Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

79. M and V - வான் தழுவிடிலோ வெண்ணிலவே

வான் தழுவிடிலோ வெண்ணிலவே 17 (01)

ஆராதனா வாசுதேவன் 12

நியூயார்க் முழுவதும் வெளீர் எனப் பனி போர்த்தியிருந்தது.

பங்க்ஷன் முடிந்து நானும் எட்வர்டும் திரும்பிக் கொண்டிருந்தோம்.

“விக்ரம் கிட்டே நாங்க வரோம்ன்னு ஏன் சொன்ன” எட்வர்ட் கொஞ்சம் கடுப்பாகக்  கேட்டான்.



Advertisement

“உனக்கு நிஜமா வேலை இருந்தா நான் மட்டும் போறேன். நீ அவாய்ட் செய்யத் தான் அப்படி சொல்கிறாய் என்று நினைத்தேன்” நான் அவனிடம் சொல்ல என்னை முறைத்தான்.

“பெல்லா நான் உன்னையும் சேர்த்து தான் சொல்றேன். நீயும் போக வேண்டாம்”

இப்படி எல்லாம் எட்வர்ட் பேசுபவனில்லை. இன்று  விக்ரமிடமும் நறுக்கென்று பேசிவிட்டான். என் மேல் அக்கறை கொண்டு தான் சொன்னான். இருந்தாலும் எட்வர்ட் யாரிடமும் இப்படிப் பேசி நான் பார்த்ததில்லை.

Advertisement

“நான் வரேன்னு சொல்லிட்டேன். சோ நான் போகத் தான் போறேன்” நான் பிடிவாதமாக சொல்லவும்

Advertisement

“சரி அப்போ நானும் வரேன். நீ தனியாக போக வேண்டாம்” என்றான்.

“உனக்கு என்னாச்சு எட்வர்ட்” நான் கேட்கவும் “உனக்கு என்னாச்சு பெல்லா” என்று திரும்பிக் கேட்டான்.

எட்வர்ட்டின் போன் ஒலிக்க டிஸ்ப்ளேவில் தெரிந்த பெயரை நானும் பார்த்தேன்.

Advertisement

அவன் காலை கட் செய்தான்.

மீண்டும் கால் வர மறுபடியும் கட் செய்தான்.

“கால் அட்டன்ட் பண்ணு எட்ர்ட். ஏதேனும் முக்கியமான விஷயமாக இருக்கப் போகிறது”

“உன்னை விட எதுவும் முக்கியம் இல்லை பெல்லா. நவ் லிஸன்” என்றவன்

“விக்ரம் ஹர்ட் யூ பெல்லா. ஒரு முறை அல்ல. உன் வேலையை ரிசைன் செய்யும் படி உன்னை நிர்பந்தம் செய்தான். அப்போவே சொன்னேன் இங்கே வந்துவிடு என்று, நீ கேட்காமல் அவனுக்கே லீகல் அட்வைசராக  வொர்க் செய்தாய்” சொல்லிக் கொண்டே  போனான்.

“அப்போ என் சிசுவேஷன் உனக்கு தெரியுமே” நான் கேட்கவும்

“தட்ஸ் ஒகே பெல்லா. யூ லைக்ட் ஹிம். மேரேஜ் செய்துக்க முடிவு செய்தாய். ஐ வாஸ் சோ ஹாப்பி பார் யூ.  உன்னை லவ் செய்தார் என்று மகிழ்ந்தேன்.  பட் உன்னை ஹர்ட் செய்தார்” மிகுந்த வருத்தத்துடன் அவன் சொல்லவும் எனக்கு கஷ்டமாக போச்சு.

நான் சோர்ந்திருந்த பொழுதில் எல்லாம் என்னை தட்டிக் கொடுத்திருக்கிறான். விக்ரம் மேல் கோபமாக இருப்பதாக சொல்லியிருக்கிறான். ஆனால் ஒரு நாளும் நீ ஏன் அவனை இன்னும் நினைத்துக் கொண்டு இப்படி இருக்கிறாய் என்று கேட்டதில்லை.

