Skip to content
Post Views: 1,134
ஆராதனா வாசுதேவன்
அடுத்தடுத்து நடந்த நிகழ்வுகளில் எதுவுமே தோன்றாமல் ட்ரஸ் சேஞ் கூட செய்யாமல் சிலையாக அமர்ந்திருந்தேன்.
ஒன்று மட்டும் நிச்சயம். ‘ஐ லவ் ஹிம். ஐ லவ் விக்ரம்’
ஆனால் விக்ரம் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறான்? என்ன மனதில் வைத்துக் கொண்டு என்னையும் எட்வர்ட்டையும் சேர்ந்து நிற்கச் சொல்லி போட்டோ எடுத்தான்?
Advertisement
‘எட்வர்ட் கூட பிக் எடுத்துக் கொள்ள எனக்குத் தெரியாதா?’
வைஷாலி அவனை விட்டுப் பிரிந்து போன போது விக்ரம் அரவிந்தின் மீது எப்படி பட்ட ஒரு கோபத்தை வெளிப் படுத்தினான் என்பது எனக்கு நன்றாகவே தெரியும்.
இன்று என்ன செய்து வைத்திருக்கிறான் அவன். விட்டுக் கொடுக்கிறானாமா என்னை? எட்வர்டுக்கா?
Advertisement
விக்ரம் சட்டையைக் கொத்தாகப் பிடித்து “என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாய் நீ?” என்று கேட்க வேண்டும் போல இருந்தது எனக்கு. ஆனாலும் வார்த்தைகள் வரவில்லை.
Advertisement
அந்த லேடி மிஸில்டோவைக் காட்டிச் சொல்லவும் எதைப் பற்றியும் யோசிக்கவில்லை நான். இதை விட எப்படிச் சொல்ல வேண்டும் நான். தட் ஐ லவ் ஹிம்.
எவ்வளவு ஆசையாக புடவை கட்டிக் கொண்டு போனேன்?
என்னிடம் திரும்பி வந்துவிடு என்பான் என்று எவ்வளவு ஆர்வமாக எதிர்பார்த்தேன்.
Advertisement
அவனை வேஷ்டி சட்டையில் பார்த்த போது அவனோடு சேர்ந்து நடந்த போது எனக்குள் எழுந்த உணர்வுகளை எல்லாம் இப்படி சிதறிடித்து விட்டானே!
ஏன் விக்ரம்?
நோ என்றால் நோ தான் என்று அன்றும் சொன்னான். இன்றும் அதையே சொல்கிறான்.
எங்கே எட்வர்டை சீண்டி விடுவானோ என்று பயந்தேன். ஆனால் இப்படி செய்து வைப்பான் என்று கொஞ்சமும் நினைக்கவில்லை.
எனக்கு அந்த போட்டோவை வேறு அனுப்பி வைத்திருக்கிறான். இத்தனை மாதங்களில் அவனிடம் இருந்து வரும் முதல் மெசேஜ்…
வழிகின்ற நீரை துடைக்கவும் மனமில்லாமல் அப்படியே உறங்கிப் போனேன்.
காலை பத்து மணிக்கு அழைப்பு மணி தொடர்ந்து ஒலிக்க, அப்போதுதான் கண் விழித்தேன் நான். அவசரமாக எழுந்து டோர் பட்டனை தட்டி விட்டு வாசல் கதவைத் திறக்க லிஃப்டில் இருந்து வெளியேறினாள் ஸ்வாதி.
“ஹாய் அண்ணி” என்று என்னைப் பார்த்து தலை சாய்த்து சிரித்தாள் அவள்.
அவளை அப்படியே இறுக அணைத்துக் கொண்டேன் நான்.
“அண்ணி” அவளும் என்னைக் கட்டிக் கொண்டாள்.
அவள் ‘அண்ணி’, ‘அண்ணி’ என்றது இப்போது பாலைவனத்தில் அலைந்து திரிந்தவளுக்கு குவளை நீர் கிடைத்து போல இருப்பதை அவள் அறிய மாட்டாள்.
