Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

வரமாய் வந்த உறவே

வரமாய் வந்த உறவே – 2

அத்தியாயம் – 2

 

    வெங்கடாச்சலப்புரம் கிராமத்தில் இருக்கும் அரண்மனை போன்ற பெரிய வீடானது வண்ண வண்ண பூக்கள் மற்றும் அலங்கார விளக்குகளால் அலங்காரிக்கப்பட்டு இருந்தது. வீடு முழுவதும் உறவினர்களால் நிரம்பி வழிந்தது,விடிந்தால் அந்த வீட்டின் கடைசி மகள் விஜயலட்சுமியின் திருமணம்.

 



Advertisement

 ராஜசேகர் மிகவும் பிரமாண்டாமாக திருமணத்தை நடத்திக் கொண்டிருந்தார். ராஜசேகர் பெரிய ஜமின் குடும்பத்தின் வாரிசு,தலைமுறை தலைமுறையாய் அந்த பகுதியை ஆண்ட வம்சம்.பெரிய நாடக இருந்த பகுதி வாரிசுகளுக்கு பிரித்துக் கொடுக்கப்பட்டு கடைசியாக ராஜசேகரின் தாத்தா ஜமின்தார் வெங்கடாசலத்திற்கு இந்த பகுதி வழங்கப்பட்டது.அவர் ஆண்ட இந்த ஊரானது வெங்கடாசலபுரம் என்று பெயர் மாற்றப்பட்டு இன்று வரை அவ்வாறே உள்ளது.

 

 சில பல காரணங்களால் அவர்களின் அதிகாரம் பறிக்கப்பட்டு இப்பொழுது பேரளவில் மட்டுமே ஜமீன்தாராக இருக்கிறார் ராஜசேகர். சொத்துக்களுக்கு குறைவில்லை. மானம் மரியாதையை பெரிதாக நினைப்பவர். ஆண் பெண் என்ற பேதம் பார்ப்பவர். பெற்ற பெண்களின் மேல் அதிக அளவில் பாசம் வைத்து இருந்தாலும் அவர்களை தனது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்தார்.அவர் பேச்சை மீறி யாராலும் எதுவும் செய்ய முடியாது. குழந்தைகளின் படிப்பு, திருமணம், நட்பு என்று அனைத்தும் இவரே தீர்மானித்தார்.

Advertisement

 

Advertisement

 உறவினர்கள் யாரேனும் இவரை மீறி நடந்தால் அவர்களை அழித்து விடுவார் இல்லையென்றால் நிரந்தரமாக ஒதுக்கி வைத்து விடுவார். சாதிவெறி பிடித்தவர், தன் இனத்தை சேர்ந்த ஆண் பெண் யாரேனும் வேறு இனத்தை சேர்ந்தவர்களை காதலித்தால் சற்றும் யோசிக்காமல் அவர்களின் பெற்றோரை வைத்தே கொலை செய்து விடுவார். இந்த விஷயங்கள் வெளியே வராத வாரு பணத்தை குடுத்து சரி கட்டி விடுவார்.மனதளவில் இன்றும் தான் ஒரு ஜமீன்தாராக நினைத்து வாழ்ந்து வருகிறார்.

 

 

Advertisement

மணமகள் அறையில் இருந்த கட்டில் முழுவதும் தங்கம் மற்றும் வைர நகைகள் பரப்பி வைக்கப்பட்டு இருந்தன. அதை பற்றி கண்டுக் கொள்ளாமல் விஜயலட்சுமி பேசியல் செய்து கொண்டிருந்தாள்.

 

 விலை உயர்ந்த வைர நகைகளை எடுத்து ஆசையாக பார்த்துக் கொண்டிருந்தால் ராஜசேகர் வளர்மதி தம்பதிகளின் மூத்த மகள் கனக லட்சுமி, ராஜசேகர் வளர்மதி தம்பதியருக்கு மொத்தம் நான்கு பிள்ளைகள் முதலாவது வெங்கடேசன் தந்தை சொல் தட்டாத பிள்ளை கொஞ்சம் கோவக்காரன் , இரண்டாவது கனக லட்சுமி(கனகா)அனைத்தும் தனக்கு மட்டுமே கிடைக்க வேண்டும் என்ற சுயநல எண்ணம் கொண்டவள், தனக்கு வேண்டியதை ஆடைய எந்த எல்லைக்கு போகக் கூடியவள். மூன்றாவது மகாலட்சுமி(குட்டி) மிகவும் அன்பானவள், அமைதியானவள்,விட்டுக் கொடுக்கும் குணம் கொண்டவள். கடைக்குட்டி விஜயலட்சுமி(விஜி) இவள் மற்ற மூன்று பிள்ளைகளின் குணங்களை ஒருங்கே பெற்றவள்.

