே விட்டிருக்காளே என்று நள்ளிரவில் அழைத்த தமயந்திக்கு “நல்லா இருக்கேன்டி புவனோட வெளில போயிட்டு வீட்டுக்கு வந்துட்டேன். நாளைக்கு வந்து வண்டியை எடுத்துக்கறேன்” என்று சகஜமாக பேசி வைத்தாள்.

துளியும் நிகழ்காலம் வரமுடியாமல் தவித்தாள் பூமிகா.அடுத்த நாள் முக்கியமான வேலைகள் ஆபிசில் நிறைய இருக்க தூங்க முடியாமல் தவித்தாள். மனம் புவனை நினைத்து ஏங்கியது, தவித்தது. 

பூமியை நினைத்து புவன் இன்னமும் குழம்பிப்போனான். எதையுமே பொறுமையாக கையாள நினைப்பவனுக்கு இந்த குழப்பத்தில் இருந்து வெளியேவர வெறியே பிடித்தது.ஆனால் என்ன செய்தால் மனதில் உள்ள இந்த பரபரப்பு குறையுமென தெரியவில்லை.

என்றைக்கும் இல்லாமல் அருண் அன்று புவனை சந்திக்க வந்தான். 



Advertisement

அருண் “என்ன மச்சான் ஏதாச்சும் பிரச்சனையா முகமே சரியில்லை”

புவன் “அப்படியெல்லாம் எதுவும் இல்லையே” என்றவன் முன் நெற்றியை நீவினான் 

அருண் “என்னடா ஆடிட்டிங் டைம் கூட இல்ல டல்லா இருக்க” என்றதும் ‘ஆடிட்டிங்’ என்ற வார்த்தை முத்தமிடவா என்று இவன் கேட்ட நிமிடம் அழுத்தமாக முத்தமிட்டவளை நினைவுக்கு கொண்டு வந்தது.

Advertisement

அருண் “சரி வா ஒரு இன்வெஸ்டர் மீட் இருக்கு அங்க போயிட்டு வரலாம்” என்றான் 

Advertisement

இருவரும் சென்ற இடத்தில் யாரோ பெண்ணொருத்தி பாடிகொண்டிருந்தாள். அருண் “இதொரு ட்ரெண்ட் மச்சான் இப்போ எல்லாம் எங்க எந்த ஈவென்ட்டா இருந்தாலும் இப்படி பாட யாராச்சும் வந்துர்ராங்க” என்றான் 

புவன் “ஆமா” என்றவன் சிறிது நேரத்திலேயே “கிளம்பலாம் எனக்கு இங்க இருக்க பிடிக்கல” என்று சொல்லவும் அங்கிருந்து கிளம்பி சிரஞ்சீவியை பார்க்க சென்றார்கள்.

சிரஞ்சீவியின் எந்த பேச்சும் புவன் காதுகளை எட்டவே இல்லை

Advertisement

சிரஞ்சீவி “அய்யயோ என் மச்சானை பேய் அடிச்சிருச்சு” என்று கூவ 

புவன் “ப்ச் அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல..டா”

சிரஞ்சீவி “அப்போ பூமிகா பேய் எதோ பண்ணிருக்கு”

அருண் “கரெக்ட்”

புவன் “எனக்கு எல்லாமே கஷ்டமா இருக்கு… மூச்சு விடவே ரொம்ப கஷ்டமா இருக்கு” என்றவன் பேசாமல் கபிலன் வீட்டிலேயே திரும்பவும் தங்க தொடங்கினான்.     

இரண்டு நாட்கள் கவனித்த அருண் இம்முறை சும்மா இல்லாமல் பூமிகாவை சந்திக்க சென்றான்.