நான் தூங்கி எழுந்த நிலையில் இருக்கவும் என்னை மேலும் கீழுமாகப் பார்த்தாள்.
“காலையிலே இருந்து அர்ஜுனோட ரொம்ப சண்டை” என்றபடியே கையில் ஒரு மொபைலை ஆட்டிக் கொண்டிருந்தவள் “அதான் அவன் போனை தூக்கிட்டு நான் இங்கே வந்திட்டேன். காணாம போச்சுன்னு நல்லா தேடட்டும்” என்றவள் “சாரி உங்களை டிஸ்டர்ப் செய்துட்டேனா” என்று வருத்தம் தெரிவித்தாள்.
“அதெல்லாம் ஒன்றும் டிஸ்டர்பன்ஸ் இல்லை. பைவ் மினிட்ஸ்ல் வரேன்” அவளிடம் சொல்லிக் கொண்டு அவசரமாக முகம் கழுவிக் கொண்டு உடை மாற்றி வந்தேன்.
“என்ன சண்டை ஸ்வாதி உனக்கும் அர்ஜுனுக்கும்?” அவளுக்கும் எனக்குமாக காபியும் டோஸ்ட்டும் எடுத்துக் கொண்டு வந்தேன்.
“ரெண்டு நாளா எனக்கு ஃபீவர் அண்ணி. என்னை நல்லா தூங்க வெச்சிட்டு அவனும் அண்ணாவும் அவார்ட் ஃபங்ஷனுக்கும் வந்திட்டாங்க, நேத்து ட்ரீட்டுக்கும் வந்திட்டாங்க. அதுதான் இன்னைக்கு நான் உங்ககிட்டே வந்திட்டேன்” போனை அசைட்டையாக மேஜை மீது வைத்தாள்.
அச்சமயம் ஒலித்தது எனது கைப்பேசி. விக்ரம் என்றது திரை.
“ஹலோ” நான் அழைப்பை ஏற்க
“நான் அர்ஜுன் பேசறேன்” என்றது மறுமுனை “ஸ்வாதி அங்கே வந்திருக்காளா?” அவனிடம் நிறையவே பதற்றம்.
“ஆமாம் அர்ஜுன் உன் போனையும் தூக்கிட்டு இங்கே வந்திட்டா”
“நல்ல வேளை நிஜமா எங்கே போனாளோ அப்படின்னு ரொம்ப பயந்துட்டேன். தாங்க் யூ ஸோ மச். அவ அங்கிருந்து கிளம்பும் போது மட்டும் எனக்கு ஒரு கால் பண்ணி சொல்றீங்களா?”
“ஷூர் அர்ஜுன். ஆனா உன் மொபைல்..”
“அது நாட் அ ப்ராப்ளம். நான் மேனேஜ் பண்ணிக்கறேன்” அவன் சொல்ல
“ஓகே அர்ஜுன்” என முடித்தேன் நான்.
அவன் மறந்தும் என்னை அண்ணி என்று அழைக்கவில்லை. இப்போது தான் கவனிக்கிறேன். அப்போது யூஎஸ் ஓபனுக்கு வந்த போதும் அவன் என்னை அண்ணி என்று அழைக்கவில்லை.
ஸ்வாதி தான் அப்போது என்னைப் பார்க்க வேண்டும் என்று சொல்லவும் அவர்களை ஒரு நாள் சென்று பார்த்து விட்டு வந்தேன்.
மேட்ச் பிஸியில் அப்போது அதிகம் பேசிக் கொள்ள சான்ஸ் கிடைக்கவில்லை.
நேற்று டின்னர் போதும், அவார்ட் பங்க்ஷன் போதும் கூட ஒரு டிஸ்டன்ஸ் மெயின்டைன் செய்தான் அர்ஜூன்.
அதற்குள்ளாக ஸ்வாதி அவனது மொபலை துழாவிக் கொண்டு அமர்ந்திருந்தாள்.