ஏதாவது கதை சொல்லி ஜோக் சொல்லி என் மனநிலையை மாற்றி விடுவான்.

ஆனால் இன்று விக்ரமை பார்த்ததிலிருந்து எட்வர்ட் எட்வர்டாகவே இல்லை.

நான் அவனிடம் அதை சொன்ன போது, “நீ தான் நீயாகவே இல்லை பெல்லா” என்றான்.

அது என்னவோ உண்மை தான். இந்த ஒன்பது மாதங்களில் நான் நானாக இல்லை. வெளியில் தெரியாவிட்டாலும் உண்மையில் விக்ரமை நினைக்காத நாளில்லை.

இன்று அவனை வெகு நாட்களுக்குப் பிறகு நேரில் பார்த்ததும் நடந்த அனைத்தும் சூரியனைக் கண்ட பனிப்போல விலகி விட என் மனம் முழுவதும் சந்தோஷம் தான் நிரம்பியிருந்தது.

பெஸ்ட் enterprenur அவார்ட்டை விக்ரம் கையில் வாங்கிய போது ஓடிப் போய் அவனைக் கட்டிக் கொள்ள வேண்டும் என்ற வேகம் எனக்குள் எழுந்தது எனக்கே ஆச்சரியம் தான்.

எட்வர்ட் என் கையை இறுகப் பற்றியிருக்காவிட்டால் செய்தும் இருப்பேன்.

எட்வர்ட் சொன்னது சரி தான். நான் இப்படி எல்லாம் இருந்ததில்லை.

எதையும் நிதானமாக லாஜிக்காக அனலைஸ் செய்யும் தன்மை கொண்டவள். எமோஷனலாக எதையும் செய்ததில்லை.

ஆனால் என்னை அப்படி ஆக்கி வைத்திருக்கிறான் இந்த விக்ரம்.

என்னை வீட்டில் இறக்கி விட்டு நாளை டின்னருக்கு அழைத்துக் கொண்டு போக வருவதாகச் சொல்லிச் சென்றான் எட்வர்ட்.

உடை மாற்றிக் கொண்டு ஜன்னல் அருகே வந்தமர்ந்தேன். வெளியே பனி பொழிந்து கொண்டிருந்தது.

மனம் விக்ரம்மை சுற்றியே வட்டமடித்துக் கொண்டிருந்தது.

அவார்ட் பெற்றுக் கொண்டு மேடையை விட்டு இறங்கி வந்ததுமே அவனை விஷ் செய்யலாம் என்று தான் நினைத்தேன்.

இந்த எட்வர்ட் தான் தடுத்து விட்டான்.

ஆனால் எங்களைப் பார்த்து அவனாகவே வந்து பேசுவான் என்று நான் எதிர்பார்க்கவில்லை.

எட்வர்டிடமும் சாதாரணமாகப்  பேசினான்.

ஜேடனின் இந்தியா கொலபரேஷன் அவரோட பர்சனல் ப்ராஜக்ட். விக்ரமோடு டை அப் செய்ய அவர் முடிவு செய்திருப்பது எவ்வளவு பெருமையான விஷயம்.

உண்மையில் விக்ரம் டிசர்வ்ஸ் இட்.

ஆனாலும் என் மேல் நம்பிக்கையில்லாமல் அவன் அன்று பேசியதை என்னால் மறக்க முடியவில்லை. மறக்க முடியுமா என்று தெரியவும் இல்லை.

மாயா ஜேடனைப் பார்க்கும் போதெல்லாம் நானும் விக்ரமும் இப்படி இருக்க வேண்டும் என்ற ஏக்கம் எனக்குள் எப்போதுமே எழும்.

இன்று அவர்கள் அருகருகே நின்று  போட்டோவிற்கு போஸ் கொடுத்துக் கொண்டிருந்த போது என்னருகிலேயே நின்றிருந்தான் விக்ரம்.

அன்று விக்ரம் என் விருப்பத்திற்கு மதிப்பு கொடுத்து யூஎஸ் போய்விட்டு வா என்று சொல்லியிருந்தால்…. நானும் இரண்டு வாரங்களில் இந்தியா திரும்பியிருப்பேன்.

