Skip to content
Post Views: 953
ஆராதனா 07
வேலையை ரிசைன் செய்வது என்ற முடிவை எடுத்திருந்தேன் நான். இந்த சிஷுவேஷனில் இது தான் சரியான முடிவு. அதில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை.
ஹெச் ஆரில் ரிசைன் செய்வதற்கான காரணம் சொல்ல வேண்டும். ஃபீட்பேக் கொடுக்க வேண்டும்.
வேறு நல்ல வேலை கிடைத்தால் இருக்கும் வேலையை ரிசைன் செய்வார்கள். இல்லை திருமணம், ஊர் விட்டு வேறு ஊருக்கு ஷிஃபிட் செய்வது அல்லது வெளிநாட்டிற்கு போகும் போது என பல காரணங்களில் ஒன்று கூட எனக்கு ஃபிட் ஆகவில்லையே.
Advertisement
மணி மூன்றரை ஆகியிருந்தது. நியூயார்க்கில் அதிகாலை ஐந்து மணி. இப்போது எட்வர்ட்க்கு கால் செய்தால் சரியாக இருக்கும்.
நான் கால் செய்ய, இரண்டே ரிங்கில் எடுத்து விட்டிருந்தான்.
“ஹே பெல்லா. என்ன விஷயம்” என்றான்.
Advertisement
நாங்கள் ஜி சாட்டில் தான் வழக்கமாக பேசிக் கொள்வோம். அவனிடம் ஏதேனும் விஷயம் பற்றி டிஸ்கஸ் செய்ய வேண்டுமெனில் கால் செய்யச் சொல்லி மெசேஜ் செய்வேன். நானாக அவனைக் கூப்பிடுவது ரொம்பவும் ரேர்.
Advertisement
இன்று நடந்த அனைத்தையும் அவனிடம் சொன்னேன். விக்ரம் எனக்கு வழி ஏதும் இல்லை என்று சொன்னது, நான் ரிசைன் செய்ய முடிவெடுத்திருப்பது, அந்த முடிவை எப்படி எல்லோரும் சந்தோஷமாக ஏற்றுக் கொள்ள வைப்பது என்று தெரியவில்லை என்பதையும் அவனிடம் சொன்னேன்.
பொறுமையாக கேட்டுக் கொண்டிருந்தவன் “ நீ இங்கே வந்துவிடு” என்றான்.
“வாட், அங்கே நான் எப்படி வருவது” என்று கேட்க
Advertisement
“முன்பு எப்படி வந்தாயோ அப்படித் தான். அப்போ ஃப்ளைட்டில் தானே வந்தாய். இல்லை கப்பலில் மிதந்து வந்தாயா” வம்பிழுத்துக் கொண்டிருக்கிறான்.
இதற்கு முன் ஒரே ஒரு முறை தான் யூ.எஸ் சென்றிருக்கிறேன். ஜெசப் மூட் காம்படீஷனுக்காக.. அங்கே தான் அவனையும் சந்தித்தேன்.
எங்கள் லா காலேஜ் சார்பாக நான்கு பேர் கொண்ட குழு எங்கள் அட்வைசர்ஸ் மூவருடன் சென்றிருந்தோம். கொலம்பியா யுனிவர்சிடி சார்பாக போட்டியில் கலந்து கொள்ள வந்திருந்தான் அவன்.
இவனுடைய தாத்தா, அம்மா, அப்பா என குடும்பமே லாயர் குடும்பம். நியூயார்க்கின் டாப் லீகல் நிறுவனத்தை இவர்கள் நடத்தி வந்தனர் என்பதால் அங்கே பாப்புலராக இருந்தான். அந்த அடையாளங்களைத் தாண்டி அவன் திறமை எல்லோராலும் பேசப்பட்டது.
செமி ஃபைனல்ஸில் அவனும் நானும் நேருக்கு நேர் சந்தக்க நேரிட்டது ஒன் ஆஃப் த பெஸ்ட் மொமன்ட்ஸ். அன்றைய போட்டியில் நாங்கள் வெற்றி பெற்றோம்.
“யூ ஆர் எ ரேர் டேலன்ட் ( மிகவும் அரிதான திறமை பெற்றிருக்கிறாய்) ஃபைனல்ஸில் வெற்றி பெற என் வாழ்த்துக்கள்” என்று மனமார என்னை வாழ்த்தினான்.