“வாட் இஸ் திஸ் ஸ்வாதி? மற்றவங்க மொபைல் எல்லாம் நாம இப்படி பார்க்குறது தப்பு” நான் சொல்ல
“மற்றவங்களா! எனக்கும் அர்ஜுனுக்கும் எந்த ஒளிவு மறைவும் கிடையாது. அவன் பாஸ்வோர்ட் கூட நான் தான் க்ரியேட் பண்ணேன். குஷ்பூன்னு எல்லோருக்கும் தெரிவது போலவா பாஸ்வர்ட் வைப்பாங்க. நீங்களே சொல்லுங்க அண்ணி” என்றவள்
“அண்ணி இங்கே பாருங்களேன் இதிலே ஒரு வாய்ஸ் ரெக்கார்டிங் இருக்கு. அது நேம் “விக்ரம் அபவுட் அண்ணி. ஹவ் நைஸ்” என்றாள் சந்தோஷமாக.
“என்னது?” நான் புரியாமல் கேட்க
“இல்ல அண்ணி. விக்ரம் அண்ணன் உங்களை பற்றி ஏதோ பேசி ரிகார்ட் பண்ணி வெச்சிருக்காங்கன்னு நினைக்கிறேன்” சொன்னாள் ஸ்வாதி.
“ஸ்வாதி” அதட்டியே விட்டேன் நான். “முதலிலே அதை எடுத்து ஓரமா வை. எனக்கு இது போல மற்றவங்க மொபைல் எல்லாம் அவங்க பர்மிஷன் இல்லாம பார்க்குறது பிடிக்காது”
எனது அதட்டலில் பயந்துதான் போனாள் அவள். அதோடு அர்ஜுனின் கைப்பேசியை தொடுவதையும் நிறுத்தி இருந்தாள்.
அடுத்த சில மணி நேரங்கள் ஸ்வாதி விடாமல் பேசிக் கொண்டே இருக்க நான் சமைத்து முடித்திருந்தேன்.
டோஸ்ட் சாப்பிட்டதே ஹெவியாக இருக்கு என்றவள் இரண்டு நாள் காய்ச்சல் இருந்த வீக்னஸில் உறங்கியும் போனாள்.
இப்போது ஸ்வாதி சொன்ன வார்த்தைகள் என்னைத் துரத்திக் கொண்டே இருந்தன.
அர்ஜூனின் போன் அடிக்க விக்ரம் என்ற டிஸ்ப்ளே பார்த்ததும் எடுத்தேன். அர்ஜூன் தான்.
ஸ்வாதி தூங்குகிறாள் என்று நான் சொல்லவும் சரி என்று வைத்தான்.
நான் போனை ஆஃப் செய்ய ஸ்வைப் செய்ததில் எதேச்சையாக என் விரல் பட்டு அந்த வாய்ஸ் மெசேஜ் ஆன் ஆகிவிட்டது.
“ஒரு உண்மையை சொல்றேன் உன்கிட்டே. எனக்கு ஆராதனாவை உயிருக்கு மேலே பிடிக்கும்”
ஸ்வாதி அதை ஓபன் செய்த போது லாக் ஸ்க்ரீனிலேயே இருந்திருக்க வேண்டும்.
எதுவும் செய்யத் தோன்றாமல் சிலையாக அமர்ந்து விட்டிருந்தேன்.
“இப்போன்னு இல்ல எப்பவுமே. ஆனா காதல், கல்யாணம் எல்லாம் மற்றவங்க பேசி பஞ்சாயத்து பண்ணி எல்லாம் செய்யக் கூடாது அர்ஜுன். அது தன்னாலே விரும்பி நடக்கணும். இதுவெல்லாம் ஒரு வகையிலே நான் வைஷாலி அரவிந்த் பார்த்து கத்துகிட்டேன்ன்னு கூட சொல்லலாம் இப்போ ஆராதனா விருப்பப்படி அவ இருக்கட்டும். எப்பவாவது என்னை மனசார விரும்பினா மட்டும் அவ திரும்பி என்கிட்டே வரட்டும்..”