 

 கனக லட்சுமி எப்பொழுதும் தனது தங்கைகள் இருவரையும் பார்த்து மிகவும் பொறாமை படுவாள். தேவை என்றால் மட்டுமே தங்கைகளிடம் பாசமாக நடந்து கொள்வாள். தனது கல்யாணத்தின் பொழுதே அவளது அப்பாவிடம் தேவைக்கு அதிகமாகவே நகை மற்றும் புடவைகளை வாங்கிக் கொண்டாள். இருப்பினும் மகாலட்சுமியின் திருமணத்தின் போது கூட தன்னைவிட மகாவிற்கே அதிகம் நகை போடுவதாக புகார் கோரி நீலிக்கண்ணீர் வடித்து சில பல நகை செட் வாங்கிக் கொண்டாள்.

 

இப்பொழுது விஜிக்கு வாங்கிய நகைகளில் இருந்து விலையுயர்ந்த ஒரு வைர நகை செட்டை எடுத்து வைத்துக் கொண்டு “விஜி இந்த நகை செட் உனக்கு கொஞ்சம் கூட சுட் ஆகாது அதுனால இதை எனக்கு குடுத்துட்டு நீ அப்பா கிட்ட வேற வாங்கிக்கோ” என்றாள் சிரித்துக் கொண்டே.

 

“எனக்கு எது சுட் ஆகும் ஆகாதுனும் எனக்கு நல்லவே தெரியும் நீ ஒன்னும் சொல்ல தேவை இல்லை,உன்ன பத்தி எனக்கு நல்லாவே தெரியும் அக்கா ஒழுங்கா என் நகைகளை வச்சிட்டு இங்க இருந்து போ அக்கா” என்றாள் விஜி கோவமாக.

 

“என் பத்தி என்னடி தெரியும் உனக்கு, ஏதோ அந்த செட் நல்லா இருந்ததேனு கேட்டேன், அதுக்கு போய்ட்டு ஓவரா தான் பேசுற, என்ன டி என்ன விட பெரிய வீட்டுக்கு நீ கல்யாணம் ஆகி போக போறேனு திமிருல ஆடுறைய” 

 

“ஆமா அப்படி தான் ஆடுவேன் உனக்கு என்ன. உனக்கு எல்லாம் எவ்வளோ குடுத்தாலும் கணாதுல. அப்பா கிட்ட எதையாது சொல்லி நகை பணம்னு புடுங்கிக்கிட்டே தான் இருக்குற, பாவம் அப்பாவும் பெத்துடோமேன்னு நீ கேட்கறது எல்லாம் குடுக்குறாங்க. இது போதாதுன்னு என் நகைய வேற கேக்குற சீ என்ன பொண்ணு நீ” 

 

“என்ன டி அக்காங்கிற மரியாதை கொஞ்சம் கூட இல்லாம இப்படி எடுத்து எறிஞ்சி பேசுற”

 

“மரியாதை எல்லாம் அவங்க அவங்க நடந்துகிறதா வச்சி தான் தர முடியும்”

 

“ஓ அப்படியா உனக்கு பெரிய அக்கா நான் எனக்கு மரியாதை தர மாட்ட ஆனா உன் சின்ன அக்காக்கு மட்டும் மரியாதை குடுப்பியோ”

 

“ஆமா குட்டி அக்கா மேல அன்பு பாசம் மரியாதை எல்லாமே இருக்கு, அவ ஒன்னும் உன்ன மாதிரி கிடையாது”

 

“நீ இவளோ புகழ்ந்து பேசுற உங்க அக்கா ஏன் மா, அவளோட பாசமான தங்கச்சி கல்யாணத்துக்கு வரல”

 

“அவளோட சூழ்நிலை அப்படி அதான் வரலை, அவ ஏன் வரலன்னு உனக்கு தெரியாத, முதல்ல இங்க இருந்து போ உன்ன பாத்தாலே எரிச்சலா இருக்கு” என்று கோவமா கத்தினால் விஜி, கனகா அவளை முறைத்து விட்டு சோகமாக அறையில் வெளியே வந்தாள்.

 

அவளின் சோகத்திற்கு காரணம் வைர நகை கிடைக்கவில்லை என்பது தான். தங்கை திட்டியதை எல்லாம் ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளமாட்டாள்.

 

“என்ன கனகா அண்ணி விஜி ரூம்ல இருந்து ஒரே சத்தமா கேட்டுட்டு இருந்துச்சி, என்ன ஆச்சி” என்று எதுவும் தெரியாதது போல் நக்கலாக கேட்டாள் வெங்கடேஷின் மனைவி விமலா.