அவன் எப்போதுமே ஒரு புன்னகையோடு வலம் வந்ததை நான் கவனித்திருந்தேன். அவன் தோல்வியுற்ற போதும் கூட சிரித்த முகமாக இருந்தான்.
நாங்கள் ஃபைனல்சில் வெற்றி பெற்று பெஸ்ட் ஓரலிஸ்ட் அவார்ட் எனக்கு கிடைக்க என்னை விட அவன் மிகவும் மகிழ்ந்து போனான்.
அன்றிலிருந்து இன்று வரை என் வெற்றிகளில் என்னை விட அதிகம் சந்தோஷப்படுவது அவன் தான்.
“அப்போ காம்படீஷனில் கலந்து கொள்ள வந்தேன். இப்போ இங்கே வேலையை ரிசைன் செய்து விட்டு என்ன ரீசனுக்கு அங்கே வரச் சொல்கிறாய் என்று கேட்கிறேன்”
“ரீசன்ஸ் எத்தனையோ இருக்கு. அதெல்லாம் சொன்னால் என்னை அடிக்க வருவாய்” பெரிதாகச் சிரித்தான்.
நான் என்ன சொல்லிக் கொண்டிருக்கிறேன், இவன் காமெடி செய்து கொண்டிருக்கிறான்.
“அங்கே வேலையை ரிசைன் செய்துவிட்டு இங்கே என்னுடன் என் நிறுவனத்தில் வேலை பார்க்க வரச் சொல்கிறேன். நீ தானே சொன்னாய் இந்தியாவில் யூஎஸ் போவதை பெருமையாக நினைப்பார்கள் என்று. நியூயார்க்கில் வேலை பார்க்க போகிறேன் என்று நீ சொன்னால் எல்லோரும் ஹாப்பியாக உன்னை சென்ட் ஆஃப் செய்வார்கள் தானே”
“இட்ஸ் எ குட் ஐடியா. உண்மையில் ரொம்ப நல்ல ஐடியா. ஆனால் நான் அங்கே எப்படி வேலை பார்க்க முடியும். நியூயார்க் பார் எக்ஸாம் பாஸ் செய்யாமல் அது எப்படி பாசிபில்?“
இந்தியாவில் லா படித்துவிட்டு அமெரிக்காவில் வேலை பார்ப்பது அவ்வளவு ஈசி இல்லை. அங்கே ஒவ்வொரு ஸ்டேட்டிற்கும் வேறு வேறு ரூல்ஸ். நிறைய கண்டிஷன்ஸ் உண்டு. அந்த கண்டிஷன்ஸை பூர்த்தி செய்யவே நிறைய வருடங்கள் ஆகும்.
“பாரா லீகல் போஸ்ட்டிற்கு பார் எக்ஸாம் பாஸ் செய்ய வேண்டியதில்லை. அந்த போஸ்ட் பேருக்குத் தான். ஃபார் விசா பர்பஸ். யூ கேன் பி அட்வைசர் ஹியர். ஜூனியர்ஸ்க்கு கைட் செய். டூ எனிதிங் யூ விஷ்”
என் பிரச்னைக்கு எவ்வளவு ஈசியாக தீர்வை சொல்லி விட்டான். எனக்கும் அங்கே சென்று வேலை செய்வது என் ஃபியூச்சர் கரீயருக்கு ரொம்பவே உறுதுணையாக இருக்கும்.
“யூ ஆர் த பெஸ்ட். உனக்கு நான் எப்படி நன்றி சொல்வது” என் மனதில் தெளிவும் நிம்மதியும் நிறைந்திருந்தது.
“நன்றி எல்லாம் சொல்ல வேண்டாம். ஜஸ்ட் சே எஸ்” என்றான்.
“எஸ் யுவர் ஆனர்” நான் சிரிக்கவும் “தேங்க் காட். மை பெல்லா இஸ் பேக்” என்றான்.
உன்னை இதற்கு முன் இப்படி நான் பார்த்ததே இல்லை. இந்த விக்ரம் உன்னை ரொம்பவே அசைத்து விட்டிருக்கிறான் என்றும் சொன்னவன் “பட் ஐ ஷுட் தேங்க் விக்ரம்” எனவும் “அவனுக்கு எதற்கு தேங்க்ஸ் சொல்கிறாய்” என்று கேட்டேன்.
“நீ இங்கே வந்தபின் நினைவுபடுத்து. அப்போது சொல்கிறேன்” புதிர் போட்டான்.