“அப்படி அண்ணியை உயிருக்கு மேலே பிடிச்சு இருக்கு அப்படின்னா எதுக்கு விக்ரம் அவங்களோட சண்டை போட்டே?”
அடுத்தக் கேள்வியை மிக மிகத் தயக்கத்துடன் கேட்டான் அர்ஜுன்.
‘நான் அவளை கல்யாணம் பண்ணிக்கலாம் அப்படின்னுதான் கேட்டேன் அர்ஜுன். ரொம்ப நேரம் பொறுமையாதான் பேசினேன். ஆனா கடைசியிலே அவ வைஷாலியை இழுத்து பேசினதுதான் எனக்கு ரொம்ப கஷ்டமா போச்சு. யார் வேணும்னாலும் என்னை அப்படி பேசட்டும். எனக்கு கவலை இல்லை ஆனா ஆரா எப்படி அப்படி பேசலாம்? ஆயிரம்தான் புலியா வலம் வந்தாலும் எனக்கும் மனசு வலிக்கும் தானே அர்ஜுன்?’
‘பயப்படாதே அர்ஜுன். நான் வைஷாலியை துரத்திட்டு ஓடின பழைய விக்ரம் எல்லாம் இல்லை’
‘விக்ரம் அண்ணி கண்டிப்பா வருவாங்க . நீ தோற்று போயிட்டதா மட்டும் வருத்தப் படாதே’
தென்கச்சி கோ சுவாமிநாதன் தெரியுமா? அவர் சொல்வாராம். ‘எப்போதுமே தோற்க தயாராக இருப்பவனை யாராலும் ஜெயிக்க முடியாது’ அப்படின்னு. அதே போல என்னை அவளாலே ஜெயிக்கவே முடியாது பிகாஸ் நான் எப்போதுமே தோற்கத் தயாராகவே இருக்கிறேன். அவகிட்டே மட்டும். மை லவ் இஸ் அன்கன்டீஷனல் அர்ஜுன். (என்னுடைய காதல் நிபந்தனைகளற்றது)’
பேசிக் கொண்டே போய் கொண்டிருந்தான் விக்ரம்.
கண்ணில் வழியும் நீரை துடைக்கக் கூடத் தோன்றாமல் அமர்ந்திருந்தேன் நான்.
‘என்னை அவளாலே ஜெயிக்கவே முடியாது பிகாஸ் நான் எப்போதுமே தோற்கத் தயாராகவே இருக்கிறேன். அவகிட்டே மட்டும்’
என்னிடம் தோற்கத் தயாராக இருக்கிறானாம். நான் கேட்டேனா?
அதெப்படி என் மேல் இவ்வளவு காதலை வைத்துக் கொண்டு எட்வர்ட்டோடு ஜோடி சேர்க்க மனம் வந்தது.
நான் அட்மையர் செய்த விக்ரமா இவன்.
ஷ்யாம் டீல் போது நானே நினைத்து பார்க்காத வகையில் வியூகம் அமைத்து என்னை அதில் சிக்க வைத்து செக்மேட் வைத்தான். நான் ரிசைன் செய்யும் படியான சூழ்நிலையை உருவாக்கினான். என் டீம்மையே எனக்கு எதிராக நிறுத்தி வைத்தான்.
அவன் எனக்கு எதிராக எல்லாம் செய்த போதும் அவனது பிஸ்னஸ் strategy அது தானே என்னை ஈர்த்தது.
ஒரு முறை அவனது லீகல் டீமைச் சேர்ந்த அட்வோகட் சிறு தவறு செய்து விட்டிருந்தார். நான் அப்பாவை செக் அப்பிற்கு அழைத்துச் சென்றிருந்த போது விக்ரம் அதைக் கண்டுபிடித்து அவரை வேலையை விட்டே வெளியேற சொல்லிவிட்டிருந்தான்.
அவர் மிகவும் திறமையனாவர். லால் அண்ட் ஷர்மாவில் கரணைப் போல எனக்கு மிகவும் பக்கபலமாக இருந்தார்.