 

“அண்ணி நாங்க பேசுனதுலாம் கேட்டுட்டு வந்து தானா இப்படி ஒன்னும் தெரியாத மாதிரி கேக்குறீங்க. நானே நகை கிடைக்கலையேனு சோகமா இருக்கேன்”

 

“விஜிய என்ன குட்டினு நெனச்சுடிங்களா அண்ணி நீங்க கேட்டதும் கொஞ்சம் கூட யோசிக்காம தூக்கி கொடுக்குறதுக்கு, சரி 

விடுங்க அண்ணி அவ தரலான போற அதான் மாமா கிட்ட இருந்து 25 சவரன் நகை வாங்கிட்டீங்கள அப்பறம் என்ன விடுங்க வாங்க போலாம்” என்று நைசாக பேசி அழைத்து சென்றாள் விமலா.

 

 விமலாவும் கனகாவும் காரியம் ஆகவேண்டும் என்றாள் மட்டும் ஒற்றுமையாக இருப்பார்கள் மற்ற நேரங்களில் எதிர்யை போல அடித்துக் கொள்வார்கள்.

 

வளர்மதி கல்யாண வேலைகளை பார்த்துக் கொண்டிருக்க அவரிடம் உறவினர் பெண்மணி ஒருவர் “வளரு வீடிஞ்சா கல்யாணம் என்ன இன்னும் மகாலட்சுமி வரல”

 

“அது வந்து அக்கா,மாப்பிளையும் மகாவும் இப்போ தானா அமெரிக்கா போயிருக்காங்க. மாப்பிளைக்கு லீவு கிடைக்கல அதான் வரல” 

 

“மாப்பிளை வரலைனா என்ன மகா மட்டும் மாது வந்துருக்கலாம்ல”

 

“மகா மட்டும் வரதுக்கு டிக்கெட் எல்லாம் புக் பண்ணிருந்தா, டிசம்பர் மாசம்ல அதுனால அங்க பயங்கரமான பனிப்பொலிவு பிலைட் எல்லாம் கேன்சல் பன்னிட்டாங்க அதான் வர முடியல அக்கா” என்று கூறினார் வளர்மதி அதன்பின் எதுவும் கேட்காமல் அங்கிருந்து சென்று விட்டார் அந்த பெண்மணி. வளர்மதியும் பெருமுச்சு ஒன்றை விட்டு விட்டு வேலைகளை தொடர்ந்தார்.

 

 குமரன் தனது கடையில் அமர்ந்து கொண்டு அந்தத் தெருவின் கடைசியில் இருந்த பெரிய வீட்டை பார்த்துக் கொண்டிருந்தான். அப்பொழுது அங்கு வந்த செந்தில்

 

“என்ன மச்சான் நானும் ஒரு வாரமா பாத்துகிட்டு இருக்கேன், கலர் கலரா சட்டை போட்டுகிட்டு, அலங்கார எல்லாம் பண்ணிக் கிட்டு புது மாப்பிள்ளை மாதிரி சுத்திகிட்டு இருக்கியே, முகம் வேற ரொம்ப பிரகாசமா இருக்கு என்ன விஷயம்” 

 

“அப்படிலாம் எதுவும் இல்ல மச்சான் நான் எப்பவும் போல தான் இருக்கேன்”

 

” டேய் என்கிட்டயே பொய் சொல்லாத ஒழுங்கா உண்மையை சொல்லுடா “

 

“அது வந்துடா நாளைக்கு பெரிய வீட்டு பொண்ணுக்கு கல்யாணம்ல, தங்கச்சி கல்யாணத்துக்கு குட்டி எப்படியும் வந்துருவா அவள பாக்குறதுக்காக தான் இந்த மாதிரி டிரஸ் பண்ணிக்கிட்டு இருக்கேன்” என்றான் குமரன் வழிந்து கொண்டே. செந்திலும் இதுதான் காரணமாக இருக்கும் என்று நினைத்தான் அது சரியாகத்தான் இருந்தது.