இதோ இந்த அவார்ட் பங்க்ஷனுக்கு நாங்கள் இருவரும் ஜோடியாக வந்திருப்போம்.

“ஆரா மை வைஃப்” என்று என்னை அணைத்தபடி பெருமையாக அறிமுகம் செய்திருப்பான்.

மாயா ஜேடன் போல நாங்களும் போட்டோவிற்கு போஸ் செய்திருப்போம்.

ஆனால் அவன் மாறவில்லை. ஆரா ஆரான்னு ஒரு பொண்ணு இருந்தாளாம். அவ சொன்ன இடத்தில எல்லாம் சைன் செய்தாராம்.

அப்புறம் ஏன் யூஎஸ் போகணும் என்று நான் சொன்ன போது, கொஞ்ச நாள் பிறகு கல்யாணம் செய்துக்கலாம் என்று நான் சொன்ன போது கேட்கவில்லையாம்.

விக்ரமிடம் நோ சொன்னால் எப்போதும் நோ தான் என்றான். பிறகு ஏன் இன்னும் நிச்சயத்தில் நான் போட்டு விட்ட மோதிரத்தை கழட்டாமல் போட்டுக் கொண்டிருக்கிறான்.

அந்த மோதிரத்தைப் பார்த்தும் எனக்குமே கொஞ்சம் அதிர்ச்சி தான். கொஞ்சம் சந்தோஷமாகவும் இருக்கிறது தான்.

ஆனால் இத்தனை நாட்களில் ஒரு மெசேஜ் ஒரு கால் ஒன்றும் இல்லை.

அன்று நான் அப்படி பேசியிருக்க கூடாது ஆரா என்று ஒரு மெசேஜ் அனுப்பியிருந்தால் கூட …

அவன் மாறவில்லை.

ஜேடன் கூட கொலபரேஷன் எவ்வளவு பெரிய விஷயம். என்னை ஜேடன் கன்வின்ஸ் செய்ய சொன்னதால் அதை வேண்டுமென்றே மறுப்பானோ!

நான் வேறு ‘ஐ வில் டேக் கேர்’ என்று அவரிடம் சொல்லிவிட்டேன்.

நாளைக்கு ட்ரீட்க்கு எட்வர்ட்டை வேறு எதற்கு வருந்தி அழைத்தான்.

எட்வர்ட் எனக்காக தான் விக்ரமிடம் கடுமையாக பேசினான். அதை மனதில் வைத்துக் கொண்டு அவனை ஏதும் சீண்டுவானா!

விக்ரமை நினைத்துக் கொண்டே தூங்கிப் போனேன்.

காலை அலாரம் வழக்கம் போல எழுப்பி விடவும் தான் சேரிலேயே தூங்கி விட்டிருந்ததை உணர்ந்தேன்.

கிறிஸ்மஸ் ஹாலிடேஸ் என்பதால் ஆபிஸ் இல்லை. ஆனால் எட்வர்ட் ஒரு கேஸ் விஷயமாக வரச் சொல்லியிருந்தான்.

ஹாங்கரில் இருந்து உடையை எடுத்துக் கொண்டிருந்த போது தான் என் புடவை கண்ணில் பட்டது.

நியூயார்க் வரும் போது இந்த புடவையை மட்டும் எடுத்துக் கொண்டு வந்தேன். முதன் முதலில்  விக்ரமை சந்தித்த போது நான் கட்டிக் கொண்டிருந்த புடவை.

என் கைகள் ஆசையாக புடவையை தடவிக் கொடுத்தன.

நேற்றும் அவார்ட்  பங்க்ஷனில் என் உடை மீது அவன் பார்வை பதிந்ததை நானும் கவனித்தேன். அது சோனா டிசைன் செய்த பார்ட்டி உடை.

என்னை முதன்முதலில் புடவையில் இல்லாமல் வெஸ்டர்ன் உடையில் அவன் பார்த்த போது அவன் ரியாக்ஷன் இன்னும் எனக்கு நியாபகம் இருக்கிறது.