“விக்ரம் அவர் வேண்டுமென்றே செய்யவில்லை. அண்ட் நான் தான் இன்னும் செக் செய்யவில்லையே. அதற்குள் ஏன் நீங்க அவசரப்பட்டீங்க” நான் கேட்கவும்
“என் ஸ்டாப்பை நான் எப்படி டீல் செய்ய வேண்டும் என்று எனக்கு சொல்லித் தராதே” என்றான்.
“யூ ஆர் ரைட். அவர் உங்க ஸ்டாப் தான். பட் என்னோடு வேலை செய்கிறார். அவர் செய்த மிஸ்டேக்கில் எனக்கும் பங்கு இருக்கு” நான் சொல்லவும்
“உளறாதே ஆரா” என்றான் கோபமாக.
“ஐ டேக் ரெஸ்பான்ஸிபிலிட்டி” நான் பிடிவாதமாக இருக்கவும்
“ஐ கான்ட் டேக் ஹிம் பேக்” அவன் முடிவில் உறுதியாக இருந்தான்.
“அப்போ எனக்கு அசோசியேட்டாக அவரை வைத்துக் கொள்கிறேன். நான் தான் ப்ரீலான்ஸ் செய்கிறேனே” நானும் உறுதியாக இருந்தேன்.
சில நொடிகள் மௌனம் நிலவியது.
பின் “ஷேர்னி” என மெதுவாக முணுமுணுத்தான்.
“என்ன சொன்னீங்க?”
“சரின்னு சொன்னேன்” அவன் சொல்லவும் எங்கள் இருவர் முகத்திலும் புன்னகை.
இப்படி என்னோடு சரிக்கு சரி வாதம் செய்தானே அது தானே என்னை ஈர்த்தது.
விக்ரம் மீன்ஸ் விக்டரி என்பவன் இன்று தோற்றுப் போவானாமா!
அவன் தோற்றுப் போவதை, அது என்னிடமே என்றாலும் நான் ஒரு போதும் விரும்ப மாட்டேன் என்று அவனுக்கு ஏன் தெரியவில்லை.
அவன் கிட்டத்தட்ட ஒரு வருடம் லண்டனில் இருந்த போது சின்ன விஷயம் என்றால் கூட என்னைக் கேட்டுத் தானே செய்தான்.
இப்போது காதலை தியாகம் செய்வதையும் என்னைக் கேட்டுச் செய்ய வேண்டியது தானே.
என் சிந்தனைகளை கலைத்தது மொபைலின் ரிங் டோன். அது விக்ரமின் நம்பர் தான்.
“சொல்லு அர்ஜூன்” நான் சொல்ல “நான் விக்ரம்” என்ற குரல் கேட்டதும் எனது கண்களில் இருந்து நீர் பிரவாகமாக பொங்கியது.
“ஆரா” விக்ரமின் குரல் கேள்வியாக ஒலிக்க சட்டென மியூட் செய்து வைத்தேன்.
“அர்ஜூன் அங்கே வந்து கொண்டிருக்கிறான். அது சொல்லத் தான் போன் செய்தேன்” என்று சொல்லி வைத்து விட்டான்.
அவ்வளவு தானா? என்னிடம் பேச ஒன்றும் இல்லையா?
ஐ கிஸ்ட் ஹிம். அந்த மொமன்ட் இன்னும் எனக்கு சிலிர்ப்பைத் தருகிறது. அவனுக்கு எந்த ஃபீலிங்க்கும் இல்லையா?
அர்ஜூன் வருகிறான். அவசரமாக முகம் கழுவி என்னை சமநிலை படுத்திக் கொண்டேன்.
சிறிது நேரத்தில் டோர் பெல் ஒலிக்க அனுமதி பட்டனைத் தட்டி அர்ஜூன் வருவதற்கு காத்துக் கொண்டிருந்தேன்.
“ஸ்வாதி இன்னுமா தூங்கறா? பார்டிக்குப் போக நேரமாச்சு” கேட்டுக் கொண்டே வந்தான்.