 

” டேய் மச்சான் சொல்றேன் தப்பா நினைக்காத டா அந்த பொண்ணுக்கு கல்யாணம் ஆயிருச்சு நீ இன்னும் அந்த பொண்ண மனசுல நினைச்சுக்கிட்டு அவளை பார்க்கறதுக்காக இப்படி காத்துகிட்டு இருக்கிறது தப்பு டா”

 

“கல்யாணம் ஆயிடுச்சின்னா அவளைப் பார்க்க கூடாது பேசக்கூடாது மனசுல நினைக்க கூடாது எந்த சட்டமும் இல்லையே, அவளுக்கு கல்யாணம் ஆனாலும் சரி குழந்தை பிறந்தாலும் சரி ஏன் கிளவியாவே ஆனாலும் சரி. என் மனசுல எப்பவும் அதே குட்டியா தான் இருப்பா, என்னால் அவள மறக்கவும் முடியாது அதே மாதிரி என்னால அவ வாழ்க்கைல எந்த பிரச்சனையும் வராது. இத நான் ஏற்கனவே உன்கிட்ட பல தடவை சொல்லிட்டேன் ப்ளீஸ் மச்சான் புரிஞ்சுக்கோடா என்ன” என்று கூறி வருந்தினான்.

 

“மச்சான் வருத்தப்படாதடா, இனிமேல் நான் இதை பத்தி உன்கிட்ட கேட்க மாட்டேன் ஓகே வா, எனக்கு உன் சந்தோசம் தான் டா முக்கியம் நீ சந்தோசமா இருந்தா அதுவே எனக்கு போதும்” என்று கூறி அவனை அணைத்துக் கொண்டான்.

 

“டேய் டேய் எரும என்ன விடுடா நான் சுதா இல்லடா, உனக்கு கட்டி பிடிக்கணுனா போய் என் தங்கச்சியை கட்டிப்புடுடா என்ன விடுடா” என்று கூறிய அவனை தள்ளி விட்டான்.

 

“மச்சான் குட்டிய நீ பாத்தியா டா, அவ கல்யாணத்துக்கு வந்த மாதிரியே தெரியலையே டா” என்றான் செந்தில்.

 

குட்டிக்கு திருமணம் முடிந்தது ஒரு வருடத்திற்கும் மேலாகிவிட்டது. திருமணம் முடிந்து கணவர் வீட்டுக்கு செல்லும்போது கடைசியாக குட்டியை பார்த்தது. அதன் பின் குமரன் குட்டியை பார்க்கவே இல்லை ஒவ்வொரு விசேஷமாக வரும் போதும் குட்டி இங்கு வருவாள் அவளைப் பார்க்கலாம் என்று ஆவலாக காத்திருப்பான். ஆனால் இப்பொழுது வரை குட்டி இங்கு வரவே இல்லை.

 

“செந்தில் நானும் ஒரு வாரமா பாத்துக்கிட்டு இருக்கேன் குட்டி வரவே இல்ல டா, தங்கச்சி கல்யாணத்துக்கு கூட வர முடியாத அளவுக்கு அப்படி என்னடா காரணமா இருக்கும் ஒருவேளை உடம்புக்கு எதுவும் முடியாம இருப்பாலோ” என்றான் சோகமாக.

 

“கல்யாணத்துக்கு வரலைன்னா உடம்புக்கு முடியாம மட்டும் தான் இருக்கணுமா என்ன,மாசமா கூட இருக்கலாம்ல இந்த மாதிரி நேரத்துல பிளைட்ல எல்லாம் டிராவல் பண்ண கூடாதுனு டாக்டர் சொல்லி இருப்பாங்க, அதனால கூட வராமல் இருக்கலாம்” என்றான் செந்தில்.அவன் கூறியதை கேட்டதும் குமரனுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

 

” நீ சொல்ற மாதிரி மட்டும் இருந்தா ரொம்ப நல்லா இருக்கும் டா, குட்டியே குழந்தை மாதிரி தான் இருப்பா அவளுக்கு ஒரு குழந்தை வர போகுதா. யோசிச்சு பாரேன் குட்டி மாதிரியே அழகா ஒரு பெண் குழந்தை பிறந்தால் சூப்பரா இருக்குல” என்றான் கண்கள் மின்ன.

 

 செந்திலுக்கு குமரனை நினைத்து அழுவதா சிரிப்பதா என்றே தெரியவில்லை. ஆண்கள் காதலியை பிரிந்து விட்டால் ஓன்று அவளை மறக்க முடியாமல் மது மாது என்று தன்னைத்தானே அளித்துக் கொள்வர்கள் இல்லையென்றால் அவள் நன்றாக இருக்கக் கூடாது என்று அவளை பழிவாங்க ஏதேனும் செய்வார்கள்.

 

 இது எதையும் செய்யாமல் காதலியை மனதில் வைத்து கொண்டு அவள் நன்றாக வாழ வேண்டும் என்று எண்ணி. அவளது சந்தோஷத்தை தனது சந்தோஷமாக நினைத்து கொண்டாடுபவன் விசித்திரப் பிறவியாக தான் தெரிந்தான் செந்தில் கண்களுக்கு.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!