அருணை பார்த்ததுமே புருவம் சுருக்கியவள் “சொல்லுங்க சார் என்ன பண்ணணும். சார் வெளில போயிருக்கார்” என்றே பேச 

“உன்ன பார்க்கத்தான் வந்தேன். பேசணும்” என்றான் அருண் 

பூமிகா “எனக்கு வேலை இருக்கு” என்று விலக 

அருண் சட்டென “உங்கப்பா உன்ன நெனச்சு கண்டீப்பா பெருமைதான் படுவார் தவிர உன்னை தப்பா நினைக்க மாட்டார்” என்றான் 

நின்றவள் பூமிக்கு விழிகளை மறைக்கும் கண்ணீர் பெருகியது 

அருண் மேலும் “சாரி ரொம்ப சாரி என்னிக்கும் பார்த்துக்குவேன்னு சொன்னேன் முக்கியமான நேரம் கண்டுக்காம விட்டுட்டேன்” என்றான் 

இம்முறை பூமிகா அவன் மீது சாய்ந்து அழவும் “எந்த அப்பாவும் அவர் பொண்ணு நல்லா இருக்கனும் அவளுக்கு பிடிச்ச பையனோட சேர்ந்து நல்லா வாழனும்தான்டா நினைப்பார்” என்றான் அருண் 

பூமிகா “பட் என் அப்பா என்கிட்டே கடைசியா பேசுனது அவன் வேண்டாம்ன்னு தான் அருண் அண்ணா” என்று மனதிற்குள் இருப்பதை வெளிப்படையாக சொன்னாள்.

அருண் எதுவும் பேசாமல் அழுபவளை சமாதானம் செய்ய தட்டிக்கொடுக்க 

பூமிகா “எப்படி அருண் அண்ணா நீ என்னை கண்டுக்காம போன உனக்கு இவ்வளவு நாள் ஆகியிருக்குல்ல என்கிட்டே பேச… நான் ட்ராமா குயின் தானே எல்லாமே மிகைப்படுத்தி நடத்துகிற ஆள் தானே…இப்போ என்ன திடிர்ன்னு…என்னை அப்படியே விட்டுட்டு போங்களேன்… ஏன் ஏன் இப்படி சித்ரவதை செய்றீங்க” கேட்டு அழுதாள் 

அருண் “சாரி பூமிகா ரொம்ப ரொம்ப சாரி. நீயா தேடி வந்து பேசுவ நெனச்சேன். இப்போ இப்போ தான் ஒரு இழப்பு எவ்வளவு பெரிய வலி கொடுக்கும் எப்படி ஒருத்தரை மாத்தும்ன்னு புரியுது… நான் பண்ண தப்புக்கு எனக்கு என்ன தண்டனை கொடுக்க முடியுமோ கொடு… ஆனா நான் சொல்ற மாதிரி நடந்திருக்க முடியுமான்னு யோசி” என்றவன் அவன் கண்டறிந்ததை சொன்னான். அம்பிகா தடுத்தும் தவறான வழியில் பணம் சேகரிப்பதை நிறுத்தாத கமலநாதன் பூமிகாவை புவனுடன் பார்த்த பின்பு ஏன் நிறுத்த முற்பட்டார்? அதன்பின் தான் செய்யும் தப்புக்கள் மகளை பாதிக்குமோ என்றும் யோசித்திருக்கிறாரா? அதன்பின்னே தானே விடுவித்துக்கொண்டு வர முயன்றிருப்பார்! என்று அருண் சொல்லவும் இருக்கலாம் என தலையாட்டியவள் “அப்பா புவனை சீப்பா நடத்துனது பொறுக்காம நான் அவர்கிட்ட பேச போனப்போ அவங்கெல்லாம் ரொம்ப பெரிய இடம் வேண்டாம்ன்னு சொன்னார். நான் புவன் நல்லவன் சீப்பான டைப் இல்லன்னு சொன்னேன் அப்பவும் அவர் என்கிட்டே சத்தம் போடவும் அதுக்கப்பறம் நான் அவர்கிட்ட பேசவே இல்ல” என்றாள். 

அருண் “நீ யோசி பூமிகா. இறந்து போன அப்பா நீ இப்படி அவருக்காக தியாகம் பண்றதை பார்த்து சந்தோசப்படுவாரா இல்லை வருத்தப்படுவாரான்னு யோசி. ஆனா என்னை பொறுத்தவரை உன் அப்பா நீ சந்தோசமா உனக்கு பிடிச்ச பைய்யனோட இருக்கிறத பார்த்துதான் சந்தோசபடுவார். அவர நெனச்சு உன்னை நீ வருத்திக்காத” என்றான் 

பூமிகா சிந்தனையில் ஆழ்ந்தவள் “நான் அம்மாகிட்ட பேசிட்டு எதுனாலும் முடிவு செய்றேன்” என்றாள்.