“ஆமாம். நீ வா” அவனை டைனிங்கிற்கு அழைத்துச் சென்றேன்.
“காபி சாப்பிடுகிறாயா அர்ஜூன்” நான் கேட்க சரி என்று தலையாட்டினான்.
“உங்க அண்ணன் எப்படி இருக்கார் அர்ஜுன்?”
“நல்லா இருக்கார். அவருக்கென்ன?” புன்னகையுடனே சொன்னான் அர்ஜுன்.
“நல்லா இருக்கார். என்னை உயிராகக் காதலிக்கிறார். என்னால் அவரை எப்போதும் ஜெயிக்க முடியாது. ஏன்னா என்னிடம் தோற்றுப் போக எப்போதும் தயாராக இருக்கிறார். அப்படித் தானே”
அந்த ரிகார்ட்டிங்கை நான் கேட்டு விட்டேன் என்று புரிந்து கொண்டான் அவன்.
“அன்னைக்கு அண்ணன் உங்களை பற்றி மனசார சொல்லிட்டு இருந்தார். அது உங்களுக்கும் தெரிய வேண்டாமா? என்னைக்காவது ஒரு நாள் உங்க கிட்டே காட்டணும்னுதான் நான் ரிகார்ட் பண்ணி வெச்சேன்”ஒவ்வொரு வார்த்தையாக உதிர்த்தான் அர்ஜுன்.
“அது இருக்கட்டும் இப்போவும் என் விருப்பம் என்னவென்று தெரிந்து கொள்ள வேண்டும் என்று தோன்றவே இல்லை தானே உன் அண்ணாவுக்கு” நான் கேட்க அமைதி காத்தான் அர்ஜூன்.
“கல்யாணம் பண்ணிக் கொண்டு தான் நான் யூஎஸ் போக வேண்டும் என்று ஃபோர்ஸ் செய்தார் உன் அண்ணா. அதைச் சொன்னாரா உன்னிடம்”
“ப்ளீஸ் ப்ளீஸ் கொஞ்சம் இருங்க” என என்னை நிறுத்தினான் அர்ஜுன் .
“ப்ளீஸ் அண்ணாவை தப்பா நினைக்காதீங்க” என்றவன் அன்று நிச்சயதார்த்த விழாவில் என் பக்க உறவினர்கள் சிலர் விக்ரமின் குறையைச் சுட்டிக் காட்டிப் பேசியதைச் சொன்னான்.
“உங்க அம்மாவும் பார்த்துக் கொண்டு பேசாமல் இருந்தாங்க. உங்க அத்தை அண்ணா முன்னாடியே உங்களையும் எட்வர்டையும் ஜோடி சேர்த்துப் பேச எல்லாம் சேர்த்து…… .இருந்தாலும் உங்ககிட்ட அப்படி ஃபோர்ஸ் பண்ணி அவன் பேசியிருக்கக் கூடாது தான். ஆனா விக்ரம்……” தவிப்பாய் சொன்னான் அர்ஜூன்.
வாட்! இதெல்லாம் எப்போது நடந்தது.
நிச்சய விழா போது அவன் குறையை சுட்டிக் காட்டி பேசிய போது எனக்காக பொறுத்து போனானாமே! என் கண்களில் நீர் வழிந்தது.
“அச்சோ அழாதீங்க ப்ளீஸ்…” பதறிப் போனான் அர்ஜூன்.
“உன் அண்ணாவை நான் ஒரு நாளும் அப்படி நினைத்ததில்லை அர்ஜூன்” மெல்லிய குரலில் சொன்னேன்.
“எனக்குத் தெரியும். லண்டனில் நீங்க பதிலடி கொடுத்ததை சொல்லிச் சொல்லி சிலாகித்துப் போவான்” அர்ஜூன் சொல்லவும் எனக்கும் அந்த லண்டன் நிகழ்வு நியாபகம் வந்தது.