இப்போதைக்கு இதைப் பற்றி அம்மா அப்பாவிடம் சொல்ல வேண்டாம் என்று முடிவெடுத்தேன். முதலில் எட்வர்ட் பேப்பர்ஸ் அனுப்பட்டும். விசா கிடைக்க வேண்டும்.
ஆனால் ஷ்யாம் சோனாவிடம் சொல்லத் தான் வேண்டும்.
சோனாவிற்கு ஃபோன் செய்ய ஷ்யாமுடன் ஷாப்பிங்கில் இருப்பதாகச் சொன்னாள்.
இருவரையும் ஷாப்பிங்கை முடித்துக் கொண்டு வீட்டிற்கு வரச் சொன்னேன்.
“மேம் பிஸியா” கரண் எட்டிப் பார்த்தான்.
“கம் இன் கரண்” நான் சொல்லவும் உள்ளே வந்து அமர்ந்தான்.
“உங்களால் மட்டும் தான் இப்படி எல்லாம் சர்ப்ரைஸ் கொடுக்க முடியும். விக்ரம் பார்த்தசாரதியை யார் என்று கேட்டீர்களாமே!” என்றவன் சிரித்தான்.
“ஹி இஸ் ரூத்லஸ் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். இப்போ அவர் நம்ம க்ளையன்ட் வேறே. பி கேர்ஃபுல் மேம். நீங்க தான் அவரோடு க்ளோஸா டீல் செய்ய போகிறீங்க” அக்கறையோடு சொன்னான்.
இல்லை நீ தான் க்ளோஸா டீல் செய்யப் போகிறாய் என்று மனதில் நினைத்துக் கொண்டேன். நான் ரிசைன் செய்தவுடன் என் இடத்திற்கு கரணை ஷர்மாவிடம் ரிகமன்ட் செய்ய வேண்டும் என்று ஏற்கனவே முடிவு செய்திருந்தேன்.
“வி வில் ஸீ தட்” சின்னச் சிரிப்புடன் சொன்னேன்.
“அப்படின்னா” கரண் என் சிரிப்பின் காரணம் புரியாமல் விழித்தான்.
“யார் யாரோடு க்ளோஸா வேலை செய்யப் போவது என்று பார்க்கலாம்” புன்னகை மாறாமலே சொன்னேன்.
“நீங்க என்ன சொல்ல வறீங்க. எனக்குப் புரியவில்லை” என்றான் கரண்.
“நாளைக்கு எல்லாம் புரியும் படி சொல்கிறேன். நான் கிளம்புகிறேன். நாளை நீ வருவாயா” நான் கேட்கவும் “முக்கியமான வேலை என்றால் வருகிறேன்” என்றான்.
சனி, ஞாயிறு லீவ் தான் எங்களுக்கு. ஆனால் ப்ராஜக்ட் டெட்லைன் என்றால் நேரம் காலம் பார்க்காமல் வேலை செய்வோம்.
“நாளை வேறு கமிட்மன்ட்ஸ் ஏதும் வைத்துக் கொள்ளாதே. நான் கால் செய்கிறேன்” எனவும் சரி என்றான்.
நான் வீட்டிற்குச் சென்ற சில நிமிடங்களில் “ஆரா” என்று அழைத்துக் கொண்டே ஷ்யாமுடன் சோனாவும் வந்துவிட்டிருந்தாள்.
டின்னர் முடித்ததும் ஷ்யாமிடம் டீல் பற்றி பேச வேண்டும் என்றேன். சோனா அவள் ஸ்டூடியோவில் வேலை பார்ப்பதாகச் சொல்லிச் சென்றதும் “ஆரா வாட் ஹாப்பன்ட்” என்று கேட்டான் ஷ்யாம்.
காலையில் நடந்தவற்றை மேலோட்டமாகச் சொன்னேன். பொறுமையாக கேட்டவன் சிறிது நேரம் ஏதோ யோசனையில் இருந்தான்.
“ஆரா, நான் தான் அன்று தெரியாமல் உன் பேரை விக்ரம் சாரிடம் சொல்லிவிட்டேன் என்று நினைக்கிறேன். அன்று ஃப்ளைட்டில். நான் உடனே சமாளித்து விட்டிருந்தேன், அவர் அதை கண்டுகொண்டதாக தெரியவில்லை. என் தவறு தான்” என்று வருந்தினான்.