உண்மையில் கமலநாதன் இறப்பு பூமிகாவை மிகவும் பாதித்தது. பாதிக்கப்பட்டவள் அதை வெளியே பேசமுடியாமல் உள்ளுக்குள்ளே குமைந்து அந்த உணர்வுகளை வெவ்வேறு விதமாக வெளிப்படுத்தினாள். சிறுவயதிருந்து தெரிந்தவர்களென தெரிந்த அருண் புவன் சிரஞ்சீவி கூட “ஐயோ பூமி நீ கஷ்ட்டப்படுவியே” என்று அவளுக்கு ஆறுதல் சொல்ல வரவில்லை என்பது மாபெரும் அடியாக இருந்தது. அதிலும் மூன்று வருடம் கழித்து பார்த்ததும் எதுவும் நடக்காதது போல நடந்துகொண்டவர்கள் மீது வெறுப்பே மிகுந்தது. ஒரு கட்டத்தில் தவிர்க்க முடியாத நட்பென அவர்கள் உருமாறும் போது இவளுக்கு முதிர்ச்சி கூடும் போது அறிந்துகொண்டாள் ‘நம்மையும்  இவர்களுக்கு கையாள தெரியவில்லை இவர்களையும் முழுதாக நாம் அறிந்திருக்கவில்லை’ என. அந்த வயதில் மகிழ்ச்சியை பகிர்ந்துகொள்ள அறிந்தவர்களுக்கு துக்கத்தை எதிர்க்கொள்ள தெரியாமல் போனது.

அதுவே பெரிதாக பெரிதாக இழப்பின் வலி குறையாமல் இருக்கும்போது சந்தோசம் என்பதே வேண்டாம் என முடிவுக்கு வந்தாள் பூமிகா. இவன பார்த்தாதானே அப்பா ஞாபகம் வருது, அவர்கிட்ட சண்டை போட்டது நினைவுக்கு வருது இவன் அன்பை ஏத்துக்க முடியாம போகுது! இவனை பார்க்காமலே இருப்போம் என்று இருந்து பார்த்தாள், அதே வலி சற்றும் குறையாமல் இருந்தது. அடுத்து பழகி பார்க்கலாம் என பழகினால் பழைய ஆசை துளிர்த்து எழுந்து இப்படியான ஆசை தவறு என குழப்பத்தில் தள்ளியது. உள்ளுக்குள்ளேயே குடைந்த பூதத்தை அருண் முதன்முறையாக அடையாளம் கண்டு சமாதானம் செய்திருக்கிறான்.

புவனிடம் பூமியின் பிரச்சனையை எடுத்து சொன்னான் அருண். புவனும் புரிந்துகொண்டவன் கமலநாதன் விஷயத்தில் அவர்கள் புரிதலை தெளிவாக பேசி தீர்த்துக்கொண்டான்.

அருண் பூமிகாவிடம் பேசியபின் பூமிகா புவன் உறவில் மாபெரும் திருப்பம் நிகழ்ந்தது. அடுத்த மூன்று மாதத்தில் பூமி எல்லோரையும் சாப்பிட அழைத்து அவர்கள் எதிரில் புவனிடம் “எனக்கு அந்த பெரிய வீட்ல வாழணும் கல்யாணம் பண்ணிக்கலாம்” என்றாள்.

புவன் பூமிக்கும் வானத்திற்கும் துள்ளி குதித்தான்.

சிரஞ்சீவி “ரைட்டு இவன் என்ன மொத்தமா மறந்துருவான்” 

தமயந்தி பூமிகாவை கட்டியணைத்து “எப்பவும் இதே போல சந்தோஷமா இருக்கணும்” என்றாள்.

 புவன் “டியர் பூமி நீதான் என் ராணி” என்று கூச்சலிட்டு மகிழ்ந்து கொண்டாடினான். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!