“உன் அண்ணா எனக்கு எதிராளியாக இருந்த போதே அவருக்குச் சாதகம் செய்தேன் அர்ஜூன். ஐ லைக்ட் ஹிம் ஈவன் தென். அவர் மேல் விருப்பம் இருந்ததால் தான் மேரேஜ்க்கு ஒகே சொன்னேன். அப்போ உன் அண்ணா போல நான் அவரை உயிராக காதலித்தேன் என்று எல்லாம் சொல்ல மாட்டேன். ஆனால் இப்போ” நான் சொல்வதை அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தவன் “இப்போ” என்று ஆர்வமாகக் கேட்டான்.
“இப்போ உன் அண்ணாவை எனக்கு ரொம்பப் பிடிக்கும். உன் அண்ணாவை மட்டும் தான் பிடிக்கும். போதுமா” நான் புன்னகை செய்யவும் புரிந்து கொண்டு சந்தோஷமாகச் சிரித்தான்.
“இவ்வளவு நடந்திருக்கு. அதை அப்போவே என்கிட்டே சொல்லியிருக்க வேண்டியது தானே” நான் சொல்லவும் அர்ஜூன் என்னை சங்கடமாகப் பார்த்தான்.
என் அம்மாவைப் பற்றி என்னிடமே எப்படி குறை சொல்வான்.
“அதெல்லாம் இருக்கட்டும். அதெப்படி என்னை விட்டுக் கொடுப்பாராமா? எப்படி விட்டுக் கொடுக்கிறார் என்று நானும் பார்க்கிறேன். நீ என்னிடம் பேசியது எதையும் விக்ரமிடம் சொல்லக் கூடாது. ப்ராமிஸ் பண்ணு” நான் சொல்லவும் “ப்ராமிஸ் அண்ணி காட் ப்ராமிஸ்” என்றான் சிறு பிள்ளையாக.
அண்ணி என்று அவன் சொல்லவும் கண்ணீரோடு சிரித்தேன் நான்.
“ஆனா அண்ணி எட்வர்ட்” கேள்வியாகப் பார்த்தான்.
“எட்வர்ட்க்கு என்ன”
“இல்ல அவருக்கு வருத்தமாக இருக்காதா” அர்ஜூன் கேட்கவும் விழுந்து விழுந்து சிரித்தேன் நான்.
“என்ன ஜோக். என்னை விட்டுட்டு ரெண்டு பேரும் என்ன சொல்லி சிரிக்கிறீங்க” ஸ்வாதி எழுந்து வந்தாள்.
“உன்னை இங்கேயே விட்டுட்டு தனியா கிறிஸ்மஸ் பார்ட்டிக்கு போகலாம் என்று அர்ஜூன் ப்ளான் பண்றான்” நான் சொல்லவும் அர்ஜூனை அடிக்கப் போனாள்.
மணி மூன்றாகிவிட ‘இங்கேயே சாப்பிட்டு விட்டு போங்க’ என்று நான் சொல்ல எதையோ சொல்ல வந்தவன் சரி என்று அமர்ந்து கொண்டான்.
அவர்களுக்கு எல்லாம் எடுத்து வைத்து விட்டு “டென் மினிட்ஸ்ல வரேன்” என்று சொல்லி வெளியே வந்தேன்.
இப்போது இந்தியாவில் காலை நாலரை மணி தான். இருந்த போதும் வீட்டிற்கு போன் செய்தேன்.
அப்பா தான் எடுத்தார்.
“பட்டு என்னாச்சு மா. இந்நேரத்தில் கூப்பிடுற. உடம்புக்கு ஒன்னும் இல்லையே” அப்பாவை கலவரப் படுத்தி விட்டேனோ!
“நான் நல்லா இருக்கேன் பா. அம்மாவை எழுப்புங்க. அவங்ககிட்ட கொஞ்சம் முக்கியமா பேசணும்” நான் சொல்லவும் அம்மாவை எழுப்பினார் அப்பா.
தூக்க கலக்கத்தில் அம்மாவை எழுப்புகிறோமே என்று இருந்த போதும் எனக்கு இப்போவே பேசியாக வேண்டியிருந்தது.