“உன் தவறு ஒன்றுமில்லை. முதல் மீட்டிங் போதே விக்ரம் என்னை தெரிந்து கொண்டிருப்பார். எதனால் இத்தனை நாள் டிலே செய்தார் என்று தான் எனக்குப் புரியவில்லை. நீ எப்படி ரியாக்ட் செய்கிறாய் என்று பார்ப்பதற்காக இருக்கலாம், வேறு ஏதும் இன்வெஸ்ட்டர் பார்த்து கொண்டிருக்கிறாயா என்று இன்வெஸ்டிகேட் செய்வதற்காக இருக்காலம்” நான் எனது யூகங்களைச் சொன்னேன்.
“ஒரு வேளை விக்ரம் டீலை கால் ஆஃப் செய்தாலும் உனக்கு ஸ்ட்ராங் பேக் அப் இருக்கு. நீ சோனாவைக் கூட பார்ட்னராக சேர்த்துக் கொள்ளலாமே. அவ அப்பாகிட்ட கேட்க வேண்டிய வேண்டிய அவசியமே இல்லை” நான் சொல்லவும் ஹ்ம்ம் என்று கேட்டுக் கொண்டான்.
சோனாவின் தாய் வழிப் பாட்டி அவள் பெயருக்கு நிறைய சொத்துக்களை எழுதி வைத்திருந்தார். அதை எல்லாம் என்னிடம் கொடுத்து தான் சரி பார்க்கச் சொன்னாள். ஷ்யாமின் கணக்கு படி 20 – 30 % வரை சோனாவால் சுயமாக இன்வெஸ்ட் செய்ய முடியும்.
“எனிவேஸ் விக்ரமிடம் மாட்டிக் கொண்டாய் ஷ்யாம். ஒன்று அவர் நம் டெர்ம்ஸ்க்கு ஒத்து வர வேண்டும். இல்லைனா அவராகவே டீலை கான்சல் செய்ய வேண்டும். இந்த இரண்டில் ஒன்று மன்டே அன்று கண்டிப்பாக நடக்கும். இதைப் படிச்சுப் பார்த்துச் சொல்” எனது லாப்டாப்பை ஷ்யாம் பக்கம் திருப்பினேன்
விக்ரம் வைத்திருந்த இரண்டு முக்கிய கண்டிஷன்ஸ். விக்ரமிற்கு 49% பங்குகளை கொடுப்பது. அண்ட் எக்ஸிட் க்ளாஸ் படி சேனல் லாபகரமாக இயங்கவில்லை எனில் ஷ்யாம் அவன் பங்குகளை விக்ரமிடம் விற்று விட வேண்டியது. இதை எந்த மாற்றமும் இல்லாமல் ஏற்றுக் கொள்வது.
ஆனால் எங்கள் சார்பில் இரண்டு கண்டிஷன்களை சேர்ந்திருந்தேன்.
முதலாவது விக்ரம் சைலன்ட் இன்வெஸ்ட்டராக இருக்க வேண்டும். அதாவது பணம் போடுவது மட்டும் தான் அவன் வேலை. சேனலை நடத்தும் பொறுப்பு முழுவதும் ஷ்யாமுடையது. விக்ரமின் தலையீடு சுத்தமாக இருக்கக் கூடாது.
இரண்டாவது இரண்டு வருடங்களில் ஷ்யாம் லாபம் காட்டிவிட்டால் விக்ரமின் எக்ஸிட் க்ளாஸ் செல்லுபடி ஆகாது. அப்போது இந்த டீலையும் புதிய டெர்ம்ஸ் அண்ட் கண்டிஷன்களுடன் புதுப்பிப்பது. ஷ்யாம் விரும்பினால் வேறு இன்வெஸ்டர்களையும் சேர்த்துக் கொள்ளலாம்.
நான் வைத்திருக்கும் கண்டிஷனை ஏற்பது விக்ரமிற்கு லாபமாகத் தான் அமையும். சேனலை ஷ்யாம் வெற்றிகரமாக நடத்தினால் அதில் விக்ரமிற்கும் லாபம். ஒரு வேளை லாஸ் ஆனால் ஷ்யாம் விக்ரமின் கண்டிஷன் படி அவனுக்கே பங்குகளை விற்க வேண்டும். இது உண்மையில் விக்ரமிற்குத் தான் வின் வின் சிசுவேஷன்.
“எனக்கு ஒகே ஆரா” முழுவதையும் படித்துப் பார்த்துவிட்டு சரி என்றான் ஷ்யாம்.