அவன் கிட்டத்தட்ட ஒரு வருடமாக லண்டனில் குடியிருந்த சமயம். ஒரு டீல் விஷயமாக என்னை லண்டனுக்கு வரவழைத்தான்.

‘லண்டனுக்கு புடவையைக் கட்டிக் கொண்டு போகாதே. அங்கே எல்லாம் ட்ரஸ் கோட் ரொம்ப பார்ப்பாங்க’ சோனா தான் வெஸ்டர்ன் பார்மல்ஸ் செலக்ட் செய்து கொடுத்தாள்.

நான் ஜீன்ஸ் குர்தா, சுரிதார் எல்லாம் அணிவது தான். ஆனால் மீட்டிங்க்ஸ், டீல்ஸ் என்றால் புடவை தான்.

அதனால் விக்ரம் என்னை வேறு உடையில் அதற்கு முன் பார்த்ததில்லை.

விக்ரமிற்கு லண்டனில் ஒரு அபார்ட்மன்ட் இருக்கிறது. அவன் அங்கே தான் தங்கி  இருந்தான்.

நான் ஷ்யாமிற்கு சொந்தமான ப்ளாட்டில் தங்குவதாக முன்பே சொல்லியிருந்தேன்.

மறுநாள் விக்ரமின் லண்டன் ஆபீஸிற்கு நான் செல்ல பாலா தான் என்னை விக்ரமிடம் அழைத்துக் கொண்டு போனார்.

என்னைப் பார்த்ததும் அவன் புருவங்கள் சுருங்கியதையும்,  பார்வையில் சிறு ஏமாற்றம் இருந்ததையும் நான் கவனித்தேன்.

அவன் ஒன்றும் பேசாமல் நின்று கொண்டிருக்க
“ஹாய் விக்ரம். ஐ ஆம் ஆராதனா” என்று நான் கொஞ்சம் கேலியாக சொல்லவும்

“ஆராதனா வாசுதேவன். மை லீகல் அட்வைசர்” என்றவன் “வித்தியாசமாக இருக்கிறாய்” என்று மட்டும் சொன்னான்.

அவன் குரல் எப்போதும் போல அழுத்தமாக இருக்கவும் நான் வேறு ஒன்றும் சொல்லவில்லை.

லண்டனில் இருந்த ஒரு வாரமும் நான் வெஸ்டர்ன் உடைகளிலேயே தான் வலம் வந்தேன்.

அவன் சென்னை வந்த பிறகு வைஷாலி அரவிந்தை சந்திக்க சென்ற போது தான் விக்ரமை எதேச்சையாக சந்தித்தேன்.

அப்போது நான் புடவை தான் கட்டிக் கொண்டிருந்தேன். விக்ரம் கண்களில் மீண்டும் ஒரு மின்னல் வெட்டியதோ! எனக்குச் சரியாக நினைவில்லை.

ஆனால் நிச்சயம் அன்று மோதிரம் மாற்றிய போது லெஹெங்கா தான் அணிந்திருந்தேன். தட்டு மாற்றிய சமயம் அரக்கு பட்டு அணிந்து கொண்டு நான் வந்த போது அவன் பார்வை என்னை விட்டு விலகவே இல்லை.

இன்றும் ஜேடன் அருகில் நின்றிருந்த மாயாவை பார்த்ததும் அவன் பார்வை என் மேல் பதிந்தது.

இன்று அவன் கொடுக்கும் ட்ரீட்க்கு புடவை அணிந்து கொண்டு போனால் என்ன.

என்னை நினைத்து எனக்கே ஆச்சரியமாக இருக்கிறது. இது என்ன உணர்வு.

அவனுக்கு பிடிக்கும் என்று புடவை அணிந்து கொள்ள விரும்புகிறேன் நான்.

அவனோடு சேர்ந்து நின்று போட்டோ எடுத்துக் கொள்ள வேண்டும் என்று ஆசை கொள்கிறேன் நான்.

ஒரு வேளை அன்று அப்படி பேசியதற்கு வருத்தம் தெரிவிப்பனா!

‘திரும்ப வந்துவிடு’  என்று சொல்வானா!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!