நிச்சயதார்த்தம் அன்று என்ன நடந்தது, விக்ரமை யார் என்ன சொன்னார்கள் என்று சுற்றி வளைக்காமல் நேரடியாக கேட்டேன் அம்மாவிடம்.
நான் திடீரென இப்படிக் கேட்கவும் சிறிது நேரம் புரியாமல் விழித்தார் அம்மா.
“நாலு பேர் நாலு விதமாக பேசத் தான் செய்வாங்க பட்டு” அம்மா சொல்லவும்
“நாலு பேர் சொன்னா நீங்க ஏன் பேசாம இருந்தீங்க. நறுக்கென்று அவர்களை நாலு வார்த்தை கேட்டிருக்கணும் நீங்க. விக்ரம் உங்க மகனா இருந்தா கேட்டுட்டு சும்மா இருந்திருப்பீங்களா” நான் கொதித்துப் போனேன்.
“அப்பா காலில் பிராக்சர் ஆகி ஸ்டிக் வச்சு தானே த்ரீ மந்த்ஸ் நடந்தார். அதை குறைன்னு நீங்க நினைச்சீங்களா. சொல்லுங்க”
“ஊர் பேசலாம்மா. பேசும் தான். அதை எல்லாம் விக்ரம் கடந்து தான் இந்த உயரத்தில் இருக்கார். ஆனால் அம்மா நீங்களே குறையா நினைத்தா எப்படி. எனக்கு அம்மான்னா அவருக்கும் அம்மா தானே” சொன்ன போது உடைந்தது என் குரல்.
“விக்ரம் உங்க மேல ரொம்ப ரெஸ்பெக்ட் வச்சிருக்கார். அவ்வளவையும் தாங்கிட்டு பெருந்தன்மையா இருந்திருக்கார். நீங்க இல்ல மா அப்படி இருந்திருக்கணும்”
“என்ன பட்டு இப்படி பேசற நீ” அம்மா குரலில் கொஞ்சம் கண்டிப்பு இருந்ததோ.
“போதும்மா. எனக்கு இப்போ விக்ரம் தான் முக்கியம். விக்ரமுடன் எல்லாம் சரியாகும் வரை என்கிட்டே யாரும் பேசாதீங்க. என்ன காரணம் என்று தெரியாமலே விக்ரமை ப்ளேம் செய்திட்டு என்னையும் வருத்திக் கொண்டு அவரையும் கஷ்டப்படுத்திட்டேன். விக்ரமும் தான் இதை என்கிட்ட எப்படி சொல்லியிருப்பார்” அம்மாவிற்கு சொன்னேனா இல்லை எனக்கு நானே சொல்லிக் கொண்டேனா.
“பட்டு” அப்பாவின் குரல் கேட்டது.
“ஐ லவ் ஹிம் பா. ஐ லவ் ஹிம் சோ மச். எப்படி பா சரி பண்ண போறேன்” கண்ணில் நீர் வழிந்தது.
எனது தவிப்பு என் அம்மாவை அசைத்திருக்க வேண்டும்.
“சாரி பட்டு” என்றார்
“சொல்ல வேண்டியவங்க கிட்ட சொல்லுங்க. அவர் ஏற்றுக் கொண்டா நானும் ஏற்றுக் கொள்கிறேன்” போனை வைத்து விட்டிருந்தேன்.
வழிந்த நீரை லேசாக துடைத்துக் கொண்டு வீட்டில் நுழையவும் ஸ்வாதி அர்ஜூன் இருவரும் கிளம்பத் தயாரானார்கள்.
“அண்ணி நாங்க கிளம்பறோம். அண்ணா வெயிட் பண்றார்” ஸ்வாதி சொல்லவும் அவர்களை லிப்ட்டில் அனுப்பிவிட்டு அருகில் இருந்த காரிடாரில் இருந்து கீழே எட்டிப் பார்த்தேன்.
பனிபடர்ந்த ரோட்டில் விக்ரம் நின்று கொண்டிருந்தான்.
error: Content is protected !!