“ஷ்யாம் இரண்டு வருடங்களில் நீ லாபம் கட்டவில்லை எனில் சேனல் வில் பீ விக்ரம்ஸ். இட்ஸ் ரிஸ்கி. நன்றாக யோசித்துச் சொல்” நான் வலியுறுத்தினேன்.
“லைஃப்பில் என்றேனும் ஒரு நாள் ரிஸ்க் எடுத்து தானே ஆக வேண்டும் ஆரா. நீ உன் வேலையை ரிசைன் செய்து எனக்காக ரிஸ்க் எடுக்கவில்லையா. என் அப்பாவின் நிழலிலேயே நான் எத்தனை நாள் இருப்பது. நான் நிச்சயம் வெற்றி பெறுவேன் ஆரா. எனக்காக இல்லையென்றாலும் என் மீது நம்பிக்கை வைத்திருக்கும் சோனுவிற்காக, உனக்காக” ஷ்யாமின் குரலில் தீவிரம் இருந்தது. ஆனால் அதில் வருத்தத்தின் சாயலும் இருந்தது.
“நான் என் வேலையை ரிசைன் செய்து எந்த ரிஸ்க்கையும் எடுக்கவில்லை ஷ்யாம். லால் அண்ட் ஷர்மாவிலா வாழ்நாள் முழுவதும் வேலை பார்த்துக் கொண்டிருக்கப் போகிறேன், எனக்கென்று ஆம்பிஷன் இருக்கு. எனது அடுத்த கட்ட வளர்ச்சிக்கான ஆரம்பம் இது ஷ்யாம். ஐ ஆம் ஹாப்பி” என் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தவன் நான் உண்மையில் மகிழ்ச்சியாக இருப்பதைக் கண்டு மெல்லச் சிரித்தான்.
“வேலை ரிசைன் செய்தாயா? ஏன்?” கேட்டுக் கொண்டே சோனா வந்தாள்.
“எட்வர்ட் நியூயார்க் வரச் சொல்கிறான்” நான் சொல்லவும் சோனா முகத்தில் அவ்வளவு சந்தோஷம்.
“ரியலி. என்கிட்டே சொல்லவே இல்லை” அவள் கேட்கவும் “பேப்பர் வொர்க் கொஞ்சம் இழுபறியாக இருந்தது. ஸோ அதெல்லாம் சால்வ் ஆனதும் சொல்லலாம் என்றிருந்தேன். இன்னும் எதுவும் பைனல் இல்லை” நான் சொல்லவும் என்னை அணைத்துக் கொண்டாள்.
திங்களன்று விக்ரமின் ஆஃபிஸில் சந்திப்பதாகச் சொல்லிவிட்டு ஷ்யாம் விடைபெற்றுச் செல்ல, நானும் சோனாவும் வெகு நேரம் பேசிக் கொண்டிருந்தோம்.
ஷர்மா, லாலிடம் விவரங்களைச் சொல்லியிருக்க வேண்டும். எனது ரெசிக்னேஷனை ஏற்றுக் கொள்வதாக சொன்னவர் “ஐ ஆம் சாரி ஆராதனா. அடுத்து என்ன செய்யப் போகிறாய்” என்று அக்கறையுடன் கேட்டார்.
“ஒரு பர்சனல் ஆஃபரை ஏற்றுக் கொள்ளலாம் என்றிருக்கிறேன்” என்று மட்டும் சொன்னேன்.
“எங்கள் நிறுவனத்தின் கதவுகள் உனக்காக எப்போதுமே திறந்திருக்கும்” என்று லால் சொல்ல ஷர்மா மீட்டிங் பற்றி பேச வேண்டும் என்றார்.
ஷர்மாவின் சேம்பருக்கு வந்ததும் அவரிடம் எனது ப்ளான் முழுவதையும் சொல்லி அவர் கருத்தைக் கேட்டேன்.
“ஷேர்னி எல்லாவற்றையும் என்னிடம் ரிவில் செய்து விட்டாய். நான் ஆபோசிட் பார்ட்டி. ஹாஹா” என்று ஜோக் அடித்தார்.
டீல்ஸ் எல்லாமே லாயர்ஸ் லெவலில் தான் நடக்கும். டெர்ம்ஸ் எல்லாம் முன்பே டிஸ்கஸ் செய்து கொள்வோம். க்ளயன்ட் ஒகே சொன்னதும் சம்பிரதாய மீட்டிங் வைத்து அக்ரீமன்ட் சைன் செய்வது வழக்கம்.
சில க்ளயன்ட்ஸ் கடைசி நேரத்தில் இது சரியில்லை, இதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று சொல்லும் பட்சத்தில் மீண்டும் நெகோஷியேஷன் நடக்கும்.
பொதுவாக அப்படி யாரும் செய்வதில்லை. ஆனால் விக்ரமை நம்ப முடியாது. என்ன வேண்டுமானாலும் அவன் செய்யக் கூடும்.
என் டிராஃப்ட்டைப் படித்துப் பார்த்தவர் “ப்ரிலியன்ட் ஆரா” என்றார்.
“உங்கள் க்ளையன்ட்டிடம் கன்சல்ட் செய்துவிட்டு மன்டே மீட்டிங்கை ஃபைனல் செய்து எனக்குச் சொல்லுங்கள் சர்” சிரித்தேன் நான்.
“சர் ஒரு பர்ச்னல் ரிகுவஸ்ட்” என்று நான் கேட்க “எனிதிங் ஃபார் யூ” என்றார்.
எனது இடத்தில் கரணை நியமிக்க நான் கேட்டுக் கொண்டதை சந்தோஷமாக ஏற்றுக் கொண்டார்.
“தட் பாய் டிசர்வ்ஸ் இட். எங்கள் எல்லோரையும் விட அவன் தான் உன்னை அதிகம் மிஸ் செய்யப் போகிறான்” என்றார்.
அவரிடம் விடைபெற்று வந்ததும் கரணை போனில் அழைத்து சுருக்கமாக விவரங்களைச் சொன்னேன்.
“உங்களோடு ஐந்து வருடங்கள் சேர்ந்து வொர்க் செய்திருக்கிறேன் மேம். நீங்க என்ன நினைத்து ரிசைன் செய்திருக்கீங்க என்று எனக்கு நன்றாகவே புரிகிறது” என்றான்.
பல நாட்களுக்குப் பிறகு எனக்கே எனக்கான சன்டே.
காலையில் இருந்தே வானம் மேகமூட்டமாக இருந்து கொண்டிருந்தது. மதியம் லேசான தூறலுடன் ஆரம்பித்து மாலையில் சோவென பொழிந்து கொண்டிருந்தது மழை.
ஒரு கையில் காபி, மறுகையில் கீதையுடன் பால்கனி சேரில் அமர்ந்து மழையை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.
எங்கிருந்தோ காற்றில் தவழ்ந்து வந்தது ஃப்ளூட் இசை.
ரிங்டோனாக இருக்க வேண்டும். மீண்டும் மீண்டும் இசைத்துக் கொண்டிருந்தது.
கண் மூடி சில நிமிடங்கள் அமர்ந்திருந்தேன்.
கடந்த சில மாதங்களாக ஒவ்வொரு நாளும் திருப்பங்களும், மாற்றங்களுமாக போய்க் கொண்டிருந்தது.
நேற்று வரை லால், ஷர்மா, கரண் இவர்கள் பக்கம் அமர்ந்திருந்த நான், நாளை அவர்களின் எதிரில்.
இப்படியும் ஒரு சூழ்நிலை வரக் கூடும் என்று நான் நினைத்தும் பார்த்ததில்லை.
பார்த்திபன் கூடத் தான் நினைத்தும் பார்த்திருக்க மாட்டான். தன்னவர்களை எதிர்த்துப் போரிடும் நிலை வரக் கூடும் என்று.
ஆனால் அன்று குருஷேத்திரத்தில் இரண்டு பக்கமும் நிலவிய தவிப்போ, தடுமாற்றமோ, தர்மசங்கடமோ நாளை இருக்காது. மாறாக தெளிவும், அமைதியும் மட்டுமே நிறைந்திருக்கும்.
கையில் இருந்த கீதையை நெஞ்சோடு அணைத்துக் கொண்டேன். என் மனம் நன்றியுணர்வால் நிறைந்திருக்கிறது.
ஐ ஃபீல் சோ ப்ளஸ்ட்.
prasāde sarva-duḥkhānāṁ hānir asyopajāyate
prasanna-chetaso hyāśhu buddhiḥ paryavatiṣhṭhate BG 2.65:
(தெய்வீக அருளால் அனைத்து துக்கங்களும் முடிவடைந்து அமைதி வருகிறது, அமைதியான மனதுடைய ஒருவரின் புத்தி விரைவில் கடவுளிடம் உறுதியாக நிலைநிறுத்தப்படுகிறது.)
error: Content is protected !!